Advertisement

மயிலிறகு – 19

 

“வா ஆரியன், நீங்க இங்க எப்படி அவனிக்கா? , இளா, வந்தவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாங்களா? நீ எப்போ வந்த.. ? உன் ட்ரிப் எப்படி போச்சு…” என்று சரமாரியாக, ஆதவன் தனது பேன்ட் பாக்கட்டிற்குள் ஒரு கையை விட்டப்படி, மறு கை கொண்டு அவனது தலை முடியை கோதியப்படி கேட்டுக்கொண்டு இருக்க, அனைவரும் வாய் திறப்பதற்கு முன் அவனிக்க பேச தொடங்கி இருந்தாள்…

 

“வாவ் சார், வாட் எ ஸ்டைல்.. அன்னைக்கு பார்த்தத விட, இன்னைக்கு இன்னும் ஹான்ட்சம்மா தெரியுறீங்க.. கூல்.. ” என்று அவளது கருப்பு கண்ணாடியை ஏற்றி அவளது தலையில் சொருகியப்படி அவனிக்கா, கூற, அது சரியாக அப்பொழுதுதான் காரில் இருந்து, ஆதவன் அருகில் வந்த இழையினி காதில் விழுந்தது…

 

இழையினி பின்னோடு மகிழன் வர, அவனிக்கா கூறியது, அவனது காதிலும் விழ, மகிழனோ மனதினுள், “அட இது கோத்தகிரி ப்ளாக் பெல்ட் ல… இங்க என்ன பண்ணுது… ” என்று எண்ணினான்….

 

ஆனால் அவனிக்காவால் பாராட்டி பேசப்பட்டவனோ, அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல, அதை பொருட்படுத்தாது, ஆரியனிடம், “ஆரியன்… உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன்…உன்கிட்ட பேசணும், சரி அப்பா வந்திருக்காரா?” என்று ஆரியனை பார்த்து சற்று அழுத்தமாக பேச, ஆரியனோ, இழையினியை ஒருமுறை பார்த்து, எதுவும் பேசாமால் தலை குனிந்துக்கொண்டான்….

 

ஆரியன் எதற்கு வந்திருக்கிறான்… இந்த அவனிக்கா இங்கே இப்போது வர காரணம் என்ன என்று எதுவும் தெரியாமல், கேட்டாலும் பதில் சொல்லாமல் மெளனமாக ஆரியன் குனிந்துக் கொள்ள, அவனிக்காவோ ஏதோ சுற்றுலா வந்தது போல குதுகலத்துடன் காணப்பட்டாள்….. இவை அனைத்தும் ஆதவன் மனதில் ஓட, அவனுக்கு எரிச்சல் உண்டானது…

 

அந்த எரிச்சல் உள்ளடங்கிய குரலில், “மாறா… ” என்று குரல் கொடுக்க, அவன் கூப்பிட்ட தொனியிலே, ஆரியன் மிரண்டு போக, மாறன் பதறி அடித்துக்கொண்டு வந்தான்… ஆதவனின் குரலில், வீட்லிருந்த அனைவரும் வெளியே வர, வேதா அம்மா… ஏதோ சொல்ல வந்தவராக தயங்கி மகனின் முகம் பார்த்தார்….

 

அது புரிந்தாலும், அவனுக்கு வேண்டிய தகவல் ஆரியனிடம் இருந்தும், அவனிக்காவிடமும் இருந்து ஆதவன் எதிர்ப்பார்த்தான்… எப்பொழுதும் ஒருவருக்காக, மற்றவர் பேசுவதை அவன் விரும்புவதில்லை… மகனின் கண் ஜாடையிலே, அவன் எண்ணம் புரிந்தவர், அமைதியாக இருக்க, இவை அனைத்தையும் இழையினி ஒரு பார்வையாளராய் பார்த்துக் கொண்டு இருந்தாள்….

 

“மாறா.. வந்தவங்கள கவனிச்சியா… ? போ ரெண்டு செவ்விளநீர் கொண்டு வா.. ஆரியன் நான் உன்கிட்ட கேள்வி கேட்டேன்னு நினைக்கிறேன்…” என்று மாறனிடமும், ஆரியனிடமும் அதிகார தோரணையிலே பேசினான் ஆதவன்…

 

அதற்கு காரணம், தந்தையிடம் பேசி அவனது தயக்கம் அல்லது விருப்பமின்மையை தெரிவிக்காமல், திருமணத்திற்கு முதல் நாள் ஓடி சென்றது, ஆதவனுக்கு அவன் மீது கோவத்தை ஏற்படுத்தியது… அதனால் தான், இழையினி அவனுக்கு கிடைக்க வாய்ப்பு அமைந்தது என்றாலும், ஆரியன் செய்தது சுத்த கோழை தனமாக தோன்ற, ஆதவனுக்கு, ஆரியனை பிடிக்கவில்லை…

 

அது மட்டும் தான் காரணம் என்று அவன் மனம் அவனை நம்பவைக்கை, அதையும் தாண்டி ஓர் காரணம் இருக்க தான் செய்தது.. அது  ஆரியன் மீண்டும் இழையினியை சந்திப்பதை அவன் விரும்பவில்லை…

 

இதற்கு மேலும் மௌனம் அவனுக்கு துணை புரியாது என்று தெள்ள தெளிவாய் புரிந்துக் கொண்ட ஆரியன், பேச்சை தயங்கியப்படியே தொடங்கினான்…

 

“அண்ணா.. நான்.. நான் இழையினி அப்புறம் உங்கள பார்க்க தான் வந்தேன்…” என்று தடுமாறி ஆரியன் குரல் ஒலிக்க, ஆதவன், ஆரியன் தன்னை அண்ணா என்று அழைத்தவன், இழையினியை அண்ணி என்று அழைக்காததை குறித்துக்கொண்டான்…

 

“ஹ்ம்ம் சொல்லு…” என்று மட்டும் ஆதவன் கூற, ஆரியன் அதே தடுமாற்றத்துடன் பேச தொடங்கினான்…

 

“இழையினி… நீங்க என்ன மன்னிச்சிடுங்க… நான் கடைசி நேரத்துல அப்படி செய்திருக்க கூடாது… ஆனா எனக்கு வேற வழி தெரியல… ஹ்ம்ம் இவள், என்னோட மனைவி… பேரு…” என்று ஆரியன் தொடங்க, இழையினி புன்னகையுடன் “அவனிக்கா… ” என்று கூறி முடித்தாள்….

 

இழையினிக்கு ஆரியனை பார்த்ததும் கோவம் இல்லை… ஆனால் அவன் எதற்காக இங்க வதிருகிருகிறான், ஏதும் பிரச்சனை வருமோ என்று எண்ணியே முதலில் அதிர்ந்தவள், பிறகு, ஆரியன் அவளிடம் மன்னிப்பு கேட்கவே முனைகிறான் என்பதை அறிந்து நிம்மதியும், அவனுக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை அறிந்து சந்தோசமும் கொண்டாள்….

“உங்களுக்கு எப்படி இழையினி, அவனிக்காவ தெரியும் ? ” – ஆரியன் குரலில் ஆச்சரியம் கலந்து ஒலிக்க, அவனிக்கவோ, “டியர், ஐ நோ ஹேர் டூ… நான் சொன்னேன்ல, ஒரு கேர்ள் ரொம்ப கிளியரா நிறைய இன்போ கொடுத்தாங்கன்னு… அது இழையினி தான்…. அண்ட் ஐ அல்ரெடி செட், நிவன், மகிழன் ப்ரோ, அப்புறம் ஆதவன் சார்-உம் தெரியும்… நான் பேசி இருக்கேன்…” என்று அவளது கிள்ளை தமிழில் ஆங்கிலம் கலந்து பேச, இப்போது இழையினி, மகிழனை அண்ணா என்றும், ஆதவனை அப்படி குறிப்பிடாததையும் குறிக்க தவறவில்லை…

 

இந்த உரையாடலின் பிறகு, ஆதவனின் விழிகள், ஆரியனை கூர்மையாக பார்க்க, ஆரியனோ, ஆதவனின் விழி கேள்விக்கு வாய் மொழியாக பதில் சொல்ல தொடங்கினான்…

 

“அண்ணா… நானும் அவனிக்காவும், சென்னை ல வொர்க் பண்றோம்… இங்க அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கலாம்னு கூப்பிட்டு வந்தேன்… திருச்சி வந்த பிறகு தான் தெரிந்தது, அப்பா என் தோழியா கூட இவள சந்திக்க விரும்பலன்னு.. அதுனால இவளை காதலின்னு சொல்லாம, தோழினு மட்டும் சொல்லி, அதுக்கு பிறகு மெல்ல காதல் சொல்லலாம்னு நினைத்தேன்….

 

அந்த நேரம் இவளோட, பிரண்ட்ஸ் கொடைகானல் ட்ரிப் வந்திருக்கவும், நான் இவளை அவுங்க கூட சேபா அனுப்பிட்டு, அப்பா கிட்ட பேச ட்ரை பண்ணி, பெயில் ஆனேன்… பட் டாட், நானே எதிர்ப்பார்க்காம, இப்படி திடிர்னு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வாருன்னு நினைக்கல… அதுனால, எல்லாரும் அசருற நேரம், திருச்சில இருந்து எஸ்கேப் ஆகலாம்னு யோசிச்சு, அவனிக்கா க்கு கால் பண்ணேன்… அப்போ அவனிக்கா, நீலகிரி ஏரியா-ல ட்ரிப்-ல இருந்தாள்… அவளையும் அவளோட பிரண்ட்ஸ்-யையும் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன் மதுரைக்கு வர சொல்லி தகவல் சொல்லிட்டேன்…

 

அப்பா கிட்ட சொல்ல துணிவு இல்ல… தப்பிக்க சந்தர்ப்பம் பார்த்தேன்… முதல் நாள் தான் கிடைச்சது, தப்பிச்சு, இங்க, எங்க அப்பா குறிச்ச அதே நேரத்துல, திருபரங்குன்றதுல வச்சு அவனிக்கா கழுத்துல தாலி கட்டிட்டேன்…

 

அதுக்கு பிறகு, அவனிகா பாமிலி பார்க்க போனோம்… தே அசெப்ட் அஸ்… பட் அவனிகா பாதர் ஸ்ட்ரிக்டா, என்னோட அப்பா கிட்ட சம்மதம் வாங்கி வரணும்னு சொல்லிட்டாரு… அது தான் மறுபடியும் இங்க வந்தோம்…” என்று நீளமாக பேசி முடித்தான் ஆரியன்.

 

இவை அனைத்தையும் பொறுமையாக அனைவரும் கேட்க, ஆதவனின் பதிலிற்காக ஆரியன் காத்திருந்தான்.

 

இதை எல்லாம் கேட்டு முடித்த, ஆதவன் வெகு நிதானமாக, “சரி… அதுக்கு எதுக்காக இங்க வந்த? ” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி, நிதானமாக கேட்க, ஆரியன் ஒரு நிமிடம் திகைத்தான்… அவன் அப்படி கேட்டது, இழையினி ஏனோ சங்கடமாக உணர்ந்தாள்…

 

ஆனால் ஆதவன் அதை சட்டை செய்யாமல், “நீ சரியா தான் கேக்குற ஆரியன்… பொதுவா இங்க எதிரி வந்தாலும் உபசரிக்கும் வழக்கம் தான்… ஆனா, நீ உன்ன பத்தி மட்டும் யோசித்து, கல்யாணம் அன்னைக்கு ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்ட, உன்ன தவிர வேற யாரையும் நீ யோசிக்கல… இப்ப கூட உன் மாமானார் சொல்லியதால வந்திருக்க, உன்னோட அப்பாவுக்கு நீ கொடுக்கிற மரியாதை இது தானா? அதோட… இப்போ கூட உனக்கு பிரச்னையை தனியா சந்திக்க துணிவு இல்லாமல், இப்ப எங்க உதவிய நாடி வந்திருக்க… நீ பண்ணின, பண்ற எந்த ஒரு காரியத்துலையும் எனக்கு உடன்பாடு இல்லை… அதுனால தான் அப்படி கேட்டேன்… ” என்று கூறியப்படி, தாழ்வாரத்தில் போடா பட்டிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தப்படி, கால் மேல் கால் போட்டப்படி உட்க்கார்ந்து, அவனது வலது கையால் தாடையை ஓரிரு முறை தடவியப்படி கூற, அவனது குரல், திடத்தையும், அவனது தோரணை.. அவன் எடுத்த முடிவிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்பதையும் பறைசாற்றியது….

 

ஆனால் ஆரியன் மட்டும் மனம் தளராமல், “அண்ணா ப்ளீஸ்… எனக்கு வேற ஹோப் இல்ல.. உங்கள நம்பி வந்திருக்கே… நீங்க சொன்னா, நிச்சயம் அப்பா கேட்பாரு… ஹெல்ப் மீ.. இழையினி ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களே… வேதா பெரியம்மா… நீங்களாச்சும் சொல்லுங்களே…. ” என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்க, ஆதவன் சற்று மனம் இறங்கினான். ஆனால் அவன் மீண்டும் இழையினியை அண்ணி என்று அழைக்காதது கருத்தில் பட, இழையினியை உதவிக்கு அழைத்தும் அவள் மெளனமாக இருந்தது, ஆதவனுக்கு ஒரு திருப்தி தந்தது…

 

வேதா அம்மாள், பாட்டி என்று யாரும் பேசாமல் இருக்க, ஆதவன் மௌனமகா இருக்கைய விட்டு எழுந்தான்… எழுந்து, வேதா அம்மாவை பார்க்க, அவர் கண்களால், ஆரியனுக்காக பரிந்து பேச, “சொல்லுங்க அம்மா.. ஏதோ சொல்ல வரீங்களே… ” என்று வேதா அம்மாவை ஊக்கிவிக்க, வேதா அம்மாளும், “நம்ம வீட்ட, உன்னையும் உன் அப்பாவையும் நம்பி வந்தவங்க, ஏமாற்றத்தோட போகக் கூடாது ராசா.. ” எற்று மட்டும் கூற, ஆதவனும், “அதான் அம்மாவே சொல்லிட்டாங்களே… சித்தப்பாட்ட பேசுறேன்.. நீ உன் மனைவிய அழைச்சிட்டு உள்ள போ.. மாறா கவனிச்சிக்கோ…. ” என்று விட்டு, விடு விடுவென வேக நடையுடன் அவனது அறைக்கு சென்றான்…

 

சென்று சிறிது நேரத்தில், தன்னை தயார் செய்துக் கொண்டு வர, அப்போது அவனிக்கா, இழையினியிடம் பேசிக்கொண்டு இருந்தாள்… மகிழன், ஆதவன் வருகைக்காக காத்திருக்க, ஆதவன் வந்ததும், இழையினி தானாகவே அவனிடம் வந்து, “ஏதாவது சாப்பிட்டு கிளம்பலாமே…” என்று கூற, அந்த ஒரு வார்த்தையில், ஆதவன் அகம் மகிழ்ந்து போனான்…

 

“இல்ல இழையா.. வேணாம்… முக்கியமான வேலை இருக்கு, நான் பாக்டரி க்கு போயிட்டு வந்துடுறேன்… மகிழ் போலாமா? சரி நீ வந்து ரெப்ரஷ் கூட பண்ணாம, போ ரூம் க்கு போய் ப்ரெஷ் ஆகு…” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க, “ராசா…” என்ற வேதா அம்மாவின் குரல் அவனை தடை செய்தது…

 

அவன் நின்று, வேதா அம்மாவின் முகம் பார்த்து என்னவென்று வினவ, அவரோ, நடந்த சம்பவங்கள் யாவும் சரியாக இல்லாததால், பாட்டி ஒரு ஜோசியரை சந்தித்ததாகவும், அவரோ மாப்பிள்ளை பெண்ணை இன்னும் ஒரு 15 நாட்கள் தனியே இருக்கும் படி அறிவுறுத்தியதாகவும், அதன் பின் குடும்பத்தின் மூத்த சுமங்கலி சென்று குல தெய்வ கோவிலில் பூஜை போட்டு வர, அனைத்து தீமைகளும் விலகும் என்றும் அறிவுறுத்தியதாக கூற, அதற்கு என்ன என்பது போல பார்த்து வைத்தான் ஆதவன்.

 

உடனே பாட்டி, வேதா அம்மாளுக்கு பரிந்து பேசியப்படி, “இல்ல ராசா… அதுனால பேத்தி, கீழ இருக்க விருந்தாளிங்க அறையில ரெண்டு வாரம் மட்டும் இருக்கட்டும்.. நானும் பேத்தி கூட இருக்கேன்… எங்களுக்காக இந்த சடங்கு பரிகாரத்த ஏத்துக்க ராசா..” என்று கூற, ஆதவனும் வேறு வழி இல்லாது, சம்மதமாய் தலை அசைத்து விட்டு சென்றான்….

 

சென்றவன் முதல் வேலையாக, ஆரியனின் தந்தைக்கு அழைக்க, அவரது இணைப்பு கிடைக்காமல் போக, நேரில் சென்றே தகவல் சொல்லி வர, திருச்சிக்கு ஆள் அனுப்பினான்…

 

ஆதவன் கிளம்பிய பிறகு, அவனுக்கு பிடித்த சைவ உணவு வகைகளை பாட்டியிடம் கேட்டறிந்த இழையினி, அவனுக்காக பார்த்து பார்த்து, பன்ணை ஆட்களை அனுப்பி பிஞ்சு கத்திரிக்காயும், பூச்சி இல்லாத மணத்தக்காளி கீரையும், கொண்டுவர சொன்னவள், வீட்டில் இருந்த சேனை கிழங்கையும் எடுத்துக் கொண்டாள்…

 

அவள் கூறியப்படி, பொடி, மசாலா, மற்றும் அனைத்து காய்களையும் அரிந்து வைப்பது என வேலை யாட்கள் இழையினிக்கு செய்து கொடுக்க, இழையினி க்கு சமைப்பதில் சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை… பெரியவர்களுக்கு, இட்லியும், கொத்தமல்லி சட்னியும், அவரை சாம்பாரும் செய்தவள், ஓரளவு மற்ற உணவுகள் அனைவரும் சாப்பிடும் படி கணிசமாகவே சமைத்திருந்தாள்… ஆனால் அனைத்தும் ஆதவனுக்கு பிடித்த உணவுகளை…

 

சேனை வறுவல், அரை கீரை மசியல், மிளகு தக்காளி ரசம், பூண்டு தட்டிப்போட்ட கத்திரிக்காய் வறுவல் என அடுக்கியவள், அதை அவன் ருசி பார்க்கபோகும் நொடிக்காக காத்திருக்க தொடங்கினாள்… அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு இருந்தவள் முன் ஆரியன் வந்து நிற்க, தன் முன் நிழலாடுவதை உணர்ந்து இமை உயர்த்தி பார்க்க, அங்கோ ஆரியன் சிரித்த முகமாக நின்றுக் கொண்டு இருந்தான்….

 

“சொல்லுங்க… ஏதாவது வேணுமா.. ” என்று மட்டும் வினவ, “ஆமாம் இழையினி.. வேணும், ஆனா நீங்க அதை தருவீங்களானு எனக்கு தெரியல …” என்று பீடிகையுடன் அவள் முகம் பார்க்க, இழையினிக்கு அவன் சொல்ல வருவது சுத்தமாக புரியவில்லை… இருப்பினும் கணவனின் தம்பி என்ற முறைமைக்கும், அதோடு ஆரியன் இப்போது இந்த வீட்டின் விருந்தாளி என்ற முறையிலும், “முதல்ல சொல்லுங்க.. நான் பார்கிறேன்” என்று கூற, அவனோ, “மனிப்பு கேட்டேன்… நீங்க கொடுக்கவே இல்லையே… ” என்று கூற, அவளுக்கு இவ்வளவுதானா.. என்று தோன்றியது…

 

அதற்கு இழையினி பதில் சொல்லும் முன்பே, மீண்டும் ஆரியனே முந்திக்கொண்டு, “மனமேடை வர உங்கள வர வச்சு, இவன் தான் கணவன்னு ஒரு எண்ணம் கொடுத்து, அதுக்கு அப்புறம் நான் இப்படி செஞ்சது ரொம்ப தப்பு… அதான்” என்று இழுக்க, இப்போது இழையினிக்கு கோவம் துளிர்க்க ஆரம்பித்தது…

 

“அட.. அதுனாலா என்ன.. நான் மறந்துட்டேன்.. நீங்க இனியும் இது போல என்கிட்டே பேச வேணாம்.. பழையதையும் நினைவு படுத்த வேண்டாம்… இதோட விட்றுங்க…” என்று சற்று கோவம் ஏறிய குரலில் கூற, ஆரியனுக்கு அவள் பதில் திருப்பதியாக இல்லை ஏனோ… சரி இதை பற்றி பேசுவதை இழையினி விரும்ப வில்லை என்று மட்டும் புரிய, இரவு உணவை பற்றி பேச்சை திசை திருப்பினான்….

 

இழையினிக்கு மீண்டும் மீண்டும் அந்த பேச்சை பேசுவதில் விருப்பம் இல்லை… காரணம், இப்பொழுது அவனுடைய அண்ணன் மனைவி அவள்.. அப்படி இருக்க, இன்னமும் வந்து மணமேடையை பற்றி பேசுவது, அந்த சம்பவத்தை நினைவு படுத்துவது அத்தனை இனிப்பானதாக இல்லை இழையினிக்கு.

 

இழையினியின் கோவத்துக்கு காரணம் அவனது பேச்சு, அவளது மனமோ, “இவன எப்ப நம்ம கணவன்னு மனசுல நினைச்சோம்.. அறிவு இல்ல… அதையும் இவன் இப்ப வந்து இப்படி வார்த்தை பயன் படுத்துறான்… அதுவும் அவன் அண்ணன் மனைவி ஆனா பிறகு, மன்னிப்பு னு மட்டும் சொல்லி விட்டிருக்கணும்..” என்று எண்ணமிட்டது…

 

அவள் சரியாக பதில் அளிக்காததற்கு, அவன் கடைசி நிமிடத்தில் விட்டு சென்றதே காரணம் என்று கருதிய ஆரியனோ, அவ்விடம் விட்டு நகராமல் மேலும் அவளிடம் பேசி, மன்னிப்பை பெற வேண்டும் என்று முடிவு செய்து, பேச்சை முதலில் மாற்ற எண்ணி, “இழையினி… இன்னைக்கு என்ன டின்னெர்… ” என்று கேட்டான்…

 

இழையினியோ மனதில், “இவன் ஏன் இங்கயே நின்னு இப்படி பேசியே உயிரை வாங்குறான்… ” என்று எண்ணம்மிட்டாள்.. அவனிடம், இரவுக்கு ஆனா உணவை சொல்ல, அந்த நேரம் சரியாக ஒருபுறம் இருந்து இளனும், மறுப்புறம் இருந்து அவனிக்காவும் வந்தனர்…

 

அவள் சொல்லி முடிக்கவும், அவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது… உடனே ஆரியன், “வாவ்… இழையினி எனக்கு மிளகு தக்காளி ரசம்னா ரொம்ப பிடிக்கும்.. சேனை வறுவல் செம காம்போ.. சென்னை ல நான் எங்க மிளகு தக்காளி க்கு போறது… இங்க வந்ததும், அம்மா கிட்ட சொல்லி கண்டிப்பா செய்ய சொல்லிடுவேன்… தெரியுமா? ” என்று கூற, இப்போது அவனிக்காவும் அவர்கள் பேச்சில் இணைந்தாள்… இப்படியே மாற்றி மாற்றி சாப்பாட்டு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, இழையினி அவர்களுடன் சாதாரணமாக பேசிவிட்டு, அனைத்தையும் எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைக்கும் வேலையில் இறங்கினாள்…

 

அவர்களுக்கு பதில் தந்தாலும், முதன் முதலாக கணவனுக்கு பார்த்து பார்த்து சமைத்ததில், அவன் வருகைக்காக, அவளது மான்விழி வாசலை பார்த்து பார்த்து மீண்டது…அப்போது சரியாக இளநிவன், “அண்ணி.. வந்தது இருந்து ஒன்னு ரெண்டு வார்த்தை தான் என்கிட்டே பேசுனீங்க? ஏன் இவ்ளோ அமைதியா இருக்கீங்க..” என்று இழையினியிடம் கேட்க, அவளோ, “அப்படிலாம் ஒன்னும் இல்ல தம்பி.. நீங்க ரெஸ்ட் எடுக்கணும்ல.. அதுனாலா தான் … மத்தப்படி ஒன்னும் இல்ல… இருங்க உங்க அண்ணா வந்துட்டங்கலானு பார்த்துட்டு, அத்தை மாமா, தாத்தா, பாட்டி எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டு வரேன்..” என்று கூறி, செல்ல எத்தனிக்க, நிவனோ,”அண்ணி.. அதான் செவந்தி அக்கா இருக்காங்களா…அவுங்க போய் கூப்பிட்டு வருவாங்க… இங்க உக்காருங்க உங்ககிட்ட பேசுவோம்.. எனக்கு ஒரு அண்ணி செம ஹோம்லி.. இன்னொரு அண்ணி மாடர்ன்… அவனிக்கா அண்ணி, அன்னைக்கு அண்ணன் சொல்லி உங்கள ரூம் க்கு கூப்பிட்டு வந்த போது நீங்களே எனக்கு அண்ணியா வருவீங்களோ அப்படின்னு நினச்சது உண்மை… ஆனா ஆதவன் பொண்டாட்டியா இல்லாம இப்படி ஆரியன் பொண்டாட்டிய வருவீங்கன்னு நினைக்கல… ” என்று கூறிவிட்டு கலகலவென சிரிக்க, இழையினிக்கு, அவன் சொல்லி வாக்கியத்தை புரிந்து கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டன…

 

அவளது மனமோ, “இவன் என்ன சொல்றான் ? அவரோட அறையிலே வந்து சந்திக்கும் அளவு இவுங்க பழக்கமா? அவரு, அவனிக்காவ கல்யாணம் பண்ணிப்பாருன்னு நிவன் எதிர்ப்பார்த்தானா?” என்று நினைத்தவள், அவனிக்கா வந்ததும், ஆதவனிடம் சரளமாக பேசியதும், அவனை ரசித்ததையும் ஒருமுறை ஓட்டி பார்த்தவளின் முகம், வேப்பங்காயை ருசித்தவள் போல் மாறியது…

 

“இளன் என்ன சொல்றான் அவனி…” என்று ஆரியன் சாதாரணமாக கேட்க, அவனிக்காவோ, “நிவா… ஐ அல்ரெடி டோல்ட் யு ரைட்.. ஐ காட் எ ப்ரோபோசல்…அது தான்,…. ஐ செட் நோ டு ஆதவன் சார்… ” என்று அவனிக்கா கூற, இழையினிக்கு உலகம் ஒரு நிமிடம் தலை கீழாக சுழல்வது போல ஒரு பிரம்மை ஏற்பட்டது…

 

அவனிக்கா ஆரியன் பேசியது, ஆதவனின் தேர்வின் பேரில் இளநிவன்  தன்னை விளம்பர மாடலிங் காக அழைத்ததைதும், ஆதவனை சந்தித்து மறுத்ததையும் ஆரியனிடம் முன்பே அவனிக்கா கூறியிருந்ததால், இப்பொழுது நிவன் இந்த பேச்சை தொடங்கியதும், ஆரியன் கேட்க, அதை நினைவில் கொண்டு, முழுதாக விளக்கம் தராமல் அவனிக்கா, இப்படி விளக்கம் கொடுத்தாள் ஆரியனிடம்…

 

அரைகுறையாக தெரிந்து கொண்ட இழையினியோ, “ஒரு வேளை, அவர் முன்னாடி காதலிச்சதா சொன்னாரே.. அது அவனிக்கா தானோ.. இதுக்கு மேல என்ன வேணும்.. அவரு ப்ரொபோஸ் பண்ணியதா அவளே சொல்றாளே… அதுனாலா தான், ஆரியன் கிட்ட இத்தனை கோவமா? இவுங்க வந்தது இருந்து அவர் முகமே சரி இல்லை.. அதுக்கு காரணம் அவருடைய முன்னால் காதலியை பார்த்தது தானா? ” என்று எண்ணமிட்டாள்…

 

அவளுடைய எண்ணம் மேலும் வலு பெரும் வகையில், அடுத்து அவர்களது பேச்சின் சாரம் சென்றது….

 

“என்ன ஆரியன் அன்ன இப்படி கேட்டுடீங்க ?.. ஆதவன் அண்ணா, அவனிக்கா அண்ணி கால மட்டும் தான் பாத்தாரு…. அதுலையே அப்படி இம்ப்ரெஸ் ஆகிட்டாரு… இப்படி… ஒரு பெண்ணை தேடி என் அண்ணன் அலைஞ்சு நான் பார்த்ததே இல்லை… ” என்று கூற, அவனிக்கா இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்…

 

ஆரியனோ, “போதும் ஹனி…. முடியல…” என்று அவனிக்காவின் பெருமை தம்பட்டத்தை பார்க்கமுடியாமல் கூற, அவளோ, “அது அந்த பயம் இருக்கட்டும்… எனக்கு இப்பவும் ஆப்ஷன்ஸ் இருக்கு….” என்று கூறினாள் அவனிக்கா.

 

அதவாது, இப்பொழுது கூட அவள் ஒரு விளம்பர நடிகை ஆகும் அளவு அவள் கையில் ஒரு பணி இருக்கிறது என்ற பொருளில்…. ஆரியனும், இதே போல அவள் பல முறை பெருமை அடித்துக் கொண்டதனால், அதை கேட்டு கேட்டு சலித்து போய் இருந்ததனால், போதும் என்று கேலியாக அவளை அடக்கினான்…

 

அம்மூவரும் சிரித்துக் கொண்டு இருக்க, இழையினிக்கு அவ்விடம் ரசிக்கும் படியாக இல்லை… என்ன தான் கணவன், இனி அவள் தான், அவனின் சரி பாதி என்று கூறி இருந்தாலும், அவன் காதலித்த பெண் யார் என்று தெரியாத வரை இருந்த நிம்மதி, அது யார் என்று தெரிந்த பின் இழையினிக்கு இல்லாமல் போனது…

 

இழையினியின் மனமோ, “எனக்கு இப்பவும் ஆப்ஷன்ஸ் இருக்கு….” என்று அவனிக்கா கூறிய வாக்கியத்தில் உழன்றுக் கொண்டு இருந்தது…

இந்த சிந்தனையில் இழையினி இருக்க, வேலை முடிந்து ஆவலாக வந்த ஆதவன், இழையினியை காணாமல் சிறு ஏமாற்றத்துடன் வந்து முற்றத்தில் நிற்க, செவ்வந்தி அவனையும் சாப்பிட அழைக்க, இப்போது ஆதவனுக்கு லேசாக கோவம் துளிர் விட தொடங்கியது…

 

“நான் வந்தேனா, இல்லையானு கூட பார்க்காமா என்ன பண்றா…” என்று ஆதவன் எண்ணமிட, வேதா அம்மாளும் பின்னோடு வந்து அவனை அழைக்க, அவன் இழையினியை பற்றி கேட்க, அவரோ “இங்க தான் இருப்பா ராசா.. இன்னைக்கு முழுதும் அவள் தான் சமாச்சா… சாப்பாட்டு அறைல இருப்பா, இல்லனா வந்திடுவா.. நீ வா…” என்று கூர் மகனை அழைத்துக் கொண்டு போக, சாப்பாட்டு அறையில் இருந்து சிரிப்பொலி பலமாக எதிரொலித்தது….

 

அனைவரும் உள்ளே வர, அங்கே இருந்த நால்வரும் பெரியவர்களை பார்த்து எழுந்து நின்றனர்.. இழையினி மட்டும் மருந்துக்கும் சிரிப்பில்லாமல் ஆதவன் முகத்தை பார்க்க, அவளது மனதில் குழப்பங்கள் கார் கால மேகங்களாய் சூழ்ந்து இருந்தன… மற்ற மூவரும், ஆதவனை பார்த்ததும், வாயை இறுக மூடிக்கொள்ள, அங்கே யார் சிரித்தது என்று தெரியாத அளவு இருந்தது… ஆதவனின் பாட்டியோ , இழையினியை புகழ்ந்து பேசுவதாய் நினைத்துக்கொண்டு, “எம் பேத்தி வந்ததும், வீடே கலகட்டிருச்சு… சிரிப்பு சத்தம் இப்படி கலகலன்னு கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு… சிறுசுங்க இம்புட்டு சந்தோசமா சிரிகிறாங்கனா, என் பேத்தி தான் காரணம்” என்று கூறிய அந்த மூதாட்டி, இத்தனை நாட்கள் அபசகுனம் மட்டுமே நிகழ்ந்திருக்க, இழையினிக்கு பரிந்து பேசுவதாய் நினைத்து இதை கூற, ஆதவனுக்கோ கோவம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பாய் உருவெடுத்தது….

 

ஆதவன் கண்களுக்கு, நிவன் அவனிக்கா புலப்படவில்லை… ஆரியன் இருக்கும் இடத்தில், கணவன் வரும் நேரம் கூட மறந்து, இப்படி சிரித்துக்கொண்டு இருக்கிறாள் என்பது மட்டுமே அவனது கவனத்தில் பதிந்தது… ஆரியன், ஆதவன் கண்களுக்கு அவனது தம்பியாக தெரியாமல், இழையினிக்கு முன்பு பார்த்த மாப்பிள்ளையாக தெரிந்தான்… இழையினியின் மனதில், ஆதவன் தான் இருக்கிறான் என்று அவன் அறிந்தாலும், ஆரியன், இழையினிடம் சகஜமாய் பேசுவதை ஏனோ எதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை ஆதவனால்…

 

இருந்தும் சுற்றம் கருதி, ஆதவன் அதற்கு மேல் அதை பற்றி சிந்திக்காது… அனைவருடனும் சாப்பிட அமர, ஆதவனுக்கு பிடித்த உணவுகளாக அனைத்துமே பரிமாறப்பட, அப்பொழுது சரியாக வேதா அம்மாள் கூறியது அவன் நினைவுக்கு வந்தது….

 

அவன் மனமோ, “என்னோட இழையா தான் சமைத்திருக்கா… எனக்கு பிடித்தத, பார்த்து பார்த்து செய்திருக்கா… செய்திட்டு, அடுக்கும் போது..இவுங்க எல்லாரும் எதார்த்தமாக வந்திருக்கலாம்… அப்படியே நாகரீகம் கருதி இங்க நின்னு பேசி இருப்பாள்… என் மீது அக்கறை இல்லாமல் இல்லை…” என்று அவனது மனம் எண்ண தொடங்க, மீண்டும் அவனது மனம், “ஆனா எனக்கு பிடிச்ச உணவு வகைகளா எப்படி செய்தா? யார்கிட்டயும் கேட்டு செய்திருப்பாளோ? ” என்று என்னமிட்டப்படி ரசித்து அவன் உண்ண, அவனது முகத்தில் மெல்ல மெல்ல கடுமை மறைந்து மென்மை குடி ஏற தொடங்கியது…

 

அதை கலைக்கும் விதமாய், நிவனின் குரல் ஒலிக்க அங்கே சூழல் மாறியது….

 

ஆரியன் எடுத்து மிளகு தக்காளி ரசத்தை ஒரு குவளையில் எடுத்து பருக, அதை பார்த்த நிவனோ, “வாவ்.. இழையினி அண்ணி… ஆரியன் அண்ணா க்கு பிடிக்கும்னு இதை செஞ்சீங்களா ? அவரு உங்ககிட்ட பிடிக்கும்னு சொன்னாரே.. பரவா இல்ல அண்ணி, விருந்தாளிகல உபசரிக்கிறதுல நீங்க என் அம்மாவையே பீட் பண்ணிடுவீங்க… நல்ல மாமியார், நல்ல மருமகள்…” என்று அவன் சிரிப்புடன் கூற, அங்கே அனைவரும் இழையினியை புகழ, அந்த நேரத்தில் இழையினியால், “இல்லை இது என் கணவனுக்காக செய்ததது… உங்களுக்காகவோ, ஆரியனுக்காகவோ அல்ல… ” என்று சொல்ல முடியாத சூழ் நிலை…

 

அதை மறுத்து பேசமுடியாத சூழ்நிலை, அதோடு அவள் மன நிலை சரியாக இல்லை… தன் கணவனின் முன்னால் காதலி அவனிக்கா என்று அறிந்து.. ஆதலால் அவர்கள் பேசியதை பெரிது படுத்தாமல், அவள் சிலை என நிற்க, ஆதவனுக்கு அந்த ரசம் இப்போது விஷம் போல தோன்றியது… அவனுக்காக, அவள் மனைவி அதை செய்யவில்லை.. யாரோ ஒரு மூன்றாம் நண்பரின் பிடித்தம் அறிந்து செய்திருக்கிறாள்… இந்த செய்தி, அவன் நெஞ்சில் கோவத்தோடு, வேதனையும் தந்தது… சரியாக அந்த நேரம், நிவன் ஆதவனிடம், “என்ன அண்ணா, அவனிக்கா அண்ணிக்கிட்ட நீ வந்தது இருந்து பேசவே இல்ல…? ” என்று கேட்க, அந்த கேள்வியில் கவனம் பதிக்கமால், அவன் சிந்தனையில் உழன்றப்படி,  விருட்டென்று பாதி சாப்பாட்டில் எழுந்தவன், அப்படியே கை கழுவி விட்டு, “எனக்கு மறுப்படியும் வேலை இருக்கு பாக்டரி-ல நான் கிளம்புறேன்…” என்று மட்டும் பொதுவாக கூறிக்கொண்டு சென்று விட, போகும் கணவனை ஒரு வலியுடன் பார்த்துக்கொண்டு நின்றாள் இழையினி.

 

கணவன் சென்ற பின்பு, பேருக்கு கொறித்துவிட்டு, தனது வீட்டுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, பாட்டியுடன் அறைக்கு சென்றவள், வெகு நேரம் ஏது ஏதோ சிந்தனையோடே புரண்டவள், நெஞ்சில் குழபங்கலோடும், விவரிக்க முடியாத வலியோடும் அப்படியே கண் அயர்ந்தாள்…

 

அன்று இரவு, ஆதவன் பாக்டரியில் இருந்து வெகு நேரம் கழித்து வர, நேராக விருந்தாளிகள் அரை நோக்கி செல்ல, அங்கே அவனது பாட்டியுடன் இழையினி உறங்கி கொண்டு இருந்தாள்… தூங்கும் மனையாளை பார்த்து, “இழையா… உன்ன நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா? இந்த சில நாட்கள் ல எனக்கு என்ன விட, நீ தான் முக்கியம் ஆகிட்ட, ஆனா நான் உனக்கு அப்படி ஆகவில்லையா? நான் உனக்கு முக்கியம் இல்லையா.. எனக்கு தெரியும் உன் மனசுல நான் இருக்கேன்… ஆனா உன் வாழ்க்கையில எந்த அளவு நான் முக்கியம் இழையா… எனக்கு அந்த ஆரியனை பிடிக்கல… நீ மத்தவங்ககிட்ட, இளன், மகிழ் னு பேசுறது எனக்கு எதுவும் தோணல… ஆனா இந்த ஆரியன் எனக்கு பிடிக்கல இழையா.. அவனுக்காகவா இந்த சாப்பாடு சமைச்ச? உன்ன பாக்குறதுக்காக தான டி, சீக்கிரமா வந்தேன்… நீ எதிர்பார்க்கலியா டி…” என்று புலம்பிக்கொண்டு இருந்தான் மனதினுள் அவன் மனையாளிடம்…

பிறகு, சிறு தளர்ந்த நடையுடன் அவன் அறை நோக்கி சென்றான்…

 

இது எதுவும் அறியாமல், இழையினி உறங்கி கொண்டு இருக்க, அவளது கனவிலோ, ஆதவன், அவனிக்கா என்று மாற்றி மாற்றி வந்து கனவிலும் அவளுக்கு வேதனை தர, தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தாள் இழையினி…

 

இப்படியே அந்த இரவு ஒரு வழியாக முடிவுக்கு வர, நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் போலவே அடுத்தடுத்து இழையினிக்கும், ஆதவனுக்கும் விருப்பம் இல்லாத சம்பவகள் ஓரிரு முறை நிகழ்ந்தது நிவன், ஆரியன், அவனிக்காவின் தயவால்….

 

அவர்கள் மூவரும் ஏதோ ஒன்று நினைத்து பேச, ஆதவன், இழையினியின்  நெருக்கத்தை அது குறைத்துக்கொண்டே வந்தது… அவர்களுக்குள் இடைவேளை பெரிதாக, ஒருவரிடம் மற்றவர் மனம்விட்டு பேசாமல் தனி தனியே ஒருவர் நினைவில் மற்றவர் கரைந்துக் கொண்டு இருந்தனர்…அந்த இரண்டு நாட்களாய்….

 

அதற்குள், ஆரியனின் தந்தையை ஒரு வழியாக பிடித்த ஆதவன், அவர் ஆரியனை தேடி சென்னை சென்று இருப்பதை அறிந்து, அங்கும் தகவல் கொடுக்க, அவர் அத்தியூர் வர மூன்றாவது நாள் ஆகிற்று… ஆரியன், அவனிக்காவின் வரவின் பின்னால் ஆதவன், இழையினியின் மனதில் குழப்பங்களும் வேதனையும் கூடி இருக்க, அவர்களுக்குள் கண்ணிற்கு தெரியாத நூல் இழை படர தொடங்கி இருந்தது…

 

ஆரியனின் தந்தை வரும் நாளும் அழகாக விடிந்தது… ஆனால் அந்த விடியல், ஆதவனின் திருமண வாழ்க்கைக்கு, இருளாக இருக்க போவதை அறியாமல், ஆதவன் அவர் வருகைக்காக காத்திருந்தான்….

 

Advertisement