கோலாகலக் கொண்டாட்டமாக மூன்று நாட்கள்விமரிசையாககொண்டாட்டங்களோடு நடந்து முடிந்தது வருணா, ஸ்ரீதரின் திருமணம். தன்திருமணத்தில் செய்யாத அத்தனைக்கும் சேர்த்து வைத்து இரு மடங்காய்கொண்டாடினான் ரிஷி.நிச்சியகார்தம், முகூர்த்தம், வரவேற்பு என மூன்றுநாட்கள் உறவுகளும், நட்புகளும் நிரம்பி வலிய, அனைவரும் ஆசிர்வதித்துவாழ்த்திச் சென்றனர்.ரிஷியும் மகிழ்நிரதியும் தம்பதிகளாக நிறைந்த மனதோடு முன்னின்று சடங்குகளை செய்தனர்.
ஸ்ரீதர்வீட்டிலிருந்து விருந்துக்கு வந்திருந்தவர்கள், விருந்து முடிந்துகலிபோர்னியா கிளம்புவதாக இருந்தது. ஸ்ரீதருக்கு அவசர வேலைவருணாவும்இரண்டுவாரத்தில்அங்குக்கல்லூரியில் சேர இருப்பதால்இருவருமாகக்கிளம்பினர்.நேனோடெக்னாலஜியில்ஆர்டிபிசியண்ட்இண்டலிஜெண்ட்செயற்கை கைகால் உருவாக்குவதுகுறித்தஆராய்ச்சியில்இருந்ததுவருணாவின்ஆர்வம்.
நிச்சியகார்தம்மட்டும் முடித்துவிட்டுச்செல்வதாக ஸ்ரீதர் எண்ணியிருக்க, மகிழ் தான்வருணாவின்படிப்பு பற்றியும் அவளுக்குஅங்குகல்லூரியில் இடம்கிடைத்திருப்பதால் உடன் அழைத்துச் செல்லுமாறு உரைத்து திருமண பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்து வைத்தாள்.
அறையில் வருணா அவள் உடைமைகளை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டிருக்கக்குளியலறையிலிருந்து வந்தான் ஸ்ரீதர்.
பிளாக்டாப், ப்ளூஜீன்னில்இருந்தவளின் அருகே வந்தவன்பின்னிருந்துதன்னோடுஅணைத்தான். சில நிமிடங்கள் மௌனமாக அவன் தோள் சந்திருந்தவள், “ஸ்ரீடைமாச்சுகிளம்ப வேண்டாமா?” என்றாள்மென்குரலில்.
“வேண்டாமே..” என ராகமாக இழுத்தவன் புது மனைவியின் கழுத்து வளைவில் முகம்புதையக்கொஞ்சினான்.
“பிளைட்க்குடைமாச்சு..கதவுதிறந்திருக்குஸ்ரீ..மகி வராபாரு”என ஆரம்பித்தவருணாவின்குரல் மெல்லமெல்லக்குறைந்ததுஅவனிட்டநீண்ட இதழ் முத்தத்தில்.
இந்ததொடக்கத்தின் முடிவு எவ்வாறிருக்கும் எனஅவளறிவாள்ஆகையால் தன்னிடமிருந்துஅவனை விலக்கியவள் தன் கையிலிருக்கும்ஸ்டிக்கால்அடித்துக்கிளம்புமாறுஉரைக்க, “உங்கவீட்டுன்னுமிரட்டுற? அங்க வாடி உன்னைகவனிச்சிக்கிறேன்” எனசிரிப்புடன்கண்ணடிக்கச்சிவந்த முகத்துடன் திரும்பினாள்.
இரவுஉணவிற்குப்பின் ரிஷி அவர்களைஏர்போர்ட்வரை அழைத்துச் செல்ல கிளம்ப, ஸ்ரீதர்உடைமைகளோடுமுன்னே செல்ல வருணா மகிழிடம் விடைபெற்றாள். கலங்கியவிழிகளோடு மகிழ்வருணாவைஇறுக அணைத்துக் கொள்ள, வருணாவிற்கும்விழிகள்கலங்கியது. உறவு தாண்டிய அவர்கள் நட்பு தானே இருவரையும் இணைத்துவைத்திருந்தது.
“மகி நீஎனக்கு அண்ணியாமட்டுமில்லாமஅம்மாவா இருந்தும் எல்லாம்செஞ்சிட்ட, இதுக்கெல்லாம்தேங்க்ஸ்செல்ல மாட்டேன். நீசெஞ்சதுக்கெல்லாம்திருப்பிசெய்யவும் என்கிட்ட எதுவுமில்லை! ஆனால்உங்கிட்டஇன்னும்கேட்கிறதுக்கானஉரிமைஇருக்குன்னுநினைக்கிறேன்” என அவள் தோள் சாய்ந்திருந்தபடி கேட்டாள்.
அவளைநிமிர்த்தியவள்விழிநீரைத்துடைத்தபடிஎன்னவெனவிழிகளால் கேட்க, “ரிஷியைபார்த்துக்கோ! அவன் எனக்கு அண்ணன் மட்டுமில்லைஎனக்குன்னுஎங்கம்மாவிட்டுவிட்டுப்போன ஒரே உறவும் அவன் தான்.எப்பவும்அவன் நினைப்பெல்லாம்என்னோடநலனைப்பத்தி தான் இருக்கும்.அவனைப்பத்தியோசிக்கக்கூட மாட்டான், எப்பவும்வேலைவேலைன்னுசுத்துவான், இனி நீ தான் அவனைகவனிச்சிக்கணும்உனக்குத்தான்அதுக்கானஉரிமையும்இருக்கு. இதை நான் சொல்லவேண்டியஅவசியமில்லலைநீ ரிஷியை நல்லாபார்த்துப்பேன்னுஎனக்குத்தெரியும். நான்அடிக்கடி வந்து பார்க்கிறதூரத்துலஇல்லை, எங்கம்மாவும்இல்லை, இனி நீ தான்அவனுக்குஎல்லாமுமாஇருந்துபார்த்துக்கணும்” என அவள் கைகளைப் பற்றினாள்வருணா.
தங்கைகூறிய அதே வார்த்தைகளை வெளியே ஸ்ரீதரிடம் ரிஷி உரைத்துக் கொண்டிருந்தான்.மகிழ் வாசல் வரை வந்து இருவருக்கும் விடை கொடுக்க ரிஷி அழைத்துக் கொண்டுஏர்போர்ட்கிளம்பினான்.
மாலைவரை ஸ்ரீதரின் அன்னை, நண்பர்கள் என அனைவரும் அவர்களோடு தான் இருந்தனர்.மாலை அனைவரும் விடை கொடுத்தது கிளம்பிவிட, தற்போது இவர்களும் கிளம்பிவிடவீடே அமைதியாக இருந்து. ரிஷி திரும்பி வர சில மணி நேரங்கள் வரையேனும்ஆகும்.
மகிழ் அவள்உடைமைகளை எடுத்த வைத்துவிட்டு அமைதியோடுபால்கனிஊஞ்சலில் சென்றுஅமர்ந்தாள். ஆளற்ற நிசப்தமும் இரவின் இருளும் எதுவுமே அவளின் கருத்தில்பதியவில்லை. மனதில் நிறைந்திருந்ததெல்லாம் ஒன்று தான், இங்கு தனக்கான வேலைமுடிந்து விட்டதாக எண்ணினாள்.
வருணாவிற்காகதானே தன்னை அழைத்து வந்தான், தற்போது தான் என் தேவை இங்கு இல்லையே! இனிஇங்கிருக்கவேண்டியஅவசியம் தான் என்ன? இங்கிருந்து கொண்டு ஒவ்வொருநாளும் கிடைக்காத அவன் அன்பிற்கும்அணைப்பிற்கும்ஏங்க வேண்டுமா?
கிளம்பும்போது வருணா கூட அவள் அண்ணன் குறித்து எண்ணினாலே தவிர, தன்னை பற்றிகவலைப்படவில்லைஎன்ற இயலாமையும் ஏக்கமும் அவளை அழுத்த அவளையும் மீறி அழுதுகொண்டிருந்தாள். ரிஷியிடம் என்ன சொல்லிவிட்டுச் செல்வது, சொல்லாமல்சென்றிடுவோமா? தந்தை கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் மனம்கேள்விசுழலோடு சுழல அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.
உடலெல்லாம்வலித்தது, கன்னங்களும் கழுத்தும் கதகதப்பாய் எரிந்தது.இமைகளிரண்டும்இம்மியளவும் திறக்க முடியாது அழுத்த மேலும் சுருண்டு படுத்தாள். இடுப்பில்இருந்த கையின் அழுத்தமும் கன்னத்தில் உணர்ந்த உஷ்ணமும், ஈரமும், வியர்வையின்கசகசப்பும்மகிழை விழிக்கச் செய்தது.
விழிக்கையில்தான் உணர்ந்தாள் ரிஷிஇழுத்தணைத்திருக்க, அவன் மார்பில் தான்படுத்திருப்பதை!அவனுடல்உஷ்ணத்தையும்தன்னுடல்குழுமையும்உணர, ரிஷிக்குகாய்ச்சல் என்பதுமகிழுக்குப்புரிந்தது. நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துபார்க்க லேசான உஷ்ணமிருந்தது. மாத்திரை எடுத்திருந்திருந்திருப்பான்போலும்மார்புஉடல் முழுவதும் வியர்த்திருந்தது.
அவன்சட்டையைத்தளர்த்தியவள் துடைக்க எண்ணி தன் புடவையைஇழுக்க அப்போதே தான் இரவு உடையில் இருப்பதை உணர்ந்தாள். ஊஞ்சலில் உறங்கியதுவரை மட்டும் தான் மகிழுக்கு நினைவிலிருந்தது. எழுத்துமணியைப்பார்க்கஅதிகாலை மூன்று. ஒருடவலைஈரப்படுத்தி அவன் நெற்றியில் வைத்தவள் உடைதளர்த்தித்துடைத்தும் விட்டாள்.
அப்போதும்உறக்கத்திலிருந்தவன்அவள் கைகளின் உஷ்ணம் மேலும் வேண்டி அவளை இழுத்துஅணைத்துச்சுருண்டு படுத்தான். மகிழுக்கு அன்றைய நாள் நினைவில் வந்தது, அன்றுபோல் இன்றும் சுயநினைவின்றிஅணைத்ததாகத்தான் நினைத்தாள். இவனை விலகநினைக்கும் நிலையில் ஏன் இந்த நெருக்கமென விதியைநொந்தாள்.
ஆனால்ரிஷி நன்றாக மகிழை உணர்ந்திருந்தான். அவள்ஸ்பரிசம்அன்றேஅவனறியதுஅவன்அணுக்களில் எல்லாம் படிமமாய் படிந்து விட்டது, அவள் சிறு வருடலையும்சுயநினைவின்றியும் அவனால்அடியாழம்காண முடியும். ஆனால் இன்றோ சுயநினைவோடுதானிருந்தான். தான் ஒரு பெண்ணுடலை அணைத்திருப்பதை ரிஷியால் உணர முடிந்தது, ஆனால் அது மகிழ் என்பதாலோ அமைதியா ஏற்றவன் அமைதியாக அவள் கழுத்தில் முகம்புதையத்தோள் சாய்ந்து உறங்கினான்.
மகிழ்தான் தவித்துக் கொண்டிருந்தாள். இவன் இல்லாது எவனையும் ஏற்க இயலாதெனதிருமணத்தை நிறுத்த, இவனோ தான் இல்லாது எந்த பெண்ணையும் ஏற்கும் நிலையில்இருக்கிறான்.வருணாவிற்காகபொய் சொல்லி மணந்தவனிடம் காதலை எதிர்பார்த்துமுட்டாளாகி இருக்கிறேன். எங்கோ ஏன் தூய அன்பு பொய்த்து விட்டது, இவன் மீதானஎன் என்னைபலவீனப்படுத்திக்கொண்டுஅடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அவனைவிலக நினைத்து அவள் யோசித்துக் கொண்டிருக்க அவன் மீசை கன்னத்தில் உரசியசிறு தீண்டலுக்கும்அவளுடல்சிலிர்த்தது.
இவன் அருகாமை தானே என்னை உறுகச் செய்கிறது, இந்த எதிர்பார்ப்பு தானே என்னை ஏமாற வைக்கிறது
என்றெண்ணியவள்கண்ணீரோடு ரிஷியை விட்டு விலகி எழுந்தாள்.ரிஷியைத்தொட்டுப்பார்க்கஉறக்கத்திலிருந்தான்காய்ச்சல்முற்றியிலும்குறைந்திருந்தது.
அவள்உடைகள் எடுத்து வைத்திருந்த பை திறந்திருக்க, அதிலிருந்து ஒரு புடவையைஎடுத்துச்சென்றவள் குளித்துஉடைமாற்றிவந்தாள். தலைவாரி கிளம்பியவள் தன்உடைமைகளையும்பேக்செய்து விட்டு கண்ணாடி முன் அமர்ந்தாள். ஒரு நொடியோசித்தவள் ஒருபேப்பர்பேனாவை எடுத்துக் கொண்டு கண்ணாடி முன் அமர்ந்தாள்.
சற்றும்எதிர்பாராது அதிர்ச்சியோடு திரும்பிய மகிழ் ஒரு நொடி தயங்கி நிற்க, ரிஷிஅவள் முகத்தையும் அவள் பைகளையும் பார்த்தான். அவன் பார்வை உணர்ந்து சற்றேகுரல் எழ, “ஊருக்குபோறேன்” என்றாள்.
“ம்ம், எப்போவருவ?” என்ற அவன் கேள்வியே அவள் இல்லாது தன்னால் இருக்க இயலாது என்றஏக்கத்தை வெளிப்படுத்தியது.நேற்றிரவேஅவள்பைகளைப்பார்த்து விட்டான்.ஊருக்குச்சென்றால் அங்கிருக்கும்உடைகளைப்பயன்படுத்திக் கொள்வாள் இல்லைஒன்றிரண்டு உடைகள் எடுத்துச்சென்றாலும் போதும் இப்படி மொத்த உடைகளையும் ஏன்எடுத்து வைத்துள்ளாள்எனக்குழப்பிப்போயிருந்தான்.
சொல்லாதேஎன்றாலோ ஏன் செல்கிறாயே என்றாலோ பதில் சொல்லலாம் எப்போது வருவாய் என்றால்என்னவென்று சொல்வாள்? மகிழ் அமைதியோடு நிற்க ரிஷி எழுந்து வந்து அவள் முன்நின்றான். அவள்கைகளிலிருந்தகாகிதத்தைவாங்கி கசக்கி எறிந்தான்.
“அதன்வருணாமேரேஜ்பண்ணிபோயிட்டாளேஇனி நான் இங்க இருக்க வேண்டிய அவசியம்என்ன?” எனக்கேட்கும் போதே மகிழ் கலங்கி அழுதிட, ரிஷிக்கு முகத்தில் அடித்ததுபோன்றிருந்தது.
“அப்போவருணாவுக்காகதான் இங்கஇருந்தியா?” என்ற ரிஷிக்கு அவள் நேசம் எங்கேசென்றது என்ற கேள்வி. ஏதோ ஒரு இடத்தில் தன் செயலால் அவள் காயம்கொண்டுள்ளாள் என்பதுபுரியப்பொறுமையோடு விலக்க முயன்றான்.
மகிழ்சில நிமிடங்கள் யோசித்து நின்றாள். ஒரு போதும் ரிஷி அவ்வாறு அவளிடம்சொல்லியதுமில்லை, கீழாக நடத்தியதுமில்லை.அவளாகச்செய்கையில்தடுக்கவுமில்லை.
“என்னாலபத்துநர்ஸ்ஐந்துடாக்டர்வைத்துவருணாவைகவனித்துக் கொள்ள முடியும்.அப்படியே நீ தான்வேணும்னாலும்உன்னையும் வேலைக்கு வைக்கஎன்னாலமுடியும்.அப்படி இருந்தும் உன்னை ஏன் கல்யாணம்பண்ணிக்கிட்டேன்னுயோசிக்கமாட்டியா? கல்யாணம்லைப்டைம்கமிட்மெண்ட், வருணாவுக்குமட்டுமில்லை எனக்கும் நீவேணும், என் வாழ்க்கை முழுக்க நீவேணுங்குறசுயநலம் தான்”
“உங்கசுயநலத்தாலஎன் மெல்லிய உணர்வுகளைகொன்னுட்டீங்களே! முன்னஉங்கிட்டஎதிர்பார்ப்புகள் எதுவுமில்லை, ஆனால்எப்போநீங்களும் என்னைவிரும்புறதாசொன்னீங்களோஅப்போயிருந்தேசின்ன சின்னதா ஆசைகளைவளர்த்துக்கிட்டேன், காதல்கல்யாணமென்னுகனவுலஇருந்தேன்.ஒரு மனைவியா உங்களை நோக்கி சின்ன சின்னஎதிர்பார்ப்புகளோடநான் இருந்தது தவற? உங்கதங்கச்சி, உங்கவீடு, உங்கநிம்மதின்னுஇருந்துட்டுஎன்னைப்பத்தி யோசிக்கவே இல்லையே நீங்க?
உங்கசுயநலத்துலஎன்னை ஏங்கவைச்சிட்டீங்க, உங்களோடஇல்லாத போது கூடஉங்கநினைவோடு இருந்தேன், நான் அப்படியே இருந்திருப்பேனே! ஏன் என்னை இப்படிதவிக்கவைச்சீங்க? நீங்கசொன்ன ஒரு பொய் எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் வலிதெரியுமா? என்னாலதாங்கிக்கமுடியலை ரிஷி,நெஞ்செல்லாம்வலிக்குது! ஏன்என்னைக்காதலிக்கிறதா பொய் சொல்லி கல்யாணம்செய்தீங்க?” அவன் சட்டையைபிடித்து அழுகையோடு விம்மிக்கொண்டே கேட்டாள்.
மகிழின்கண்ணீர் அவன்நெஞ்சைக்கசக்கிப்பிழியவேதனையோடுஅவளை நெஞ்சோடு அணைத்தான். “பொய் தான் மகிழ்.அப்போஉன்மேலஎனக்குக்காதல் இல்லை, உங்கஅப்பாகிட்டபொய்சொல்லித்தான்உன்னைக்கல்யாணம் செய்தேன். அந்த பொய் தவிரநம்மகல்யாணம்நடக்குறதுக்குவேறஆப்ஷன்ஸ்இல்லை, அதான்அப்படிசொன்னேன். நீயே நல்லாயோசித்துபாரு, வேறஎன்னசொல்லிக்கேட்டாலும்உங்கஅப்பாநம்மகல்யாணத்தைஏத்துப்பாரா?
பொய் தான்சொன்னேன் ஆனால் உன்னைஏமாத்தணும்னுநினைக்கலை. அந்த பொய்யஉண்மையாக்கிக்கதான்நினைச்சேன். கல்யாணத்துக்குமுன்னஉன்மேலகாதல் இல்லை, நீகடைசியஇந்த வீட்டுஇன்விடேஷன்கொடுக்க வந்த போது கூட அவ்வளவு தானா உன்காதல்னுஉன்னைத்தான் இளக்காரமா பார்த்தேனேதவிரபொறாமை வரலை.அன்னைக்குநைட்நீஎன்னைகவனிச்சிக்கட்டதுஎன்நினைவிலஇல்லை, ஆனால்என்னுள்ளபதிச்சிஇருக்குன்னுஇப்போசில மணி நேரத்துக்குமுன்னதான் நானே உணர்ந்தேன்.
எங்கஅம்மாவை இழந்த போது அன்புக்காகதவிச்சேன், வருணாவைபடுக்கையிலபார்க்கும் போது நான்உடைச்சேபோய்ட்டேன். எனக்கே ஒருநம்பிக்கையும் தைரியமும் தேவையா இருந்தது.அப்போஒருபைத்தியக்காரன்மாதிரிகுழம்பிப் பொய்என்னென்னவோதவறான முடிவுகள் எல்லாம் எடுத்தேன்.எங்கஅம்மா தர அரவணைப்பைஉங்ககிட்டமட்டும் தான்என்னாலஉணரமுடியுமென்னுபுரிஞ்சிகிட்டேன். உன்னைக்காதலோடு தேடலை அதற்கும்மேலஎங்கஅம்மாவிற்குநிகரான பேரன்பிற்காகதேடுனேன். வருணாவுக்காகன்னுசொன்னதுஎன்னையநானேசமாதானப்படுத்திக்கதான். இதுவேஉனக்குக்கல்யாணமாகிஇருந்தாநான் உன்னைதொந்தரவு செய்திருக்க மாட்டேன்.
காதல்இல்லாமதான் கல்யாணம்பண்ணேன்ஆனால் என் வாழ்க்கைஉன்னோடதாங்கிறஉறுதியோடதான் இருந்தேன். என்பேரன்ஸ்மாதிரிநாமளும்வாழங்கிறதுதான் அப்போதைய என்வேண்டுதல். நான் எப்படியோ நீ என்னை நேசித்து உண்மை அந்தநொடிகளில்நீயாவதுசந்தோஷமாஅனுப்பிவிக்கணும்னுதான்உங்கிட்டையும்உண்மையசொல்லாமவருணாவோடநிலை பற்றியும்சொல்லாமஇருந்தேன்.என்னாலஉனக்குச்செய்ய முடிச்சது அதுதான்!
ஆனால் நான் சொன்னஒரு பொய் உன்னை இவ்வளவுகாயப்படுத்தும்னுஎனக்குத்தெரியாது, என்னைமன்னிச்சிடுமகிழ்” என்றபடிவிழியிரண்டும்கலங்க அவள் மண்டியிட்டான்.
மகிழ்நிரதிஉறைந்து போய் சிலையாய் நிற்க, “இத்தனை நாள் என்கூட இருந்தும் என் நேசம்உனக்குபுரியலைக்குறதுதிரும்ப நீலெட்டர்எழுதஉக்காந்திருக்கிறதுலேதெரியுது. நீபோகணும்னாதாராளமா போ, நான் தடுக்க மாட்டேன். அம்மா, தங்கச்சின்னுஎல்லாரும்போயிட்டாங்கநீயும்போயிடு” எனக்கத்தினான்.
யாருமற்றநிலையில் வாடுபவனை நீயும் விட்டுச் செல்வாயா? அவள் காதல் மனது அவனுக்காககேள்வி கேட்டது.மண்டியிட்டுஅமர்ந்த மகிழ் அவனை இழித்து அணைக்க, சிறுவன்போலேஅவள் தோள்களில் சாய்ந்தே சரணடைந்தான். தளர்ந்திருந்தவனை இறுக்கிஅணைத்தவள், முதுகில் தட்டிக்கொடுக்க, நிமிர்ந்த ரிஷி “என்னைவிட்டுப்போகமாட்டில்ல?” என்றான், அவளிடமிருந்து உறுதியான பதிலை எதிர்பார்த்து.
மகிழ்மறுப்பாய் தலையசைத்து அவன் நெற்றியில் இதழ் பதிக்க, விழி மூடி அதைஅனுமதித்தவன் ஆழ்ந்து அனுபவித்தான். ரிஷியின் சூடான கன்னங்களில்முத்தமிட்டுஇதழ்களைக்கடக்க, அவன் மூச்சுமுட்டும் அளவிற்குமுத்தமிட்டத்துவங்கினான். கண்ணீர் வழிந்த கன்னங்கள் முழுவதும் சிவக்க, மெல்லத்தன்னைமறந்த நிலையில் பறக்கத் தொடங்கினாள் மகிழ்.
ரிஷிமகிழைமலர்க்குவியலாய்நெஞ்சோடு அள்ளி கட்டில் நோக்கி நடக்க, சற்றேவிழித்திறந்தவள்அவன் சட்டையைஇறுகப்பற்றிக்கொண்டு, “ஐயோ இறக்கிவிடுங்கரிஷி பயமாஇருக்கு” எனக் கத்தினாள்.
“பயமாஇருந்தாஇன்னும் என்னை இறுக்கிஅணைச்சிபிடிச்சிக்கோ” என அவன் காதல்ரகசியமாகப்பேச,பேசியது தன் கணவன் தானா என்ற வியப்பில்வாயடைத்துப்போகபார்த்தவள், “இதெல்லாம் இல்லை, உங்களுக்கு ஏற்கனவேஉடம்புக்குமுடியலைஇறக்கிவிடுங்கரிஷி” என்றாள்.
“நேத்துதான் காய்ச்சல், அப்போவேஉன்னைஊஞ்சல்லஇருந்து கட்டில் வரைக்கும்தூக்கிட்டு வந்தேனே!இப்போஉன்கவனிப்புலநல்லா தானேஇருக்கேன்அப்பறம்என்ன? சும்மா நான் உன்னை விரும்பலைஉன்மேலஆசையேஇல்லைன்னுநீயாநினைச்சிக்கவேண்டியது ஆனால் நேசத்தைகாட்டுறவாய்ப்பேகொடுக்கிறதில்லைநீ!” என்றான் இதழ் குவித்தபடி அவள் நெற்றியில் உரசி.
மீண்டும்மகிழ் ஏதோ சொல்லவர அவள் இதழ்சிறைப்படுத்தியவன்மெல்ல அவள் காதலில்கரையைத்தொடங்கினான். நெகிழ்ந்திருந்த இருவருமே ஒருவர் ஆளுகையில்ஒருவரெனச்சுகமாய்கரைந்தனர். மயக்கத்தில் கூட தன் வாழ்வின் மகிழ்ச்சி அவள் தானெனஉருகினான். மகிழ் எதிர்பார்ப்பிற்கும் மேலாகஅவளைக்கொஞ்சிக் கொண்டாடி மகிழ் தீராதமயக்கத்தில் மூழ்கினாள். காத்திருந்து சேமித்த காதலை வெளிப்படுத்துவதில்கொடுப்பதும்எடுப்பதுமாகத்தீரா காதலில் அமிழ அந்த முழுநாளும் அவர்களுக்கானநாளாகியது.
மறுநாள்காலைநேரம்ஜாக்கிக்முடித்து வைத்து தோட்டத்து நாற்காலியில்அமர்ந்திருந்தான்ரிஷிநந்தன். அவனைக்கவனித்த மகிழ் கையில் இருவருக்குமானகாஃபியோடுஅருகே வந்தாள்.
“வருணாகால் ஆர்மெசேஜ்பண்ணாலா?” என்க, “ம்ம், ரீச்ஆகிட்டதாமெசேஜ்பண்ணா, வீட்டுக்குபோயிட்டுகால்பண்ணச்சொன்னேன்” என்றபடி அவன் முன்காஃபிகோப்பையைநீட்ட, வாங்கி கொண்ட ரிஷி அவள் அருகில் அமர இருப்பதை உணர்ந்து சட்டென அவள்கரம் பற்றி மடியில்அமர்த்தினான்.
அவன் மூக்கோடு மூக்கை உரச, “இன்னைக்குஆபீஸ்போகலை” என்க, “ஏன்..?” என்றாள் மகிழ்.
“அதான்பேக்கிங்எல்லாம்முடிச்சிட்டியேஇப்படியே மணலிகிளம்பிடுவோம், இப்போநல்லசீசன்” எனக்காதோரம் உரைத்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட,
“இப்போகோவிலுக்குபோய்ட்டுஅப்படியேஅப்பாக்கிட்டபோய்சொல்லிவிட்டுக்கிளம்பலாம்” என நிறைந்தமனதாய் அவள் உரைக்க உற்சாகமானான் ரிஷி.
ரிஷிகடந்து வந்த வலிகளுக்கு முன்அவள் ஏமாற்றம் சிறிதாகிவிட அவன் உரைத்தபதில்கள் அவன் நிலையில் ஏற்புடையதாக இருக்க ஏற்றுக்கொண்டாள் மகிழ். அவன்உரைத்த பொய்யை மெய்யாக்கிட நிறைந்த மனதோடு ஏற்றாள்மகிழ்நிரதி. அவன் மீதாஅவள் பேரன்பின் முன் பிரபஞ்சமும்சிறிதாகத்தெரிந்திடக்காலம் முழுவதும்காதலோடு அந்த அன்பைஅனுபவிக்கத்தொடங்கினான்ரிஷிநந்தன்.