புன்னகை – 28

மாடியில்வேறொரு காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. காட்சிகள் முடிந்து அடுத்ததிற்கான பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்க இங்கே ரிஷி நேத்ராவிடம்மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தான். முகத்தில் அவ்வளவு புன்னகை. அதுவும் வசீகரமாய்.

தன்னருகில் யாரோவந்து அமரும் அரவம் தெரிய நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் நேத்ராவிடனான பேச்சில் தன்னை நுழைத்துக்கொண்டான்.

அவள்அப்படத்தின் இன்னொரு கதாநாயககிஅபர்னிதா. அவனின் அருகில் அமர்ந்தவள் தன்னை நிமிர்ந்துபார்த்தவன் ஒரு மரியாதைக்காவது புன்னகைப்பான் என்று பார்த்தாள்.

அவனின் கண்டுகொள்ளாத தன்மையில்முகம் வாடினாலும் அதை காட்டிக்கொள்ள முடியாமல் ரிஷியின் புன்னகை அடியோடு சாய்த்தது அவளை.

“ஹாய் ஸார்…” என்றாள்அவன் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தும்.

“ஹாய்…” அவ்வளவுதான் நிமிர கூட இல்லை. இதை அனைத்தையும் செல்வா பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

“இந்த பொண்ணு நம்ம பெரியசாமி ஸார் பத்தி தெரியாம போய் உட்கார்ந்திருக்குதே?…” பயத்தோடு தான் பார்த்திருந்தான்.

“யூ லுக் வெரி ஹேண்ட்சம் ஸார். பேசாம நீங்களும் ஹீரோவா நடிக்கலாம் பெரியசாமி ஸார். ஆனா உங்க நேம் வேற மாத்திடுங்க…” என சொல்லி சிரிக்கபொறுமை இழந்தவன் எரிச்சலாய் அவளை பார்க்க,

“இன்னைக்குஷூட்அவ்வளோ தானா ஸார்?. முக்கியமான ஸீன் இன்னும் எடுக்கலையே…” எனவிடாமல் கேட்க,

“செல்வா….” எனஅனைவரும் கேட்கும் விதமாய்  கத்தினான். அதிர்ந்து போய் ரிஷியின் முகம் பார்த்தவள் இன்னும் அரண்டு போனாள்.

அதிகமாய் பேசமாட்டான் தான். ஆனாலும் ஒரு நடிகையிடம் பேசாதவனும் உண்டா என்னும் மிதப்பில் இருந்தவள்அப்படத்தில் நடிக்க ஆரம்பித்திலிருந்தேஅவனின்திமிரானஒதுக்கத்தில் ஒருவித ஈர்ப்பு என்றும் சொல்லலாம்.

அவனிடம் வேண்டுமென்றே அவ்வப்போது பேச்சு வளர்க்கவும் முயல்வாள். அதற்குசந்தர்பம் எதுவும் கிடைக்காமல் இருந்துஇன்றைக்கு அவனை தனிமையில் பார்த்ததும் பேசவும் வந்துவிட்டாள்.

ஆனால் இப்படி அனைவரின்முன்பும்   கத்திவிடுவான் என எதிர்பார்க்காததில் கூசிப்போனவள் ரிஷியின் முகத்தையே வெறித்து பார்க்க அதற்குள் செல்வாவும் வந்துவிட்டான்.

“எங்க போன நீ? தேவையில்லாமயாரும் என்கிட்டே வந்து பேசறது எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?…” செல்வாவிடம் இரைய அப்படி தான் என்ன தவறு செய்துவிட்டோம் என்ற ஆணவம் தலை தூக்க,

“ஸார் கேட்டது நான், நீங்க எதுக்கு அவர்க்கிட்ட பாயறீங்க?…”

“லுக் மிஸ் அபர்னிதா. உங்ககேள்விக்கெல்லாம்பதில் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…” என்றவன்கொஞ்சம் நெருக்கமாய் நின்று,

“நீங்கஎந்த இன்டேன்ஷன்ல என்னோட பழக நினைக்கறீங்கன்னு புரியாத அளவுக்கு நான் குழந்தை இல்லை. சோநீங்க டிஸ்டன்ஸ் மெய்ண்டன் பன்றது உங்களுக்கு நல்லது…” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவன் செல்வாவை பார்க்க,

“ஸாரி ஸார், நான் பார்த்துக்கறேன்…”என்ற செல்வா,

“மேம், உங்களுக்கு ஏதாவது கேட்கனும்னா என்னை கூப்பிடுங்க…” என்றதும் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்று தன்னுடைய கேரவனுக்குள்மறைந்துகொண்டாள்.

அவளின் பின்னே போகவிடாமல் செல்வாவின் மொபைலில் நேத்ராவின் அழைப்பு.

“போச்சுடா…” என தலையில் கை வைக்காத குறை தான்.

“சொல்லுங்க மேடம்…”பாவமாய் ஆரம்பிக்க,

“என்ன நடக்குது அங்க? யார் அவ?…” நேத்ரா பொரிய ஆரம்பிக்க,

“இல்லை மேம். நான் நான் பார்த்துக்கறேன்…”

“அதான் பார்த்தேனே நீ பார்த்த லட்சணத்தை.இனி எவளாச்சும் அவர் பக்கத்துல வந்தான்னு தெரிஞ்சது நீ தொலைஞ்ச பார்த்துக்க…” என்று வைத்துவிட,

“நேரமே சரியில்லை…” என புலம்பிக்கொண்டே அனய்யை பார்க்க சென்றான் அவன் தயாராகிவிட்டாகிற்றா என்று பார்க்க.

உள்ளுக்குள் பொசுங்கிக்கொண்டிருந்தாள் அபர்னிதா.அத்தனை தலையிறக்கமாய் போயிற்று அவளுக்கு. தன்னுடைய அழகிற்கு எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள். இவன் என்னடாவென்றால் இப்படி அவமதித்துவிட்டானே? நினைக்க ஆறவில்லை.

வேண்டுமென்றேவந்து அவர்களே மன்னிப்புகேட்டு அழைத்துசெல்லட்டும் என பிடிவாதமாய் அமர்ந்திருக்க அவளின் பிஏ வேகமாய் வந்தான்.

“மேம், என்ன இப்படி பண்ணிட்டேங்க?…”

“நான் என்ன பண்ணினேன்? அந்த கேமராமேன் தான் என்னை இன்சல்ட் பண்ணினான்.   வந்து ஸாரி கேட்கிற வரை நான் வரமுடியாது. சொல்லிடு…”

அவளின் பேச்சில் அதிர்ந்தவன், “புரியாம பேசாதீங்க மேம். அவரை யார்ன்னு நினைச்சீங்க? ஆதி ஸார் மச்சான்.இங்க என்ன ஆனாலும் அவர் உங்க கிட்ட வந்து ஸாரி கேட்க மாட்டார். அதுக்கு பதிலா ஹீரோயினை வேணும்னாலும் மாத்துவாங்க. இந்த மூவி உங்களுக்கு கிடைச்ச பெரிய ஆபர்ச்சுனட்டி. மிஸ் பண்ணிடாதீங்க மேம்…”

அவன் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டவள் இப்போதைக்கு அமைதியாய் போவோம், அதுதான் சரி  என்று முடிவெடுத்துவெளியே வந்தவள் அங்கே ரிஷியும் அனய்யும்பேசிக்கொண்டிருக்க இவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

அனய்எப்பொழுதும் இயல்பாய் பழகுபவன். அவனின் இந்த ஒதுக்கம் அபர்னிதாவைகொஞ்சம் யோசிக்கவைத்து தன் எதிர்காலத்திற்காய் தழைந்து போக சொன்னது அவளின் அறிவு.

“ஸாரி ஸார்…”பிழைக்க தெரிந்தவளாய் ரிஷியிடம் வந்து நிற்க சிறு தலையசைப்போடு அவன் எழுந்து சென்றுவிட அப்பொழுதுதான் அனய்யின் முகமே தெளிவாய் இருந்தது.

லேசான புன்னகையோடு அனய்யும் அவளிடம் தலையசைத்து நகரஎரிச்சலான மனதோடு அவர்களை பார்த்திருந்தாள். ஆனால் வெளிக்காட்ட முடியாதே. அடுத்தஅனய்யின் புதுபடத்திற்கும் தன்னையே கமிட் செய்வது பற்றிய பேச்சுக்கள் தன் காதில் விழுந்திருந்ததே.

அடுத்த காட்சி திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் நடைபெறும் சடங்கிற்கானது.அதில் காதல் காட்சிகளும் அரங்கேற சரியாகவந்து சேர்ந்தாள் வனமலர்.

புது மாப்பிள்ளையாய் மனைவியிடம் காதலுடன் நடந்துகொள்ளும் காட்சிகளும் சம்பாஷனைகளும்.தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்ததும்அதிலும் நெருக்கமாய்அனலில் இட்ட புழுவென துடிதுடித்து தான் போனாள் மலர்.

அவளின் அதிர்ந்த பார்வையும் தோற்றமும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க பார்த்ததும் கண்டுகொண்டனர் அனய்யின் மனைவி என.

யாரையும் ஏறிடும் சக்தி இல்லாமல் அங்கிருந்த அறைக்குள் நுழைந்து விட இன்னமும்புண்பட்டுதான் போனாள்.

மலரின்வெறித்த பார்வையில் அவளின் விழிகள் பார்த்த திசையில் தானும் பார்த்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.

கதைக்கான அடுத்த காட்சி முதலிரவு. அதற்கான ஏற்பாடு அந்த அறை முழுவதும் அலங்காரமாய். பூக்களால்அந்த அறையையும் படுக்கையையும் ரசித்துரசித்துஅலங்கரித்திருந்தனர்.

“போச்சு, இன்னைக்கு காலி. என்ன ஆகுமோ? சண்டை போடுவாளா? அப்படியாவது போட்டுட்டா தான் தேவலை. ஆனா வாயை திறக்கமாட்டாளே…”

அவனின்எண்ணம் அறியாமல் உயிரற்றஜடமாய் அப்படியே சமைந்து அமர்ந்திருந்தாள். அனய் தன் பின்னே வந்தது, தன்னை பார்த்து பதித்து நிற்பது என எதையும் அறியாமல் அவளின் விழிகள் நிலைகுத்திட்டு நின்றது.

இதயத்தினுள் ஆயிரமாயிரம் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டுஉயிரை வதைத்தது. கண்ணீர் கண்ணீர் கண்ணீர் மட்டுமே கண்களுக்குள்.

“இந்த நிமிடம், இந்த நொடி தான் அனுபவிக்கும் இதே வேதனையை அனய்க்கு எத்தனை வருடமாய் நான் கொடுத்திருந்தேன்?…”

“கதைக்கென்றாலும் கூட அவனை இன்னொரு பெண்ணோடு நெருக்கமாக பார்க்க முடியாத தன் மனநிலை. ஆனால் நிஜமாய் ஒருவனின் மனைவியாக தான் இருந்ததும், வாழ்ந்ததும்.ப்ச். அந்த சூழ்நிலை அனய்க்கு எத்தனை பெரிய தண்டனையாய் இருந்திருக்கும்?…”

மனதிற்குள் அரற்றி துடித்தவள் தாங்கமுடியாமல்முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் மலர்.

பதறிய அனய் அவளருகில் ஓட அவனின் அருகாமையை உணர்ந்துகொண்டவள் கண்களை திறவாமலே அவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

“டேய் மலர், என்னடா?…” அவளின் முகத்தை நிமிர்த்த முயன்று தோற்றுத்தான் போனான்.

அத்தனை அழுத்தமாய் அவனின் சட்டையை பற்றிக்கொண்டு அழுகையில் கரைந்துகொண்டிருந்தாள் வனமலர்.

“ப்ச் இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இப்படி அழுதிட்டிருக்க. வெளில எல்லோரும் இருக்காங்கம்மா. அழாத. சொல்றேன்ல. கேளேன்டி…”

அதட்டலில் தொடங்கி கெஞ்சலில் இறங்கி வர அவையெல்லாம் மலரிடம் எடுபடவே இல்லை.அவனின் மார்பில் அடித்துக்கொண்டே அழுதவள்,

“என்னை கொன்னு போட்ருக்கலாம் நீ. என்னால இதை பார்க்க கூட முடியலை. ஆனா நான் உனக்கு எத்தனை பெரிய பாவத்தை செஞ்சிருக்கேன். எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருப்ப நீ. ஏன்டா ஏன் என்னை போய் விரும்பின? நான்லாம் உனக்கு…”

சுயநினைவில்லாதவளை போல சத்தமாய் பிதற்ற ஆரம்பிக்க அவளை கட்டுப்படுத்த முடியாமல் அவளிதழ்களை முற்றுகையிட்டான் அனய். சட்டென ஏற்பட்ட இதழ் ஸ்பரிசத்தில் தடுமாறியவள்விழிகள் மயங்க அவனோடு மூழ்கித்தான் போனாள்.

எத்தனை முயற்றும் அவன் கொடுத்த முதல் முத்தம் ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை மலரால். அன்று அவன் முத்தம் கொடுத்ததும் அதன் பின்னான நிகழ்வுகளும்உயிரை தின்றது.

மட்டுப்பட்டிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க அவளை விட்டு விலகியவன் சுவற்றில் சாய்ந்தமர்ந்துகொண்டான்.

“இன்னும் என்னடி. உன்னோட போராடுறதே எனக்கு வாழ்க்கையா போச்சு…” சலிப்பாய் அவன் கூற அனய்யின் கண்களில் இருந்த வலி கண்டு அமைதியாக இருக்க முடியாமல் இதற்கு தான் தானே காரணம் என்ற எண்ணம் மேலும் அழுகையை தான் கொண்டுவந்தது.

“திரும்ப திரும்ப பழசை நினைக்காதே மலர். இந்த நிமிஷமும், இனி வரும் எதிர்காலமும் தான் நமக்கு நிஜம். கடந்தது இறந்த காலம். இறந்ததாவே மட்டும் இருக்கட்டும். நீ திரும்ப பேசி அதுக்கு உயிர் கொடுத்து உன்னை அழிச்சு என்னையும் அழிச்சிடாதே…”

“இல்லை வந்து…”

“இப்பவும் நீ என்னோட மலர் தான். என் ரோஸ்பட் தான். நீ எனக்குன்னே பிறந்தவ. அதுதான் இத்தனை கஷ்டத்திலையும் உன்னை என்கிட்ட கொண்டுவந்து சேர்த்திருக்கு. நாம சந்தோஷமா வாழ பிறந்தவங்க மலர்…”

“உண்மைதான். எதோகடவுளுக்கு கருணை இருந்திருக்கு. அதுதான் என்னை எந்தகளங்கமும் இல்லாம உன்கிட்ட வந்து சேர்த்திருக்கு…” என்றதும் அதிர்ந்து பார்த்தான் அனய்.

“மலர், இடியட்மாதிரி பேசாதே. என்ன நினைப்பு இதெல்லாம?…” அவளின் பேச்சின் திசையை அவன் விரும்பவில்லை என்பது அவன் முகத்தில் இருந்தே புரிந்துகொண்டாள். இன்றே இதை பேசி விடவேண்டும் என்று முடிவெடுத்தவள்,

“நான் உண்மையை தான் சொன்னேன். அப்படி மட்டும் ஏதாவது நடந்திருந்தா என்னை என்னாலையே மன்னிக்க முடிஞ்சிருக்காது. சத்தியமா செத்துதான் போய்ருப்பேன்…” உடல் நடுங்க சொல்லியவளை வேதனைபொங்க பார்த்தவன்,

“மலர் உனக்கு, உனக்கு…”

“ஆமா எனக்கு எல்லாமே தெரியும். தெரியும்…” முகத்தில் அடித்துக்கொண்டு அவள் அழ,

“வேண்டாம்டி. அழாத. ப்ளீஸ்…” அவளை அணைத்துக்கொண்டவன் உள்ளமோ கிடந்து தவித்தது.

“எனக்கு தெரியும். தெரிஞ்சிடுச்சு.அதுக்காக நான் சந்தோஷம் தான் படறேன்.நான் எதுக்காக இதை நினைச்சு கவலை படனும்? வருணி எனக்கு அந்த கடவுள் கொடுத்த கிப்ட்.அதே மாதிரிதான் நீங்களும்…”

“ஆனா ஆனா அவங்க…” சரவணனை குறிப்பிட்டு சொல்ல,

“வேண்டாம், வேண்டவே வேண்டாம். இதை பத்தி இனி நாம பேசவோ நினைக்கவோ கூடாது…” கண்டிப்பாய் சொல்லியவன்,

“மலர்கற்பனையாய் சந்தோஷத்தை உருவாக்கிக்கலாம். ஆனால் கற்பனையாய் துயரத்தை கஷ்டத்தை உருவாக்கறது தப்பு.இந்த மாதிரி யோசிச்சு உன்னோட நிம்மதியை இழந்திடாதே. சில விஷயங்கள் கற்பனையா கூட நினைக்க கூடாது. புரியுதா?…” அனய்யின் சமாதானம் எதுவும் செல்லுபடியாகவில்லை மலரிடம்.

“என்னால முடியலை. நான் என்ன பன்றது. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன்ல. உங்களை உங்க காதலை அலட்சியம் செஞ்சதுக்கு எனக்கு இந்த தண்டனை தேவைதானோன்னு தோணுது. விலகிடனும்னு கூட. ஆனாலும்நீங்க இல்லாம இந்த லைப். சத்தியமாமுடியலை…” நடுக்கம் குறையாமல் அவனின் முகத்தை பார்த்து பரிதாபமாய் கேட்க,

“எல்லாம் சரியாகிடும். நீ முதல்ல இப்படியெல்லாம் நினைச்சுபுலம்பறதை நிறுத்திட்டுஎன்னை எப்படி லவ் பண்ணலாம்னு மட்டும் யோசி…” அனய்யின் மனதில் இருந்த மொத்த சஞ்சலங்களும் அழிந்து போக துடைத்து வைத்த பளிங்கு போல் இருந்தது அவனின் உள்ளம்.

புன்னகை முகத்தோடு அவன்மலரிடம்சொல்ல இன்னும் எதையோ எதிர்பார்த்தது அவளின் மனது. அசையா பார்வை கொண்டு விழிகளில் அவனை சிறைபிடித்துக்கொண்டிருந்தாள் மலர்.

“ஹேய் பொண்டாட்டி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப? வெளில போகனும்டா…”

அவனின் பேச்சையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் முகத்தையே பார்த்தபடி இருக்க,

“என்ன தான் நினைச்சுட்டிருக்க மலர். நான் சொல்றது எதுவும் உன் காதுல விழலையா?…” அவளை எழுப்பி நிறுத்தி கேட்க,

“கேட்டா கோச்சுக்க மாட்டீங்க தானே…” சொல்லியவளின் விழிகள் எதையோ யாசிக்க அவளின் முகம் பற்றி கன்னம் தாங்கியவன்,

“இந்த மாதிரி நான் என்ன நினைப்பேன்னு யோசிக்காம உன் மனசுல என்ன இருக்கோ அதை தெளிவா பேசு. கேளு. என்கிட்டேஉனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் உன்னோட ஹஸ்பன்ட் மேடம். உனக்கு மட்டும் தான் பர்ஸ்ட் ப்ரிபரன்ஸ்…” அவளின் நெற்றியில் லேசாய் முட்டி சின்னசிரிப்போடு சொல்ல,

“ஐ வான்ட் டூ கிஸ் யூ…” சொன்ன நிமிடம் அவனின் விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தாள். என்னவிதமான உணர்வை அவன் பிரதிபலிக்கிறான் என.

“பண்ணிக்கோ. இதுக்கெல்லாமா பர்மிஷன் கேட்பாங்க?…” அவனும்என்ன தான் செய்கிறாள் என சொல்லிவிட வாய்விட்டு கேட்டுவிட்ட மலருக்கோ அதை செயல்படுத்த முடியாத தடுமாற்றம்.

இதழ் பிரியா புன்னகையோடு குறும்பாய்அவளை பார்த்திருந்தவன் பார்வையே அவளிடம் வேறு கதை பேச ஆரம்பித்திருந்தது. முதன் முதலாய் கணவனை அவளை பார்த்தான். மனைவியாய் அவளை முழுவதும் அறிந்திட தவித்தான்.

அவனின் எண்ணங்கள் அப்பட்டமாய்அவளிடம்பார்வையால்வெளிப்படபுரிந்துகொண்டவளுக்குதாளமுடியாமல் முகம் சிவக்கஇவ்வுணர்வு புதுவிதமாய் தான் இருந்தது. இதுவரை அவனிடம் இதுபோல உணர்ந்ததில்லை.

அவனின் விழிகள் ஏற்படுத்திய ஜாலங்கள் அவளுள் கொண்டுவந்த மாற்றம் தாங்காதுஅங்கிருந்து வெளியேற அவனை தாண்டிக்கொண்டு சென்றாள் மலர்.

அவன் விட்டால் தானே? அவளை பிடித்து நிறுத்தியவன்,

“என்னமோ கேட்ட, வாங்காம போனா என்ன அர்த்தம்?…” தன் முகம் பார்க்காமல் வேறுபுறம் திரும்பிக்கொண்டவளை வம்படியாய் தன்னை பார்க்க வைத்தான்.

சற்றுமுன் இருந்த கனமான சூழல் இத்தனை ரம்யமானதாய் மனதை மயக்கும் என்பதைமலரால் நம்பவே முடியவில்லை. நொடியில் மாற்றிவிட்டானே அனைத்தையும் என அவனை ரசித்துதான் பார்த்தாள்.

“ஹேய் உனக்கு சைட்டடிக்க கூட தெரியுமா?…” கேலி பேசியவனை முறைத்தவள்,

“வெளில போகலாம்…” என மெதுவாய் சொல்ல,

“இதென்ன வம்பா இருக்கு? நான் கூப்பிட்டப்போ மட்டும் வந்தியா? இப்போ நான் மட்டும் உடனே நீ சொன்னதை கேட்டுடனும். அதெல்லாம் முடியாது…”

பிடிவாதமாய் அவளை தன் கைவளைவிற்குள் நிறுத்தியவன்மலரின் முகம் பார்த்து நிற்கஅவளுக்கு தான் அத்தனை அவஸ்தையாய் இருந்தது.

இத்தனை நேரம் வெளியில் இருக்கும் கூட்டத்தினரை பற்றி கவலை கொள்ளாமல் இருந்தவளுக்கு இப்பொழுது அவர்கள் என்ன நினைப்பார்களோ என்னும் படபடப்பு ஒருவிதபதட்டத்தை கொடுத்தது.

“உனக்கு வேண்டாமா?…” சீண்டலான குரலில் அவளை கலைத்தவன்புரியாமல் பார்த்தவளின் பார்வையில் சிக்குண்டு,

“அதான் கிஸ்.நீகேட்டியே…” என்றதும் தான் உள்ளே வந்த பொழுது அவன் இன்னொரு பெண்ணோடு நெருக்கமாய் நின்றிருந்த கோலம் கண்ணுக்குள் எழும்பநொடியில் எரிச்சலாகி போனவள்,

“எவ்வளவு தைரியம் இருந்தா அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்க போய்ருப்பீங்க. அதுவும் அவ்வளவு க்ளோஸா?…” நெற்றிக்கண் திறந்து அவனை சுட்டு பொசுக்குவதை போல பார்க்க,

“டெகரேஷன் செம்மையா இருக்குல.நீ மட்டும் ம்ம் சொல்லு செல்லம். நடத்திடலாம்…” என கண்ணடிக்க ஒரேதள்ளாகஅவனை தள்ளினாள்.

“உங்களை எல்லாம் சும்மாவே விட கூடாது. எதுக்கு ரெடி பண்ணினதை நீங்க என்கிட்டே….” கோபம் தாளாமல் அவனின் முதுகில் மொத்து மொத்தென மொத்த,

“உன் கைகூட அவ்வளோ சாப்ட் ரோஸ்பட். சும்மா பஞ்சு மாதிரி இருக்கு…” என மேலும் அவளை சீண்டி வம்பு செய்ய அடிப்பதற்கு வேறெதுவும் கிடைக்காமல் அவள் அந்த ரூமில் தேட,

“ஹேய், நீ என்ன சொன்ன?ஷூட்டிங்க்கு ஏற்பாடு பண்ணினது வேண்டாம்னா அப்போ…” என பளிச்சென கேட்க,

“யூயூ…” அவனின் கழுத்தை நெரிக்க வந்தவள் முகம்நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் தன் முகம் மறைத்து உயிர் கொள்ளா புன்னகையோடு. அவளை தனக்குள் புதைத்துவிடும் ஆவலும் ஆவேசமும் போட்டிபோட இருக்குமிடம் மறந்துமனதினுள்சந்தோஷபுயலடிக்க அவளுள் மூழ்கிட விரும்பினான்.

அவனின் இறுக்கமான அணைப்பில் கொஞ்சமும்அசராதுஅவனோடு ஒண்டிக்கொண்டாள் மலரவள்.

அவர்களின் மோனநிலையை கலைக்கவென அவனின் மொபைல் இசைக்க எடுத்துப்பார்த்தவன்,

“மாப்ள தான்…” என்று அட்டென் செய்ய,

“ஷூட்டிங்லாம் கேன்சல் பண்ண முடியாது…” என்றவன் அணைப்பை துண்டித்துக்கொள்ள,

“மூக்கு வேர்த்திடுமே. என் தங்கச்சிக்கு புருஷனாச்சே. இப்படித்தான் இருப்பாரு…” அனய்புலம்பிக்கொண்டேமொபைலை பார்க்க மலருக்கு சிரிப்பு பொங்கியது.

அவளின்கள்ளமில்லா பூரிப்பான புன்னகையை பார்த்திருந்தவனுக்கு முதன் முதலில் அவளை பார்த்த நாளும் அவள் புன்னகைத்ததும் தான் மனதில் வந்து நின்றது.

“அன்னைக்கு மாதிரியே இப்பவும் உன்னோட ஸ்மைல் என்னை மெல்ட் ஆக்குது ரோஸ்பட்.இந்தஃபீல், ஐ லவ் இட்…”கரகரப்பாய் அவன் கூறிய விதம் காதலாய் அவளுள் நிறைந்தது.

இருவருக்குஅத்தனை வருடம் இருந்த மொத்த அலைப்புறுதல்களும்தவிப்புகளும்மேகமெனகலைந்துசெல்லஒருவரிடத்தில் ஒருவர் இளைப்பாறினார்.

சில மாதங்களுக்கு பிறகு…

“அனய்நீஉள்ள போகவேண்டாம்.மலரே வேண்டாம்னு சொல்லிட்டா. நீ எதுக்கு குதிச்சிட்டு இருக்க?. உனக்கு தான் கஷ்டமா இருக்கும். சொன்னா கேளு…”

ஆண்டாள் அவனை கடிய யாரின் பேச்சையும் கேட்கும் மனநிலையில் இல்லை அனய்.

“அம்மா அவ கத்துறா. பாவம்மா, ரொம்பவலிக்குதுஅவளுக்கு. என்னால முடியலை. இப்ப அவ கூட நான் இருக்கிறது தான் ரொம்பவும் முக்கியம்.என்னை பார்த்தா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவா…”

ஓரிடத்தில்நிலையில்லாமல் தவிப்பாய் கூறியவனின் கண்கள் அந்த அறையின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தது. அவனின் காதுகளை கிழித்துக்கொண்டு உயிருக்குள் இறங்கியது மலரின் அலறல்.

அது பிரசவ அறை.

“சொன்னா கேளு அனய். நீஅவளுக்கு கஷ்டம் குடுக்காத.அவ வலியை தாங்கி குழந்தை பெத்துப்பாளா? இல்லை உன்னை சமாதானம் செஞ்சிட்டு இருப்பாளா?…” ஆண்டாள் என்ன சொல்லியும் பிடிவாதமாய இருந்தான் அனய்.

அவனின்வற்புறுத்தல் காரணமாய் அவனைஅறைக்குள் அனுமதித்த டாக்டர் குடும்பத்தினரிடம் ஆறுதலாய் மென்னகை புரிந்து சென்றார்.

எலும்புகள் அனைத்தும் நொறுங்கும் வலியை உணர்ந்தவளின் விழிகள் கண்ணீரை பொழிந்தன.

“அம்மா….” என்று கதற,

“ரோஸ்பட்…” என்று அவளின் கரம் கோர்த்து முகம் தாங்கி நின்றான் அனய்.

விழிகள் திறந்து அவனை பார்த்தவள் உதடு கடித்து வலியை பொறுத்து,

“நீங்க ஏன் இங்க வந்தீங்க?…” திணறி கேட்க,

“ரொம்ப வலிக்குதா?…”அவனின் கண்களும் கலங்கிவிட்டன.

“ம்ஹூம்…”கண்களை இறுக மூடி திறந்து அவனிடம் சொல்லிய நொடி அம்மாஎன மீண்டும் கத்த,

“மலர்…” உடைந்து போய் அவளை பார்த்தான்.

“போங்க…” அவனை அங்கிருந்து கிளம்ப சொல்ல,

“ம்ஹூம்.என் பொண்ணை நான் என் கையில் வாங்கினது மாதிரி என்னோட ரெண்டாவது குழந்தையையும் நான் தான் முதல்ல கைல வாங்குவேன்…”

அவனின் முகத்தில் தான் கண்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உள்வாங்கிக்கொண்டவள்மனதில் சொல்லொண்ணா ஆராவாரம்.

மகிழ்ச்சியில் மனம் நிரம்ப அடுத்த ஒரு வலி. சுரீர் என தொண்டையை இறுக்கி பிடிக்க அனய்யின் விரல்கள் மலர் அழுத்திய விதத்தில் நொறுங்கிவிடும் அளவிற்கு இருக்க அதிலேயே அவளின் வலியை புரிந்துகொண்டான்.

“அனய்ய்ய்யய்…” என்றஎம்பிகத்தியவளின் கதறலோடு குழந்தையின் அழுகுரலும் சேர்ந்துஇசைக்க விழிகளில்வழிந்துவிட்டகண்ணீரோடுமலரை பார்த்தவன்,

“நம்ம மகன்…”அத்தனை பெருமிதமாய் சொல்லபுன்னகையோடுமயக்கத்திற்கு சென்றாள் வனமலர்.

அவளின்உயிர் எல்லாம் நிறைவு.அதிலும் வருணியையும் அவன் தான் தகப்பனாய் ஏந்தி இருக்கிறான் என்று தெரிந்த நிமிடம் உலகில் தன்னை விட அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் யாருமில்லை என்னும் கர்வமும் அவளை அத்தனை அழகாய் காட்டியது.

களைப்பில் உறங்க அவளின் முகத்தில் விழுந்திருந்தகூந்தல் கற்றையை ஒதுக்கியவன் வியர்வையை ஒற்றி எடுத்துவிட்டு நெற்றியில் இதழ் பதித்தான்.

மயக்கம் தெளிந்து எழுந்தவள் முன் மொத்த குடும்பமும் முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு நின்றிருந்தது.

ஆண்டாள் மடியில் குழந்தை இருக்க வருணியும் அபினவ்வும் மாறி மாறி அவரை கேள்விகளால் துளைத்து குழந்தையை மெது மெதுவாய் தடவி பார்த்து மகிழ்ந்தனர்.

ஆண்டாள் கையில் பேரனை வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தவர்மலர் விழித்துவிட்டதை பார்த்து,

“அனய் மலர் கண் முழிச்சிட்டா பாரு…” என்று சொல்லி,

“இப்ப எப்படிம்மா இருக்க?…”எனவும் மலர் தலையை மட்டும் அசைக்ககுழந்தையை அவளருகில் படுக்க வைத்தார்.

இன்னும் இருவருக்கிமிடையில் சகஜமான பேச்சுக்கள் எதுவும் இல்லை என்றாலும் அவ்வப்போது தவிர்க்க முடியாமைக்கு இருவரும் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொள்வர்.

“ஹேய் அமேஸான், என்னடி இது பையன் அப்படியே இவனை கொண்டு பிறந்திருக்கு? இவனை இனி கைல பிடிக்க முடியாதே?…” நேத்ரா கேலி செய்ய,

“வருணி பேபி மலரை மாதிரி. அதான்பையன் அனய்யை மாதிரி. குட்…” என்றான் ரிஷி.

“அம்மா…” என்ற அபினவ்வை தூக்கிய நேத்ரா,

“இந்த பேபி எவ்வளவு குட்டி இல்லை?…”

“ஹ்ம்ம் ஆமா. க்யூட் தான்…” அவனின் மூக்கை பிடித்து ஆட்ட,

“கொழுகொழுன்னு ரொம்ப அழகு. குட்டி குட்டியா கை. குட்டி குட்டியா கால். பிங்க் கலர்ல ஸ்கின். சோ சாப்ட்…”

“எஸ்குட்டி…” எனசிரிப்பாய் பார்க்க,

“நமக்குஎப்பம்மா குட்டிப்பாப்பா வரும்?…”சிறிது ஏக்கம் தூவிய குரலில் குழந்தையை பார்த்துக்கொண்டே கேட்க ஸ்தம்பித்து தான் நின்றாள் நேத்ரா.

முறைப்பாய்ரிஷியை பார்க்க அவனின் முகத்திலோ மாறா புன்னகை மட்டுமே. அதை கண்டு இப்பொழுது பற்றிக்கொண்டு தான் வந்தது நேத்ராவிற்கு.

அவளின் கோபமான முகத்தை பார்த்தவன்கண்ணடித்துஇன்னும் சிரிக்கஅவளின் முறைப்புதான் அதிகமானது.

ஆம்,ரிஷியே அடுத்த குழந்தைக்கு தடை விதித்தவன்.முதல் பிரசவமே நிறைய கஷ்டத்தை அனுபவித்து விட்டதால் அடுத்த குழந்தை வேண்டாம் என்பதில் ஸ்திரமாய் நின்றான் ரிஷி.

இதில் மட்டும் ரிஷியின் பிடிவாதத்தை நேத்ராவால்எத்தனை முயன்றும்அசைக்கவே முடியவில்லை. சில நாட்களாக அபினவ்வும் இப்படி கேட்க அவனை சமாளிப்பதற்குள் நேத்ராவிற்கு அத்தனைகஷ்டமாக இருக்கும்.

“உங்கம்மா ஒருத்தியை சமாளிக்கவே முடியலை குட்டி. அதான் இன்னொரு பேபி இல்லை…” ரிஷிசொல்ல,

“அம்மா என்ன பேபியா சமாளிக்க?…” எதிர் கேள்வி கேட்க நேத்ராவால் பொறுமை காக்க முடியவில்லை.

“குழந்தை தெரியாம கேட்கறான். நீ ஏன் முறைக்கிற?…” ஆண்டாள் நேத்ராவிடம் கடிந்துகொண்டு,

“வா குட்டி, நாம கேண்டீன் போய் உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வருவோம்…” என்று சொல்லி,

“நீங்களும் வாங்க…” காமாட்சியை அழைக்க மலர் அனய்க்கு தனிமை கொடுத்து பெரியவர்கள்கிளம்பநேத்ராவும்கோபமாய் அங்கிருந்து கிளம்ப அவளின் கை பிடித்து நிறுத்தி,

“இரு சேர்ந்தே போவோம். எப்பவும் தனியா போக நினைக்காத தக்காளி…” என்று தன்னோடு நிறுத்த அவனின் பேச்சிலேயே தணிந்துவிட்டவள் சிணுங்கலாய் பார்க்க,

“வெளில இருக்கோம் அனய்…”என சொல்லி நேத்ராவோடுஇணைந்துவெளியேறினான் ரிஷி.

அனைவரும் வெளியேறிவிட்ட பின் அனய்யை பார்த்தவள் அவனை நோக்கி கை நீட்ட அவளின்அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை மெதுவாய் தூக்கி தொட்டிலில் படுக்க வைத்தான்.

அத்தனை பாந்தமாய் இருந்தது அதனை பார்க்க பார்க்க. அவளருகில் வந்து அமர்ந்தவனின்மார்பில் தலை சாய்த்துக்கொண்டவள்அவனின் அணைப்பில் சுகமாய் அடங்கினாள்.

இருவருமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் உணர்வுகளும் காதலும் ஆயிரம் கதை பேசிக்கொண்டிருந்தது.

அவளின் மேல்கொண்ட காதலில் அமிழ்ந்து அவளுள் அடங்கியவனை ஆராவாரமாய் அணைத்து அரவணைத்துக்கொண்டவள் அவனுள்அடங்கிக்கொண்டாள் பாந்தமாய்.

எத்தனை விந்தைகள் அடங்கியது அவர்கள் வாழ்க்கை? இன்னும் இன்னும் பல காதல் கதைகள் பேசிட விளையும் வாழ்க்கை.

அவளை மட்டுமே நேசித்து, அவளின் காதலை மட்டுமே யாசித்து நிற்க அவளுக்காய் அவன் சேமித்து வைத்திருந்த நேசக்கவிதைகளை நித்தம் நித்தம் படித்து தனது காதலில் அதை பிரதிபலித்தாள்.

மொத்தத்தில் அவனே அவள். அவளே அவன்.

அனய்யின் வனமலர். என்றும் அவன் வாழ்வில் வாசம் வீசுபவளாய்.

 

புன்னகை ஜீவித்தது