Advertisement

நான் இனி நீ – 6

நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி, தங்கள் குழுவிடம் சென்று,

“அனு பார்த்தீங்களா??” எனும்போதே அவளின் குரல் நடுங்கியது..

தீபன் போன் பேசிக்கொண்டு இருந்தவன், நீரஜாவின் கேள்வியில் “என்னவென்று..” வர, “அ.. அனு… அனு காணலை…” என்றாள்.

“வாட்??!!” என்று அதிர்ந்தவன், சுற்றிலும் பார்வையை சுழற்ற, சந்தேகப்படும் படியாகவும் எதுவும் இல்லை.. யாருமில்லை.

“உன்னோட தானே வந்தா..” என்று தேவ் கேட்க,

“எஸ்.. பட் அவளைக் காணோம்..” என்ற நீரஜாவிற்கு கண்களில் நீர் முட்டிவிட்டது.

மனதோ ‘ஒருவேளை யாருக்கும் தெரியாம பிரஷாந்த் பார்க்கப் போயிட்டாளோ..’ என்று எண்ண, அதை இவர்களிடம் சொல்லவும் முடியாதே..

நீரஜா தவித்து நிற்க, தீபன் அதற்குள் அந்த மோட்டல் உரிமையாளரிடம் சென்று அனுவைப் பற்றி விசாரிக்க, அவரோ தனக்கு எதுவும் தெரியாது என, அதற்குமேல் யாரும் அங்கே நிற்கவில்லை, அனைவரும் ஆளுக்கொரு பக்கமாய் தேட, தீபன் சக்ரவர்த்திக்கு மனது பலவாறாய் யோசித்தது..

ஒருநிலைக்கு வரமுடியவில்லை.. தன்னை நம்பி வந்தவள்.. இப்போது இல்லை என்றதும் அவனது உணர்வு சொல்லி மாளாது. ஆனாலும் இங்கே தான் எங்காவது இருப்பாள் என்ற எண்ணம் மட்டும் மறையவே இல்லை.

“டோன்ட் வொர்ரி.. இங்கதான் இருப்பா…” என்று நீரஜாவிடம் சொன்னவன், சுற்றிலும் தேட, அவள் அங்கே எங்கயுமே இல்லை.

“புனீத் நீ கார் எடுத்துட்டு போ.. எப்படியும் இங்க இருந்து ரொம்ப தூரம் போயிருக்க முடியாது..” என்றவன், மோட்டலின் பின் புறம் சென்று தேட, அந்த இடமே கொஞ்சம் பரபரப்பு ஆகிப்போனது தான் மிச்சம்.

ஆளாளுக்கு ஒரு பக்கம் தேட, நிமிடங்கள் நகர நகர அனைவருக்குமே பதற்றம் கூடியது தான் மிச்சம்..

ஆனால் அனைவரையும் இப்படி பதற்றப் படுத்தியவளோ, வெகு இயல்பாக, அதே மோட்டலின் மறுபுறம் இருந்து வர, நீரஜா தான் பார்த்தவள் “அனு…!!!” என்று சொல்லியபடி போய் அவளை இறுக அணைத்துக்கொள்ள,

“ஷ்..!! என்னாச்சு…” என்றாள், எதுவுமே நடக்காதது போல.

“நீ நீ எங்க போயிட்ட??!!” என்று நீரஜா கேட்கையிலேயே,

“என்னாச்சு??!!”

“எதுவும் பிரச்னை இல்லையே..”

“யாரும் வந்தாங்களா??!!”

“ஆர் யூ ஓகே??” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு துளைத்துவிட்டான் தீபன் சக்ரவர்த்தி.

“யா… யா.. ஐம் ஓகே….” என்று லேசாய் கைகளை உயர்த்திச் சொன்னவள், “என்னாச்சு ஏன் எல்லாம் இப்படி டென்சனா இருக்கீங்க??” என,

“நீ எங்க போன முதல்ல அதை சொல்லு..” என்று அதட்டினாள் நீரஜா..

தீபனின் பார்வையோ இம்மியளவும் அனுராகா விட்டு நகலவேயில்லை. அவளைத் தவிர வேறொன்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவளைக் கண்ணில் கண்ட பின்னும் கூட, மனம் என்னவோ ஒரு பரபரப்புடனே இருந்தது.

இந்த பரபரப்பு அடங்க என்ன செய்வது.. நொடியில் தடுமாறிப்போனான் அவன்.

அவளை இறுக அணைத்துக்கொண்டாள், அவனின் இதயத் துடிப்பு சீராகுமா??

அனுராகாவை தனக்குள் புதைத்துக்கொண்டாள், அவள் நன்றாய்த்தான் இருக்கிறாள் என்பதை அவனின் மனது உணர்ந்துகொள்ளுமா??

ம்ம்ஹும் எதுவும் விளங்கவில்லை. ஆக, பார்வை ஒன்றே போதுமே என்று பார்த்தபடி நிற்க, நீரஜா கேட்க கேள்விக்கு அனைவரையும் பார்த்தவள் “ஜஸ்ட்.. அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தேன்.. அப்படியே பேசிட்டே நடந்து ரொம்ப தூரம் போயிட்டேன் போல..” என,

மற்றவர்கள் நம்பினாலும் நீரஜா நான் உன்னை நம்பவில்லை என்று பார்க்க, தீபனின் கண்களோ சுறுங்கி விரிய, வெளியே தேடிப் போனவர்கள் வந்துவிட்டனர்.

தேவ், புனீத் எல்லாம் அவளிடம் விசாரிக்க சொன்னதையே தான் சொன்னாள்.

அவளின் முகத்தினில் இருந்தோ குரலினில் இருந்தோ எதுவும், எதுவுமே யாராலும் எதுவும் கண்டுகொள்ள முடியாது போக, யாருக்குமே ஒரு அளவிற்கு மேலே என்னவென்று விசாரிக்க முடியவும் இல்லை. ஆனால் அனுராகாவோ, நான் சொல்வது தான் உண்மை என்பது போல் அனைவரையும் நேருக்கு நேராய் பார்த்து நிற்க,

இப்படியே எத்தனை நேரம் பார்த்துக்கொண்டு இருக்க முடியும், கிளம்பவும் வேண்டுமல்லவா?? கிளம்பிவிட்டனர்.

இப்போது தேவ் காரினை செலுத்த, புனீத் முன்னே அமர்ந்துகொள்ள, நடுவினில் இருந்த சீட்டில் பெண்கள் மூவரும் அமர்ந்துகொள்ள, தீபனும் மற்றும் ஒரு நண்பனும் பின்னே அமர்ந்துகொண்டனர்.

தீபன் பின்னே இருந்தாலும், அவனின் கவனமெல்லாம் அனுராகா என்ன செய்கிறாள் என்பதிலேயே இருக்க, அவளோ அலைபேசியில் தீவிரமாய் என்னவோ செய்துகொண்டு இருக்க, சிறிது நேரப் பயணத்தின் பின்னே, நீரஜா சுற்றிலும் பார்த்தவள், அனைவரும் பாதி உறக்கத்தில் இருப்பது கண்டு

“உண்மையை சொல்லு என்ன பண்ண நீ??!!” என்று அனுவின் காதருகே கேட்க, மெல்ல கண்கள் திறந்தவள்,

“நான் என்ன பண்ணேன்..” என்றாள்.

“பொய் சொல்லாத அனு.. ஐ க்னோ யூ..”

“ஐ டிட்ன்ட் டூ எனிதிங்..” என்றாள் அனு உறுதியாய்.

“நோ…” என்று நீரஜா சொல்ல, இவர்களின் பேச்சினை கவனித்துக்கொண்டு தான் இருந்தான் தீபன்.

அவனுக்கும் அவள் போன் பேசிக்கொண்டே அப்படியே நடந்திருப்பாள் என்று தோன்றவில்லை. காரணமின்றி அவள் முகத்தில் புதிதாய் வந்து ஒட்டிக்கொண்ட அந்த இறுக்கம் அதுவே சொன்னது இவள் எதையோ மறைக்கிறாள் என்று. ஆக அனுவின் பதிலுக்காக காத்திருக்க,

அனுவோ நீரஜாவை தீர்க்கமாய் பார்த்தவள் “பிரஷாந்த் போல இருந்தது..” என,

“என்னது??!!” என்று கண்களை விரித்தாள்.

“ம்ம்.. பட் அவனில்லை…”

“ஆர் யூ மேட் அனு.. ஏன் இப்படி இருக்க நீ??” என்ற நீர்ஜாவிற்கு பயம் வந்துவிட்டது. சென்னை செல்வதற்குள் இவள் என்ன கலவரம் செய்யப் போகிறாளோ என்று..

ஆனால் அனுவோ, மெதுவாய் சிரித்தவள், பார்வையை திருப்பிக்கொண்டாள், அதன்பின் பேச்சில்லை. நீரஜாவிற்கு உறக்கம் போனது தான் மிச்சம்.. அதுபோலவே தீபனுக்கும்..

அப்படியே பின்னிருந்தபடியே அவளின் கழுத்தினை நெறித்துவிட்டால் என்ன என்று தோன்றியது??

என்ன முயன்றும் கோபம் கட்டுக்குள் வைத்திடவே முடியவில்லை.. தன்னோடு வந்துவிடு, வேறு யாரையோ போல் இருக்கிறது என்று.. அதற்குமேல் அவனால் நினைக்கவும் முடியவில்லை..

“ஹவ் டேர் ஷி இஸ்…” என்று எண்ணியவன், “தேவ்…” என்று சத்தமாகவே அழித்துவிட, காரினில் இருந்த மற்றவர்கள் கூட விழித்துவிட,

அவனோ முன்னிருந்தபடி “என்ன தீப்ஸ்..” என,

“நான் டிரைவ் பண்றேன்..” என்றவனை புனீத் புரியாது பார்த்தான்.

தீபன் அவனாகவே தான் சொன்னான், தேவ்விடம் ‘நீ டிரைவ் பண்ணு..’ என்று.. இப்போது சிறிது நேரத்தில் இப்படி சொல்லிட, தேவ்வோ “இருக்கட்டும் தீப்ஸ்..” என,

“ஸ்டாப் தி கார் தேவ்..” என்று கிட்டத்தட்ட அடிக்குரலில் சீறினான் தீபன்.

அனுராகா திரும்பி அவனைப் பார்த்தவளோ ‘நீ என்னவோ செய்துகொள்..’ என்று மீண்டும் திரும்பிட, தேவ் காரினை சாலையின் ஓரமாய் நிறுத்திட, இறங்கி முன்னே வந்த தீபனோ அனுராகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு காரினை எடுக்க, அப்படியொரு வேகம் அடுத்து அந்த பயணத்தில்.

புனீத் கூட “என்னாச்சு??!!” என, தீபன் பதிலே சொல்லவில்லை.

அவனது மனதில் பலவேறு எண்ணங்கள்.. அதை செயல்படுத்தும் திட்டங்களும் கூட.. நேரம் செல்ல செல்ல, அனைவரும் உறங்கிட, தீபன் கையில் கார் சீறிப் பாய, விடியற் காலையில் பெங்களூருவில் இருந்தனர்.

இன்னமும் கூட யாரின் உறக்கமும் கெடாது இருக்க, திரும்பி அனுவைப் பார்த்தவனின் விழிகள் சிவந்து இருந்தது. கார் ஜன்னல் கதவின் மேலே தலை சாய்த்து உறங்கியவளின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. தெளிவாய் நிர்மலமாய் இருக்க, அவளைப் பார்த்தவனோ 

“தூங்கு தூங்கு…”  என்று முனங்கிக்கொண்டவன், புனீத்தை எழுப்பி, கீழே இறங்கு என்றவன், அவனிடம் தன் அடுத்த திட்டத்தை சொல்ல, அவனோ      “தீப்ஸ் வேணாம்டா..” என்றான்.

“நான் டிசைட் பண்ணிட்டேன்…” என்றவனின் பார்வையும் குரலும் சொன்னதை செய்வேன் என்றே சொல்லியது.

அதற்குமேல் அவன் யார் சொல்வதையும் கேட்கமாட்டான் என்று நண்பர்களுக்குத் தெரியாத.. இதுவரைக்கும் பெண்கள் விசயத்தில் யாரிடமும் இப்படி தீபன் பிடிவாதம் செய்ததில்லை. அனால் அனு காணோம் என்றதும் அவன் மனதில் தோன்றிய அந்த நொடிப் பொழுது பயமே அவனை இப்படி நடந்துகொள்ளச் செய்கிறது என்று அவனே அறியான்.

ஆம் பயம்தான்..

அந்த ஷர்மா தன்னைப் பழிவாங்க அனுவை எதுவும் செய்துவிட்டானோ என்று..

ஆனால் அவளோ மிக மிக சாதாரணமாக ‘பிரஷாந்த் போல இருந்தது..’ என்று நீரஜாவிடம் சொல்ல, தீபனின் எண்ணங்கள் அப்படியே மாறிப்போயின..

புனீத் அப்போதும் கூட “வேணாம் தீப்ஸ்.. பெரிய பிராப்ளம் ஆகும்.. அனு… ம்ம்.. எனக்கு சொல்ல தெரியலை.. லெட் ஹெர் மூவ்..” என,

“நோ வே…” என்றான் அத்தனை உறுதியாய்.

“தீப்ஸ்…” என்று புனீத் ஆரம்பிக்க, தேவ்வும் இறங்கிட “என்னடா??!!” என, புனீத் அவனிடம் சொல்ல, தேவ்வும் “வேணாம் தீப்ஸ்..” என,

“ம்ம்ஹும்… நீங்க கிளம்புங்க.. தேவ் நீ நீரஜா கூட்டிட்டு கிளம்பு.. அவங்க ரெண்டு பேரும் ஆல்ரடி ரூம் புக் பண்ணிட்டாங்க..” என,

“டேய் என்னடா நீ..” என்று நண்பர்கள் கேட்க, “டூ வாட் ஐ சே…” என்றான் தீபன்.

“தீப்ஸ் அனு மத்த பொண்ணுங்க போல இல்லை.. தென் இது உங்க வீட்டுக்கே தெரிஞ்சா கூட ரொம்ப பெரிய இஸ்யூ ஆகும்..”

“ஐ க்னோ தேவ்.. நீ நீரஜா கூட்டிட்டு கிளம்பு..” என்று சொன்னதையே சொல்ல, அதற்குள் மற்றவர்களும் இறங்கிவிட, ஜோடியாய் வந்தவர்கள் இருவரும், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிட, நீரஜாவிற்கு தேவ்வின் முகத்தினில் இருந்த டென்சனே என்னவோ என்று சொல்லாமல் சொல்லியது.

அனுராகா கார் விட்டு இறங்கி நின்றவள், ஹாயாக நின்றிருக்க, தீபனின் பார்வை அவளைக் கண்டதும் மீண்டும் கோபம் தெறிக்கச் செய்ய,    

அனுவைப் பார்த்தபடியே “நீ, தேவ்,  புனீத் சென்னை கிளம்புங்க..” என, நீரஜா அதிர்ந்து பார்க்க, அனுராகாவோ,

“வாட் இஸ் திஸ்??!!” என்ற பாவனையில் பார்த்தாள்.

அப்போதும் கூட அவளிடம் ஒரு மெப்பனையேத் தெரிய, ‘இவ்வளோ அலட்சியமா உனக்கு..’ என்று எண்ணியவன்,

“தென் அனு… வாட்ஸ் யுவர் ப்ளான்.. டெல்லி தானே..” என்றான் அப்படியொரு நக்கல் குரலில்.

அவன் குரலின் பேதம் அவளுக்கு என்ன உணர்த்தியதோ, நேருக்கு நேராய் அவனைப் பார்த்தவள், “நோ.. சென்னைதான்..” என,

“ஓகே அப்போ எல்லாரும் கிளம்பலாம்..” என்றான் தேவ் வேகமாய்.

தீபன் அவனைப் பார்த்த பார்வையில் நீரஜாவிற்குத்தான் பயம் கூடியது.

“எல்லாருமே கிளம்பிடலாம்..” என்று நீரஜா சொல்ல, தீபன் அனுவைப் பார்த்தவன் “மீ அண்ட் அனு ஆர் கோயிங் டு டெல்லி..” என,

அனுராகா அவனைப் பார்த்தவள் “அப்படியா??” என்றாள் ஏளனமாய்..

அவளின் தொனியே சொன்னது, நீ சொல்லி நான் இங்கே வரவில்லை, ஆக நீ சொல்லியும் நான் உன்னோடு எங்கும் வரப்போவதில்லை.. என் பயணம் என்னவோ அது என் கால் அறியும் என்று.               

ஆனால் அவனோ “நீ என்னோட டெல்லி வர..” என்று கட்டளையாய் சொல்ல,

“அதை சொல்ல நீ யாரு??!!” என்றாள் பட்டென்று..

புனீத்தும், தேவ்வும் முழித்து நிற்க,  நீரஜாவோ “அனு..” என்று அதட்ட,  

“வாட் டூ யூ தின்க் அபவுட் மீ..??” என்று தீபன் சீர, அவனின் இப்படியொரு முகத்தினை அனு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

நண்பர்கள் இருவரும் அவனை சமாதானம் செய்ய “நீங்க கிளம்புறீங்களா இல்லையா??” என்று ஒரு சத்தம் போட, அரண்டு தான் போயினர்.

அவனின் குரலும் முகமும் கண்டு, நீரஜா அனுவைப் பார்க்க, அனுராகாவிற்கோ     ‘தவறு செய்துவிட்டோமோ..’ என்று தோன்றியது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பயம் அவளைக் கொண்டு அல்ல, தேவையில்லாது நீரஜாவையும் இதில் இழுத்துவிட்டோமோ என்று தோன்றியது.

அவள் மட்டும் சென்னை சென்றால் நிச்சயம் அனு எங்கே என்ற கேள்வி வரும்தானே.??

ஆனாலும் இவன் சொல்லி தான் அதற்கு பயந்து உடனே சரி என்பதா, என்று தோன்ற, “நீரு நீ கிளம்பு.. நான் எப்படினாலும் வந்திடுவேன்..” என,

“எப்படி.. எப்படி?? எப்படி?? நீ கிளம்பனும்னு நான் நினைச்சா மட்டும்தான் நீ போக முடியும்..” என்றான் தீபன் சக்ரவர்த்தி.

“நான் கிளம்பனும்னு நினைச்சா எப்படினாலும் கிளம்பிடுவேன்..” என்று அனு சொல்ல, “எப்படி எவனையோ பாக்க இப்போ என்னோட கிளம்பி வந்தது போலவா ???!!!” என்றான் தீபன்.

அவ்வளோதான் அனுவிற்கு சர்வமும் ஆடிவிட்டது. ஆக இவன் அனைத்தும் தெரிந்துகொண்டு தான் இப்படி பேசுகிறானா என்று?? ஒரு நொடி இப்படியோர் ஆட்டம் மனம் கண்டிட, ட்டென தன்னை மீட்டுக்கொண்டாள்.

அனு பயம் கொள்வதா?? அதுவும் இவனைக் கண்டா??

‘என் அப்பா சொல்லியே நான் கேட்கலை.. நீ யார் எனக்கு??’ என்றுதான் பார்த்தாள்,

அடுத்த நொடி “நீரு நீ போ.. நான் வந்திடுவேன்..” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல, “சேலஞ்…” என்றான் தீபன்..

அவனுக்கு இந்த விளையாட்டு பிடித்து இருந்தது, தன்னை மீறி அவள் செல்வதா என்று அவனும், உன்னை மீறி நான் சென்றே விடுவேன் என்று அவளும் ஆடும் ஆட்டம்.. இதில் யார் வெல்வது யார் தோற்பது யாரும் அறியார். ஆனாலும் ஆடத் தயாராகினர்..

நீரஜா தயங்கித் தயங்கி நிற்க “நீ கிளம்பு நீரு.. ஐ வில் ஹேண்டில் திஸ்….” என்று அனு சொல்ல,

“இல்லை அனு…” என்று அவள் தயங்க, அனு வேண்டுமென்றே தீபனை ஒரு பார்வை பார்த்தவள் “எப்படியா இருந்தாலும் நான் பிரஷாந்தை பார்த்துட்டு தான் வருவேன்.. யூ கோ..” என்று அனுப்பி வைக்க, நீரஜா போகவே மனமில்லாது தேவ்வோடு கிளம்ப, புனீத் அவனின் வேலை விசயமாய் பெங்களூரில் இருக்கப் போவதாய் சொல்ல,

“நீ என்னவோ பண்ணு…” என்று தீபன் தான் கிளம்ப ஆயதமாகிப் போனான்.    

கார் கதவினை திறந்து வைக்க, அனு உள்ளே ஏறி அமர்ந்தவள், அப்போதும் கூட தீபனைப் பார்த்து ஏளனமாய்த்தான் சிரித்தாள்.

தீபனோ “இவ்வளோ தைரியம்… ம்ம்..” என்று உதடு வளைக்க,

“தன்னம்பிக்கை..” என்றாள் ஒற்றை வார்த்தையில்..

“ம்ம் வெறி குட்..” என்றவன் வந்து கார் எடுக்க, மீண்டும் அவர்களின் பயணம்.

இடையில் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.. உண்பதற்கு ஒரு இடத்தினில் நிறுத்தினான். எங்கே போகிறோம் என்று அவள் கேட்கவேயில்லை.. எங்கே வேண்டுமானாலும் போ, ஆனால் நான் கிளம்பிடப் போவது உறுதி என்ற தின்னத்தில் இருந்தாள். தீபன் கூட ஓரிரு முறை அவளைப் பார்த்தான். அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை.      

பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது…  

‘பிரசாந்த்..’ என்ற ஒருவனை தீபன் இதுவரைக்கும் கண்டதில்லை. ஆனால் என்னவோ மனதளவில் அவன் இவனுக்கு எதிரியாகிப் போனான். என்னை கண்டுகொள்ளாது ஒருத்தி.. அதுவும் என்னருகில்.. யாரோ ஒருவனைக் காண என்னைப் பயன்படுத்திக்கொண்டாள்.

‘ஒ..!! நோ…!!’ என்று அவன் மனம் சொல்ல, பார்வை என்னவோ அனுராகா பக்கம் செல்ல,

அவளோ ‘நீ என்ன செய்தாலும் என்னை அசைக்க முடியாது..’ என்பது போல் அமர்ந்திருந்தாள்.

பெங்களூரு, தமிழக எல்லையில் தீபன் சக்ரவர்த்திக்கு சொந்தமான இடத்தில் இருந்தார்கள்.. இருட்டிய நேரம் என்பதால் அது என்ன இடம் என்பது அனுராகவிற்குத் தெரியவில்லை. ஆனால் எந்த இடமாக இருந்தால் எனக்கென்ன  என்றுதான் அவளின் பார்வை சொல்லியது.

தீபன் அவன் ஒன்று நினைத்து அனைத்தும் செய்ய, அவனைப் பெற்ற அன்னையோ வேறொன்று நினைத்தார் போலும்.. ஒரே முடிவாய் இருந்தார் அனுராகாவை மிதுன் மனைவியாக்கி இவ்வீட்டு மருமகள் ஆக்கிட வேண்டுமென்று

“நீங்க எலெக்சன் வேலை பார்ப்பீங்களோ என்னவோ கொஞ்சம் அப்பாவாவும் நடந்துக்கணும்..” என்று உஷா சொல்ல, “ப்பா..!!!!” என்ற சக்ரவர்த்தி “சொல்லு என்ன பண்ணனும்..” என,

“அவங்க வீட்ல பேசணும்.. அதுவும் இப்போவே…” என்றார் உஷா..

“இப்போவா ??!!!”

“ஏன் ஏதாவது ஒரு வேலை, மீட் பண்ணனும்னா மட்டும் எந்த டைம்மா இருந்தாலும் அரேஞ் பண்றீங்கதானே.. இது மிதுன் லைப் விஷயம்…”

“ம்ம்ம் எஸ் அதான் சொல்றேன். மிதுன் வறட்டும் ஒரு வார்த்தை கேட்டுப்போம்..”

“அதெல்லாம் நான் கேட்டாச்சு.. அவன் ஓகே சொல்லிட்டான்..” என்று உஷா பெருமையாய் சொல்ல,

“ஒ..!! இவ்வளோ நடந்து போச்சா??!!” என்றார் சக்ரவர்த்தி சிரிப்பாய்.  

“எஸ்.. இப்போவே பேசுங்க.. இல்லை நானே பேசவா??” என,

“என்கிட்டே லோகேஸ்வரன் நம்பர் இல்லை உஷா.. என் பிஏ வரட்டும்.. நாளைக்கு பேசிக்கலாம்.. நைட் நேரம்..” என்று சொல்ல, “தாரா நம்பர் என்கிட்டே இருக்கு..” என்றார் உஷா..

“விடமாட்டியே..” என்ற சக்ரவர்த்தி, “பேசுறதுக்கு முன்ன சின்னவன் கிட்டயும் பேசிக்கலாம்…” என்று தீபனுக்கு அழைத்தார்.

 

அவன் – ஐ லைக் திஸ் கேம்..

அவள் –லெட்ஸ் ப்ளே..

காதல் – ஹா ஹா ஹா யூ போத் ஆர் மை டாய்ஸ்  

  

Advertisement