Advertisement

மயிலிறகு – 23

 

ஆயிரம் ஆண்டுகள் நிறைந்தும், அகிலமே விந்தை கொள்ளும் அளவு, தனக்குள் அசாத்தியங்களையும், அழகிய சிற்பங்களையும், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பின்பங்களையும், பிரமிக்கவைக்கும் வகையில் ஒரு ராஜ தோரணையுடன் இன்றும் எழுந்து நின்ற அந்த ராஜ கோபுரத்தை கொண்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், தஞ்சைக்கு ஒரு வைர கீரிடம் போல காட்சி அளிக்க, அந்த வைர கிரீடத்தில் பிரத்யேகமாக பதிக்கப்பட வைடூரியத்தை போல ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி சிலை அமைந்திருந்தது….

 

அக்கோவிலின் ராஜகோபுரம், பெயரை போலவே ராஜ மரியாதையுடன் இருந்து வருகிறது… பத்து தலைமுறைகளை கண்ட அந்த ராஜ கோபுரம், எந்த வேளையிலும், எத்திசையிலும், எக்காலத்திலும், எக்கோணத்திலும் ஒரு நொடி கூட அதன் நிழலை, பூமியில் விழவிடாமல், உயர்ந்து நிற்க… அக்கோபுரத்தை மட்டும் அல்லாது, அதனுடைய நிழலையும் யாராலும் நெருங்க இயலாத வகையில் கட்டி இருந்தான்…உலகத்தையே ஓர் குடையில் கட்டி காத்த சோழன்….

 

அத்தனை சிறப்பிமிக்க கோவிலை சுற்றி உள்ள கடைகளில் தான் ஆதவன், தனது காதல் மனைவி கேட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை தேர்வு செய்துக் கொண்டு இருந்தான்….அவளுக்காக பார்த்து, பார்த்து தேர்வு செய்தவைகளை அவன் பெற்றுக் கொண்டு இருக்க, அவனது கவனத்தை ஈர்த்தது, அவனுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஓர் குரல்….

 

அதே நேரம், மகிழனோ கும்பகோணத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தான் அவனது இரு சக்கர வாகனத்தில்…இதழாவிற்காக அவன் சேர்ந்திருந்த, குடந்தை சிலம்பு கற்றுக்கொடுக்கப்படும் இடத்திற்கு…. இதழாவிற்காக அவன் சேர்ந்திருந்தாலும்… இப்போதோ அவனுக்கே அதில் பிடிப்பு வர தொடங்கி இருந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை…

 

அப்போது இடையே ரயில் வருவதற்காய்… போக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்க, சற்று தொலைவில் நிவன் அவனது காரில் இருந்து இறங்கி மற்றொருவனிடம் கத்தையாக பணத்தை தர, அதற்கு பதிலாய் தருவது போல..பணத்த வாங்கி கொண்டவன் கைகளில் இருந்த பாட்டிலை நிவனிடம் தந்தான்…. அதை பார்த்த மகிழன் பிருவங்களில் முடிச்சு விழுந்தது…  வேகமாக, இருந்தப்படியே நிவனுக்கு அழைத்து, விவரம் கேட்க முயல, மகிழனை கண்டுக்கொண்ட நிவனோ… மகிழனை பார்க்காதவாறு…. அழைப்பு சரியாக கிடைக்கவில்லை போல பாவலா காட்டி காரை கிளப்பிக்கொண்டு சென்றான்…

 

மகிழனுக்கு ஏதோ உறுத்தினாலும்…. மகிழன் உடனடியாக நிவனை பின்தொடரவில்லை… ஆதவனிடம் இதை பற்றி அவனை நாளை சந்திக்கும் போதோ அல்லது இரவோ பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன்…. குடந்தையை நோக்கி அவனது பயணத்தை தொடர்ந்திருந்தான்….

 

இங்கு மறுப்புறம் தஞ்சையிலோ, “சார்… நல்லா இருக்கீகளா ? உங்கள இங்கன பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல சாரே” – பணிவுடனும், ஆதவனை எதிர்ப்பார்க்காத பாவனையுடனும் ஒலித்தது சுடலையின் குரல்.

 

“ஹ…. நீ சுடலை தான ?” – ஆதவன் பொதுவாக கேட்க,

 

“ஆமாம் சார்… உங்கள இங்கன பார்த்தது ரொம்ப சந்தோசம்…என் சம்சாரம் வீடு தஞ்சாவூருங்க… அவளோட தான் கோவில் வந்தே..உங்கள பார்த்ததும், அவள அந்த குச்சி ஐசு விக்கிற தள்ளு வண்டிக்கிட்ட நிப்பாட்டிட்டு.. ஒரு வணக்கம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேனுங்க….” என்று சுடலை, ஆதவன் எதுவும் கேட்காமலே, அவன் வந்த விஷயங்களை ஒப்புவித்துக் கொண்டு இருந்தான்…

 

அவன் சொல்வதை ஒரு மென் முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆதவன், மேலும் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு, கிளம்ப எத்தனிக்க, கிளம்பிய ஆதவனை தடுத்தான் சுடலை…

 

“அய்யா… வேணாங்கிற விவரமெல்லாம் சொன்னேன்.. முக்கியமான தாக்கல சொல்லலீங்க பார்த்தீகளா…அதுவந்து, கோதகிரில ஒரு பொண்ண பத்தி கேட்டீங்களா.. அந்த பொண்ணு பெயரு….” என்று அவன் சொல்லிய அந்த தருணம் சரியாக, ஆதவனது கை பேசி அழைக்க, அதை கையில் ஆதவன் எடுக்க, கைபேசியின் திரையில் மிளிர்ந்த புகைப்படத்தில் சுடலையின் பார்வை பதிந்தது….

 

ஆதவனை அப்போது சரியாக அழைத்தது அவனின் இழையாவே…. தன் மனைவியிடம் ஆதவன் ஏதோ கூற, அவளும் சம்மதமாய் பதிலளித்தாள்….

 

அவன் கூறியது யாதெனில், ஆதவன் இழையாவிற்காக வாங்கிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை-யை அவளுக்கும் அவனுக்கும் மனதளவில் நெருக்கமான இடமான அந்த ஆற்றங்கரையில் வைத்து கொடுக்க எண்ணினான்… அதற்காக, அவளிடம் காரணம் சொல்லாமல், அவளை அங்கே மாலை 5 மணிக்கு வர சொல்லி இருக்க, அவளும் சம்மதமாய் கைபேசியை அணைத்தாள்….

 

கை பேசியை அணைத்த இழையினியோ, நேரத்தை பார்க்க…அது 4.15 என்று காட்ட, இன்னும் முக்கால் மணி நேரம் தானே இருக்கிறது… இப்பொழுதே சென்றால் என்ன… அவர் தான் 5 மணிக்கே வந்துவிடுவாரே என்று எண்ணி… கிளம்பி இருந்தாள்….

 

எப்படியும்..தோட்டத்தையும் தோப்பையும் பார்வையிட்டப்படி சென்றால் நிச்சயம் நேரம் 5 நெருங்கிவிடும் என்ற எண்ணம் அவளுக்கு… ஆதவனுக்கோ இப்பொழுது கிளம்பினால் கூட சரியாக 5 மணிக்கு சென்று விடலாம் என்ற எண்ணம்… வீட்டிற்கு செல்லாமல் நேராக, தோப்பின் மறு முனையில் உள்ள தார் சாலை வழி சென்றால், சீக்கிரமே ஆற்றங்கரையை  அடைந்து விடலாம் என்று அவன் எண்ணி இருந்தான்….

 

மனைவியிடம், காரணம் சொல்லாது, ஓரிரு வார்த்தைகளில் அங்கே வருமாறு கூறிவிட்டு, ஆதவன் கைபேசி அணைக்க, அவனுக்கு இப்பொழுதே அந்த பொம்மையை அவள் கையில் கொடுத்து, அவள் அதை ரசிக்கும் நொடியை காண ஆவல் எழ…அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவனை மீண்டும் சுடலை அழைத்தான்…

 

“சார்… அந்த பொண்ணு பேறு தான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்… நீங்க கிளம்புன பிறகு தான்… அவனிக்கா மேடம் சொன்னங்க…அந்த பொண்ண எப்படி சார் உங்களுக்கு….” என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க, ஆதவன் சாதரணமாக, “அவள் என் மனைவி….” என்று கூற….சுடலையோ, “சார்..அந்த பொண்ண கல்யாணம்….” என்று ஆரம்பித்து, ஆதவன் பார்வையில், “மேடத்தை கல்யாணம் பண்ணிக்கிடீங்களா? அட்ரா சக்க…அது தான் உங்க தம்பி இழையினி மேடத்தை என்கிட்ட காட்டி தகவல் சேகரிக்க சொன்னாரா… அது தான் சங்கதியா… அன்னைக்கு உங்க தம்பி வந்து என்கிட்ட ஒரு பொண்ண பற்றி தகவல் கேட்கவும், நான் முதல்ல அவனிக்கா மேடம்னு நினச்சே… ஆனா அவரு தான் அவனிக்கா மேடம் இல்ல… இவுங்க தான்னு, பிறகு தெளிவா காமிச்சு இழையினி மேடத்தை பத்தி உங்ககிட்ட வந்து சொல்ல சொன்னாரு….. தூள் ஜோடி சார்….

 

உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்… நான் கிளம்புறேன்… ” என்று கூறி சுடலை, பணிவுடன் உத்தரவு வாங்கிக் கொண்டு செல்ல, ஆதவனுக்கு சுடலை சொன்ன வார்த்தைகள் ரீங்காரம் இட தொடங்கின.

 

அவன் தனது நான்கு சக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு செல்ல, அந்த பயணத்தில் அவனது சிந்தனை முழுவதும் நிவனை பற்றியே இருந்தது….

 

“நிவன்-க்கு இழையினிய தெரிந்திருக்கு…. தெரிந்திருந்தும் ஏன் என்கிட்ட அவனிக்காவை காட்டணும் ?

 

அவனிக்காவை ஒரு முறை காட்டி இருந்தால் கூட, பிழையாக செய்துவிட்டான் என்று சொல்லலாம்… ஆனால் அன்று அறைக்கே அவனிக்காவை அழைத்துவந்தது ஏன்…. ? இழையினி தான், நான் தேடி அலைந்த பெண் என்று தெரிந்தும் நிவன் மறைத்தானா?

 

இதற்கு பின் என்ன இருக்கிறது ? ” இவ்வாறாக அவனது மனதில் கேள்விகள் எழும்பிக் கொண்டு இருந்தது….

 

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, ஆதவன் சுடலையுடன் பேசிக்கொண்டு இருந்த அதே நேரம்… அத்தியூர் அரண்மனையின் வாசலில் லேசானா தள்ளாட்டத்துடன், தள்ளாடியபடி, நழுவி விழுந்து விடுமோ என்று இருந்த வேட்டியை, இடுப்பில் இறுக கட்ட முயன்றப்படி நடந்து வந்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்….

 

“டே… யாருடா.. அங்க.. கதவ தொரங்கடா…” குளறுப்பிடியான குரலில் மாணிக்கம் கூற, வெளியில் வந்த பன்ணை ஆட்கள், அவனை ஓரங்கட்ட முயல, மாணிக்கம் இழையினியின் பெயரை கூற, அவர்கள் மரியாதையுடன் அவனை உள்ளே செல்ல அனுமதித்தனர்….

 

மாணிக்கம் நடக்க இயலாமல், தள்ளாட்டத்துடன் மெது மெதுவாக முன்னேற, அதற்குள் இழையினி… பாட்டியிடம் சொல்லிவிட்டு ஆற்றங்கரைக்கு செல்வதற்காய், வரப்பில் ஒத்தையடி பாதையில் நடக்க தொடங்கியிருந்தாள்…..

 

அப்படியே தள்ளாட்டத்துடன் வந்தவன், வேலை பார்த்துக் கொண்டு இருந்த மாறனிடம், இழையினியை அழைத்து வருமாறு கூற, ஒரு முக சுழிப்புடன்…. உள்ளே சென்ற மாறன், மாணிக்கத்திடம், “சின்ன அம்மா.. தோப்புக்கு போய் இருக்காங்க.. நீங்க போய்ட்டு புரவு வாங்க… இங்கன யாரும் தண்ணி போட்டு வீடுக்குள்ளார வர கூடாது… ஆதவன் அய்யா கண்டிப்பா உத்தரவு போற்றுக்காக… பன்ணைல வேலை பார்க்குறவங்க கூட  தண்ணி போட்டு வர கூடாது.. போங்க சாமி… ” என்று கூறி மாறன் புண்ணாக்கை எடுத்துக்கொண்டு குடுதாழி பக்கமாக செல்ல, மாணிக்கம்… வீட்டை சுற்றி வந்து… கண்ணுக்கு தெரிந்த ஒற்றையடி பாதையில், தடுமாற்றத்துடன் நடந்து சென்றான்….

 

அவன் நடையில் தள்ளாட்டம் இருந்தாலும், அவனது விழிகளில் சோர்வு இல்லை… மாறாக, கண்களில் சிவப்பு ஏறி இருந்தது… அந்த சிவப்பு குடி வெறியில் ஏறி இருந்ததா அல்லது இழையினியை பழிவாங்கும் எண்ணத்தில் சிவந்திருந்ததா என்று விதி மட்டுமே அறிந்த ஒன்று….

 

ஆதவன் பல குழப்பங்களுடன் காரை இயக்கி கொண்டு வர, இங்கு இழையினியோ ஆற்றங்கரை நோக்கி பயணிக்க, தூரத்தில் இழையினி ஒற்றையாக செல்லவதை பார்த்த மாணிக்கமோ அவளை நெருங்க, அதே பாதையில் சென்று கொண்டிருந்தான்….

 

இவ்வாறாக ஒரு புறம் இருக்க, நிவன் அவனது அறையில் இருந்து சிறு தள்ளாட்டத்துடன், மதுவின் நெடி அந்த வீடெங்கும் பரவ…. கால்கள் பின்ன, தட்டு தடுமாறி முற்றத்திற்கு வர, அவனின் நிலையை பார்த்த பார்வதி பாட்டியும், வேதா அம்மாளும் ஒரு சேர அதிர்ந்தனர்…..

 

“டே இளா.. என்னடா என்ன காரியம் பண்ணி இருக்க.. இந்த வீட்டுல யாருக்குமே இல்லாத பழக்கம் உனக்கு எப்படி டா வந்துச்சு….” – பரிதவிப்புடன் ஒலித்தது வேதா அம்மாளின் குரல்…..

 

“இளையவனே ஏன் டா இப்படி பண்ணிட்டு வந்த..உங்க அண்ணா பன்ணை காரவங்களையே சாராய குடிச்சா சேர்க்க மாட்டான்… நீ… ஏன்யா இப்படி ஒரு காரியம் பண்ணின…” – ஆதங்கத்துடன் ஒலித்தது பார்வதி பாட்டியின் குரல்….

 

“ஏன் டா.. நானும் உன் பாட்டியும் இப்படி காட்டு கத்து கத்துறோம்…செவுடே காதுல சங்கு ஊதுனமாதிரி, அசையாமா குத்துக்கல்லாட்டம் நிக்குறியே… உன்ன என்ன பண்ணினா தகும்….

 

எப்போ நீ இப்படி ஒரு அசிங்கம் பண்ணி, உன் அப்பாக்கும் அண்ணாக்கும் அசிங்கத்த உண்டு பண்ணிட்டியே டா….” என்று வேதா அம்மாள் ஒப்பாரியை தொடங்க… அது எதுவும் தன்னை பாதிக்காது என்ற வகையில் அவன் நின்று கொண்டு இருந்தான்….

 

மகன் செய்த செயலை நினைத்து கண்ணீர் வடித்தவரின் குரலில் அவன் இன்னமும் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தவர், கோவத்தின் உச்சிக்கு சென்றார்….

 

இளநிவன் அனைவருக்கும் செல்லம்… அவனை ஒருமுறை கூட இவ்வீட்டில் யாரும் கை நீட்டி அடித்திடாமல் இருக்க, இன்றோ அவன் இருக்கும் நிலையை பார்த்த வேதா அம்மாளோ, பெத்த மனது தாளாது, அவனை கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட, அந்த அரையின் சப்தத்தில் பார்வதி பாட்டியே ஒரு நொடி அதிர்ந்து தான் போனார்..

 

“யே வேதா.. புள்ளைய அடிக்காத.. என்ன காரியம் பண்ற… ” என்று இப்போது அவர் மருமகளை அதட்ட, வேதா அம்மாளோ அதை கேட்கும் நிலையில் இல்லாமல் விடு விடுவென அடுக்களைக்குள் சென்றவர், குடத்தை எடுத்துக்கொண்டு வர , நிவனின் மீது தண்ணீரை எடுத்து ஊற்ற முயல, அடி வாங்கியதில் ரௌத்திரம் கொண்டிருந்த நிவன், இப்போது அவனின் அன்னை அவன் மீது தண்ணீர் ஊற்ற முனைவதை பார்த்து, குடி வெறியில், “யே… என்ன பண்ண போற.. தள்ளி போ…” என்று பன்மையை கைவிட்டு, மரியாதை இல்லாத சொல்லில் அவனது அன்னையை கூறியப்படி…தள்ளி விட, அவர் கொண்டு வந்திருந்த குடம் ஒருபுறமும்….அவர் ஒரு புறமும் சரிய… வேதா அம்மாள் நிலை குலைந்தப்படி தடுமாறி விழுந்தார்….

 

விழுந்தவரை அலட்சியம் நிறைந்த ஒரு பார்வை பார்த்த நிவன்… “என்ன சும்மா குதிக்கிறீங்க… இப்ப… என்ன ஊர்ல உலகத்துல இல்லாதத பண்ணிட்டேன்னு தய்ய தக்கானு ஆடுறீங்க… ” என்று வேதா அம்மாவை பார்த்து கூறியவன், பார்வதி பாட்டியை பார்த்து, “ஏ கெளவி உன் மருமக ட்ட சொல்லி வை….” என்று கூற, நிலை குலைந்து அமர்ந்திருந்த வேதா அம்மாளோ, மாமியாரை சொன்னதும், விருட்டென்று எழுந்தவர், நிவனை நெருங்கி பளார் பளார் என்று ஆத்திரம் தீரும் மட்டும் அடிக்க, ஒரு நிலைக்கு மேல் பொறுக்காத நிவனோ போதையில், அடித்துக் கொண்டு இருந்த வேதா அம்மாளின் கையை தடுத்தது மட்டும் அல்லாது, அவரை அடிக்க கையும் ஓங்கவும்…. வேதா அம்மா, பாட்டி என இருவரும் அதிர்ச்சியும் உச்சத்திற்கு சென்றனர்…..

 

பேரனின் மறுமுகத்தை பார்த்த பார்வதி பாட்டிக்கு உலகம் தலை கீழாக சுழல, வேதா அம்மாள், நின்ற இடத்தில் நின்றப்படியே நிற்க, சட்டை செய்யாமல்,தள்ளாட்ட நடையுடன் நிவன் வெளியே சென்றான்.

இளநிவன்… இத்தனை நாள் இந்த வீட்டின் கடை குட்டியாய் இருந்த இவன்…எப்படி இந்த ஒரு நாளில் மாறினான் என்று பார்வதி பாட்டியால் நம்பவே முடியவில்லை. அது ஒரு அதிர்ச்சி என்றால், பெற்றவளை அடிக்க கை ஓங்கியது… இதுவரை பார்வதி பாட்டி கனவிலும் நினைத்து  பார்க்காத ஒன்று…

 

புலம்பியப்படியே…. மருமகளை பார்க்க, அங்கே வேதா அம்மாள் நின்ற இடத்திலேயே மயங்கி சரிந்திருந்தார்…..

 

மறுபுறமோ, ஆதவன் மனதில் நிவன், இழையினியை மாற்றி, அவனிக்காவை காண்பிக்க காரணம் என்ன.. இது தற்செயலா… என்ற யோசனையுடனே தஞ்சையிலிருந்து அத்தியூர் நுழைய, இழையினியை ஆற்றங்கரையில் காத்திருக்க சொன்னது நினைவு வர, வீட்டிற்கு செல்லாமல், நேரே தோப்பின் மறுப்பக்கம் செல்லும் சாலை வழி காரை ஒட்டி சென்றான்…

 

தோப்பின் மறுப்புறம் சென்றவன், இருந்த குழப்பத்தின் விளைவாய், வாங்கி வந்த பொம்மையை கூட எடுக்காது, தோப்பினுள்ளே சென்றவன், சிறிது தூரம் உள்ளே நடந்தவுடனே கண்டுக்கொண்டான்… ஆற்றங்கரையில் இழையினி இல்லை என்பதை… மேலும் சிறிது தூரம் முன்னேறி பார்க்க, அங்கு இழையினி இல்லை என்பதை புரிந்துக்கொண்ட ஆதவன், வேகமாக, அருகே இருந்த குடிசையில் பார்க்க, அங்கும் அவளை காணாது போக… ஒரு வேலை இழையினி இன்னும் வரவில்லையோ…என்று எண்ணியவன் நேரத்தை பார்க்க, 5.15 என்று அது காட்டியது… ஒருவேலை, அவள் இவ்விடத்தை நோக்கி தான் வந்துக் கொண்டு இருக்காளோ… என்று எண்ணியவன்… கார் இருந்த பக்கம் போகாமல், தோப்பின் வழி வீட்டிற்கு செல்லும் வரப்பில் இழையினியை அவ்வழியில் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையுடன் பார்வையை சுழலவிட்டப்படி நடந்தான் ஆதவன்….

 

ஆனால் அவனது வீடே வந்துவிட்ட நிலையிலும், இழையினியை வழி முழுவதும் பார்க்க முடியாதது அவனுக்கு ஏனோ ஒரு உறுத்தல் உருவானது….. ஆதலால் வேகமாக, அவன் வீட்டிற்குள் நுழைய, அங்கிருந்த சூழலை பார்த்த ஆதவன் திகைப்பின் உச்சிக்கு சென்றான்….

 

பன்னை ஆட்கள் குழுமி இருக்க, பார்வதி பாட்டி ஒரு புறம் கலங்கி இருக்க, ருத்தரனும், ராஜ சக்கரவர்த்தியும் இடிந்து போய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டு இருந்தனர்….

 

என்ன வீட்டில் நடக்கிறது என்று ஆதவன் சுதாரிக்கும் முன்னரே, வேதா அம்மாவின் அறையில் இருந்து வெளி வந்த மருத்துவரை பார்த்த ஆதவன் கதிகலங்கி போனான்…..

 

மருத்துவரை பார்த்த ஆதவன், அவரிடம் விரைந்து சென்று விசாரிக்க, அவரோ, வேதா அம்மாளுக்கு ஏதோ அதிர்ச்சி என்றும், அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்றும், அவருக்கு இன்னமும் சுயநினைவு வராமல் ஆதவனது பெயரையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறிவிட்டு, அவரிடம் மேற்கொண்டு எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியையும் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தி செல்ல, ஆதவனோ நிகழ்ந்தவைகளை பார்வதி பாட்டியின் மூலமாய் அறிந்துக் கொண்டான்…

 

ருத்ரனும், ராஜ சக்கரவர்த்தியும் சம்பவம் நிகழ்ந்த போது இல்லாது, ஆதவன் வருவதற்கு 10 நிமிடங்கள் முன் வந்ததாகவே கூறியவர், பாட்டியின் அழுகுரல் கேட்டு, மாறன் தான் விரைந்து சென்று அருகிலிருந்த மருத்துவரை கூட்டி வந்ததாகுவும் கூறினார்… மேலும் சில நேரம், நிவனின் மாற்றத்தை பற்றி புலம்ப, ஆதவன், வேதா அம்மாளின் அறைக்குள் விரைந்தான்….

 

படுக்கையில் கிடந்த வேதா அம்மாளை பார்த்த ஆதவனின் கண்கள் தானாக கலங்க, அவரது கைகளை எடுத்து தனது கைக்குள் வைத்துக்கொள்ள, மீண்டும் வேதா அம்மாள், ஆதவனது பெயரை, மிகவும் பலவீனமான குரலில் உச்சரிக்க தொடங்கினார்….

 

திடுமென நினைவு வந்தவனாக, “பாட்டி… அம்மா பக்கத்துல ஏன் யாருமே இல்ல.. ? இழையா எங்க ?” என்று கேட்க, அப்போது தான் நினைவு வந்தவராக, “ஏப்பா ஆதவா.. இழையினி உன்ன பார்க்க போரதாதான் தோப்புக்கு போச்சு பா.. கொள்ளநேரமாகியும் போன புள்ளைய காணோமே…நானும் இங்கன நடந்த கலவரத்துல, அதை மறந்தே போய்டேன் பா… கொள்ள நேரம் ஆச்சு பா… இன்னும் காணலியே… ” என்று நெஞ்சு படபடக்க, அந்த மூதாட்டி… இப்போது இழையினிக்காக புலம்ப ஆரம்பித்தார்…..

 

அவர் கூறியதை கேட்ட ஆதவனுக்கு, ஏதோ சரி இல்லை என்று தோன்ற, வேகமாக பன்ணை ஆட்களை விட்டு காடு கழனி எல்லாம் தேட சொல்ல, அவனும் மாடியில் அவர்களது அறைக்கு செல்ல, அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது…

 

தேடி சென்றவர்களும், இழையினியை காணவில்லை என்று வந்து சொல்ல, தாய் ஒருபுறம் படுக்கையிலும், தாரம் சென்ற திசை அறியாமலும் தடுமாறி போனான் ஆதவன்… குழம்பியநிலையில் ஆதவன் நின்றது சில நிமிடங்களே… அடுத்தது வேகமாக அவனது மூளை செயல் பட தொடங்க, வேகமாக மாறனை அழைத்த ஆதவன், “மாறா… இழையினி எப்ப புறப்பட்டாள்-னு பார்த்தியா.. ? இன்னைக்கு வித்தியாசமா ஏதாவது நடந்ததா… ” என்று கூர்மையான பார்வையை செழுத்தியப்படி ஆதாவன் கேட்க, மாறனோ தயங்கி தயங்கி, “அய்யா… ஒரு 4.30 போல இருக்கும்னு நினைக்கிறே…சரியா தெரியலைங்க… புரவு இன்னைக்கு.. ஒருத்தரு… சின்ன அம்மாவோட மாமான்னு வந்தாருங்க… நிறைய சாராயம் வேற.. தள்ளாடிக்கிட்டே தான் வந்தாரு… சின்ன அம்மாவ கூப்பிட சொல்லி… அப்போ சின்ன அம்மா தோப்பு க்கு போய்டாங்கன்னு வீட்ல சொல்லவும், அதை சொல்லி அவர வெளில் போக சொல்லிட்டு.. நான் சோலிய பார்க்க போயிட்டேனுங்க… ” என்று தலையில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து, கையில் மரியாதையாக வைத்தப்படி மாறன் கூற, ஆதவன் மனதிற்குள், “மாணிக்கமோ…” என்று கூறிக்கொண்டான்….

 

அங்கு இங்கு என்று தெரிந்த இடம் முழுவதும் சல்லடை போட்டும், இழையினியின் முகவரி தெரியாமல் போகவே… தலை முடியை அழுந்த கோதியப்படி, வருத்தம் தோய்ந்த கண்களுடன்… வருத்தம் இழையோடி இருந்தாலும், மனைவியை கண்டு பிடித்துவிடுவேன் என்ற வைராக்கியம் நிறைந்த உறுதியுடன்…. கொட்டாரத்தின் கீழ் நடந்தவன், திடுமென யோசித்தவனாக… ஒரு டார்ச்சை எடுத்துக்கொண்டு தோப்பிற்கு சென்றான்….

 

புறப்படும் முன்பாக, செவ்வந்தியை அழைத்து, வேதா அம்மாளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ளும் படி கூறியவன்… அவசரம் என்றால், தன்னை கைபேசியில் அலைக்கும் படி சொல்லி சென்றான்…

 

அப்போது முன் இரவு தொடங்கி, நேரம்காட்டி இரவு ஏழு என்று காட்ட, ஆதவன், அவனது நீண்ட வலிய கால்களினால் வேகமாக நடக்க தொடங்கியவன், ஓட்டமும் நடையுமாக…. ஆற்றங்கரையை அடைந்திருந்தான்…

 

இருள் கவிழ்ந்திருந்த போதிலும், அந்த குடிசையில் இருந்த குழல்விளக்கு சற்று தூரம் வரை வெளிச்சத்தை பரப்ப, அவன் கையில் வைத்திருந்த உயிர் ரக டார்ச்சும், முடிந்த அளவு கூடுதல் வெளுச்சத்தை தந்துக்கொண்டு இருந்தது….

 

இவை பற்றாது என, இயற்கையும் ஆதவனுக்கு உதவி செய்ய நினைத்ததோ… அன்று முழு பௌர்ணமி வேறு… மரகிளைகளின் ஊடேயும், தென்னபாலையின் ஊடேவும் நிலவின் வெளுச்சம் பரவி படர்ந்து, கிட்ட தட்ட பகல் போல அந்த முன்னிரவு வேலையை அடித்துக்கொண்டு இருந்தது…..

 

வேகமாக, டார்ச்சை ஒவ்வொரு திசைக்கும், ஒவ்வொரு இடத்திற்கும் மாற்றி மாற்றி காண்பித்து, ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று தேடிய ஆதவன்… அன்று ஆற்றங்கரை அருகில் இருந்த, அந்த சாயிந்த தென்ன மரத்தின் பக்கமாக, டார்ச்சை அடிக்க, அங்கே ஆதவனது கண்கள் கண்டது இழையினியின் காலனியை….

 

அதை பார்த்தவன், வேகமாக.. அந்த இடத்திற்கு முன்னேறி பார்க்க, அது அவனுடைய மனைவியின் காலணிதான் என்று தெளிவுற தெரிந்துக் கொண்டான்…

 

அத்தினத்தின் அன்றைய நண்பகில், மழை கொட்டி தீர்த்திருக்க, காடு, கழனி, தோப்பு என்று அனைத்தும் ஈரமணலாகவும், சேறாகவும் இருக்க, இழையினியின் காலனி முழுக்க சகுதியாக இருந்ததை கண்டுக்கொண்டான் ஆதவன்….

 

அவள் காலனியில் ஒற்றி இருந்த சகதியை பார்த்தவன் நெஞ்சம், கோத்தகிரி சென்றது… அன்றும் அப்படி தான்.. முதன்முதலில், அவள் பாதத்தை ஈரமான சதுப்பு நிலத்தில் தான் அவன் பார்த்தான்… அதை ஒரு நொடி யோசித்தவன் மனதில் திடிரென ஒரு யோசனை உருவானது….

 

அவன் மனமோ, “இழையினி இங்க கண்டிப்பா எனக்காக வந்திருக்கா.. ஆனா அதுக்கு பிறகு எங்க போயிருப்பா… அப்படியே போய் இருந்தாலும், செப்பல கூட மறந்து விட்டு போரப்படி என்ன நடந்திருக்கும்?

 

எது நடந்திருந்தாலும், நிச்சயமா நல்லதா எதவும் நடக்கல… இப்ப அவள கண்டுப்பிடிக்க ஒரே வழி, அவள் இந்த செப்பல போடாம போனத வச்சு மட்டும் தான் இருக்கு….

 

இழையா..இங்க இருந்து எந்த திசைல போயிருப்பா… ஒருவேள அவ நடந்து போயிருந்தா என்னால நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்… அவளோட கால் தடம்…

 

இந்த இருட்டுல எப்படி அவ கால் தடம் தெளிவா தெரியும் ?

ஆனா இப்பவே நம்ம முயற்சி பண்ணி பார்க்கணும்.. இல்லனா நிச்சயம் இந்த தடம் நாளைக்கு இருக்காது…

 

இன்னைக்கு ராத்திரி ஒரு மழை வந்தாலும் போதும்… எந்த கால் தடத்தையும் என்னால பார்க்க முடியாது….” என்று எண்ணியது…

 

வேகமாக, டார்ச்சை நாலாபுறமும் நிலத்தில் காண்பித்து தேட, அவனது மனதில் நம்பிக்கையும் வேகமும் துளிர் விட ஆரம்பித்தது…

 

காரணம்… தேங்காய்களை இறக்கிவிட்டிருந்தப்படியால், தென்னன் தோப்பில் இரண்டு நாட்களாக ஊழியம் பார்க்க யாரும் வரவில்லை… அதனால் தான், ஆதவனே, மனைவியை அங்கே அழைத்திருந்தான்….

 

ஆதலால்… ஓரிரு காலடி தடம் மட்டுமே ஆங்காங்கே தெரிய, பாதத்தையும்.. காலடி தடத்தையும் மனதில் பத்தித்து காதல் வளர்த்த ஆதவனுக்கு, தனது மனைவியின் காலடி தடத்தை கண்டறிவதில் பெரிதாக சிரமம் ஏற்படவில்லை… அதை பார்த்தவன் மனதில் இத்தனை நேரம் துளிர்த்திருந்த ஒருவித பயம் லேசாக குறைவது போல தோன்றி நிம்மதி பெரு மூச்சு விட்டான்….

 

ஆதவன் அறிவான்….அவனுக்கு இழையினி மீது எத்தனை நேசம் உண்டு என்று… அவள் தான் அவளின் சரி பாதி என்று…அவள் இல்லையென்றால் அவனுக்கு திருமண வாழ்க்கை என்று ஒன்று இல்லை என்று….

 

ஆனால் அவன் அறியாத ஒன்றை, இன்று இழையினி எங்கே சென்றால் என்று தெரியாத நொடியில், அவளை பற்றி விவரங்கள் கிடைக்காத நொடியில் உணர்ந்திருந்தான்….

 

அது… இழையினி மீது அவன் வைத்திருப்பது நேசம் இல்லை… அவனது உயிரை… அவள், அவனின் சரிபாதி இல்லை… அவனின் முழுமையே இழையினி தான் என்று…  அவள் இல்லை என்றால் திருமண வாழ்க்கை இல்லை என்று எண்ணியது பொய்த்து போவது போல.. அவனுக்கு வாழ்க்கையே இல்லையோ என்று தோன்றியது….

 

அந்த கணம்… யாருக்கும் அஞ்சாத, அந்த ஆண்மகன் நெஞ்சிலும் லேசாக பயம் உருவாக தான் செய்தது… ஆனால் அந்த பயம், அவள் கால் தடத்தை கண்டுக்கொண்ட அடுத்த நொடி, மறைந்தது….

 

டார்ச்சை, அந்த காலடி பயணித்த, திசையில் செலுத்தியவன்… அந்த கால் தடத்தை தொடர்ந்து சென்றான்… ஆனால் அவளின் கால்தடத்தின் அருகே, மற்றொரு கால் தடமும் இருக்க, அதையும் கவனத்தில் கொண்டு அவன் காலடிகளை தொடர்ந்தான்…

 

Advertisement