Advertisement

 

அவள் நான் பயணம் – 14

பெரும் பொழுதுகளில்

வசந்தம் நீயடி

வசந்தவாயிலின்

வைகறை நானடி

அர்த்தங்கள் தேடி அலைந்தேன், நிலைப்பாடுகளுக்கென நிதானித்தேன், காட்சிகளின் பிம்பத்தை கண்களை விடுத்து, ரசம் பூசிய ஆடிகளில் தேடினேன், கானல் நீர் குழப்பங்களை காதல் நீரூற்றி விலக்கிவிட்டாயடி….  

அம்மாடி சக்தி எல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா…..”

எல்லாம் ரெடி அத்தை…..”

சக்திம்மா அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லீட்டியாம்மா….”

இப்ப உங்க முன்னாடி தானே மாமா பேசுனேன், அவங்க கிளம்பும் போது போன் பண்றேன்னு சொன்னாங்க,…”

ஆமா ஆமா சொன்ன…. சரிம்மா எல்லாம் ரெடியா இருங்க, நான் கார் வந்துருச்சான்னு பாக்குறேன்..”

மாமா அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்குகொஞ்சம் பொறுமையா உக்காருங்க…”

இப்ப எதுக்கு இப்படி பரபரப்பா இருக்கீங்க, இங்க இருந்து வீட்டுக்கு போறதுக்கு எதுக்கு இந்த பில்டப்

நல்லா தெரிஞ்சும் கேக்குறியே பூரணிஇந்த மாறனை வீட்டில கொண்டு போய் பத்திரமா சேர்க்க வேணாமா….”

அவன் என்ன குழந்தை பையனாஅதெல்லாம் நல்ல படியா வீட்டுக்கு போகலாம் நீங்க ஓவரா ரியாக்ட் பண்ணாம உக்காருங்க….”

விடுங்கத்தை மாமா கவலை மாமாவுக்கு… “

அப்படி சொல்லு மாஇவனை வாயை மூட வச்சி வீட்டுக்கு எப்படி கூட்டீட்டு போகப்போறமோன்னு எனக்கு கவலை, அவளுக்கென்ன மகன் பேசுறது காதுல தேன் பாயுற மாதிரி இருக்கும் அவளுக்கு….”

ஏன் டாடி காதுல தேன் பாயுமாஎறும்பு வந்துடாதுல…. இந்த ரெட் ரெட் ஆண்ட்ஸ் ஆர் வெரி டேஞ்சரஸ் யூ நோ….”

உன்னை விடவா டா அது கடிக்கப் போகுது….”

வேணும்னா, ப்ளாக் லார்ஜ் ஆண்ட்ஸ் கொண்டு வந்து காதுல விடவா குளு குளுன்னு இருக்கும்…. ஏன்பா ஏன்பா அழகா அறிவா உங்க புள்ளை பேசுறது உங்களுக்கே பொறுக்கலையா…”

இதுக்கு அந்த எறும்பே தேவலாம்

விடுடா செல்லகுட்டி, அவருக்கு பொறாமை, கல்யாணம் ஆன புதுசில நாலு வார்த்தை சேர்ந்தாப்பில பத்து பேர் முன்னாடி பேசணும்னா, அவருக்கு நாக்கு தந்தி அடிக்க ஆரம்பிச்சிடும்…. எம் புள்ளை பேசுதேன்னு அவருக்கு பொறாமைடா…”

ஆமா டி…. உன்னை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தபால் துறையில தந்தியை நிறுத்துனது மாதிரி என் நாக்கும் நின்னு போயிடுச்சு…. ஏன்னா நீயும் உன் புள்ளையும் பேச ஆரம்பிச்சா எனக்கு கேப்பே கிடைக்குறதில்லையேஇதுல இவங்களைப் பார்த்து எங்களுக்கு பொறாமை வேறையாக்கும்,… போடி போடி போய் கிளம்புற வேலையைப் பாரு….”

நீ வாடா கண்ணு…. அவருக்கு என்னதான் வேலை….”

ஒரு ரெண்டு நிமிசம் மாடாக்டர் கூப்பிட்டாராம்.. என்னன்னு கேட்டிட்டு வந்துடுறேன்….”

சரி சரி அந்த டாக்டர் ஒரு இழுவை கேஸு, பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாரு, நீ மாட்டிக்காத சீக்கிரமா வந்திடனும் என்ன,….”

சரிம்மா….”

டாக்டரு இழுவை கேஸா,…. அதை அமைதிக்கான நோபல் பரிசை செலக்ட் பண்றவங்க சொல்றாங்க, நோபல் பரிசு வாங்குறவரு கேட்டுகிட்டு போறாருவெளங்கிடும் டி…. பாத்து அந்த டாக்டர் காதுல விழுந்தா மனுசன் ஹார்ட் அட்டாக்கில போயிட போறாரு….

உக்கும்ம்ம்ம்ம்……”

பாத்து டி கழுத்து சுளுக்கிக்க போகுதுஅதுக்கும் நான் தான் ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போகணும்….”

ஹா ஹா ஹா மாமா ஏன் இப்படி….”

உங்கத்தை உள்ள போயிட்டாளா…”

போயிட்டாங்க மாமா சொல்லுங்க….”

அது மாஇதெல்லாம் சும்மா, வேணும்னு சொல்றது இல்லை, ஆனா இதுல ஒரு ஸ்வாரஸ்யம்…. கல்யாணம் பண்ணுன புதுசுல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டு மாச பட்ஜெட்டுக்குள்ள வாழ்ந்தாகனும்எங்கூட பிறந்தவங்க அவ கூட பிறந்தவங்கஅவங்க வீட்டு ஃபங்ஷன், சீர்வரிசை, கடன்ன்னு தான் ஆரம்பிச்சுது வாழ்க்கை…. பெரிசா மாமா ஒண்ணும் சேர்த்து வைக்கலை மா…. என்னோட சொத்தா நெனச்சது கடவுள் குடுத்த ரெட்டை பிள்ளைங்களை தான்….

அவங்கள வளர்க்க நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும் , சொந்த பந்தங்களை விட்டு தொழிலுக்காக வேற ஊருக்கு போய் நாய் படாத பாடுபட்டு, நாலு காசு பாக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடும்…. கல்யாணம் பண்ணும் போது என்னோட சம்பளம் ஆறு நூறு ரூபாய்

என்னோட சேர்ந்து என்னால உங்கத்தை நெறைய கஷ்டத்தை தான் அனுபவிச்சிருக்கா…. இதே அவகிட்ட கேளு இல்லைன்னு தான் சொல்லுவா

அவங்க வீட்டிலயும்…. பதிமூணு வயசுல வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கா,… இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒரு புள்ளை இல்லாமையே போயிட்டான், இன்னொரு புள்ளைக்கு, கூட ஒருத்தன் பிறந்தான்னே இத்தனை வருசமா தெரியாது

இத்தனையையும் போட்டு மனசுக்குள்ள அழுத்தி அழுத்தி வச்சிக்குவாஅவ வருத்தப்படுறாளேன்னு தெரிஞ்சா நான் வருத்தப்படுவேனாம்எப்படி யோசிக்கிறா பார்த்தியா

அவளுக்காகன்னு ஒரு முழம் பூ கூட என்கிட்ட கேக்க மாட்டா மாஅப்படி இருக்கவளை நான் எப்படி பாத்துக்கணும்….

காதல் பண்ணி கலகலப்பா இருக்க வேண்டிய காலங்களை எல்லாம் போராட்டத்துல கழிச்சிட்டோம்…. இனிமேலாவது அவகூட சந்தோசமா பேசி சிரிச்சுகொஞ்சம் கூட மிச்சம் வைக்காம மனசில இருக்க எல்லாத்தையும் அவ கூட பகிர்ந்து எங்க வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்திக்கணும்னு நெனைக்கிறேன் மா

இதெல்லாம் போய் அவகிட்ட உக்காந்து இதே மாதிரி சீரியஸ பேசுனேன்னு வை, அவ சிரிச்சிடுவாஅவள பொறுத்தவரைக்கும் எனக்கு இப்படியெல்லம் பேச தெரியாது…. எங்க எப்படி பேசணும்னு தெரியாதுதனியா விட்டா சரியா சாப்பிட மாட்டேன்.. சட்டைக்கு மேட்சா பேண்ட் கூட போடத் தெரியாது…. எல்லாத்தையும் அவளே பார்த்து பார்த்து செய்ய வேண்டிய ஒரு குழந்தையாவே இன்னும் நெனச்சிகிட்டு இருக்கிறா

மாறன் வளர்ந்துட்டான்னு ஒத்துக்குவா,,, ஆனா நான் மட்டும் இன்னும் அப்படியே இருக்கேன்னு நெனப்பா…. அவ இல்லாத என்னோட உலகத்தை நினைச்சுகூட பாக்க முடியாதுமா

தமிழ்ல பேச்சுவாக்குல ஒண்ணு சொல்லுவாங்கஅம்மா போயிட்டா ருசியான சாப்பாடு போயிடுமாம், அப்பா போயிட்டா.. படிப்பு கிடைக்காதுஇதே பொண்டாட்டி போயிட்டா சகலமும் போயிடும்னு சொல்லுவாங்க

அது உண்மைதான்….

எம் பொண்டாட்டி இல்லைன்னா ஒண்ணுமே இல்லை என் வாழ்க்கையில், இத்தனை வருச வாழ்க்கையில அவளை கழிச்சிட்டு மீதியை பார்த்தாஒண்ணுமே இல்லை மா நான்

இவ்வளவு தூரம் புரிஞ்சி வச்சிகிட்டு ஏன் வம்பிழுக்குறேன்னு பாக்குறியா…. என்னை பொறுத்தவரைக்கும்…. ஒவ்வொருத்தரையும் படைக்கும் போதேமளிகை கடை லிஸ்ட்டில பருப்பு 2கி.கி, சர்க்கரை 1கி.கி, புளி 1/2கி.கி, மிளகாய்த்தூள் 100கின்னு எழுதுற மாதிரி, சந்தோசம் துக்கம் காதல் ஏக்கம் வெறுப்பு கோபம், எல்லாத்தையும் எடை போட்டு தான் வச்சிருப்பான். எங்களுக்குண்டான காதலை அனுபவிக்காம அப்படியே வச்சிட்டோம், இப்ப கடைசியா அதை எடுத்து, லைட்டா பெப்பர் ஸ்பைஸ் போட்டு இப்ப அனுபவிக்கிறோம் அவ்வளவு தான்

அதுனால இதை நீ கண்டுக்காதே,… ஹா ஹா ஹா

மாமா இதெல்லாம் நானா கேட்டேன், நீங்களா தான் சொன்னீங்க ஹா ஹா ஹா, நாங்க புரிஞ்சிக்கணும்னு சொன்னீங்களாரைட்டு கே மாமாநான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன்ன்ன்,… என்னங்க…”

அம்மாடி நீ அவனுக்கு மேலே இருப்ப போலயே…. “

நான் மிஸஸ். இளமாறனாக்கும்…”

 

 

மிஸ்டர்.இளமாறன்

எஸ் டாக்டர்….”

நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை….”

நான் எதுவுமே பண்ணலையே டாக்டர்

அதைதான் சொல்றேன்மீதி என்னாச்சுன்னு சொல்லாமயே டிஸ்சார்ஜ் பண்ண சொன்னா என்ன அர்த்தம்

உடம்பு சரியான உடனே பேஸண்ட்டை  டிஸ்சார்ஜ் பண்ணனும்னு அர்த்தம்….”

பேஸண்ட் டாக்டர் ரிலேசன்ஷிப்ப தாண்டி நீங்க மனசுக்கு ரொம்ப நெருக்கமாயிட்டீங்க மிஸ்டர் இளமாறன்அதான் சட்டுனு அனுப்ப மனசு வரலை…..”

அடக்கடவுளே,… டாக்டர்ஸ் இப்படி அன்பை பொழிஞ்சு ஆஸ்பத்திரியிலயே வச்சுகிட்டா, அடுத்து வர்ற பேஸண்டோட நிலைமை.. மை காட்அன்பு அதிகமான சீக்கிரம் சரியாகி வீட்டுக்கு போகணும்னு தான் நெனைப்பாங்க நீங்க உல்டாவா இருக்கீங்களே டாக்டர்…. “

இதான் இதான் இந்த பேச்சுல தான் மனுசங்களை இழுத்திடுறீங்க…”

அட ஏன் டாக்டர் நீங்க வேற இதே பேச்சை வீட்டில பேசுனா, பூரிக்கட்டையும் ஜல்லிகரண்டியும் தான் பதில் சொல்லும்அதான் வெளியில மட்டும்…”

ஹா ஹா ஹா ஆல்வேஸ் யூ ஆர் ஃபண்ணி…”

ஹா ஹா ஹா நம்ம பொழைப்பும் சேர்ந்து சிரிக்கிது என்ன பண்ணஹாஸ்பிட்டலுக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுவீடு, ஆபீஸ் மனைவி, மக்கள் , மேனேஜர், ஹவுஸ் ஓனர் எல்லாரையும் நாம தானே பாக்கணும் சமாளிக்கனும்…”

யூ ஆர் ரைட் ரைட்…”

அந்த ரைட்டோட நான் வீட்டுக்கு போகுரதுக்கு ரைட் ரைட் சொல்லீட்டீங்கன்னா நானும் அப்பிடியே ஜூட் விடுவேன்…. “

நான் ரைட் சொல்றதுக்கு முன்னாடி நீங்க அவிழ்க்கப்படாத அந்த முடிச்சுகளை அவிழ்த்துடீங்கன்னா பேஸா சொல்லிடலாம்.,…”

டீசண்ட்டா மிரட்டுறேள்ஹ்ம்ம்ம் என் நிலைமை அப்பிடி…. உங்க டௌட் என்னனு சொன்னேள்னா, நேக்கு விளக்க கொஞ்ச சவுகரியமா இருக்கும்ம்ம்ம்….”

என்னோட டௌட் என்னன்னா…. “

என்னன்னா….”

சொல்ல விடுங்க மாறன்ன்ன்ன்

நீங்க சொல்லவும் மாட்டீங்க என்னைய விடவும் மாட்டீங்க…. ஒரே குஸ்டமப்பா.. சீ கஷ்டமப்பா…”

அட ஒண்ணுமில்லைங்க…. எப்படி சக்தி வீட்டில உங்களுக்கும் அவங்களுக்கும் மேரேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ணாங்க, உங்களுக்கோ பழைய ஞாபகம் எதுவும் அப்போ இல்லைஇதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்தா சக்தி தான் எல்லாத்தையுமே இனிஷியேட் பண்ணியிருக்காங்க, உங்களுக்கு எந்த பழைய ஞாபகமும் இல்லை, அப்போ சக்தி மேல காதலும் இல்லை,… சக்தியோட பிடிவாதத்துக்காக ஒத்துக்குறதா இருந்தா கூட இதெல்லாம் யோசிக்காம செய்யமாட்டாங்க, ஹவ் இட் இஸ் பாசிபிள்…..?????”

பேசாம நீங்க ஒரு சைக்காலஜில ஒரு பி.ஹெச்.டி யே பண்ணலாம் டாக்டர்…. (அடுத்தவன் குடும்பத்துல கும்மீனா சொந்த செலவுல கைக்காச போட்டு மைக் செட்டு கட்டுவாங்க போலயேஎன்னா ஆர்வம்அதுலயும் எம் பொண்டாட்டி உசிர குடுத்து செஞ்ச காரியத்த நடக்கவே வாய்ப்பில்லைங்குறாரே, நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாடி ஆக்சிடெண்ட் ஆகலைசாமி….”

ஹி ஹி என்னைப் புகழாதீங்க மாறன்பேசிக்கலாவே எனக்கு தற்பெருமை, என் முகத்து முன்னாடி புகழ்றது இதெல்லாம் பிடிக்காது……..”

இது வேறையா….. நல்லவேளை….”

உங்க பதிலுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் மாறன்…”

(எங்கிட்ட எவளாச்சும் லவ் ப்ரப்போஸ் பண்ணியிருந்தா கூட இப்படி என் பதிலுக்காக காத்திருக்க மாட்டா போலயே…”

அது வந்து டாக்டர்அங்க அங்க சின்ன சின்ன லேசான அழகான பொய்களைப் போட்டு மேனேஜ் பண்ணியிருக்காங்க…..உடனே நீங்க சுந்தரா ட்ராவல்ஸ் பஸ் கல்யாண அலங்காரத்துல வர்றதை யோசிக்கக் கூடாது

எங்கம்மாவும் சக்தியும் வெக்காளியம்மன் கோவில்ல மீட் பண்ணனுதை, அண்ட் இவளா தேடிப் போனது எல்லாமே, எனக்கும் எங்கம்மாவுக்கும் மட்டும் தான் தெரியும், எனக்கே இப்ப தான் தெரியும்ங்குறது வேற விசயம்…..

அவங்கம்மாவுக்கு எழுதின லெட்டர்ல உச்சி பிள்ளையார் கோவில்லை எதேச்சையா மீட் பண்ணினாத எழுதியாச்சாஆனா சக்தி வீட்டில இருக்க மத்தவங்களுக்கு இது தெரியாது

ஸ்ரீரங்கத்துக்கு டூர் பேக்கேஜ் சக்தி அம்மாவை திருச்சி வரவழைச்சு, எங்கம்மா அவங்களை மீட் பண்ணியிருக்காங்க, அந்த மீட்டிங்கை தான் சக்தி வீட்டிலயும் எங்க வீட்டிலயும் சொல்லி திரும்பவும் கம்யூனிகேசனை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க…..

அப்படியே ஒரு வருசம் போன்லயே நட்பூ மலர்ந்திருக்கு, மலரும் நினைவுகளோட…..

சரியா சக்திக்கு படிப்பு முடியவும்…. அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு பேச உடனே எங்கம்மா, எம் பையனுக்கு தான் குடுக்கனும்னு சக்தி அப்பாகிட்ட கேட்க

பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க…. அவங்க விருப்பம் தான் மா முக்கியம்னு மீசை சொல்லீட்டாரு….

அதுக்காக அரங்கேற்றப்பட்டது தான் பெண்பார்க்கும் படலம்அந்த ஸ்கிரிப்ட் முழுக்க என் பொண்டாட்டியோடது தான்…..

இப்ப எல்லாம் க்ளியர் ஆயிடுச்சா டாக்டர்…”

எதுக்கும் உங்க காண்டாக்ட் டீடெய்ல்ஸ் குடுத்துட்டு போங்க மாறன், ஃபர்தரா எதாவது டௌட்டுனா க்ளியர் பண்ணிக்கிறேன்…..”

இதுக்கு மேலயுமா…..”

என்ன அப்படி கேட்டுடீங்க

ஹி ஹி ரிசப்ஷன் குடுத்துருக்கு டாக்டர்ப்ளீஸ் ரெஃபர் பண்ணிக்கோங்க

தட்ஸ் கிரேட்… “

பை தி வே நானும் உங்களுக்கு நிறைய கடமை பட்டிருக்கேன் டாக்டர்….”

என்ன மாறன் திடீர்னு இப்படி சீரியஸா…..”

நோ டாக்டர் இப்ப நான் நல்லாயிருக்கேன்சீரியசா வந்த என்னை பழையபடி கொண்டு வர படாதபாடு பட்டிருக்கீங்க

அது எங்களோட ட்யூட்டி மாறன்…”

உயிரை காப்பாத்துறது உங்க தொழில் அதை கடமைக்காக செய்யாம ஒரு டெடிகேஷனோட செய்யுறீங்க, ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்

அட வாங்க மாறன், என்ன இது நமக்குள்ள ஃபார்மாலிட்டீஸ்

இல்ல டாக்டர் ஒரு சில விசயங்கள் கண்டிப்பா செய்யனும்….”

நீங்க ஆறு மாசத்துக்கு ஒருதரம் ரெகுலர் செக்கப் எடுத்துக்கோங்க…. எங்க எங்களோட பெஸ்ட் ட்ரீட்மெண்ட் குடுத்தோம், ஆனாலும் நீங்க பிழைச்சது ஒரு மிராகிள் தான், பிகாஸ் உங்க கேஸ் ஹிஸ்டரி நார்மல் கிடையாது சோ….”

சொல்லுங்க டாக்டர்

ஒண்ணுமில்லை எல்லாம் நல்லாதாகவே நினைப்போம், ரொம்ப ஸ்ரெயின் பண்ணிக்க கூடாது, எப்பயும் ஹாப்பியா இருங்க, சுத்தி இருக்கவங்களையும் ஹாப்பியா வச்சுக்கோங்க, அது தான் இருக்குறதுலயே நல்ல மருந்து

இப்படி எல்லா இடத்திலயும் கிடைக்காத மருந்தா சொல்றிங்களே டாக்டர்…”

எல்லா இடத்திலயும் நாம தானே இருக்கோம் நம்ம நெனச்சா உருவாக்கிடலாம் மாறன்அதுவும் நீங்க நினைச்சா முடியாத காரியமா என்ன….”

ஹா ஹா ஹா  நல்லாவே பதில் சொல்லுறீங்க டாக்டர்

உங்களை விடவா

கே டாக்டர் நான் கிளம்பலாமா…..”

நிச்சயமா மாறன், உங்களை காப்பாத்த முடிஞ்சதுல ரொம்ப சந்தோசம், உங்க கூட பழகுற வாய்ப்பு கிடைச்சதுல அதை விட சந்தோசம்…. பார்ப்போம்…. “

நாங்க தான் ரொம்ப தாங்ஸ் சொல்லனும் டாக்டர்….”

அட எல்லாருமே வந்துட்டீங்களா,”

டாக்டர், இவங்க அம்மா, அப்பா, அண்ட் மை லவ்லி பொண்டாட்டி…..”

தெரியும் மாறன்….”

கார் வந்து வெயிட்டிங்ல நிக்குது டாக்டர், உங்கள பார்த்துட்டு வரேன்னு வந்தவனை ஆளையே காணோம், அதான் தேடிகிட்டு வரவேண்டியதா போயிடுச்சு…..இல்லைங்க….”

 

 

 

 

ஒரு வழியா எல்லாத்தையும் எல்லாரையும் தாண்டி….. நானும் நீயும் இப்ப ஒண்ணு சேர்ந்திருக்கோம்…. ரொம்ப சந்தோஷமா இருக்குடி ஜாங்கிரி….”

ஆரம்பிச்சுட்டீங்களா…..”

இன்னும் ஆரம்பிக்கவே இல்லைடி

ஸ்ஸ்ஸ்ஸ் அத்தை மாமா இருக்காங்க, என்ன இது, பேசாம ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டுங்க

அழகான என் பொண்டாட்டி கண்ணுக்கு குளிர்ச்சியா பக்கத்திலயே உக்காந்திருக்கும் போது எப்பிடி டி ரோட்டை மட்டும் பார்த்து ஓட்ட முடியும்

ஏன் திரும்பவும் ஆஸ்பத்திரியில போயி கதை சொல்லணும்னு ஆசையா இருக்கோ…..”

சத்தியமா இல்லை டி

இல்லை உங்களுக்கு அங்க குடுத்த அன்பான கவனிப்புல, அனுபவிச்ச மரியாதையில ஆசை வந்திருச்சோன்னு கேட்டேன்…”

ச்சே, ச்சே, நோ நோ டார்லிங்..”

அப்ப ஒழுங்கா வண்டிய மட்டும் ஓட்டுங்க

சரிங்ங்க……”

எல்லாமே சரியாயிடுச்சா மாறன்…..”

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எல்லா டௌட்டும் தீர்ந்திடுச்சா,……………….”

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இன்னும் ஏதாவது….”

ச்சே ச்சே, நோ நோ பேபி

இப்ப ஏன் வந்த டிரைவரை துரத்திவிட்டுட்டு நீங்க காரை ஓட்டீட்டு வர்றீங்க

அது ஒண்ணுமில்லை கண்மணி, டிரைவர் வந்தா, நான் உன் சீட்டில உக்காரணும்நீ பின்னாடி அம்மா அப்பா கூட உக்காந்திட்டு வரணும்இப்ப பாரு நாம் முன்னாடி அவங்க பின்னாடிஎப்படீடீடீ….”

ஏன் நாம சேர்ந்து உக்காரணும்………..”

இதென்ன பேபி கேள்வி, ரொம்ப நாளா பிரிந்து இருந்திருக்கோம், இப்ப தான் சேர்ந்திருக்கோம், சோ சேர்ந்து போகலாம்னு நெனச்சேன்….”

ஆஹான்…..”

என்னடி பேச்சுலாம் ஒரு மாதிரியா இருக்கு…..”

அய்யய்யோ அப்படியா தெரிஞ்சிடுச்சா…. மை குட்னெஸ்

குட்னெஸாஎன்னடி என்ன

இல்லை இன்னும் நெறைய பேச வைப்பீங்களோன்னு நெனச்சேன்பரவாயில்லை…. அந்த வகையில என்னோட குரல் மாறுனதை கூட கரெக்டா கெஸ் பண்ணீட்டீங்க

ஹே நான் உன் புருஷன் டீ, இது கூடவா எனக்கு தெரியாது….. ”

புருஷன்னா, இதெல்லாம் ஈசியா புரிஞ்சிடுமோ…..”

நீ என் ஆழ் மனசில பதிஞ்சிட்ட டீ, உன்னோட புருவத்தோட சுருக்கத்தில என்ன விசயம் ஓடுதுன்னு கூட என்னால சொல்ல முடியும்….”

அவ்வள்வு பிரில்லியண்டா…..”

யெஸ் அஃப் கோர்ஸ் டி பொண்டாட்டி….”

அப்ப புருசன்னா பொண்டாட்டியோட சகலத்தையும் புரிஞ்சு வச்சிருக்குறவன்னு சொல்லுங்க…”

ஆமா டி மயிலு அதுல என்ன உனக்கு சந்தேகம்…”

சந்தேகமே இல்லை……நீ என் புருசனே இல்லை……”

என்னது……..”

ஆமா அடிச்சு சொல்றேன் நீ என் புருசன் இல்லை, கண்டிப்பா….. இல்லை இல்லை இல்லை……”

 

Advertisement