Advertisement

நெருங்கி வா முத்தமிடாதே(6)

இரவு உணவு மாமியார் வீட்டிலே முடிந்து விட்ட காரணத்தால்,ஜெய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான்.சதுர்மதி வந்து குழந்தையின் மறுபக்கம் படுக்க,சாஹித்யாவோ ,

 

அப்பாடெய்லி நீங்க தான் நதுவுல பதுப்பீங்க..ஏன்இப்போ  நான் மிதில்ல இருக்கேன்..” என தாடையில் ஒற்றை விரல் வைத்து யோசனையாய்க் கேட்க

 

சதுர்மதியோ ,”ஓஹ்….நடுவுல தான் படுப்பாரோ….இவரு…” என நினைத்தாள்.

 

ஜெய்யோ குழந்தை இப்படி கேட்கவும் ,”அது வந்துடா…” என ஒரு கதை சொல்ல ஆரம்பிக்க,

 

அவனை நமட்டுச் சிரிப்போடு பார்த்தவள் , “இன்னிக்குக் கதை நான் சொல்றேன்நீங்க கதையெல்லாம் கட்ட வேண்டாம்..” என சொல்ல, அவனோ அசடு வழிந்தான்.

 

சதுர்மதி சரண்யாவிடம் பேசிய பின் தெளிவுற்றாள்.நிதானமாய் யோசிக்கத் துவங்கினாள்.இனி இதுதான் வாழ்க்கை..அதை வசந்தமாக்கிக் கொள்வதும் வருத்திக் கொள்வதும் அவள் கையில் என உணர்ந்தாள்.கடந்து சென்ற காலம் திரும்பி வராது.இனியாவது கணவனையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆகையால் சதுர்மதி இயல்பாக அவனது இடப்பக்கம் வந்து படுத்தாள்.அதை அவன் ஆச்சரியமாய்ப் பார்க்க,அவளோ குழந்தைக்குக் கதை சொல்வதில் மூழ்கிப் போனாள்.

 

அவனருகில் அவள் படுக்க,அவனது இருபுறமும் மனைவி மகள் என இருந்த நிலையை அவன் மிகவும் ரசித்தான்.மனம் மிகவும் அமைதியானது.சதுர்மதிக்கு நினைவு திரும்பியது முதல் அவனுக்குள் இருந்த அலைப்புறுதல் எல்லாம் நீங்கி ,அமைதி குடி கொண்டது.

 

காலையில் அலாரம் அடிக்க,அதை தடவி ஆஃப் செய்தவன் ,எழ முயற்சி செய்ய,முடியாமல் போனது.அவன் மனையவள் தான் அவன் கழுத்தில் கரம் கோர்த்து அவன் மேல் கால் போட்டு சொகுசாய்த் தூங்கினாளே..!

 

இதன் காரணமாகத்தான் அவள் எங்கு குழந்தை மீது கால் போடுவாளோ என்ற பயத்தில் அவன் நடுவில் படுத்து அவளை அவனுக்கு அருகில் படுக்க வைப்பான்.

 

சதுர்மதி அவனை இறுக்கி அணைத்திருக்க,அவளது தூக்கம் கெடாமல் அவளை எப்படி எழுப்புவது என அவன் யோசிக்க,அவள் இன்னும் அவன் மீது சொகுசாய்ப் படுத்துக் கொண்டாள்.நேரமாவதை உணர்ந்தவன் ,

 

சது….சதும்மாடைம் ஆச்சுடா…..கொஞ்சம் என்னை ரீலிஸ் பண்ணுடா…..” என கிசுகிசுக்க, அதில் நெளிந்தவள் ,கண்களைக் கசக்கிப் பார்த்தாள்.நிதர்சனம் உரைக்க,அவசர அவசரமாய்ப் போர்வையை இழுத்துப் போர்த்தியவள் அவனை விட்டு விலகித் திரும்பிப் படுக்க,அவனோ புன்னகை மன்னனாய்,மனைவியை ரசனையான பார்வையோடு தழுவினான்.

 

அவன் குளித்து உடைமாற்றி மருத்துவமனைக்குப் போக ரெடியாகினான்.குழந்தையையும் ரெடி செய்தான்.மதியோ கண்ணில் நீரோடு அப்படியே படுத்திருந்தாள்.அவனோடு அப்படி நெருக்கமாக இருந்ததை எண்ணி வெட்கினாள்.அவனை அப்படி எல்லாம் திட்டி விட்டு ,இப்படி ஒட்டி உரசியதைக் கண்டவன் அவளைப் பற்றி என்ன நினைப்பான்..? என்றெல்லாம் எண்ணி எண்ணி கலங்கினாள் அந்த காரிகை.

 

சாய் குட்டி தான் ரெடியாகி தாயிடம் வந்து , “மா..லேத்தாச்சு..எழுந்திருசாப்பிடலாம்எனக்குப் பசிக்குது…..” என அவள் மேல் ஏறி உட்கார,

 

மகளது மழலைக் குரலும் மதிவதனமும் அவளை சாந்தப்படுத்தியது , எழுந்தவள் மகளைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சி முத்தமிட போக,அவளது மகளோ ,

நோம்ம்ம்மா….டர்டி கிஸ்..நோ….ப்ர்ஷ் செய்யாம பேசக்கூட கூடாதுமா..அப்பா சொல்லித்தரலயா…?மறந்துட்டீங்களா….?” என் கேட்க

 

சதுர்மதிக்கோ இதழோரத்தில் புன்னகை விரிந்து கொண்டே போனதுஆமா.மா….உங்கப்பாசொல்லிக் கொடுத்தாரு  நான் தான் மறந்துட்டேன் டா குட்டி….சரி அம்மா ப்ர்ஷ் செஞ்சிட்டே கிஸ் தரேன்..” என்றவள் எழுந்து பாத்ரூமுக்குள் போனாள்.காலையில் எழுந்த போது இருந்த சங்கடம் சாய் குட்டியால் நீங்கியது.

 

அவள் குளித்து விட்டு உடைமாற்றி கொண்டிருக்கும்போது,ஜெய் கதவை திறந்து வர,அதிர்ந்தவள்,

திரும்பிக் கொண்டு ,

 

உங்களுக்கு சொன்னா புரியவே புரியாதா..?..இப்படி தான் வருவீங்களா…?சை……” என கத்த

 

உஷ்……கத்தாதமதி……டிரஸ் மாத்திற நீ கதவை திறந்துதான் வைப்பியா…?” என அவன் திட்ட,

 

நான் என்ன செய்றது….?சாய் தான் கதவை திறந்து திறந்து வந்துட்டே இருந்தா..அதான்திறந்து வைச்சேன்..” என முனக

 

சரி..சாரி….”என்றபடி அவன் வெளியேறினான்.சதுர்மதிக்கோ கோபமாய் வந்தது.

செய்றதெல்லாம் செஞ்சிட்டு சாரியாம்….’ஏற்கனவே அவன் மேல் சாய்ஞ்சிட்டே வேற இருந்த..இப்போ இப்படி வேற நிக்கிற…’ என்று அவளை அவளே திட்டிக் கொண்டாள்.

 

ஒரு மாதிரி அலைப்பாய்ந்த மனதோடே அவள் சுற்றினாள்.மருத்துவமனைக்குச் செல்லும் முன் , அவன் ரெகுலராக சொல்லும் வசனத்தை சொல்லி சென்றான்.ஆனால் மாறுதலாக சதுர்மதியிடம் சொன்னான்.சரளாம்மா அதைப் புன்னகையோடு பார்த்தார்.இப்படி அவர்களை அழகானக் குடும்பமாய்ப் பார்க்க அவருக்கு சந்தோசமாய் இருந்தது.

 

கணவன் சென்ற பின் ,சரளாம்மாவோடு அவள் கிச்சனில் சமையல் செய்ய உதவ,சரளாம்மாவோ ,

மதிம்மா…..நீ ஏம்மா…..இதெல்லாம் செய்ற…..?போய் சாய் குட்டி கூட விளையாடும்மா….பாவம் குழந்த..நீ இல்லாம தனியா உட்கார்ந்திருக்கு…” என சொல்ல

 

என்னம்மா நீங்க எனக்கு என்ன விளையாடுற வயசா…..?ஆமாம்மா..நீங்க எத்தன வருசமா எங்க கூட இருக்கீங்க…?” என கேட்க

 

சரளாம்மாவோ மனம் நெகிழ்ந்தார் ,வேலை செய்றீர்களா? என கேட்காமல் எங்களுடன் இருக்கிறீர்களா..?என  கேட்ட அவளது குணம் பிடித்து போய் விட்டது.

 

ஜெய் தம்பிக்கு உன்னை ஏன் பிடிச்சதுன்னு இப்போதான் தெரியுதுமா……ராசாத்தி நீ நல்லாயிருக்கனும்மா…..” என்றவர்

 

நான் சாய் பாப்பா பொறந்து பின்னாடியிலிருந்து இருக்கிறேன்மா….” என சொல்ல

 

நான் அப்போ ரொம்ப லூசா இருப்பேனாம்மா….”என இவள் ,அப்போது எப்படி இருந்தாள் என அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்க

 

ஆஹா….அப்படியெல்லாம் இல்லமா….சாய் குட்டி மாறி தான் இருப்ப நீ..”

 

இந்த பைத்தியம்லாம்…..டிரஸை கிழிச்சிட்டு சுத்துமேமா….யாராவது அடிக்குமேடீவியில அப்படித்தானே காட்டுவாங்க….நான் அப்படி எதாவது செஞ்செனா…?” என கம்மிய குரலில் கேட்க

 

அய்யோ..அய்யோஎன்னம்மா நீ..அதெல்லாம் நீ அப்படி இல்ல….காலையிலே குளிச்சிட்டு ரெடியா உட்கார்ந்திருப்ப….நான் தான் சொல்றேனே குழந்தை மாறி தான்மா நீ இருப்ப..” என அவளை சமாதானம் செய்ய,

 

நீங்க தான் என்னை ரெடி செய்வீங்களாம்மா…?”

 

நான் லேட்டா தான்மா வருவேன்தம்பி உன்னையும் குழந்தையும் எழுப்பி ரெடி செஞ்சு வைச்சிருவார்நான் வந்து சமைப்பேன்..இன்னிக்கு தான் தம்பி இப்படி நிதானமா கிளம்பி போறதைப் பார்க்கிறேன்…..”

 

என்னது அவன் தான் ரெடி பண்ணுவானாஅய்யகோ……கடவுளே…..முழுசா நனைஞ்ச பின்னாடி முக்காடு போட்ட மாதிரி என்னை  பார்த்த அவனைப் போய் என்னைப் பார்த்துட்டான் பார்த்துட்டான்னு சீன் போட்டுருக்கேனே…..’ என மனதில் நொந்தவள் அவனிடம் மன்னிப்புக் கேட்க எண்ணி ,

 

சாய் குட்டியைப் பார்த்துக்கோங்கம்மாஒரு நிமிசம் வந்துடுறேன்..” என்றவள் அறைக்குள் சென்று ,

 

அவன் அவளுக்காக வாங்கிய புது போனில் அவன் எண்ணை அழுத்தினாள்.முதலில் வில்லன் என்று பதிவு செய்திருந்த அவன் நம்பரைமை ஹீரோஎன்று மாற்றியமைத்தாள்.

அவன் போனை அட்டெண்ட் செய்ததும்,

 

ஹலோசொல்லு சது..என்ன போன்ஆர் யூ ஓகே….?” என அவன் விசாரிக்க

 

ம்ம்நாங்க நல்லாயிருக்கோம்….சாரி ஜெய்…” என சொல்ல

 

எதுக்கு சாரி..?”

 

காலையில கத்துனதுக்கு…..நீங்க தானே வந்தீங்க….. நான் ரொம்ப திட்டிட்டேன்..” என சொல்ல அந்த பக்கமோ அமைதி.

 

கோபமாக இருக்கிறானோ…?’ என நினைத்தவள்

சே..சே…..இவர் கோடியில ஒருத்தராச்சேகோவம் நான் என்ன விலைன்னு கேட்பாரே என் ஆளு…’ என நினைத்தவள்

 

ஜெய்….” என இழுக்க

 

ம்ம்..”

 

என்ன ஜெய்..சாரி சொல்லியும் கோபம் போகலயா…?” என வருத்தமாய்க் கேட்டாள்.அவனோடு எல்லாவற்றையும் சரி செய்து கொள்ள விழைந்தது அவள் மனம். நடந்தது நன்மைக்கா என அவளுக்குத் தெரியவில்லை ஆனால் இனி நடக்கப்போவது நல்லதாக இருக்க வேண்டுமென விரும்பினாள்.

 

அவனோ உதட்டில் புன்சிரிப்போடுசாரி எப்படி சொல்லனும்னு போய் என் பொண்ணைக் கேளு……உங்கப்பா உனக்கு சொல்லித்தரலயா…?” என விசமமாய்க் கேட்க,

 

ப்ராடு..ஹீரோ மாறியா பேசுறான்….420……எப்படியும் எதாவது தகிட தத்தமாத்தான் இருக்கும்…’

 

எங்கப்பா எனக்கு சொல்லித்தரல……நீங்க வேணும்னா சொல்லித்தாங்களேன் ஜெய்..” என இவள் அவனுக்கு சரிசமமாய்க் கேட்க

 

அதெல்லாம் முடியாது மேடம்…..நீங்க தான் தப்பு செஞ்சீங்கசோ நீங்க தான் சாரி சொல்லனும்..போய் என் பொண்ணுட்ட கத்துக்கங்க….உங்கப்பா உங்களை தத்தியா வளர்த்து வைச்சிருக்காரு…” என்றான் வேண்டுமென்றே..!

 

ஹலோ டாக்டர் சார்..உங்க பொண்ணுக்கு நீங்க ஹீரோன்னா…..எனக்கு எங்கப்பா ஹீரோ…..” என இவள் சிலுப்ப

 

அப்போ நான் யாரு….?” என அவன் கிசுகிசுப்பாய்க் கேட்க,அவனது குரல் ஊடுருவியது.

 

நீங்க மிஸ்டர்.சதுர்மதி…” என சொல்ல

 

ஹா ஹா..தேங்க் யூ மிசஸ்.ஜெய்..” என்றான் அவன்.இந்த இலகுவான இதமான உரையாடலால் இருவரின் மனமும் நிறைந்திருந்தது.

 

ஜெய் நியாயபகம் வந்தவனாக ,”ஹே..!சது சொல்ல மறந்துட்டேன்….அம்மா இன்னிக்கு வீட்ல வரலஷ்மி பூஜை செய்றாங்கடா…..சொன்னாங்க…..நான் எப்போவும் வீட்டுக்குப் போக மாட்டேன்….இப்போ போகலாமாஉனக்கு ஓகேவா..?” என அவள் விருப்பம் கேட்டான்.திருமணம் ஆன பின் ராகவன் மகனை ஒதுக்கி விட்டதால் ஜெய்சங்கர் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருந்தான்.அவனை பார்க்க வேண்டுமென்றால் அவனது தாய் ராதிகாவும் தம்பியும் வந்து பார்த்து செல்வார்கள்.

 

இப்போது இவள் குணமான விசயம் அவர்களுக்குத் தெரியாது.இவனோடான அவளது உறவு கொஞ்சம் நிலைப்பெறத் துவங்கியதும் சொல்லலாம் என்று நினைத்தான்.இப்போது மனையவளின் பேச்சு அவனது மனதுக்குத் தைரியம் தர, அவன் கேட்டு விட்டான்.

இதுல..என்ன இருக்குபூஜைல கலந்துக்கறது நல்லதுதானே….ஆனா மாமாவுக்கு நம்ம மேல கோபம் இருக்குமேங்க……” என இவள்நம்மஎன்று சொன்னது அவனுக்கு மேலும் உற்சாகம் தர

 

அவருக்கு நான் அந்த நிலையில உன்னைக் கல்யாணம் செஞ்சதுதான் டா கோவம்..இப்போ நீ நல்லா தான இருக்க….சொல்லப்போனா  நான் தான் இப்போ ரொம்ப பைத்தியம் உன் மேல….சோ போகலாமா….அம்மா சந்தோசப்படுவாங்க….அண்ட் நான் நீ நல்லாயிட்டேன்னு சொல்லவே இல்லசர்ப்ப்ரைஸா இருக்கும்..”

 

கண்டிப்பா போகலாம்நானும் சாய் குட்டியும் ரெடியாகுறோம்…”

 

ரெடியாகு சதுநானும் சீக்கிரமே வரேன்…..ஆனா மறக்காம  சாரி சொல்றது எப்படின்னு கத்துக்கோ..” என அவளை சீண்ட

 

என்ன அடிச்சதுக்கு நீங்க எப்படி சாரி சொன்னீங்க….வாயால தான..நானும் அப்படிதான் சொல்வேன்..” என பதில் சொல்லிவிட்டு அவள் போனை வைத்தாள்.அவனுக்கு பல்ப் கொடுத்தாலும் மகளிடம் சென்று ,

 

குட்டிசாரி எப்படி சொல்லனும்னு அப்பா சொல்லியிருக்காருடா…?” என கேட்க ,அவளது சமத்து சக்கரைக் கட்டி,

 

இப்படி..” என்றவாறு அவளது கன்னத்தில் முத்தமிட்டு சாரி என்றது.கணவனின் பேச்சின் அர்த்தம் புரிந்தவளது முகம் செங்காந்தளாய் சிவக்க,ஜெய்யும் சீக்கிரமாக வீடு வந்தான்.

 

ஒரே நிறத்தில் அம்மாவும் மகளும் ஆடையணிந்து இருக்க,தேவதைகள் பூமிக்கு வந்துவிட்டனரோ என்று எண்ணினான் ஜெய்.அவனது மகளும் மனைவியும் தேவதைகள் தானே அவனுக்கு..!!

 

வந்தவன் மகள் ,மனையாட்டி இருவரிடமும் , “சூப்பர்என சொல்ல

 

அப்பா..நீங்களும் சேம் டிரஸ் போடுங்க..”என சொல்ல,அவனும் அதே நிறத்தில் உடையணிந்து வந்தான்.

 

காரில் போகும்போது மனைவியிடம்சாரி எப்படி கேட்கறதுன்னு கத்திக்கிட்டியா சது..” என்றவனை முறைத்தவள்

குழந்தையைக் காட்டினாள்.உடனே அவனும் ஒற்றை விரலை வாயில் வைத்துஓகே..ஓகே..” என்றான் மண்டையை ஆட்டியபடி.அதைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது.

 

முதலில் மகனைப் பார்த்து மகிழ்ந்த ராகவன் பின்னாடி வந்த அவரது பைத்தியக்கார மருமகளைக் கண்டு மனைவியை முறைத்தார்.ஆனால் சதுர்மதியோ ,

 

எப்படி இருக்கீங்க மாமா..?நல்லா இருக்கீங்களா..?..என்னத்த அப்படி பார்க்கிறீங்க…..?வாவ்இன்னமும் அப்போ பார்த்த மாதிரியே இருக்கீங்க மாமா..?” என சொல்ல , கேட்டுக் கொண்டிருந்த ராகவன்,ராதிகா,சிவசங்கர் அனைவருக்கும் ஆச்சரியம். மனைவியின் பேச்சைக் கேட்டு ஜெய்க்கு சிரிப்புப் பீறிட்டது.அவனை எல்லாரும் கேள்வியாய் நோக்க அவள் குணமானதை ஜெய் சொல்ல ,மூவருக்கும் மனம் நிறைந்து போனது.ஜெய் தந்தை தம்பியோடு மகளை மடியில் வைத்துக் கொண்டு பேச,

 

அதைக் கண்ட ராதிகாவுக்கு மனம் நிறைந்து போனது,எத்தனை ஆண்டுகள் கழித்து தந்தையும் மகனும் இப்படி பேசுகிறார்கள்.?அவர் கண்ணில் நீர்த்துளிர்க்க,மருமகளிடம் அவரது மகனைப் பற்றி பெருமையாக சொன்னார்.அதிலும் அவர் கடைசியாக சொன்ன விசயம் அதிர்ச்சியாக இருந்த போதிலும் ,அதைக் கேட்டவளது மனதில் கணவனை ஏற்றுக்கொள்ள அணையாய் இருந்த தடையெல்லாம் நீங்கி , அவன் மீதான் காதல் காற்றாற்று வெள்ளமாய் பெருகியது.

Advertisement