Advertisement

            நெருங்கி வா முத்தமிடாதே(6)

 “உன்னை அந்த நிலைமையில பார்த்தப்போ தாங்க முடியலடி..என்னால தான நீ இப்படி ஆகிட்டன்னு எனக்குள்ள குற்றவுணர்வுஅப்பா அம்மா முகத்தைப் பார்க்க முடியல…………எங்கப்பாவே உன்னைப் பார்த்து அழுதுட்டார்னா பார்த்துக்கோ…..” என சரண்யா அந்த நாளின் நினைவுகளை தோழியிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டாள்.சதுர்மதியையும் சரண்யாவையும் தனித்து விட்டுச் சென்றிருந்தனர்.ஜெய் குழந்தையை அழைத்து கொண்டு வெளியே செல்ல,ராமகிருஷ்ணனும் வசந்தியும் கோவிலுக்குச் சென்றனர்.

 

ப்ச்விடுடி….இப்போவும் ஏன் பழசையெல்லாம் பேசுற……நான் குணமானதுக்கும் நீதான் காரணம் தெரியுமா..?எனக்கு மயக்கம் வரதுக்கு முன்னாடி நியாயபகம் இருந்தது என்ன தெரியுமா….நான் ஒருத்தனை அடிச்சதும் அவன் என்னை தள்ளி விட்டதும்தான்.உன் கையை ஒரு நாள் அந்த கதிர் பிடிச்சு இழுத்தான்ல….”

 

அதே மாதிரி ரோட்ல….ஒருத்தன் ஒரு பெண்ணோட கையைப் பிடிச்சு அவளை மிரட்டிக்கிட்டியிருந்தான்.எனக்கு அப்போதான் உன்னை நியாயபகம் வந்துச்சுஅந்த இன்சிடெண்ட் என் மைண்ட்ல ஸ்பார்க் வர வைச்சிருக்கு….கண் முழிச்சுதும் பார்த்த அப்பா அம்மாவ காணோம்அதுக்கு அப்புறம் தான் எல்லா விசயத்தையும் சொன்னாங்க….”

 

ஆனா இந்த ஆறு வருசம் நடந்த எதுவும் எனக்கு நியாயபகம் இல்ல சரா….சாய் குட்டி கூட என் நியாயபகத்துல இல்லன்னு நினைக்கும்போதுதான் கஷ்டமா போச்சு…” என சதுர்மதி கண்ணில் நீர்த்துளிர்க்க சொல்ல

 

ஹே..!!என்னை பழசையெல்லாம் பேச வேண்டாம்னு சொல்லிட்டு நீ பேசுற…..இனி நடக்கறதைப் பாரு…. நிகழ்காலம் தான் வரம்..அதான் present… அப்படின்னா gift.அதை அனுபவிக்கனும்..” என புன்னகையோடு சரண்யா சொல்ல

 

நான் சொல்ல என்ன இருக்குநீதான் எனக்கு சொல்லனும்….எப்படி இருக்க….? யூ.எஸ்லாம் போயிருக்க…..டெல்லில வேலைன்னு சொன்னல நீ..அந்த சம்பவத்துக்கு அப்புறம் என்ன  நடந்துச்சு….எல்லாம் சொல்லு….?” என சதுர்மதி விசாரிக்க

 

ஹ்ம்ம்..டூ மந்த்ஸ் ஆச்சு..நான் ரீகவர் ஆகஅதுக்குப் பின்னாடி உன்னை வந்து பார்த்தாநீ என் முகத்தைப் பார்த்து பயந்து அழுது கத்த ஆரம்பிச்சிட்ட……அதை விட என்ன வேதனைனா நீ ஒரு குழந்தை மாறி ஆகிட்ட….கடவுளே….அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்கள்லாம் பாவம்டி அவங்கபடுத்தியெடுத்திட்ட நீ…” என அவள் முதுகில் அடிக்க

 

ஹா……வலிக்குதுடி லூசு..பைத்தியம்னா அப்படிதான் இருக்கும்..நான் என்ன வேணும்னேவா செஞ்சிருப்பேன்.?” என மதி சிணுங்க

 

அது சரிதான் போ….என் முகத்தை என்னால பார்க்க முடியல…….நீ வேற இப்படி ஆகிட்டன்னு அது ஒரு பக்கம் கவலை…..எல்லாம் என்னாலதான அப்படி ஒரு நினைப்பு..நீ சொன்னதைக் கேட்டு கதிரை முன்னாடியே வீட்ல சொல்லியிருக்கனுமோன்னு தோணிச்சு..ஆனா அவ என்னை மிரட்டினதை நீ கேட்டுட்டு பிரபாட்ட சொன்னதெல்லாம் எனக்குத் தெரியாதுடி….பட் நீ எனக்காக அவ்வளவு செஞ்சும் உன்னை நான் இப்படி பைத்தியமாக்கிட்டேனே….நான் உனக்காக அப்படி என்னடி செஞ்ச…?” என வருத்தமாகக் கேட்க

 

லூசு..எரும…..நீ என் ப்ர்ண்ட் டிஉனக்கு நான் செய்யாம யார் செய்வா…?” என மதி அதட்டினாள்.

 

அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன்  நட்பைப் பற்றிக் குறிப்பிடுவார். ‘தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே தொன்மை யுடையார் தொடர்பு என்பது போல் தலையாய நட்பு கொண்டவர்கள் பராமரிப்பு செய்யாமலே பயன் தரும் பனை மரம் போன்றவர்கள்’.அப்படிப்பட்ட நட்புதான் சரண்யாவுகும் சதுர்மதிக்கும் இடையிலானது.

 

உன்னை மாறி ஒரு ப்ர்ண்ட் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும்….” என்றவள் நெகிழ்ச்சியாக

 

அப்புறமா பிரபா தான் என்னை கொஞ்சம் கொஞ்சமா அதிலேர்ந்து வெளியே வர ஹெல்ப் செஞ்சாருடிவீட்லேர்ந்தே படிச்சு டிகிரி முடிச்சேன்….தென் எங்க கல்யாணம்..”

 

வாட்………………….?கல்யாணமா…?என்னடி சொல்றஎங்கிட்ட சொல்லவே இல்ல…” என மதி ஆச்சரியம் பாதி ஆனந்தம் மீதியாய்க் கேட்க,

 

ஆமாடிபைத்தியமா இருந்த உங்கிட்ட நான் வந்து கல்யானம்னா சொல்ல முடியும்…?முன்னாடி செம் முடிஞ்சதும் தானே கல்யாணம்னு முடிவு….எங்க வீட்லயோ நானோ அதை பத்தி யோசிக்கவே இல்ல……ஆனா பிரபா விடல……எனக்குள்ள இருந்த தாழ்வுணர்ச்சி..என்னோட அழகு போயிடுச்சுங்கற எண்ணம்……உன்னோட  நிலை..இதெல்லாம் சேர்ந்து என்னை அவர்ட்டயிருந்து விலகி வைச்சிடுச்சு…..பிரபா தான்..கல்யாணத்துக்குப் பின்னாடி இப்படி நடந்திருந்தா மட்டும் உன்னை நான் விட்ருப்பேனாநீ எனக்கு எப்போவுமே அழகுதான்…..அப்படி இப்படின்னு பேசி கன்வீன்ஸ் செஞ்சாரு…..எங்கம்மா அப்பாவுக்காக நானும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்…”

 

என்னடி கொழுப்பா..முன்னாடில்லாம் பிரபா மாமான்னு கூப்பிடுவே..இப்போ பெயர் சொல்ற….”

 

ஹா ஹா….வாட் இஸ் திஸ் யாபட்டிக்காடவே இருக்க….ஒரு சீக்ரெட் சொல்லட்டுமாஅவரை நான் வாடா போடா கூட சொல்வேன்…..பிரபா மட்டுமில்லன்னா நான் சிதைஞ்சுப் போயிருப்பேன்..மதிதினமும் எங்கிட்ட அவர் குறைஞ்சது மூணு மணி நேரமாவது பேசாம இருக்க மாட்டார்….நானா விலகிப் போனா கூட இழுத்து உட்கார வைச்சிடுவார்…..ஒருத்தங்கள உருவத்தை வைச்சு முன் தீர்மானிப்பது தவறோ அதை விட பெரிய தவறு நம்முடைய தோற்றத்தை நாமே மதிக்காமல் இருப்பதுன்னு எனக்கு உணர்த்தினார்ஒன்னு தெரியுமா உனக்கு மெலனி கெய்டஸ்ன்னு ஒருத்தங்க சின்ன வயசிலேயே எக்டோடெர்மல் டிஸ்பிளேசியான்னு ஒரு நோயால பாதிக்கப்பட்டாங்க.அதனால் மன உளைச்சலுக்கும் அடுத்தவங்க கேலிப்பார்வைக்கு ஆளானங்க… ..உடலோட அழகையும் உடை அலங்காரத்தையும் முன்னிறுத்தும் ஃபேஷன் உலகில் அவலட்சணம்னு சொன்ன தன் உடலை அழகின் புதிய பரிமாணத்தில மாற்றினாங்க..இவங்களாம் கடவுளை குறை சொல்லிட்டு இல்லாம தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடிக்கிட்டாங்க…..சந்தோசங்கறது எதிர்மறை செயல்களையும் மனிதர்களையும் தவிர்த்தல் இல்லஅவைகளை எதிர்கொண்டு மாற்றனும்..அப்போதான் சந்தோசம் வரும்னார்…”

 

நீ ஒன்னும் acid attack victim இல்ல…you are survivor னு எனக்குப் புரியவைச்சார்எஸ் ஐ அம் எ சர்வைவர்அவன் அழகுன்னு நினைச்சு அழிச்சது அழகே இல்ல….சாகும்போது நம்ம உடல் எரிஞ்சு தானே போகுது..அப்படித்தான் நான் நினைச்சிட்டேன்….இப்போ நான் புதுசா பொறந்திருக்கேன்டி….செத்து செத்து உயிர்க்கிற செல்களையா இருக்கு அழகு…?செயல்ல தானே இருக்கு..சிலருக்கு கறுப்பு அழகு..சிலருக்கு வெள்ளை அழகு.சிலருக்கு இடையில உள்ள க்ரே அழகு..ஆக மொத்தம் எல்லாமே யாராவது ஒருத்தருக்கு ஒவ்வொன்னும் அழகுதானே..என் பிரபாவுக்கு நான் அழகு….எஸ்இ மேட் மீ பியூட்டிஃபுல்…..முன்னாடி விட இப்போ நான் ரொம்ப அழகாகிட்டேன்….மதி….” என்றவளை பெருமிதத்தோடு பார்த்தாள் சதுர்மதி.தன் தோழியிடம் எத்தனை மாற்றங்கள்…!!

 

நீ எனக்கும் அழகுதாண்டி..இப்போ ரொம்ப அழகா தெரியுற…” என்றவள் கண்ணீரோடு அவளுக்குத் திருஷ்டி கழிக்க,

 

அய்யே ரொம்பத்தான்…”

 

பிரபா அண்ணா எங்க இருக்கிறார்..என்னைப் பார்க்க வரவே இல்ல..”

 

அவரும் நானும் டெல்லியில இருக்கோம்டைம்ஸ் ஆஃப் இந்தியால நான் எடிட்டர்..எனக்காக அவரும் அங்கேயே ஜாப் தேடிக்கிட்டாரு.இப்போ கொஞ்சம் வொர்க் விசயமா நான் யூ.எஸ் போனேன்நீ குணமானது தெரிஞ்சதும் உடனே உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டேன் மதிக்குட்டிஇப்போ என்னைப் பார்க்க பிரபா ஓடி வருவார்..சாயங்காலம் ப்ளைட்ல வந்துடுவார் டி….. யூ நோ ஒன் திங் முன்னாடி நான் ஸ்கூட்டி ஓட்ட கூட பயப்படுவேனேஇப்போ  நான் ஸ்கூபா டைவிங் எல்லாமே செய்வேன்கராத்தே குங்க்ஃபூ….எல்லாம் தெரியும்….பி.எச்.டி செஞ்சிட்டேன்எல்லாமே பிரபா தான் காரணம்…”என்றாள் கணவன் பற்றிய கூற்றில் முகம் விகசிக்க.

 

நீ ரொம்ப லக்கிடி…”

 

அது உண்மைதான்..உன்னை மாறி என் மேல  பைத்தியமா இருக்க ஒருப்ர்ண்ட்எல்லாமாகவும் இருக்க என் பிரபாஆனா நீ மட்டும் என்னவாம்…..ஜெய் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்..?பிரபாவை விட எந்த வகையிலையும் குறைஞ்சவர் இல்ல ஜெய்.உனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும் என்னால முழுசா என்னோட போராட்டத்துலேர்ந்து வெளிவர முடியல..பட் ஜெய் அண்ணா உன்னைக் கைப்பிடிச்ச நாள்லேர்ந்து தான் நான்  நிம்மதியா தூங்கினேன் தெரியுமா…”

 

உன்னை எப்படி தான் அவர் சமாளிச்சார்னு இப்போவும் புரியலடி…..அம்மா கூட சில சமயம் எரிச்சல் ஆகிடுவாங்க…..ஆனா ஜெய்ண்ணாமனுசனுக்கு எவ்வளவு பொறுமை தெரியுமா…?அவர்ட்ட ஒன்னு கத்துக்கிட்டேன்..எங்க முழுமையான அன்பு இருக்கோ அங்க வெறுப்புக்கே இடமில்லன்னு…yes love drove him towards you  டிஉன்னை உலகத்தில அதிகமா நேசிக்க அவரால மட்டும் தான் முடியும்…..” என்று ஜெய் புராணம் வாசிக்க,சதுர்மதியின் முகம் பிரகாசம் குறைந்து டல்லடிக்க

 

அதைக் கவனித்தவள் , “என்னடிஅண்ணாவ பிடிக்கலயா…?திலீப்பை நினைச்சிட்டு இருக்கியா…?”

 

சீ..சீஅந்த பெயர அப்பா சொல்லித்தான் டி ஞாபகம் வந்துச்சு…..உனக்குத்தான் தெரியுமே அவன் மேல் எனக்கு அப்போ இன்ட்ரெஸ்டே இல்லஇப்போ அவன் முகம் கூட நியாயபகம் இலஅப்போவே கல்யாணம் செய்ய நான் இஷ்டமில்லனு தானே சொன்னேன்….ஆனா ஜெய்யை ஏத்துக்க மனசு தடுக்குது….”என பெருமூச்சு விட

 

தடுக்குது….அடுக்குதுன்னபல்லை உடைச்சிடுவேன்…..சீக்கிரம் நீயும் அண்ணாவும் சேர வழியைப் பாரு……பாவம் மனுசன்….அன்னிக்கு ஸ்கைப்ல வேற ஓவரா பேசின…?” என முறைக்க

 

என்ன நீ அவருக்கே சப்போர்ட் செய்யுற….என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்றீங்க…..?” என தன் தோழி,அதுவும் ஒரு பெண் தனது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கணவனுக்கே வக்காலத்து வாங்கவும் ஆற்றாமையும் அழுகையுமாகக் கேட்க

 

உன்னை உன்னை விட ஆழமா புரிஞ்சிக்கிற ஒருத்தர் ஜெய்ண்ணா தான்…..உனக்கு அவர பிடிக்காம இருக்க ஒரு காரணம் சொல்லு…?” என சரண்யா தோழியின் வாழ்வு சீராக வேண்டுமென  நோக்கில் கேட்க

 

ஒன்னு என்ன ஒன்பது சொல்வேன்..எனக்கே தெரியாம என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு…..என் நினைவில்லாம என்னோட குடும்பம் நடத்தியிருக்காரு..என்னோட விருப்பம்னு ஒன்னு இல்லவே இல்லயா….?எதுவுமே தெரியாம இருக்கறது கொடுமையா இருக்கு சரா…….என் பொண்ணு பெயர் கூட தெரில…” என்றவளது குரலில் அவ்வளவு வலி..!!

 

தோழியை ஆதரவாக அணைத்துக் கொண்டவள் ,”இங்க பாரு..நான் உன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ…..காலையில கிழக்கில பார்த்தா சூரியன் பிரகாசமா உதியமாகுறது தெரியும்..இதே சாயந்தரம் மேற்கில பார்த்தா சூரியன் மறையறதுதான் தெரியும்அதே சூரியன் தான்.ஆனா நம்ம எந்த நேரத்தில எந்த திசையில பார்க்கறோம்கறதுதான் மேட்டர்.ஜெய் அண்ணா பார்க்கிற கோணத்தை நீ மாத்திக்கோஅண்ணா தப்பானவர் இல்ல…..அவர்ட்ட மனசு விட்டு பேசுடி…..அவர் உன்னை புரிஞ்சிக்கிட்டவர்அவரை புரியவும் வைப்பார்..” என்று சொல்ல

 

ம்ம்ம்…”என தலையாட்டிவளைத் தட்டிக் கொடுத்தவ சரண்யா

சரிசரி..வா உனக்குப் பிடிக்குமேன்னு சாக்லெட்ஸ்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்…” என அவளை மெத்தையிலிருந்து இழுக்க , அவள் முகம் இன்னும் தெளிவடையவில்லை என்பதை உணர்ந்தவள்

 

என்னடி ஆச்சுசொல்லு..”

 

வாழ்க்கை நமக்கு என்ன வைச்சிருக்கே தெரில இல்லயா…..நானும் நீயும் காலேஜ் டேய்ஸ்ல….எப்படில்லாம் நம்ம கல்யாணத்துல கலக்கனும்னு ப்ளான் பண்ணிருந்தோம்….ஆனாஊப்ஸ்..” என அவள் பெருமூச்சு விட

 

என்ன ஊப்ஸ்….. நடந்த எல்லாமே நல்லதுக்குத்தான்….everything happens for a reason.” என திடம் கொண்ட மென்னகையோடு சொல்ல

 

ஓஹ்…..உன் முகத்துல ஆசிட் அடிச்சது நல்லதுக்கா…..?நான் பைத்தியமானது நல்லதா..?” என இவள் கோபமாக கேட்க

 

என் முகத்தில ஆசிட் அடிச்சது எதுக்குன்னு தெரிலபட்நீ பைத்தியமானது நல்லதுக்குன்னு நான் 100% நம்புறேன்….” என்றாள் சரண்யா சீரியசாக,

 

அவளை அடிக்க மதி தலையணையைத் தூக்க , “ஹே..!!மதி ஐ அம் சீரியஸ்..நீயே ஒரு நாள் சொல்லுவ பாருஒரு வேளை எனக்கு எதுவும் நடக்கலன்னாஎன் லைஃப்ல எதுவும் பெருசா மாறியிருக்காது ..எனக்கும் பிரபாவுக்கும் தான் கல்யாணம் நடந்திருக்கும்பட்இந்தளவு காதலும் நட்பும் இருந்திருக்குமான்னு தெரில.. நீ மட்டும் பைத்தியமாகல உன்னை அந்த தீலிப் கல்யாணம் செஞ்சிருப்பானேடி….கல்யாணத்துக்கு அப்புறம் இதே மாதிரி எதாவது  நடந்திருந்தா உன்னை அவன் கண்டிப்பா விட்ருப்பான்….நீ பைத்தியமா இருந்த காரணத்தால அவனை மாறி ஒருத்தன்ட்ட நீ மாட்டலஜெய்ண்ணா மாறி ஒரு ஆள் உனக்குக் கிடைக்கத்தான் நீ பைத்தியமாயிருக்க……நீ எப்படி பைத்தியமான..?எனக்கு ஆசிட் அடிச்சதைப் பார்த்துதானேஅப்போ…..அதுவும் நல்லதுதானே….”

 

ஒஹ்..உங்க நொண்ணன் என் லைஃப்ல வரதுக்குத்தான் இந்த விசயமெல்லாம் நடந்துச்சா..கதை சொல்றா பாரு….”

 

கதை நல்லாயிருக்குல….அதான் மேட்டர்……ஆனா இதான் ரீசனா இருக்கும்…..உனக்கு என்ன எங்க கல்யாணத்தைப் பார்க்கலன்னு வருத்தம் தானேபிரபா வந்தவுடனே சொல்லி திரும்பவும் தாலிக் கட்ட சொல்றேன் போதுமா…?” என தோழியை சமாதானப்படுத்த

 

சரி..குழந்தைங்கஇருக்காங்களா.” என இவள் தயங்க

 

இல்லஇன்னும் கடவுள் கொடுக்கலஆனா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும்….” என அவள் சிரிப்போடு சொல்ல

 

என்ன நான் பைத்தியம் தெளிஞ்சா தான் பொறக்குமா..?” என தோழியின் எண்ணத்தை சரியாக ஊகித்துக் கேட்க ,சரண்யா முகத்தில் மாட்டிக் கொண்ட தன்மை,திருதிருவென முழித்தவளைப் பார்த்து ,

 

அடுத்த தடவ என்னைப் பார்க்கறப்ப நீ குட் நீயுஸ் சொல்ற….அவ்வளவுதான்…” என்று முடிவாக சொன்னாள்.

 

அதன்பின் பிரபாகரன் வர அந்த குடும்பத்தில் வெகு வருடம் கழித்து ஆனந்தம் தாண்டவமாடியது.இரவு சாப்பிட்டு விட்டு ,அனைவரும் அமர்ந்து பேச,

 

அப்போது சரண்யா பிரபாவிடம் ,”பிரபு….மேடம் நம்ம மேரேஜ் பார்க்கலயாம்..ரொம்ப வயலின் வாசிக்கிறா..திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா..என் ப்ர்ண்டு ஆசைப்படுறா

 

பண்ணிக்கிட்ட ஒரு கண்டிஷன்..திரும்பவும் ஹனி மூன் போகனும்ஒகே வா….” என பிரபா கண்ணடிக்க ,வெட்கத்தில் பூத்த அவளது முகத்தை மறைக்க முயன்றபடி,

 

உங்களை..” என சரண்யா பிரபாவை அடிக்க

 

ஹா..வலிக்குதே….”என அவன் நடிக்க ,அனைவரும் சிரிக்க,

 

ஏன் சரத்தா..மாமாவ அதிக்கிற.”என சாய் குட்டி கேட்க

 

அதானேஉங்கத்தையை அடிடா குட்டி..” என பிரபா சொல்லித்தர

 

நோ மாமா நோயாரையும் அதிக்க கூடாதுன்னு அப்பா சொல்லித்தரலயா…..அடிக்கிறது தப்புஅத்த மாமாவ அதிக்காதீங்க..” என மழலை மொழியில் சொல்ல

 

கணவனை பார்த்து நக்கலாக ஒரு லுக் விட்டாள் சதுர்மதி.பின்னே ஊருக்கு உபதேசம் செய்து விட்டு உடையவளை அடித்தால்..?

 

ஹா ஹா..உங்க அப்பா இவ்வளவு சொல்லிக்கொடுத்திருக்காராசூப்பர்….” என சாய் குட்டியைத் தூக்கி பிரபா கன்னத்தில் முத்தம் வைக்க

 

அண்ணா…..சாய் குட்டியைக் கொஞ்சிறது போதும்….. நானும் என் ப்ர்ண்டு குழந்தையைக் கொஞ்சனும்..” என சதுர்மதி கேட்க

 

சீக்கிரமே கொஞ்சலாம்……” என பிரபாவும் மனைவியைப் பார்த்துக் கொண்டே கூற ,

 

ஜெய் அமைதியாக அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தவன் வீட்டிற்குக் கிளம்ப எத்தனிக்க

 

மாப்ள.இன்னிக்கு மட்டும் தங்கிட்டு போங்களேன்…” என வசந்தி வேண்ட

 

அவன் பேசாமல் மனைவியைப் பார்த்தான்.அவளோ சீரியஸாய் தரையை ஆராய்ச்சி செய்தாள்.சாய் குட்டி உடனே

 

அப்பாப்ளீஸ்பா……எங்க கூட தூங்கனும்….அம்மா சூப்பரா ஹாதி பாத்தர் கதை சொல்லுவாங்க..நம்ம கேட்கலாம்….” என உற்சாகமாய் சொல்ல, அவனும் மகளுக்காக அங்கே தங்கினான்.

 

அடுத்த நாளே சரண்யா ஊருக்குச் சென்று தனது பெற்றோர் மாமனார் மாமியாரைப் பார்க்க வேண்டுமென சொல்ல

 

இரண்டு நாள் தங்கிட்டு போடி..இப்படி அவசரமா போனா எப்படி…?” என முகத்தை உர்ரென்று வைத்த சதுர்மதியைப் பார்த்தவள்.

 

ஹே..!!சீக்கிரமா ஊருக்குப் போயிட்டு உங்க அண்ணன் என்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கார்..உனக்கு என் குழந்தையைக் கொஞ்சனுமா வேண்டாமா…?” என காதில் கிசுகிசுக்க

 

இவளும் மனம் கேளாமல் அனுப்பி வைத்தாள்.அன்று மாலையே ஜெய்சங்கர் சதுர்மதியிடம் தனிமையில் ,

 

சாரி சதுமா…..அன்னிக்கு உன்னை அடிச்சது ரொம்ப தப்பு..யாரையும் அடிக்க கூடாதுன்னு இருக்கவன் நான்…. நீயும் அன்னிக்கு நார்மலா இல்ல….எனக்குக் கொஞ்சம் டென்சண்டா….எப்போவுமே நான் அப்படி இருந்ததில்லைஎன்னை நீ அவாய்ட் செய்ற,மறந்துட்டங்கறது ரொம்ப கஷ்டமா போச்சு….”

 

இப்போ…..நான் உன்னைக் கம்பள் செய்யல……எப்போ தோணுதோ அப்ப நீ என்னை ஏத்துக்கோ……ஆனா நம்ம வீட்டுக்குப் போகலாம்மா..ப்ளீஸ்….மாமா அத்தை இனியாவது  நிம்மதியா இருக்கட்டும்……பிரபாவுக்கும் சரண்யாவுக்கும் நம்ம இப்படி இருக்கறது தெரிஞ்சா…….வருத்தம் தான் படுவாங்கநம்ம சந்தோசமா இல்லாட்டியும் நம்மள சுத்தியுள்ளவங்களை சந்தோசமா வைச்சிக்கனுமில்லயா..ப்ளீஸ்….”என பரிவோடு கேட்க,

 

கண்ணில் தளும்பிய நீரை அடக்கிக் கொண்டவள் சரியென சம்மதித்தாள்.

 

மனதிலோ , “எப்பொ ஜெய் உங்களை எனக்குப் பிடிக்கப் போகுது…” என அவனுக்காக ஏங்கினாள்.கொஞ்சம் கொஞ்சமாய் அவனை அவளையறியாமல் நெருங்கினாள் அவன் மனைவி.

Advertisement