Advertisement

           

 

            நெருங்கி வா முத்தமிடாதே(4)

அறைக்குள் சென்ற சதுர்மதி குழந்தையிடம் பேச விரும்பினாள்.ஆனால் குழந்தையின் பெயர் கூட தெரியாத நிலையில் தானே அவள் இருக்கிறாள்..?மகளை சுமந்தது தெரியவில்லை..அவள் பிறந்தது தெரியவில்லை..தன் நிலைக்குறித்துக் கழிவிரக்கத்தில் கண்மூடியவள் ,சிறிது நேரம் கழித்து ,

 

மெல்லமாக குழந்தையை மடி மீது தூக்கி வைத்து ,”பேபி….உன் பெயரை சொல்லு..” என கேட்டாள்.

 

மை நேம் இஸ் சாய் சாஹித்யா ஜெய்சங்கர்என பெருமையாக சாய் குட்டி சொல்ல

 

அவன் பெருமையை சொல்ல என்னைப் பெத்தவங்க பத்தாதுன்னு நான் பெத்ததையும் ரெடி பண்ணி வைச்சிருக்கான்..பொறுக்கி…’ என்று சொன்னவளுக்கு அவன் அடித்தது ஞாபகம் வந்தது.

 

பொறுக்கினா கோபம் வருதாபொறுக்கி பொறுக்கி..’ என்று அவன் இல்லாத தைரியத்தில்,மனதில் அவனை நன்றாய் வைதாள்.

 

ம்மாஆஅ..” என குழந்தை அவளை அழைக்க

 

சொல்லுடா பேபி..”

 

ஏம்மாநேத்து நீ. என் கூட படுக்கல…….நானும் அப்பாவும் தனியா படுத்தோம் தெரியுமா..?” என முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு சொல்ல

 

அது……..அம்மாவுக்கு உடம்பு சரியில்லடாஅதான்….”

 

இப்போ..சரியா போச்சா….?நம்ம வீட்டுக்குப் போலாமா..?”

 

இல்லடாஅம்மாவை டாக்டர் இங்கேயே இருக்க சொல்லிட்டாங்க….” என இவள் குழந்தையை இங்கேயே தங்க வைக்க பொய் சொல்ல

 

அப்போ..டாத்தா வீத்துல தான் இருக்கனுமா…?”

 

எஸ் சாய் குட்டி..”

 

அப்பா காணும்..அப்பா எப்போ வருவாங்க…?”

 

வருவார் டா.அப்பாக்கு வேலை இருக்கு……”

 

ஆமால்ல..அப்பா தாக்தர்ல நிறையா வேலை இருக்கும்மா…” என தந்தையின் வேலை தனக்கு தெரியும் என்ற பெருமிதத்தோடு குழந்தை சொல்ல

 

தாக்தரா…?” என இவள் புரியாமல் விழிக்க

 

தாக்டர்மா….ஊசி போடுவாங்களே..”

 

அட..டாக்டரா…?பார்டா சாய் குட்டிக்கு எல்லாமே தெரிது…” என இவள் மகளுக்கு முத்தமிட்டு பெருமிதமாய் சொல்ல,அவள் மகளோ ,

 

நானும்..அப்பா மாறி பெரிய தாக்டர் ஆவேன்னே….உனக்கு டாத்தாக்கு பாத்திக்கு ராது பாத்திக்கு சிவா சிப்பாக்கு எல்லாருக்கும் ஊசி போடுவேன்என்று உற்சாகமாய் சொல்ல

 

அப்பா..அப்பப்ப்ப்ப்ப்ப்பாஎன்று வந்தது அவளுக்கு.

 

இதுக்கு மேல தாங்காதுடா சாமி இந்த அப்பா புராணம்என நினைத்தவள் மகளைத் தூக்கிக் கொண்டு ,

 

கீழே போய் , “அம்மா….சாய் குட்டிக்கு எதாவது சாப்பிட கொடுமா….நான் பாப்பாவுக்கு ஊட்டி விடுறேன்..” என

 

மாப்ள கிட்ட என்ன சொன்ன மதி..அவர் முகமே சரியில்லஎன வசந்தி கேட்க ,ராமகிருஷ்ணன் மனைவியை முறைத்தார்.

 

மாப்ள தான் எதுவும் பேசாதீங்கன்னு சொன்னார்ல..இவ எதுக்கு இப்போ மதியை கிளப்பி விடுறாஎன நினைத்தார்.

 

தன் வீட்டிற்கு போனதுமே ஜெய் போன் செய்து ,

மாமா..அவ ரொம்ப மன உளைச்சல்ல இருக்கா..இப்போதைக்கு அவளை எதுவும் கேட்காதீங்க….அவகிட்ட நார்மலா பேசுங்ககொஞ்ச நாள் போகட்டும்..எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..நீங்க கவலைப்படாதீங்க..” என்று தன் வருத்தம் மறைத்து மாமனாருக்கு ஆறுதல் சொன்னான்.

 

அதையே அவர் தன் மனைவியிடமும் சொல்ல , அவரோ மனம் கேளாமல் மகளிடம் கேட்டு விட,

 

சதுர்மதியோ ,” எனக்கும் உங்களுக்கும் சம்மதமில்ல…..இனிமே எங்கிட்ட பேச வராதீங்கன்னு சொல்லிட்டேன்..” என்று கூலாய் சொல்ல

 

என்ன மதி சொல்ற..?” என தாயாய் வசந்தி கவலைக்கொண்டு கேட்க ,ராமகிருஷ்ணன் தான் மனைவியை அடக்கினார்.

 

வசு…..சாய் குட்டிக்கு சாப்பிட எடுத்துக் கொடு…..அப்படியே எல்லாருக்கும் எடுத்து வைசாப்பிட்டு சீக்கிரமே தூங்கலாம்…” என்று மனைவியை அங்கிருந்து கிளப்பி விட்டு மகளிடம் ,

 

என்னடா சொல்றா உன் பொண்ணு…?”

 

ஐய்யோ செம வாய் பா..பட் சோ க்யூட்என் பொண்ணு இல்லயா..?” என அவள் சிரிப்போடு கூற

 

அது சரிதான்..” என்று அவரும் மகளது கூற்றை ஆமோதித்தார்.

 

வசந்தி சாப்பாடை எடுத்து வைத்து அனைவரையும் அழைக்க, மகளுக்குத் தன் கையால் ஊட்ட முயல , அவளது செல்ல மகளோ ,

 

அப்பாஎப்போம்மாவருவார்……அப்பா தான டெய்லி ஊத்துவார்…..?” என புத்திசாலியாய்க் கேட்க

 

ஏன் டா அம்மா உனக்கு ஊட்டினதே இல்லயாடா..?” என இவள் கரகரப்பானக் குரலில் கேட்க

 

வசந்தியோ ,”உனக்கே மாப்ள தான் ஊட்டுவாரு….இதுல எங்கிருந்து நீ அவளுக்கு ஊட்டுறது..” என்று மருமகனுக்கு சைக்கில் கேப்பில் சர்டிஃபிகேட் வழங்க,

 

சதுர்மதிக்கோ ஆயாசமாக வந்தது.’ஊட்டி விடுவானாமே.ரொம்பத்தான் ட்ராமா போட்டிருக்கான்என்று தான் எண்ணத் தோன்றியது அவளுக்கு.தாய் சொன்னதைக் காதில் வாங்காதவளாக

 

சாய் குட்டிக்கு எப்போவும் டாடி தானே ஊட்டி விடுவாங்கஇன்னிக்கு மம்மி ஊட்டிவிடுறேனே..ப்ளீஸ்..” என முகம் சுருக்கி கெஞ்ச

 

மாமம்மி டாடி சொல்லக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்கார்ல..டாத்தா நீங்க அம்மாக்கு சொல்லிக்குதுக்கலயா…?” என்றதும் மகளை சதுர்மதி முறைக்க

 

வசந்திக்கும் ராமகிருஷ்ணனுக்கும் சிரிப்பை அடக்க பெரும்பாடாய் இருந்தது.

 

என்ன எல்லாருக்கும் சிரிப்பு..?” என சதுர்மதி கோபமாய்க் கேட்க

 

வசந்தியோ ,”மதிம்மாநீ எங்களை டாடி மம்மினு சொல்றதைப் பார்த்து இவ பேச ஆரம்பிச்சதும் அப்படியே சொல்ல மாப்ள….தான் மம்மின்னா எகிப்துல உள்ள பிணம்டாடின்னா ஏதோ தார்னு சொன்னாரு….அழகா தமிழ்ல அம்மா அப்பான்னு தான் சொல்லனும் குழந்தைக்கிட்ட சொல்லிக் கொடுத்திட்டார்இவளும் படுசுட்டியா எது சொல்லிக் கொடுத்தாலும் கத்துப்பா….பாரு இப்போ உனக்கே பாடம் எடுக்கிறா…?” என மகளுக்குக் கொட்டு வைத்து பேத்தியை பாராட்ட

 

டேய்பெயருதான் பழைய ஹீரோவோடதா இருக்குன்னு பார்த்தாநீயும் அப்படித்தானா..உங்க அப்பா அம்மாவை சொல்லனும்….ஒரு அஜித் விஜய் சூர்யான்னு வைக்காம பெயரைப் பாரு ஜெய்சங்கராம்நல்ல காலம் எம்ஜிஆர், நம்பியார்னு வைக்காம போனாங்களே..ஹீரோ பெயரை வைச்சா மட்டும் நீ ஹீரோவாடா..?எனக்கு நீ நம்பியார் தான் டாஎன இவ்வளவு நேரம் கணவனை மட்டும் கண்டபடி வசைப்பாடியவள் மாமியார் மாமனாரையும் சேர்த்துத் திட்டினாள்.

 

மதிம்மா..என்னடா யோசனை..பாருபாப்பா உன்னைப் பார்க்கிறாஊட்டி விடு…” என ராமகிருஷ்ணன் மகளை அழைக்க

 

ஹான்….டாடிப்ச்…..சாரி அப்பா………” என்றவள் தலையில் தட்டிக்கொள்ள ,அவள் தாய்க்கும் தந்தைக்கும் மகளைப் பார்த்து புன்னகை விரிந்தது.

 

பின்னர் மகளுக்கு ஊட்டி விட்டவளது மனம் நிறைந்து போக , அவளுக்கு பசியே இல்லை.ஆனால் வசந்தியின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சமாக சாப்பிட்டாள்.

 

தூங்க போகும் முன் தந்தையிடம் சென்றவள்  , “அப்பாஎனக்கு இப்போவே சரண்யா கிட்ட பேசனும்பா……ப்ளீஸ்……” என கெஞ்சலாகக் கேட்க

 

ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருடா..அப்பா….பேச வைக்கிறேன்….” என்றவர்முதல்ல சாய் குட்டியைத் தூங்க வைடாஎப்போவுமே மாப்ள கூடவும் உங்கூடவும் தான் தூங்குவாள்.” என சொல்ல,

 

சரிப்பா…..நான் இவளை தூங்க வைச்சிட்டு வரேன்…” என்றவள் மகளைத் தூக்கிச் சென்று மெத்தையில் படுக்க வைத்து, தட்டிக் கொடுக்க

 

மா..அப்பாவ காணும்மா…..எப்போ கதை சொல்ல வருவார்..?” என மீண்டும் தந்தை புராணம் பாட

 

அப்பாஇன்னிக்கு இங்க வர மாட்டாராம்..அம்மாவை கதை சொல்ல சொன்னார்..அம்மாக்கு நிறையா கதை தெரியும்டா சொல்லவா செல்லக்குட்டி….?”

 

அப்தியாஷரி சொல்லும்மா…” என அவள் மேல் காலைத் தூக்கிப் போட்டு அவளைக் கட்டிக்கொண்டு கதைக் கேட்க ரெடியானாள் சாஹித்யா.

 

அவளும்ஒரு ஊர்ல ஒரு மேஜிக் ஸ்கூல்..அங்க …” என ஆரம்பித்து ஹாரி பாட்டர் கதை சொல்ல, சாய் குட்டிக்கு ஒரே குஷியாகி விட்டது.எப்போதுமே ஜெய் சொல்லும் பஞ்சதந்திரக் கதைகள் , முல்லா கதைகள் இல்லாமல் புது உலகிற்குக் கூட்டிச் சென்ற தாயை ,அதுவும் எப்போதும் தன்னோடு சேர்ந்து கதை கேட்கும் தாய் இன்று கதை சொல்லவும் குழந்தைக்கு உற்சாகம் பீறிட , பத்து மணிக்குத்தான் உறங்கினாள்.

 

சதுர்மதி சரண்யாவிடம் பேச வேண்டும் என ஆவலும் அவசரமுமாக கீழே இறங்கி செல்ல ,அங்கே அவளுக்காக அவள் தந்தை அவளுக்காக தூங்காமல் காத்திருந்தார்.

 

அய்யோ..சாரிப்பா..லேட் ஆச்சுஅவ என்னடான்னா கதை சொன்னதான் தூங்குவேன்னா…..நானும் சொல்றேன்..வாலு கேட்டுட்டே இருக்குதூங்காம..இப்போதான் தூங்கினா..” என மகளது சேட்டையைப் பற்றிக் கூறினாள் சதுர்மதி

 

அது தெரிஞ்ச கதை தானேம்மாநீயும் கூட சேர்ந்து கதை கேட்ப..மாப்ள தான் ….” என அவர் பேச ஆரம்பிக்க,அவரது கூற்றை விரும்பாதவளாய் ,

 

அப்பாசரண்யாட்ட பேசனும்…”

 

இந்தாடாபேசு….ஸ்கைப்ல கூப்பிட்டிருக்கேன்…..நீ பேசும்மா..உங்களுக்குப் பேச நிறையா இருக்கும்….” என்றவர் குட் நைட் சொல்லி விட்டு உறங்கச் சென்றார்.

 

சரண்யா வீடியோ காலில் வந்தவள் ,”ஹாய் டி மதிக்குட்டிஎன்று உற்சாகமாய்ப் பேச ஆரம்பித்தாள்.

 

ஆனால் தோழியைக் கண்ட சதுர்மதிக்கு வார்த்தைகள் வரவில்லை.சரண்யாவை பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதாள்.

 

என்ன மதி..ஏன் அழற….பைத்தியம் தெளிஞ்சதுக்கு சந்தோசப்படாம…..இப்படி லூசு மாறி அழுவுற நீ..?” என சரண்யா அதட்ட ,

 

நான் இப்படி இருக்கும்போது நீ என்னை விட்டு ஜாலியா அமெரிக்கா போயிட்டியா…?” என சதுர்மதி கோபமாகப் பேச

 

அடியே…..அவசரத்துக்குப் பொறந்த என் அருமைத் தோழியே……கொஞ்சம் என்னை பேச விடுநான் இப்போ வேலை விசயமா யூ.எஸ் வந்தேன்….இவ்வளவு நாளா இந்தியாவுல தான் இருந்தேன்….டெல்லியில வொர்க் பண்றேன்….உங்கூட இருக்க எனக்கும் ஆசைதான்..ஆனா அப்போ இருந்த நிலைமையிலநீ என்னைப் பார்த்தாலே….கத்தி அழ ஆரம்பிச்சிட்டஅது உன் ஹெல்த்தைப் பாதிக்கும்னு டாக்டர் சொன்னாங்க..அதனால் தான் நான் உன்னை விட்டு விலகி வந்தேன்….இல்லனா  நான் உன்னை விடுவேனா…..?”

 

ம்ம்.. நீ என்னை எப்போவுமே விட மாட்டன்னு எனக்குத் தெரிஞ்சும் தெரியாம கேட்டேன்..சாரிசரா..”

 

சாரியெல்லாம் வேண்டாம்டி……கொஞ்சம் சிரிச்சிட்டு பேசு..அது போதும்…”

 

உனக்குக் கஷ்டமா இல்லயா..சராஎன்னால நம்ப முடியல….நீயா இப்படி தைரியமா பேசறதுன்னுஆனா….எனக்கு உன்னை இப்படி பார்க்க சந்தோசமா இருக்கு…..” என்றாள் சதுர்மதி நெகிழ்ச்சியோடு.

 

அவள் குணமானதுமே ஜெய்சங்கர் சரண்யாவுக்குப் போன் செய்து சொல்லிவிட்டான்.அதில் சரண்யாவுக்கு அத்தனை மகிழ்ச்சி.சதுர்மதி வருவதற்கு முன்பே வசந்தி சரண்யாவிடம்  நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டார்.தோழியின் வாழ்வு இனியாவது வசந்தத்தோடு இருக்க வேண்டுமென எண்ணியவள் இயல்பு போல்

 

இப்படியே சோக கீதம் வாசிட்டே இருக்காதடிஇதெல்லாம் ஜெய் அண்ணா உனக்கு சொல்லித் தரலயா?”

 

நீயுமா…?” என இவள் முறைக்க

 

என்ன நீயுமா..?”

 

பின்ன யாரா இருந்தாலும் அவரைப் பத்தியே பேசுறீங்கஅப்போ உனக்கும் அவரைத் தெரியும்..எனக்குக் கல்யாணம் நடந்ததும் தெரியும்அப்படித்தானே..?”

 

பின்ன..என் பெஸ்ட் ப்ர்ண்ட் கல்யாணம் நான் இல்லாமயா..?”

 

எனக்கு அவரைப் பிடிக்கல சரா……யாருமே என்னைப் புரிஞ்சிக்கலஎன்னால அந்த ஆள் கூட வாழ முடியாது…”

 

உஷ்விடு….இப்போ ஏன் டென்ஷன் ஆகுறநீ…?நாளைக்கே உன்னைப் பார்க்க நான் ப்ளைட் ஏறுறேன்…. நீ தான் என்னை ஏர்ப்போர்ட்ல பிக் அப் செய்ய வர…..அதுவும் ஜெய் அண்ணா கூட வர….வந்ததும் நேர்ல எல்லாத்தையும் பேசலாம்

 

நான் அவர் கூட வர மாட்டேன்..” என சதுர்மதி மறுக்க

 

அப்படியா சரி..நானும் உங்கூட வரமாட்டேன்..உன்னை பார்க்க மாட்டேன்..” என சரண்யா மிரட்ட,அதற்கு பயந்தவளாக சரண்யா இந்தியா வரும் நாளன்று கணவனோடு காரில் போனாள்.

 

தோழியைப் பார்க்கப் போகும் பாதை எல்லாம் ,அவர்கள்  வாழ்வின் பாதை மாறிப் போக காரணமாக இருந்த நிகழ்வுகள் அவளுக்கு ஞாபகம் வந்தன.

 

Advertisement