Advertisement

புயலோ தென்றலோ – 11

 

“அப்புற என்ன ஆச்சு ஜி? பெங்களூரு போயிட்டு வந்த பின்னாடி சவீதாவ பாக்கவே இல்லயா ?” எனப் பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவனை விக்ரமன் கேள்வி மீண்டும் கடந்த காலத்திற்கு இழுக்க, அதைத் தற்காலிகமாய்ப் பிரகாஷின் வரவு தடை செய்தது.

 

“கார்த்திக், விக்ரம்…

 

இங்க என்ன பண்றீங்க ? உங்கள எங்கெல்லா தேடுறது. விக்ரம் நீங்க எஸ்டேட் பாக்க தான வந்தீங்க ? நா ஆள் அரேன்ஜ் பண்ணிருக்கே. அவரு கீழ வந்து வெயிட் பன்றாரு.

 

வந்தீங்கனா நம்ம போய்ப் பார்த்திட்டு வந்திடலாம். கார்த்திக் நீயும் வா” என அழைக்க,

 

“ஒகே பிரகாஷ் ஜி. போலாம்! ஆனா என்ன மேரேஜ் பண்ணிருக்கேன்னு சம்மதமே இல்லாம எதோ சொல்றீங்க ? என வினவ, “ஐயோ அது மேரேஜ் இல்லை. அரேன்ஜ்னு சொன்னேன். எப்படிக் கார்த்திக் சமாளிக்கிற.

 

வாங்க ” என அவசரப்படுத்தினான்.

 

மேலும் கீழும் முழித்த விக்ரம், “லூசு பைய விடமாட்டா போலவே. அடுத்து என்ன நடந்திச்சுனு தெரியாம எனக்குத் தலையே வெடிச்சிச்சிடுமே. பேசாம தலை வலின்னு சொல்லிடுவோமா ” என எண்ணம் கொள்ள, அதற்குள் கார்த்திக், “இல்ல பிரகாஷ். எனக்குத் தலை வலிக்குது, நீங்க போயிட்டு வாங்க. நான் இங்கயே இருக்கே. விக்ரம் பிரகாஷ் கூடப் போய்ப் பாரு”

 

“நான் என்னத்தடா பாக்க போறே? வாங்க போறவ தானே பாக்கணும். நான் வேடிக்கை பார்க்க வந்தவண்டா” எனப் புலம்பியபடியே ப்ரகாஷுடன் கிளம்பினான்.

 

பழைய நினைவுகள் கார்த்திக்கிற்குள் பெரிய பாரத்தை ஏற்றி வைத்தது. மீண்டும் சவீதாவுடனான அந்த நாட்களுக்கு மனம் செல்ல விழைய தன்னுடைய எண்ணம் போகும் திசை கண்டவன் திடுக்கிட்டு தலையை வல இடப்புறமாக அசைத்துக்கொண்டான். தன்னுடைய சிகைக்குள் கைகளைக் கொண்டு, “நெவர். இனி அப்படியொரு விஷயம் வர வாய்ப்பே இல்ல. அவ செஞ்சது என்னால மறக்கவோ மன்னிக்கவோ முடியவே முடியாது” என எண்ணியபடியே வந்து லிவிங் ரூமில் அமர்ந்தான்.

 

அவனின் கவனத்தைப் பூரணியின் வருகை திசை திருப்பியது. இவன் சற்று உள்ளிழுத்து வடிவமைக்கப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருக்க, இப்படியொருவன் அமர்ந்திருப்பதே அறியாமல் கவனமில்லாமல் சக்தியை அழைத்தபடி உள் சென்றாள். நேராக டைனிங் ஹால் சென்றவள், சக்தி சக்தி என்று கூச்சலிட மெல்ல வயிற்றைத் தாங்கி பிடித்தபடி சக்தி சமையலறையிலிருந்து வெளிவந்தாள்.

 

“என்ன பூரணி? எதுக்கு இப்படிச் சத்தம் போடுற”

 

“என்னது சத்தம் போடுறேனா? உன்னக் கூப்பிட்டே. கோவில் போனே. உன் வயித்துல இருக்கக் குட்டிக்காக வேண்டிக்கிட்டேனா. அதா பிரசாத கொடுக்கலாம்னு வந்தே”

 

“ஓ அப்படியா? கொடு. சரி எப்ப உன் பி.ஜி அட்மிஷன் ரிசல்ட் வருதாம் ? ”

 

“இன்னும் ஒன் மந்த் ஆகும் சக்தி. இந்தா குங்குமம் எடுத்துக்கோ” என நீட்ட, அதை வாங்கி நெற்றியிலிட்டவள், வகிட்டிலும் பிறகு மாங்கல்யத்திலும் வைப்பதற்காகத் தாலி சரடை வெளியே எடுக்கக் கார்த்திக்கின் நெஞ்சம் எகிறிக் குதித்தது.

 

அவள் சக்தி என்று கூறினாலும், அவள் சவீதா தான் என நம்பும் கார்த்திக், அவளைச் சவீதாவாகவே உணரும் கார்த்திக், அதை உறுதிப்படுத்தும் வாய்ப்பல்லவா ?

 

அதற்காகத் தான் கார்த்திக்கின் நெஞ்சம் பதற்றம் கொண்டதா ? அல்லது உண்மையாகவே இவள் தன்னுடைய சவீதாவா என அறிந்துகொள்ளப் போவதால் பதற்றம் கொண்டதா ? அதை அவன் அறியவில்லை. ஆராயவும் முற்படவில்லை. சாதாரணமாக அமர்ந்திருப்பவன் போன்ற பாவனை இருந்தாலும், அவன் பார்வை முழுவதும் சக்தியின் மீதே படிந்திருந்தது.

 

அவள் தாலி சரடை எடுத்துக் குங்குமத்தை வைக்கக் கார்த்திக்கின் பார்வை கூர்மை பெற்றது. நடுவில் திருமாங்கல்யம் அதன் பிறகு இருபுறமும் சிறிய தங்க காசு, அதைத் தொடர்ந்து இருபுறமும் சிறிய மாங்காய் வடிவம் போன்று தாலியுடன் இணைத்திருந்தது. அதுமட்டுமின்றி, இருபுறம் இரண்டு இரண்டு தங்க குண்டுகளும் இணைந்திருந்தது.

 

“கார்த்திக் இதென்ன மாங்காய் வடிவ தங்க நாணயம் சேர்த்திருக்கு சரடுல. மாங்கல்யமும் தங்க நாணயம் கறுப்பு மணி, பவளமும் சேர்ந்திருக்கு, அதுபோல நா பாத்துருக்கே. இதென்ன புதுசா இருக்கே ?” எனத் தன் கணவனின் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அவன் அணிவித்த மாங்கல்யத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டே வினவ, “அதுல ஒரு செண்டிமெண்ட் இருக்கு சவீ. ஏன் எதுக்குன்னு எனக்குக் காரணலா தெரியாது! ஆனா எங்க அம்மா கழுத்துல இது போலவே தான் போட்டிருப்பாங்க. இந்த மாடல் பார்த்ததும் எனக்கு இதை வாங்கணும்னு தோணுச்சு” எனக் கூற, அவன் தாரத்தில் தாயையே தேடுவதை உணர்ந்தவள் போல எழுந்து அமர்ந்து தன் நெஞ்சில் தன்னவனைச் சாய்த்துக்கொண்டாள்.

 

மெல்ல மெல்ல கடந்த காலத்திலிருந்து வெளிவந்தவனுக்கோ இன்றும் அந்த நிகழ்வு பசுமையாய் குளிர்ந்து.

 

“நீ என்னோட சவீதாதா! எனக்குச் சந்தேகமே இல்ல. ஆனா உன்னால எப்படி என்னப்போய் ஏமாத்த முடிஞ்சது ? என்னோட சவீயா ? இல்ல! அப்படி இருந்திருந்தா நீ இந்தக் காரியத்தப் பண்ணியிருக்கவே மாட்ட.

 

தாலி கட்டியவ கண்ணுமுன்னாடி இருந்து அவனுக்கே மதிப்பில்ல. ஆனா இந்தத் தாலிய ரொம்ப மதிக்கிறது போல நாடகம். ச்சா..

ஊரு பேருனு எல்லாத்தயு மாத்தி எத ஒளிக்க இந்தத் திட்டம் ?

கொலை நடந்த இடத்துல உனக்கென்ன வேலை ? அதெல்லாம் விட என்னை எதுக்கு ஏமாத்துன ? எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறேன்.

 

அதைத் தெருஞ்சுக்காம இங்க இருந்து போகமாட்டே சவீ” எனத் தனக்குள் உறுதிகொண்டான்.

 

“என்ன? அடுத்தது என்ன?” என்ற கேள்வி கார்த்திக்கிடம்.

 

சிறு யோசனையின் பிறகு முடிவெடுத்தவனாய், “உன்ட என்குயறிய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீ சக்தி இல்லனு நான் நிரூபிக்கணு. அதுக்கான ஆதாரம் எனக்கு வேணு.

 

நம்மோட மேரேஜ் செர்டிபிகேட் போட்டோனு எத யூஸ் பண்ணினாலு நீ என்ன முன்னாடியே முட்டாளாக்கிய விஷயம் எல்லாருக்கு தெரிஞ்சிடு. என்னோட ஒர்க் ப்ளேஸ்ல என்னோட இமேஜ் ரொம்ப முக்கியம்.

 

என்னை மரியாதையோடு பாக்கிற கண்ணு ஏமாந்தவனா பாக்க கூடாது.

 

நீ என் லைப்ல இருந்தத நான் ஆதாரமா காட்டமாட்டேன். அதோட உன்னோட அடையாளமே இல்லாம தான் நான் என்னோட குழந்தைய வளர்க்கணு. அதுனால உனக்கும் எனக்குமான உறவு எதுக்கும் சாட்சியா நான் காட்டமாட்டேன்.

 

உன் வழியில வந்தே உன்ன உண்மை சொல்ல வைக்கிறே” எனக் கூறிக்கொண்டவன், விக்ரமிற்கு அழைத்தான்.

 

கார்த்திகேயனின் அழைப்பை ஏற்றவன், மீண்டும் மீண்டும் என்ன என்ன என்று கேட்க, அவனிற்கு அருகே வந்துகொண்டிருந்த பிரகாஷ் கைபேசியை அவனிடமிருந்து வாங்கி, “என்ன கார்த்திக் ? என்ன சொல்ற?” என்றதும், “பிரகாஷ் டுரியான் இங்க கிடைக்குமான்னு பாக்க சொன்னேன்” எனக் கூற, “டுரியானா? அப்படினா என்ன கார்த்திக் ?” என வினவ, “நீங்க விக்ரம்கிட்ட சொல்லிடுங்க. அவனுக்குத் தெரியும்” எனப் பேச்சை முடித்துக்கொண்டான்.

 

“என்ன பிரகாஷ் ஜி? கார்த்திக் ஏதோ டூர் டூர் னு சொல்லிட்டு இருக்காங்க. எதுவும் டூர் போறாரா ?” என அப்பாவியாக வினவ, தலையில் கைவைத்தபடி, ‘டுரியான்’ என விளக்கி கூறவும், “ஓ பழம் வாங்க சொல்லியிருக்காரு. எனக்குத் தெரியும் மார்க்கெட் எங்க இருக்குனு சொல்லுங்க. நான் வாங்கிக்கிறேன்” எனக் கூற, “அப்படியொரு பழம் இருக்கா ? ஏன் சடெனா ? கார்த்திக்குப் பிடிக்குமா ?

 

“இல்ல! கார்த்திக் ஜி க்கு பிடிக்காது. அந்த வாடையே ஆகாது அவருக்கு. நான் தான் வந்ததிலிருந்து சாப்பிடணும்னு சொல்லிட்டே இருந்தேன். ஹில் ஸ்டேஷன்ல ஈஸியா கிடைக்கும். அதான் நான் வெளில வந்த நேரத்துல எனக்கு ரிமைண்ட பண்ணியிருக்கார். பட் இஃது எனக்கு மட்டுமில்லை. வீட்ல இருக்கிற எல்லாரும் இதைச் சாப்பிட்டு பாருங்க. அப்புறம் இந்தப் பழத்தை விடவேமாட்டீங்க” எனச் சமாளித்தவனிற்குக் கார்த்திக்கின் நோக்கம் புரிந்து போனது.

 

பழத்துடன் வீடு வந்தவர்கள், டைனிங் அறையில் வைத்துவிட்டு எதிர்ப்பட்ட வேளை ஆட்களிடம் “இத உடைச்சு வீட்ல இருக்கிற எல்லாரு சாப்பிடறது போல டேபிள்ல வச்சிடுங்க” என விக்ரம் பிரகாஷின் வாய் வார்த்தையாகவே கூற வைத்தான்.

 

தானோ கார்த்திகோ இந்தப் பழத்தின் பின்னணியில் இருப்பத்தை அறிந்தால் சக்தி அதன் அருகில் கூட வரமாட்டாள் என்பது விக்ரம் அறிந்த ஒன்றே.

 

கார்த்திக்கின் அழைப்பின் பிறகு பிரகாஷ் அறியாமல் அவனுக்கு மெசேஜ் அனுப்பியவன், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டான். கார்த்திக் கூறியதையும் பிரகாஷின் மூலமாகச் செயல்படுத்திவிட்டான்.

 

ஒரு சின்ன எதிர்பார்ப்போடு விக்ரம் கார்த்திகை தேடி போக, கார்த்திக் யாருடனோ தீவிரமாகக் கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தான்.

 

“கம்ப்ளீட் சேப் தானே? அதோட ஹீட் ஏதும் இம்பாக்ட் பண்ணிடாதே ? ஆர் யு சுயர் ? தேங்க்ஸ் சார்! இப்போ எட்டாவது மாதம் ஸ்டாட்டிங். ஒகே டன். ரொம்பத் தேங்க்ஸ்” எனப் பேசியவன் அழைப்பை துண்டிக்க, “யாரு கார்த்திக் ?” என விக்ரம் வினவினான்.

 

“ஒண்ணுமில்லை நா சவீதாவை பிடிக்கிறதுல மட்டும் கவனம் வச்சா போதாது. என் குழந்தையும் எனக்கு முக்கியம்

 

இந்தப் பழம் ஹெல்த்தினு தெரியும். இருந்தாலும் இது பொதுவா பலா, மா போல ஹீட் ஜெனெரேட் பண்ற ப்ரூட். அதுனால தான் டாக்டர் கிட்ட செக் பண்ணிக்கிட்டேன்.

 

இது ஹீட் தான், ஆனா ஒன்னும் ஆகாதாம். அதோட இஃது எட்டாவது மாதம் சோ பிரச்சனை இருக்காது சொன்னாங்க. நிறைய விட்டமின்ஸ் இருக்குதாம். சின்ன கீத்தா  ஒன்னு ரெண்டோ சாப்பிடலாம்னு சொன்னாங்க.

 

“சோ நீ மத்தவங்க கூட ஜான் பண்ணிக்கோ. டைனிங்க்ல நடக்குறது உன் போன்ல ரிக்கார்ட் பண்ணிக்கோ. நான் கொஞ்சம் டிலே பண்ணி வரேன். ஒரு பீஸ் சவீ சாப்பிட்டதும் வரேன். என்னைப் பார்த்தபிறகு கண்டிப்பா இதைச் சாப்பிடமாட்டா. சோ டாக்டர் சொன்னபடி ஒரு பீஸ்க்கு மேல சவீ சாப்பிடாமலும் பாத்துக்கலாம். ஒகே ?” என வினவ, விக்ரமோ மனதில், “இவரு இந்தப் பழத்தை சவீதாவை பிடிக்க வாங்கிட்டு வர சொன்னாரா ? இல்லை அவுங்க பிடிச்சதை இந்த நேரத்துல சாப்பிடணும்னு வாங்கிட்டு வர சொன்னாரா ? எது எப்படியோ இவர் மனசுல இன்னும் சவீதாமேல அன்பு இருக்கு” என எண்ணிக்கொண்டான்.

 

அதே நிலை தான் கார்த்திக்கிற்கும்.

 

”எத்தனையோ வழிகள் இருக்கும்போது எதுக்காக நான் இந்தப் பழத்தை சவீ சாப்பிடணும்னு நினைக்கிறே. அவளுக்கு ரொம்பப் பிடிச்ச பழம் அதுனாலயா? அவ இந்த நேரத்தில பிடிச்சதை சாப்பிடணும்னு நா நினைக்கிறேனா ?

 

இல்லவே இல்ல. இது நான் சவீதாவை கைகளவுமா பிடிக்கத்தான்.  ஏமாத்துக்காரி எப்படி என்னோட மனசுல இருக்க முடியும்.

 

ஒருவேளை நா அப்படி அவளைக் கேர் பண்ணினாலும் அதுக்கு ரீசன் என் குழந்தைதான். வேறெதுவும் இல்லை” எனத் தனக்குத் தானே கேள்வியும் கேட்டுக்கொண்டு பதிலும் சொல்லி கொண்டான்.

 

“ஜி நான் ஒன்னு கேட்கலாமா?”

 

“என்ன விக்ரம்?”

 

“உங்க திட்டம் தான் என்ன? இது போலச் சக்தியோட ஆக்ட்டிவிட்டிஸ் ரிக்கார்ட் பண்ணி மட்டும் இவுங்களை நாம சவீதானு எப்படி நிரூபிக்க முடியும் ? இதெல்லாம் சரியா வருமா ?”

 

“நிச்சயம்!”

 

“புரியலை ஜி. கொஞ்சம் கிளியரா சொல்லுங்க. அதை மட்டுமில்லை, அதோடு சேர்த்து நீங்க பெங்களூரு போன பிறகு என்ன நடந்திச்சுன்னும் சொல்லுங்க”

 

“சொல்லுறேன், ஆனா எங்களைப் பத்தி இனி சொல்ல எதுவுமில்லை. ஏன்னா, நான் பெங்களூரு போய் ஒரு மாசம் வரை என்னால மறுபடியும் அவளைச் பாக்க வரவே முடியல. என்னோட லாங் லீவு எனக்கு ஒர்க் ப்ரஸ்ஸர அதிகமாக்கிடுச்சு. ஆனாலும் சவீதாகிட்ட பேசாம என்னால இருக்கவே முடியாது. அவளுக்கும் அப்படிதானு நான் நினச்சே. எவ்ளோ பிசினாலும் கண்டிப்பா பேசிடுவேன். அதுக்கு அப்புற ஒரு கிராமத்துக்கு போகவேண்டிய சூழல். அதுனால அங்க இருந்த இரண்டுவாரமும் என்னால போன் கூடப் பண்ணமுடியல.

 

அந்த வேலைய முடிச்சிட்டு, நான் ரொம்பச் சந்தோசமா அவளைப் பாக்க வீட்டுக்கு போனேன். ஆனா அங்க சவீ இல்ல. அக்கம் பக்கத்தில இருக்கவங்க என்னென்னமோ சொன்னாங்க. என்னால எதையும் நம்பமுடியல.

 

லோக்கல் போலீஸ்கிட்ட போனேன். மத்தவங்க சொன்னதத்தான் அவுங்களும் சொன்னாங்க” எனக் கூறி இடைவேளை விட, “அப்படி அவுங்க என்ன தான் சொன்னாங்க ஜி ?” என விக்ரம் பரபரத்தான்.

 

“சொல்லுறேன், கொலை நடந்ததா சொல்லப்படற ஸ்பாட்க்கு சவீதா வந்திருக்கா. அதுக்கான அவளோட சைன் அங்க இருக்கிற ரெஜிஸ்டர்ல இருக்கு. ஆனா மறுபடியும் அவ வெளில போகல.

 

கொலை செய்யப்பட்டவனைப் பாக்க தான் சவீதா போயிருக்கா. அது செத்துப்போனவனோட தனிப்பட்ட ஹாலிடேய் ஹோம். அதுக்குப் பின்னாடி அவனுக்குச் சொந்தமான ரிசார்ட் இருக்கு.

 

அவனோட வீட்ல இருந்து ரிஸார்ட்கு போறதுக்கு வழி இருக்கு. பட் அங்க நிறைய விஐபிஸ் வந்து போவாங்க. கார்ல வந்து போறவங்கள செக் பண்ணிருக்க மாட்டாங்க. இருந்தாலும் சிசிடிவில ரிக்கார்ட் பண்ணினவர, சவீதா அந்த வழியாவும் வெளியே போகல வந்த வழியாவும் வெளியேறல.

 

இன்னும் சொல்ல போன சவீதா அந்தநாளுக்கு அப்புற குட்ட வில்லேஜ்க்கும் போகல. அவளுடைய பேரு அப்புறம் எதுக்காக அன்னைக்குக் கொலைசெய்யப்பட்டவனைப் பாக்க போனா அப்படிங்கிற விவரம் வச்சும், வாட்ச்மேன் சொன்ன அடையாளம் வச்சும் அவளுடைய வீட்டுக்கு போய் லோக்கல் இன்ஸ்பெக்டர் கலெக்ட் பண்ணின டீடெயில்ஸ் வச்சு தான் சவீதாவோட போட்டோ எடுத்திருக்காங்க அவ வீட்ல இருந்து.

 

அதோட அந்தக் கேஸ் அங்கே ஸ்டக் அப் ஆகிடுச்சு. அதுக்கு மேல எந்தவொரு டீடைலும் இல்லை. காணாம போன சவீக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கிறது ஊர்ஜிதம் ஆகிடுச்சு. ஆனா சவீதாவை கண்டுபிடிக்க முடியலை.

 

இறந்துபோனவ பெரிய இடம். அதுனால ரொம்ப ப்ரெஸ்ஸர் போட்டு நம்மகிட்ட ஒப்படைச்சிருக்காங்க. போலீஸ் அதுக்குமேல ப்ரொசீட் பண்ண முடியாம சவீதாவ ட்ராக் பண்ணமுடியாத காரணத்தினால இப்ப நம்மகிட்ட.

 

இதெல்லாம் அங்க மத்த ஆபிஸர்ஸ் சேகரிச்ச தகவல். நான் இந்தக் கேஸ் எடுத்தபிறகு அங்க இரண்டு முறை போனே. ஆனா காணாம போன சவீதா தான் இதுல மெயின். சோ அவளைக் கண்டுபிடிக்கிறது முக்கியம்னு புருஞ்சு எல்லா ஸ்டேஷன்க்கும் இந்தியா முழுக்கத் தகவல் அனுப்பினேன்.

 

இங்க வால்பாறையிலிருந்து இவுங்களைப் பாத்ததா எனக்குத் தகவல் வரவும் உன்ன கூப்பிட்டுட்டு வந்தேன். இங்க நான் சவீதாவை தேடித்தான் வந்தேன். ஆனா இங்க இருக்கிறதோ சக்தி. அதிரடியா என்னால இதுல முடிவெடுக்க முடியாம இல்ல.

 

ஆனா அப்படி என்னால செய்யமுடியல. என் குழந்தையை எதுவும் இம்பாக்ட் பண்ண கூடாது.

 

நான் சக்திக்குள்ள ஒளிஞ்சிருக்கச் சவீதாவ வெளிய கொண்டு வரணு. அதுக்கான வேலையில தான் இறங்கியிருக்கே”

 

“எல்லாம் ஒகே தான் ஜி. ஆனா இதுக்கும் நீங்க இப்போ சவீதாவ இவ்ளோ வெறுகிறதற்கு காரண என்ன ? நீங்க எதையோ மறைக்கிறீங்கனு எனக்குத் தோணுது. பட் பெர்சனால இருந்தா வேணா” என விக்ரம் கூற, கார்த்திக்கின் முகம் கோவத்தில் சிவந்து தாடை இறுகியது.

 

“இப்போ அதைப் பத்தி பேசவேணா விக்ரம்” எனக் கண்களை ஒருமுறை திறந்து இறுக மூட, அவனுடைய முகத்தில் அத்தனை வேதனை. கோவத்தைத் தாண்டிய வலியை அவன் கண்கள் பிரதிபலித்தது.

 

“ஒகே ஜி. வேணாம் விட்ருங்க. சரி இந்தப் பழத்தை வச்சு நாம எப்படிச் சவீதாவை கொண்டு வர முடியும் ?”

 

“அது சவீயோட பழக்க வழக்கம் அங்க இருக்கிற எல்லாருக்கும் அத்துப்படி. இந்தப் பழம் எல்லாருக்கும் பிடிக்காது. ரொம்ப ரேர் பீபுள்ஸ் தான் இதைச் சாப்பிடுவாங்க. அதை விட முக்கியம் எல்லாருக்கும் இதைக் கட் பண்ணவும் தெரியாது. ஆனா சவீதாக்கு இது நல்லா தெரியும்.

 

உருவ ஒத்துமை கூட இருக்கலாம். ஆனா ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களுமா இருக்கும் ? அதுனால சவீதாவுக்கு எதுலலாம் ஆர்வம் இருக்கோ எதெல்லாம் அவளுடைய தனிப்பட்ட பழக்கங்களா இருக்கோ அது சக்திகிட்டையும் இருக்குதுனு நிரூபிச்சிட்டா நாம சவீதா தான் சக்தியா நடிக்கிறானு நிரூபிக்கலாம்.

 

நாம சொல்றது சாட்சி ஆகாது. ஆனா சக்தியோட நடவடிக்கைகளை ரிகார்ட பன்னினோம்னா அது நமக்குப் பின்னாடி ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.

 

பட்டர்ப்ளை பார்க் ஐடியால கடைசி நிமிஷத்துல அவ தப்பிச்சிட்டா. ஆனா இதுல தப்பிக்க முடியாது. நான் கீழ வரல. நீ போய் நோட் பண்ணு” எனக் கூற விக்ரமும் சரி என்பதாய் அங்கே செல்ல, வேளை ஆட்கள் அப்பழத்தை எப்படி உடைப்பதென்று போராடிக்கொண்டிருந்தனர்.

 

இரண்டாக வெட்டெல்லாம் என்று எண்ணி அதை உடைக்கும் நொடியில் தற்செயலாய் அங்கே வந்த சக்தி, அவர்களைத் தடுத்தாள்.

 

“முள்நாறி பழத்தை இப்படி அறுக்கக் கூடாது” என்ற சக்தியின் வார்த்தை வேளை ஆட்களின் கவனத்தை மட்டுமின்றி விக்ரமின் கவனத்தயும் ஈர்த்தது.

 

Advertisement