Advertisement

 

            நெருங்கி வா முத்தமிடாதே(5)

சதுர்மதியும் சரண்யாவும் ஒன்றாம் வகுப்பு முதலே தோழிகள்.கல்லூரி காலத்திலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.ஒருத்திக்கு ஒருத்தி அவளை பார்ப்பதை விட அடுத்தவளை பார்ப்பதுதான் வேலை.இவளுக்காக அவள் பார்ப்பாள்.அவளுக்காக இவள் பார்ப்பாள்.அப்படிப்பட்ட இறுகிய

 

சதுர்மதியின் தந்தை ராமகிருஷ்ணன் ஒரு தொழிலதிபர்.அவரது மனைவி வசந்தி குடும்பத்தலைவி.அவர்களது ஒரே செல்ல மகள் சதுர்மதி.அவள் என்ன கேட்டாலும் உடனே நிறைவேத்தி வைத்து விடுவார் ராமகிருஷ்ணன்.துடுக்குத்தனமும் துணிச்சலும் நிறைந்தவள் சதுர்மதி.

 

சரண்யாவின் பெற்றோர் முத்துவேல்ஆதிலட்சுமி.முத்துவேல் அவர்கள் ஊரில் பெரிய மிராசுதார்.ஏகப்பட்ட சொத்துகள்.அவருக்கு இரண்டு மகன்கள்.மூன்றாவதாய்ப் பிறந்தவள் சரண்யா.மிகவும் கட்டுப்பாடான குடும்பம்.அதுவும் பெண் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு ஜாஸ்தி.முத்துவேல் ஊரில் இல்ல நிலபுலன்களை எல்லாம் குத்தகைக்கு விட்டு விட்டு பிள்ளைகளின் படிப்பிற்காக சென்னையில் குடியேறினார்,அதுவும் சதுர்மதியின் வீடு இருக்கும் அதே பகுதியில்.அதனால் விதை விருட்மாவது போல் அழகாய் வேர் விட்டு தளிராகி மரமாகி நின்றது அவர்களது நட்பு.

 

சரண்யா சதுர்மதியின் நட்பு இருவீட்டாரும் அறிந்ததுதான். இருவரும் ஒரே கல்லூரியில் வேறு வேறு பாடப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தனர்.தினமும் கல்லூரிக்கு இருவரும் ஒன்றாகத்தான் போவார்கள் வருவார்கள்.

 

அப்போது மூன்றாம் வருடத்தில் இருந்தனர் தோழியர் இருவரும். சிறப்பு வகுப்பு முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்த போது சரண்யாவிடம் வந்தான் கதிர்.

 

கதிர் சரண்யாவின் சீனியர்.அதே கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படிப்பவன்.அவன் கல்லூரிக்கு வருவதே சரண்யாவைப் பார்க்கத்தான்.சரண்யா அழகென்றால் அப்படி ஒரு அழகு.இயல்பிலேயே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள் என்பதால் ,அந்த இன்னொசன்ஸ் கூட அவளுக்கு இன்னமும் அழகு சேர்த்தது.இவையெல்லாம் சேர்த்து கதிரை சரண்யாவின் மீது பித்துக்கொள்ள வைத்தது.

 

ஹாய் சரண்யாக்குட்டி..” என்றபடி வந்தவனிடத்தில் அடித்த சிகரெட் நாற்றம் தாங்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் சரண்யா.

 

டேய்..பொறுக்கிஎன்னடா வேணும்..இவ பின்னாடி வரதான்னா கேட்க மாட்டியா நீபோஇங்கிருந்து..” என தோழிக்காக சதுர்மதி பேச

 

ஏய்…..என்ன வாய் ஓவராப் போகுது..என்ன வேணுமா..உன் ப்ர்ண்ட்தான் வேணும்….” என்று அவன் சிரித்துக் கொண்டே கூற

 

செருப்பு பிஞ்சிரும்…” என்று முறைத்தாள் சதுர்மதி.சதுர்மதிக்கு எப்போதுமே துணிச்சல் ஜாஸ்தி.ஆனால் பயந்த சுபாவம் கொண்ட சரண்யாவோ ,

 

மதி..ப்ளீஸ் சண்டை வேண்டாம்….அமைதியாயிரு…”

 

இன்னும் ஆறு மாசம் காலேஜ் வருவ..அதுக்குள்ள எனக்கு ஓகே சொல்றஇல்ல….. நான் மனுசனா இருக்க மாட்டேன் சரண்யா..” என்று அவளை மிரட்டி விட்டு சென்றான் அந்த கதிர்.

 

அவன் சென்றதும் இருவரும் பேருந்தில் போகும்போதே சதுர்மதி சரண்யாவை  நன்றாக வெளுத்து வாங்கத் தொடங்கினாள்.

 

நான் உங்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்..அந்த ராஸ்கல் தான் டெய்லி உன்னை சுத்துறான்ல..வீட்ல சொல்லாலம்னா கேட்கிறியாடி நீ….லூசு……பாரு எப்படி திமிரா பேசுறான்னு…”

 

விடுடி…..என்னமோ பேசிட்டு போறான்….இப்போ போய் வீட்ல சொன்னா எங்க ஆச்சி உடனே படிப்பை நிறுத்த சொல்லிடும்டிநான் படிக்கிறது உனக்குப் பொறுக்கலயா…?” என ஆற்றாமையோடு சரண்யா கேட்டாள்.

 

அவள் அப்படி சொல்ல காரணமுண்டு.அவள் பள்ளிப்படிக்கையில் உடன் படித்த ஒருவன் காதல் கடிதம் கொடுத்து விட ,அது சரண்யாவின் வீட்டிற்குத் தெரிந்து பெண்பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டாமென அவளது ஆச்சி சொல்லிவிட,முத்துவேலுக்கும் எங்கே மகள் காதல் கீதல் என்று போய் குடும்ப மானத்தை வாங்கி விடுவாளோ என்ற பயம்.அதனால் அவரும் தாயின் சொல்லுக்கு உட்பட , அவளது அண்ணன்கள்,சதுர்மதி எல்லாரும் சேர்ந்து ஒருவாரம் கெஞ்சி தான் அவளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வைத்தனர்.

 

ப்ச்சும்மா உளறாத சரா…..இவன் செய்றது நாளுக்கு  நாள் அதிகமாயிட்டே போகுதுஇதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருக்கனும்…..இப்படி விட்டதுதான் தப்பு.ஒரு பெண்ணைக் காதலிக்கறவன் கல்யாணம் செய்யனும்னு நினைக்கறவன் அந்த பெண்ணை இப்படி துரத்த மாட்டான்இவனுங்க செய்றது துரத்தல்..காதல் இல்லை….பிடிச்சிருந்தா நேரா போய் அப்பா அம்மாக்கிட்ட பெண் கேட்கனும்அதை விட்டு பொறுக்கி ராஸ்கல்தினமும் இப்படி உன்னை ஃபாலோ பண்றதும் மிரட்டறதும்வர வர இவனுங்க தொல்லைத் தாங்க முடியல….”

 

விடுடி….நம்மை எதிர்த்துப் பேசினா தான் அவங்களை சீண்டி விட்ட மாதிரி ஆகிடும்அமைதியா போனா மறந்துடுவாங்க..இன்னும் ஆறு மாசம்..அப்புறம் எப்படியும் எங்க வீட்ல எனக்குக் கல்யாணம் செஞ்சிடுவாங்க…..அதனால நீ தேவையில்லாம கவலைப்படாதடி…” என சரண்யா  சொல்ல

 

இல்லடி……நாய் குலைச்சா ஓடுனா திரும்ப துரத்திட்டே தான் இருக்கும்நின்னு கல்லை எடுத்தா நாய் தெறிச்சு ஓடும்..இவனையெல்லாம் அப்படி தான் ட்ரீட் செய்யனும்…..” என கோபமாக சதுர்மதி பேச

 

அய்யோவிடு மதி……அவனைப் பத்தியே பேசிட்டு……..”

 

அதன்பின் தோழியர் இருவரும் வேறு விசயம் பேசினர்.

 

இப்படியாக மாதங்கள் உருண்டோட ,அவர்கள் படிப்பை முடிக்க இரண்டு மாதம் இருந்த நிலையில் சரண்யாவுக்கு அவளது ஒன்று விட்ட அத்தை மகனோடு நிச்சயம் ஆகியிருந்தது.அதைக் கேள்வியுற்ற கதிர் சரண்யாவை தனியாக சந்தித்து,

 

ஹே..!!என்னடி திமிரா……நீ எனக்கு மட்டும் தான்….வேற எவனாவது வந்தா கொன்னுடுவேன்……ஒழுங்கு மரியாதையை என்னைக் கல்யாணம் செஞ்சுக்கோ….இல்ல…” என்று மிரட்ட

 

இங்க பாருங்க கதிர்…..எனக்கு எங்கப்பா சொன்ன மாப்பிள்ளையைத் தான் பிடிச்சிருக்கு..எங்கப்பாவை மீறி என்னால எதுவும் செய்ய முடியாதுஉங்களை எனக்குப் பிடிக்கல…..என்னை விட்ருங்க…” என சரண்யா வாய் திறந்து முதல் முறையாக அவனை எதிர்த்துப் பேச

 

வாடிவாஎன்னைப் பிடிக்கலயா…?பிடிக்கலன்னாலும் நீ என்னை தான் கல்யாணம் செஞ்சிக்கனும்….இல்லன்னா..?”

 

இல்லன்னா…” என இவளும்  பயத்தில் இழுக்க

 

சொல்லக்கூடாது இப்போ இதுக்கு யூஸ் இல்லன்னு நினைச்சேன்ஆனா நீ என்னை சீண்டி விட்ட……இங்க பாருடி நீ என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிற..இல்ல……நான் இந்த ஃபோட்டோவ நெட்ல ரீலிஸ் செஞ்சிடுவேன்ஒரு பைய உன்னைக் கல்யாணம் செஞ்சிக்க மாட்டான்..” என வக்கிரமாகப் பேசியவன் அவளிடம் தன் செல்பேசியைக் காட்ட ,அதில் morphing செய்யப்பட்ட அவளது புகைப்படம் இருக்க அதிர்ந்து போனாள்.

 

இல்லஇது  நா இல்ல….” என அவள் அழுகையோடும் பயத்தோடும் சொல்ல

 

எஸ்..நீ இல்லதான்….ஆனால் இதை யாரும் நம்ப மாட்டாங்களேடி…….சும்மா போர் அடிச்சதுன்னு செஞ்சேன்நல்லா இருக்குல..” என வன்மமாகச் சிரித்தவன் ,

 

எனக்கு நீ வேணும்……..நீ எனக்கு மட்டும் தான் வேணும்ஒழுங்கு மரியாதையா என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறஇல்ல….இது உலகமே பார்க்கும்…”

 

ப்ளீஸ் என்னை விட்ரு கதிர்……….என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்ற….”

 

நீ என்னை செஞ்சதை விடவா………..உன் அழகு இந்த மூணு வருசமா என்னை சித்ரவதை செஞ்சத விடவா சரண்யா…….எனக்கு நீ வேணும்…….” என்றவனின் பார்வை அவளுள் குளிரெடுக்கச் செய்தது.உடல் நடுங்க அவன் முன் நின்றாள்.

 

இங்க பாரு….நீ ஒன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ இல்ல…..என்னை சேடிஸ்ஃபை செஞ்சிடு….எதுவானாலும் எனக்கு ஓகே..பட்…. நீ எனக்குத்தான் முதல்ல கிடைக்கனும்….அதுக்குப்புறம் உங்க அத்த மகன் , மாமன் மகன் யாரை வேணும்னாலும் கட்டிக்கோஐ டோண்ட் கேர்…” என்று

கேவலமாகப் பேச சரண்யாவுக்குத் தலைக் கிறுகிறுத்தது.

 

உனக்கு ஒன் வீக் டைம்…”என்றபடி அந்த கெடுகெட்ட கதிர் சென்று விட அவளது இருக்கையிலேயே மடங்கி அழுதாள் சரண்யா.

 

அப்போது பார்த்து ஏதெச்சையாக அவளது வகுப்பறை வழியாகச் செல்ல நேர்ந்த சதுர்மதி இவையனைத்தும் கேட்டு விட , அவளுக்கும் திக்கென்றது.அப்படியே சிலையென சமைந்து விட்டாள்.

 

ஒரு வழியாக தன்னை சுதாரித்துக் கொண்டவள் சரண்யாவைப் பார்க்க செல்ல,

 

சரா..” என்று மென்மையாக அழைக்க ,அதில் தூக்கிவாரப்போட்டவளாக

 

என்ன…?” என்று பதட்டமாகக் கேட்க

 

என்னடி க்ளாஸ்ல தனியா இருக்க..?அழுதியா….என்ன ஆச்சுனு சொல்லு..” என சதுர்மதி அக்கறையாக கேட்க

 

ஒன்னுமில்லஎல்லாரும் லைப்ரரி போய்ட்டாங்கடி..எனக்குத் தலைவலி அதான் க்ளாஸ்ல இருந்தேன்….மத்தபடி ஒன்னுமில்ல..” என்று பொய்யுரைத்தாள்.

 

எதுவா இருந்தாலும் சொல்லுடி..” என அவள் கேட்டுப் பார்த்தும் அவள் ஒன்றுமில்லை என மறுத்துவிட்டாள்.

இந்த அவலத்தை தோழியானாலும் அவளிடம் சொல்ல மனமில்லை.உள்ளுக்குள் கூசிப்போனாள் சரண்யா.சதுர்மதி போன்று துணிச்சலாக  அவள் வளர்க்கப்படவில்லை.தோழிகளானாலும் இருவரின் வளர்ப்பு முறைகளும் வேறு என்பதால் பெண்ணவள் மிகவும் உடைந்து போனாள்.

 

சரி பார்த்துக்கோ…” என்று வெளியே சென்ற சதுர்மதி தோழிக்காக அந்த வேலையை செய்தாள்.இனி மேல் பொறுத்தால் தோழியின் நிம்மதி போய் விடும் என்றுணர்ந்த்வள் தோழியைக் காக்க தக்க வழியை யோசித்தாள்.

 

பெண் உடலை முன்வைத்து , அவளின் கற்பை காரணம் காட்டி பெண்களை மிரட்டுவது தான் சில வக்கிரப்புத்திக் கொண்ட ஆண்களின் வேலையல்லவா..?

 

பெண்ணின் உடல் அவளது அந்தரங்கம்.அது வெளியே தெரியும் பட்சத்தில் அவளது கற்பு பறி போய் , அவள் அவமானப்பட்டு தற்கொலை செய்ய வேண்டும் போன்ற கற்பிதத்தைத்தானே நம் சமூகம் ஆண்டாடு காலமாக செய்து கொண்டிருக்கிறது. சமூகத்தின் இத்தகையைக் கோட்பாட்டை தகர்ப்பது அத்தனை எளிதல்ல.

 

பெண்ணின் மானம் , மரியாதை என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல என்பதை பெண்கள் முதலில் உணர வேண்டும்.இது போன்ற சூழ் நிலைகள் பெண்கள் தைரியமாக, துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும்.

 

சதுர்மதியும் அத்தகைய முடிவை எடுத்தாள்.ஒரு முறை இந்த வக்கிரம் கொண்ட ஈன புத்திக்காரர்களுக்கு அடிபணிந்து போனால் மீண்டும் மீண்டும் அதே வழியைக் கையாள்வார்கள்.

 

சதுர்மதி சரண்யாவின் அத்தை மகன் , அதாவது அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பிரபாகரனை தொலைப்பேசியில் அழைத்தாள்.

 

ஏற்கனவே பிரபா பற்றி சதுர்மதி அறிவாள்.சரண்யாவுக்கு நெருங்கிய தோழி என்பதால் அவள் வீட்டு விசேசங்களுக்குச் செல்ல அனைவரும் சதுர்மதிக்கு நல்ல பழக்கம் தான்.

 

அந்த பக்கம் பிரபா போனை எடுத்ததும் ,”அண்ணா நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்….தனியா பேசனும்..” என சதுர்மதி சொல்ல

 

என்ன…..மதி…..சரண்யா எதாவது பேசனும்னாளா…?” என இவன் புது மாப்பிள்ளையாகப் போகிற குஷியில் கேட்க

 

இல்லண்ணாநான் தான் பேசனும்…..”என்றவளின் குரல் கமற

 

என்னமா மதிஎன்ன பிரச்சனைனாலும் தயங்காம சொல்லுமா…” என அவனும் அன்போடு கேட்க

 

மாலையில் வீட்டிற்குச் சென்றதும் வேறு தோழியைப் பார்க்கப் போகிறேன்று பொய்யுரைத்து விட்டு பிரபாவை சந்திக்கச் சென்றாள் சதுர்மதி.நடந்த அனைத்தையும் அவள் அவனிடம் அழுது கொண்டே கூற,

 

இங்க பாரு மதி..சரண்யாவைப் பத்தி யாரு தப்பா சொன்னாலும் நான் நம்பமாட்டேன்மாஅவளை சின்ன வயசிலேர்ந்து பார்க்கிறேன் நான்நான் பார்த்துக்கிறேன்நீ கவலைப்படாதம்மா…” என அவன் வருங்கால மனைவியைப் பற்றி அறிந்தவனாக சொல்ல

 

ரொம்ப தேங்க்ஸ்ண்ணாஅவ எங்கிட்ட கூட இந்த விசயத்தை சொல்ல விரும்பலநானா இதை தெரிஞ்சிக்காம போயிருந்தா என்னவாகியிருக்கும்னு தெரில……இதுக்குத்தான் நான் அப்போவே சொன்னேன்..வீட்ல சொல்லிடுடிஅவங்க பார்த்துப்பாங்கன்னு.. ஆனா அவ தான் கேட்கவே இல்லண்ணாபயந்துட்டே இவ்வளவு தூரம் விட்டுட்டா..”

 

அவ மேல தப்பில்லடாபெண்ணுக்குப் பாதுகாப்புனாலே ஒளிஞ்சிக்கறதான்னு சொல்லிவளர்த்துட்டாங்க..துணிஞ்சி நம்மளைக் காத்துக்கறதுதான் பாதுகாப்புன்னு அவளுக்குப் புரியல..புரியவைக்கவும் இல்ல…..ஒரு பெண் தான் பெண்ணைக் காத்துக்கனும்……அவ வீட்ல அவளுக்குப் பாதுகாப்புன்னு சொல்லி பொத்திப் பொத்தி வளர்த்தாங்களே தவிர தைரியமா வளர்க்கலடா..எங்க படிப்புக் கெட்டுடுமோன்னு பயத்துல அவளும் சொல்லாம விட்டுட்டாநாட்டுல இன்னிக்கு சில பெண்களோட நிலைமை அப்படி தான் இருக்குஉன்னை மாறி ஜான்சி ராணில்லாம் கம்மிதான்மா…” என்று சூழ்னிலையை இலகுவாக்கும் பொருட்டு சொல்ல,

 

அவனது கூற்றில் சிரித்தவள்போங்கண்ணாஜான்சி ராணியா இருந்தா..அந்த கதிர்ட்ட போய் சண்டைபோட்டுருக்க மாட்டேன்..உங்க கிட்டவா ஹெல்ப் கேட்டு வருவேன்…….அண்ணா….கண்டிப்பா இதை சமாளிச்சிடுவீங்க தானே….” என கொஞ்சம் பயத்தோடு கேட்க

 

நான் பார்த்துக்கிறேன்என்றவன் அடுத்த நாள் தனது போலிஸ் நண்பன் உதவியோடு அந்த கதிரைப் பிடித்து அவனது செல்பேசியில் இருந்த படங்கள், லாப்டாப் பென்டிரைவ் என்று அனைத்திலும் இருந்த எல்லா படங்களையும் அழித்து விட்டு,அவனை மரண அடி அடித்தனர்.

 

இனி சரண்யாவின் பக்கம் போகவே கூடாதென்ற மிரட்டலோடு அவனை விட்டனர்.அவர்கள் அடித்த அடி அவன் வாழ்நாள் முழுவதும் மறக்காது.ஆனால் திருந்துகிற ஜென்மமா

அவன்?மூன்று ஆண்டுகளாக சரண்யாவின் அழகு மேல் இருந்த வெறி அதற்கு காதல் என்ற சாயம் வேறு பூசித் திரிந்தவன் அவளை அவ்வளவு எளிதாக விட்டுவிட எண்ணவில்லை.

 

மனம் முழுவதும் துவேஷம்எந்த அழகு அவனைப் பித்தம் கொள்ள வைத்ததோ..எது இனி அவனுக்குக் கிடைக்காதோஎது இன்னொருவனுடையதாகப் போகிறதோஅதை அழிக்க நினைத்தான்.அதனால் ஒரு வாரம் கழித்து , சரண்யா சதுர்மதியோடு பேருந்து நிலையத்தில் இருக்க,அப்போது பார்த்து பிரபா சரண்யாவோடு போன் பேச ,சதுர்மதியோ தோழி வருங்காலத்தோடு கடலை,போண்டா எல்லாம் போடட்டும் என  நாசுக்காய்த் தள்ளி நிற்க,சரலென்று வந்த பைக்கில் இருந்த கதிர் கண் இமைக்கும் நொடியில் ஆசிட்டை சரண்யாவின் மீது ஊற்றி செல்ல,அதில் அவள் துடிதுடித்து கீழே விழுந்தாள்.அந்த கோரக்காட்சியைக் கண்ட சதுர்மதியின் இதயம் ஒரு நொடி துடித்து நிற்க,அழுகையும் கதறலுமாகத் தோழியிடம் ஓடினாள்.

 

ஆசிட்டை ஊற்றிய கதிர் வேகமாக மெயின் ரோட்டில் திரும்ப அந்த நேரம் வேகமாக ஒரு லாரி வந்து அவனை மோத அங்கேயே அவன் உயிரிழந்தான்.

 

சரண்யாவின் கதறல் அந்த பக்கமிருந்த பிரபாவுக்கும் கேட்க,பதறியவன் வேகமாக தன் வண்டியில் விரைந்தான்.உடனடியாக அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டாள்.

 

கண்ணீரும் அதிர்ச்சியும் மட்டுமே கொண்டவளாக சதுர்மதி தோழியை அனுமதித்திருந்த ஐ.சி.யு வை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

சதுர்மதி தோழியிடம் போக ,அவள் முகம் கழுத்து என எரிந்திருக்க,

 

மதி………………” என்றவளின் ஓலத்தில் மரத்துப்போனது மதியின் மனம்.கூடவே கதிரின் மரணத்தையும் நேரில் பார்த்தவளுக்கு ஒரே நாளில் கிட்டிய இரண்டு அதிர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை.தான் மட்டும் முன் கூட்டியே தோழியின் வீட்டில் இவன் பின் தொடர்ந்தவதைக் கூறியிருந்தால் தன் சராவுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காதோ என்ற எண்ணம் உதிக்க ,அவளது செல்கள் அனைத்தும் சிந்திக்கும் ஆற்றலை இழந்தன.

 

இரட்டைப் பிறவி போல் பல வருடங்களாகச் சுற்றித் திரிந்த தோழி உயிருக்குப் போராட, அதை இலவம் பஞ்சு போல் மெல்லிய மனம் கொண்ட சதுர்மதியால் தாங்க முடியவில்லை.

 

அன்று முழுவதுமே அமைதியாக அறையை வெறித்துக் கொண்டிருந்த சதுர்மதியைக் கண்ட அவளது பெற்றோருக்கு அப்போதுதான் பயம் தொற்றியது.அதுவரையில் மகள் போல் இருந்த சரண்யாவின் நிலைக் கண்டு துடித்தவர்கள் மகளின் நிலையைக் கவனிக்க,அவள் நிலைப் பிறழ்ந்து போயிருந்தாள்.

 

சரண்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅஎன்று மனைவியின் அலறலில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் ஜெய்சங்கர்.

 

சதுசதுமா…” என அவன் அவளை உலுக்க,

 

ஹா….ஹான்…..சரா….என் சரா…..” என்றவளின் கன்னத்தில் தட்டியவன் ,

 

என்னாடாச்சுபழசை நினைச்சியா…?” என பரிவோடு கேட்க

 

ம்ம்…..சரண்யா நல்லத்தானே இருக்கா… “என மலங்க விழித்தபடி பயத்தோடு கேட்க

 

அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன்சரண்யா நல்லா இருக்கா..சது…… இப்போ அவளை இன்னும் கொஞ்ச நேரத்தில பார்த்துடுவோம்டா…” என சொன்னவனின் நெஞ்சாங்கூட்டுக்குள் வாகாய் சுருண்டுக் கொண்டாள் சதுர்மதி.அவனது அணைப்பும் ,ஆறுதலும் அந்த கணம் அவளுக்கு மிகவும் தேவையான ஒன்றாய் இருந்தது.

 

மனைவியைக் கைவளைவிலேயே வைத்திருந்தவன் ,அப்படியே  பேசஞ்சர் அரைவலாகும் இடத்துக்குக் கூட்டிச் சென்றான்.

 

உற்சாகமாய் அவர்களை  நோக்கி வந்தாள் சரண்யா.அவளைப் பார்த்ததுமே எப்படி இருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என்று நெஞ்சம் குமுறியது சதுர்மதிக்கு.அழுகையை அடக்க முடியாமல் கணவனின் தோளிலேயே சாய்ந்து அவள் விம்ம,

 

புன்னகையோடு வந்தவள் ,தோழியின் தோளில் தட்டி ,

அவள் கணவனோடு நின்ற கோலத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவள் ,மதியை இயல்புக்குக் கொண்டு வரும் பொருட்டு ,

எப்படிண்ணாஒரே நைட்ல வில்லனா இருந்த நீங்க ஹீரோவா மாறீட்டிங்க…?” என ஜெய்யைக் கலாய்க்க,

 

ஹே..!வாலு..நான் எப்போவுமே ஹீரோதான்மா…” என அவன் காலரைத் தூக்கி விட,சதுர்மதி சரண்யாவையே வைத்தக் கண்வாங்காமல் பார்த்தாள்.அழகென்றால் அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவள் அவள்.

 

அவளை இப்படி பார்க்க வருத்தமாக இருந்த போதிலும்,இப்போதும் அவள் கண்ணுக்குப் புன்னகையோடு நின்ற சரண்யா பேரழகியாகத்தான் தெரிந்தாள்.அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் தானே..!!

 

Beauty lies in the eyes of beholder..!!

 

எப்போதுமே மதிக்கு அவள் தோழி பேரழகிதான்..!!

 

என்னடி..இவ்வளவு நேரமா என்னை சைட் அடிக்கிற..?இத்தன வருசம் கழிச்சு பார்க்கிறியே…..ஒரு ஹக் கிஸ் எதுவுமில்ல…..உங்க வீட்டுக்காரரைத் தான் வீட்ல கொஞ்சுவியே அது போதாதுன்னு ஏர்ப்போர்ட்லையுமா..?” என சரண்யா மதியை வம்பிழுக்க

 

மதியோ இன்னனும் ஆச்சரியம் விலகாமல் சரண்யாவைப் பார்த்தாள்.இந்த சரண்யா அவளுக்கு முற்றிலும் புதிது.அவளறிந்த சரண்யா அமைதியானவள்.சைட் என்ற வார்த்தையெல்லாம் அவள் வாயில் வந்ததேயில்லை.கல்லூரி காலத்தில் கட்டிப் பிடித்தாலோ தொட்டு பேசினாலோ கூட அவளுக்குப் பிடிக்காது.இப்போது ஹக் கிஸ்என்றெல்லாம் கேட்கிறாள்.

 

இன்னமும் சதுர்மதி இயல்புக்கு திரும்பாததை உணர்ந்தவள் ,

 

என்ன ப்ரோ..இப்படியா நந்தி மாறி குறுக்க நிற்கிறது..என் மதிக்குட்டி எப்படி ஃபீல் பண்றாபாருங்க……உங்களை விட்டு விலக முடியாமஎன்னையும் பார்க்க முடியாம….விவஸ்தையே இல்ல பாஸ்..உங்களுக்கு….” என ஜெய்யை வைய,

 

அப்போதுதான் கணவனிடம் ஒட்டிக் கொண்டு நின்ற தன் நிலையை உணர்ந்தவள் அவசரமாக விலகினாள்.கூடவே கூச்சம் வேறு.

 

ஏய்.சராவாய் ஜாஸ்தி ஆச்சுடி உனக்குபட் ஐ லவ் இட்..” என்றபடியே தோழியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

சரண்யாவுக்கும் சதுர்மதிக்கும் கண்ணில் நீர் துளிர்த்தது.எத்தனை ஆண்டு பிரிவு…?காதலர்களுக்கு மட்டும் தான் பிரிவுத் துயரெல்லாம் உண்டா..?தூய்மையான நட்புக்கும் உண்டுதானே..!!

 

அம்மா..தாய்ங்களாஉங்க கொஞ்சல்ஸை வீட்டுக்குப் போய் வைச்சிக்கிட்டா..நல்லா இருக்கும்….”என ஜெய்சங்கர் கிண்டலடிக்க

 

பொறாமை ப்ரோ…” என சரண்யா பழிப்புக் காட்ட

 

ஜெய்யோ ஆழ்ந்த பார்வை ஒன்றை மனைவியிடம் செலுத்தி விட்டு ,

வாங்க….போகலாம்..” என்றபடி காரைக் கிளப்பினான்.

 

வீட்டு வாயிலை நெருங்கும்போதுதான் சதுர்மதிக்கு அந்த எண்ணம் தோன்றியது.சரண்யா குணமான பின் சதுர்மதியைப் பார்க்க வந்த போது மன நிலை சரியில்லாமல் இருந்தவள் தோழியின் முகத்தைக் கண்டு பயந்து கத்தியதாக அவளது பெற்றோர் கூறியிருந்தனர்.ஏன் சரண்யா கூட பேசும்போது சொன்னாள் தானே..

 

அப்படி இருக்கையில் அவளது சாய் குட்டி சரண்யாவைப் பார்த்து பயந்து விட்டால்…?அது சரண்யாவைக் காயப்படுத்துவதாகாதா…?மனம் படபடவென அடித்துக் கொள்ள,அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல்,

 

சாய் குட்டி ,சரண்யாவைக் கண்டுசராத்தஎன ஓடி வர,சரண்யாவும் குழந்தையை வாரியணைத்துக் கொண்டாள்.

 

அந்த காட்சியைக் கண்ட சதுர்மதிக்கு மனதில் சொல்லொண்ணா நிம்மதி.

 

பரஸ்பர நல விசாரிக்குப் பின் சரண்யாவை ஃப்ர்ஷாகி வர சொல்ல,அதற்குள் மகளிடம்

 

உங்களுக்கு எப்படிடா குட்டி சராவைத் தெரியும்..?” என சதுர்மதி கேட்க

 

எனக்குத் தெதியுமேம்மாசராத்தஉங்க பெந்துன்னு அப்பா சொல்லியிருக்காங்களே…..சராத்தா ரொம்ப குட்எனக்கு டாய்ஸ்லாம் வாங்கித் தருவாங்களே….” என பாவனையாக சொல்ல

 

இந்த முறை ஏனோ மகளதுஅப்பாஅவளது காதில் தப்பாக கேட்காமல் தித்திப்பாய் இனித்தது.அந்த வில்லன் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனதில் ஹீரோவாகிப் போனான்.

 

Advertisement