Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 5

பார்த்திபன் மட்டும் கண் முன்னே இருந்திருந்தால், தன்யா அவனை ஒருவழி செய்திருப்பாள். அவனின் நல்ல நேரம் அவன் இங்கில்லை.. இங்கில்லாது போனதுனாலே தானே இதெல்லாம் நடந்தேறியது.. அனைத்தும் சுற்றி சுற்றி திரும்ப திரும்ப அவளை போட்டு படுத்த, அடுத்து வந்த இரண்டு நாட்களும் தன்யா மிக மிக சோர்ந்து போனாள்..

“என்னாச்சு தன்யா… ஏன் இவ்வளோ டல்லா இருக்க…” என்று காஞ்சனா கேட்க,

“ஒண்ணுமில்லத்தை..” என்றாள்..

ஆனால் அவரோ அவளின் பதிலில் சமாதானம் ஆகாது, “ஆபிஸ் போகவேணாம் தன்யா.. டூ டேஸ் வீட்ல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என,

“இ.. இல்லத்தை.. வேணாம்.. லீவ் எல்லாம் தரமாட்டாங்க..” என்றவளுக்கும் கூட வீட்டிலிருந்து என்ன, தன் அறையை விட்டு கூட வெளி வர பிடிக்கவில்லை.

யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை.. யாரோடும் பேசிடவும் எண்ணமில்லை.. அப்படியே முடங்கிடவேண்டும் போல் இருந்தது.. அவளுக்கு எதுவுமே இயங்க முடியவில்லை என்பதுதான் நிஜம். பார்த்திபன் கிளம்பி போனதும், அவன் பேசாது இருப்பதையும் தாண்டி இப்போது அவன் சொன்னது அத்தனை வலி கொடுத்தது..

இது போன்றொரு வலி வேறெதுவும் இல்லை என்று நினைக்கும் போதே, இதெல்லாம் என்ன பெரிது என்று அதைக் காட்டிலும் மனது வேதனை அடையும்போது அவள் யாரிடம் என்ன சொல்லிட முடியும்..

கண்ணீர் வடிக்கவில்லை.. ஆனாலும் மனது அழுதது.. காதல் கொண்ட மனது.. அவனின் நல்லதற்கு என்று தன்னை கடினப்பட்டே இறுகச் செய்தவள், இப்போது அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு புழு போல் தான் துடித்தது.    

அவனின் பேச்சிலேயே தன்யா புரிந்துகொண்டாள் குடித்திருக்கிறான் என்று..

“பா.. பார்த்தி நீ ட்ரின்க் பண்ணிருக்கியா???!!!” என்று அதிர்ந்து கேட்க,

“எஸ்…” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

“இதெல்லாம் என்ன பழக்கம் பார்த்தி.. அங்க போனா உன்ன கேட்க ஆள் இல்லன்னு நினைச்சியா.. குடிச்சிட்டு தைரியமா எனக்கு கால் வேற பண்ற…” என்று தன்யா கோபமாய் கேட்க,

“ஏன் இந்த உலகத்துலேயே பார்த்திபன் மட்டும் குடிக்கக் கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன??” என்றான் எகத்தாளமாய்.

பார்த்திபனுக்கு தன்யவிடத்தில் எப்போதுமே கொஞ்சம் வாய் கூடுதல் தான்.. ஆனால் இருவருக்கும் இடையில் இத்தனை நடந்த பிறகு, அவனின் சிறு சிறு குத்தல்கள் கூட அவளுக்கு நிறைய நிறைய வலி கொடுக்க,

“பார்த்தி நீ பண்றது தப்பு…” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

“சரி.. பண்ணிட்டு போறேன்.. அதுனால உனக்கு என்ன வந்தது… ஹா…” என்றவன்,

“ஹே லுக்.. நான் ஒன்னும் இப்போ உன்னை நலம் விசாரிக்கவோ, இல்லை நீ எனக்கு அட்வைஸ் செய்யனும்னோ கால் பண்ணல…” என்றுசொல்லி இடைவெளி விட,

“ப்… பின்ன??!!!” என்றவளுக்கு நெஞ்சம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது..

அவன் இத்தனை நாட்கள் கழித்து அழைத்திருப்பது தன்யாவிற்கு உள்ளுக்குள்ளே எத்தனை ஒரு சாந்தோசம் கொடுத்தது என்பது அவளுக்கு மட்டுமேதான் தெரியும். ஆனால் பார்த்திபனின் வார்த்தைகளோ அவளின் சந்தோசத்தை ஒவ்வொரு எழுத்தாய் அழிக்க,

“ஜஸ்ட்.. நீ இல்லாம… உன்கூட பேசாம.. உன்ன பார்க்காம  நான் நல்லாதான் இருக்கேன்னு சொல்லனும்னு தோணிச்சு அதான் கால் பண்ணேன்…” என்றான் அசட்டையாய்..      

“பா…!!!! பார்த்தி…..!!!!”

“இதுக்குதானே நீ ஆசைப்பட்ட…” என்று அவன் சொல்லும்போதே, பார்த்திபன் “ஒன் மோர்..” சொல்வது கேட்க,

“பார்த்தி.. நீ.. நீ என்னை என்னவேனா சொல்லிக்கோ.. பட் ஏன் இப்படி ட்ரின்க் பண்ணிட்டு இருக்க..??” என்றாள் வருத்தமாய்.

தன்யாவிற்கு பயமே வந்துவிட்டது. இந்த பார்த்தி எங்கே மொடா குடிகாரன் ஆகிவிட்டானா என்று. ஆரம்பம் என்பது சின்னதாய் கூட இருக்கலாம்.. ஆனால் போக போக, அதன் விளைவுகள் பெரிதாய் அல்லவா இருக்கும். அதிலும் இந்த பார்த்திபன் மனதில் ஒரு பிடிவாதம் வைத்துவிட்டாள் அவ்வளவுதான்.. யாராலும் அதை மாற்றவே முடியாது..

அந்த ஒரு காரணத்திற்காக தானே தன்யா, தன் காதலையும் தள்ளி வைத்து, பார்த்திபனை போ என்றாள்.

அது அவனுக்கு புரியாதாமா??!!!

“ஹலோ Ms. தன்யா லைன்ல இருக்கீங்களா??!!!”

திடீரென ஒலித்த பார்த்திபனின் மரியாதை மிகுத்த குரலில் தன்னை மீட்டவள் “பார்த்தி.. ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாத..” என்றாள் கெஞ்சி..

“வொய்??? வொய் மா வொய்???” என்ற பார்த்திபனுக்கே புரியவில்லை தான் ஏன் இப்படி பேசுகிறோம் என்று.

எதற்கு தன்யாவை அழைத்தான் என்றும் தெரியவில்லை.. ஏன் இப்படி பேசுகிறான் என்றும் புரியவில்லை. சண்டையோ சமரசமோ ஆக மொத்தம் அவளோடு அவனுக்குப் பேசிட வேண்டும்.. ‘ஏன் டி இப்படி பண்ண…??’ என்று கேட்டிட வேண்டும்..   

ஆனால் இந்த முட்டாளோ அதை மட்டும் விட்டு மற்றது எல்லாம் பேசினான்.. தெளிவாய் இருந்திருந்தால் கேட்டிருப்பானோ என்னவோ?? இப்போதோ அவனின் மூளையும் மனதும் கோணலாய் சிந்திக்கத் தொடங்கியது.

தன்யாவோடு பேசி ஒரு தெளிவிற்கு வந்துவிடவேண்டும் என்றெண்ணாமல், ‘என்னை வேணாம் சொன்னால.. இரு உன்ன என்ன செய்றேன் பாரு..’ என்று கறுவி ஒவ்வொரு வார்த்தைகளையும் உதிர்க்கத் தொடங்கினான் பார்த்திபன்.

“ஏன் டா?? என்னாச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் பேசுற??” என,

“நீங்க பேசினதுவிடவா?? அடடா இப்போ நினைச்சா கூட குளு குளுன்னு இருக்கு…” என்றவன்,

“ஓகே டெல் மீ, மீ இந்த ஜப்பான்காரி கூட போகட்ட.. எதோ வீக்கென்ட் ஆபர் எல்லாம் இருக்காம்…” என்றான் எதோ ஜோக் சொல்வது போல்..

“ஏய் ச்சி….”

“அடேங்கப்பா… ஓகே மேடம் சொல்லுங்க.. ஷால் ஐ கோ..?” என்றான் திரும்ப..

“பார்த்தி..!!!!” என்று தன்யா பல்லைக் கடிக்க,

“சொல்லு டி…” என்றான் குதறலாய்.

“இதுக்குதான் கால் பண்ணியா???!!!”

“அது உனக்கு தேவையில்ல.. சொல்லு நான் போகவா வேணாமா??”

“நீ போன் கட் பண்ணு பார்த்தி..” என்றாள் பட்டென்று..

“சோ… என்னை ஜப்பான் பிகர் கூட டேட்டிங் போடான்னு சொல்ற..” என்றவன் “ஓகே..” என்று இயல்பாய் சொல்வது போல் சொல்ல,

“பார்த்தி….” என்றாள் கோபமாய்..

“என்னா டி????? நீயும் என்னை போ போ சொல்வ.. சரி நானா ஒருத்திய பார்த்து போறேன் சொன்னா.. அதுக்கும் சவுண்ட் விடுற… இங்கபார் எனக்கு அதெல்லாம் தெரியாது… இத்தனை நாள் லவ் பண்ணியே பழகிட்டேனா.. ஒரு ஆல் செட் பண்ணி விடு லவ் பண்ண..” என்றானே பார்க்கலாம்…

“வாட்..??!!!!!!”

“எஸ் எஸ்…. இட்ஸ் கெட்டிங் லேட்…”

“டேய் போடா.. பரதேசி.. குடிச்சிட்டு உளறிட்டு கிடக்க.. போய் ஒழுங்கா வீடு போய் சேர்….” என்றவளுக்கு ஏனோ இத்தனை நேரமிருந்த கோபம் குறைந்திருந்தது.

காரணம் புரியவில்லை.. ஆனாலும் இதழில் ஒரு மென்னகை வந்து ஒட்டிக்கொள்ள “ஏய் லூசு.. இதெல்லாம் உனக்கு செட்டாகாது சோ எங்க இருந்தாலும் வீட்டுக்கு போ.. தூங்கி எந்திரி.. தெளிவானதும் கூப்பிடு..” என்று சாதாரண தொனியில் தன்யா பேச,

‘என்ன… நார்மலாகிட்டா…’ என்று யோசித்தவன் “அப்படியெல்லாம் போக முடியாது..” என்றான் வேகமாய்..

“ஏன்… ஏன்???”

“என்னை யார் கூட்டிட்டு வந்தாங்களோ அவங்கதானே கூட்டிட்டு போகணும்.. ரெஸ்பான்ஸிப்லிட்டீஸ் மா… எல்லாரும் உன்னை போல இல்ல.. பாதில கழட்டி விட…” என்றான் திரும்ப வார்த்தைகளில் வன்மம் வைத்து..

பார்த்திபனின் வார்த்தைகள் முல்லாய் குத்த, அந்த நேரத்தில் கூட லேகா எனும் ஒருத்தி தன்யாவின் நினைவிற்கு வரவேயில்லை.. தனி வீட்டில் இருக்கிறான் என்பதுவரைக்கும் தெரியும். அனைத்தும் பார்த்திபனின் அம்மா அல்லது ஹேமாவின் உபயம் தான்..

காஞ்சனாவிடம் சொல்வார்கள் போல, அது அப்படியே இவளின் காதுக்கும் வந்துவிடும்.

ஆகமொத்தம் பார்த்திபன் பற்றி இவளுக்கு தகவல்கள் தெரிந்துகொண்டு தான் இருந்தன.. இருந்தாலும் அதெல்லாம் அவனே சொல்வதுபோல் இருக்குமா என்ன??

ஆனால் பார்த்திபனோ அவளை வாட்டுவதிலேயே குறியாய் இருக்க, தன்யா அழைப்பை துண்டித்துவிட்டாள்.. இதற்குமேல் எதும் தான் பேசிடுவோமோ என்று அவளுக்குப் பயமாய் போனது இன்னமும். ஏற்கனவே பேசியதற்குதான் அவன் ஒரு பக்கம் இவள் ஒரு பக்கம் இருக்கின்றனர்.. இப்போது மேலும் மேலும் சண்டை வேண்டாம் என்று தோன்ற அழைப்பை துண்டித்தால்.

பார்த்திபனோ “கால் கட் பண்றியா நீ.. இன்னிக்கு உன்னை விட போறதில்ல..” என்று முனங்கியபடி, திரும்ப அழைக்க, முதல் முறை அவள் எடுக்கவில்லை. திரும்ப திரும்ப அவன் அழைக்க,

“என்ன பார்த்தி…???” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்து..   

“எதுக்கு கால் கட் பண்ண??” என்றான்..

“ம்ம்ச் பார்த்தி.. யூ ஆர் நாட் ஸ்டெடி.. எதுவா இருந்தாலும் மார்னிங் பேசலாம்…” என,

“அதெல்லாம் நீ சொல்லவே கூடாது.. ஏன் டி உனக்கு ஐஎஸ்டி போட்டு பேசினா கொழுப்பா..” என்றான் சத்தமாய்..

அவன் பேசுவது அங்கே யாருக்கும் புரியாது ஒருப்பக்கம், இவன் பார்டி ஹாலில் ஒரு ஓரத்தில் தான் போய் அமர்ந்துகொண்டான்.. என்னவோ அந்த பார்டி அவனுக்கு ஒன்றவேயில்லை. அவனின் டீம் ஆட்கள் கூட அவனுக்கு அந்த நேரம் நெருக்கமாய் இல்லை.. லேகாவை தொல்லை செய்யவும் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவன் இப்போது தன்யாவை தொல்லை செய்ய,

“ஷ்..!!! ப்ளீஸ் பார்த்தி.. நீ தெளிவா இல்லை… உன் பிரண்ட்ஸ் கூட வீட்டுக்கு கிளம்பு..” என்றாள், அவன் நண்பர்களோடு வந்திருப்பான் என்ற எண்ணத்தில்..

“நான் லேகாவோட பார்டிக்கு வந்தேன்..” என்றான் நிறுத்தி நிதானமாய்..

காதலில் ஆகச் சிறந்த தூண்டுகோல் என்பது பொறாமை தான்.. யாரேனும் ஒருவரின் பொறாமையை தூண்டிவிட்டால் போதும், காதல் தக தகவென கொழுந்து விட்டு எரியும்.. இதை பார்த்திபன் தெரிந்து செய்தானோ இல்லையோ ஆனால் அவன் செய்யும் காரியத்தின் சாதக பாதகங்களை அவனே தானே எதிர்கொள்ளவும் வேண்டும்..

அந்த நேரத்தில் அது பார்த்திபன் உணரவில்லை. அவனின் அந்த நேர கவனமெல்லாம்  தன்யாவிடம் பேசவேண்டும்.. ஆனாலும் அவளை சும்மா அப்படியே விடுவதா?? எடுத்ததுமே இயல்பாய் பேசிடுவதா,

‘நீ எதுவும் வேணாம் சொன்னா நான் விட்டிடுவேனா?? போ டி போ.. எங்க போனாலும் இந்த பார்த்தி தான் உனக்கு இந்த ஜென்மத்துல…’ என்று எண்ணியபடி தான் பேசினான்..

தன்யாவிற்கோ லேகா என்ற பெயரைக் கேட்டதுமே, இனம் புரியா நடுக்கம் உள்ளூர ஓடியது.. அது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை முரளியின் பேச்சில் அடிக்கடி ‘அங்கே லேகா இருக்கா பார்த்துப்பா..’ என்று வந்துபோகும் சொற்களோ என்னவோ..

“லேகா..!!!!!” என்று மெல்ல அவளின் இதழ்கள் முணுமுணுக்க,

“எஸ் லேகா தான்.. பியூட்டி டால்… யூ க்னோ.. என்னை அவ்வளோ கேர் பண்றா… உன்ன போல இல்லை.. எனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்றா..” என்று அவன் மனதில் எவ்வித விகல்பமும் இல்லாது தான் கூறினான்..

ஆனால் அது அப்படியே அதே அர்த்தத்தில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமே..

தன்யா பதிலேதும் கூறாது அமைதியாய் இருக்க, “என்ன தன்யா மேடம் சைலன்ட் ஆகிட்டீங்க… நான்கூட நினைச்சேன் நீங்க இல்லாம எப்படி இருக்க போறேனோன்னு.. பட்.. லேகா ஹேண்டில் மீ வெரி வேல்…” என்று சொல்லி சிரிக்க,

அவனின் சிரிப்பு நாராசமாய் இருந்தது..

“பார்த்தி.. இனப்…” என்றாள் பட்டென்று..

“ஏன் ஏன் ஏன்… நான் பேசுவேன்.. நீ கேட்கணும்… லேகா என்ன எவ்வளோ அழகா சமாதானம் செய்றா தெரியுமா?? உனக்கெங்க அதெல்லாம் தெரியும்.. என்ன கழட்டிவிட தான் தெரியும்.. அன்ட் இன்னொரு இம்பார்டன்ட் திங் ஷி இஸ் சோ………. பியூட்டிபுல்…” என,

“நான் போன் சுவிட்ச் ஆப் பண்ண போறேன்..” என்றாள் எரிச்சலில்.

லேகா, முன்னெப்போதோ ஒருமுறை பார்த்திருக்கிறாள். ஹேமாவின் தங்கை என்றளவில் தெரியும். அதற்குமேல் அவளைப் பற்றி எதுவும் பெரிதாய் அபிப்ராயம் இல்லை. ஆனால் இப்போதோ??!!!! பெரிதாய் ஒரு சங்கடம்..

ஒருப்பக்கம் பார்த்திபன் தன்னை சீண்டுவதற்குத் தான் இப்படி பேசுகிறான் என்று புரிந்தாலும், அதுவும் அவன் தெளிவில் இல்லை என்று நன்கு தெரிந்தாலும், தன்யாவின் மனது அவன் பேசியதை ஏற்க மறுத்தது..  

“அது உன்னிஷ்டம்.. நெக்ஸ்ட் சித்திக்கு கால் பண்ணுவேன்..” என்றான் எகத்தாளமாய்..

“ச்சே… ஏன் டா நீ இப்படி பண்ற…” என,

“நீ பண்ணது விடவா…” என்றான் பதிலுக்கு..

தன்யாவிற்கு அவன் லேகா பற்றி சொன்னதுமே மனது அத்தனை எரிச்சலாய் இருந்தது.. எந்த பிரச்சனையாய்  இருந்தாலும் அது இவர்கள் இவருக்குள்ளே.. ஆனால் அவன் லேகாவையும் இவளையும் ஒப்பிட்டு பேசவும் அவளால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை. அழுகை வெடிப்பது போலிருந்தது..

“ஓய்.. தனியா தூள் என்ன டி  சைலண்ட்டா இருக்க..” என்றவன் “ஓகே சொல்லு… மை ஜப்பான் ஏஞ்சல் இஸ் வெய்டிங்..” என்றான் மீண்டும் முதலில் இருந்து.

தன்யாவிற்கு தான் என்ன உணர்கிறோம் என்றுகூட விளங்கவில்லை.. பதில் சொல்லும் எண்ணமும் இல்லை.. அப்படியே இருக்க,

“ஏய் பேசு டி..” என்றான் திரும்ப..

ம்ம்ஹும் அவள் பேசுவதாய் இல்லை..

சரியாய் அதே நேரம் அந்த பக்கம் லேகா வந்து “பார்த்தி உன்ன எங்கெல்லாம் தேடுறது.. கம்மான் லெட்ஸ் கோ..  டைம் ஆச்சு..” என,

“யா…!!!” என்றபடி இவனும் அப்படியே போனை கட் செய்து கிளம்பிட்டான்..

இன்றைக்கு இது போதும் என்று நினைத்தானோ என்னவோ, ஆனால் இதுவே பெரும் பாரமாய் போனது தன்யாவிற்கு.. ஏற்கனவே மனதளவில் மிக மிக சோர்ந்து போயிருந்தால், இப்போது இவன் பேசியது எல்லாம் சேர்த்து மொத்தமாய் அவளை அசைத்தது..

பார்த்திபன் தடம் புரள்பவன் அல்ல.. ஆனாலும்….. பெயருக்கேனும் கூட அவன் மனதில் தனக்கும் லேகாவிற்குமான ஒப்பீடு வந்தது தன்யாவிற்கு பிடிக்கவில்லை.

அவளின் முகம் பார்த்தே காஞ்சனா அவளை வீட்டிலிருக்க சொல்ல, அவளுக்குமே ஒரு சிறு விடுமுறை தேவைப்பட்டது. இரண்டுநாட்கள் விடுப்பு எடுத்து வீட்டில் இருக்க, முதல் நாள் அமைதியாகவே கழிந்தது. காஞ்சனா செய்து கொடுத்ததை உண்டுவிட்டு இவள்பாட்டில் அறையில் முடங்கினாள். உறங்குகிறேன் என்ற பெயரில்..

பார்த்திபன் அழைப்பானோ என்ற எதிர்பார்ப்பு ஒரு ஓரமாய் இருந்தது.

ஆனால் அவன் அழைக்கவில்லை..

வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டா என அனைத்திலும் ‘எஸ்டர் டேஸ்.. பீலிங் என்ஜாயிட்..  என்று ஒருசில புகைப்படங்கள் ஸ்டேட்டஸ் வைத்திருந்தான்…

இப்படியான பொது பதிவுகளை பலர் பார்த்தாலும், ஆனால் அது யாரோ ஒருவருக்கான பிரத்தியேக பதிவு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தானே தெரியும்.. ஆக பார்த்திபனின் இப்பதிவுகள் எல்லாம் தன்யாவிற்காக மட்டுமே..

அது அவளுக்குத் தெரியாது இருக்குமா என்ன..

அவன் பதிவேற்றிய படங்களை ஒவ்வொன்றையும் அப்படியொரு ஆராய்ச்சி செய்தாள்.. ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும் லேகா இவனின் தோளில் சாய்ந்து நிற்பது போலிருக்க,

“டேய் பார்த்தி…!!!” என்று பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது..

‘ஷீ இஸ் சோ பியூட்டிஃபுல்…..’

அவன் சொன்னது இன்னமும் அப்படியே அச்சரம் பிசகாது அவள் செவிகளில் ஒலித்தது.. கண்களை இறுக மூடிக்கொண்டாள் தன்யா..

“நோ.. அவனை நினைக்காத..” என்று அவளின் புத்தி சொல்ல, மனதோ அவன் காதலை சொன்ன நாளுக்கு பின்பக்கமாய் பல்டி அடித்து சென்றுவிட்டது..

இரவு நேரம், மொட்டை மாடி ஜில் ஜில் காற்று.. யாருமில்லா தனிமை.. பார்த்திபனின் பிடியில் தன்யா இருக்க, அவளின் இதயமோ தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது..

“பார்த்தி கை விடு.. நான் போகணும்…” என,

“எனக்கொரு பதில் சொல்லிட்டு போயேன் தன்யா..” என்றான் மென்மையாய்..

“எ.. என்ன சொல்லணும்..?? நீ.. நீ.. நினைக்கிறது போல எல்லாம் என் மனசுல எதுவும் இல்ல..”

“இப்போ இல்ல.. ஆனா இனிமே வரலாம் இல்லையா??!!!”

“ம்ம்ச் அதெல்லாம் எனக்குத் தெரியாது பார்த்தி..” என்றாள் பட்டென்று..

“அடடா தெரிஞ்சுக்கணும்மா தெரிஞ்சுக்கணும்.. லைப் விஷயம் இல்லையா.. நீ பாட்டுக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ சரியாவே ப்ரொபோஸ் பண்ணலைன்னு சொல்லிட்டா.. வரலாறு முக்கியமில்லையா..” என்றவனைப் பார்த்து இதழில் துடித்த புன்னகையை வெகு சிரமப்பட்டே கட்டுப்படுத்தினாள்..

“அடடா தனியா தூள் தனியா சிரிக்குதே….” என்று அவளின் முகத்தினைப் பார்த்தவன், தன் இருக்கரம் கொண்டு அவளின் கன்னம் பற்றி,

“எங்க சொல்லு… என்னைப் பிடிக்காதுன்னு..” என்றான் கொஞ்சம் கெத்தாகவே..

அவனுக்கு என்னவோ மனதில் அப்படியொரு உறுதி.. பிடிக்காது என்பவள் இத்தனை நேரம் நிற்க மாட்டாள்.. நின்று அவனோடு பேசமாட்டாள். தன்யாவின் கண்களில் தெரிந்தது எல்லாம் யாரும் பார்த்திடுவார்களோ என்ற பயம் மட்டுமே.

தன்யாவோ இப்போது அவனின் தொடுகையிலும், பார்வையிலும் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மறந்து நிற்க, மெல்ல அவளின் தலையோடு தலை வைத்து முட்டியவன்,

“சோ.. உனக்குள்ளயும் என்னவோ இருக்கு.. அப்படிதானே…” என்றான் அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்..

“பார்த்தி.. ப்ளீஸ்…” என்று அவளும் அவன் போலவே பேச,

“எஸ் ஆர் நோ..” என்றான் இன்னும் இறுக கன்னம் பற்றி..

“ஐ டோனோ…” என்று தன்யா சொல்ல, ஒருமுறை அவளை தள்ளி நிறுத்திப் பார்த்தவன் அழகாய் புன்னகைத்து “ஓகே.. நீ போ..” என, தன்யா புரியாது பார்த்தாள்..

“எஸ்.. நீ போ தன்யா.. ரிலாக்ஸ் பண்ணு.. பட் ரொம்ப இதை யோசிக்காத.. அப்படியே இதே பீலோட விடு.. யூ வில் க்னோ எவ்ரிதிங் சூன்..” என, விட்டால் போதுமென்று தன்யா ஓடி வந்துவிட்டாள்..

ஆனால் இப்போது கூட, பார்த்திபன் அவளின் கன்னம் பற்றிய அந்த கதகதப்பு அவளின் முகத்தினில் உணர முடிய, தன் இரு கரங்களால் தானாகவே தன் கன்னம் பற்றியவள் “பார்த்தி….” என்றாள் மெதுவாய்..

கண்ணீர் துளியோ, கன்னம் வலிந்து வந்தது…         

                           

 

                

        

       

Advertisement