Advertisement

நான் இனி நீ – 8

தீபன் யாரினது அழைப்பையும் ஏற்கவில்லை. அலைபேசியை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான். அம்மா திரும்ப திரும்ப அழைக்கவுமே புரிந்துபோனது என்னவோ சொதப்பல் ஆகியிருக்கிறது என்று. எடுத்துப் பேசினால் பொய் செல்லவேண்டியது தான் வரும்..

வீட்டினரிடம் அவனால் பொய்யாய் இருந்திட முடியவே முடியாது. இதுவரைக்கும் அந்தப் பழக்கமில்லை. இது ஒன்றினாலே தான் அவனை அவன் போக்கில் வீட்டில் விட்டது. எங்கிருந்தாலும் அவன் சரியாய் இருப்பான் என்று.

ஆனால் ஒரு பெண்ணின்பால் மனதை விட்டு, அவளைப் பிடித்து வைத்திருப்பான் என்றெல்லாம் வீட்டில் தெரிந்தால்??!!!

இது இப்படி என்றால் மற்றொருபுறம் அனுராகா..

அவன் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக இருந்தாள். கொஞ்சம் கூட அவளின் கண்களில் அந்த பயம் காணவே முடியவில்லை. உள்ளிருந்தாலும் வெளிக்காட்டவில்லையோ என்னவோ??!! இதுவே அவனுக்கு பெரும் தோல்வியாய் தெரிந்தது.

என்ன தைரியம்??!!

‘கை பிடிச்சா கை கட் பண்ண போறா??!! அப்போ..’ என்று யோசித்தவனுக்கு அதற்குமேல் யோசிக்க முடியவேயில்லை.  

இது காதலா??!! உறுதியாய் திண்ணமாய் சொல்லிட முடியவில்லை. ஆனால் அண்ணன் என்றாலும் கூட விட்டுக்கொடுக்க முடியாது என்றுமட்டும் தோன்றியது. அவன் முதன்முதலில் அவளைக் கண்ட கோலம்.. இன்னமும் அவன் மனதினில் அப்படியே.. அது என்றும் மறக்காது என்பது மட்டும் உறுதி.

அப்படியிருக்க அவள் அவனுக்கு அண்ணியாய் வருவதா??!!

‘நெவர்…’ சொல்லிக்கொண்டான்.

பின் அந்த பிரஷாந்த்.. அவனை எதற்கு இவள் தேடிக்கொண்டு போகிறாள்?? அதுவும் தெரியாது..

இவள் மனதில் காதல் இருப்பின்??!!

‘நோ நோ…’ அதைப் பற்றிய சிந்தனையே வரவில்லை..

அனைத்திற்கும் மாறாய்.. யார் என்ன சொன்னாலும் செய்தாலும், அனுராகாவே மறுத்தாலும் கூட, அவளைத் தன் வசத்தில் இருந்து விட்டுவிட அவன் தயாராய் இல்லை.

நிச்சயம் நல்லவன் என்ற முகமுடிக்குள் இதனை செய்திடவே முடியாது.??

அட போடா..!! நீ நல்லவனா இருந்து உனக்கு சிலையா வைக்கப் போறாங்க… மனது கேலி செய்ய, முதல் வேலையாய் அனுராகாவின் அலைபேசியை எடுத்து வைத்துக்கொண்டான்.

சிரிப்பு கூட வந்தது தீபனுக்கு, ‘நானா இப்படி..’ என்று..

உஷா, சக்ரவர்த்தியை உறங்கவே விடவில்லை. என்னவோ தவறாய் நடக்கிறது என்ற ஊர்ஜிதமாய் அவரின் உள்ளம் சொல்ல,

“எனக்குத் தெரியாதுங்க அவன் எங்க இருக்கான்னு இப்போ தெரியனும்..” என்று அப்படியொரு பிடிவாதம்..

“என்ன உஷா நீ??!! அவன் என்ன சின்னப் பிள்ளையா??!! ட்ரிப் தானே போயிருக்காங்க.. இதுக்கு முன்ன போனதே இல்லையா??” என,

“இது அப்படியில்ல..” என்றார் திட்டவட்டமாய்..

“எதுவா இருந்தாலும் தீபன் சரியாய் இருப்பான்..”

“இந்த விசயத்துல எனக்கு அப்படித் தோணலை…”

அம்மாவும் அப்பாவும் மாறி மாறி பேசிக்கொள்ள, மிதுன் இதனைக் கண்டவன் “மாம்..!!! போதும்…” என்றான் கைகளை உயர்த்தி..

“என்னடா நீயும்..!!!” என்று அவர் ஆரம்பிக்க, “அவங்க ட்ரிப் போயிருக்கிறது எனக்கும் தெரியும்.. சிக்னல் இல்லை அவ்வளோதான்.. டோன்ட் வொர்ரி..” என, பெரிய மகன் முகத்தினை உஷா கூர்ந்து பார்த்தார்.

“உனக்குத் தெரியுமா??!!!” என்று..

“ம்ம்ம்..” என்று தோள்களை உயர்த்தியவன், “நாகா, தர்மா எல்லாம் இப்போ என்னோட தான் இருக்காங்க.. நெக்ஸ்ட் வீக் பொதுக் கூட்டம் இருக்கே அது தீபன் தான் செய்யப் போறான். சோ வந்திடுவான்..” என,

“இல்லடா.. அவன்..” என்று உஷா சொல்லையில், “லீவ் இட் மாம்.. இந்த மேரேஜ் எல்லாம் கொஞ்சம் நிம்மதியா சந்தோசமா பேசணும்.. இப்போ இருக்க ஹர்ரி பர்ரில வேணாமே…” என்றுவிட்டு மிதுன் சென்றுவிட்டான்.

சக்கரவர்த்தியும் “பாரு உஷா… எல்லாருமே இதை தான் சொல்றோம்.. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ற விஷயமில்ல.. உனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரே காரணம் வச்சு நம்ம பேச முடியாது.. பொறுமையா இரு..” என்று சொல்ல,

“என்னவோ பண்ணுங்க.. ஆனா எதுவுமே சரியில்லை..” என்ற உஷாவிற்கு தாராவிடம் தீபனின் எண் வேறு கொடுத்தது திக் திக் என்றது.

மகனின் குணம் அறியாதவரா??!!!

தன்னிடமே பேசாதவன், நிச்சயமாய் தாராவிடம் பேசப் போவதில்லை என்று நினைக்க, அங்கே தீபனோ தாராவோடு பேசிக்கொண்டு இருந்தான்.

“நத்திங் ஆன்ட்டி.. அ.. அனு.. அனு நைட் வாக் போயிருக்கா…” என்றவனுக்கு, ‘சமாளிடா…’ என்று உள்ளம் சொன்னது.

“ஓ..!!! ஓகே தீபன்.. அனு போன் எடுக்கல…”

“போ… போன்…  அ… என்ன நெட்வொர்க்..??” என்று கேட்டவன், அவர் சொன்னதும்,

“அடடா… சிக்னல் சுத்தம இருக்காது ஆன்ட்டி.. சாரி… வில் யூ ப்ளீஸ் வெயிட் பார் சம் டைம்..? நானே கால் பண்ணி அனுக்கிட்ட கொடுக்கட்டுமா??” என, அரைகுறை சமாதானமாய் பேசி முடித்தார் தாரா.

“ஓ..!!! காட்…” என்று நெற்றியை தடவியவன், அணைத்து வைத்திருந்த அனுராகாவின் அலைபேசியில் பேட்டரியை கலட்டி வைத்துவிட்டான்.. யாரேனும் அழைத்தால் ‘நாட் ரீச்சபிள்..’ என்றுதானே வரும் என்று.

‘இப்படி சில்ரை வேலையெல்லாம் செய்றியே தீப்ஸ்…’ என்றபடி, வெளியே அனுவை தேடிப் போக, அவளோ இருட்டினில் சற்று தள்ளி அமர்ந்து இருந்தாள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் லாந்தர் விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தது.

என்ன யோசித்தும் அனுவிற்கு தான் எங்கிருக்கிறோம் என்று புரியவேயில்லை. அதையே தான் யோசித்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இது தமிழகமாய் இருக்கவும் வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஒரு திண்ணைப் போலிருக்க அங்கு அமர்ந்திருந்தாள்.

எண்ணமெல்லாம் இங்கிருந்து எப்படிப் போவது என்பதில் தான் இருந்தது. நீரஜாவேறு என்ன செய்து வைத்திருக்கிறாளோ என்று தோன்ற,

‘தானே அம்மாவிடம் பேசிவிடலாம்..’ என்றெண்ணி எழுந்தவளிடம்,

“ராகா.. உன் மாம் கிட்ட பேசிடு..” என்று அவனின் அலைபேசி நீட்டினான் தீபன் சக்ரவர்த்தி.

“என்னோட போன் இருக்கு..” என்றவள், அவளின் குடில் நோக்கிப் போக,

‘அந்த போன் என்கிட்டே இருக்கு..’ என்று முணுமுணுத்தபடி, அவளோடு நடந்தான் தீபன்.

“ம்ம்ச் இப்போ என்ன??!!” என்று எரிந்து விழ,

“என்ன என்ன??!!” என்று தோளைக் குலுக்கியவனை இதழ் முணுமுணுப்பில் எதுவோ மோசமாய் திட்டிவிட்டு குடிலுக்குள் சென்றவள், அவளின் போன் தேட, அது எங்கேயும் தட்டு படவில்லை..

திரும்பத் திரும்பத் தேட, தீபனோ, குடிலின் வாசலில் கை கட்டி நின்று வேடிக்கைப் பார்க்க “வேர் இஸ் மை போன்??!!!” என்று அவனைப் பார்த்து கோபமாகவே கேட்டாள்,

“போன்… உன் போனா??!! அது எப்படி இருக்கும்..??!!” என்று ஒன்றும் தெரியாவதன் போல புருவத்தை சுருக்க,

“தீபன்.. போதும்…. எதுக்குமே ஒரு லிமிட் இருக்கு…” என்றாள் பல்லைக் கடித்து..

“இப்போ நான் என்ன லிமிட் க்ராஸ் பண்ணிட்டேன்.. பண்ணது எல்லாம் நீ..” என, அவ்வளோதான் அனுவின் பொறுமை.

“ப்ளட்டி இடியட்.. ஹூ தி  ஹெல் ஆர் யூ..?” என்று வேகமாய் அவனை நெருங்கியவள்,

“யார் நீ?? ஹா!!! உங்கப்பா சென்ட்ரல் மினிஸ்டர்.. சக்ரவர்த்தின்னு உன் பேருக்கு பின்னாடி அந்த அடையளாம் இல்லைன்னா நீ ஜஸ்ட் சீரோ..”  என்றாள் விரலை வட்டவடிவமாய் சுற்றிக்காட்டி..

அத்தனை நேரம் தீபன் அவளோடு விளையாட்டாய் பேசிக்கொண்டு இருக்க, அனுராகாவின் இப்பேச்சில் கண்கள் இடுங்க, “ஏய்..!!!” என்று அவளின் விரலைப் பிடித்து திறுகியவன்,

“இப்படி இன்னொரு டைம் பேசின, நீ லைப் லாங் இங்கதான் புரிஞ்சதா??!!” என, அனுராகாவோ வலியைப் பொறுத்துக் கொண்டு அப்படியே நின்றாள்.

அவள் வலியை விழுங்குகிறாள் என்பது இறுகிய அவளின் கன்னத்திலே தெரிய “ம்ம்ம் ஆன்ட்டிக்கிட்ட பேசு.. என்ன பேசணும் எப்படி பேசணும்னு உனக்கு நான் சொல்லனும்னு இல்லை.. சொதப்பின… அவ்வளோதான்..” என்று மிரட்டியபடி அவன் போனை நீட்ட,

“இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நீ ஒருநாள் கண்டிப்பா என்கிட்டே வாங்குவ தீபன்.. உனக்கு என்னை சரியா தெரியலை..” என்றபடி அவனின் போன் வாங்கியவள், தாராவிற்கு அழைத்தாள்.

தீபனுக்கோ தான் ஏன் இப்படி ஒவ்வொரு நொடியும் கடுமையாய் நடந்துகொள்கிறோம் என்று மனது வருந்த, அதற்கு காரணமும் இவள்தான் என்று பலியை அவள்மீதே போட்டான்.

அனுவிற்கு தாராவை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றானது.. வீட்டிற்கு போவதற்குள் பிரஷாந்தை பார்த்திட வேண்டும்..  தான் நினைத்தது நடந்திட வேண்டும்.. அதற்கு தீபன் என்ன?? அம்மா என்ன?? அப்பா என்ன?? யார் தடை போட்டாலும் சரி.. அதை தாண்டிட வேண்டும்.

ஒருமுறை வீட்டிற்குச் சென்றுவிட்டால், பின் இப்படியொரு வாய்ப்பு அனுவிற்கு கிட்டவே கிட்டாது.. அம்மா அப்பா இருவரையும் சமாளிக்கவேண்டும். இப்போதென்றால், தீபன் ஒருவன் மட்டுமே..

அவனிடம் நல்ல பெண் என்ற பெயர் எடுத்து எல்லாம் எதுவும் ஆகப் போவதில்லை. திமிர் பிடித்தவள்.. இல்லை இன்னும் எப்படியோ எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளட்டும் என்று எண்ணியவள்,

“மாம்.. ஐ மிஸ் மை போன்..” என்றாள் தீபனைக் கண்டபடி..

அவனுக்கோ வந்த சிரிப்பு இதழோடு நிற்க, அனுவோ “ஜஸ்ட் ஒன் வீக் மா.. சரியா அங்க இருப்பேன்.. சும்மா சும்மா நீறு நம்பருக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணவேணாம்.. நானே பண்றேன்..” என்று இலகு போல சொல்ல, தாரா ஓரளவு சமாதானம் ஆகிப்போனார்..

அனுராகா பேசி முடிக்கவும் “அட அட.. எப்படி எப்படி??!! மிஸ் மை போன் ஆ??!!! ஹா ஹா.. பொய் எல்லாம் சர்வசாதாரணமா வருது…” என்றான் ஒரு மட்டப் பார்வை பார்த்து..

“உனக்கென்ன??! நான் பொய் சொன்னா உனக்கென்ன?? உண்மை சொன்னா உனக்கென்ன.. அண்ட் நீ.. நீயும் உத்தமன் இல்லை..” என்று சொல்ல,

“நான் சொன்னேனா??? நான் உத்தமன்.. எனக்கு ஊரெல்லாம் சிலை வைங்கன்னு..” என்று அதையும் தூசு போல் தட்டினான்.

எது பேசினாலும் அதை அசால்ட்டாய் தட்டிவிட்டு தன் எண்ணத்திலேயே குறியாய் இருப்பவனைக் கண்டு “ச்சே… நீ எல்லாம் டீசன்ட் பெர்சன்னு சொல்லிடாத..” என்றவள்,

“ஐ க்னோ.. உன்கிட்ட இருந்து எப்படி என் போன் வாங்கணும்னு தெரியும்… இங்க இருந்து எப்படி போகணும்னு தெரியும்..” என,

“ஓகே.. தென் குட்..!!! ஒன் வீக் சொன்னல நீ.. ஹ்ம்ம் ரொம்ப லென்தியா போகும்.. ஜஸ்ட் த்ரீ டேஸ்..” என்று விரல் காட்டியவன், “த்ரீ டேஸ்.. நீ இங்கிருந்து கிளம்பிடு.. பார்த்திடுவோம்…” என்றுவிட்டு போனான்..

அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றவளுக்கு ஒருவித அலுப்பாய் இருந்தது. யாரோ இவன்.. நட்பு பாராட்டியது தவறா??!!! ஒருவேளை தவறுதானோ??!!! யோசித்து அப்படியே நின்றாள்.

“த்ரீ டேஸ்..” என்று முணுமுணுத்தவளுக்கு, இதுவரைக்கும் கடவுளை எதற்கும் துணைக்கு அழைத்துப் பழக்கமில்லை.

ஆனால் இப்போது அவளும் அறியாது சொல்லிக்கொண்டாள் “எனக்கு ஒரு வழி காட்டுங்க காட்…” என்று..

மறுநாள் பொழுது அழகாய் விடிய, அனுராகா தான் இங்கிருந்து கிளம்ப ஏதேனும் வழிக் கிடைக்குமா என்று தேடத் துவங்கினாள்.  

அது என்னவோ கிராமம் போலிருந்தது. ஆனால் ஊர் போல் இல்லை.. கிராமம் போல உருவாக்கப்பட்டு இருப்பது புரிந்தது. இருந்தாலும் அழகாய் இருந்தது. எப்படியும் ஒரு ஐநூறு ஏக்கர் நிலப் பரப்பில் இருக்கும். விஸ்தாரமாய்.. வித்தியாசமாய்.. பார்க்கவே அனுராகாவிற்கு மனதில் ஒரு புது உணர்வு தோன்றியது.

அவளின் வழித் தேடல்களுக்காக நடக்கத்  தொடங்கியவள், அந்த இடம் பிடித்துவிட, அவளுள் இருந்த ரசிக மனமும் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.

வயல்.. தோட்டம்.. குளம்.. கிணறு.. குடில்கள்.. ஆங்காங்கே பண்ணைகள்.. என்று எல்லாமே அப்படியே ஒரு கிராமத்தில் இருப்பது போலவே இருந்தது.. ஒவ்வொரு இடத்திற்கு தெருவின் பெயர்கள் வைப்போது போல் போர்ட் வேறு மாட்டியிருந்தார்கள்..

உள்ளே பயணிக்க, குதிரை வண்டி, மாட்டுவண்டி என்று இருக்க, அதில் சிலர் பயணித்தும் கொண்டு இருந்தார்கள்.  என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால் மனதிற்கு அமைதியாய் இருந்தது.

நிறைய வெளிநாட்டினர் தான் இருந்தனர். பின் நம் நாட்டவரும்.. தோட்டம் வயலில் கூட சிலர் இறங்கி வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். சமையல் கூட அப்படியே பாரம்பரிய சமையல் முறைதான்.. இப்படியொரு இடம் அவள் இதுவரைக்கும் கண்டதில்லை..  எத்தனை வெளிநாடுகள் சுற்றினாலும் மனது இங்கே லயிக்கத் தொடங்கியது..

சுற்றி சுற்றிப் பார்த்தாள் பின் வெகு நேரம் கழித்தே ஒரு போர்ட் கண்ணில் பட்டது ‘ D – வில்லேஜ்…’ என்று.

‘D – வில்லேஜ்…’ சொல்லிப் பார்த்தவளுக்கு, “ம்ம் நைஸ் பிளேஸ்…” என்று எண்ணி முடிக்கவில்லை தீபன் சக்ரவர்த்தி அவள் முன்னே வந்து நின்றான்.

அவள் முகத்திலும், கண்களிலும் இருந்த அமைதிகண்டு,  “இது என்னோட இடம்.. முழுக்க முழுக்க என்னோட எண்ணங்களால உருவானது..” என,

“ஓ..!!” என்று உதடு பிதுக்கினாள்.

இதனை அவள் எதிர்பார்க்கவில்லை தான். ஆனாலும் அவனை ஒன்றும் பாராட்டவும் மனது வரவில்லை.

“உனக்கு பிடிச்சிருக்கா??!!!” என்றவனைப் பார்த்தவள் “பிடிச்சிருக்கு சொன்னா எழுதி வச்சிடுவியா??!!” என்றாள் நக்கலாய்..

‘திமிர் டி உனக்கு..’ அப்படித்தான் தீபன் எண்ணினான்.

“சுத்தி சுத்தி பார்த்தியே…”

“ம்ம்ம் எந்தப் பக்கம் எஸ்கேப் ஆகலாம் பார்த்தேன்..” என்றுவிட்டு போனவளை என்ன செய்தால் தகும் என்றே இருந்தது.

“ஏய் ராகா நில்லு..” என்று பின்னோடயே போனவனை ஏற இறங்கப் பார்த்தவள்,

“ஹ்ம்ம்.. உன்னோட இடம்.. ம்ம்.. அதனால..” என, “என்ன சொல்ற நீ??!!” என்றான் புரியாது.

“சி… உனக்கும் எனக்கும் எதுவுமே இல்லை.. நத்திங்.. அன்ட் இதெல்லாம் தூக்கி போட்டுடலாம்.. ஓகே.. என்னோட வேலை நான் பார்க்கிறேன்.. நீ உன் வழில போ… பியூச்சர்ல எப்போவாது மீட் பண்ணா கூட ஒரு ஸ்மைல் ஓட க்ராஸ் பண்ணிடலாம்..” என்று இலகுவாய் பேச அனு முயல,

“இது நீ சொல்ல வந்தது இல்லை.. என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லு..” என்றான் ஒருவித இறுகிய குரலில்..

‘’இடியட்.. நான் நினைச்சது இவனுக்கு எப்படித் தெரிஞ்சது..’ என்று கடுப்பாய் முகத்தினை திருப்பினாள்.

அவள் அப்படி முகம் திருப்புகையில் தான், அவளின் காதிற்கும் கழுத்திற்கும் இடையில் வட்டமாய் கொஞ்சம் பெரிதாகவே ஒரு மச்சம் இவனைப் பார்த்து ஹாய் சொல்ல,

அவனோ ‘வாவ்…!!’ என்றான் கண்ணாலேயே.

மச்சமென்றால் என்ன??!!

முத்தமிட்டால் என்ன??!!

முள் வேலி நீயடி..

உன் பகை நானடி..

தீபனின் பார்வை தன் மீது படிவது உணர்ந்தவள் “லுக் தீபன்.. இது உன்னோட இடமா இருக்கலாம்.. பட்.. என்னை உன்னால எதுவும் பண்ண முடியாது… த்ரீ டேஸ்.. ஜஸ்ட் த்ரீ டேஸ் நீதானே சொன்ன.. நான் எப்படி போறேன்னு மட்டும் நீ பாரு…” என்று அவன் முன் சொடுக்கிட்டவள்,

“நீ என்னை கண்ட்ரோல் பண்ணுவியா??!!!” என்றுதான் பார்த்துவிட்டு போனாள்.

‘திமிர்.. திமிர்… இவளோட திமிர் என்கிட்டே காட்டுறா…’ என்று பல்லைக் கடித்தவன், அவளை பிடித்து நிறுத்தப் போக, ஆனால் தர்மாவின் அழைப்பு அவனை தடை செய்ய, எடுத்துப் பேசியவன் “என்னது??!! D – வில்லேஜ்லயா??!!” என்று அதிர்ந்து கேட்க,

‘இனி இவளை அறைக்குள் சிறை வைக்கவேண்டுமா??!!!!’ என்று உள்ளம் சொல்ல,

‘என்னை ரொம்ப ரொம்ப கெட்டவன் ஆக்குறாங்க எல்லாரும்…’ என்று அவனே எண்ணியும் கொண்டான்.. 

பிரஷாந்த்.. அவனைப் பற்றிய அனைத்து விபரங்களும் தர்மா தீபனுக்கு சொன்னவன், அவன் தற்போது ‘D – வில்லேஜ்’ ல் இருப்பதாக சொல்ல, தீபனுக்கு அடுத்தது என்ன என்று உள்ளம் பரபரத்தது.

“ஓகே.. நான் பார்த்துக்கிறேன்…” என்ற தீபனின் பார்வை அனுராகாவை காண, அவள் ஒரு குதிரைக் காரரிடம் பேசியபடி குதிரை வண்டியில் ஏற, வேகமாய் அங்கேப் போனவன்

“என்னோட வா நீ..” என்று அவளின் கரம் இறுகப் பற்றியவன், அவளை இழுக்காத குறையாய் இழுத்துக்கொண்டு போனான்.

அவன் – நான் முரடனாகினேன்..

அவள் – நான் முரண்பாடாகினேன்

காதல் – முரடோ முரண்பாடோ.. முக்தி என்பது முத்தமதில்…     

     

      

                

Advertisement