Advertisement

புயலோ தென்றலோ – 6

 

துரிதமாக முல்லைவன தோட்டத்தில் நடவடிக்கை நடத்துக்கொண்டிருக்க மேற்பார்வைக்காக சக்தி அங்கே நின்றுக்கொண்டிருந்தாள். சக்தியின் கோவத்தின் பின் அவளைச் சவீதாவென்று நிரூபிப்பதின் அவசியத்தை உணர்ந்த கார்த்திக் இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தான்.

 

பிரகாஷ், முல்லை வனம் ரொம்ப அழகா இருக்கு. இதுல நம்ம இன்னொரு விஷயம் பண்ணினால் ரொம்பவே அழகா இருக்கும். அது பட்டர்ப்ளை பார்க். இத பண்றவங்க யாரையாவது தெரியுமா உனக்கு ?” என்ற கேள்வி சாப்பாட்டு நேரத்தில் எழுப்பியவன் சக்தியின் மீதே தன்னுடைய பார்வையைப் பதித்திருந்தான்.

 

அவன் பார்வையை உணர்ந்திருந்த சக்தி எதையும் முகத்தில் பிரதிபலிக்காமல் சாதத்தில் கவனமாக இருந்தாள்.

 

பட்டர்ப்ளை பார்க் வீட்ல மெயின்டைன் பண்ணலாமா?” என யோசனையாகப் புருவத்தை வளைத்துப் பிரகாஷ் வினவ, ஸ்திரமாகக் கார்த்திக் ஆம் என்றான்.

 

ஒகே, நீ பார்த்துக்கோ கார்த்திக். எனக்கு இதைப் பற்றி ஐடியா இல்ல.

 

உனக்கு எது இஷ்டமோ அதைச் செய்எனக் கூற, “பிரகாஷ் பண்ணலாம்னு ஐடியா சொன்னேன். பண்றதும் பண்ணாததும் உன்னுடைய விருப்பம். நான் வந்த வேலை முடுஞ்சதும் கிளம்பிடுவேன். இங்க இருக்கப் போறது நீ தானேஎனப் பட்டும்படாமல் அலட்சியமாகக் கிளம்பிவிட, கார்த்திக் கிளம்பிவிட்டத்தை மெள்ள உறுதி செய்துவிட்டு யோசனை படிந்த பிரகாஷின் முகத்தை சக்தி பார்க்க தொடங்கினாள்.

 

அதைக் கவனித்துவிட்டுப் பிரகாஷ், “என்ன சக்தி என்கிட்ட எதாவது சொல்லனுமா ?”

 

இல்ல சார், அதுவந்துஹ்ம்ம்ம் ஒண்ணுமில்லை சார்

 

நீ கொஞ்ச நாளா நார்மலா இல்லாத போல இருக்கே சக்தி. நீ முன்னாடிலாம் இப்படி இல்லையே. என்னதான் பிரச்சனை உனக்கு ? ”

 

நிஜமாவே ஒண்ணுமில்லை சார். நான் எப்பயும் போலச் சாதாரணமாத்தான் இருக்கேன். சரி நான் அம்மா என்ன செய்றாங்கன்னு பார்த்திட்டு வரேன் சார்எனக் கிளம்ப எத்தனிக்க, “ஒரு நிமிஷம் சக்தி. எனக்கென்னவோ உனக்கு ஒரு மாற்றம் தேவைன்னு தோணுது.

 

கார்த்திக் அவன் அம்மா போல. சித்தி எப்பவும் எல்லா நேரமும், இருந்தவரை இந்த எஸ்டேட்டை உயிர்போட வச்சிருந்தாங்க. அதே எண்ணம் கார்திக்கிட்டையும் இருக்கும்போல. அவன் சொன்னது மே பீ சரியா கூட இருக்கலாம்.

 

நீ நாளுக்கு நாள் ஏதோ டல்லா இருக்கிற பீல் வருது.

 

சோ கார்த்திக் சொன்ன ஐடியாவை பண்ணலாம். பக்கத்தில இருந்து பார்க்கிற பொறுப்பு உன்னோடது தான். ஆனா ஸ்ட்ரைன் பண்ணி பார்க்காத, எல்லாத்தையும் என்ஜாய் பண்ணி பண்ணு. ஒகே ?” எனக் கூற, சக்தியின் கூம்பிய முகம் சட்டென்று மலர்ந்தது.

 

இதோ அதற்கான ஆட்கள் வந்து வேலையும் தொடங்கியாயிற்று. அனைத்தும் சக்தியின் மேற்பார்வையில் தான். அன்றிலிருந்து அவளுள் புதுவிதமான உற்சாகம். பிரகாஷும் பூரணியும் இதுவரை சக்தியின் முகத்தில் காணாத உற்சாகம் உற்சவமானது.

 

ஏன் எதற்கு என்று எதுவும் அவ்வ்விருவருக்குப் புரியாத போதும் சக்தியின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட பாதி வேளைக்கு மேல் முடிந்துவிட்டது. அன்று முழுவதிலும் வண்ணத்துபூச்களுக்குத் தேவையான தாவரங்களை நடவு செய்யும் நாள். சக்தி கோவிலிற்குச் சென்று விட்டு சற்றுத் தாமதமாக வேலை நடந்துகொண்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தவள் கோவத்தின் உச்சிக்கு சென்றாள்.

 

என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?” என்ற ஆளுமை குரல் சக்தியிடம்.

 

என்ன ஆச்சு மேடம்?” எனப் பட்டர்ப்ளை பார்க் அமைக்க வந்தவர்களுள் ஒருவன் புரியாமல் வினவ, கீழ் நடப்பதை பலகணியிலிருந்து கார்த்திக் விக்ரமுடன் இணைந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

 

ஆரம்பிச்சிட்டாங்க ஜி. இந்தப் பொண்ணு எதுக்கு எப்போ டென்ஷன் ஆகும்னே சொல்ல முடியல. இப்ப இவன் என்னத்துக்கு இந்தப் பொண்ணுகிட்ட சிக்குனானோ, ஆனா ஒன்னு, நம்மக்கிட்ட வழக்கமா சொல்றத போல நான் சவீதா இல்ல சக்தின்னு அவன்கிட்டயும் சொல்லாம இருந்தா சரி தான்எனக் கூறிவிட்டுச் சிரிக்கத் தொடங்கியவன் மெல்ல கார்த்திக்கின் தீவிர பார்வையில் சிரிப்பை அடக்கியபடியே, “ஏன் ஜி இவ்ளோ சீரியஸ் ?” எனக் கேட்டான்.

 

நீ சொல்றதுபோல அவள் இனி சக்தினு நம்மகிட்ட மட்டுமில்லை, வேற யார்க்கிடையும் சொல்ல முடியாது. அவ சவீதானு சொல்றதுக்கான ஆதாரத்திற்குத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்எனப் பார்வையை விலக்காமல் கூற விக்ரமோ, “என்ன சொல்றீங்க ?” என வினவினான்.

 

ஆமாம். சவீதாவிற்குப் பட்டர்ப்ளைஸ் பத்தின ஒவ்வொரு விஷயமும் அத்துப்படி. அதுல நடக்குற சின்ன தப்பான விஷயத்தைக் கூட அவ அக்ஸ்ப்ட் பண்ண மாட்டா. அதை அவளைத் தெருஞ்ச எல்லாருக்கும் தெரியும்.

 

இப்போ இங்க இந்தச் சக்தி என்ன ரியாக்ட் பண்ண போறான்னு பார்க்க போறேன். அவளுடைய ரியாக்ஷன் வச்சு இது சவீதானு நிரூபிக்கப் போறேன்

 

அதெப்படி ஜி? இங்க நீங்க எதிர்பார்ப்பது போலவே பேசிட்டு பிறகு மாத்திப் பேசலாம் இல்லையா ?”

 

நீ சொல்றதும் சரிதா. பேரு ஊருனு மாத்துறவளுக்கு வார்த்தையை மாத்தி பேச ரொம்ப நேரம் ஆகாது. கண்டிப்பா அப்படி நடக்க வாய்ப்பு இருந்தது, ஆனா அந்த வாய்ப்பு அவளுக்கு இப்போ கிடையாது.

 

பிகாஸ் அவ ரியாக்ட் பண்ணப்போற பண்ணிக்கிட்டு இருக்க எல்லாமே ரெகார்ட் ஆக ஸ்டார்ட் ஆகிருக்கும். இங்க கேண்டிட் இருக்கு. சோ நடக்கிறத மட்டும் பொறுமையா பார்க்கலாம்எனத் தீவிரமாகக் கூற விக்ரம் பிரமித்துப் போய் நின்றான்.

 

ஜி எதுக்கு இவ்ளோ இன்ட்ரஸ்ட் காட்டுறாரு? இங்க ஏதோ கேஸ்னு என்ன கூப்பிட்டு வந்தாரு. என்ன கேஸ்னும் சொல்லுற போலத் தெரியல. அதைவிடத் தேவை இல்லாம இந்தச் சவீதா பின்னாடி ஐயோ வேணாம்டா சாமி. இந்தச் சக்தி பின்னாடி சுத்திட்டு இருக்காரு.

 

என்னதா நடக்குதுனே புரியமாட்டீங்கதே ?” என எண்ணமிட, விக்கிரமின் எண்ணம் சக்தியின் குரலில் தடைப்பட்டது.

 

என்ன கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம பதில் சொல்றீங்க? நீங்க நிஜமாவே பட்டர்ப்ளை பார்க் கன்ஸ்ட்ரக்ட் ஏஜென்சி தானா ? ”

 

ஏன் மேடம் என்னாச்சு? எதுக்கு இப்படிச் சொல்றீங்க ?” என மற்றொருவன் வினவ, பிரகாஷும் கூட உள்ளிருந்து வந்துவிட்டான்.

 

ஏன் உங்களுக்குத் தெரியாத? நீங்க என்ன பிளாண்ட்ஸ் வச்சுருக்கீங்க ? எல்லாமே கிரோடான்ஸ். பட்டர்ப்ளைஸ்க்கும் லார்வாக்கும் எங்க இருந்து உணவு கிடைக்கும் ? என்ன என்ன செடிகள் வைக்கணும் எந்த இடைவேளையில் வைக்கணும்னு கூடத் தெரியாதவங்க எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க ?” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்க, அவளைச் சுற்றியிருந்த அனைவரும் அவளுடைய கேள்வியில் தடுமாறினார்.

 

பிரகாஷோ ஒரு படி மேல் சென்று, “சக்தி உனக்கு எப்படி இந்தச் செடிகள் எல்லாம் செட் ஆகாதுன்னு தெரியும் ? நீ ரிலாக்ஸ் ஆகு. உன்ன டென்சன் ஆகவேணாம்னு சொல்லித்தானே இதைப் பார்க்க சொன்னேன்.

 

ஆனா இதை வச்சே நீ அப்செட் ஆவணு தெரிஞ்சிருந்தா நான் உன்ன பாக்கவே சொல்லியிருக்க மாட்டேஎனக் கூற, “இல்லை சார். டென்ஷன்லாம் இல்ல. தொழிலில்ல கவனம் இல்லாம ஏனோ தானோனு பார்க்குறாங்க சார்.

 

தனக்கான உணவை அந்தப் பூச்சிகள் தயாரிக்க உதவாத செடிகளை வச்சு பல உயிர்களைக் கொல்லப்பாக்கிறாங்க. அப்புறம் அதைச் சரி பன்றேன்னு மறுபடியும் ஒரு சார்ஜ் பண்ணுவாங்க.

 

இதெல்லாம் இவுங்களோட பிஸ்னஸ் டாக்டிஸ். அதுக்கு விலை இந்த வண்ணத்துப்பூச்சிகளோட பசியா ? அதை என்னால ஏத்துக்க முடியாது சார். மத்தபடி அம் பைன். நீங்க விடுங்க சார்எனக் கூறிவிட்டு அந்த ஏஜென்சி ஆட்களைப் பார்க்க, அதிலொருவன் மேலை பார்த்து கண்களால் ஏதோ சமிங்கை செய்துவிட்டு, சட்டென்று முகத்தை மாற்றியதை நொடியில் தற்செயலாகக் கண்டுகொண்டாள்.

 

இவன் மேல என்ன ஏதோ சிக்னல் காட்றான்?” எனச் சிந்தனையை ஓட்டியவள், வண்ணத்துப்பூச்சிகளுக்காக அமைத்திருந்த செயற்கை தடாகத்தைச் சற்று உற்று பார்க்க, அங்கே கார்த்திக்கின் பிம்பம்.

 

மெல்லிய காற்றில் தடாக நீர் அலையாட, அதில் மங்கலான உருவமாய்க் கார்த்திக்கின் உருவம்!

 

ஒரு கணம் ஒரே கணம் அவளுடைய இருதயம் அவளை மீறித் துடித்தது. வேகமாக மிக வேகமாக அவனுடைய பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்து திடுக்கிட்டாள்.

 

இல்லை தடுமாறாதே மனமேஎனத் தனக்குத் தானே கூறிக்கொண்டவள், நிதானமாக அவ்விருவர் மீது பார்வையை ஓட்ட, அவர்களோ, “மேடம்? உங்களுக்கு என்ன தெரியும் ? ரொம்ப மரியாதை இல்லாமல் பேசுறீங்க. நாங்க பணத்தை விடத் தொழிலிற்குத் தான் அதிகமான மரியாதையைக் கொடுப்போம்.

 

இந்தச் செடிகளதா இங்க நடவு செய்யணும். உங்களுக்கு என்ன தெரியும் ? ஒருவேளை உங்களுக்குத் தெரியும்னா எப்படித் தெரியும் ?” என அவன் வினவ, சக்தி சுதாரித்தாள். சில நொடிகள் தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்து சமன் செய்தவள் ஒரு சிறிய இடைவேளையின் பிறகு, “இப்படி ! இப்படித்தான் தெரியும்என அருகே இருந்த புத்தகத்தை எடுத்து காண்பித்தாள்.

 

பிரகாஷ் மட்டுமின்றிக் கார்த்திக்கும் என்ன சொல்கிறாள் எனப் பார்க்க, அவளோ, “இதோ இந்தப் புக் இது நீங்க கொண்டு வந்தது தானே ? இதுல தான் டீடைல்டா ஒவ்வொரு ஸ்டெப்பா கொடுத்திருக்கு.

 

கொஞ்சம் நேரம் டைம் பாஸ்க்கு பார்த்த எனக்கே தெரிஞ்சிருக்கு. அதைப் படிச்சு அதுலையே வேலை பார்க்கிற உங்களுக்குத் தெரியாதா ? இதை நான் நம்பணுமா ?” எனக் கைகளைக் குறுக்கே காட்டியபடி அவள் கேட்ட தோரணனை அப்பா ! என்றதொரு எண்ணத்தை அந்த ஏஜென்சி காரர்களிடம் தோற்றுவித்தது.

சக்தியின் பதிலில் கார்த்திக்கின் திட்டம் தோல்வியை நோக்கி செல்வதை உணர்ந்த போதிலும் அவள் கேட்ட விதம், அவளின் பாவனைக் கார்த்திகை ரசிக்கத் தூண்டியது.

 

இவள் நான் பார்த்தவளா ? தென்றல் போல மென்மையானவள் இப்போதோ புயலை போலச் சீற்றம் கொள்கிறாள். ஆனால் இரண்டிலும் அவள் என்னை வேரோடு சாய்க்கிறாள். தென்றலோ புயலோ அவள் ?

 

என அவனுள் தோன்ற அதை ஒரு திட்டிகிடலுடன் உணர்ந்தான்….

 

என்ன புக் சக்தி இது ?” பிரகாஷ் வினவ

 

இது இவுங்க கொண்டு வந்த புக் தான் சார். இந்த ரெண்டு பேருல ஒருத்தர் புதியவர். அதுனால இந்த ரெபிரண்ஸ் புக் கொண்டு வந்ததா அவரே முதல் நாள் என்னிடம் சொன்னாரு.

 

நான் இதை வாசிக்க விருப்பப்படவும் என்னிடம் கொடுத்தாரு. சும்மா கொஞ்சம் நேரம் அப்ப அப்ப தான் இதை வாசிச்சே. எனக்கே தெரியுது. இவுங்களுக்கு எப்படித் தெரியாம போகு?” எனப் புருவங்களை உயர்த்திக் கேட்டுவிட்டு, “இதோ பாருங்க ! இன்னைக்குப் பண்ணின ஒர்க் கம்ப்ளீட்டா மாத்துங்க.

 

இந்தப் பட்டர்ப்ளைஸ் க்குச் சூட் ஆகுற பிளாண்ட்ஸ் மாத்துங்க. வீனா என்ன நம்பவைக்கை முயற்சி செய்யவேண்டாம்எனக் கட்டளையாகக் கூறிவிட்டு, பிரகாஷிடம், “சார் நான் அம்மா பார்க்க போறேன்எனக் கூறி செல்ல மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக் ஸ்தம்பித்தான்.

 

ச்சஎனக் கைகளை உதறி காற்றில் குற்றியவன் அவன் திட்டமும் காற்றோடு கண்ணுக்கு அகப்படாது மறைந்து போவதை எண்ணி கோவம் கொண்டான்.

 

ஏஜெண்சியில் ஆட்களை இவனின் எண்ணத்திற்கு ஆட வைத்து அந்த ஆட்டத்தில் சவீதாவின் வாயிலாக வண்ணத்துப்பூச்சி வளர்ப்புமுறையைக் கூறவைத்து தான் எண்ணியத்தை நிறைவேற்றும் திட்டம் கலைந்திட, கோவத்தின் எல்லையைத் தொட்டிருந்தான். அதோடு அந்தத் திட்டத்தை உடைத்தவளின் மீது கோவத்திக்கு பதிலாய் ரசனை வந்ததனால் கோவத்தின் எல்லையைக் கடந்திருந்தான்.

 

ஏஜெண்சி ஆளோ, தவறாக ஸ்தாபிக்க வேண்டிய அலுவளுக்கு எதற்காகத் தொழில் தெரிந்த ஒருவனை அழைத்து வர வேண்டும். கடந்த வாரம் புதிதாக வந்தவனே போதும் என்றெண்ணி ஒருவனை அழைத்து வர, அவனோ இவர்களின் திட்டத்தை உடைக்கும் ஆயுதமாகிவிட்டான். அவன் அறியாமலே சக்தியின் ஆதரவாய்!

 

மேல் நின்ற கார்த்திக்கிடம் அந்த ஏஜென்சி ஆள் மன்னிப்பை வேண்ட, கார்த்திக்கோ அதைக் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

 

கார்த்திக்கின் முகபாவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த, விக்ரமோ குழம்பினான்.

 

ஜி எதுக்காக இந்த டென்சன். என்னைக் கேட்டா இது தேவை இல்லாத ஒன்று. நம்ம இன்னமும் நம்முடைய வேலைய கவனிக்கல.

 

இந்தச் சக்தி சவீதானு நிரூபிக்கிறது மே பீ அவசியமா கூட இருக்கலாம். ஆனா இது நம்ம கேஸ் விட முக்கியமானதா ? அப்படி இவுங்களோட முகமூடியை கிழிச்சு என்ன ஆகப்போகுது ? இந்த ப்ரூப் பண்ணி என்ன செய்யப் போறோம் ?” எனச் சலிப்பு கலந்து வினவ, கார்த்திக்கிடம் ஓர் ஆழ்ந்த பார்வை மட்டுமே.

 

ஜி நான் உங்ககிட்ட தான் பேசுறேன் ? அந்தச் சக்தியை அடையாளம் கண்டு பிடிச்சு என்ன செய்யப் போறீங்க ? என இம்முறை சற்று எரிச்சலுடன் வினவ,

 

வில் யு ஸ்டாப் இட்?

 

நான் வந்த வேலைய கவனிக்கலைனு யாரு சொன்னது. நாம இங்க வந்தது சவீதாவை எனகுயர் பண்ண தான்.

 

அவள் சாட்சியா ? இல்ல குற்றவாளியானு போகப் போகத்தான் தெரியும். ஆனா என்கொயர் செய்ய இங்க சவீதா இல்ல. சக்தி தான் இருக்க.

 

முதல்ல நம்ம சக்தி தான் சவீதானு நிரூபிக்கணும். அதுக்கான ஆரம்பம் தான் இதுஎனக் கூற விக்ரம் இன்னும் நம்பமுடியாத நிலையில் நின்றிருந்தான்.

 

ஜி அப்படி என்ன கேஸ்?” என வினவ, “மர்டர்என்ற ஒற்றை வார்த்தை விக்ரமை பேரதிர்ச்சியில் தள்ளியது.

 

Advertisement