Advertisement

 

            நெருங்கி வா முத்தமிடாதே(2)

 

மயங்கி விழுந்த சதுர்மதியை கண்டு அதிர்ந்த சரளாம்மா ,”மதிம்மாஅய்யோ..யாராவது வாங்களேன்…..” என்று அவளிடம் போக, அவரது சத்தம் கேட்டு எதிர்ச்சாலையில் இருந்த கடையிலிருந்து ஓரிருவர் ஓடி வர,அதற்குள் அவளைத் தள்ளியவன்  தன் பைக்கில் அவ்விடம் விட்டு நழுவிச் சென்றான்.

 

பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியோடு அவளை  தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்க , சதுர்மதியோ நினைவு தப்பியிருந்தாள்.அந்த பக்கம் வந்த ஆட்டோவில் அவளை ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார் சரளா.

 

மருத்துவமனையில் சாஹித்யாவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு ஜெய்சங்கருக்குப் போன் செய்து விசயத்தைக் கூற, அவன் விரைவாக கிளம்பி வந்தான்.

 

அவளுக்கு தலையில் ஏற்பட்ட சிறு காயத்துக்கு ப்ளாஸ்டர் போடப்பட்டபோதும் நினைவடுக்கில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக  அவள் மயக்க நிலையிலே இருந்தாள்.சிறிது நேரம் கழித்து கண்விழித்தாள் சதுர்மதி.அவளை பார்த்த சரளாம்மா ,

 

ஏம்மாஇப்படி செஞ்ச……..தம்பி எவ்வளவு வருத்தப்படும் தெரியுமா….?பாரு சாய் குட்டி கூட பயந்துட்டா…..” என்று அவளை கடிய

 

அவளோ திருதிருவென விழித்தாள்.

 

எனக்கு தம்பி இல்லையே……”

 

நான் ஜெய் தம்பியை சொன்னேன்மா…”

 

சதுர்மதிக்கு எதுவும் புரியவில்லை.ஜெய் யாரு?சாய் யாரு..?அதெல்லாம் விட இப்போ பேசுதே இந்தம்மா யாரு…? என்று அவளுக்கு எண்ணம் ஓடியது.

 

என் அப்பா அம்மா எங்க..?” என அவள் கேட்க

 

அவங்க கிட்ட இன்னும்  எதுவும் சொல்லலம்மா…………சொன்னா பயந்துக்குவாங்க……தம்பி வந்தா பக்குவமா எடுத்து சொல்லும்…?”

 

அய்யோ……..எனக்கு என் அம்மா அப்பாவ பார்க்கனும்தயவு செஞ்சு அவங்களைக் கூப்பிடுங்க….” என்று அவள் தலையைப் பிடித்துக் கொண்டு கத்த , குழந்தை சாஹித்யா தாயின் நடவடிக்கையில் பயந்து போய் அழ ஆரம்பித்தாள்.சரளாம்மா உடனே அறையை விட்டு வெளியேறி ஜெய்க்காகக் காத்திருந்தார்.

 

ஜெய் வந்தவன் ,”என்னாச்சும்மா….?” என கேட்க நடந்தவற்றை எல்லாம் சொன்னார்.

 

மதிம்மா…….அவங்க அப்பா அம்மா வேணும்னு கேட்குதுப்பாஎனக்கு என்ன செய்றதுன்னு தெரியல..கத்த ஆரம்பிச்சிடுச்சு…..சாய் குட்டி வேற பயந்து ஒரே கத்து…..இப்போ தான் சமாதானம் ஆகியிருக்கு…..”

 

அவளை என்கிட்ட தாங்க…” என்று மகளை வாங்கிக் கொண்டவன்  மனைவியை சந்திக்க சென்றான்.அவளோ இவனை அன்னியப்பார்வை பார்த்தாள்.

 

என்ன சதும்மா….ஏன் அப்படி பார்க்கிற…?” என இவன் பரிவாய்க் கேட்க

சார்………..யார் நீங்க….எனக்கு உங்க யாரையுமே தெரியல………..எனக்கு எங்க அப்பா அம்மா வேணும்……அவங்கள நான் பார்க்கனும்………….” என்று அழத்துவங்க ,

 

ஜெய்யின் உடலும் உயிரும் ஒரு நொடி அதிர்ந்தது.இருந்தாலும் ஏதோ பொறித் தட்ட ,டாக்டரிடம் சென்று அவன் மனைவியைப் பற்றிக் கூறினான்.அவரும் சதுர்மதியை பரிசோதித்து அவள் குணமாகி விட்டதை உறுதி செய்தார்.

 

இதற்குள் சதுர்மதியின் பெற்றோர் ராமகிருஷ்ணனும் வசந்தியும் வந்து விட பெற்றோரைக் கண்டவள் , தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.எங்கே வாழ்க்கை முழுதும் இப்படியே மகள் இருந்து விடுவாளோ என்று பயந்த அவர்களுக்கு மகள் குணமானதில் பெருத்த மகிழ்ச்சி.

 

கொஞ்சம் தெளிந்த பின் தாயிடம் , “அம்மா…..ண்..யா ………?.” என திக்கித் திக்கிக் கேட்க

 

சரண்யா நல்லா இருக்காடா….இப்போ……அவ யூ.எஸ் ல இருக்காடா…?” என வசந்தி சொல்ல

 

நிஜமாவாமா….அவளுக்கு ஒன்னுமில்லயேஅப்போ……?” என்று கேட்டாள் தவிப்போடு.

 

அவளுக்கு ஒன்னுமில்ல….அவ நல்லா இருக்காஉன் மேல ப்ராமிஸ்…..இப்போ அங்க நைட்லதூங்கிட்டு இருப்பா……நாம நாளைக்கு அவட்ட பேசலாம்டாஇப்போ எதுவும் யோசிக்காம ரெஸ்ட் எடுடா மதிஎன்று அவள் தந்தை ராமகிருஷ்ணன் சொல்ல அதன்பின் தான் அவளது மனதின் அலைப்புறுதல் குறைந்து அமைதியானாள்.

 

அவள் தாயின் மடியில் படுத்திருக்க அவளது கண்ணீர் வசந்தியின் புடவையை நனைக்க, வசந்தி கண்ணீல் நீர் தளும்ப அவளது தலையைக் கோதி கொடுத்தார்.

 

ராமகிருஷ்ணன் ஜெய்யைக் காணாமல் தேட , அவனோ டாக்டரிடம் மனைவியின் உடல் நிலை மன நிலை எல்லாவற்றையும் விசாரித்து அறிந்தான்.டாக்டரிடம் பேசி விட்டு வந்தவன் சரளாம்மாவிடமிருந்து மகளைத் தூக்கிக் கொண்டு, அவரை  வீட்டுக்குப் போகச் சொன்னான்.அவர் சென்றதும் அங்கிருந்த இருக்கையில் மகளை மடியில் வைத்துக் கொண்டு கண்மூடி இருந்தான்.

 

மூடிய கண்களுக்குள் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்  நடந்தது.மனைவிக்கு நினைவு திரும்பியதில் அவனுக்கு மகிழ்ச்சியே..ஆனாலும் ஒரு கணவனாக மனைவி  தன்னைத் தெரியாது என்று சொல்லக் கேட்டவனுக்கு மிகவும்  நரக வேதனையாக இருந்தது.சாஹித்யா வேறு ,

 

ப்பா….அம்மாட்ட போகனும்…….ப்பா…..” என நச்சரிக்க

 

சாய் குட்டி..அம்மாக்கு உடம்பு சரியில்ல……இப்போ பார்த்தா உனக்கும் வந்துடும்…..ஊசி போடனும்..போடனுமா…?”

 

நோநோப்பா….ஆனா……அம்மாவைப் பார்க்கனும்…….அம்மாட்ட போகனும்….” என மீண்டும் அழத்துவங்க,

 

குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்தவன் , “அப்பா சொன்னா பேபி கேக்கனும்ல…..குட் கேர்ள்ல..என் சாய் குட்டி…..” என சமாதானம் செய்ய

 

அப்போதுமாப்பிள்ள..” என்றபடி வந்தார் ராமகிருஷ்ணன்.

 

சது எப்படி மாமா இருக்கா…?”

 

அழுதா மாப்பிள்ளஅப்புறம் சரண்யா பத்திக் கேட்டா.அவ நல்லாயிருக்கான்னு சொன்ன பின்னாடி தான் அமைதியானா…..இப்போ அவ அம்மா மடியில படுத்திருக்கா..” என்றவரின் கண்கள் பனித்தன.மகளை இப்படி தெளிந்த மன நிலையில் பார்த்து ஆறு நெடிய ஆண்டுகள் ஆகிவிட்டனவே…!!

 

டாத்தா….டாத்தா…..நான் அம்மாட்ட போகனும்…” என்றபடியே ஜெய்யின் மடியில் ஏறி நின்று ராமகிருஷ்ணனிடம் தாவ முயன்றாள் சாஹித்யா.

 

பேத்தியின் முயற்சி புரிந்தவர் அவளைத் தூக்கிக் கொண்டு , “வாடா குட்டி தாத்தா அம்மாட்ட கூட்டிட்டுப் போறேன்..” என சொல்ல

 

மாமா..வேண்டாம்…….சது இப்போ இருக்க கண்டிஷன்ல அவ ரெஸ்ட் எடுக்கட்டும்னு டாக்டர் சொல்லிட்டாரு……ஒரு ரெண்டு நாள் போகட்டும்……”

 

என்ன மாப்ள சொல்றீங்க..?” என அவர் மகளின் உடல் நிலையில் கவலைக் கொண்டவராய்க் கேட்க

 

கவலைப்பட ஒன்னுமில்ல மாமாஇப்போதானே ரெகவர் ஆகியிருக்கா…..அதனால் உடம்புக்கும் மனசுக்கும் அதிகமான வொர்க் கொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்கார்இப்போ அவளுக்கு என்னையும் சாய் குட்டியையும் அடையாளம் தெரியல மாமா…”

 

அதிர்ச்சியில் , “மாப்பிள்ள….என்ன சொல்றீங்க…?” என அவர் கேட்க

 

எஸ்..அவளுக்கு அந்த இன்சிடெண்ட்டுக்கு அப்புறமா இந்த நாலு வருசம் நடந்த எதுவும் நினைவுல இல்லைஎன்னையோ இல்ல சாய் குட்டியையோ அவளுக்கு தெரில……இப்போதான் ஒரு அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு வந்திருக்கா…..இப்போ மறுபடியும் ஒரு அதிர்ச்சி வேண்டாம் மாமா….ரெண்டு நாள் கழிச்சு அவ நார்மலானதும் அவட்ட நீங்களே பொறுமையா எடுத்து சொல்லுங்க……அவ புரிஞ்சிப்பா..” என்றான் மனைவியை அறிந்தவனாகவும் ஒரு மருத்துவனாகவும்.

 

அது இல்ல..மாப்ள…..அது..நீங்க…………” என்று அவர் தயங்க……….

 

சாய் அப்பாட்ட வா….உனக்கு அப்பா……சாக்லெட் வாங்கித் தரேன்…” என்று சொல்ல உடனே அப்பாவிடம் தாவியது குழந்தை.

 

இன்னிக்கு ஹாஸ்பிட்டலேயே இருக்கட்டும் மாமா..டாக்டர் அப்ஷேர்வேசன்ல இருக்க சொன்னாரு……என்னை வேற அவ பார்த்திட்டாநானும் அவளுக்கு நினைவு வந்தது தெரியாம எப்போவும் போல பேசிட்டேன்அப்படி நான் யாருன்னு எதாவது கேட்டா தெரிஞ்சவங்கன்னு சொல்லிடுங்கஒரு ரெண்டு நாள் போகட்டும்….நானும் எனக்குத் தெரிஞ்ச டாக்டர்ஸ்ட ரெஃபர் செஞ்சிட்டு சொல்றேன்….”

 

சரி மாப்ள..” என்று மருமகனின் கூற்றை அவரும் ஆமோதித்தார்.

 

இங்க இருந்தா  சாய் அவள பார்க்கனும்னு அடம்பிடிப்பா..நாங்க வீட்டுக்குப் போறோம் மாமா…..எதாவதுன்னா உடனே கால் பண்ணுங்க….நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆனதும் அவளை உங்க வீட்டுக்கே அழைச்சிட்டுப் போங்க……”

 

ராமகிருஷ்ணனின் முகம் தெளியவில்லை.மகளுக்காக சந்தோசப்படுவதா இல்லை மருமகனுக்காகவும் பேத்திக்காகவும் வருந்துவதா என்ற தெரியாது திரிசங்கு நிலையில் இருந்தார்.மருமகனின் வேதனையை அவரது மனம் நன்கு உணர்ந்தது.நாலு ஆண்டுகளாக மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கியவன் ஆயிற்றே..!!

 

எல்லாம் சரியாகிடும் மாமா….பார்த்துக்கோங்க..” என்றபடி வீட்டுக்குக் கிளம்பினான் ஜெய்சங்கர்.

 

வீட்டிற்கு சென்றதும் மகளுக்குத் தோசை ஊற்றி சாப்பிட வைத்து , விருப்பமில்லாவிட்டாலும் அவனும் இரண்டு தோசை சாப்பிட்டு மகளைத் தாலாட்டி தூங்க வைத்தான்.

 

அம்மா ஏன் நம்ம கூட வல்லசொல்லுப்பா…”

 

அம்மாவுக்கு ஃபீபராடாக்டர் ஊசிப்போட்டா அம்மாக்கு வலிக்குமே…”

 

அம்மாக்குத் தோசைப்பா….” என்று அம்மா அம்மா என்று அவனை படுத்திய எடுத்த பின் தான் ஒருவழியாக உறங்கினாள் அவனது செல்ல மகள்.

 

அதன்பின்னே அவனால் ஆசுவாசப்பட முடிந்தது.நினைவு வந்தவனாக

 

மாமா….சாரி மாமா..உங்களுக்கு சாப்பாடு கூட வாங்கிக் கொடுக்காம வந்துட்டேன்நீங்க சாப்பிட்டீங்களா..சது என்ன செய்றா…?” என அவன் மாமனாரிடம் போன் செய்து பேச

 

ஒன்னும் பிரச்சனையில்லை மாப்ள…… உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா .மதிக்கு சாப்பிடக் கொடுத்தாச்சு….இஞ்செக்ஷன் போட்டாங்க..நல்லா தூங்குறா….நாங்களும் சாப்பிட்டோம்…. ….நீங்க சாப்பிடீங்களாசாய் என்ன செய்றா..”

 

நாங்களும் சாப்பிட்டோம் மாமாஇவ்வளவு நேரம் அம்மாஎங்கன்னு கேட்டுட்டே இருந்தா….இப்போதான் தூங்கினா…. நாளைக்கு எனக்குத் தெரிஞ்ச சைக்கார்டிஸ்ட் வருவார் மாமா..கூடவே மனோவும் வருவான்..நான் வந்தா அவ கேள்வி கேட்பாஅவன் எல்லாத்தையும் பார்த்துப்பான்…..நீங்க கவலைப்பட்டுக்காதீங்க……குட் நைட்என்று போனை வைத்தான்.

 

மாமனாரிடம் ஆறுதலாகப் பேசியவனுக்கு ஆறுதல் கூறத்தான் யாருமில்லை.அவன் தாயுடன் பேச தோன்றிய போதும் அவரிடம் விசயத்தை சொன்னால் அவர் உடனே மருமகளைப் பார்க்க துடிப்பார்.அது மட்டுமில்லாமல் அவனையே அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.இந்த நிலையில் பார்த்தால் தன் தாய் சங்கடப்படக் கூடும் என்றுணர்ந்தவன் அப்படியே சுவற்றில் மாட்டியிருந்த அவர்களது திருமணப்படத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.

 

ஜெய் அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டன் .‘எல்லாம் நன்மைக்கே….’ என அவன் மனதில் பதிய வைத்தான்.

  

மனதில் ஓரம் கலக்கம் கரையான் போல் அரித்துக்கொண்டிருக்க , அந்த நமைச்சல் தாங்காதவனாக மகளோடு தூங்கப்போனான்.நாலு ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவன் மனைவியை விட்டு விலகி இருந்ததேயில்லை.ஒரு பக்கம் மனைவி இன்னொரு பக்கம் மகள் என படுத்தே பழகியிருந்தவனுக்கு இன்று இடப்பக்கம் மனைவி இல்லாதது பெரும் குறையாய் இருந்தது.மனைவி எப்போதும் படுத்துறங்கும் இடத்தை கைகளால் தடவியவன் வெகு நேரம் கழித்தே உறங்கினான் ஜெய்சங்கர்.

 

 

அடுத்த  நாள் காலையில் சதுர்மதியை மருத்துவர்கள் செக்கப் செய்து அவளது ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்டது.

 

அன்று மாலையே அவளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.வீட்டுக்குச் சென்றவளுக்கு பழைய நினைவுகளின் தாக்கம் அதிகமாக தனது அறைக்குச் சென்றாள்.எதுவும் மாறாமல் அப்படியே இருந்தது அவளது அறை.கசகசவென இருக்க ஒரு குளியல் போட்டாள்.குளிக்கும்போதுதான் அவள் கையில் தட்டுப்பட்டது ஜெய் அவள் கழுத்தில் கட்டிய மாங்கல்யம்.

 

என்ன செயின் இதுஎன்று எடுத்துப் பார்த்தவள் கீழே இருந்த மாங்கல்யத்தைப் பார்த்து அதிர்ந்து , வேக வேகமாக உடையணிந்தவள் ,அவளது அறையிலிருந்துஅம்மாஎன கத்தினாள்.

 

அவள் தாயும்  தந்தையும்  மகளின் சத்தம் கேட்டு பதறியடித்து மேலே செல்ல ,அங்கே கண்கள் சிவக்க கழுத்தில் தொங்கிய  மாங்கல்யத்தைக் கைகளில் தாங்கியபடி நின்றிருந்தாள் சதுர்மதி.

Advertisement