Advertisement

 

முகிழ் – 21

 

ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கருமை படர்ந்த அடர் நீல நிறம் போல அந்த மழை கால இரவின் வானம் இருக்க அந்த கடலில் தவழும் அலைகள் போல மேகங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. நடுகடலில் அவ்வபொழுது நீருக்குமேலே வந்து துள்ளி விளையாடும் சுறாக்களை போல விண்ணிலும் நக்ஷத்திரங்கள் மின்னிக்கொண்டிருப்பது, சுறாக்கள் தோன்றி தோன்றி மறைவது போல இருந்தது.  மொத்தத்தில் அந்த நடு நிசி வானமோ பரந்த கடல் போல அந்த இருளில் தெரிந்தது. 

 

அந்த அழகிய இரவில், சாலையிலிருந்து சற்று உள்வாங்கி இருந்த ஆதியின் வீட்டில் அழகான அமைதி குடிகொண்டிருக்க, கடல் அலைகளில் சப்தத்தை தவிர வேற எந்த சப்தமும் இல்லாமல் நிசப்த்தமாக இருந்தது. அந்த நிசப்தம் சுற்றத்தில்தான் இருந்தது தவிர ஆதியின் மனதில் இல்லை.

 

அவன் மனமோ மெல்ல காலையில் நடந்த விஷயங்களை எண்ணி பார்த்துக்கொண்டிருந்தது.

 

காலையில் நடந்தவை அவன் கண்முன் தோன்றியது……

 

‘ஆதித்யன் கைபேசிக்கு கொடைக்கானலில் இருந்து அழைப்பு வர அதை உயிர்பித்தவன், மழையின் காரணமாய் மண் சரிவு ஏற்பட்டதால் பூதபடையனால் உடனே வர முடியவில்லை என்றும் இந்த வார இறுதியில் வருவதாகவும் கூற ஆதியோ மதியின் காதலை அவள் வாய் மொழியாய் கேட்கும் நாள் தூர போவதை எண்ணி சிறு ஏமாற்றம் கொண்டான். 

 

சில மணி நேரங்களுக்கு முன் இனியன் ஹர்ஷினியின் தகவல் மூலம் ஒரு சில விஷயகளை உணர்ந்தவன், அவர்களின் காதலை பற்றி மதி சிநேகனிடம் கூறும் பொழுது அவள் முகம் நிர்மலமாக இருந்ததை நினைவில் கொண்டு அவளுக்கு இனியன் ஒரு மூன்றாம் நபர் எண்ணும் கருத்தை ஆதித்யனுக்கு பறைசாற்றியது. 

 

இனியனது மனதில் இருப்பது திட்டமாக தெரியாத போதும் மதிக்கு இனியனை ஒரு மூன்றாம் நபரை தாண்டி வேறு எதுவும் இல்லை என்று மட்டும் தெளிந்த நீரோடை போல தெரிந்தது.

 

அதன் பிறகு அனைத்து கிளையில் இருந்தும், மேலார்களுடன் ஒரு சந்திப்பு மதிய வேலையில் நிகழ அதற்கு இனியன் செழியன் உட்பட 6 நபர்கள் வந்திருந்தனர்.

 

அந்த சந்திப்பு முடிந்து அனைவரும் கிளம்ப செழியன் மட்டும் ஒரு நொடி தாமதித்து ஆதித்யனிடம், “சார் நீங்க கேட்ட டீடைல்ஸ் இதுல இருக்கு” என்று குடுத்துவிட்டு சென்றான்.’

 

இப்பொழுது ஆதியின் கண்கள் செழியன் குடுத்த தகவலை பார்த்து தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது. அதுவே அவன் அமைதி இன்மைக்கும் காரணம். மதியின் வழக்கு விஷயத்தில் ஒரு சிறு துருப்பு கிடைத்திருப்பதாகவே தோன்றியது.

 

ஆனால் கிடைத்திருப்பது வெறும் துடுப்பு மட்டுமே நீந்தி கடக்கவேண்டிய தூரம் ஏராளம் என்பதை உணர்ந்தவன் மதிக்கு தெரியாமல் அதில் அவளுக்கு உதவி செய்து பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான்.

 

அவன் முடிவெடுத்தவுடன் அவன் பார்த்த ஆதாரத்தை அவனது கணினியில் பத்திரப்படுத்தியவன் காலையில் அவன் செழியனிடம் கேட்ட தகவல் ஒரு நம்பிக்கையானவர் மூலம் அவன் கைகளுக்கு வந்திருந்தது. அதை ஆதித்யன் இன்னும் பார்க்கவில்லை என்ற போதிலும் அதையும் அவனது தனி மேஜை தளத்தில் ஒருமுறை தன் உள்ளங்கையில் வைத்து அந்த சின்னஞ்சிறு மெமரி கார்டை பார்த்துவிட்டு வைத்தான்.

 

அந்த சிறு பொருள் அவனின் வாழ்வில் பெரும் மாற்றங்களை விளைவிக்கப்போவதை அறியாமல் அதை அவன் பத்திரப்படுத்தினான் அதிலிருக்கும் தகவல்களை பார்க்காமலே.

 

நடக்கவிருக்கும் செயல்களை யாராலும் மாற்ற இயலாது. அப்படி மாற்றமுடிந்தால் ஏன் மனிதன் துன்பத்தில் வாடப்போகிறான். மதியால் விதியை வெல்லலாம் என்ற தாரக மந்திரம் நம் தமிழ் பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்திருந்த போதும் அந்த விதி விரித்த வலையில் இருந்து தப்பிக்க நேரிடும் கால அவகாசத்தில் மனிதன் அந்த விதியின் கோர விளையாட்டின் துன்பத்திற்கு ஆளாகிறான்.

 

இறுதியில் அவன் மதிகொண்டு அவன் வென்றாலும் சில சமயங்கலேனும் அவனும் விதியின் துன்பத்திற்கு ஆளாகிறான்.

 

 

பின்னாளில் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாமல் ஆதித்யன் அவனது திட்டங்களை வகுத்துவிட்டு நாளை மறுநாள் முதல் மதி வேலைக்கு போக போவதை நினைத்துக்கொண்டு அவளின் அலுவல்களை கவனிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான்.

 

அலுவல் அறையை விட்டு வெளியில் வந்தவன் ஒரு நிமிடம் பிரமித்து நின்றான். வெள்ளி நிலவு தனது வெள்ளி கதிர்களை அந்த அடர் இருளில் பாயிச்ச நேர்ந்ததால் சாளரத்தின் வழி ஊடிருவி வந்த வெளிச்சம் தேவலோகத்துக்கு செல்லும் பாதை போல இருக்க, அந்த சாளரத்தின் அருகில் இருந்த சோபாவில் மதி விழிமூடி ஒரு தேவதை போல் படுத்திருந்தாள்.

 

அவளை பார்த்தவுடன், இந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அழகு பன்மடங்கு அதிகரித்தது போல ஆதித்யனுக்கு தோன்றியது. அவளுக்கு நேர் எதிரில் இருந்த கட்டிலில் சென்று படுத்தவன் அவளை பார்வையால் பருகிக்கொண்டே காலையில் நடந்ததை எண்ணி அவனுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.

 

மறுபுறமோ, உறக்கத்தில் இருப்பது போல கண்களை மூடி இருந்தவளின் கருவிழிகள் மூடிய இமைகளுக்குள் அங்கும் இங்கும் அலைமோதி கொண்டு காலையில் நடந்தது அவளது கனவு தான் என்றும் பகலிலே கனவு காணும் அளவு ஆதித்யன் தன்னை ஆட்டிபடைக்கின்றான் என்றும் நினைத்துகொண்டு படுத்திருந்தாள்.

 

இரவுகள் இருவருக்கும் ஒரே நினைவாய் இருக்க ஆனால் அதை மற்றவர் அறியாமல் தனியே தனியே சிந்தனையில் திளைத்து காதல் தரும் இன்பத்தை பூசிக்கொண்டார்கள்.

 

இரவு, வெள்ளி கதிர்கள் பாயிந்தது போல இருந்த சாளர வழி, விடிந்ததும் தங்க கதிர்களால் நிரப்பப்பட்டது போல இருக்க, மதி கை மறைவினில் ஒரு கொட்டாவியை அடக்கிக்கொண்டு கண் விழித்தாள்…

 

கண் விழித்தவள் தனது கை பேசியில் நேரத்தை பார்த்தவள் 7 என்று காட்டவும், இத்தனை நேரமா தூங்கிவிட்டோம் என்று மனதினுள் எண்ணிக் கொண்டே இன்னும் தூக்கம் தெளிவாக கலையாததால் ஒருமுறை கண் மூடி திறந்தாள்.  கண் மூடி திறந்தவள் இமை இமைக்க மறந்து சிலை என உறைந்தது.

 

அவள் படுத்திருந்த சோபா அருகில் வெகு அருகில் அந்த சோபாவின் விளிம்பில் ஆதித்யன் இருந்தான். குளித்து முடித்த ஈர தலையுடன் அவன் முன் சிகையிலிருந்து நீர் சொட்ட சொட்ட அவள் முகத்தை நோக்கி குனிந்தான். மெல்ல மெல்ல மெதுவாக அவளை அணுகினான். அவனுக்கும் அவளுக்கும் நூல் இழை இடைவேளை இருந்த போது மதி பிரமிப்பாலும் உணர்ச்சிகளாலும் பெரிதும் பாதிக்கப் பட்டு இருந்தாள். அவள் நெஞ்சம் வெகு வேகமாக துடித்துக்கொண்டிருக்க அவள் கையிலிருக்கும் கை பேசியை கீழே நழுவவிட்டாள் படுத்திருந்த படியே.

 

ஆதித்யனின் கண்களில் காதல் இருந்தது. அவனது இருகைகளையும் சோபாவின் இருபுறமும் ஊன்றி அவளை அவனது கைவளைவினுள் சிறை செய்தான். அவன் அருகினில் வர வர நேற்று நடந்தது போல இதுவும் கனவாக இருக்ககூடுமோ என்று ஐயம் தோன்ற கண்களை மூடி நன்றாக கசக்கி கொண்டு கண்விழித்தால் ஆதித்யனின் உருவம் மறைந்து போய் இருந்தது.

 

நேற்று அளவு மதி இன்று குழம்பவில்லை ஒருவேளை அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். ஆனால் அவளை குழப்பும் விதமாக அவளது கை பேசியை அவள் தேடும் போது, அது கீழே விழுந்து கிடந்தது. அப்படி விழுந்ததால் அது உடைந்தும் இருந்தது. அவளது மனமோ, “எனக்கு தான் க்ரிஷ்ணவ் மேல உள்ள காதலனால கனவு வருதுனா, அந்த கனவுல விழுந்த மொபைல் எப்படி நிஜத்துல உடையும்…. ஒன்னுமே புரியலயே…கடவுளே எனக்கு என்ன தான் ஆச்சு…” என்று தன்னந்தனியே புலம்பிக் கொண்டு இருந்தது.

 

சுற்றும் முற்றும் கண்களை சுழல விட்டு பார்த்தும் ஆதியின் அரவம் தெரியாததால், தனக்கு தான் ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணியவள் தூக்கத்தில் கைபேசியை அவளே அறியாமல் தள்ளி விட்டிருக்க கூடும் என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு கைபேசியை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

பிறகு மெல்ல எழுந்து முகம் கழுவி பல்துலக்கி, தனது உடைந்த கைபேசியை அவள் பார்த்துக்கொண்டே வெளி சாளரம் வர, அங்கே ஆதித்யனோ தனது ஈர தலையை துவட்டியபடி யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டே இலகுவாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தான்.  இதை பார்த்து, தான் கண்டது கனவு தான் என எண்ணிக்கொண்டிருந்தவள் கிருஷ்ணாவின் ஈரமான கேசத்தை பார்த்து மனதினுள், “ஒருவேளை நடந்தது உண்மையாக இருக்குமோ? ” என்று என்ன தொடங்கினாள். ஆனால் மறுமனமோ, “உண்மை என்றால் விழி மூடி திறக்கையில் ஏன் ஆதி அங்கு இல்லை?” என எதிர் கேள்விகேட்க அவள் மீண்டும் குழம்பினாள்.

 

இந்த நேரத்தில், கைபேசியை அனைத்துவிட்டு, தனது மனையாளை நோக்கி திரும்பிய ஆதித்யன் அவளது குழம்பிய முகத்தை பார்த்து, கடை இதழில் ஒரு சிறு புண் முறுவலை தவழவிட்டபடி, சற்று முன்பு நிகழ்ந்த விஷயங்களை மனதில் ஓட்டிபார்க்க முனைந்தான்.

 

‘ தூக்கத்தில் புரண்டு படுத்ததால் அவளது முன் உச்சி முடி கற்றைகள் அவளின் நீண்ட கூந்தலோடு சேராமல், காற்றில் ஆடும் கொடி போல அவள் முகத்தில் படர்ந்து படர்ந்து அங்கும் இங்கும் அசைந்துக்கொண்டிருக்க, அதை குளித்து முடித்து வந்து தற்செயலாக பார்த்த ஆதித்யனின் மனதில் உல்லாச மலர்கள் பூத்து குலுங்கியது.

 

குழலியே!!!

புயல்காற்றுகும் அசையாத என் நெஞ்சம்

உன் முன் உச்சி கூந்தல் அசைவுக்கு

சரிந்ததென்னடி – இதனால்,

உன் வதன முகத்தில்

இளைப்பாற துடிக்கும் என் இதழ்களும் 

தீரா பொறமை கொள்கின்றன

ஆணவமாய் அசைந்தாடும் உன் கூந்தல் மீது.

                                                               

 

அவளின் நிர்மலமான முகத்தில் நிரந்தரமாக குடிகொண்டிருந்த அமைதியான அவளது வதனத்தில் காற்றினால் ஆடிய அவள் முடி கற்றைகள் அவளுக்கு மேலும் அழகு சேர்க்க, அந்த கேச சல சலப்பில் அவள் உறக்கம் களைவது போல புருவத்தை சுருக்கி ஒருமுறை புரண்டு படுக்க அந்த அழகில் ஆதியின் மனம் கட்டவிழ்த்த காளையை போல் மாறியது. அவன் கால்கள் அவளை நோக்கி முன்னேறியது.

 

ஒரு சில நொடிகளில் கண் திறந்தவள் கைபேசியில் நேரத்தை பார்க்க அதை பின்னிருந்து பார்த்தவனுக்கு அவளது கைபேசியை சுத்தமாக பிடிக்காமல் போனது. திடுமென ஏற்பட்ட இந்த யோசனையால், அவனது மனம் லேசாக திடம்பெற்று நேற்று போல அவளை சீண்டி பார்க்க முடிவெடுத்தான்.

 

 

அதே நேரத்தில், அவள் இமைகள் தூக்கத்தின் கலக்கம் முழுமையாக தீராததால் கண்களை ஒரு முறை மூடி திறக்க அப்பொழுது அவளுக்கு வெகு அருகில் ஆத்தியன் இருந்தான்.

 

அவளது பெரிய விழிகள், மேலும் பெரிதாக விரிந்து அவளது இமைகளை அவள் விரிக்க ஆதி முன்னேற திடுமென ஏற்பட்ட மாற்றத்தால் மதி கை பேசியை நழுவ விட, நடப்பதை கனவா நிஜமா என்று அறிய அவள் கண்களை நன்றாக கசக்க, அந்த இடைவேளையை பயன்படுத்திக்கொண்ட ஆதித்யன் புயலென சாளரத்திற்கு வெளியே சென்றான்.

 

அவள் படுத்திருந்த சோபா சாளர வாயிலின் அருகில் இருந்ததால் ஆதித்யனால் ஏதுவாக அவள் கண்களில் இருந்து மறைய முடிந்தது. அதன் பின் அவளது குழப்பங்கள் வெளிப்படையாக பிரதிபலிக்க அதை பார்த்து இதழ் பிரிக்காமல் அளவான சிரிப்பை உதிரவிட்டவன் அவள் குளியலறை சென்றுடன் தலை துவட்ட துண்டையும் அவனது கைபேசியையும் எடுத்துகொண்டு சாளரத்திற்கு வந்து சினேகனுக்கு அழைத்தான்.

 

அவன் அழைக்கும் போது அவனது முகத்தில் ஒரு திருப்த்தி தெரிந்தது…

 

“ஹெலோ, யா சினேகன், நம்ம இன்னைக்கு அவர மீட் பண்ண போகலாம்… இல்ல … நீங்க திருவான்ம்யூர்ல வெயிட் பண்ணுங்க…ஹ்ம்ம் ஆமாம். நான் ஆன் தி வேல பிக் பண்ணிக்கிறேன்… ஒகே…சி யூ தென்” என்று கூறி அழைப்பை துடிந்தவன் இப்பொழுது மனையாளின் ரசித்துக் கொண்டே சிறு சிரிப்பையும் உதிரவிட்டான்.’

           

அவனின் சிரிப்பை பார்த்துவிட்ட மதி அவனிடம் ஏதோ கேட்க எத்தனிக்க அதை உணர்ந்தவனாக ஆதித்யன் அவளின் அருகில் வந்து அவளிடம், “ட்ரீம் கேர்ள்” என்று அழைத்தான். அவன் அழைப்பில் சற்று திகத்தவள் ஆத்தியன் தன்னையா அவ்வாறு அழைத்தான், அப்படி என்றால் எனக்கு போலவே அவனின் கனவிலும் அவள் வருகிறாளா என்று அவள் மனம் சிறு நொடியில் உலகையே வலம் வர கம்மிய குரலில் மதி அதை கேட்க ஆதியிடம், “ட்ரீம் கேர்ள்ஆ? என்ன சொல்றீங்க” என்று கேட்க அவனோ இப்பொழுது இதழ் நன்றாக பிரித்து அவனது அளவான அடர்ந்த மீசையின் கீழ் இருந்து அழகிய வரிசை பற்கள் தெரிய சிரித்து அவளிடம், “ஆமாம், கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, இப்பயும் சரி நான் பார்க்கும் போது எல்லாம் நீ ட்ரீம்க்கு போய்டுற, ஏதோ யோசனையிலே இருக்க, உன்னோட உதடு பேசுறது ரொம்ப கம்மி ..ஆனா நீ கனவுலையே இந்த உலகத்த சுத்தி வந்துருவ போல” என்று கூறி சிரித்துகொண்டே அவனது பாணியில் அவனது இடப் புருவத்தை ஏற்றி இறக்கி கேள்வியாக அவளிடம், “என்ன மதி நான் சொல்றது சரி தானா? ” என்று கேட்க மதியோ அவனிடம் மாட்டிக்கொண்டதினால் முகம் சிவந்து தலை குனிந்து பதில் சொல்லாமல் நின்றாள்.

 

அவள் முகம் சிவந்தது அவனுக்கு தெரியாமல் இருக்கும் பொருட்டு தலை குனிந்தவள் கன்றிய முகத்தை மறைக்க பெரும் பாடு பட்டாள். அவள் மனமோ, “கனவுல, நிஜத்துல இப்படி தான் என் மனச ஆட்டி படைக்கிறான்னு பாத்தா, இப்போ நான் மனசுல நினைக்கிறது கூட சொல்ல ஆரம்புச்சுட்டானே, இவன் கண்ணுல எதுவும் எக்ஸ்ரே இருக்குமோ,… இல்ல இல்ல மதி சமாளி…” என்று கூற அதை செயல்ப்படுத்தவும் முனைந்தாள்.

 

“ந ந நான் ஒன்னும் ட்ரீம்க்கு போகல, என்னோட மொபைல் உடைஞ்சு போச்சு, அது எப்படின்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன், எனக்கு ட்ரீம் போக என்ன இருக்கு?, அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க தான் தப்பா ஜட்ஜ் பண்றீங்க, நீங்க சொல்வது போல எதுவுமே கிடையாது” என்று லேசான தடுமாற்றத்தோடு அந்த தடுமாற்றம் தெரியாமல் இருக்க பெரும் பாடுபட்டு சொல்லி முடித்தாள்.

 

“ஹ்ம்ம்ஹும் …. பெர்பெக்ட், ஒகே அப்ப உன் மொபைல நினச்சு தான் யோசிச்ச… ஒகே … பட் நீ இப்ப கைல வச்சுருக்க மொபைல் உடஞ்சதுக்கா இப்படி யோசிச்ச அது தான் புரியில… சரி ப்ரீஆ விட்ரு, நான் வரும் போது உனக்கு மொபைல் வாங்கிட்டு வரேன்…” என்று அவளிடம் வேடிக்கை இழையோட சிரிப்புடன் கூறியவன் அவளிடம் கூறிவிட்டு அவளை தாண்டி சென்றவன் ஒரு நொடி தமாதித்து ஒரு அடி பின் வந்து அவளிடம், “மதி, வரும் போது நான் வாங்கிட்டு வரேன்..பட் நீ கண்டிப்பா இன்னைக்கு வெளில போக வேணாம், நான் சொல்றது புரியிதுல” என்று சற்று இறுகிய குரலில் கேட்கவும் அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்று புரியாத போதும் அவன் குரல் ஏதோ உணர்த்த சம்மதமாய் தலை அசைத்தாள். 

 

சிநேகனிடம், கூறியது போலவே சிறிது நேரத்தில் கிளம்பியவன் அவன் சொன்னது போலவே திருவான்ம்யூர்யில் அவனை அழைத்துக் கொண்டு மதி அன்று சென்ற இல்லத்திற்கு சென்றனர்.

 

ராமலிங்கம்  அது தான் அவரது பெயர், மதி அன்று சினேகனுடன் காலில் அடிப்பட்டிருந்த போதும் அதை பொருட்படுத்தாது அவரை சந்தித்து ஒரு சில தகவல்களை திரட்டி இருந்தாள்.

 

அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மதி அவர் குடுத்த தகவல்களை வெளியே எங்கும் சொல்லாதிருந்தாள். அவள் அப்படி நடந்துக் கொண்ட காரணத்தினால் தான் இன்று சினேகன் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என கேட்க அவரோ மறுக்காமல் அவனுக்கு சம்மதம் சொல்லி இருந்தார்.

 

கோட்டூர்புரத்திலிருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் வண்டியை நிறுத்தி விட்டு சிநேகனும், ஆதித்யனும் இறங்க அவரின் வீட்டில், மாடியில் இருந்து, இரு விழிகள் சினேகனை அளவெடுக்க தவறவில்லை.

 

சினேகனை பாரத்தவுடன் இனம் கண்டுகொண்டதின் அடையாளமாய் விழிகளின் சொந்தக்காரி வீட்டினுள் இருந்தவளை நாடி சென்றாள், “ஹே நிரல், உனக்கு ஒரு குட் நியூஸ் டி…” என்று ஆர்ப்பரித்துக்கொண்டே சொல்ல, முதுகுகாட்டி நின்றபடி ஓவியம் வரைவதில் முனைந்துக்கொண்டிருந்த நிரல் என்ற நிரல்யா உடலை திருப்பாமல் தலையை மட்டும் தனது தோழியின் குரல் வந்த திக்கில் லேசாக திருப்பி அந்த ஓவியத்தை விட அழகான அவளின் இமையை உயர்த்தி கூச்சலிடும் தோழியை என்ன என்பதுபோல கேள்வியாக பார்த்தாள்.

 

நிரல்யா  சராசரி உயரமும், வெள்ளை சருமமும் கொண்டவள். அடர்ந்த இமைகளைகொண்ட அவள் விழிகள், அந்த விழிகளோடு அழகாய் பொருந்திய கண்கண்ணாடி, நாட்டு ரோஜா இதழை தோற்கடிக்கும் நிறம் அவள் இதழ்கள். எப்பொழுதும் அவளுக்கு பிடித்த குர்தாவும், ஜீனும் அணிந்து, தோல் வரை மட்டுமே உள்ள கூந்தலை அழகாக ஒரு கிளிப்பில் அடைக்கியிருந்தாள் மொத்தத்தில் பார்பவரின் கண்ணனுக்கு உறுத்தாத பக்கத்து வீட்டு பெண் போல அழகிய தோற்றம் உடையவள். தூத்துக்குடிக்கு அருகில் அவளது பெற்றோர்கள் இருக்க இங்கே சென்னையில் பைன் ஆர்ட்ஸ் பட்டபடிப்பு படித்துவிட்டு, இப்போது ஒரு விளம்பர படம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த ஒருவருடமாக பணிப்புரிந்து வருபவள்.

 

“ஹே நிரல், அன்னைக்கு ஒரு நாள் நாம ஒருத்தர பார்த்தோம்ல, நீ கூட பார்த்ததுமே நிச்சயமா இவரு நல்ல மாதிரிதான்னு சொன்னியே… அதான் டி… ஒரு பொண்ணு ரிபோர்டர் வந்தாங்களே, அவுங்களோட பிரிண்ட் ன்னு அப்பா ஒருத்தர் கார்குள்ள இருந்தாருல, அந்த பொண்ணு ஏதோ விழ போனப்பகூட உதவி செஞ்சாரே.. ஹே இன்னுமா டி நாபகம் வரல” என்று மட மடவென பேசி ஒரு சிறு அலுப்போடு முடிக்கவும், நிரல்யா அலடிக்கொல்லாமல், “எனக்கு நீ ஆரம்பிச்சதும் புருஞ்சிடிசுச்சு, நீ தான் கேப் விடாம பேசுற, ஏண்டி அவரோட ஒரு சில நடவடிக்கையில எனக்கு தான் அவர் மேல மரியாத வந்ததுன்னு பாத்தா… நீ என்ன இப்படி எக்ஸ்சய்ட் ஆகுற…” என்று சந்தேகமாக கேட்கவும் அவளது தோழியோ அவசரமாக, “ஐயோ நிரல் ஆள விடு எனக்கு என் மாமா பையன் இருக்கான், நான் வந்தது உனக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததே அதுனால தான் உன்கிட்ட சொன்னே” என்று முடித்தாள்.

 

“நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது உண்மை தான், ஒரு தோழி மீதே இத்தன அக்கறை வைக்கிறவரு, மனைவிய எப்படி நேசிப்பாறு, அன்னைக்கு வந்தாங்களே மதி, அவுங்க இவரபத்தி நம்ம அங்கிள் கிட்ட ஒரு சில வார்த்தைதான் பேசுனாங்க, ஆனா கூட அவுங்க சொல்லும்போது இவரு அவுங்களோட நன்பனு பெரும தெருஞ்சது… ஒரு பொண்ணு இப்படி சாதாரணமா பெருமபற்றமாட்டா… அதுனாலா தான் நல்ல எண்ணம் வந்தது. ஹ்ம்ம்ம்ம் இப்ப அவரு எங்க?” என்று கேட்க, மற்றவளோ குறும்பாக சிரித்தபடி, “ஹ்ம்ம் உனக்கு அவரு மேல ஒரு சின்ன ஒபினியன் வந்துருச்சு நிரல்…” என்று கூற, நிரலின் பார்வைமாற்றத்தை புரிந்துக்கொண்ட அவளது தோழி அவசரமாக, “கூல் நான் அத இன்னும் லவ்னு சொல்லல சோ கோவபடாம கேளு. நீ, அவர அப்போ பார்த்த பார்வையிலே புருஞ்சுகிட்டே… அத உன்கிட்ட சொல்ல தான் வந்தே” என்று கூற நிரல் அழகாக சிரித்தாள்.  

 

தனது தோழி சொல்லியதை கேட்டு கொண்டு இருந்த நிரல்யாக்கு லேசாக சினேகனை போய் பார்த்தால் என்ன என்ற குறு குறுப்பு ஏற்பட்டது. அவள் மனமோ, “காதல்லாம் இல்ல, ஆனா எதுனால அவர எனக்கு பார்க்கணும்னு தோனுது, சரி அன்னைக்கு போலவே அவருக்கு தெரியாம பார்க்குறதுனால என்ன ஆகிட போகுது…” என்று எண்ணிக் கொண்டிருந்தாள் அந்த 22 வயதே நிரம்பிய நிரல்யா. 

அவள் கிராமம் சிறிதே, அங்கே அவளின் உறவினர்கள் அவள் பார்த்த சுற்றம் அனைத்திலும் பெண்கள் தான் ஆண்களை விழுந்து விழுந்து கவனித்து கொள்வார்கள். பெண்களுக்கு சுகம் இல்லாத போதும் அவர்களே அவர்களை கவனித்துக் கொண்டு அதே சமயம் குடும்பத்தையும் அவர்களே அந்த நிலையில் கவனித்து கொள்வார்கள். ஆனால் சிநேகனோ, மதிக்காக பதறிய ஒரு சில நிமிடங்களிலே ஒரு ஆண், பெண் மீது காட்டும் அக்கறையால் ஈர்க்கப்பட்டாள். 

மேலும் மதியிடம் அந்த வீட்டின் உரிமையாளர் ராமலிங்கம் வெளியில் இருக்கும் சினேகனை பற்றி கேட்கவும் மதி கூறிய ஓரிரு வரி தகவல்களும் மதியின் முகத்திலும் குரலிலும் தெரிந்த பெருமிதத்திலும் சினேகன் மீது நிரல்யாக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, மரியாதை என்னும் ஒரு தளிர் விட காரணமாய் இருந்தது. 

அந்த நாளின் பிறகு ஒரு சில நாட்கள் சினேகனை பற்றிய நினைவு தலை தூக்கினாலும் அதை பற்றி அவள் முழுதாக சிந்திக்காமல், தளிர் விடும் நினைவுகளை ஓரங்கட்டி அவளின் வழக்கமான வேலைகளில் ஈடுப்பட்டாள். இப்போது சினேகன் வந்திருபாதாக தெரியவும் ஒருமுறை பார்க்க எண்ணி மேல் தளத்தில் இருந்து இறங்கி கீழ் தளத்திற்கு சென்று மாடிப்படி அருகே சற்று மறைவு இடத்தில் நின்று அவள் சினேகனை பார்த்துக்கொண்டிருந்தாள்

 

யாரும் அறியாமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க, சிநேகனோ, ஆதித்யனை ராமலிங்கமிடம் அறிமுக படுத்திக்கொண்டு இருந்தான். ஆதித்ய்னை பற்றி சினேகன் கூறியவுடன், அந்த பெரியவரிடம் பெரிய மாற்றம் தெரிந்தது. அவரின் தம்பி மகன் ஊட்டியில் உள்ள ஆதியின் ரிசார்ட்டில் தான் வேலை பார்க்கிறானாம். அவன் சொல்லி, ஆதி தொழிலார்களை நடத்தும் முறை அரசாங்க பணி போல அவர்களின் குடும்பத்துக்கும் காப்பிடு, ஓய்வு ஊதியும், என்று முடிந்த அளவு ஆதித்யன் திறமையாக நடத்தி செல்வதை வாய்வழியாக கேள்வி பட்டிருகிறாராம்.

 

இது எல்லாம் சேர்ந்து ஆதி கேட்ட தகவல்களை தயங்காமல் குடுத்துக் கொண்டிருந்தார். 
அவரது மகனும், மகன் நேசித்த பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாகவும், அந்த பெண்ணின் பெற்றோர்கள் சற்று வசதி படைத்த, அடிதடிகளில் தொடர்பு உள்ள நபர்கள் என்றும் கூறியவர் மேலும் அவரது மகன் தான் அந்த பெண்ணை கூட்டி சென்றதாக இவர் குடும்பத்துக்கும் தொடர் தொந்தரவு குடுத்து வருகின்றனராம்.ஆனால் மகன் மீது அதித நம்பிக்கை கொண்ட இவருக்கு மகன் ஓடி சென்றிருக்க மாட்டான் என்று தீர்மானமாக நம்புகிறார். அதோடு அவர்களில் காதலுக்கு இவர் பச்சை கொடி தான் காட்டி இருக்கிறாராம். அப்படியே ஓடி போய் இருந்தாலும் இவரிடம் இதுநாள் வரை தொடர்புகொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார். இதை பற்றி போலீஸ்யில் தகவல் கொடுக்க முனைந்த போது பெண்ணின் வீட்டார் அவர்கள் ஓடி தான் விட்டார்கள் என்று உறுதியாக நம்பி போலீஸ் ஸ்டேஷன் போகவிடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறார்களாம். ஒரு வேலை இது போலீஸ் வரை போனால் அவர்கள் ஊரில் அந்த பெண் ஓடி சென்றது அனைவருக்கும் தெரியவந்து அவர்களில் பரம்பரை மானம் போய்விடுமாம். 

ஆதலால் இவர்களையும் அடிக்கடி அணுகி தகவல் கேட்டு இம்சை செய்வதோடு இவர்களையும் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் முடக்கி உள்ளனர் என்று அந்த பெரியவர் கூறி முடித்தார்.

 

இதை கேட்டு கொண்டு இருந்த ஆதித்யனுக்கு யோசனை வெகு தீவிரமாக இருந்தது. எப்பொழுதும் அவனது முக பாவங்களை கட்டுப்படுத்தும் ஆதித்யன் இப்போது தீவிர யோசனையில் நுழைந்ததால் இந்த முறை அவன் முகம் அவன் சுபாவத்தை தாண்டி அவன் யோசனை படிந்த முகத்தை வெளிக்காட்டியது. மேலும் அந்த பெரியவர் ஆதி இதில் இறங்க காரணம் கேட்ட பொழுது சிநேகனோ, “சார் அன்னைக்கு வந்தாங்கள மதி, அவுங்கள ஆதி சார் தான் கல்யாணம் பண்ணிருக்காரு….” என்று கூற அவரோ, “அருமையான பொண்ணு சார், மதி” என்று கூறினார். 

இதையெல்லாம் சினேகனை பார்த்துக்கொண்டே ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் நிரல்யா. ஆதியின் சிந்தனையை கலைக்க எண்ணாமல் சுற்றத்தில் பார்வையை பதித்த சினேகன் அங்கு இருந்த நிலை கண்ணாடியை பார்த்தவன் அதில் தெரிந்த பிம்பத்தை பார்த்து அவன் பார்வை அங்கிருந்து நகர மறுத்தது. அந்த பெண்ணின் கரு விழி யாரை பார்க்கிறது என்று சற்று ஊண்டி கவனித்தபின்னே அவன் கண்டுக்கொண்டான் அப்பெண்ணின் விழி அவனை தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று. 

ஆனால் சினேகன் அவளை கண்டுக்கொன்டத்தை நிரல்யா இன்னும் கவனிக்கவில்லை, காரணம் அந்த நிலை காண்ணடியை அவள் கவனிக்கவில்லை. அந்த பெரியவரிடம் ஏது ஏதோ ஒரு சில தகவல்களை சேகரித்துக்கொண்டே கண்ணாடி வழி அவளை பார்த்துக் கொண்டிருக்க, தீவிர சிந்தையின் வாயிலாய் ஒரு முடிவெடுத்த ஆதித்யன் அதற்கான திட்டத்தையும் வகுத்துவிட்டு நடப்பிற்கு வந்தவனின் கண்கள் சினேகன் விழிகள் நொடிக்கொருமுறை கண்ணாடியை பார்ப்பதை உணர்ந்து எதிர் திசையில் பார்க்க அங்கே இருந்த பெண்ணை கண்டுகொண்டான்.

 

உடனே ஆதித்யன் ராமலிங்கமிடம் கூறி அந்த பெண்ணை நோக்கி கை காட்டி அந்த பெண் யார் என்று நேரிடியாக கேட்க இதை எதிர்ப்பார்க்காத நிரல்யா சட்டென்று பிடிப்பட்ட உணர்வோடு அடுத்து என்ன செய்வதென அறியாமல் அங்கயே நிற்க, ஆதியின் கேள்வியால் அந்த திசை நோக்கிய சினேகன் இத்தனை நேரம் பின்பமாய் பார்த்த பெண் அவன் முன் உயிராய் நிற்பதை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தான். பிறகு அவன் மதினுள், “எனக்கு என்னாச்சு, நம்ம இதுக்கு முன்னாடி நிறைய பிகர பாத்துருக்கோம், ஆன இப்படி ஒரு பீல் நமக்கு வந்தது இல்லையே….. சினேகா… அச்சோ இந்த மதி அம்மாவோட சேந்து உன் பேர நீயே நாரவைக்கிறியேடா… முதல்ல அந்த குடும்பத்தோட ப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணுடா… சரி அத விடு, இப்ப முக்கியம் நமக்கு ஏதோ பீல் வருது…. ஆனா அந்த பொண்ணு ஏன் என்ன பார்க்குது…. ஒரு வேலை என்ன வெளில எங்கனாச்சும் பார்த்துருக்குமோ? …. அப்படி பார்த்திருந்தா எங்க பார்த்திருப்பா?” என்று தீவரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது ராமலிங்கம்,  நிரல்யாவிடம், “நிரல்யா ஏன்டா அங்கயே நிக்கிற இங்க வாடா…..” என்று கூறியவர் ஆதி மற்றும் சிநேகனிடம், “என் புள்ள இப்ப எங்க இருக்கானு தெரியல… இந்த மேல இருக்க பொண்ணுங்க இருக்குறது நாலா தான் கொஞ்சம் பரவா இல்லாம இருக்கோம் தம்பி…. அட இவுங்க யாருன்னு நான் சொல்லவே இல்ல பாருங்க…. நாங்க மேல ஒரு சின்ன பி.ஜி வச்சு நடத்துறோம், அதுல வர பணம் அப்புறம் என் பென்ஷன் பணத்துல இப்பதைக்கு குடும்பம் ஓடுது… நிரல்யா ரொம்பதங்கமான பொண்ணு…. என் புள்ள கார்த்தினா இந்த பொண்ணுக்கு பிடிக்கும்” என்று கூறிய அடுத்த நொடியே சிநேகனது முகம் வாடிவிட அதன் காரணம் புரியாமல் அவன் அமைதியாக இருக்க அடுத்த நொடியே அவரே தொடர்ந்தார், “ஆமாம் தம்பி நிரல்யா கார்திக் கூட பிறக்கா தங்கச்சி போல, எங்க மேலையும் ரொம்ப பிரியமா இருக்கும்” என்று கூறியவுடன் மீண்டும் சினேகன் முகத்தில் புன்னைகை அரும்பியது. 

இதை கேட்டு கொண்டிருந்த ஆதித்யன் நிரல்யாவிடம் திரும்பி, “நிரல்யா, ஹ்ம்ம்….பெர்பெக்ட்? சரி தான மா ” என்று கேட்க சினேகன்னுக்கோ ஒன்றும் விளங்காமல் மனதினுள், “என்ன இந்த புள்ள பேர சொல்லிட்டு பெர்பெக்ட்னு சொல்லறாரு… ஒரு வேலை பேரு நல்லா இருக்கோ” என்று நினைத்தவன் ஆதியிடம், “ஆமாம் சார் பேரு பெர்பெக்ட் தான்…. ஆனா அத ஏன் இப்ப சொன்னீங்க?” என்று கேட்க, ஆதியோ ஒரு சிறு புன்னகையை தவழவிட்டபடி சிநேகனிடம், “நான் பெயர பெர்பெக்ட் னு சொல்லல சினேகன், அந்த பேரோட அர்த்தம் பெர்பெக்ட், அதாவது நிரல்யாக்கு அர்த்தம் பெர்பெக்ட்… என்ன மா? நான் சொன்னது சரி தானா?” என்று சிநேகநிடமும், நிரல்யாவிடமும் பொதுவாக பேசி முடித்தான்.

 

உடனே நிரல்யா, ஆதியை பார்த்து, “ஹ்ம்ம் ஆமாம் கரெக்ட் சார்” என்று சிறு புன்னைகையுடன் கூறிவிட்டு தான் ஏன் ஒழிந்து நின்றேன் என்று ஆதி கேட்காமல் தன்னை இலகுவாக பேச்சியில் நுழைத்ததால் மனதினுள் ஆதிக்கு நன்றி தெரிவித்தாள். அப்பொழுதும், சினேகனின் பால் அவள் பார்வை ஒருமுறை தீண்டி செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. 

ஆனால் இந்த மௌன ஆட்டத்தை கண்டுக்கொண்ட ஆதி, இவர்கள் இருவரும் யார் என்பதை அறிய  நிரல்யாவிடம், “சும்மா உக்காரு மா ஏன் அப்படியே நிக்கிற, எங்களையும் உன் அண்ணான நிச்சுகோ மா” என்று ஒரு கள்ள சிரிப்புடன் கூற அவசரமாக சினேகன், “இல்ல இவர மட்டும் அண்ணன்னு சொல்லுங்க” என்று கூறிவிட்டு மனதினுள், “மதியோட டோடல் குடும்பமும் இப்படி தான் போல, இவரு என்னடானா அவரோட பொண்டாட்டியை, மாமியார்யை எல்லர விட ஒரு படி மேல போய்ட்டாரு, பாசமலரா இவரு இருக்க வேண்டித்தான என்ன ஏன் இழுத்துவிடுராரு ” என்று பொலம்பிக் கொண்டு இருக்க நிரல்யா ஒரு சிரிப்புடன் ஆதியை பார்த்து “சரி அண்ணா” என்று கூறினாள். 

மேலும் அவள் எங்கு வேலை செய்கிறாள், எந்த ஊர் போன்ற பொதுவான கேள்விகளை ஆதித்யன் அவளிடம் கேட்க ஆதிக்கு பதில் சொல்லிக்கொண்டே அவ்வபோது சினேகனின் மீது அவள் பார்வை படிந்து படிந்து மீண்டது. இப்படியா ஒருவரை பார்ப்பது என அவள் மனம் எடுத்துரைத்த போதும் அவளால் அவளை கட்டுபடுத்த முடியாமல் போனது. 

நிரல்யாவிடம் தான் சினேகனின் பார்வை இருந்த போதும் அவன் மனமோ, “இவ பார்க்குரதபார்த்தா, நம்மள முதல் முறை பார்க்குற மாதி இல்லையே…இதுக்கு முன்ன எங்க பார்த்துருப்பா…. வேற எப்பயும் பாத்து நம்ம நடவடிக்கையில இம்ப்ரெஸ் ஆகி இருப்பாளோ?” என தீவரமாக யோசிக்க, அவளோ ஆதியின் கேள்விக்கு அவள் பைன் ஆர்ட்ஸ் படித்திருப்பதாக கூறியவள் மேலும் அவள் வேலை செய்யும் நிறுவனம் இருக்கும் பகுதியின் பெயர குறிப்பிட சினேகனுக்கு சட்டென ஒரு யோசனை வந்தது. அவன் மனமோ, “அந்த ஏரியால ரோட் சைடு கடை அதிகமா விலை வச்சு வியிப்பான், அவனுக்கு ஒரு பாடமா இருக்கட்டும்னு அந்த கடையில எப்பயும் 5 வட சாப்பிட்டுட்டு 3க்கோ, 4க்கோ தான் காசு கொடுப்பேன் தருமத்த நில நாற்றதுக்காக, அவனுக்கு சரியான தண்டன கொடுத்தத பார்த்து இவ இம்ப்ரெஸ் ஆகிடாளோ, இல்ல அதை கடையில பெட் வச்சு டிரிபிள் ஆம்லெட்ட ஒரே வாய்ல சாப்பிட்டேனே …. ஒரு வேலை அதுல வின் பண்ணினதுனால என் டலெண்ட பாத்து இம்ப்ரெஸ் ஆகிட்டாளா ஒன்னுமே புரியலையே ” என்று அவன் வெகு தீவரமாக அவன் செய்த அத்தனை வீர தீர செயல்களையும் ஒவ்வொன்றாக அடுக்கி யோசித்துக் கொண்டு இருந்தான்.

 

அடுத்து ஆதியோ அவளிடம், “பைன் ஆர்ட்ஸ் என்றால் உனக்கு நல்லா படம் வரைய தெரியும்தானே மா?” என்று கேட்க அவளோ ஆமாம் என்பதற்கு அறிகுறியாய் தலை அசைத்தாள். சினேகனின் மனமோ, ”ஒரு வேலை, அவ கற்பன பண்ணி வரஞ்ச கனவு காதலனோட உருவம் என் உருவம் கூட ஒத்து போய்டுச்சோ….. இந்த படத்துல லாம் வரத்து போல ஏதோ மேஜிக் நடந்துருக்குமோ அதுனாலா தான் சந்தோசத்துல உறைஞ்சு போய் என்ன பாக்குறாலோ….?” என்று பலவாறாக யோசித்துக் கொண்டு இருந்தான். 

அவள் அவ்வபோது சினேகனை பார்ப்பதை கண்டு அவளிடம் ஆதி எதார்த்தமாக கேட்பதுபோல, “இதுக்கு முன்ன இவர எங்க ஆச்சும் பார்த்து இருக்கியா மா?” என்று நேரடியாகவே கேட்க அவளோ சிறு தடுமாற்றத்தோடு, ” அது .. அ… ஹ்ம்ம் அது வந்து மதி மேடம் அன்னைக்கு வந்த போது அவுங்க கால்ல அடி பட்டு இருந்தது, அப்போ இவரு தான் உதவி பண்ணினாரு அதான்… ம… மத்தப்படி பாத்தது இல்ல அண்ணா” என்று ஒரு வாராக சொல்லி முடித்தாள்.

 

“மதிக்கு கால்ல அடியா என்று யோசித்தவன், அதை தற்போதைக்கு தள்ளிவைத்துவிட்டு ராமலிங்கமிடம் அவரின் மகனின் புகை படமோ, அல்லது அப்பெண்ணின் புகை படமோ கிடைக்குமா என்று கேட்க அவரோ தனது மகன் புகை படம் மட்டுமே இருப்பதாக தெரிவித்து அதை எடுக்க உள்ளே சென்றார். 

நிரல்யாவுடன் பேசிக் கொண்டிருந்த ஆத்திக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற அவளிடம், “நீ அந்த பெண்ணோட முகத்த பாத்துருக்கியாமா?” என்று கேட்க அவளோ ஆதியிடம், “ஆமாம் அண்ணா பார்த்துருக்கேன்….. இங்க வீட்டுக்கு கூட வந்துருக்காங்க… சூப்பரா பேசுவாங்க” என்று கூற ஆதி அவளிடம், “அப்படினா உன்னால எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா மா?” என்று கேட்க அவளோ, “கண்டிப்பா அண்ணா” என்று கூறினாள். 

“உன்னால முடுஞ்ச அளவு, அந்த பொண்ணோட உருவத்த எனக்கு வரஞ்சு தர முடியுமா மா?” என்று கேட்க, அவளோ, “ஓரளவு என்ன அண்ணா? தத்துரூபமாகவே வரஞ்சு தரேன்… வரையிரதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஆனா அந்த பொண்ணு வீட்ல … ” என்று இழுக்க, ஆதியோ, “இல்ல மா உன் பேரு எங்கயும் வராது, அதுக்கு நான் பொறுப்பு… நீ ரெடி ஆனதும் சொல்ரியாமா? சினேகன் வந்து வங்கிப் பாரு” என்று கூற ஒருமுறை சிநேகனது விழி பார்வையும் நிரல்யாவின் பார்வையும் ஒரு சேர தீண்டி தழுவி சென்றது.

 

ராமலிங்கமிடம் அவரின் மகன் புகை படத்தை பெற்றவன், நிரல்யாவிடம் சொல்லிக்கொண்டு சிநேகனையும் அழைத்துக் கொண்டு கிளம்பும் முன் சிநேகனது தொலைபேசி எண்னை நிரல்யாவிடம் கொடுகும்மாறு கூறினான்.

 

சிநேகனோ மனதினுள், ” இவரு மட்டும் மதி குடும்பத்துல ரொம்ப நல்லவரு, எனக்கு இப்படி விழுந்து விழுந்து உதவி பண்றாரு… ஒருவேள அன்னைக்கு என்னோட கவிதைய இவரு காதலுக்கு கொடுத்ததுனால இப்ப உதவுறாரு போல ” என்று எண்ணிக் கொண்டான்.

 

காரில் ஏறியதும், இத்தனை நேரம் அவன் மனதில் அழுத்திக் கொண்டு இருந்த கேள்வியை ஆதி சிநேகனிடம் கேட்க, சினேகன் கூறிய பதிலில் ஆதியின் புருவமத்தியில் பலமான யோசனை முடிச்சு விழுந்தது.

 

 

 

Advertisement