Advertisement

நான் இனி நீ – 1

 “ஹூஊஊஊ….!!!!!!!”

“ஹேய்ய்ய்ய்……!!!!!!!!!!!”

“ஆஹாஹா….!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்..

அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம் டிஜேவின் இசையோ இன்னொரு உலகத்திற்கு அனைவரையும் அழைத்து செல்வதாய் இருந்தது.

ஆட்டம்.. பாட்டம்… கொண்டாட்டம்….கும்மாளம்.. ஆண்.. பெண் என்ற பேதமில்லாது அனைவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் நின்று, ஒலித்துக்கொண்டிருக்கும் இசைக்கு ஏற்பவும், உள்ளே போயிருந்த பானங்களின் பிரதிபளிப்பின் பயனாய் வந்த துள்ளலோடும் ஆடிக்கொண்டு இருக்க, கோவாவின் அந்த நட்சத்திர விடுதி அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டது..

சாமானியர்கள் நுழைய அங்கே அனுமதியில்லை.. கோடிகளில் சர்வ சாதாரணமாய் புரள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. வேண்டுமானால் அவர்களோடு ஓட்டிக்கொண்டு உள்ளே நுழையும் வாய்ப்பு வேண்டுமானால் வெகு சிலருக்கு கிடைக்கும்.

“ஹேய்…!!!!! சியர்ஸ் கைஸ்….” என்று தீபன் அவன் கரங்களில் இருந்த காக்டெயில் குவளையை உயர்த்திக்காட்ட, அவனுக்கு அடுத்து அவனின் நண்பர்களும் “சியர்ஸ்…!!!!” என்று கத்தியபடி உயர்த்த,

“தீப்ஸ்..!!!!! ப்ரேக் அப் பார்ட்டியே இப்படின்னா… தென் உன்னோட பேச்சிலர் பார்ட்டி தாறுமாறா என்ஜாய் பண்றோம்டா…” என்று ஒருவன் கூற, அதற்கு மற்றவர்கள் ஆமாம் போட்டனர்.

“கம்மான்….!!!!! பேச்சிலர் பார்ட்டி.. அதும் மீ… ஹா ஹா ஹா வாட் எ ஜோக்…!!!!!” என்று உதட்டினை ஏளனமாய் வளைத்தவன், கையில் இருந்த குடுவைக்கு ஒருமுறை தன் இதழை பருகக் கொடுத்து,

“லைப் லாங்.. பேட்ச் அப் அண்ட் ப்ரேக் அப் பார்ட்டி வைப்பேன்.. பட்… நோ பேச்சிலர் பார்ட்டி.. இந்த பூலிஷ் கமிட்மெண்ட்ஸ் எல்லாம் ஐ டோன்ட் வான்ட்…” என்று மறுப்பாய் தலையை ஆட்டினான் தீபன் சக்ரவர்த்தி.

தீபன் சக்ரவர்த்தி.. சக்ரவர்த்தி அவனின் அப்பா.. மதிய மந்திரி.. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாய் அரசியல் வாழ்வு.. அவரின் வாழ்வே அரசியல் தான் என்றாகிப்போனது. இரு மகன்கள்.. மூத்தவன் மிதுன் சக்ரவர்த்தி.. அப்பாவின் அனைத்து அலுவல் பொறுப்பும் இவனது. அதாவது லீகல் வேலைகள்..

இளையவன் தான் தீபன் சக்ரவர்த்தி.. அண்ணன் லீகல் வேலைகளுக்கு பொறுப்பென்றால், தம்பி, அதற்கு எதிர்பத வேலைகளுக்கு பொறுப்பு. அவன் அப்பாவின் அரசியல் எனும் திரைக்கு உள்ளே நடக்கும் அத்தனை காரியங்களும் தீபன் தான் பார்த்துக்கொள்வான்.

அதற்காக பணம் மட்டுமே கொள்கை என்ற மனிதர்கள் கிடையாது..

பதவி.. பணம்.. அதிகாரம்.. இவையே பழகி பழகி இப்போது அதில்லாது வாழத் தெரியாத.. வாழ முடியாத ஆட்கள் இவர்கள்.. இவர்களும் அதிலிருந்து வெளி வர முடியாது. வெளி வந்தால் இவர்களால் இருக்கவும் முடியாது..

மிதுனிடம் சென்று எதுவும் காரியம் நடக்கவில்லையெனில் அடுத்து தீபனிடம் தான் வந்து நிற்பார்.. ஆக தீபனுக்கு அடிமட்டத்தில் இருந்து ஆட்கள் தெரியும். பழக்கம் அதிகம்.. சில பல அண்டர்கிரவுண்ட் வேலைகள் உட்பட..

ஆனால் அவனின் மனதிற்கு நியாயம் என்று பட்டால் மட்டுமே செய்வான்.. அப்பாவிடம் சிபாரிசு செய்யும் காரியங்கள் பொதுவாய் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை எனும்பச்சதில் மட்டுமே தீபன் தலையசைப்பான்..

மிதுனுக்கு கூட ஆச்சர்யம் தான் “எப்படி டா இப்படி??” என்று..

“ஹா… வோட் வாங்க அவங்க முன்னாடி தானே போறோம்…. கொஞ்சமாவது நல்லதும் செய்வோமே..” என்றிடுவான்..

அதற்காக முழுக்க முழுக்க நல்லது மட்டுமே செய்பவனும் அல்ல.. அவனுக்குத் தெரிந்து பணம் ஒரு விசயமே இல்லை.. ஆக அந்த பணத்தினை கொண்டு எத்தனை விதமான பழக்கங்கள் இருக்கவேண்டுமோ அத்தனைக்கும் தீபன் விதிவிலக்கு அல்ல..

இவன் எங்கே எப்போது எப்படி இருக்கிறான் என்பது எல்லாம் மிதுன் ஒருவன் அறிவான்.. பின் இவர்களின் அம்மா உஷா அறிவார் அவ்வளவே.. ஆனால் எப்போதுமே இவனோடு ஓட்டிக்கொண்டு திரியும் கூட்டம் ஒன்று உண்டு இதோ இப்போதும் கூட அவர்கள்தான் இவனுடன்.. அனைவருமே பெரிய இடத்து பிள்ளைகள்..

வெட்டியாய் சுற்றி திரிகிறார்களே என்று பார்த்தால் ஒவ்வொருவருக்கும் வேலைகள் சரியாகவே இருக்கும்..

இவர்களுக்கு அடுத்து தீபனோடு இருப்பது இருவர். ஒருவன் நாகா.. இன்னொருவன் தர்மா.. இரட்டை பிறவிகள்.. தீபன் காரில் ஏறுகையில் இவர்களும் ஏறுவார்கள்.. அவன் சொல்லும் வேலைகள் செய்வார்கள். ஏன் எதற்கு என்ற கேள்வி எல்லாம் இருக்கவே இருக்காது.. மற்றபடி அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர்கள் என்று முழுதாய் சொல்லவேண்டுமெனில் அது இந்த இரட்டைகள் தான்.   

பேச்சு… கும்மாளம்… சிரிப்பு.. ஆட்டம் என்று நேரம் கடந்துகொண்டே இருக்க, தீபனின் பார்வை அனைத்தையும் தாண்டி கை கடிகாரத்தைப் பார்க்க, அது காட்டிய நேரம் கண்டு, மெதுவாய் கூட்டத்தில் இருந்து விலகி வந்தவன், பார்வையை சுற்றி ஓட்டியபடியே, நாகாவிற்கு அழைத்தான்..

“நீங்க வரலாம்…” என்ற இரு சொற்கள் மட்டுமே அவனின் செவிகளில் விழ,

“யா ஓகே…” என்றவன், திரும்ப, தூரத்தில் ஆடிக்கொண்டு இருந்த அவனின் நண்பர்களைப் பார்த்து

‘ஐம் கோயிங்…’ என்பது போல் சைகை காட்டி கிளம்பிட, வெளியே அவனின் கருப்பு நிற ஜாக்குவார் தயாராய் இருந்தது..

‘போலாமா…’ என்பது போல் நாகாவை பார்க்க, அவன் கார் கதவினை திறந்துவிட, தர்மா தயாராய் ஓட்டுனர் இருக்கையில் இருந்தான்..

அதைப் பார்த்த தீபனோ மெல்லிசாய் ஒரு புன்னகை செய்து “ஐம் ஸ்டெடி பாய்ஸ்…” என, மற்ற இருவரும் ஒரு சிறு புன்னகை அவ்வளவே..

அதற்குமேல் அங்கே பேச்சில்லை.. நாகா, தர்மா இருவரும் முன்னே இருக்க, தீபன் சக்ரவர்த்தி அவனின் பார்வைக்காக காத்திருந்த ஒரு பைலை எடுத்துப் புரட்ட, பார்வை சற்று கூர்மையாக,

“இஸ் எவரிதிங் ரெடி தர்மா??” என்று கேட்டான்..

“எஸ்….” என்று மட்டும் அவன் பதில் சொல்ல,

“தட்ஸ் குட்… டென் மினிட்ஸ்ல ரீச் ஆகிடனும்…” என்றவனின் கட்டளைக்கு, தர்மாவின் தலை சரியென்று ஆடியது.

அடுத்த இரண்டு நிமிடத்தில் நாகாவின் அலைபேசி அலற, அழைப்பது யாரென்று தீபனுக்கும் தெரிய “எய்ட் மினிட்ஸ் சொல்லு நாகா…” என்றான் இவனே..

“யா.. ஓகே…” என்ற நாகாவும் அதையே சொல்ல, சொல்லியது போல் சரியாய் எட்டாவது நிமிடம், அந்த ஆல் அரவமற்ற ஒரு பாலத்தின் அடியில் இவனின் ஜாக்குவார் போய் நிற்க, இவர்களுக்கென்றே காத்திருப்பதாய் அங்கே நின்றிருந்தது மற்றொரு ஆடி..

காரை நிறுத்திவிட்டு, முன்னே நாகாவும், தர்மாவும் அந்த காருக்குள் சென்று அனைத்தயும் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்த்து, நாகாவின் கட்டை விரல் உயர்த்தி இவனுக்கு சமிக்கை செய்யவும் தான் தீபன் அங்கே சென்றான்.

தீபன் அந்த காரை நெருங்கும் சமயம், உள்ளிருந்து ஒருவன் பவ்யமாகவே இறங்கி “ஹாய் Mr.தீபன்…” என்று கரம் நீட்ட,

அவனை ஒரு பார்வை.. லேசர் பார்வை தான்… நொடியில் கணித்துவிட்டு, இதழில் ஒரு ஏளன புன்னகையோடு “ஹாய் Mr. சர்மா..” என்று தீபனும் கை குலுக்க, அடுத்த நொடி தர்மா அந்த காரின் கதவை திறந்து வைக்க இருவரும் உள்ளே ஏறி அமர,

“டீலிங் ஓகே…” என்றான் தீபன் சக்ரவர்த்தி..

“எஸ் டபிள் ஓகே…” என்றவன் தான் கொண்டு வந்திருந்த தங்க பிஸ்கட்டுகள் நிரம்பிய ஒரு பெட்டியை காட்ட,

“ம்ம்…” என்று தலையை ஆட்டியபடி இதழ் வளைத்தவன், எதிரே இருந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில், அவனின் பாக்கெட்டில் இருந்த சைலன்சர்  பொருந்திய துப்பாக்கியை எடுத்து அந்த ஷர்மாவின் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்தியிருந்தான்.

ஷர்மா திகைத்துப் போய் மிரண்டு பார்க்க, “ வாட் டூ யூ திங் அபௌட் மீ…” என்று தீபன், கண்ணில் சீற்றம் காட்டி சீற,

“நோ.. நோ.. தீபன்.. ஐ டிட்ன்ட் டூ எனிதிங்…” என்றான் பதறிப்போய் ஷர்மா..

“பார்ட்டில இருந்து வர்றான் மப்புல வருவான்னு பார்த்தியா…” என்றவனின் துப்பாக்கி ஷர்மாவின் நெஞ்சை குறிப்பார்க்க,

“நோ.. ப்ளீஸ் தீபன்… ப்ளீஸ் காம் டவுன்…” என்று கெஞ்ச,

“காம் டவுன்… மீ.. ஹா ஹா.. டேய்.. டேய்… நீ ப்ளான் பண்ண ஆரம்பிச்சது ஜஸ்ட் ஒன் வீக் தான்.. பட்.. ஒன் மன்தா நீ என்னோட ட்ராக்கிங்ல இருக்க..” என,

“ப்ளீஸ் பிலீவ் மீ தீபன்…” என்றான் ஷர்மா..   

“ஹா ஹா… நம்பிட்டேன்…” என்று சிரித்த தீபனோ, அதே சிரிப்போடு, அவனின் ஆடிக் காரில் ஆங்காங்கே சுட,

‘கண்டுவிட்டானே…’ என்று பயந்து போய் பார்த்தான் ஷர்மா..

அவனின் உயிர் அவன் கண் முன்னேயே சட்டென்று நகர்ந்து போய், தீபன் கரங்களில் இருக்கும் துப்பாக்கி முனையில் அமர்ந்துகொண்டது. இதயம் தாறுமாறாய் ஒலிக்க, வியர்ந்து வழிந்தது ஷர்மாவிற்கு.

தீபனுக்கோ அவனின் கண்களில் தெரியும் ஆக்ரோஷதிற்கும், முகத்தினில் இருக்கும் சிரிப்பிற்கும் சம்பந்தமேயில்லாது, “யூ க்னோ ஷர்மா… நீ கார்ல கேமரா செட் பண்ண அரேஞ் பண்ணியே ஒருத்தன்.. அவனே நான் அனுப்பின ஆள் தான் டா…” என்று இன்னும் சத்தமாய் சிரிக்க,

தீபனின் சிரிப்பையே சம்மதமாய் ஏற்று நாகாவும், தர்மாவும் மறுபுறம் கார் கதவினை திறந்து அந்த ஷர்மாவை வேகமாய் வெளியே இழுத்துப் போட, ‘செத்தோம்…’ என்றே நினைத்தான் அந்த ஷர்மா..

“கைஸ்….” என்று இருவரையும் பார்த்த தீபன், ‘பார்த்துக்கோங்க…’ எனும்படி தலையை ஆட்டிவிட்டு, அவனின் ஜாக்குவாரில் சென்றுவிட்டான் அவனின் விருப்பப் பாடலை விசில் அடித்தபடி..

அதே நேரம், சென்னையில்,  சளீர் சிலீர் என்று கண்ணாடி உடையும் சத்தம், அந்த பங்களாவினையே அலற வைத்துக்கொண்டு இருந்தது.. வீட்டில் இருந்த வேலையாட்களோ என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருக்க, அனுராகா அவளின் அறையில் இருந்த அனைத்துப்  பொருட்களையும் தூக்கி வீசிக்கொண்டு இருந்தாள்..

மாடியேறி போய் என்னவென்று கேட்கும் துணிவில்லாத வேலையாட்களுக்கு இப்போது கடைசியாய் உடைந்தது, போன மாதம் இரண்டு லட்சத்திற்கு வாங்கிய கண்ணாடியிலான ட்ரஸ்ஸிங் டேபிள் என்று நன்கு புரிந்தது.

“டாட் ஜஸ்ட் டூ லேக்ஸ் தான்…” என்று அனுராகா சொன்னதும்,

“இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கான்னு பாரேன்…” என்று அவளின் அப்பா சொன்னதும், இப்போதும் அங்கிருப்பவர்களுக்கு நினைவு வர என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டு இருந்தனர்.

“டேமிட்… ப்ளட்டி…. ஸ்கவுன்ட்ரல்…” என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் உதிர்த்துக்கொண்டு, கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி, கையில் அகப்படும் பொருட்களை எல்லாம் எடுத்து தரையில் வீசியவளுக்கு நினைவு பின்னே போக போக, ஏமாற்றம்… வலி…. கோபம்…. ஆசை… காதல் என்று எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அவளின் உணர்வுகளை தூண்டியது.

அறையில் அவளின் கண்களிலும் கைகளிலும் அகப்பட்டது அனைத்தையும் தூக்கிப்போட்டுக் கொண்டு உடைத்துக்கொண்டு இருந்தாள், கைகளிலும், கால்களிலும் ரத்தம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது.

அவளின் தந்த நிற மேனிக்கு, சிவப்பு போட்டு வைப்பது போல் ரத்தத் துளிகள் எட்டிப்பார்க்க, அந்த வலி எல்லாம் அவளுக்கு உணரவே உணராது எனும்வகையில் அவளின் மனம் பெரும் வலி எடுத்து கதறிக்கொண்டு இருந்தது.

“ஹவ் டேர் ஹீ இஸ்…” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு, பொருட்களை போட்டு உடைத்துக்கொண்டு இருக்க, இதற்குமேல் பொறுத்தால் சரியிருக்காது என்றெண்ணி, வீட்டு வேலையாட்களின் தலைமையாள் ஒருவர் வந்து “ரூமா.. நீ போய் பாரு..” என்று வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் சொல்ல,

“நானா??!!” என்றாள் தயக்கமாய்.

“ஆமா.. போய் பாரு…” என்று அவளை அனுப்ப, ரூமா கொஞ்சம் பயந்துகொண்டே தான் படியேறினாள்.

ஆனாலும் அனுராகாவின் அறையினுள் உள்ளே போகும் தைரியம் இல்லை. கதவை தட்ட தயங்கி வெளியே நிற்க, அவள் எதிர்பார்க்காத நேரம் ஒரு பூஜாடி வந்து கதவின் மேல் பகுதி கண்ணாடியை உடைக்க, அரண்டு போய் தள்ளி நின்ற ரூமா, அடுத்து பயந்து போய் இறங்கியேவிட்டாள்..

இப்போது அடுத்து யாரை போகச் சொன்னாலும் போகவும் மாட்டர், ஆனால் யார் வந்தாலும் எனக்கென்ன என்ற ரீதியில் தான்  அனு இருந்தாள்.

அவளால் தன் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

தன்னை ஒருவன் வேண்டாம் என்பதா??

அதுவும் இரண்டு வருடங்களாய் பின்னே சுற்றியவன், நீதான் வேண்டும்.. நீ மட்டும் தான் வேண்டும்.. உனக்காக எதையும் செய்வேன் என்று காதல் மொழி பேசியவன், இப்போது “ஐம் சாரி அனு…” என்று சொல்கையில் அவளால் அதை ஏற்றுகொள்ளவே முடியவில்லை.

ஆனால் நீ ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று காலம் ஒன்றை நிர்ணயித்து அதை செயல்படுத்துகையில், யார் தான் என்ன செய்ய முடியும்.??

விருப்பங்கள் அனைவர்க்கும் உண்டு.. அதில் தவறில்லை.. ஆனால் அது நடப்பதும் நடக்காது போவதும் நம் கையில் இல்லை அல்லவா?? அதற்காக யாரை நாம் குறை சொல்ல முடியும்.. நம்மை நாமேவா??!! அதுவும் எத்தனை நாட்களுக்கு..

இருந்தும்… கசப்பானது என்றாலும், நம் மனமறிந்த உண்மையை நாம் நம்மிடமே ஒப்புக்கொண்டு தான் ஆகிடவேண்டும்.

அந்த நிலையை அனு இன்னமும் உணரவில்லை..

இரண்டு ஆண்டுகளாய் பிராஷாந்த் அனுராகாவின் பின்னே சுற்றினான் தான்.. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளும் அனுராகா திரும்பியும் பாராது, சிறிதும் பொருட்படுத்தாது இருப்பது போலிருந்து அவனை தன் பின்னே சுற்ற வைத்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்..

பிரஷாந்த், அனுராகாவின் அப்பாவின் MNC- யின் சென்னை அலுவலகத்தின் தலைமை நிர்வாகி.

அடிமட்டத்தில் இருந்து உழைப்பினாலும் திறமையினாலும் உயர்ந்து வந்தவன், அவனின் உழைப்பைக் கண்டு தான் அனுவின் அப்பா, லோகேஸ்வரன் அவனுக்கு பதவி உயர்வும் கொடுத்து சென்னைக்கு வரவழைத்தார். ஆனால் அவனின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ அனுவின் மீது அவனுக்கு காதல் ஏற்பட,

முதலில் தயக்கம் காரணமாய் சொல்லாது விட, பின் நாட்கள் செல்ல செல்ல, தயங்கங்கள் தகர்த்து நேரடியாகவே ஒருநாள் அனுவிடம் சொல்லிவிட்டான்.

அனுராகா அதே அலுவலகத்தில் தொழில் பயின்று கொண்டு இருக்க, வசதி வாய்ப்புகளின் காரணமாய் கொஞ்சம் அலட்சிய பேர்வழியாகவும் தான் இருந்தாள் ஆரம்பத்தில். அதிகம் மெனக்கெட மாட்டாள். ஆனால் அவளிடம் ஒரு பொறுப்பினை ஒப்படைத்தால் கண்டிப்பாய் அதை முடித்துவிட்டு தான் மறுவேலை..

சொல்லப்போனால், பிராஷந்திற்கு அனுவிடம் பிடித்தது அவளின் அழகோ, வசதியோ அல்ல, அலட்சியாமாய் சில நேரங்கள் இருந்தாலும் தலைகனம் இல்லாது நடந்துகொள்ளும் அவளின் பாங்கு தான்..

அதுவே அவனை அவளிடம் திரும்ப திரும்ப ஈர்க்க அவளை எப்படியாவது சம்மதம் சொல்லிட வைக்க முயன்றுகொண்டே இருந்தான்.. அனுவிற்கும் அவனை பிடிக்கும்.. காதலா தெரியாது??

ஆனால் தன் பின்னே ஒருவன் தைரியமாய், அதுவும் அவளின் அப்பாவிடம் வேலை செய்யும் ஒருவன் சுற்றுவதும், காதல் சொன்னதும் பிடித்து இருந்தது. யாருக்கும் இல்லாத தைரியம் இவனுக்கு இருப்பது கண்டு கொஞ்சம் அசந்து தான் போனாள்.

ஆனால் சம்மதம் என்றும் சொல்லாது இல்லை என்றும் சொல்லாது கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் இருக்க, நாட்கள் ஓடியது..

இதனை அறிந்த அனுவின் தோழி, நீரஜாவோ “திஸ் இஸ் ராங் அனு…” என்று கண்டித்தாள்..

“வாட்ஸ் ராங் வித் மீ நீரு???”

“இப்படி நீ அலைய விடுறது.. தப்பு.. உனக்கு பிடிச்சிருக்கு தானே.. அப்போ ஓகே சொல்லு.. இல்லையா நோ சொல்லிடு.. பட் இப்படி பண்றது தப்பு.. தென் நீதான் பீல் பண்ணுவ…” என,

“ஹேய்…. நீரு டார்லிங்… ஏன் இவ்வளோ கோபம்.. எஸ் கண்டிப்பா நான் ஓகே சொல்லத்தான் போறேன்.. பட் வெய்ட் பார் சம் டைம்.. ஜஸ்ட் பிடிச்சிருக்குன்னு ஓகே சொல்லிட முடியாது.. இவன் இல்லாம நான் இல்லைன்னு ஒரு எண்ணம் எனக்குள்ள ஸ்ட்ராங்கா வரணும் இல்லையா…” என,

“டூ இயர்ஸா உனக்கு அது வரலையா???” என்றாள் நீரஜா எரிச்சலாய்..

“நோ…” என்று முகத்தை சுறுக்கி, பாவமாய் சொல்வது போல் சொன்னவள், “சீரியஸ்லி.. பிரஷாந்த் இஸ் குட்.. பட்.. எனக்குள்ள ஒரு ஸ்ட்ராங் பீல் வரணும் தானே..” என, அதற்குமேல் நீரஜாவால் ஒன்றும் சொல்லமுடியவில்லை..

ஆனால் ஒரு கட்டத்தில் அனுராகாவிற்கு, பிரஷாந்த் பேசாது, அவன் பார்க்காது இருக்க முடியாது போக, தவிப்பாய் தான் இருந்தது..

இவள் பார்க்காது பேசாது எத்தனை நாளைக்கும் இருப்பாள், ஆனால் அவன் எதிரே இருந்தாலும் இவளை ஒருநொடி பார்க்கவில்லை எனில் ‘ஏன் ஏன்…’ என்று மனம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிடவே முடியாது..

‘இட்ஸ் இன்ப்… போதும்…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்,

“நீரு… டுமாரோ நான் பிரஷாந்த்கிட்ட ஓகே சொல்ல போறேன்..” என்று சொல்ல,

“ஹேய்.. வாவ்… அங்கிள் ஆன்ட்டி எப்படியும் ஓகே சொல்லிடுவாங்க.. சோ  நோ பிராப்ளம்..” என்று வாழ்த்தினாள் நீரஜா..

மறுநாள், விடியலே அனுராகாவிற்கு பேரழகாய் இருந்தது.. பார்த்து பார்த்து தன்னை ஒப்பனை செய்து, வேகமாய் அலுவலகம் கிளம்பிச் செல்ல, அங்கேயோ பிரஷாந்த் இல்லை.. அவன் எங்கே என்று கேட்டதற்கு இன்று விடுமுறை என்று தெரியவர,

“ஓ.. காட்…” என்றபடி, அவனின் ப்ளாட் நோக்கி காரை செலுத்தினாள்.

முடிவு செய்தபின் தயக்கம் எதற்கு… யோசனைகளை எதற்கு.. பிரசாந்தை நேரில் காண வேண்டும்.. அவளின் காதல் சொல்லவேண்டும் அதுமட்டுமே அவள் மனதில்.

தன்னைக் கண்டதும் அவனின் முகம் எப்படி, என்னவிதமான ஒரு பாவனை காட்டும் என்று காண அவளுக்கு ஆவலாய் இருந்தது.. அதே ஆவலோடு அவனின் ப்ளாட் செல்ல, அங்கேயோ பிரஷாந்த் வீட்டையே காலி செய்து அனைத்தையும் மூட்டைக் கட்டிக்கொண்டு இருக்க,

“பிரஷாந்த்??!!!” என்றாள் கேள்வியாய்..

என்னவோ அவளுக்கு வந்தபோது இருந்த உணர்வுகள் எல்லாம் வடிந்து, ஒருவித கேள்வியும் அதிர்சியுமாய் இருந்தது அவனின் முகம் பார்க்கையில்..

“ஹா.. ஹாய் அனு…” என்ற பிரஷாந்த் முகத்தினில் துளியும் உற்சாகமில்லை. இவளைக் கண்டதும் எப்போதும் கண்களில் தெரியும் காதல் இப்போது காணவில்லை.

“வாட் ஹேப்பன்…” என்று பார்வையை சுழல விட்டு அனுராகா கேட்க,

“நத்திங்.. ஜஸ்ட் ஐம் லீவிங் டூ டெல்லி ஆபிஸ் வித் ப்ரோமோசன்..” என்று சொல்ல,

“ஓ..!!! ரியல்லி… கங்க்ராட்ஸ்…” என்று கரம் நீட்டினாள் அனு.

ஆனால் அவனோ வெற்றாய், வேதனையாய் ஒரு புன்னகை சிந்தி “ஐம் சாரி அனு…” என, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ..

“ஏன்?? எதுக்கு சாரி???” என,

“எல்லாத்துக்கும்.. ஐ க்னோ நீ இப்போ இங்க ஏன் வந்த அப்படின்னு.. பட்.. அது எதுவும் நடக்க சான்ஸ் இல்லை..” என்றவனின் பார்வை எங்கோ இருக்க,

“வாட்??!!!!!” என்று சத்தமாய் அதிர்ந்து போனாள் அனுராகா..

“எஸ்…” என்றவனை குரலில் இருந்த தீர்க்கம், அதற்குமேல் அவளை அங்கே நிற்க விடவில்லை..

ஏன் போனோம்… எப்படி வந்தோம்.. ம்ம்ஹும் இப்போது அதெல்லாம் நினைவில் இல்லை.. மாறாக, கோபம்.. ஆற்றாமை.. ஏக்கம்.. ஏமாற்றம் இதெலாம் மட்டுமே இருக்க, தானும் நொறுங்கி, மாற்றத்தையும் நொறுக்கிக் கொண்டு இருந்தாள்.     

சில நேரங்கள் இப்படிதான்… கிடைக்கும் என்றெண்ணிய ஒன்று.. கையருகே வந்து பின் மாயமாய் மறைந்து போகும்.. மறைந்து போகவேண்டும் என்றெண்ணும் ஒன்றோ கண் முன்னே இருந்துகொண்டு இம்சிக்கும்..                 

காதல் நீயெனில் உன்னில்

கரைவது நானா..??

காதல் நானெனில் என்னில்

உறைவது நீயா…??

                             

 

                   

 

                    

 

Advertisement