Advertisement

நான் இனி நீ – 2

அனுராகா, பிரஷாந்த் வேண்டாம் என்று சொல்லி போன ஆத்திரத்தில் அனைத்தையும் போட்டு உடைக்க, அவளின் உடலில் ஆங்காங்கே ரத்த காயம் இருக்க, நல்லவேளை வெளியே ஷாப்பின் என்று சென்றிருந்த அவளின் அம்மா தாரா வீடு வந்த பிறகே அவளை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

“என்ன அனு இதெல்லாம்…” என்று தாரா பதறிப்போய் அவளைப் பார்க்க, அத்தனை பதற்றமும் கோபமாய் மாறி சுற்றி இருந்த வேலை ஆட்களின் மீது திரும்பியது..

“என்ன பண்ணிட்டு இருந்தீங்க எல்லாம்?? இதான் பொறுப்பா இருக்கிற லட்சணமா??” என்று தாரா காத்திட, அனைவரும் வாய் மூடி நிற்கும் நிலை..

அனுவோ அம்மாவைக் கண்டதும் “மாம்…” என்றபடி அவரைக் வெறித்துப் பார்க்க,

“என்னாச்சு அனு?? ஏன் இப்படி பீகேவ் பண்ற??” என்ற தாராவின் கேள்விக்கு,

“லீவ் மீ அலோன் மா…” என்று அனு கத்த,

“அனு… ஸ்டாப் இட்..” என்றவர் அவளின் முகத்தினைப் பார்க்க, நெற்றியில் சிறு சிறு ரத்தத் துளிகள் சிவப்பாய் தெரிய,

‘நல்லவேளை பெரிதாய் எதுவுமில்லை…’ என்றே தோன்றியது தாராவிற்கு..

ஆனாலும் அனுராகாவின் இச்செயல் அவருக்கு ஒரு பயம் கொடுத்தது தான். இன்று விடியல் வரைக்குமே நன்றாய் இருந்தவளுக்கு திடீரென்று என்னானது என்று..

அனுராகாவோ யார் இருக்கிறார்கள் இல்லையென்று கூட மனது உணரவில்லை. இரண்டு ஆண்டுகளாய் பின்னால் சுற்றியவன், காதல் காதல் என்று உருகியவன், இப்போது தான் அந்த காதலை சொல்லும் நேரம் பார்த்து வேண்டாம் சொல்லிச் செல்ல, பெரும் அவமானமாய் தான் உணர்ந்தாள் அனுராகா..

என்னவோ வருடக் கணக்காய் காதலித்து, பின் அதை கைகூடாது போனது போல் ஒரு பாவனை அவளிடம். அது ஏன் என்று தெரியவில்லை. பொதுவாய் அனுராகா அப்படியெல்லாம் நினைக்கும் பெண்ணுமில்லை..

ஆனால் இப்போது என்னென்னவோ யோசிக்கத் தோன்றியது..

ஒருவித ஆத்திரம் தான் மனதில் ஊற்றெடுக்க, அப்போது இந்த இரண்டு ஆண்டுகளாய் தான் முட்டாளாக்கப்பட்டதாய் உணர்ந்தாள். தாராவோ மகள் அமைதியாய் இருப்பது கண்டு,

“கமான் அனு, ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்றழைக்க,

“ஐம் பைன்…” என்று பேச்சை கத்தரித்தாள்..

“சொன்ன கேளு.. கிளம்பி வா..” என,

“லீவ் மீ அலோன் சொன்னா புரியாதம்மா??” என்றவளைப் பார்த்து என்ன தோன்றியதோ தாராவிற்கு,

“ரூமா…” என்று சத்தமாய் அழைக்க, அடுத்த இரண்டாவது நொடி  ரூமா கையில் முதல் உதவிப் பெட்டியோடு வந்து நிற்க,

“ம்ம்…” என்று அதனை வாங்கியவர், “அனு ரூம் கிளியர் பண்ணிடு, தென் எண் திங்க்ஸ் டேமேஜ்னு பார்த்து எல்லாம் வாங்கி செட் பண்ணிடனும்…” என்று சொல்ல,

“ஓகே மேம்..” என்றுவிட்டு போனாள் ரூமா.

அனைத்துமே ஹை டெக் தான் அங்கே.. வீட்டில் இருக்கும் பொருட்கள் முதல், வேலையில் இருக்கும் ஆட்கள் வரைக்கும் எல்லாமே இவர்களின் பண செழிப்பை காட்டுவதாய் இருக்க, எத்தனை போட்டு உடைந்தாலும் பரவாயில்லை ஆனால் மகள் உடைந்துவிட கூடாது என்று நினைத்தார் தாரா.              

“அனு…” என்றவர் “எதுவும் யோசிக்காதே…” என்றபடி அவளின் காயங்களுக்கு மருந்திட,

“எப்படி மாம்.. எப்படி யோசிக்காம இருக்க முடியும்???” என,

“நீ யோசிக்காதேன்னு தான் சொன்னேன் அனு.. என்கிட்டே ஷேர் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்லலையே…” என்று தாரா பார்க்க,

“அம்மா…” என்றவளுக்கு மேலும் கண்களில் நீர் வழிந்தது..

“ஓ..!!! காட்.. என்ன அனும்மா???” என்ற தாராவிற்கு மகள் இப்போது சொல்லிடுவாள் என்ற எண்ணம் ஊர்ஜிதமாக, அவளையே ஒருநொடி பார்த்தபடி இருந்தார்.

தாராவின் பார்வை அனுராகாவை என்ன செய்ததோ “ம்மா.. பிரஷாந்த்.. பிரஷாந்த் என்னை வேண்டாம் சொல்லிட்டான்…” என,

“என்ன?? என்ன சொல்ற நீ??!!!” என்றவருக்கு ஒருப்பக்கம் ஒன்றும் விளங்காத நிலை, மறுபுறம் ஒருவித அதிர்ச்சியும் கூட.. ‘பிரஷாந்திற்கும் இவளுக்கும் என்ன??’ என்று மனது ஓட,

‘என் மகளை வேண்டாம் என்றானா….’ என்ற எண்ணமும் கூட.

“ம்ம்… டூ இயர்ஸ்.. என்னை லவ் பண்றேன் சொல்லிட்டு இப்போ நான் ஓகே சொல்லப் போனா, ஐம் சாரின்னு சொல்லிட்டு அவன் கிளம்பி டெல்லி ஆபிஸ் போயிட்டான்..” என,

“இதையேன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை…” என்றார் தாரா..

கோபம்தான் மகள் மீது, ஆனால் இது கோபம் காட்டும் நேரமல்ல என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அனுவின் முகத்தினை தான் பார்த்தபடி இருந்தார், நிச்சயம் அவள்  முகத்தில் காதலின் வலி தெரியவில்லை. மாறாக  தன்னை ஒருவன் வேண்டாம் என்றுசொல்லி போய்விட்டான் என்ற வலியே நிறைய இருந்தது.. அதுவும் உன்னை எனக்கு பிடிக்கும் என்ற ஒருவன்..

“பிரஷாந்த்க்கிட்ட பேசிட்டு தென் உங்க ரெண்டுபேர் கிட்டவும் சொல்லணும் இருந்தேன் ம்மா…” என்ற அனுவிற்கு இப்போது அழுகை நின்றே போயிருந்தது..

“ஓ..!!!” என்ற தாரா, வேறெதுவும் கேட்கவில்லை, கணவருக்கு அழைத்து உடனே வீட்டிற்கு வருமாறு அழைக்க, லோகேஸ்வரனோ

‘நான் ஒரு பிசினஸ் பார்ட்டியில இருக்கேன்…’ என்றுசொல்ல,

“என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது லோகேஷ்.. உங்க பொண்ணுக்காக நீங்க இப்போ வீட்டுக்கு வரணும்..” என்ற தாராவின் குரலே எதுவோ சரியில்லை என்று அவருக்கும் புரிய, வீடு கிளம்பி வந்தார்.

வந்தவருக்கு மற்றது எதுவும் கண்ணில் படவில்லை, அனுராகாவின் நிலை கண்டு “வாட் ஹாப்பன் அனு???” என்றபடி பதற,

“ஏன் இப்படி பண்ணீங்க லோகேஷ்??!!” என்று நேரடியாகவே தாரா விசயத்திற்கு வர,

“நான் என்ன செஞ்சேன்.??” என்றார் லோகேஸ்வரன் அம்மா மகள் இருவரையும் பார்த்த்துக் கேட்க, தாரா நடந்தவைகளை சொல்ல,

“ஓஹோ…” என்று நெற்றியை தேய்த்தார் லோகேஸ்வரன்.

வந்ததில் இருந்து அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த அனுராகா, அவரின் இந்த ‘ஓஹோ..’ வில் மேலும் கடுப்பாகி,  “சோ அப்பா.. நீங்கதான் இல்லையா??!! எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீங்கதான் அவனை இங்கிருந்து அனுப்பினதா???” என்று கத்தியவள்,  அருகில் இருந்த கண்ணாடி டம்ப்ளரை தூக்கிப்போடப் போக,

வேகமாய் அவளின் கை பிடித்து தடுத்த லோகேஸ்வரன், “ஹோ… பேபி… ஏன் இவ்வளோ ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிற??” என, அவரை கண்கள் சிவந்து போய் ஆங்காரமாய் பார்த்தாள் அனுராகா.

மகளின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ  “தாரா.. அனுக்கிட்ட என்ன சொன்ன நீ?? நல்லா கேட்டுக்கோங்க.. ஐ டிட்ன்ட் டூ எனிதிங்.. டெல்லி பிரான்ச்ல நிறைய பிராப்ளம்ஸ்.. பிரஷாந்த் அங்கயிருந்தா பெட்டர்னு தோணிச்சு. சோ அவனை அனுப்பினேன்.. இதுக்கும் அவன் அனுக்கு நோ சொல்வான்னு எனக்கு தெரியாது…” என்று லோகேஸ்வரன் கைகளை விரிக்க,

“டாட்….” என்றவள் ஒருநொடி அமைதிக்குப் பிறகு “பிரஷாந்த் இன்னும் டூ டேஸ்ல சென்னை பிராஞ்க்கு வரணும்..” என,

“நோ சான்ஸ் பேபி…” என்றார் லோகேஸ்வரன்.

“டாட்…!!!!!!” என்று அனு குரலை உயரத்த,

“லுக் அனு.. உன்னை வேணாம் சொன்னவனை போய் திரும்ப வா.. என் பொண்ணு பாவம்னு சொல்ல சொல்றியா?? நோ வே… அப்படி நீ அவ்வளோ மோசமான நிலைல இல்லை.. ஓகே..” என்று அவரும் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

தாராவோ “ஏன் இப்படி??” என்று இருவரையும் பார்த்து வைத்தார்.

“நான் சொன்னது நடக்கணும் ப்பா…” என்ற அனுவின் குரல் இறுக,

“கண்டிப்பா நடக்காது அனு.. அவன் அப்படி சொன்னதுக்கான ரீசன் எனக்குத் தெரியாது.. பட் உன்னை வேண்டாம் சொன்னவன் உனக்கு வேண்டாம் அவ்வளோதான்.. நீயும் கீழ இறங்கி, எங்களையும் இறக்கிடாத.. புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்…” என்றவர் மனைவியை ஒருபார்வை பார்த்துவிட்டு செல்ல, தாரா சிறிது நேரம் அனுவின் அருகில் தான் இருந்தார். 

அனுராகா எதுவும் பேசாமல் இருக்க, “அனு… ஐ திங் உனக்கு லவ் போச்சுன்னு பெய்ன் இல்லைன்னு நினைக்கிறேன்…” என்ற தாரா, அப்படியே பேச்சை நிறுத்த,

“லவ்…. ஹா ஹா… இட்ஸ் கான் மா…” என்றாள் அனுராகா..

“அனு…!!! நான் சொல்றேன்னு தப்பா நினைச்சாலும் பரவாயில்லை.. பட்.. உன்னோட நிலை, பிரஷாந்த் இத்தனை நாள் பின்னாடி வந்துடு இப்போ திடீர்னு பின்வாங்கவும் கொஞ்சம் அதிர்ச்சி. அதுவும் நீயே அக்செப்ட் பண்ண போறப்போ அப்படி சொன்னது ரொம்ப ஷாக்.. அதான் இப்படி ரியாக்ட் பண்ற நீ..  மிஞ்சி போன ஒரு ஒன் வீக் யூ வில் பீ ஆல்ரைட்…” என்றவரை அமைதியாய் பார்த்தாள் அனு..

என்னவோ தாரா பேச பேச, இதெல்லாம் ஒன்றுமேயில்லையோ என்று தான் அவளுக்குத் தோன்றியது.. அம்மா சொல்வது போல் எனக்கு பிரஷாந்தை பிரிந்த வலி இல்லையோ, அவன் வேண்டாம் என்றதின் தாக்கம் தானோ என்று தோன்ற,

‘நோ நோ.. அம்மா இஸ் ட்ரைங் டு கன்வின்ஸ் மீ…’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்..

மகளின் முகம் சிறிது தெளிந்து பின் மீண்டும் பழைய நிலைக்கு போவதை கண்ட தாரா, “ஓகே.. நீ தூங்கி ரெஸ்ட் எடு.. உன் ரூம் செட்டாக எப்படியும் லேட்டாகும்..” என்றவர், அனுவின் அறை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு, பின் லோகேஸ்வரனைக் காணப் போக அவரோ தீவிர யோசனையில் இருப்பது தெரிய,

“என்ன லோகேஷ்… அனு இப்படி ரியாக்ட் பண்ணுவான்னு திங் பண்ணலையா???” என்று கேட்க,

“நோ தாரா…” என்றார் அவரும் வெளிப்படையாய்..

“ம்ம் ஓகே.. இப்போ சொல்லுங்க.. ஏன் பிரஷாந்தை அனுப்பினீங்க???” என்ற மனைவியை ஆழ்ந்துப் பார்த்தவர், “நீ நினைக்கிறையா அனுக்கு அவன் செட்டாகுவான்னு…” என,

“ஸ்டேட்டஸ் வச்சு எதுவுமேயில்லை லோகேஷ்.. பிரஷாந்த் பத்தி எனக்கு பெர்சனலா தெரியாது. பட் நான் பார்த்த வரைக்கும், ஹீ இஸ் ஓகே..” என்று தாராவும் சொல்ல,         

“ஹா ஹா பாத்தியா.. ஓகேன்னு தான் சொல்ல முடியும்.. அனுவுக்கான பெஸ்ட் சாய்ஸ்னு உன்னால சொல்ல முடியலைதானே…” என்றவரின் பேச்சில் கொஞ்சம் தாராவும் திகைத்துத் தான் போனார்.

“அனு டிசர்வ்ஸ் பெட்டர் தாரா…” என்று ஒரு அப்பாவாய் லோகேஸ்வரன் சொல்ல,

“அனுக்கு இப்போ ஒரு கண்டிப்பா ஒரு ரிலாக்ஸ் தேவை.. ஏதாவது ட்ரிப் ப்ளான் பண்ணுங்க.. இல்லையோ அனுவை எங்கயாவது அனுப்பலாம்…” என,

“ஓகே… யோசிப்போம்…” என்றவர்,

மறுநாளே அனுராகாவிடம்,  “அனு.. உனக்கு இப்போ தேவை மைன்ட் டைவர்சன்.. அதையே நினைச்சா சின்ன விஷயம் கூட பெருசா தெரியும்.. நெக்ஸ்ட் வீக் கோவால இண்டஸ்ட்ரியல் மினிஸ்டர் பொண்ணோட ரிசப்சன்.. நம்ம பேமிலியோட அங்க போகணும்… உனக்கு ஓகேன்னா இப்போவே டிக்கட்ஸ் போடுறேன் யூ கோ வித் யுவர் பிரண்ட்ஸ் அண்ட் ரிலாக்ஸ்…” என்றவரை கண்கள் இடுங்க பார்த்தாள் அனு…

“என்ன அனு… உனக்கும் கொஞ்சம் செஞ்சா இருக்குமே…” என்று தாரா சொல்ல,

“ஐ வான்ட் டு டாக் வித் பிரஷாந்த்.. அவனோட நம்பர் கூட சேஞ் பண்ணிட்டான் போல.. அப்பா.. எனக்கு அவனோட நம்பர் வேணும்..” என்று அனு திரும்ப முதலில் இருந்து வர லோகேஸ்வரன் மிகவும் டென்சனாகித்தான் போனார்..

தாராவும்  கூட “அனு…!!!” என்று அதட்ட,

“பிரஷாந்த் நம்பர் கொடுங்க.. ஐ வில் கோ டு கோவா…” என்று பேச்சை முடித்துவிட்டாள் அனுராகா..

இவள் ஏன் இப்படி பிடிவாதம் செய்கிறாள் என்பது நிச்சயாமாக பெற்றவர்கள் இருவருக்கும் எண்ணம் போக, இருவருமே அனுராகாவை முறைத்தனர். அவளோ அதற்குமேலே பிடிவாதமாய் நின்றாள்.

லோகேஸ்வரன், தாராவை ஒருமுறை பார்த்துவிடு “லுக் அனு… நாளைக்கு டிக்கட்ஸ் போடுவேன்.. நீ மட்டும் போனாலும் சரி.. இல்ல உன்னோட பிரண்ட்ஸ் கூட போனாலும் சரி… ஆனா நீ போற.. போகணும்… ஓகே..” என்றுவிட்டு போய்விட்டார்..

கண்டிப்புகள் சில நேரம் காரமாய் இருந்தாலும், அதுவும் கூட பல நன்மைகளுக்கான விதையே என்பது அந்தந்த நேரத்தில் நமக்கு புரிவதில்லை. இப்போதும் அப்படித்தான் அனுராகாவிற்கு இந்த கண்டிப்புகள் எல்லாம் மிகுந்த கடுப்பை கொடுக்க, அடுத்து எதனைப் போட்டு உடைக்கலாம் என்றே பார்வை தேடியது.

“அனு.. இப்போ அப்பா சொல்றதை கேளேன்… அடுத்து நானே பிரஷாந்த்க்கிட்ட காண்டாக்ட் பண்ண ஏற்பாடு பண்றேன்..” என்று தாரா சொல்ல,

‘நம்பிட்டேன்…’ என்று பார்த்தாள்..

“நிஜமா.. இந்த கோவா ப்ளான் எல்லாம் முடியட்டும்..” என,

“ம்ம் டிக்கட்ஸ் போட சொல்லும்மா… எனக்கும் நீரஜாக்கும்..” என்ற அனுராகாவிற்கு மனதினுள் வேறொரு திட்டமும் கூட.

இப்படிதான் அனுராகா கோவா கிளம்பியது…

கோவாவிலோ,  “தீப்ஸ்… இன்னும் எத்தனை நாள் மேன்… கோவா சுத்தி சுத்தி போர் அடிக்குது…” என்று அவனின் தீபன் சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பன் புனீத் சொல்ல,

“வொய் டா… போரா…?? உனக்கா???” என்றான் தீபன் ஆச்சர்யமாய்..

“வந்து டென் டேஸ் மேல ஆச்சு.. ஐ க்னோ உனக்கு இங்க வொர்க்ஸ் இருக்கு சோ யூ ஆர் ஹியர்… பட் வொய் மீ…” என,

“ஹா ஹா… கிளம்பிப் போ…” என்ற தீபனின் பார்வை தூரத்தில் தெரிந்த கடலைப் பார்க்க,

“இருக்கேன்… இருந்து தொலைக்கிறேன்…” என்றுவிட்டு போனான் புனீத் கடுப்பய்..

பார்வையை திருப்பியிருந்த தீபனின் முகத்திலோ சின்னதாய் ஒரு குறுஞ்சிரிப்பு..

அவன் அவனாய் இருப்பது இந்த நண்பர்கள் குழுவில் இருக்கையில் தான்.. ஆயிரம் வேலையில், அவனை சுற்றி இருந்தாலும், ஆயிரம் ஆபத்துக்கள் அவனை நெருங்கக் காத்திருந்தாலும், தீபனுக்கு எப்போதுமே தன் நண்பர்களோடு நேரம் கழிப்பது மிகவும் பிடித்த ஒன்று..

முதல் நாள் ஒருவனை துப்பாக்கி முனையில் நிறுத்தியவனா இவன்??

அப்படித்தான் தோன்றும், இப்படி ஒரு புன்னகை புரிந்து நிற்பவனைக் கண்டால். இரவு நேர இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டு நிற்கும்போதே, தீபனின் அலைபேசி சப்தம் எழுப்ப, வந்த பாடலின் ஒலி கண்டே அழைப்பது யாரென்று தெரிய,

‘மிதுன்..’ என்ற இதழசைப்போடு அலைபேசியை எடுத்துவன்  “சொல்லு டா…” என,

“தீப்ஸ் அந்த ஷர்மா எங்கடா…” என்றான் மிதுன் சற்றே கோபமாய்..

“உயிரோடதான் இருக்கான் மிதுன்..” என்ற தீபனின் வார்த்தைகள் மிக மிக நிதானமாய் ஒலிக்க,

“தீப்ஸ் இது விளையாடுற விஷயமில்ல.. அவனை அனுப்பின அந்த சேட்டு போன் மேல போன் போட்டு உயிரை வாங்குறான்டா… அவனை அனுப்பிடு..” என்று மிதுன் சொல்ல,

“அவ்வளோ சீக்கிரம் அது முடியாது மிதுன்..” என்றான் தீபன் முடிவாய்.

“டேய் வேண்டாம்… அந்த சேட்டு மட்டும் ஆப்போசிட் பார்ட்டிக்கிட்ட இதை சொன்னா அவ்வளோதான்.. சொல்றதை கேளு.. அந்த ஷர்மாவை அனுப்பிடு..”

“நோ வே மிதுன்.. அவன் நம்மளையே மாட்டிவிட பார்த்தான்.. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா இந்நேரம் இந்தியா முழுக்க எல்லா மீடியாலையும் நம்மளைத்தான் போட்டு ஒருவழி செஞ்சிருப்பாங்க..”

“ஐ க்னோ தட்.. பட் இது ரொம்ப சீரியஸ் தீபன்..” என்ற மிதுனின் குரலும் தீவிரமாய் ஒலிக்க,

“அந்த செட்டோட கோல்டன் பிஸ்கட்ஸ் எல்லாம் இப்பவும் அவன் கைக்கு போயிருக்கும்.. பட் ஷர்மா..” என்று இழுத்தவன்,

“கொஞ்சம் பொறுத்து அனுப்பலாம் மிதுன்.. யாரா இருந்தாலும் பயம் வரணும்.. ஷர்மாக்கு இப்போ அந்த பயம் வந்திருக்கும்.. உயிர் பயம்.. எப்போ இவன் என்ன செய்வானோன்னு..”     

“நோ தீபன்…”

“ஹா ஹா அவனை விட்டாலும் கூட அந்த பயம் இருக்கனும்தானே.. சோ சிறப்பா கவனிச்சுட்டு விடறேன்.. பை…” என்றபடி அவனின் ரிசார்ட் பால்கனிக்கு வந்துவிட்டான்.   

பீச் ரிசார்ட்கள்…. தனி தனியாய் இருந்தாலும், எல்லாமே அருகருகே, போட்ட குடிசைகள் போல், ஒவ்வொன்றுக்கும் தொடர்புடையது போலவே இருந்தது. அதிலும் இரவு நேர மின் விளக்குகளில் பல வர்ண ஜாலங்கள் காட்டி மின்னிக்கொண்டு இருக்க, ஒவ்வொரு ரிசார்ட்டிலும் தனி தனி நீச்சல் குளங்கள் நீல நிற விளக்கொளியில் என்னுள் வாயேன் என்று காண்போரை அழைத்துக்கொண்டு இருந்தது.

ஏகாந்த பொழுது என்று இதை தான் சொன்னார்களோ.. தீபனுக்கு அப்படித்தான் இருந்தது.. பார்வையை சுற்றிலும் செலுத்தியவனுக்கு சட்டென்று கண்கள் கூர்மையாகி ஓரிடத்தில் நிலைபெற,

அனு, கரு நீல நிற முழங்கால் வரையிலான ஒரு நீச்சல் உடையில் நீந்திக்கொண்டு இருக்க,  சிறிது நேரம் நீந்தியவள், அப்படியே மேலே வானை நோக்கி மிதப்பதுபோல் நீந்தாமல் மிதந்தபடி இருக்க,

பேரர் வைத்துவிட்டு போல ஒரு பச்சை நிற திரவியத்தை விழுங்கியபடி ‘யாரிவள்????’ என்ற கேள்வியோடு பார்த்துக்கொண்டு இருந்தான் தீபன் சக்ரவர்த்தி..             

அனுராகா நீந்திய அழகு அவனின் இமை சிமிட்டலை நிறுத்தியது என்றாள், அவள் நீரின் மேல் மிதந்த அழகு தீபனை நின்ற இடத்தில் அப்படியே நிற்க வைத்தது. சிறிது நேரம் மிதந்தவள், பின் மீண்டும் நீந்த, கையில் இருந்த குவளையில் இருந்த திரவம் தீர்ந்து போனது கூட தெரியாது நின்றிருந்தான் தீபன் சக்ரவர்த்தி.

‘ஹூ இஸ் ஷி…’ என்று மனது கேட்டுக்கொண்டே இருக்க,

“தீப்ஸ்… இங்க என்னடா பண்ற.. கம்மான் லெட்ஸ் கோ…” என்றபடி வந்தான் தேவ்.. அவனின் இன்னொரு நண்பன்.. நாகா தர்மாவிற்கு அடுத்து தீபனுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்றால் அது தேவும் புனீத்தும்  தான்..

அப்படியிருக்க தேவ் அழைத்தது கூட காதில் வாங்காது தீபன் அப்படியே நிற்க, “ஓய்… என்னடா…” என்று பின்னே வந்து தேவ் முதுகில் தட்டி அப்படியென்ன இவன் வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று தேவ் எட்டிப் பார்க்க,

சடுதியில் தேவ்வின் தோளில் கை போட்டு “கம்மன் லெட்ஸ் கோ…” என்று தீபன் தானும் திரும்பி, அவனையும் திரும்பி நடக்கவைக்க,

“ஹேய்.. என்னாச்சு மென்??!!! என்னவோ சடனா மறைக்கிற?? என்ன பார்த்துட்டு இருந்த அப்படி…” என்று தேவ் திரும்பப் போக,

“இப்போ நீ வரல, உன் கண்ணை உன்கிட்ட பிச்சு கொடுத்திருவேன்…” என்ற தீபனுக்கு மனதில் பட்டென்று ஒரு மாற்றம்..

‘ஹேய்.. மச்சி.. அவள பாரேன்.. செம்ம பிகருல்ல…’ என்று நண்பர்களோடு சேர்ந்து பெண்களை ரசிப்பவன், இன்றோ ஏனோ அதற்கு அவனின் மனதும் இடம்கொட வில்லை, செயலும் இடம் கொடவில்லை..

காதல் – இடம் பொருள் ஏவல் காணாது

பில்லி சூனியம் மட்டும் வைக்கும்..

          

 

 

 

 

                     

Advertisement