ஸ்ரீதர் சொல்லாமல் சென்றதில் வருணாவிற்கு மனம் தாங்க முடியவில்லை. தனியாக தன்னை பார்த்துச் சென்ற போதும் சொல்லவில்லை, வேண்டுமென்றே தன்னிடம் சொல்லாமல் சென்றுள்ளான். போகிறான் அவனில்லாமல் என்னக்கென்ன கஷ்டம்? என இரண்டு நாட்களாக அவன் மீதான கோபத்தில் எரிந்து கொண்டிருந்தவள் மூன்றாம் நாளே ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.
நான் பிடிக்கவில்லை என்று சொன்னால் என்னைச் சமாதானம் செய்யாமல், ஈர்க்க முயற்சிக்காமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவானா? அவ்வளவு தானா அவன் காதல்? இருக்கட்டும் கவனித்துக்கொள்கிறேன். இப்படி பாதியில் விட்டுச் செல்பவன் ஏன் வரவேண்டும்? காதலைச் சொல்ல வேண்டும்? என்னைத் தவிக்க வைக்க வேண்டும்? என்னை இவ்வாறு தவிக்க வைத்துவிட்டு அவன் மட்டும் அங்கே இன்பமாய் இருக்கிறானோ? நான் வேண்டாம் என்று சொல்லவும் வேறு பெண்ணின் மீது கவனம் திரும்பி விட்டானோ? இவ்வாறு மட்டும் நடக்கட்டும் என் கையாலே அவனைக் கொன்றுவிடுகிறேன்! என உள்ளுக்குள்ளே விம்மிக்கொண்டிருந்தாள்.
திட்டினாலும் முற்பொழுதும் அவள் நினைவெல்லாம் அவனாகிவிட்டான். அவன் கொடுத்துச் சென்ற கவிதை நூட்களை வாசித்தாள். அதிலும் அவன் அடிக்கோடிட்டுக் காட்டிய கவிதைகள் எல்லாம் அவளுக்காக அவன் பாடுவது போன்றிருந்தது. அதிலிருக்கும் சிறு குறிப்புகளையும் அவன் கையெழுத்துகளையும் ரசித்துப் பார்த்தாள். சில நேரங்களில் அவனும் தன்னை விட்டுச் சென்றுவிட்டானே எனத் தவித்து அழுது கரைந்தாள்.
இங்கிருக்கும் போது அவன் பயன்படுத்திய அலைபேசி எண் பயன்பாட்டில் இல்லாமல் இருக்க, அவனிடம் தன் அலைபேசி எண் இருக்கும் தானே, அவனாகத் தன்னை தொடர்புகொள்ள மாட்டானா? என ஏங்கினாள். ஒரே வாரத்தில் உடல் மெலியும் அளவிற்கு நலிந்து போனாள்.
மகிழ் நன்றாகக் கவனித்துக் கொண்டாள் இருந்தும் அதிகம் பேசாது தவிர்க்கவே, மகிழின் சந்தேகம் இன்னும் அதிகமாகியது, அவள் கேட்டுப்பார்த்தும் வருணா சொல்லாது போக, ரிஷியைப் பேசுமாறு அனுப்பினாள் மகிழ்.
ஏற்கனவே அவள் சிகிச்சை குறித்து ஒருமுறையாவது பேசி பார்க்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த ரிஷி இரவு அவள் அறையில் அமர்ந்திருந்தான்.
“எங்க மேரேஜ் தான் நீ பார்க்கலை, ரிஷப்ஷனுக்காவது நீ இருக்கணும்னு ஆசைபடுறேன் வருணாம்மா” என்க, “ஏன் அண்ணா? நீங்க சந்தோஷமா இருக்குறதை பார்த்தா போதும்” என்றாள்.
“நீ ஆபரேஷன்க்கு சம்மதம் சொல்லுறதுல தான் இருக்கு, எங்க சந்தோஷம்! பிளீஸ் வருணா” என அவள் கை பிடித்து வேண்ட, அவள் சரியென்றாள். மகிழ்ச்சியில் முகம் மலர்ந்த ரிஷி அப்போதே மருத்துவரிடம் பேச அலைபேசியோடு எழுந்து சென்றான்.
மறுநாள் ரிஷி மருத்துவரைப் பார்க்கக் கிளம்ப, மகிழும் உடன் சென்றாள். ஏற்கனவே அவள் அறுவை சிகிச்சை குறித்து முன்பே ரிஷி பேசியிருந்ததால் நாளை பரிசோதனைக்கு வருணாவை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உரைத்தார். மருத்துவரின் நம்பிக்கையான வார்த்தைகளில் இருவருமே மன மகிழ்வோடு திரும்பினர். வழியில் கோவிலைக் கண்ட மகிழ் சாமி கூம்பிடவேண்டுமென்று கேட்க, அவனே அழைத்துச் சென்றான்.
ரிஷி மகிழ் இருவருக்குமே மனம் நெகிழ்ந்திருக்க, விரைவில் வருணா நலமடைந்து வர வேண்டினர். மருத்துவமனையிலிருந்து கிளம்பிய நேரமே வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக இருக்க, கோவிலிலிருந்து வெளியே வரும் நேரம் மழை கொட்டிக்கொண்டிருந்தது. ரிஷி காரை எடுப்பதற்கு முன் சில நொடிகளிலே இருவரும் நனைந்திருந்தனர்.
வருணாவின் அறை மூடி இருக்க, வேலையாட்கள் வேலையில் கவனமாக இருக்க, இருவரும் அவர்கள் அறைக்குள் சென்றனர். நனைந்த உடையோடு முதலில் அறைக்குள் வந்த மகிழ் முதல் ஆளாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள, ரிஷி இருள் வானில் கொட்டும் மழையை வெறித்தபடி பால்கனி நின்றுவிட்டான்.
மகிழும் பின்னே வந்த ரிஷியும் மின்விளக்கை போடாமல் இருக்க, அறை முற்றிலும் இருளாய் இருந்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்த மகிழ் என்ன செய்கிறான் இவன்? என்றெண்ணி ரிஷியின் அருகே வந்தாள்.
அருகில் வந்தவள் ரிஷியின் தோள் தொட அவன் சில்லென்ற தேகம் சிலிர்த்தது. திரும்பியவன் அரை இருளில் அவள் அழகு முகம் அருகே பார்த்து, மேலும் அவளை அருகே இழுத்தான்.
அதை எதிர்பாராது தடுமாறியவள் அவன் நெஞ்சில் விழ, மென்மையாக அணைத்துக்கொண்டான். அன்றொரு மழை நாளில் அவள் ஓர் அணைப்பில் கட்டுண்ட போது உணர்ந்த அதே கதகதப்பை தற்போதும் அவன் உடல் உணர்ந்தது.
அந்தநாள் நினைவில் வர, அன்று அவளை தவறாக நினைத்துவிட்டோமே என்றெண்ணி குற்றவுணர்வின் அதுவரை வேதனையில் இருந்தவனை நெஞ்சில் விழுந்த சுகம் சிதைத்தது. ரிஷிக்கு அந்த நாள் நினைவில் இல்லாத போதும் அவன் உடலால் நன்கு உணர முடிந்தது.
அவன் சிந்தனை முற்றிலும் செயலிழக்க,வெளியிலிருந்து வரும் குளிர்காற்றிற்கு மாறாக அவன் உடல் உஷ்ணமெறியது. அணைப்பின் இறுக்கத்தை அதிகரித்தவன் அவள் முகம் நிமிர்த்தி இமைக்காது பார்த்தான்.
இமை மூடி அவன் அணைப்பில் சுகமாய் சாய்ந்து கிடந்தவள் முகம் நிமிர்த்தவும் விழி திறந்தாள். அவன் சட்டையின் ஈரம் அவள் முகத்தில் படர்ந்ததால் வெளிறிய முகத்தோடு நடுங்கிய இதழ்களோடு நிற்க, சட்டென ரிஷியின் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிந்தது. அவள் மறுக்கவோ விலகவோ இல்லை, மீண்டும் மறு கன்னத்தில் இதழ் பதித்தபடி மேலும் இறுக்கி அணைத்தான்.
அவள் முகம் முழுதும் நிதானமாக முத்தமிட்டான், அணையின் இறுக்கத்தை மேலும் அதிகப்படுத்தினான். அவள் மென்மையும் குளுமையும் அவனுள் கிறக்கத்தைக் கூட்ட, அவன் கவனம் மெல்லிய சிதறியது. அத்தனை முத்தங்களும் அவன் வெப்பத்தை மேலும் அதிகப்படுத்த அவள் செவ்விதழில் இதழ் பதித்து மதுரமான சுவையை முதல் முறையாக ருசித்தான்.
மகிழ் உருக்கினாள், ஆனால் அணைப்பை அதிகப்படுத்தவில்லை. அவன் சட்டையை பற்றியிருந்தவள் அவனை அணைக்கவில்லை. அவள் உணர்வுகளை ஆராய்ந்திருந்தவனுக்கு முடிவுகள் நிறைவாய் இல்லாமல் இருக்க, அதற்கு மாறாய் தன் மயக்கம் அதிகரிப்பதை உணர்ந்து திணறலோடு விளக்கினான்.
அவள் முன் வராமல் அவன் முன்னேற விரும்பவில்லை, நெருக்கினால் அனுமதிப்பாள் ஆனால் அனுபவிப்பாளா? ஏற்கனவே அவளால் கொண்ட குற்றவுணர்வுகளே போதுமென்று எண்ணி விலக்கினான்.
லென்ஸ் வைத்து பார்க்கும் அளவிற்கான லேசான வெட்கப்புன்னையோடு வெளியே பார்த்தபடி முகம் திரும்பி விலகி நின்றவளையே பார்த்தான் ரிஷி. தன் மீதான அவள் காதல் ஏன் இந்த உணர்வை அவளுக்கு தர தவறியது. தான் விலக்கினாளும் அவள் விலகாது அணைத்திருக்க வேண்டும் என்றெதிர்பார்த்தது அவன் உள்ளம்.
அதை எதிர்பாராதவன் அவள் நெற்றியில் தட்டியபடி இதழ் விரிய சிரிக்க, விலகிச் சென்றவள் அவனுக்கான மாற்றுடையைக் கொண்டு வந்து அவன் கைகளில் திணித்தாள். மாறாத சிரிப்புடன் மறுக்காமல் வாங்கிக்கொண்டு நகர்ந்தான் ரிஷி.