Advertisement

முகிழ் –  27

 

“ஆஷிக்” என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.

 

அந்த அழைப்பை ஏற்று தனது கைபேசியின் ஒலிபெருக்கியை அழுத்தியவன் அகிலனும் சினேகனின் உரையாடலை கேட்க்கும் படி செய்தான்.

 

“ஆதி சார், நான் சொன்னேன்லா… மதி பிளான் பண்ணி அந்த விஜயோட இன்னும் ஒரு நம்பர் கண்டுபிடிச்சத, அந்த நம்பர் ல இருந்து ஒரே ஒருத்தர்க்கு மட்டுமே அழைப்பு போய் இருக்கு, வந்தும் இருக்கு… அந்த எண்க்கு சொந்தகாரனோட பெயர பதிவு ஆகி இருக்குறது ‘ஆஷிக்’, இத நான் மதிகிட்ட சொல்லிட்டேன்… இப்ப உங்ககிட்டையும்… சரி சார் ரொம்ப லேட் ஆகிடுச்சு, மதிபின்னாடி தான் நான் வந்துட்டு இருக்கேன்… மதி உங்க வாசல் ல என்ட்டர் ஆனதும் நான் கிளம்புறேன்…” என்று கூறி கைபேசியை அணைக்க அது கீ கீ என்ற சப்தத்துடன் துண்டிக்க பட்டது. 

 

உடனே அகிலன், “டே, நீ முன்னாடியே ஆஷிக் தான்னு உறுதியா சொல்லிட்ட… ஆனா மதி இப்ப தான் கண்டு பிடிச்சிருக்கா, மதி என்ன பண்ணினா…? இது நடக்கும் முன்னாடியே நீ சொல்வதற்கு காரணம் என்ன ஆஷிக் பெயர?” என்ற கேள்வியோடு அகிலன் முடிக்க அதற்கு பதில் சொல்லும் கடமை ஆதித்யனுக்கு இப்பொழுது வந்தது.

 

மதி, விஜயின் எண்னை கண்டு பிடித்த விதத்தை சினேகனின் மூலமாய் அறிந்திருந்த ஆதித்யன் அதை அகிலனிடம் கூற அகிலன் வாய் விட்டு, “ப்ரில்லியன்ட்” என்று கூறி, மேலும் கூறு மாறு ஊக்குவித்தான்.

 

அதன் பின் ஆதித்யன் 2 நாட்கள் முன்னதாய் நடந்த சம்பவத்தை சொல்ல தொடங்கினான். அதாவது, ஆஷிக் தான் என்பதை எப்படி உறுதி செய்தான் என்னும் விளக்கத்தை.

 

‘அன்று விஜய், மதி மற்றும் சிநேகனின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்ற பிறகு அவன் வருவான் என்ற யூகத்தில் அதன் மறு திசையில் வண்டியை செலுத்தி சென்ற ஆதித்யன் எண்ணம் பொய்க்காமல் ஆதித்யன் வந்த வழியே விஜய் ஓடி வந்துக்கொண்டு இருந்தான்.

 

அதை பார்த்த ஆத்தித்யன் சிந்தனை வெகுவேகமாய் செயல் பட தொடங்கியது. அவனது கைபேசியை எடுத்து சைலென்ட் மோடில் போட்டவன் விஜய் வண்டியின் குறுக்கே வந்து லிப்ட் கேட்கவும் வண்டியை நிறுத்த அதில் ஏறிக்கொண்டான். ஆதித்யனுக்கு நன்றி தெரிவித்து விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடுமாறு வேண்ட ஆதித்யனும் பெருந்தன்மையுடன் வண்டியை இயக்கினான்.

 

ஆதித்யன் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுதே வண்டியை இயக்கி கொண்டு குனிந்து ஏதோ தேடுவது போல வண்டியை மெதுவாக ஓட்ட, அவசரத்திலிருந்த விஜய் பொறுமை இழந்து, “சார்… ப்ளீஸ் கொஞ்சம் பாஸ்டா போறீங்களா?” என்று கேட்க அதை பொருட்படுத்தாமல் ஆதித்யன் எதையோ தேடிக்கொண்டே இருக்க, மீண்டும் விஜய் கேட்க சரியாக ஆதித்யன் மதி மற்றும் சிநேகன் இருக்கும் பகுதியில் அவர்களுக்கு தெரியாதவாறு சற்று எட்ட நிப்பாட்டி விட்டு எதையோ தேட தொடங்க விஜய் பொறுமை இழந்தான்.

 

மதியை தெரிந்துவைத்திருந்த விஜய ராஜசேகரன் பாவம் அவளின் கணவனான ஆதித்யனை அறியாமல் போனது.

 

ஆதியின் செய்கையால் சற்று தள்ளி நிற்கும் மதியின் கண்களில் பட்டுவிடுவோமோ என்று அஞ்சியவன் பொறுமை இழந்து மீண்டும் ஆதித்யனிடம் கேட்க, அவனோ தனது கைபேசியை காணவில்லை என்று கூறினான். உடனே யோசிக்காது விஜய் அவனிடம் இருந்த கைபேசியை கொடுக்க அதிலிருந்து தனது எண்னுக்கு ஒரு அழைப்பு விடுத்தவன் வண்டியை வளைத்துக்கொண்டே விஜயின் கைபேசியில் ‘ப்ளைட் மோட்’ போட்டு விட்டு அதை எடுக்கவும் சற்று நேரம் விஜயின் கைபேசியில் ‘சிக்னல்’ இல்லாமல் போகவே வளைத்துக்கொண்டு இருந்த வண்டியை மறுபடியும் நிறுத்தியவன் விஜயிடம் காட்டி, “இதோ பாருங்க… உங்க மொபைல டவர் இல்ல… இருங்க நான் என் மொபைல் தேடிக்கிறேன்” என்று கூறிவிட்டு மீண்டும் ஆதித்யன் தேட முற்பட இப்போது அந்த கார் நிற்பது மதியின் கண்களுக்கு தெரிய வாய்ப்பு இருந்ததால் பதறிய விஜய் வேகமாக அவனது இன்னொரு கைபேசியையும் குடுத்து அதில் முயற்சிக்குமாறு கூறினான்.

 

ஆதித்யனின் திட்டம் பலிக்கவே அதிலிருந்து ஆதித்யன் அவனது எண்க்கு ஒரு அழைப்பு விடுத்துவிட்டு ஒரு பொய்யான பாவனையுடன் கைபேசி கிடைக்கவில்லை பிறகு தேடி கொள்ளவதாக கூறி அவனிடம் கொடுத்துவிட்டு அவன் கூறிய இடத்தில் விஜயை இறக்கி விட்டு, மீண்டும் மதி மற்றும் சினேகனை சந்திக்க சென்றான் மதியின் நாயகன்’

 

இந்த சம்பவங்களை அறிந்துக்கொண்ட அகிலனோ ஆதித்யனிடம், “நீ ஏன் அவன விட்டுட? அந்த விஜய் பிடிச்சிருந்தா இன்னும் நிறைய விஷயம் தெருஞ்சுருக்கும்…. அதோட இதுக்கும் நீ ஆஷிக் னு கன்பார்ம் பண்ணினதுக்கும் என்ன சம்பத்தம், நீ நம்பர் எடுத்துட்ட பிறகும் ஏன் மதியை கண்டு பிடிக்க வச்ச? நீயே கொடுத்துருகலாம்லா?” என்று கேள்விகளை கேட்டவன் ஆதித்யன் பதில் சொல்லும் முன் அவனே மீண்டும் தொடங்கி, “டே மச்சான்… ஐ காட் இட்… பொறு நீ பண்ணினதுக்கான காரணத்த நானே சொல்லுறேன்” என்று கூறியவன் அதை விளக்க ஆரம்பித்தான்.

 

“நீ அந்த விஜய விட்டதுக்கு காரணம் அவன சுதந்திரமா விட்டு, பிறகு அவன பிடிக்கலாம்னு…. ஆஷிக்னு சொல்றது அந்த விஜய்யோட இன்னும் ஒரு நம்பர் இருந்து, ஆஷிக் தான் விஜய தொடர்பு செய்ற ஒரே ஆள், அதோட பழனி வேல் கூடவும் ஆஷிக்கு ஏதோ சம்மந்தம் இருக்கு… இந்த காரணங்களால நீ ஆஷிக்க கார்னர் பண்ற… சரிதான? … அப்புறம் இன்னும் ஒரு விஷயம் உளவாளிகள் 2 பெயர்… தண்டாயுதபாணிய அனுப்பினது பழனிவேல்னா, பழனிவேல் கூட தொடர்புல இருக்குறது ஆஷிக், அதே போல வீரமாறன அனுப்பினது விஜய்னா, இங்கயும் அகெயின் விஜய் ஆஷிக் லிங்க்…. சோ இது எல்லாம் சேர்த்து தான் உன்னால ஆஷிக்க ட்ரேஸ் பண்ண முடுஞ்சுருக்கு சரி தானே?” என்று கூறி கேள்வியாக முடித்தான் ஆதித்யனின் நண்பன்.

 

“பெர்பெக்ட்” என்று கூறி நண்பனுக்கு ஒரு சபாஷ் சொல்லிய ஆதித்யனை அடுத்த கேள்வி கேட்டான் அகிலன்.

 

“இது எல்லாம் ஓக்கேடா… பட் உனக்கு டீடைல்ஸ் தெருஞ்ச பிறகும் நீ ஏன் மதிகிட்ட சொல்லாம இருந்த?” என்று கேட்க ஆதித்யனோ சிறு புன்னைகையுடன், “ஏன்னா, நான் கண்டுபிடிகிறது யாருன்னு தெரியாத எதிரிகிட்ட இருந்து என் மதியை காப்பத்ததான்… மதியுடைய வேலையை குறைக்க இல்ல.. எனக்கு தெரியும்டா… அவள பத்தி, அவனாள நிச்சயம் ரீச் பண்ணமுடியும்… அவ ஒரு ஒரு இழையா சேகரிச்சு… வலை பின்னி இருக்கா… அவளுக்கு அலமேலு மேல சந்தேகம் வரல கவனுச்சியா? , அவ ஒரு ட்ராக் ல போயிட்டு இருக்கா… அது சரியான பாதையாவும் இருக்கு… அதுனால தான் அவ திறமை மேல இருந்த நம்பிக்கைல தான் எதுவும் அவகிட்ட சொல்லல…” என்று கூறி புன்னைகைத்தான்.

 

நண்பனின் பதிலை கேட்ட அகிலன், “ஹ்ம்ம்ம்ம் இந்த காதல் வந்தா எல்லா பசங்களும் நிலா வானம் நக்ஷத்திரம் பூனு சுத்துவாங்க… நீ என்ன டா வித்தியாசமா கேஸ், 48 பேரு, அலமேலு பழனிவேல் ஆஷிக் னு சுத்துற” என்று கூறி நண்பனை கேலி செய்தவன் ஆதித்யனின் முறைப்பில் சிரிப்பை வாய்க்குள் அடக்கினான்.

 

 

பிறகு ஆதித்யன் தொடர எத்தனித்த வேலை அவனை தடுத்த அகிலன், “பொறு மச்சான்… இதுக்கு அப்புறம் என்னனு நான் சொல்றேன்… நாளைக்கு நீங்க 2 பேரும் கிளம்பி மதுரைக்கு போங்க… நான் மத்தவேலைய பாத்துகிறேன்” என்று கூற ஆதித்யனோ கேள்வியாக அவனது இடது புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க அகிலன் விவரிக்க தொடங்கினான்.

 

“நீங்க கிளம்பின அடுத்த நிமிடம், அந்த 2 உளவாளிகளும் உங்கள தொடருவதுக்கு முன்னாடி நான் என் டீம் வச்சு அரெஸ்ட் பண்ணிடறேன்…. அது வெளியில தெரியாமலும் பாத்துகிறேன்… அதுனால அவுங்களோட கண்காணிப்புலதான் நீங்க இருக்கீங்கனு மத்தவங்க நினைக்கட்டும், அதுக்குள்ள நீங்க சென்னை விட்டு கிளம்பிடுங்க.. அந்த ஆஷிக்யோட நம்பர் நம்மட்ட இருக்கு… பட் அவன் யாரு அவன் பேக் கிரௌண்ட் என்ன இது எல்லாம் நான் பாத்துகிறேன்” என்று கூறி அகிலன் ஆதியிடம் கூறிவிட்டு அவன் செல்ல, ஆதித்யன் மனமோ, “அகில்… உன்கிட்ட நான் இன்னும் ஒரு பாதிதான் சொல்லி இருக்கேன்… இதுல இன்னும் ஒரு விஷயம் இருக்கு… ஆனா அது எனக்கே இன்னும் உறுதியாகல, அத பத்தி ஒரு சரியான ஆதாரத்தோட உன்கிட்ட சொல்லுறேன்…” என்று போகின்ற நண்பனை பார்த்து ஆதித்யன் தன் மனதில் எண்ணிக்கொண்டான்.

 

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாய், அப்போது நிலா அகிலனை தேடி ஆதித்யன் அறைக்கருகே வந்து கொண்டு இருக்க அவளின் பேச்சு சப்தத்தில் ஆதித்யன் அவன் யோசனையை கைவிட்டு அவளிடம் பேச்சில் இணைந்தான்.

 

மூவரும் கீழ்தளத்திற்கு செல்ல, அங்கே சிவகாமி அம்மாளோ நாளை மாலை ஆதித்யனும், மதியும் மதுரைக்கு கிளம்பவேண்டுமென கூற அந்த நேரம் மதி சரியாக வீட்டினுள் நுழைந்தாள்.

 

அதை கேட்டு கொண்டே வந்த மதியோ, “அதுக்குள்ள வெள்ளி கிழமை ஆகிடுச்சா…. இப்போதுலாம் க்ர்ஷினவ் பார்வையில நான் பார்க்கனும்னு நினச்ச காதல் தெரியிது… அவரு என்ன நெருங்கியும் வராரு… ஆனா என்னால தான் உண்மைய சொல்ல… தயிரியம் இல்ல… 3 நாளா அத்தை ரூம்ல தூங்குறேன்னு சொல்லிட்டேன்….ஆனா இன்னைக்கு?, இன்னைக்கு கூட அதே செய்யலாம்… ஆனா நாளைக்கு… எப்படி?… முருகா…” என்று ஒருமுறை கூறி இமைகளை மூடி திறந்தாள். பிறகு ஒரு முடிவு எடுத்தவளாக…”ஹ்ம்ம் கோவில் போயிட்டு வந்ததும் ஒரு சரியான சந்தர்ப்பம் பார்த்து சொல்லிடனும்…” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அவளுக்கு அவளே நம்பிக்கை வளர்த்துக் கொண்டாள்.

 

அதன் பிறகு நிகழந்தவை யாவும் மளமளவென நடந்தேறி இருக்க, மதி சிநேகனிடம் அந்த ‘ஆஷிக்’ பற்றிய விவரங்களை அறிய சொல்லிவிட்டு மீதி இருந்த அதாவது 48 பெயர்களில் மீதி இருந்த 4 வீட்டில், 2 வீட்டின் முகவரிக்கு சென்று, முடிந்த தகவல் திரட்டிவந்தாள். எஞ்சி இருந்த 2 பெண்களின் தகவலை கோவில் சென்று வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டவள், தேவையான உடமைகளை சிறு பெட்டில் அடுக்கலானாள்.

 

 

இங்கு ஆதித்யனோ, ஒரு பாதி பகுதியியை அகிலனிடம் கூறிவிட்டு, அவன் பங்கிற்கு இந்த தேடலை எப்படி முடிவுக்கு கொண்டுவரலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டுக்கொண்டே அவனுக்கு தேவையானவற்றை அவன் எடுத்துவைக்க இதை பார்த்துக்கொண்டு இருந்த நிலாவோ, வரும்பொழுது மதியே ஆதிக்கும் சேர்த்து அனைத்து வேலைகளை பார்க்கும் சூழ்நிலை வரவேண்டுமென மனதார வேண்டிக்கொண்டாள்.

 

 

அதாவது இருவரும் தனி தனியே அவர்களது உடமைகளை அடுக்குவதை பார்த்ததிலிருந்தே, அவர்களுக்கு ஒருவர் மீது மற்றொருவர்க்கு அக்கறை இருக்கிறது என்ற போதினிலும் நெருக்கமாக அவர்கள் வாழவில்லை என்பதை பறைசாற்றியது நிலாவிற்கு.

 

முழுவதுமாக தயாராகி வந்த ஆதித்யனுக்கு, இந்த வார இறுதியில் பூதபடயனை இங்கே வர சொல்லி இருந்தது நினவு வர, இந்த வேலை பளுவில் அதை தவரவிட்டத்தை நினைத்த ஆதித்யன் அவர் எப்படியும் சனி அன்று காலையில் அல்லது நண்பகலில் தான் கிளம்புவார் சென்னைக்கு என்பதை அறிந்திருந்ததால் படிகளில் இறங்கியபடியே அவனது கைபேசி எடுத்து, அவனுடைய ரிசார்ட்டுக்கு அழைத்து, பூதபடையனிடம் அவன் அங்கு வரபோகும் தகவலையும் அவர் சென்னை வரவேண்டாம் என்ற தகவலையும் தெரிவித்துவிடுமாறு கூறி கைபேசியை அணைத்தான்.

 

அனைவரிடமும் கூறிக்கொண்டு ஆதித்யனும், மதியும் அவனது காரிலே மதுரையில் அழகர் கோவிலில் வீற்றிருக்கும் பழமுதிர் சோலைக்கு பயணமானர்.

 

ஆதித்யன் அருகில் இருந்தாலும், அவன் பார்வை தன்னை ஊடுருவி செல்வதை உணர்ந்தாலும் உணராதது போலவே அமர்ந்திருந்தவள், கடந்த 3 நாட்களாக விஜயை கண்காணிக்க நேர்ந்தது என அவள் மனதோடு சேர்த்து உடலும் சோர்ந்து போக, சற்று நேரத்தில் உறங்க தொடங்கி இருந்தாள். அவள் செய்கைகளை பார்த்துக்கொண்டே வந்த ஆதித்யனோ அவளின் நடவடிக்கை காரணம் புரியாமல் அவள் காதலை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு நாளை விடிகிற பொழுது அவர்களின் காதலுக்கான பொழுது என்ற ஆசையோடு அவன் வண்டியை இயக்கினான்.

 

 

குளிகாற்று முகத்தில் மோத…. அந்த சில்லென்ற குளிர் தென்றலுக்கு, இதமாய் வெதுவெதுப்பான சூரிய கதிர்களும் பரவ…. ஆங்காகே சில பறவைகளில் சப்த்தமும் தங்களை கடந்து சென்ற வண்டியின் ஹாரன் ஒலிகளில் உதவியாலும் கண்களை திறந்து பார்த்தவளுக்கு பக்கவாட்டில் தெரிந்த யானை மலையை பார்த்ததும் அவளுக்கு சந்தோசம் தொற்றி கொண்டது.

 

 

நேற்று நடந்தது, ஆதியின் பார்வை தாளமால் வெகு சீக்கிரத்தில் உறங்கியது…. அந்த வழக்கு இப்படி அனைத்துமே மறந்து அவள் பிறந்து வளர்ந்த மண்காற்றை சுவாசித்ததும் அவளுள் வெகு வேகமாக பரவசம் படர்ந்தது. 

 

அவள் விழிகளில் தெரிந்த பரவசத்தை உணர்ந்துக் கொண்டவன் அவளுடன் இலகுவாக பேச முற்பட்டான்.

 

“குட் மார்னிங்… என்ன மதி இந்த மலை பார்த்ததும் இவ்ளோ சந்தோசம் ஆகுற… ” என்று இயல்பாக கேட்க, மதியோ ஒதுக்கத்தை எல்லாம் மறந்து சிறுபிள்ளையாக, “ஆமாம் க்ரிஷ்ணவ்… யானை மலை வந்துட்டா, நம்ம மதுரை வந்துட்டோம்னு அர்த்தம்… அது தான்…. இந்த மலை, யானை போல இருக்குறதுனால இதுக்கு இந்த பெயரு…. சின்ன வயசுல இந்த பக்கம் போகும் போது எல்லாம் இந்த மலையும் கூடவே வரது போல தோனும்… ஆனா அப்புறம் தான் தெருஞ்சது மலையுடைய நீளம் அதிகம்னு…. இந்த மலை அடிவாரம் முழுக்க வயல், குட்டையினு பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கும்… இன்னும் 10 நிமிசத்துல நம்ம மதுரைக்குள்ள என்ட்டர் ஆகிடுவோம்” என்று சந்தோசமாக கூற அவளின் சந்தோசத்தையும் சொந்த ஊருக்கு வந்தவுடன் சிறு பிள்ளையாய் குதூகலிக்கும் அவள் மனதையும் ஆதி ஒரு சேர ரசித்தான்.

 

“உனக்கு மதுரைனா ரொம்ப பிடிக்கும் போலவே…. இங்கயும் பெரிய பெரிய தொழில் நிறுவனகள் வந்துட்டா… அப்புறம் நம்ம இங்க வந்து கூட தொழில் செய்யலாம்… அப்போ உனக்கு பிடிச்ச ஊரிலயே நீ இருக்கலாம்… இப்போதைக்கு முடியாது.. பிகாஸ் நம்ம கிளைன்ட்ஸ் எல்லாம் அங்க தானே இருக்காங்க….” என்று ஆதித்யன் கூற வேகமாக மதியோ, “இல்ல க்ரிஷ்ணவ்… வேணாம்… நம்ம வேணும்னா இங்க தொழில் தொடங்கலாம்… ஆனா எல்லா தொழில் நிறுவனமும் இங்க வரவேண்டாம்…” என்று அவசரமாக கூறினாள்.

 

மதுரை பிடிக்கும் என்று கூறி விட்டு இப்பொழுது வேண்டாம் என்று கூறும் மனையாளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த… மதியோ அதை புரிந்துக் கொண்டவளாக, “இல்ல க்ரிஷ்ணவ், அது வந்து இப்ப எல்லா கம்பெனிஸ்யும் வந்தா… மதுரையின் தனி துவம் மாறிடும்… உங்களுக்கு தெரியுமா? இந்த மதுரையை சுற்றி யாரும் பெரிய அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டகூடாது… ஏன்னா மீனாக்ஷி அம்மன் கோவில் கோபுரத்த தாண்ட கூடாதுன்னு… மதுரைய பொருத்தவர கோபுரம் மட்டும் தான் உயர்ந்து இருக்கணும், மத்தபடி மத்த எந்த கட்டிடம்னாலும் ஒரு அடி அதுக்கு குறைவா தான் இருக்கனும்… இது போல ஒரு ஊரே பாலோவ் பண்ணுது இந்த ரூல்ஸ… அதுனாலா தான்… மத்த கம்பெனி வந்தா அது எல்லாம் உயரமா இருந்ததுனா.. மதுரையின் பாரம்பரியம் போய்டும்… அத நான் விரும்பல… அதுனாலா தான் சொன்னேன்…” என்று நீளமாக பேசி முடித்தாள் அவள் மறுத்து சொன்னதிர்க்கான காரணத்தை.

 

அதன் பிறகு ஏதோ ஏதோ பேசியபடி அவர்கள் இருவரும் மதியின் வீடிற்கு சென்று குளித்து தயாராகி வெளியில் வந்தனர். ஆதித்யனோ சீக்கிரமாக அடுக்கம் நோக்கி பயணிக்க வேண்டும், பூதபடையனை சந்திக்க வேண்டும்… என்ற பல திட்டங்களோடு நேரம் தாழ்த்தாமல் கிளம்பி அழகர் கோவிலை நோக்கி பயணித்தான்.

 

செல்லும் வழி எங்கும் ஆதித்யன், மதியின் வாய் மொழியாக காதலை சொல்லும் தருணத்திற்கு ஏங்கி அதை தொடர்ந்தே அவன் சிந்தனை ஓடிக்கொண்டு இருக்க அங்கு சென்றதும் பூதபடயனை அவன் வழக்கமாக தங்கும் குடிலுக்கு வரவைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

 

ஆனால் மதியோ அவளின் ஒத்துக்கதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு மதுரை மாநகரின் அழகினில் தன் மனதை பறிகுடுத்துவிட்டு வெளியில் பார்வை பதித்தபடி வந்துகொண்டு இருந்தாள்.

 

அதற்கு காரணம் ஆதித்யன் அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல், பேசிய வார்த்தைகள் அனைத்துமே பொதுவான விஷயங்களாக இருக்க, அவள் மனது சற்று இளைப்பாற தொடங்கி இருந்தது.

 

சென்னை சென்றதும், முதல் வேலையாக ஓரிரு நாட்களில் இந்த வழக்குக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு ஆதித்யனிடம் தன் காதலை சொல்ல முடிவெடுத்திருந்தாள்.

 

மதுரை சுற்றி சிறு சிறு மலைகளாக மதுரையின் 4 திசைகளிலும் மலைகள் சூழ்ந்திருக்க மதுரைக்கு அது ஒரு இயற்கை அரண் போல காட்சி அளித்தது.

 

இருபுறமும் வயல்வெளிகள் சூழ்ந்திருக்க…. ஒரு சாலையில் வண்டி செல்லும் போது ஒரு புறம் சிறிய கோடாக யானை மலையும் மறுபுறம் அழகர் மலையும் இருக்க மதி 2 புறமும் மாற்றி மாற்றி பார்த்து ரசித்துக் கொண்டே வந்தாள்.

 

அந்த சாலை முடியும் தருவாயில் ஒரு வளைந்த நுழைவு வாயில் அழகர் மலையின் சார்பாய் வரவேற்க அதில் நுழைந்தவர்கள் ஏதோ கோட்டைக்குள் நுழைந்தது போல, நுழைந்தவர்களுக்கு பிரம்மை குடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

 

காரணம் இருபுறமும் அந்த காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கோட்டை மதில், சுவர்போல சிறுது சிதிலம் அடைந்தும் அதே சமையம் தொடர்ச்சியாகவும் அந்த சுவர் அமைய பட்டு இருந்தது.

 

மலை அடிவாரத்தில் வைணவ மத கோவிலும், 18ஆம் படி கருப்பும் வீற்றிருக்க மலையின் உச்சில் தீர்த்தன்தொட்டி அமைந்திருந்தது. அதன் பக்கவாட்டில் மூலிகைவனம் இருக்க அதை பார்த்தபடியே வந்துக்கொண்டு இருந்தாள் மதி. இவர்கள் செல்லவேண்டிய பழமுதிர் சோலை என்னும் அறுபடை வீடுகளில் ஒன்றான ஸ்தலம் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று அழகே உருவாய் இருந்த முருக பெருமானை இருவரும் மனமார தரிசித்தனர்.

 

மதி மனதினுள் அவனிடம் காதல் சொல்ல துணிவை வேண்டி கொண்டு இருக்க ஆதித்யன் அவளின் வாய் மொழியாய் காதலை கேட்கும் நாள் வர வேண்டுமென இருவரும் ஒரே கோரிக்கையை இறைவனடி சேர்க்க அவர்களின் வேண்டுதலின் முடிவில் கோவில் மணி டிங் என்ற சப்தத்துடன் ஒலித்து அவர்களுக்கு நல்லாசி வழங்கியது.

 

ஆதித்யனுடன்… அவளுக்கு பிடித்த கடவுளை தரிசிக்க நேர்ந்ததில்… அதுவும் அவள் விரும்பு மண்ணில்… அவள் மனம் நிம்மதி அடைந்திருந்தது.

 

ஆனால் அவள் உடலோ அதற்கு ஒத்துழைக்காமல் சற்று சோர்வுடன் இருக்க, பயணத்தினாலோ அல்லது தொடர்ந்து வேலைக்காக அலைந்ததனாலோ களைத்திருந்த அவள் தேகம் சோர்வுடன் காணப்பட ஆதித்யன் அவளை சற்று தூங்குமாறு கூறிவிட்டு வண்டியை கிளப்பினான்.

 

 

சென்னை நோக்கி செல்லுமென நினைத்த மதி உறக்கத்தில் ஆழ, வண்டி மாற்று பாதையில் கொடைக்கானலை நோக்கி பறந்துக் கொண்டு இருந்தது.

 

 

கொடைக்கானால் மலை ஏற ஆதித்யனின் வண்டி தொடங்கிய அதே நேரம் மலை உச்சில் இருந்து பூதபடையன் பேருந்தில் அடிவாரத்தை நோக்கி பயணமாயிக்கொண்டு இருந்தார்.

 

 

ஆதித்யன் குடுத்த தகவல் அவருக்கு தெரிவிக்க படாமல் போக, அதாவது ஆதித்யன் செய்தியை தாங்கி செல்லவேண்டியவன், உடல் நல குறைவால் மருத்துவமனை வாசத்திற்கு உட்பட, தகவல் கிட்டாத பூதபடையனோ அடிவாரத்தை நோக்கி வந்துக்கொண்டு இருந்தார்.

 

ஒவ்வொரு கொண்டை ஊசி வலைவாய், ஆதித்யனின் வண்டியும் அந்த பேருந்தும் செல்ல ஒரு குறிப்பிட்ட கொண்டை ஊசி வளைவில் இரண்டும் அந்த ஒற்றை சாலையில் எதிர் எதிர் புறமாக நின்று இருந்தன.

 

ஒருபுறம் ஆதித்யன் வண்டியும், ஆதித்யனுக்கு அருகில் உறங்கி கொண்டு இருந்த மதியும், அதன் அருகினிலே எதிர் திசையில் பயணிக்கவிருந்த பேருந்தும், ஆதித்யனுக்கு நேர் எதிரானா சன்னலோர இருக்கையில் பூதபடயனும் அமர்ந்து இருந்தனர்……….

 

 

Advertisement