Advertisement

                         மின்னல்-9

 

“அப்போ நீ அவள அடிச்சிட்ட…?” என்று ஒற்றை புறுவத்தை உயர்த்திய ஹாட்பாக்ஸை….ச்சே ஹெச்.ஓ.டீயை பார்த்து நின்றவளின் முகத்தில் துளியும் குற்ற உணர்வு இல்லை.

 

எப்படியிருக்கும் அவளை பொருத்தமட்டில் அவள் செய்தது சரியல்லவா…எது வந்தாலும் பார்த்துவிடலாம் என்றிருக்க அதில் லாரி லாரியாக மண்ணள்ளி கொட்டியிருந்தாள்  புவன்.

 

“இந்த ஹெச்.ஓ.டீ. ஹாட்பாக்ஸ்ஸ எப்படி சமாளிக்கப் போறோம்…???” என்று அவள்  வினவியதுதான் தாமதம் குறிஞ்சிக்கு புரையேறிவிட கண்களோரத்தில் நீர் கசிய இறுமிக் கொண்டிருந்தாள். அவள் தலையில் தட்டியவாறு…”அனௌன்ஸ் பண்ணிட்டு வரதுக்குள்ள இவ்வளவு அக்கப்போரா…? நான் வர வரைக்கும் வெய்ட் பண்ணிருக்கலாம்ல” என்று அங்கிருந்த முக்காலி ஒன்றை இழுத்துப் போட்டமர்ந்தாள் ஸ்வரா.

 

“அப்போ மேடிய சஸ்பெண்ட் பண்ணிருவாங்களா?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட ரிஷியைப் பார்த்து

 

“நடிக்காதடா…வெகேஷனுக்கா ப்ளான் பண்ற?” என்று புவன் சரியாக கனித்துவிட

 

“ஈஈஈ” என்று சிரித்தவாறே “சரி இப்போ என்னதான் பண்றது???” என்றான்.

 

“பேசாம நாமளே போய் அவர்ட்ட சொல்லிரலாம்” என்று சர்வசாதாரணமாக உரைத்த குறிஞ்சியை மற்ற மூவறும் ‘லூசாப்பா நீ!” என்றுப் பார்க்க அதில் கடுப்பாகியவளோ…

 

“கய்ஸ்! எனக்கு தெரிஞ்சு அதான் பெஸ்ட் நாம மொதல சொல்றதுதான் சரி” என்று எழுந்தவள் “வர்ரீங்களா???” என்றழைக்க…இப்பொழுது இங்கு இவர் முன்னால் நின்றுக் கொண்டிருக்கிறாள்.

 

“சொல்லு குறிஞ்சி!”

 

“சர் அவ ரொம்ப தப்பா பேசினா…அதுமட்டுமில்லாம அவ பண்ணது… ஒருத்தங்களோட அப்பியரன்ஸ வச்சு கிண்டலடிக்கறது தப்பில்லையா…?”

 

“தப்புதான்…அதுக்காக அடிச்சிருவியா?”

 

“இல்ல சர்…அவ ரொம்ப தப்பான வார்த்தை யூஸ் பண்ணதுனாலத்தான் கோவத்துல அடிச்சிட்டேன்”

 

“ம்ம்ம்…கோவத்த கட்டுபடுத்தனும் குறிஞ்சி…எல்லா சமயமும் ஒன்னுபோல இருக்காது….சரி போ நான் பாத்துக்கறேன்” என்றுவிட அவளுக்கோ ஆச்சர்யம்!

 

பின்னே அவள் செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு மனிதன் ஆடித் தீர்த்துவிடுவார் என்றல்லவா நினைத்து வந்தாள்.

 

ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தால் அவர் புவனிடம் திரும்பியிருந்தார் “இதுக்கெல்லாம் அழலாமா மா…? நாங்கல்லாம் எதுக்கிருக்கோம் இங்க ஸ்டாஃப்னு எந்த ப்ரச்சனையா இருந்தாலும் தயங்காம சொல்லனும்…நான் பாத்துக்கறேன் போய் முகத்த கழுவு மொதல்ல!” என்றவர் வெளியே சென்றுவிட

 

அவ்வளவு நேரம் வெளியே நின்றிருந்த ரிஷியும் ஸ்வராவும் உள்ளே வந்தனர்.

எல்லோரும் அந்த விழாவிற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்க அந்த  ஸ்டாஃப்களுக்கான அறையே வெறிச்சோடி இருந்தது.

 

“ஹே!!! என்னாச்சு மேடி?” என்றவாறு அவள் தோளை தொட அதில் நினைவு பெற்றவளாக

 

“இல்ல ஸ்வர் ஒன்னுமில்ல…ப்ராப்ளம் சால்வ்ட்” என்றிருந்தாள்.

 

“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?”

 

“ப்ச் தெரியல…மூடே சரியில்ல”

 

“திட்டினாரா மேடி?” என்று ரிஷி அவள் முகத்தையே கூர்ந்துப் பார்க்க

 

“ப்ச் இல்ல ரிஷி. திட்டலாமில்ல அவங்க பார்த்துக்கறேன்னு சொல்லிருக்காங்க”

 

“அப்புறம் என்னதான் உன் ப்ரச்சனை???”

 

“ப்ச் தெரியலையே! ஒரு மாதிரி இருக்கு” என்று அதே பல்லவியை பாட அதில் கடுப்பாகிப்போன ரிஷி “உன்ன…நீ இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட” என்றவாறு அவள் வாயை மூடி இழுத்துச் செல்ல அவளோ “டேய்!!! விட்டுத்தொலை பக்கீ!!!” என்று அவன் மூடியிருந்த கைக்குள் கத்தினாள்  “ச்சீ…பேசாத என் கையெல்லாம் கூசுது அமைதியா வா இல்ல அல்லேக்கா தூக்கிருவோம்” என்று மிரட்ட  மற்ற இருவரையும் பார்த்தவளுக்கு ‘இதுங்க செஞ்சாலும் செஞ்சிரும்’ எனத்தோன்ற அமைதியானாள்.

 

                       *************

 

“லீலா!!! அஷ்மிமா!!!” பக்கத்திலிருந்த காலிங் பெல் ஸ்விட்ச்சை அழுத்தாமல் கதவை தட்டிக் கொண்டிருந்தார் ஜிதேன்.

 

“இதோ வரேன்பா” என்ற குரல் வர சில நொடிகளில் அஷ்மியும் வந்திருந்தாள். கதவைத் திறந்தவள் அவரிடமிருந்து பையை வாங்கிச் செல்ல “யாழி இன்னும் வரலையாடா???” என்று தன் அருமை மகளை தேடினார் அந்த அப்பா!

 

“இல்லபா…இப்போதான் ஃபோன் பண்ணா கிளம்பிட்டாளாம் இருபது நிமிஷத்துல வந்துருவா” என்று அவருக்கான பதிலை தந்தவள் பையை கொண்டுச் சென்றாள்.

 

அங்கு கிடந்த சோஃபாவிலேயே சற்று நேரம் அமர்ந்தவர் பின் எழுந்துச் செல்ல முற்பட அவரை தடுத்து நிறுத்தியிருந்தது அந்த அழைப்பு மணி!

 

‘யாழியா இருக்குமோ?’ என்று கதவை திறந்தவருக்கு முன்னால் பீஜ் நிற பேண்ட்டும்..கறுப்பு நிற சட்டையுமாக நின்றிருந்தான் அந்த இளைஞன்!

 

புறுவ முடிச்சுடன் அவர் நிற்க அவனோ அவரைப் பார்த்த ஒரு நொடி அதிர்ந்து பின் “ஹாய் அங்கிள் நான் அஷ்மியோட க்ளாஸ்மேட்…” என்று அவன் முடிக்கும் முன்பே “ஓ…வாப்பா வா…உள்ள வா” என்று வரவேற்க அப்பொழுதுதான் அங்கு வந்த லீலாவோ “வா நரேன் உள்ள வா” என்றவர் அவன் உள்ளே நுழையவும் “அஷ்மி!!! நரேன் வந்துருக்கான் பாரு…சீக்கிரம் வா” என்றழைத்தவர் இவனிடம் திரும்பி “இவங்க அஷ்மி அப்பா ஜிதேன்!”

 

“ஜிதேன் இவன் அஷ்மியோட க்ளாஸ்மேட் நரேன்!” என்று அறிமுகப் படுத்த…முதலில் குழம்பினாலும் பின் ஜிதேந்திரன் பார்வையாலேயே வினவ அதை புரிந்துக் கொண்ட லீலாமதியோ ‘ஆம்’ என்பதாக கண்களை மூடித் திறந்தார்.

 

“பேசிட்டிருங்க இரண்டு பேரும் நான் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்றவர் ஜிதேந்திரனின் கையை அழுத்திவிட்டுச் செல்ல அவரும் அமைதியாக நரேனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அவருக்கோ உள்ளுக்குள் கோபக் கடல் அலையை வீச தயாராக இருந்தது. என்னதான் லீலா அன்று அவ்வளவு சொல்லியிருந்தாலும் அவருக்கு உள்ளுக்குள் வருத்தமில்லாமல் இல்லை. அவனையே கூர்ந்து நோக்க நரேனோ சற்றும் யோசியாமல் அவர் கையைப் பற்றியிருந்தான்…

 

“அங்கிள் உங்க கோபம் உங்க கண்ணுலேயே தெரியுது…ஐம் சாரி அது ஆக்ஸிடெண்ட் தான் பட்…அடிப் பட்டது அவங்களுக்குதான்…நானும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்…ரியலி சாரி அங்கிள்!” என்றவனை என்னவென்று சொல்ல…

 

அவர் எதிர்ப்பார்க்காத திருப்பம் அல்லவா இது..! போலித்தனமில்லாத மன்னிப்பு வேண்டல்..!! அதற்காக அவன் தன்மீதும் பழியை போட்டுக் கொள்ளவில்லை….விபத்துதான்…இருவர் மீதும் தவறிருக்கிறதுதான்…இருந்தும் அடி பட்டது அவளுக்கு அதனால் மன்னியுங்கள்! என்றுக் கேட்கிறான்.

 

அதில் அவர் மனம் சற்று நிம்மதியடைய அவர் முகத்தில்  சிறு கீற்றாய் ஒரு புன்னகை…!

 

“க்க்ர்ரர்ர்” என்று அந்த அழைப்பு மணி அலற அதில் கலைக்கப் பட்டவராக  “எக்ஸ்க்யூஸ் மீ!!!” என்று எழுந்தவரை தடுத்து நிறுத்திய லீலா ட்ரேயை அங்கே வைத்துவிட்டு “நான் பாக்கறேன்” என்றார்.

அவர் கதவில் கை வைக்க அதுவரைக்கூட பொருக்க முடியாதவள் போல “அஷ்மீ!!! லீல்!!! கதவைத் தொறங்க!!!” என்று அந்தபுறம் இருந்தவள் கத்திய கத்தலில் அறையில் எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த அஷ்மிக்கு தூக்கிவாரிப் போட்டது.

 

‘அடியாத்தி!!! இவ ஏற்கனவே கடுப்புல இருக்கா போலேயே…இப்போ இவன பார்த்தா…? போச்சு! பெருசா ஏதோ இருக்கு இன்னைக்கு…’ என்று தனக்குள்ளே பேசியவள்…குடுகுடுவென ஹாலிற்கு ஓடினாள்.

 

அங்கு நரேனை காணாமல்போக அவள் பார்வையை அலையவிட அங்கிருந்த பால்கனியில் நின்றிருந்தவன் இவளைப் பார்த்து வரவும் குறிஞ்சி வீட்டினுள் வரவும்  சரியாக இருந்தது.

 

கதவில் சாய்ந்து நின்றவாரே கதவைத் தட்டியவள் திடீரென கதவு திறக்கப் படவும் ஒரு நொடி விழப் பார்த்தாள் பின் லீலா அவளைப் பிடித்துவிட அவரிடம் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தவள்.

 

“குறிஞ்சிக்கு சூடா ஒரு காஃபி வேணும்!” என்றாள்.

 

“டைம் என்னாகுது இப்போ காஃபியா? சரி வா” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

 

வேகவேகமாக ஓடி வந்த அஷ்மியைப் பார்த்த ஜிதேனோ “என்னடா??? ஏன் இப்படி ஓடிவர?” என்று நிதானமாக கேட்டுக் கொண்டிருக்க

 

“அம்மூ!!! காஃபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா!!!” என்றவாரே உள்ளே நுழைந்த குறிஞ்சி “என்ன அப்பூ இன்னைக்கு சீக்கிரம் வந்தாச்சுபோல….” என்று திரும்பியவள் அங்கு நின்றுக் கொண்டிருந்த நரேனைக் கண்டு ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்….அதிரிச்சியில்…!

 

அஷ்மியோ ‘இவ பார்வையே சரியில்லையே…என்ன செய்ய போறாளோ…’ என்று நிற்க நரேனின் சிந்தனையும் அதே வேவ்லெந்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது ‘டேய்! நரேனு என்னடா சொர்ணாக்கா இப்படி லுக்கு விடுது…’ என்று மனதிற்குள் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தான்.

 

(எதையும் தாங்கும் இதயம் உதை..ச்சே இதை தாங்குவானா???)

Advertisement