Advertisement

     

 

           

 

                  நெருங்கி வா முத்தமிடாதே(8)

 “இப்படி அப்பாவும் பிள்ளையும் பேசி எத்தனை வருசமாச்சு தெரியுமாடா மதி…..அவர் சொன்னதை இவன் படிக்கல..அதுலேயே இவருக்கு அவன் மேல வருத்தம்….அப்புறம் உங்க கல்யாணம்……சரின்னு நானும் அவரை சமாதானம் செய்ய நினைக்கிறப்ப உன் புருஷன் ஆஸ்ரமத்திலிருந்து பாப்பாவை தூக்கிட்டு வந்தான்…வாரிசு கூட இல்லாம என்ன கல்யாணம்னு அவருக்குக் கோபம்..அதான் மொத்தமா ஒதுக்கிட்டாரு..” என ராதிகா  பேசிக் கொண்டே போக

 

சதுர்மதியோ அவர் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முடியாத பேரதிர்ச்சியில் இருந்தாள்.சாய் அவளது பிள்ளை இல்லையா..?என் ஜெய்யை இதை காரணம் காட்டி எப்படி நான் கோபமாகப் பேசியிருக்கிறேன்..அவன் சொல்லவே இல்லையே…!என் மகள் எனக்கு சொந்தமில்லையா…?சுமந்ததே தெரியவில்லை என வருந்தினால் அவள் சுமக்கவே இல்லையாமே..?

 

உடல் நடுங்க ,”என்னத்த சொல்றீங்கஎன் பொண்ணு என்….” என்றவள் மயங்கி சரிய,பதறிய ராதிகா மகனை அழைக்க,மனைவியைத்  தாங்கியவன் மடியில் போட்டு

 

என்னமா ஆச்சு இவளுக்கு….எப்படி மயங்கினா…” என ஜெய் பதட்டமாய்க் கேட்க

 

ஜெய்..அது நாசாஹித்யா பத்தி சொன்னேண்டாஅதான்…” என சொல்ல ,”அச்சோ..அம்மா அவளுக்கு எதுவும் தெரியாதும்மா…”

என்றவன் மனைவியை ரூமினுள் சென்று படுக்க வைத்தான்.

 

ராகவனோ மருத்துவராய் அவளை பரிசோதித்து ,”ஒன்னுமில்லடா கண்ணா….அதிர்ச்சில மயங்கிட்டா…..முழிச்சிடுவா..பயப்படாத…” என்று மகனை சமாதானப்படுத்தினார்.பயத்தில் அழுத சாய் குட்டியை சிவசங்கர் தூக்கி வைத்திருக்க,ராகவனும் ராதிகாவும் கவலையோடு இருந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து கண்விழித்த சதுர்மதி கண்கலங்க கணவனைப் பார்த்து , “என்..பொண்….” என்றவளின் கையை அழுத்திப் பிடித்தவன் தம்பியிடம் ,

 

சிவா….கொஞ்சம்..வெளியே இருடா…” என சொல்ல,அனைவரும் வெளியே வந்தனர்.

 

மனைவி மகள் மீது கொண்ட தூய நேசத்தை அவன் அறிவான்.சதுர்மதியின் உணர்வுகளை புரிந்து கொண்டவன்,

 

சொல்லும்மா..” என

 

என் பொண்ணு அவஎன் பொண்ணு இல்லயா..நான் அவள பெக்கலயா ஜெய்…” என அழுகையோடு கேட்க

 

பெத்தா தான் உன் பொண்ணா..சது..?” என ஆழ்ந்த குரலில் கேட்க,அது அவள் ஆழ்மனதை சென்று தாக்கியது.

 

தாய்மை என்பது பெற்றெடுப்பதில் மட்டும் இல்லையே..!!மெய்யன்பு கொண்டு வளர்ப்பதிலும் உண்டு தானே..!

 

இவள் வயிற்றில் சாய் குட்டி பிறக்கவில்லை என்பதால் அவளால் தன் மகளை வெறுக்க முடியுமா…?இல்லையே..!

 

இல்ல ஜெய்….அவ எப்போவுமே நம்ம பொண்ணுதான்..அவளை யாரும் கேட்க மாட்டங்களே..” என மகள் மீது கொண்ட பிரியத்தில் சொல்ல

 

எஸ்சது…..நம்ம சாய் குட்டிக்கு பயலாஜிகல் பேரண்ட்ஸா இல்லாம இருக்கலாம்பட்..லீகலா அவ நம்ம பொண்ணு….

அவளை நம்ம கிட்டயிருந்து யாராலும் பிரிக்க முடியாது…” என அவள் கைப்பற்றி ஆறுதல் சொன்னான்.

 

நிஜமாவா ஜெய்…?”

 

ப்ராமிஸ்…” என அவள் தலையில் கைவைத்தான்.

 

ஜெய்..ப்ளீஸ்……எங்கிட்ட இன்னும் எதாவது சொல்லாம இருந்தா சொல்லிடுங்கநீங்க மறைக்கிற விசயமெல்லாம் தெரிய வரும்போது எனக்கு அதையெல்லாம் தாங்க முடியலஇனி எதையும் மறைக்காதீங்க……” என கேட்க

 

இல்லம்மா..நான் மறைக்க நினைக்கல……இப்போதான் நாலு நாளா நீ  நல்லா இருக்க….கொஞ்சம் நாள் போனதும் சொல்லலாம்னு விட்டேன்..எப்படி இருந்தாலும் அவ நம்ம பொண்ணு தானே..”

 

ம்ம்….ஆனா நான் உங்கள திட்டினப்போ கூட ஏன் நீங்க சொல்லல….ஜெய்….சாரி…..” என மனமுவந்து மன்னிப்புக் கேட்க

 

சதுஅன்னிக்கு இருந்த சிட்டிவிஷேசன்ல நீ கொடுத்த ஆக்ஷன் ரைட் பட் மை ரியாக்ஷன் வாஸ் ராங்…..நீ தான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில இருந்த…..நானாவது உன்னைப் புரிஞ்சி நடந்திருக்கனும்.பட் நான் தவறிட்டேன்….ஒரு பொண்ணா உன்னுடைய நிலையில அது சரிதான்ஆனா செய்யாத தப்புக்கு நீ என்னை பேசினதும் தான் நான் அடிச்சிட்டேன்….”

 

அப்போவே சொல்லி இருப்பேன் மா….ஆனா அப்போ சாய் கிட்ட நீ பாசமா இருந்த..அவ தான் நமக்குள்ள பாலமா இருந்தா….அவளைப் பத்தி சொல்லி தான் நீ எனக்குக் கிடைக்கனும்னு நான் நினைக்கல…love should be unconditional…

And without any restrictions..என்னால கூட நீ அவாய்ட் செஞ்சதை தாங்க முடியலஅப்படி இருக்கப்போ சின்ன குழந்தை அவ எப்படி தாங்குவா..ஒரு வேளை நீ அவளை அவாய்ட் செஞ்சிடுவியோன்னு பயம்..” என்றவனை சதுர்மதி முறைத்து விட்டு,

 

என் பொண்ணை நான் எப்படி விடுவேன்..நான் அவளை பெக்கலஆனா அவ என்னை அம்மான்னு சொன்னப்போ என்னால அவ பாசத்தை உணர முடிஞ்சது..ஒரு வேளை சின்ன வயசிலேர்ந்து நம்ம கூடவே அவ இருக்கறதால இருக்கலாம் ஜெய்…..” என்றாள்.

 

ஆமாடாமூணு மாசம் குழந்தையா அவ நம்ம கிட்ட வந்தா…..பாசமெல்லாம் ரத்தத்திலான உற்வுல மட்டும் தான் வரனுமாஎன்ன…?அதான் உன்னால சாய் குட்டியை இயல்பா ஏத்துக்க முடிஞ்சது சது…”

 

அவன் சொன்னதை ஆமோதித்தவள் ,

பட்இப்போஎல்லாத்தையும் நீங்க சொல்லுங்கஜெய்எப்படி நம்ம மேரேஜ் ஆச்சு….?”

 

தாலி கட்டி தான்மா..” என அவன் சிரீயசாய் சொல்ல

 

ஜெய்ய்ய்ய்ய்ய்ய்ய்…” என அவள் கத்த

 

ஜஸ்ட் ஃபார் ஃபன்சொல்றேன் கேளு….”

 

ஒரு நாள் நீ காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கிறப்போ சரண்யா இன்னும் சில ப்ர்ண்ட்ஸ்லாம் சேர்ந்து காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு மாயாஜால் வந்தீங்கஞாபகம் இருக்கா மேடம்..?”

 

அய்யோ..அது யார் சொன்னா உங்ககிட்ட…?” என அவள் ஆச்சரியமாய்க் கேட்க,

 

ஹா ஹாஅன்னிக்கு நானும் உங்களைப் பார்த்தேனேகுறிப்பாய் உன்னைசரண்யாவுக்குப் பாடிகார்ட்டா அட்வைஸ் செஞ்சிட்டே போய்எஸ்கேலேட்டர் விழப்பார்த்தியே….” என குறு நகையுடன் சொல்ல

 

அன்னிக்கு என்னைப் பிடிச்சது நீங்க தானேஎனக்குத் தெரியும் ஜெய்என வெட்கத்தோடு சொல்ல,

 

எஸ்…..நானேதான்வாட் உனக்குத் தெரியுமா சது….?” என்றவன் துள்ளலான குரலில் கேட்க,

 

அக்சுவலி சரா வீட்ல ரொம்ப ஸ்டீரிக்ட் பட் எங்களுக்கு படத்துக்குப் போனும்னு ஆசை..ப்ர்ண்ட்ஸ் கூட படத்துக்குப் போறது ஒரு ஜாலிதானே….அவ பயத்திலேயே இருந்தாஅதான்…..அவட்ட பேசிட்டே உங்க மேல மோதிட்டேன்.. நீங்க என்னைப் பிடிச்சிங்களா..அதுக்கு அப்புறம்…  நம்ம ரெண்டு பேரும் ஒரே மாறி ப்ளாக் டிரஸா….என் ப்ர்ண்ட்ஸ்லாம் என்னை பயங்கரமா ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க……”

 

பாருடி உன் ஹீரோ உன்னைப் பிடிச்சிட்டார்னு….நானோ ஏய் தெரியாம விழுந்தேன் பிடிச்சாங்க….அவர் டீசண்டா இருந்தாரு..இப்படி பேசாதீங்கன்னு சொல்லஅவ்வளவுதான்…..செம கலாய் என்னை…..பாருடா ஹீரோவ சொன்னா ஹீரோயினுக்குக் கோவம் வருதுன்னு..நல்ல காலம்…..எங்க ஃப்வேரைட் ஹீரோ படத்துக்குப் போனதால..அதைப் பார்த்துட்டு வந்ததும் உங்களை மறந்துட்டாங்க…” என்று அன்றைய நாளின் நினைவுகளை உற்சாகமாய் அவள் பகிர்ந்து கொள்ள ஆச்சரியமானான் ஜெய்சங்கர்.

 

அப்போ..உனக்கு எல்லாம் நியாயபகம் இருக்கு..am I right..?”

 

எஸ்..இருக்கு…..ஆனா உங்களுக்கு  நியாயபகம் இருக்கும்னு  நான் நினைக்கல……”

 

உனக்கு என்னை யாருன்னு அடையாளம் தெரிஞ்சது சதும்மாடுவெல்த்ல மார்க் எடுத்திட்டு எங்க வீட்டுக்கு மாமாவோட வந்திருந்த நீ..நான் மாடில இருந்தேன்..சோ நீ என்னை பார்க்கல…..அதனால் தான் மால்ல உன்னைக் கண்ட்தும் ராமகிருஷ்ணன் அங்கிள் பொண்ணாச்சேன்னு ஆர்வத்துல பார்த்தேன்….” என்றவன் கண்ணடித்து,

 

ஜஸ்ட் பார்த்தேன்னு சொன்னா அது பொய்….சைட் அடிச்சேன்னு வைச்சிக்கோயன்….சின்ன புள்ளையா எங்க வீட்டுக்கு வந்த நீ இப்படி காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்திறியேன்னு பார்க்கறப்ப ஒரே சிரிப்புதான் எனக்கு….அதுக்கு அப்புறம்..உன்னை மறந்துட்டேன்……ஆனா அம்மா கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்தப்போ உன்னைக் கேட்க சொல்லனும்னு நினைச்சேன்பிகாஸ்….அப்போ மேரேஜ் டீரிம்ல நீ தான் வந்த…..லவ்னு சொல்ல மாட்டேன்..பட்….இவங்க நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுமே..க்ர்ஷ் மாதிரி…..”

 

ஆனா மாமாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனப்போ ஹாஸ்பிட்டல்ல உன்னை அந்த நிலையில பார்த்தப்போ நிஜமா என்னால தாங்க முடியலநான் உன்னை அப்படி ஒரு கண்டிஷன்ல எதிர்ப்பார்க்கவே இல்லஉன் லைஃப்ல நடந்தது எதுவும் அப்போ எனக்குத் தெரியாது..நான் இங்க இல்லவே இல்லயூஜி முடிச்சிட்டு யு.எஸ் போயிட்டேன்……உன்னைப் பார்த்தவுடனே ராமகிருஷ்ணன் மாமா பொண்ணுன்னு அடையாளம் கண்டுபிடிச்சிட்டேன்அப்புறம் தான் எனக்கு எல்லாத்தையும் அத்தை சொன்னாங்கஉன்னை விட மனசில்ல.அம்மா பொண்ணு தேடின டைம் வேற…..”

 

நான் லைஃப்ல எதையுமே காம்ரமைஸ் செஞ்சிக்க மாட்டேன்..சதுமனசுக்குப் பிடிச்சதை செய்யனும்அது மத்தவங்களுக்குப் பிடிக்கனும்னு அவசியமல்லபட் அடுத்தவங்களை கஷ்டப்படுத்தக் கூடாது..அவ்வளவுதான்..!

 

அப்பாக்கு நான் அவரை மாறி கார்டியாலஜி படிக்கனும்னு ஆசைஎனக்கு விருப்பமில்ல….அவருக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் செஞ்சேன்உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லஅதுக்கும் அவர் எதிர்த்தார்…..இதே கல்யாணம் ஆனதும் உனக்கு  இப்படியானா விட்ருப்பேனா என்ன..?அங்க தான் அப்பா என்னை முழுசா ஒதுக்கிட்டார்..”என்றவனை பெருமையாக நோக்கினாள் சதுர்மதி.பிரபாவைப் பற்றியும் சரண்யா இதைத்தானே சொன்னாள்.

 

இவன் ஹீரோ தான்..!! என உற்சாக குரலிட்டது பேதையவளின் மனது.

 

கல்யாணத்துக்குப் பின்னாடி உண்மையை சொல்லனும்னா உன்னை என்னால சமாளிக்க முடியல சது….அதான் உண்மை…..டாக்டர்ஸ கன்சல்ட் செஞ்சா..உனக்கு மாற்றம் வேணும்..பேசாம ஒரு இயல்பான குடும்ப வாழ்க்கையை வாழுங்கன்னு சொன்னாங்கஅதுல எனக்கு உடன்பாடு இல்ல……சது…..எப்படி உனக்கு சுய நினைவு இல்லாதப்ப  நான் அப்படி  நடக்க முடியும்…? அது உன் பெண்மைக்கு மட்டும் களங்கம் இல்ல..என்னோட ஆண்மைக்கும் களங்கம் தானே….” என்று சொன்னவனின் தோள் சாய்ந்தவள் கண்ணீர் உகுத்தாள்.

 

ப்ச்..அழாதடா….சது….சதுக்குட்டி….என்னடா…?” என அவளை அணைத்து சமாதானப்படுத்த

 

சாரி……….ஜெய்…………………….ம்ம்……………நா…………….நான்..ரொம்ப பேசிட்டேன்…………….ஐ அம் ரியலி சாரி…………….”

 

சதுக்குட்டி..உன் மேல தப்பில்லடா..நான் தான் உனக்கு எதையும் புரியவைக்கலயே…..?…..அழாம இருஅப்போதான் நான் சொல்வேன்…..” என மிரட்ட

 

அவளும் அழுகை குறைந்து, “சொல்லுங்க ஜெய்………….” என

 

குழந்தை இருந்தா நல்லாயிருக்கும்னு கருத்து..தாய்மை உனக்குள்ள மாற்றம் கொண்டு வரும்னு தோணிச்சு..அதான் நான் சாய் குட்டியை தத்தெடுத்தேன்….அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கல….பட் எனக்கு அதுதான் சரினு பட்டுச்சு….இந்த விசயம் அத்த மாமாவுக்கு எங்கப்பா அம்மாவுக்குத் தான் தெரியும்..அப்புறம் சிவா,சரண்யா,பிரபா…………..ஆனா எல்லார்ட்டையும் சொல்லிட்டேன் சாய் எங்க குழந்தை அவளை யாரும் எதுவும் என்னிக்கும் எந்த சூழ்னிலையும் சொல்லிட கூடாதுன்னு….”

 

சாய் நம்ம வீட்டுக்குள்ளவும் வாழ்க்கைக்குள்ளவும் வந்த பின்னாடி உங்கிட்ட நல்ல மாற்றம் தெரிஞ்சது….அதுக்கு முன்னாடி நீ ரொம்ப அமைதியா இருந்த…..சாய் வந்த பின்னாடி நீ அவளை எங்கூட சேர்ந்து பார்த்துக்க ஆரம்பிச்சகொஞ்சம் கொஞ்சமா உன் கூட்டிலேர்ந்து வெளியே வந்தகுழந்தையோட குழந்தையா மாறின…..you both made my life beautiful….”  உணர்ந்து

சொன்னான் ஜெய்சங்கர்.

 

இல்ல ஜெய்…… you both made my life beautiful….”என்றாள் சதுர்மதி கணவனைப் போல்.

 

உங்களை நான் நல்லா நியாயபகம் வைச்சிருந்தேன் ஜெய்…….அன்னிக்குப் பார்த்த பின்னாடிஆனா நீங்க ராகவன் அங்கிள் சன்னு எனக்குத் தெரியாது……..சிவாவை தான் தெரியும்…..நீங்க என்னை விழாமப் பிடிச்சப்போ உங்க டச்ல நான் பாதுகாப்பா தான் உணர்ந்தேன்….தப்பா எதுவும் தெரில….உங்க மேல நல்ல அபிப்ராயம் இருந்துச்சு….ஆனா நீங்க என்னோடான உங்க உறவை என் அனுமதி,விருப்பம் இதை எல்லாம் தாண்டி என்னோட சுய நினைவே இல்லாதப்ப அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போய் ஒரு குழந்தையும் இருக்குன்னு தெரிஞ்சதும் என்னால தாங்க முடியல……ஒரு வேளை உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாம இருந்திருந்தா….நான் என்னை சமாதானம் செஞ்சிருப்பேன்………பட் மனசுல உங்களைப் பத்தி இருந்த அந்த நல்ல பிம்பம் உடைஞ்சதை என்னால் ஜீரணிக்க முடியல…” என அவளது நிலையை விளக்கி சொல்ல

 

அடடா……….அப்போ மேடமுக்கு என் மேல அப்போவே ஒரு ஹீரோ இமேஜ் இருந்திருக்கு…” என பெருமைபட

 

ம்ம்..” என தலையாட்டினாள் அவள்.

 

என்னால உன் நிலையைப் புரிஞ்சிக்க முடியுதுடாஅப்போவே வேற என் மேல ஒரு இது இருந்திருக்குன்னு சொல்ற..அதனால ஐயா ஹாப்பி டியர்…” என உல்லாசமாய் சொல்ல

 

சாரி ஜெய்……கோவம் எதுவும் இல்லயே..?”

 

சாரி எப்படி சொல்றது மேடம்….?” என அவள் இவனை நெருங்க ,கடிகாரத்தின பெண்டுலம் ஆடி மணியை சொல்ல,

 

அய்யோ.ஜெய்பூஜைக்கு டைம் ஆச்சுவிடுங்க..” என அவள் விலகி கதவருகே ஓட,அவளைத் தாவிப் பிடித்து கதவில் சாய்த்தவன்சாரி சொன்னா தான் கோவம் போகும்…” என வம்பிழுக்க

 

சாரி….”

 

ஏய்இப்படியா சொல்றது….என் பொண்ணு எப்படி சொல்லிக் கொடுத்தா….சது..” என அவளை இடையோடு அணைத்து நெருங்க,

 

நீங்க அடிச்சப்போ எங்கிட்ட இப்படித்தான் சாரி சொன்னீங்க….நானும் அதே மாதிரி வாயால சாரி சொல்லிட்டேன்என தலை குனிந்து நாணத்தோடு சொல்ல,

 

வாயால சொல்றது காதுக்குக் கேட்க கூடாது..” என்றவன் அவள் காதில் அவன் சொன்ன சாரி விழாதவாறு அவள் இதழ்களோடு அவன் இதழ் சேர்த்தான்.

 

இருவரும் மோன நிலையில் இருக்க,என்னவாயிற்றோ என பயந்த வீட்டினர் கதவை தட்ட,அதில் விழித்தவர்கள்

 

உங்களை…. போய்  ஒன்னும் தெரியாதவர்னு உலகம் சொல்லுது..அப்பாஎப்படி பேசுறீங்க நீங்க….” என அவனை தள்ளி விட ,

 

நான் எங்க சது குட்டி பேசினேன்….சாரி தானே சொன்னேன்….” என விசமச் சிரிப்போடு சொல்ல,

 

ஜெய்….ஜெய்என்னாச்சுடா..” என வெளியே குரல்கள் கேட்க

 

இருவரும் வெளியே வர,..”அம்மாஎன்றபடி சாய் குட்டி அவளிடம் போக,குழந்தையைத் தூக்கியவள் அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள்.

 

சாரி டா எனக்குத் தெரியாது நீ இவட்ட சொல்லலன்னு…” என ஜெய்யின் தாய் ராதிகா மன்னிப்புக் கேட்க,

 

அய்யோ..அம்மா..அதனால நல்லதுதான் நடந்திருக்கு..” என்றவனின் பார்வை மனைவியிடம் செல்ல,அவளோ குழந்தையை மட்டுமே பார்ப்பது போல் காட்டிக் கொண்டாள்.

 

சிவாவோ ,”என்னடா..தாஜா செய்றேன்னு போய்..ஒரே மஜாவா…” என கிண்டலடிக்க,

 

போடா டேய்சின்னப்புள்ளயா இரு..” என தம்பியை ஜெய் அதட்ட

 

டேய்அண்ணாஎனக்கும் கல்யாண வயசாகுதுடா…..இப்படி சின்னப்புள்ளன்னு சொல்லிட்ட..” என புலம்ப

 

அப்போ..சீக்கிரமே சிவாக்குப் பொண்ணு பாரு ராகவா..” என்றபடி வந்தார் ராமகிருஷ்ணன்.

 

ராமகிருஷ்ணனும் வசந்தியும் வருவதை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.என்று ஜெய் சதுர்மதியைத் திருமணம் செய்து கொண்டானோ அன்றிலிருந்து ராகவனுக்கும்  ராமகிருஷ்ணனுக்கும் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது.

 

அனைவரின் ஆச்சரியப் பார்வையை உணர்ந்த ராகவனோ

,”என்னடாஅப்படி பார்க்கிறீங்க….நான் தான் இன்னிக்குப் பூஜை இருக்குன்னு வர சொன்னேன்..உனக்கு தான் மாமனார் மாமியாரை கூப்பிடனும்னு தோணல…”என ஜெய்யை சாட

 

விடு ராகவா….உனக்கு தெரியுதுமாப்பிள்ளைக்கு அவர் பொண்டாட்டி பிள்ளை தவிர நாம யாரும் கண்ணுக்குத் தெரியமாட்டோம்….அதான்..” என நண்பரோடு சேர்ந்து ராமகிருஷ்ணனும் மருமகனை கலாய்க்க,அங்கே அனைவர் முகத்திலும் மின்னலாய்ப் புன்னகை.

 

ராகவனுக்கு மகன் வாழ்க்கை சீரான பின் நிம்மதி வந்திருந்தது.அதனால் தான் தன் வீம்பையெல்லாம் விட்டு விட்டு நண்பனை அழைத்து மன்னிப்புக் கேட்க

 

ராமகிருஷ்ணனோ ,”ஹே..!!ராகவாஎன்னடா..நீ..உன் இடத்தில யாரா இருந்தாலும்..ஏன் நானா இருந்தா கூட அப்படிதான் நடந்திருப்பேன்உன் மேல எனக்குக் கோபமோ வருத்தமோ இல்லடா….” என்று சொல்லிவிட ராகவனின் மனம் நிம்மதியுற்றது.

 

மாலையில் வரலஷ்மி நோன்பு முடிந்து ,இரவு உணவுக்குப் பின் ,ஜெய்சங்கர் மனைவி மகளோடு வீட்டிற்குக் கிளம்ப,

 

ராதிகாவோ ,”என்ன ஜெய்….இங்கேயே இருக்க கூடாதா…..?இப்போ ஏன்ப்பா போற…?” என கவலையோடு கேட்க

 

இல்லம்மா….கொஞ்ச நாள் போகட்டும்சாய் குட்டி ஸ்கூல்ல சேரும்போது வந்திடுறோம்…” என சொல்லி விட்டு சென்றான்.

 

ராதிகா கணவனிடம் வந்து , ” நீங்க ஒரு வார்த்த சொல்லியிருந்தா அவன் இருந்திருப்பான்…..” என குறைபட

 

ராகவனோ , “ஏய்..அவன் என் மகன்எனக்குள்ள ரோஷம் இருக்காதுஅவனுக்கு என்னைக்குப் பிரியப்படுறானோ அப்போ வரட்டும்……அவனே தான் குழந்தையை ஸ்கூல் சேர்க்கிறப்ப வரேன்னு சொல்லிட்டானேவந்துடுவான்…” என்றார் மகனை நன்றாய் அறிந்தவராய்.

 

வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல்  மனைவிக்கும் மகளுக்கும் நடுவில் படுத்தவன் ,

 

மனைவியை ஒருகையால் அணைத்துக் கொள்ள,அவள் மகளுக்கு வழக்கம் போல் கதை சொல்ல தொடங்கினாள்.

சாஹித்யா உறங்கிய பின் , மனைவியை அவன் நோக்க,அவள் அவனை நோக்க, ஒரு நோக்கியோ கனெக்ஷன் உருவாக்க வேண்டி ஜெய்சங்கர் ,

 

என்ன சதுதூக்கம் வரலயா…?” என

 

ம்ம்…”

 

சரி வா…..ஹாலுக்குப் போகலாம்..” என இருவரும் ஹாலுக்குப் போக,அவன் சோபாவில் அமர சதுர்மதியோ அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

 

என்ன மேடம்…..சாரி கேட்கனுமா..?” என ஜெய் மதியை சீண்ட

 

உங்களை ரொம்பத்தான்….சாய் குட்டி கிட்ட எப்போவுமே நம்ம இந்த விசயத்தை சொல்லக்கூடாதுங்க…..என்னமோ மனசுல

கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கு….” என மகள் மீது அவள் கொண்ட அதீத பற்றுதலாலும் பாசத்தாலும் சொன்னாள்.

 

கணவனுக்கு முன் அவளுக்கு மகள் தானே முதன்மையானவளாக இருந்தாள்.

 

அது எப்போவுமே தெரியாதுடாபார்த்துக்கலாம்….இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பனும்….”

 

ம்ம்அவ ரொம்ப பிரியலண்ட்லங்க…” என மகளது புத்திசாலித்தனத்தில் அவள் பெருமை கொள்ள

 

பின்ன ஜெய்யோட பொண்ணாச்சே….என் கிட்ட நீயும்  சில விசயம் கத்துக்கோ சது..நீயும் பிரியலண்ட் ஆகிடலாம்..” என அவள் காதோரத்தில் வருட,அதில் சிலிர்த்தவள் அவன் கையை தட்டி விட்டு,

 

எனக்கு ஒன்னு தெரியனும்..ஹானஸ்டா பதில் சொல்லனும்..” என்றாள்.

 

சொல்லு சது குட்டி..”

 

இப்போ..நான் பைத்தியமாவே இருந்திருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க ஜெய்….?இப்படியே நம்ம லைஃப் போயிருக்குமா…?” என கேட்க

 

உண்மையை சொல்லனும்னா….இன்னும் ஒரு டூ இயர்ஸ் வெயிட் செஞ்சிருப்பேன்ஏன்னா….நீ கொஞ்ச கொஞ்சமா மாறிட்டே தான் இருந்தேன்…..அப்படியும் மாற்றமில்லனாசாரி டிரிட்மெண்ட் கொடுத்துருப்பேன்…” என அவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட

 

அவனது கழுத்தில் கரம் கோர்த்தவள் ,”ஐ லவ் யூ ஜெய்……………”என்றாள் ஆத்மார்த்தமாக.

 

கணவனின் சொல் கேட்டவள் ,அவன் அவளை நோக்கி குனிய,”ஜெய்..சாய் உள்ள இருக்காவாங்க போகலாம்…” என சொல்ல

 

இருசது..கோடிட்ட இடத்தை நிரப்பிக்கிறேன்…”என்று கிறக்கமாய் சொன்னவன் அவளிதழில் கோடிட்ட இடத்தை தன் இதழால் நிரப்பினான்.

 

நீண்ட நேரம் தொடர்ந்த இதழ் முத்தத்திலிருந்து விடுபட்டவள்,

 

நீங்க ரொம்ப ரொம்ப மோசம்..ஜெய்பேச்சை பாரு……பக்கத்துல வந்தா பிச்சிடுவேன்………சாய் குட்டிக்கு ஐஞ்சு வயசு ஆனதா அடுத்த பாப்பாஇப்படி பக்கத்துல  நெருங்கிலாம் வரக்கூடாது..” என உத்தரவிட்டவள் உள்ளே போக,

 

ஆஹாநெருங்கவே கூடாதா..அதையும் பார்க்கலாம் மேடம்…..” என்றபடி அவளோடு வந்து படுத்தவன் மனைவியை நெருங்கிப் படுத்து அவன் முகத்தை அவள் முகத்தோடு உரச,

 

ஜெய்….கிஸ் பண்ணக்கூடாது….”

 

ஒஹ்..நெருங்கி வரலாம் முத்தமிடக் கூடாதா…?”

 

ம்ம்

 

ஆனால் அவனோ மதி சொன்னதைக் கேட்காமல் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து விட்டு உறங்க,மந்தகாசப் புன்னகையோடு அவளும் கணவனை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

 

 

தாத்தாஎன் யுனிபார்ம் நல்லா இருக்கா…?” என்றபடி வந்த பேத்தியைத் தூக்கியவர்சூப்பர்டா செல்லம்..” என சொல்ல

 

தாத்தா தூக்காதீங்கலீவ் மீ…” என சொல்ல,அவரும் பேத்தியை விட்டார்.இத்தனை நாள் மகன் மீது உள்ள கோபத்தில் பேத்தியைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்போதோ பேத்தியுடன் தான் சுற்றுவதே.

 

தாத்தாவிடமிருந்து இறங்கிய சாய் சாஹித்யா,

 

பாட்டி….பாட்டி….” என அழைக்க ,ராதிகா ஓடி வர

 

ரெண்ந்து பேரும் ஒன்னா நில்லுங்க…” என்று ஆர்டர் போட்டவள் இருவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

 

ஆசிர்வாதம் வாங்கிய சாஹித்யா கதவோரம் நின்றிருந்த  தந்தையைப் பார்த்து ,

 

அப்பா..நான் வாங்கிட்டேன்….ப்ள்சிங்என உற்சாகமாய் சொல்ல

 

குட் கேர்ள்….” என்றான் ஜெய்சங்கர்.

 

அம்மாவசீக்கிரமா கிளம்ப சொல்லுடா..டைம் ஆகுது…”

 

அம்ம்மா…..சீக்கிரம் ரெடியாகும்மா….அம்மாஐ டி எடுத்துக்கோ..வார்டர் பாட்டில் எடுத்துக்கோ..பாட்டி லஞ்ச் பாக்ஸ் வைச்சாச்சா…..அம்மா….ஹொம்வொர்க் செஞ்சதை எடுத்துக்கோ…” என சொல்ல

 

சரிடா குட்டி..எல்லாம் அம்மா எடுத்து வைச்சிட்டேன்..” என்றாள் சமத்தாய் சதுர்மதி.

 

இவ்வளவு நேரம் ஐடி கார்ட்,வாட்டர் பாட்டில் எல்லாம் பற்றி சாஹித்யா கேட்டது சதுர்மதிக்காக.ஆம்..!!ஜெய் பிடிவாதமாக சதுர்மதியை டிகிரியை முடிக்க சொல்லிவிட்டான்.அதனால் அவள் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தவற விட்ட செமஸ்டர்க்காகப் படிக்கிறாள்.

 

அது மட்டுமில்லாமல் மகளும் இன்றுதான் பள்ளிக்குச் செல்கிறாள்.

 

ரெடியா சது…” என்றபடி ஜெய் வர,

சதுர்மதியோ ,”வாங்க ஜெய் போகலாம்..”என்றபடி வெளியே செல்ல எத்தனிக்க ,சட்டென்று அவளை இழுத்தவன்  மனைவியை பின்னிருந்து அணைத்து ,

 

பை..சொல்லிட்டு போ…”

 

பை..ஜெய்..”என அவள் சிரிக்க

 

மக்கு….என் பொண்ணு எப்படி பை சொல்லுவா…?அப்படி சொல்லு..அப்போதான் விடுவேன்

 

ஜெய்…..உங்களை போய் எங்கிட்ட இருந்து நாலு வருசம் தள்ளி இருந்தவர்னா யாரும் நம்ப  மாட்டாங்க..”

 

ஹலோ மேடம்..மனசு என்ன சொல்லுதோ அதைதான் நான் எப்போவும் கேட்பேன்னு உங்களுக்குத் தெரியாதா..?”

 

அது ரைட் தான்.. இப்போ உங்க மனசு  என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க…”

 

என் மனசு..இப்படியே உன் சதுவை பெட்டில தள்ளுன்னு சொல்லுது..”

 

அய்யே….பிச்சிடுவேன்..காலேஜ்க்கு டைம் ஆகுதுசாய் ஸ்கூல் வேற போகனும்…” என ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவள்,

 

இப்போ என் மனசு  என்ன சொல்லுதுன்னு சொல்லுங்கஉங்களுக்கு வேற மனசைப் படிக்கத் தெரியுமே…” என விளையாட்டாய்க் கேட்க

 

மிஸஸ்.ஜெய் மனசு என்ன சொல்லுத்துனாசாரி கேட்க சொல்லுது…”

 

இல்லயே..தப்பு செஞ்சா தானே சாரி கேட்கனும்அது கிடையாது…”

 

அது இல்லனா….அப்போ கோடிட்ட இடத்தை நிரப்பனும்என்றவன் அதை நிறைவேற்ற,

 

வெளியிருந்துஅப்பா….அம்மா….” என சாஹித்யா கத்த,

 

உடனே விலகி மகளிடம் வந்த சதுர்மதி மகளைத் தூக்கிக் கொள்ள,அனைவரிடமும் சொல்லிக் கொண்டு ஜெய் காரை எடுத்தான்.

 

மகன் மனைவி குழந்தையோடு செல்லும் அந்த அழகிய காட்சியைக் கண்டு ராகவன் ராதிகா மனம் நிறைவுற்றது.

 

 

 

 

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement