Advertisement

அவள் நான் பயணம் – 13

பௌர்ணமியின்

கடலலை நான்

முகில் மறைத்த

முழுமதி நீ

பிழைகளின் பெருங்கூச்சல் இனிமைகளின் இசை மறைத்ததடிஉன் இல்லாமை இல்லாத நாள் தேடி நகருதடி நாட்காட்டி,… தள்ளாத தனிமைகளை துரத்துகின்றேன் உன்னாலடிஉள்ளத்து உள்ளதெல்லாம் காதலெனச் சொல்லுதடி….

சொல்லுவார் சொல்லுவார்னு நாமளும் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது….”

எங்க சிஸ்டர் அவர் இன்னும் அவரோட வொய்ப்க்கு கவிதை சொல்லியே முடிக்கலையே….”

மனுசன் எதை சரியா சொல்றாரோ இல்லையோ இத மட்டும் விடுறதே இல்லை…”

என்னம்மா அங்க சத்தம்” – டாக்டர்

சும்மா பேசிகிட்டு இருந்தோம் டாக்டர்…”

சிஸ்டர் நீங்களே பேசிகிட்டு இருந்தா நான் எப்போ பேசுறதாம்

ஹலோ மாறன் அதுக்குள்ள எழுந்துட்டீங்க இந்த டோஸ் போட்டா கண்டிப்பா ஒரு நாலு மணி நேரமாவது தூங்குவாங்க சார், நீங்க என்ன ஒருமணி நேரத்துலயே எழுந்து உக்காந்திருக்கீங்க

ஏம்மா அடுத்த என்னாச்சுன்னு தெரியனுமா வேணாமாநான் என்ன எனக்காகவா சொல்லிகிட்டு இருக்கேன்எல்லாம் என்னையே நம்பி காத்துகிட்டு இருக்க இந்த மக்களுக்காக…. நடுவுல நடுவுல பேசக்கூடாதுஎம் பொண்டாட்டி நான் தூங்குறேன்னு ரெஸ்ட் எடுக்க ரூமுக்கு போயிருக்கா, நமக்கு நேரம் ரொம்ப கம்மியாதான் இருக்கு, சோ ஆல் ஆப் யூ பி அலார்ட்ஆப்ரேசன் சக்தி ஸ்டார்ட்ஸ் நவ்

என்னது ஆப்ரேசனா அதுவும் நான் இல்லாமயாநோ நோ நான் இதை அலோ பண்ண முடியாது…”

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்இது நீங்க பண்ற ஆப்ரேசன் இல்லைசோ ப்ளீஸ் கோஆப்ரேட் வித் மீ…”

சி… ”

ஆங்ஆங்…. சி போதும் அந்த சியை ஆன் பண்ணுங்க…. என்னா வெயிலு,…. கட் பண்ணி ஓபன் பண்ணாதிருச்சி ஜே ஜே காலேஜ்”………..

அந்த ஆபீஸ் ஸ்டாஃப் இப்படி சொதப்பீட்டாங்களே,… இப்ப என்னடி பண்ணுறது…”

என் கூட வந்தவளுககிட்ட புலம்புனாஎதோ புள்ள ஃபீல் பண்ணுதே ஆறுதல் சொல்லுவோம்னு சொல்லாம திட்டுறாளுகஎதோட்ரஷர் ஹண்ட்னு (Treasure hunt) ஒரு ஈவெண்ட்ல ரெஜிஸ்டர் பண்ணியிருந்ததால அது நடக்குற இடத்துக்கு போனோம்….

அது வேற ப்ளாக் மெயின் பில்டிங் விட்டு தனியா இருந்துச்சி, அங்க போனோம், வந்ததுக்கு எதாவது ஒண்ணாவது உருப்படியா செய்யணும், திரும்ப போய் அந்த பசங்ககிட்ட கேட்டா நம்மள எதாச்சும் சுத்தல்ல தான் விடுவானுகசோ நம்மளே சைலண்ட்டா தேட வேண்டியது தான்

நான் யோசிச்சுகிட்டு இருக்கும் போதே ஈவெண்ட் ஸ்டார்ட் பண்ண போறோம்னு அனொன்ஸ் பண்ணாங்க….

நானே என் லைஃபோட புதையலை தான் தேடிகிட்டு இருக்கேன், நீங்க அதை விடவா என்னை தேட விட போறீங்கன்னு நெனச்சுகிட்டே போய் உக்காந்தேன்

மூணு பொண்ணுங்க தான் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க….

அதோட ரூல்ஸ் படி ஒண்ணுமே இல்லாத எம்டி டெஸ்ட் டாப்பில இருந்து ஃபர்ஸ்ட் க்ளூ கண்டுபிடிக்கனும், அதவைச்சு அடுத்தது அடுத்ததுன்னு மொத்தம் பத்து ஸ்டேஜ் வச்சிருந்தாங்க

இத சொல்லீட்டு எல்லாருக்கும் சிஸ்டம் குடுத்து ஸ்டார்ட் பண்ணாங்க…. இதை போய் இந்த சக்தி ஏன் இவ்வளவு விளாவரியா எழுதிகிட்டு இருக்கான்னு திரும்ப படிக்கும்போது எனக்கே தோணும், என்ன விசயம் அப்படீன்னாஇந்த ஈவெண்ட்டில அதிர்ஷடவசமா எனக்கு மாறனோட டீடெய்ல்ஸ் கிடைச்சுது….

எப்படீன்னு சொல்றேன்அந்த போட்டில ஒவ்வொரு ஸ்டேஜ்ஜா தேடும் போது நெறைய டூப்ளிகேட் ஃபைல்ஸ் வச்சு குழப்பி விட்ருந்தாங்கஒண்ணு ஒண்ணா பாத்திட்டு இருக்கும் போது ஒரு எக்ஸல் பைல் ஃபைனல் டின்னு….

டக்குன்னு மண்டைக்குள்ள ஒரு ஸ்பார்க்….

எடுடா அந்த ஃபைல ஓபன் பண்ணுடான்னு ஹைபிச்சுல ஒரு வாய்ஸ் உள்ள இருந்து சொல்லுச்சு.. மானங்கெட்ட மனசாட்சியே தமிழ்லயே கிராமர் மிஸ்டேக் விடுறியேதப்பு தப்பு கன்னத்துல போட்டுக்கோ இப்ப கரெக்ட்டா சொல்லு

எடுடி அந்த ஃபைல ஓபன் பண்ணுடி அதை

……..பி……..சி……..டி……..…….எஃப்……… ஜி….ஹெட்ச்……………. …..      

இளமாறன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்….

ஹே ஹீ ஹூ ஹா ஹா ஹா…. 

 எஸ் எஸ் எஸ்   காட் இட்   காட் இட்   காட் இட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

எக்ஸ்யூஸ் மீ நீங்க கம்ப்ளீட் பண்ணீட்டீங்களா….

ச்சே ச்சே நோ நோ வின்(win) பண்ணீட்டேன்அப்படீன்னு சொல்லீட்டுஅங்க இருந்து கிளம்பி வரும்போது…. வந்துச்சு பாரு ஒரு ஃபீல் செம்ம்ம்ம்ம சான்சே இல்லை….. இப்ப வரைக்கும் மறக்க முடியல…..

அங்க இருந்தவங்க என்னை என்ன நெனச்சிருப்பாங்கன்னு யோசிக்கக் கூடாது….

யாரோ ஒரு நல்ல நல்ல ரொம்ப நல்ல மனுசன் எனக்காகஎனக்கே எனக்காக பைனல் இயர் .டி டிபார்ட்மெண்ட் டேட்டா எனக்கு குடுத்த சிஸ்டம்ல வச்சிருந்திருக்காங்க…. அந்த புண்ணியவான் யாரா இருந்தாலும் ரொம்ப நன்றீன்னு நெனச்சிகிட்டு அங்க இருந்து வெளிய வந்தேன்

இன்னும் என் கூட வந்தவளுக யாரும் வெளிய வரலை,  சோ…. அவங்களுக்கு செண்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏற ஒன் ஹவர் முன்னாடி எனக்கு மெஸேஜ் பண்ணுங்க வந்திடுறேன்னு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பீட்டுஅங்க இருந்து ஜூட் விட்டேன்…. எங்க ஆத்தாவுக்கு அதுக்குள்ள மூக்குல வேர்த்திடுமேஊர்ல இருந்து வந்ததும் வராததுமா என்னடி குடைஞ்சிகிட்டு இருக்கஇப்ப இங்க வரியா இல்ல நான் வரவா…. ,ஆத்தா வாய்ஸ்

நானே வரேன்ன்ன்ன்ன்ன் மா …. சொல்லீட்டு…. இப்ப போறேன் நைட் திரும்பி வந்து கண்டினியூ பண்றேன் ……..”

நான் திரும்பி வந்துட்டேன்

நைட்டு தானே வரேன்னு சொல்லீட்டு போன அதுக்குள்ள எப்படிடிடிடி….”

நாலு மணி நேர டோசேஜ் எப்படி உங்களை மட்டும் ஒரு மணி நேரத்தில எழுப்பிச்சோ அப்படித்தான்…”

ஹவ் சுவீட் ஹவ் சுவீட் மை டியர் லவ்லி….”

நான் இங்க என்ன சொல்லீட்டு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க….”

என்ன சொல்றேன்னா என்னோட சுவீட்ட்ட் பொண்டாட்டிய லவ் லவ்வ்வா லவ் பண்ண போறேன்ன்ன்ன்ன்ன்

க்க்க்கும்ம்ம்ம்

சலிச்சுக்காதடி மாமனை பத்தி உனக்கு தெரியாது…”

ஏன் தெரியாதுஊரையே கூட்டி உக்காரவச்சுகிட்டு ஓகோன்னு லவ் பண்ற தி கிரேட் ஒன் அண்ட் ஒன்லி…. மிஸ்டர் இளமாறன்ன்ன்ன்னு நல்லாவே தெரியும்…..”

சக்தீ தீ தீ தீ…..”

தீ தான் சக்திஎடுங்க கையை….. வேணா…. வேணா…. சொன்னா கேளுங்க…. அய்யோ எல்லாரும் இருக்காங்கஎன்ன பண்றீங்க….”

யாரும் இல்லை மை டார்லீங்திரும்பிப் பாரு…”

ஹான் என்ன யாரையுமே காணோம், நான் வரும் போது எல்லாரும் இங்க தானே இருந்தாங்க…. எப்படி அதுக்குள்ள….”

நீ சொன்னத கேட்டுட்டு அவங்க எப்படிமா உக்காந்திருப்பாங்க…. அதான் கிளம்பீட்டாங்க…. நாம சேரணும்னு மனசார வேண்டிகிட்டவங்க டி அவங்கஅவங்களை போய் இப்படி சொல்லி கிளப்பீட்டியே….”

அச்சச்சோ அப்படியா.. சாரிங்க நான் வேணும்னா திரும்ப கூப்பிடவா….”

அடியே என் அழகு பொண்டாட்டி,….. என்னோட தொல்லை தாங்காம எப்படா இவனை கூட்டீட்டு போக ஆள் வருவாங்கன்னு பயபுள்ளைக வேண்டிகிச்சு,,,, உண்மைய சொன்னா நீ வருத்தப்படுவியேன்னு தான் சொல்லலை…”

அடப்பாவி மனுசா….”

நோ நோ அழகுகுட்டி மாமா…. எங்க கூப்பிடு பாப்போம்….”

பாப்போம் பாப்போம்…. ஆமா அன்னிக்கு காலேஜில என்னை பார்த்தது பொண்ணு பாக்குற அன்னிக்கு உங்களுக்கு சத்தியமாவே ஞாபகம் வரவே இல்லையா என்ன

ஏன் ஞாபகம் வராம, அதெல்லாம் நல்லாவே ஞாபகம் வந்துச்சி

அப்புறம் ஏன் அதை கேக்கலை, அதுக்கப்புறம் என்கிட்ட அதை பத்தி ஒரு வார்த்தை கூட பேசலை…”

அட கோச்சுக்க கூடாதுடி என் ஜாங்கிரி…. இங்க பாரு மாமா பாரு மாறனை பாரு….. “

“……………………………………………..”

என் லட்டுகுட்டி…. திரும்பு டி

எப்ப பாரு திங்குறதை பத்தியே யோசிச்சு யோசிச்சு…. கொஞ்சும் போது கூட லட்டு ஜாங்கிரின்னு திருவிழாவுக்கு வந்த மிட்டாய்க்கடை மாதிரியே பேசுங்க

அடியே ஆக்சுவலா நீ அந்த லட்டுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்….”

லட்டுக்கா….”

ஆமா

ஏன் சோட்டா பீம் மாதிரி லட்டு தின்னா தான் உங்களுக்கு மூளை வேலை செய்யுமா…..”

எப்பயுமே அப்படின்னு சொல்லிட முடியாதுடி பாதுஷா குட்டி

திரும்ப பாதுஷாவா…”

சரிடி அதிரசமே…..சொல்லட்டா வேணாமா

சொல்லுங்க மிஸ்டர் மிட்டாய்

அன்னிக்கு எங்கம்மாவோட வந்ததை பெண் பார்க்கும் படலமா கூட அனொன்ஸ் பண்ணாம உங்க கமெண்ட்ரி பாட்டி, ஒரு லட்டுக்கு என் லைஃபையே ஈடா வச்சு, மாப்பிள்ளைக்கு பொண்ணு பிடிச்சிருக்காம்னு அனொன்ஸ் பண்ணுச்சு ஞாபகம் இருக்கா

எனக்கு நீங்க ஞாபக படுத்துறீங்களா,.,, ஹா ஹா ஹா

என்னடி வில்லன் வீரப்பா கணக்கா சிரிக்கிற….”

ஆக்சுவலா பாட்டிய அப்படி அனொன்ஸ் பண்ண சொன்னதே நான் தான்

என்னடி சொல்லுற….”

ஏன் ராசா டைரியில அதுக்கு மேல இல்லையா…. “

நைட் திரும்ப வரேன்னு எழுதி ஒரு வருசம் ஆறு மாசமாச்சு டி, என்னதான் பண்ணுன நீ, அதை கேக்க தான் டி அவசர அவசரமா ஊருக்கு கிளம்புனேன்

ஹா ஹா ஹா ஹா……”

சிரிக்காம சொல்லுடி ராட்சஸி….”

முதல்ல நீங்க சொல்லுங்க லட்டுக்கு ஏன் நான் தாங்க்ஸ் சொல்லணும்….”

அதுவா உங்க பாட்டி அனொன்ஸ் பண்ற வரைக்குமே, நான் லட்டு தான் சாப்பிட்டு இருந்தேன்…. லட்டு கேப்ல பொண்ண பாக்கலையே…. இந்த பாட்டி வேற இப்படி அனொன்ஸ் பண்ணுதுசரி திரும்ப வர சொல்லுவோம்வந்தா நமக்கு ஒரு ப்ளேட் லட்டு…. வீட்டுக்கு போய் கலந்து பேசிகிட்டு லெட்டர் போடுறோம்னு சொல்லி ஓல்ட் தமிழ் சினிமா ரேஞ்சில எஸ்கேப் ஆகிடலாம்னு ப்ளான் பண்ணேன்

பொண்ணை திரும்ப வரசொல்லுங்க சரிய பாக்கலைன்னு சொல்றேனேஅப்ப நீ என்ன பண்ணீருக்கனும், இன்னொரு ப்ளேட் லட்டோட வந்திருக்கனும், வரலை, உங்க வீட்டிலயாவது சொல்லியிருக்கனும் சொல்லலை, அதுனாலதான் லட்டு கொண்டுவராத அப்பாட்டக்கர் யாருன்னு பாக்கனும்னு பாத்தேன்….

பாத்தா நீ….. இது அட்ரஸ் பார்ட்டியாச்சே…. எப்படி இங்க…. சரி கேட்டுட வேண்டியது தான்னு, யோசிச்சிட்டு நிமிந்தா நீ உள்ள போயிட்ட…. சரி ஒரு போன் நம்பரை வாங்கியாவது கேக்கலாம்னா…. அதுக்கும் வழியில்லை…. வெளியில வந்து பாத்தா மாடியில நின்ன, அப்பயாச்சும் கேக்கலாம்னா…. சுத்தி ஒரே கூட்டம் வித் லாட்ஸ் ஆப் கெக்கபிக்கே….. மனுசனுக்கு எவ்வளவு தடைகள் வரும்…. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா…..  ”

அடப்பாவி மனுசா ஒரு லட்டுக்காகவா இப்படி, அப்பயும் லட்டு கொண்டுவரலைன்னு தான் என்னை பார்த்திருக்க…..”

ரீசன் லட்டா இருந்தாலும்….. என் ரீசன் ஆப் லைஃபே நீ தான் டி,…. நம்ம காதலுக்கு பெரும் உதவி செஞ்ச லட்டுக்கு, அதுவும் உன்னை எனக்கு காமிச்ச லட்டு எதிர்காலத்துல ஒரு கோவிலே கட்டலாம்னு தான் நெனச்சேன், ஆல்ரெடி பெருமாள் பேஷா அதை செஞ்சுட்டார்சோ ஒரு லட்டு ஸ்டால் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன்நீ என்ன சொல்ற….”

பூந்தீன்னு சொல்றேன்யோவ்ஏய்யா இப்படி…. “

நோ டென்சன் மை மானே மயிலே குயிலே, இப்ப நீ சஸ்பென்ஸ் வைக்காம உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லு பாப்போம்….”

உள்ளதை உள்ளபடி…. அதுவும் உள்ளத்தில் உள்ளதை…. சொன்னா தாங்குவியா மாமா…..”

ஏன் டி மயிலு, உன்னையே தாங்கும் போது, நீ சொல்றதை தாங்க மாட்டேனா….”

அய்யோ கடவுளே நான் எப்படி உங்க மடியில உக்காந்தேன், உங்க மேல சாஞ்சேன்விடுங்க …”

வேணுனா நீ உக்காரு நான் உனை மாதிரி செஞ்சு டெமோ காட்டுறேன், எவடி இவ, இவளே வந்து உரசி உரசி உக்காந்துகிட்டு இப்ப கேள்வி கேக்குறாஆக்சிடெண்ட் ஆனா ஹிரோயின் மாதிரி…”

ஹீரோயின் தான் ஹீரோ சார்ஸ்ஸ்ஸ்ஸ் கைய கட்டுங்க, வாய் மேல விரலை வைங்க….. ச்சீ ச்சீ உங்க வாய் மேல உங்க விரலை வைங்க…. நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் சத்தம் வரக்கூடாது புரிஞ்சுதா….”

பால்வாடி பிள்ளைகளுக்கு டீச்சரா இருந்திருப்பாளோ…. எதுக்கும் அமைதியாவே இருப்போம், பெஞ்ச் மேல ஏறி நிக்க சொன்னாலும் சொல்லுவா…. கடைசி வரைக்கும் இவ என்னதான் படிச்சிருக்கான்னு புரியலையே….”

ம்ம்ம் என்ன அங்க சத்தம்….”

உள்ளேன் அம்மா…”

அன்னிக்கு டைரி எழுதீட்டு இருக்கும் போது எங்கம்மா கூப்டுறாங்கன்னு போனேனா…”

ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி போனவ இன்னும் கதை சொல்லிகிட்டு இருக்குறா.…”

அப்போ எங்கம்மா நான் காலேஜ்ஜில இருந்து பாதியில கிளம்புனதை கண்டுபிடிச்சு கேட்டுட்டாங்க

மாட்டிகிட்டியா மாட்டிகிட்டியா….. ஜாலி ஜாலி…”

எனக்கு கால் பண்ணியிருக்காங்க சிக்னல் இல்லாம நாட் ரீச்சபிள்ன்னு போயிருக்கு உடனே என் பிரெண்ட்ஸ்க்கு கால் பண்ணியிருக்காங்க, அவளுக அப்படியே உண்மை விளம்பிகளா….. அவ பாதியிலயே கிளம்பி போயிட்டாளேன்னு என் வாய்ஸ் மெசேஜ்ஜ பாக்காம சொல்ல…”

வீட்டுக்கு போனதும் மிதி விழுந்திருக்குமே….”

அதான் இல்லை….”

அப்ப உருட்டுகட்டை, ஜல்லிகரண்டி, தோசைக்கரண்டி, பூரிக்கட்டைவேற என்னவா இருந்திருக்கும்……”

அதெல்லாம் உங்களுக்கு, நாங்க யாரு அழகா சமாளிச்சோம்ல

நீ யா…….”

நானே நானே…. ’யாரைப்பாக்க போன, உனக்கு திருச்சியில யாரைத் தெரியும் , போனோமா, போன வேலையை பார்த்திட்டு நேரா வீட்டுக்கு வருவோம்னு இல்லாம, எங்கடி ஊர் சுத்த போன, எல்லாம் உங்க அப்பா குடுக்குற செல்லம், பாதி நாள் காலேஜ் போறதே இல்லை, போட்டி, டான்ஸ்ன்னு எங்கேயாவது ஊரை சுத்திகிட்டே இருக்கபொம்பள புள்ளையா இலட்சணமா சொல்ற பேச்சை கேட்டா என்ன கொறைஞ்சா போயிடுவ

அடியே உன்னைத் தான் டி கேட்டுகிட்டு இருக்கேன், அப்ப சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டீன்னு அத்தணை பேரும் உனக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு ஆடாதே டி…. கூப்பிட்டுகிட்டே இருக்கேன் வரளா பாருங்க…. அடியே இப்ப நீ வரியா இல்லை நான் அங்க வரவா……’ ”

அடடா அத்தை சூப்பர் போங்க….”

ம்ம்ம்ம்ம் அப்ப தான் டைரிய வச்சிட்டு போனேன், அப்பிடியே கைல ஒரு பார்சலோட போனேன், இந்தாம்மா உன்கிட்ட குடுக்க சொன்னாங்க…. ”

யாருடி குடுத்தாங்க, என்ன இது,”

பிரிச்சு பாரு மா, சும்மா கேள்வியே கேட்டுகிட்டு இருக்காதேமா

என்னடி தேங்காய் மூடி, விபூதி, பூ, அதோட ஒரு லெட்டர் வேற

லிஸ்ட்டில பழம் இருக்காது, பிகாஸ் நேத்தே நான் அதை சாப்பிட்டுட்டேன், எடுத்திட்டு வந்திருந்தா பஞ்சாமிர்தம் ஆயிருக்கும்

அதை விடு டி யாரு குடுத்தாங்க…..”

உன் கையில தானே இருக்கு லெட்டர் பிரி பிரிச்சுப் படி படிச்சிட்டு சொல்லு யாருன்னு…..”

எனக்கு யாருடி லெட்டர் லா குடுத்தது…. “

பேச்சைக்குறை மா வேலையை பாரு…. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்சன்….”

அத்தை படிச்சிட்டு என்ன சொன்னாங்க, என்ன லெட்டர் யாரு குடுத்ததுஎன்ன இருந்தது அதுல, சொல்லேன் டி…”

அது உங்க அம்மா எங்க அம்மாவுக்கு குடுத்த லெட்டர்…. மீன் எங்கத்தை உங்கத்தைக்கு குடுத்த லெட்டர்

அம்மாவா எப்படி,   அதுவும் உன்கிட்ட…”

ஹலோ மிஸ்டர் ட்யூப் லைட்டு,…. காலேஜ்ஜில உங்க டிடெய்ல்ஸ் கிடைச்சுதுன்னு டைரியில எழுதியிருந்தேன் மறந்து போயிடுச்சா….”

அது பொய்யான அட்ரஸ் ஆச்சேஹே ஹே ஹே

ஆனா நான் அத்தைய மீட் பண்ணேனே…. ஹா ஹா ஹா

எப்படி எப்படி எப்படி….”

ஓவர் எமோஷனல் உடம்புக்கு ஆகாது மாமா, சோ அமைதியா நான் சொல்றதைக் கேளு.,..”

நீ காலேஜ்ஜில பொய்யான அட்ரஸ் குடுக்கலை, உங்க பழைய அட்ரஸ குடுத்திருக்க…. நான் அங்க போனப்போ அத்தை அங்க பக்கத்து வீட்டில எதோ ஃபங்ஷன்னு வந்திருக்காங்க, நான் போய் உன் பேரை சொல்லி விசாரிக்கவும்…. அங்க இருந்தவங்க அத்தைய காமிச்சாங்க

….”

அத்தைக்கு என்னைய யாருன்னே தெரியலை…. மனசுக்கு கஷ்டமா இருந்தாலும், இவ்வளவு நாளா பாக்கலைல அவங்க எப்படி தெரியும்னு மனச சமாதானப்படுத்திகிட்டு நான் யாருங்குற விசயத்தை சொன்னேன், அவங்களுக்கு ஆச்சரியம் ஷார்ட் அண்ட் சுவீட்டா எல்லா ப்ளாஸ் பேக்கையும் சொல்லி முடிச்சு, உன்னைப் பத்தி கேட்டேன்….”

இப்பவாச்சும் கேட்டியே, இவ்வளவு நேரமா டி என்னைய பத்தி கேக்குறதுக்கு

கடைசியா வச்சுக்குறேன் உங்கள, கேட்டதும் அத்தை நீங்க காலேக்கில எதோ ஃப்ங்ஷன்னு போயிருக்குறதா சொன்னாங்க,…. எந்த காலேஜ் என்னன்னு விசாரிச்சேன் தெரியாத மாதிரி, அத்தையும் அதே ஜே ஜே காலேஜ்ன்னு சொன்னாங்க, அதுவரைக்கும் சந்தோஷம் துக்கம் அதிர்ச்சி, ப்ளாஸ்பேக்குன்னு பேசீட்டு இருந்தவங்க, டக்குனு, ஆமா நீ எப்படி என்னை தேடிக் கண்டுபிடிச்சன்னு அஸ்திவாரத்தில கைய வைக்குறமாதிரி கேட்டாங்க….”

கேட்டாங்களா கேட்டாங்களா, யூ ஆர் ப்ரில்லியண்ட் மம்மி…..”

உக்கும், அதுவே லேட்டு, இருந்தாலும் யார்கிட்டயாவது ஒருத்தர்கிட்ட உண்மைய சொல்லணுமே, சோ ஆதி முதல் அந்தம் அவரை அத்தணையும் அத்தையிடம் ஒப்பித்துவிட்டேன்….. அத்தை அப்பிடியே என்னைய கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துட்டாங்க, அவங்களுக்கு அழுகை வேற

மாறன் மாறன்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி திரிஞ்சிருக்கேன்னு அவங்களுக்கு புரிஞ்சிது, சின்ன வயசுல மனசுல பதியிற சம்பவங்களை மனுசங்க அழிக்க முடியாது, அது எப்படி வளர்ந்து இன்னிக்கு மாறன தேடி வரவச்சிருக்குன்னு ஒரே ஆச்சர்யம் அவங்களுக்கு…. வீட்டுக்கு போலாம் வான்னு கூப்பிட்டாங்க, இல்ல அத்தை நேரமாயிடுச்சு, நான் கிளம்பனும்னு சொன்னேன், இத்தணை வருசம் கழிச்சு, வந்திருக்க உன்னை எப்படி இப்படியே அனுப்ப முடியும்…. அப்படீன்னாங்க

நான் சொன்னேன் பக்கத்துல எதாவது கோயில் இருந்தா போகலாம் அத்தைன்னு, உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு கூட்டீட்டு போனாங்க…. அந்த உச்சி நேரத்தில சரியா அம்மன் மேல சூரிய ஒளி விழுந்துச்சு, நிமிர்ந்து பார்த்தா, அம்மனுக்கு நேரா மேல கோபுரம் இல்லை, வெயிலா இருந்தாலும் மழையா இருந்தாலும், மேல் கூரை இல்லாம அந்த அம்மன் அப்படியே இருந்து அருள் குடுப்பான்னு சொன்னாங்க, அவளோட முகத்தில காளீங்குற உக்கிரத்தைத் தாண்டி ஒரு சாந்தம், மனசுக்கு நிறைவா இருந்துச்சி, அங்கயே உக்கார்ந்து அடுத்த கட்டத்துக்கு ப்ளான் பண்ணீட்டு, அங்க இருந்து கிளம்புனோம்

அடிப்பாவி ப்ளான் மேல ப்ளான் போட்டிருக்காளே, ஒரு வேளை மேஸ்திரி ஆப் கட்டடமா இருந்திருப்பாளோ, மீன் சிவில் இன்ஜினியரா,… “

அட மக்கு மாமா, .டி டிபார்ட்மெண்ட் சிம்போசியம்க்கு சிவில் இன்ஜினியரா வருவாங்க, ஹய்யோ ஹய்யோ….”

இல்லை டி ஏகப்பட்ட ப்ளான் போயிருக்கும் போலயே அதான் கேட்டேன்…”

ஹா ஹா ஹா

சிரிக்காம அந்த லெட்டர்ல என்ன இருந்துச்சுன்னு சொல்லு….”

ஒண்ணுமில்லை மாமோய், அதுவந்து இப்படி, இப்படி, சக்திய உச்சி பிள்ளையார் கோயில்ல மீட் பண்ணுனேன்அட்ரஸ் மிஸ் ஆகி நடுவுல நம்ம தொடர்பு கொள்ள முடியாம போயிடுச்சு…. சக்தியோட முகஜாடை வச்சு யதார்த்தமா கேட்டேன்கடைசியில நானே எதிர்பாக்கலை எப்படியோ நம்ம திரும்ப சந்திக்கணும்னு கடவுள் அனுக்கிரஹம் பண்ணியிருக்கார்.. இது எங்களோட அட்ரஸ் போன் நம்பர்…. திருச்சி வரும் போது வாங்க மீட் பண்ணுவோம்…. ப்ளா ப்ளா ப்ளா…. அவ்வ்ளோ தான்..”

ஆனா அம்மா அத்தைய ஸ்ரீரங்கத்தில மீட் பண்ணுனதா சொன்னாங்களே….”

அதுவும் நடந்துச்சி

இன்னும் என்னெல்லாம் டி நடந்துச்சு,..”

ஆடு மாடு, நீங்க நானு, பேசாம கேளு மாமோய்..”

என்னடி மாமோய்ய்ய்ன்னு இழுக்குற….”

நான் இழுக்கலையே இப்ப நீங்க என் கைய பிடிச்சு இழுக்குறீங்க….”

நீ என் மனசை பிடிச்சு இழுக்குறியே…”

நானா இல்லையே…”

இப்ப என் டிசர்ட்ட இழுத்து பிடிச்சிட்டு இருக்குறது யாராம்

என்னைய வளைச்சு இப்படி பிடிச்சிருக்கவருக்கு இது தெரியாதாஎன்ன

சக்தீ…..”

ம்ம்ம்ம்

என்ன மாதிரியான லவ் டி இதுஎன்னால இமேஜின் கூட பண்ணிப்பாக்க முடியல, அந்தளவுக்கு நான் உனக்கு எதுவுமே பண்ணலையே டி, “

எதாவது செஞ்சு வர்றது காதலா மாறா….”

அது தெரியாது டி, ஆனா காதல்னு வந்ததுக்கு அப்புறம் செய்யுறது எல்லாமே லவ்வ்வ்வ்வ் தான்

ஆஹான்கவிதை கவிதை….”

கவிதையா என் கண்ணுக்குக் கூட ஒரு கவிதை தெரியுது படிக்கட்டுமா…”

ஹாஸ்பிட்டல்ல கவிதைகூட எழுதுறாங்களா என்ன, படிங்க படிங்க….”

அந்த ரெண்டு வரிக் கவிதை உன்கிட்ட இருக்கு….. உன் முகத்திலயே

என்கிட்டயா…..”

ஆமா….”

இல்லையே…”

உனக்கு தெரியலை, நான் வாசிக்கவா….”

ம்ம் வாசிங்கமாமோய்ய்ய்

கைகளில் ரேகை படித்தேன் வாழ்வு விளங்கவில்லை…. உன் இதழ்களின் ரேகைகளில் ஒளிந்திருக்கும் காதல் சொன்னது நீ தான் என் வாழ்வென்று….”

ஹா ஹா அப்படியா சொன்னுச்சு….”

ம்ம்ம்ம் அதான் ரேகை வாசிக்க போறேன்கண்மூடி நிற்கும் தமிழ் நீயடி…. உன் கண்ணோடு இதழ் பிரித்து கவிதை சொல்லும் கவிஞன் நானடி….”

கவிதை சொன்னது போதும் கவிஞரே, வாசிக்கலாமா…. ”

 

”…………………………………………………………………………………………………………………………………………..” 

நான் வாசிச்ச அந்த ரெண்டு வரிக்கவிதையை…. உதடுகள்னு உலகம் சொல்லும் நம்பாதே…. எனக்கு மட்டும் தான் தெரியும் ரேகைகள் ஒடும் கவிதை அதுஎன்னால மட்டும் தான் வாசிக்கவும் முடியும்…. என் வாசிப்பை கூட இந்த உலகம் முத்தம்னு சொல்லும்…..”

மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நீண்ட கவிதையின் வாசிப்பில் இரு இதயங்கள்……

 

Advertisement