Advertisement

                      மின்னல்-8

 

“ஸ்ஸ்ஸ்” என்ற குக்கர் விசில் சத்தத்தில் பதறியடித்துக்கொண்டு படுக்கையறையில் இருந்து அடுக்களைக்கு ஓடினான் நரேந்திரன்.

 

“ச்சே!!! பக்கத்து வீட்டுலயா…நம்மதான் குக்கரே வைக்கலேயே…ஏன்டா நரேன் இப்படியா பல்பு வாங்குவே…எதிர்கட்சி காரன் பாத்தா என்ன நினைப்பான்…???” யாருமில்லாத தைரியத்தில் தன்பாட்டுக்கு பேசிக்(?) கொண்டிருந்தான் அவன்.

 

அவன் தனியாக இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் அலறியது அவனது கைபேசி. “இதுவாது நம்ம வீட்டுலதானா…?” என்று புலம்பியவாரே ஹாலிற்கு வர…அங்கு டேபிளில் வைக்கப் பட்டிருந்த  ஃபோனில்  அம்மா என்ற எழுத்துக்களுடன் அவன் அன்னை சத்யா சிரித்துக் கொண்டிருந்தார்.

 

“ஐ!!! அம்மா…” என்று சிறு பிள்ளையாய் குதூகலித்தவன் அதை எடுத்து

“ஹலோமா!!! எப்படியிருக்க…? அப்பா எப்படியிருக்காங்க…? தாத்தா , பாட்டி , பெரிய தாத்தா , சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை , ரேவதி…எல்லாம் எப்படியிருக்காங்க…?” என்று மொத்த ஊரையே விசாரித்துக் கொண்டிருந்தான் அந்த நல்லவன்.

 

அந்த பக்கத்தில் இருந்த சத்யாவோ இவனது இடைவிடாத விசாரிப்பில் கடுப்பாகிப்போய் “சரிடா நீ லிஸ்ட் போட்டு கூப்பிடு…நான் அப்புறமா பேசறேன்…” என்று வைக்க போக அவனோ “மா மா மா…வச்சிராத…”

 

“பின்ன என்னடா நைட்தானே பேசினோம் என்னவோ பல மாசமா பேசாத மாதிரி பண்ற…நல்லவேளை ஆடு மாடுகள விட்ட…”

 

“பாரேன்…மறந்தே போய்ட்டேன் பக்கத்து வீட்டு விறுமாண்டி எப்படி இருக்கான்…?” என்று அவன் பக்கத்துவீட்டு நாய் குட்டியைப் பற்றிய நலம் விசாரிக்க அவரோ

 

“அடேய்!!! போதும்டா” என்று அலறியிருந்தார்.

 

“ஹாஹா…சும்மா விளையாட்டுக்குமா…இப்ப சொல்லு எல்லாரும் எப்படியிருக்காங்க…???”

 

“எல்லாரும் நல்லா இருக்காங்கபா… பாவம் ரேவதி தான் உன்ன கேட்டா…உனக்கு எப்போ கண்ணா லீவ் கிடைக்கும்…?”

 

“பாக்கறேன்மா…எப்படியும் டிசம்பர்ல லீவ் கிடைக்கும்போது ஊருக்கு போலாம் மா…நெக்ஸ்ட் வீக்கெண்ட் அங்க வர ட்ரை பண்றேன்”.

 

“சரிடா நீ பாத்து சொல்லு அதுக்கேத்தா மாதிரிதான் ப்ளான் பண்ணனும்”.

 

“ம்ம்ம் சரிமா”

 

“சாப்ட்டியாடா?”

 

“ம்ம்ம் காலைல சாப்ட்டேன்மா…சொல்லிருக்கேன்லமா அஷ்மி…லீலா ஆன்ட்டீ…பத்திலாம்???”

 

“ஆமாடா”

 

“ம்ம்ம் இன்னைக்கு டின்னர் அங்கதான்மா…இன்வைட் பண்ணிருக்காங்க”

 

“ஓ….சரிபா பாத்து கண்ணா…வெறும் கையோட போகாதே…நேரத்துக்கு வீடு திரும்பிடு…வேகமா வண்டி ஓட்டாதே…” என்று பல அறிவுரைகளுக்கு பின்னே அவர் ஃபோனை வைத்தார்.

 

அவனும் பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தான்…வேரென்ன துணிகளுக்கு இஸ்த்திரி போட்டுக் கொண்டிருந்தான். கடையில் குடுக்கலாம்தான் ஆனால் என்னவோ தன் வேலையை தானே செய்து பழகியிருந்த நரேந்திரனுக்கு அதில் விருப்பமில்லை…அதனால்தானோ என்னவோ எல்லா வேலைகளையும் அவனே செய்ய கற்றிருந்தான்…இல்லை அப்படி வளர்த்திருந்தார் சத்யா!

 

                            ***********

 

அந்த கல்லூரியே விழாக்கோலம் பூண்டிருக்க நிற்க நேரமில்லாம்ல் அந்த காலை நேரத்திலும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர் மாணவமணிகள்.

 

அதே படபடப்புடனே  அங்கே காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.

 

வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பெரியளவிலான ஃபெஸ்ட் அது. பிற கல்லூரிகளிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதால் மிக முக்கியமான ஒன்றும்கூட. இம்முறை அவர்கள் கல்லூரியில் நடக்கவிருப்பதால்தான் இவ்வளவு படபடப்பும்.  அவர்களது க்ளாஸின் ரெப்பாக. ஆக ஸ்வரா ஓடிக் கொண்டிருக்க வாலண்ட்டியராக இவர்கள் மூவறும் அவளுடன் இனைந்திருந்தார்கள்.

 

“ரிஷி புவன் எங்க?”

 

“அதானே அவ எங்கபோனா ரிஷி?” என்று ஸ்வராவும் வந்துவிட ரிஷியோ

 

“க்ளாஸ்க்கு போய்ட்டாளோ?” என்று எதிர் கேள்வி கேட்டு வைத்தான்.

 

“ப்ச் அப்டிலாம் இருக்காது நம்ம நாலு பேருக்கும் சேர்த்துதான் பெர்மிஷன் வாங்கினேன்” என்றது ஸ்வரா

 

குறிஞ்சியோ ‘அவ நல்ல நாள்லேயே எப்படி பங்க் பண்ணலாம்னுதானே யோசிப்பா…அவ எப்படி?’ என்று சிந்தனையில் மூழ்கிவிட அங்கு வந்த கல்ச்சுரல் செக்ரெட்ரியோ “கய்ஸ்!!! ஃப்ளாஷ்மாப் ஸ்டூடன்ட்ஸ்ஸ செமினார் ஹால்ல அஸெம்பிள் ஆக சொல்லிடுங்க….” என்றவன் நிற்கக்கூட நேரமில்லாம்ல் ஓடியிருந்தான்.

 

“சரி மேடி நான் போய் எல்லா க்ளாஸ்லையும் அனௌன்ஸ் பண்ணிட்டு வரேன்” என்று கிளம்பியிருந்தாள் ஸ்வரா.

 

“என்ன மேடி யோசனை?”

 

“இல்ல ரிஷி…இவ எங்க போயிருப்பா…?” என்று அவளுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்திருந்தாள் புவன்.

 

“ஓய்!!! எரும எங்க இருக்க நீ???”

 

“க்ரௌண்ட்ல இருக்கேன் மேடி” என்றவளின் குரலில் உற்சாகமில்லை என்பதை உணர்ந்தவள் “இரு வரேன்” என்றுவிட்டு க்ரௌண்டை நோக்கி தன் நடையை கட்டினாள் சற்று வேகமாக.

 

அவளுக்கு புவனின் முகத்தைப் பார்த்த மறுநொடியே புரிந்துவிட்டது ஏதோ சரியில்லையென்று…இல்லையெனில் எப்பொழுதும் கலகலப்பாக இருப்பவள் இப்படி தனியே அமர்ந்திருப்பது…சாதாரணம் அல்லவே.

 

“என்னாச்சுடா???” என்றவள் பக்கத்தில் அமர்ந்துக்கொள்ள மறுநொடியே அவள் தோளில் சாய்ந்திருந்தாள்.

 

தோளில் ஈரத்தை உணர்ந்து அவள் “ஏ!!! என்னாச்சு இங்க பாரு!” என்க பிடி இன்னும் இறுகியது.

 

ரிஷியோ ” என்னாச்சு புவன்???” என்று பதற அவனிடம் பொறுமையாக இருக்கும்படி கண்ணை காட்டியவள் புவனை அவளிடம் இருந்து விலக்கி அவள் முகத்தைப் பார்த்து “என்னாச்சு புவன்??? அம்மா திட்டுனாங்களா?” என்று வினவியிருந்தாள் காரணம் இருப்பதிலேயே அவர்களது நால்வரில் புவன்தான் சிறு பிள்ளைபோல் நடந்துக் கொள்வாள்…மனதளவில்…!

 

“ம்ஹும்”

 

“யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

 

“ம்ம்ம்…”என்று அவள் விழிக்க

 

“யாரது?” என்றவள் சட்டை கையை இழுத்து விட்டதுலேயே பதறிய ரிஷி

அவசர அவசரமாக “என்ன சொன்னாங்க…?” என்று வினவ

 

“BBA டிபார்ட்மென்ட் சஹானா இல்ல அவதான்…ரொம்ப தப்பா பேசிட்டாப்பா” என்று வருந்த அவளுக்கு ஓரளவு புரிந்தது அவள் என்ன பேசியிருப்பாள் என்று “நீ வா!” என்றவள் அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல புவனா ரிஷி தடுப்பான் என்று நினைத்தால்…அவனும் முதல் ஆளாக கிளம்பியிருந்தான்.

 

முக்கால்வாசிப் பேர் வேலையாக இருக்க அந்த வகுப்பறையில் சிலரே இருந்தனர். உள்ளே நுழைந்தவள் பொறுமையாகவே முதலில் ஆரம்பிக்க அது அவளுக்கு பொறுக்கவில்லைப்போலும்.

 

“சஹானா…?”

“யெஸ்!” என்று திரும்பியவள் புவனை பார்த்துவிட்டு ‘என்ன ஆள் கூட்டிட்டு வந்திருக்கியா?’ என்பதுபோல் பார்க்க குறிஞ்சியோ

 

“.என்ன சொன்னீங்க அவள பார்த்து?”

 

“ஹே நீ யாரு மொதல? வந்துட்டா…..” என்று அவளுக்குத் தெரிந்த நாலு நல்ல வார்த்தையில் வாழ்த்த

 

“நீலாம் படிச்ச பொண்ணுன்னு வெளில சொல்லிராத…நீ எஜுகேட்டட் இல்ல ஜஸ்ட் லிட்ரேட்! யூ அன்ஸிவிலைஸ்ட் மன்கி!!!… நீ பண்ணது பேரு என்ன தெரியுமா…? பாடி ஷேமிங்! அது எவ்ளோ பெரிய குற்றம் தெரிருமா…ஒருத்தங்க உருவத்த வச்சு கிண்டலடிக்கிறது…அத கேட்டு சிரிக்கறதுக்கு ஒரு நாலு பேருவேற…ச்சீ!!! கருமம்டா என்ன ஜென்மங்கள் நீங்கல்லாம்…? அன்ட் யூ உன் மனசுல என்ன க்ளியோபாட்ரான்னு நினைப்பா…? மத்தவங்கள பேசுறீயே உன்ன யாராவது பேசுனா தாங்குவீயா??? நீ பேசுன வார்த்தைக்குலாம் அர்த்தம் புரிஞ்சுதான் பேசுனியா…இல்ல பேஷனுக்காக பேசுனியா??? உன்ன நாலு அற விடனும்னுதான் வந்தேன்…ஆனா இப்போ உன்ன பார்க்க பார்க்க பாவமா இருக்கு…உன்ன சுத்தி நின்னு ஜால்ரா தட்டுற இவங்க உன்கூட ப்ரச்சனைன்னா நிக்கமாட்டாங்க…ஆனா இவங்க தட்டுற ஜால்ரால நாளைக்கு நீதான் ப்ரச்சனைல நிக்கப்போற.” என்றவள் பேசிக் கொண்டிருக்க அந்த சஹானாவோ காதில் வாங்கினால்தானே…!

 

“ப்ச் உன் லெச்சரலாம் உன் க்ளாஸோட வச்சுக்கோ…” என்றவள் ” என்ன சொன்ன க்ரைம் ஆ??? நான் அப்படிதான் சொல்லுவேன்” என்று புவனைப் பார்த்து “யூ….” என்று அவள் முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் இறங்கியிருந்தது  குறிஞ்சியின் கரம்.

 

எல்லோரும் ஒரு நொடி அதிர்ந்து நோக்க குறிஞ்சியோ “சொல்லிப் பாரேன்… உன்னலாம்…” என்று நிற்க ரிஷியும் புவனும் அவளை அங்கிருந்து இழுத்துச் செல்வதற்குள் போதும் போதுமென்றானது.

 

அவளை அங்கிருந்து கேண்ட்டீனிற்கு தள்ளிச் சென்றவர்கள்…

 

“மேடி காம் டௌன்! ஏன் இவ்ளோ கோவம்”

 

“பின்ன என்ன ரிஷி எவ்ளோ கேவலமா பேசறா… ச்சீ”

 

“அவ அவ்ளோதான்டா அதுக்காக நாமளும் இறங்கனுமா?”

 

“ப்ச்! நம்ம புவன் ரிஷி”

 

“சரி மேடி பட்…இரு ஸ்வரா கூப்பிடறா” என்று ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

 

“என்ன புவன் யோசனை?”

 

“இல்ல பொளீர்ர்ர்னு ஒன்னு விட்ட பாத்தியா…செம ஷாட்!”

 

“அடிப்பாவீ!!! ஆமா அவ உன்ன என்ன சொன்னா…?”

 

“அடிப்பாவீ!!! அதுக்கூட தெரியாமத்தான் இவ்ளோ டைலாக்குமா?”

 

“ப்ச்…சொல்லு!”.

 

“அது… மெடிடேஷன் ஹால்ல அசெம்பிள் ஆக சொன்னாங்கபா…நானும்  நீங்க வர லேட்டாச்சுனு போனேன்…அங்க ஃப்ரீயா இருந்ததுனு ஒரு சேர்ல உட்கார்ந்திருந்தேன்…இவ லேட்டாதான் வந்தா…லேட்டா வந்தது மட்டுமில்லாம என் பக்கத்துல இருந்த பொண்ண ரொம்ப அதிகாரமா நகரச் சொன்னாளா…அந்த பொண்ணு நான்தானே மொதல்ல வந்தேன்னுதான் சொன்னா அதுக்கென்னவோ சொல்லக்கூடாதத சொல்லிட்டா மாதிரி ரொம்ப பேசிட்டாபா…பாவம் இவ பேசுனதுல அவ அழ ஆரம்பிச்சிட்டா…நான் என்னன்னு கேட்டதுக்கு என்னயும் தப்பு தப்பா பேசுனாபா”.

 

“அப்போ மேடம் தானா போய் தலைய விட்றுக்கீங்க…?”

 

“ஈஈஈ…இல்லடா பாவம் அந்த பொண்ணு எப்டி அழுதா தெரியுமா…?” என்றவளை கட்டிக் கொண்ட குறிஞ்சி

 

“மை ஸ்வீட் எரும மாடு நீ!!!” என்று பாச மழையை பொழிந்தாள்.

 

“இப்போ அது இல்ல ப்ரச்சனை”

 

“அப்புறம்?”

 

“இந்த ஹெச்.ஓ.டீ. ஹாட்பாக்ஸ்ஸ எப்படி சமாளிக்கப் போறோம்…???” என்று வினவ

 

நீர் அருந்திக் கொண்டிருந்தவளுக்கு புரையேறியது!

Advertisement