Advertisement

பகுதி 7

அவனிடம் அம்பிகா அத்தை யார் எவர் என விசாரிக்க,அரவிந்தன் வந்து , “ஹே..!! அபினவ்..வா..வா…எப்படி இருக்க….?” என உற்சாகமாய் வரவேற்றார்.

 

அம்பிகா அத்தைக்கு அபினவை தெரியாது..தாயாரின் மறைவுக்குப் பின் தம்பியோடு வந்து இருக்கிறார்.அவரின் மகன் வெளி நாட்டில் இருப்பதால் அவருக்கு  நம் நாட்டை விட்டு போக் மனமில்லாததால் உடன் பிறந்தவனோடே தங்கி விட்டார்.

 

“என்னக்கா பார்த்திட்டு நிக்கிற…முதல்ல போய் குடிக்க எடுத்துட்டு வா..” என சொன்ன அரவிந்தன் ,

 

”ஹே..என்ன நிக்கிற அபி..சிட் டவுன்…அண்ட் கங்கிராட்ஸ்…..சொன்னபடியே ஐபிஎஸ் பாஸ் பண்ணிட்ட…அதுவும் நல்ல ரேங்க்ல…” என வாழ்த்த சடாரென்று அவர் காலில் விழுந்தான்.அதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.என்ன சொல்வது என தெரியாதவர் ,”நல்லா இரு அபி..” என வாழ்த்த

 

அதைக் கேட்ட அபியின் கண்கள் கலங்கிப் போயின.மன்னிப்புக் கேட்கவே அவன் காலில் விழுந்தது.ஆனால் அவர் ஆசிர்வாதம் செய்ய அவன் உள்ளுக்குள் உடைந்து போனான்.அவரின் கையைப் பிடித்துக் கொண்டு ,”ஐ அம் ரியலி சாரி அங்கிள்…வெரி வெரி சாரி..என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்……அப்பு என்னை மன்னிக்கலன்னா கூட பரவாயில்ல…ஆனா நீங்க என்னை மன்னிக்கனும் அங்கிள் ப்ளீஸ்…அன்னிக்கு ஏதோ…” என சொல்லிக் கொண்டே போனவனை தடுத்து நிறுத்தியவர் ,

 

“முதல்ல உட்காரு அபி…..எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற..யூ யங்க் மேன்…..” என்று தட்டிக் கொடுத்தவர் அவனை பேச சொல்ல,அதற்குள் அம்பிகா ஜூஸ் போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.அதைக் குடிக்க சொன்னதும் குடித்தவன் பேசத் தொடங்கினான்.அன்றைய அவனது சூழ்நிலை., கோபம் ,ஏக்கம் , குழப்பம் எல்லாவற்றையும் அவரிடம் விளக்கி சொன்னான்.

 

“அபி..அன்னிக்கே உன் சிட்டிவேஷன் எனக்குப் புரிஞ்சது.நீ இப்படி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை..ஏன்னா…எனக்கு உன்னை அப்போ விட இப்போ ரொம்ப பிடிக்குது…..அதுவும் உன்னோட சுயமரியாதை எனக்கு ரொம்ப பிடிச்சது……எனக்கு உன் மேல கொஞ்சம் வருத்தம் தான் அபி…ஆனா கோவமெல்லாம் நிஜமா இல்ல…” என்றவரிடம் மனம் தெளிவுற ,

 

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்….எங்க உங்க கிட்ட மன்னிப்புக் கேட்க முடியாம போயிடுமோன்னு பயந்துட்டேன்……இப்போ ஐ ஃபீல் ரிலாக்ஸ்ட்….” என்றவனைப் பார்த்து சிநேகமாய்ப் புன்னகைத்தவர் ,

 

“அப்புறம் அந்த விசயத்துல உன் மேல எனக்குக் கோபமில்லை…ஆனா அப்புவை ஏன் அடிச்ச அபி..அதுவும் ஒரு பொண்ணை…அடிக்கலாமா பொது இடத்துல…விஜியை அவ அடிச்சது தப்புதான்…அது போல் நீ அடிச்சதும் தப்பு தான்…அவ இத்தனைக்கு ஆன் டியுட்டில இருந்தா அன்னிக்கு…..” என கொஞ்சம் கண்டிப்போடு சொல்ல

 

“தப்புதான் அங்கிள்..ஐ அம் ரியலி சாரி ஃபார் தட்.அகைன் எனக்கு நேரம் தான் சரியில்ல போல…அவட்ட மன்னிப்புக் கேட்க நினைக்கிறேன்..முடியல…..பயமா இருக்கு….”

 

“ மன்னிப்புக் கேட்டிரு அபி….பிகாஸ் அதுல உன் தப்பு ஜாஸ்தி இருக்கு..அவ உன்னை திருப்பி அடிச்சிருந்தான்ன என்ன செய்வ நீ….?”

 

அவன் தவறு செய்த குற்றவுணர்வில் அமைதியாக இருக்கவும் ,”சரி..விடு..விஜி இப்போ நல்லாயிருக்காளா..?” என்றதும் அவரிடம் விஜிக்கும் பிரதீப்புக்கும் கல்யாணம் செய்யவிருப்பதை சொல்ல , அரவிந்தனுக்கு மிக்க மகிழ்ச்சி.

 

கொஞ்சம் தயங்கிய பின் ,” அங்கிள்…இப்போவும் உங்களால என்னை உங்க மாப்பிள்ளையா ஏத்துக்க முடியுமா..?” என கேட்க

 

“ம்….எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு அபி..ஆனா அப்ஸரா தான் இதுக்கான பதிலை சொல்லனும்..அவ எஸ் சொன்னா எனக்கும் எஸ்..இல்லனா நோ தான்….எனக்கு அவ சந்தோசம் தான் முக்கியம்…நீங்க ரெண்டு பேரும் செஞ்சது தப்புதான்…அன்னிக்கு சூழ் நிலைகள் சரியா அமையல…ஆனா ஜஸ்ட் லைக் தட் லவ் பண்ணிட்டு ப்ரேக் அப் ரொம்ப தப்பு…” என்றார் கொஞ்சம் அதட்டலாய்.

 

“சாரி அங்கிள்….அதுல அவ தப்பு இல்ல…..என் மேல தான்…நான் தான் அவ என்னை மேரேஜுக்கு ஃபோர்ஸ் செய்யவும் கோவத்துல யாரையாவது கல்யாணம் செஞ்சிக்கோன்னு சொல்லிட்டேன்..அது அவளை காயப்படுத்திடுச்சு…..”

 

“புரியுது அபி..ஆனா இந்த அஞ்சு வருசமா அவ யாரையும் கல்யாணம் செய்ய ஒத்துக்கல….எனக்குத் தெரிஞ்சு ஷி இஸ் ஸ்டில் இன் லவ் வித் யூ……அப்படி உன்னையே நினைக்கறவ மனசு விட்டு பேசனும்..இல்ல அட்லீஸ்ட் சண்டையாவது போடனும்ல…..மனசுக்குள்ள கோவத்தையோ இறுக்கத்தையோ பூட்டி வைச்சிக்க கூடாதுப்பா…வாழ்றது எதுக்கு சந்தோசமா இருக்கத்தானே…..இப்படி கோவம் ,வெறுப்பு ,குரோதம் எல்லாத்தையும் சுமக்கவா..? நம்ம ‘நான்’ என்ற எண்ணத்தை விட்டொழிக்கனும்..நான் சரி அவன் தப்பு..அவ தப்புன்னு நினைக்காம…..அவங்க இடத்துல இருந்து பார்க்கனும்….நம்ம வாழ்ற வாழ்க்கையிலிருந்து நம்மளோட வாழ்வை விலகிப் பார்த்து வாழனும்…அப்போ தான் நம்ம செய்ற சரி தப்பு நியாயம் அநியாயம்லாம் புரியும்….சீக்கிரமே சந்தோசமா நீங்க ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கனும்…”என வாழ்த்தி அனுப்பினார்.

 

பகுதி 8

அவரிடமிருந்து விடைப்பெற்று வந்த அபிக்கு மனம் நிறைவான நிலையை அடைந்தது.அரவிந்தன் யார் பக்கமும் சாயாமல் அவனுக்காகவும் பேசியது ஆறுதலாய் இருந்தது.அவனது பெற்றோர் இல்லா உலகில் அவனுக்காக யோசிக்க சரஸ்வதிம்மா,அரவிந்தன் எல்லாம் இருக்கிறார்களே.. அவனின் நலன் நாடும் நல்ல உள்ளங்கள் உலகில் இருப்பது உள்ளத்துக்கு உவகையை தந்தது. நம்மை சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற நினைவு எத்தனை சுகமானது.!!

 

தனது ஈகோவையெல்லாம் தூர எறிந்து விட்டு , அப்ஸரா என்னதான் கோவப்பட்டாலும் அவளிடம் மன்னிப்புக்  கேட்டு அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்.இந்த ஐந்து வருடங்களில் ,அதுவும் குறிப்பாய் அவன் சொன்னது போல் அவளை விட அதிக ரேங்க் எடுத்து பாஸ் செய்த போதும் அவனால் முழுமையாக மகிழமுடியவில்லை.இலக்கை அடைந்த நிம்மதி இருக்கத்தான் செய்தது.ஆனால் பூரிப்பு..உற்சாகம்…எதுவும் இல்லை.அவனது நெஞ்சம் அதில் தஞ்சம் கொண்டவளைத் தேடியது.இப்படியே நினைத்துக் கொண்டே அவன் அலுவலகம் அடைய ,அங்கோ அப்ஸரா அவளது டீமை சேர்ந்தவர்களிடம் காய்ந்து கொண்டிருந்தாள். இவன் லேட்டாக அந்த அறைக்குள் நுழைய ,அவனை தீப்பார்வை பார்த்தவள் ,

 

“இப்படி சீக்கிரமே வந்து சேர வேண்டியவங்க லேட்டா வந்தா …குற்றவாளி நமக்கு முன்னாடி எல்லாத்தையும் செஞ்சிட்டு போய்டுவான்…” என கத்தி விட்டு

 

“உங்களுக்கு நான் என்ன சொல்லி அனுப்பினேன் கவின்…..?அங்க போய்ட்டு எல்லாரையும் பிடிச்சு வைங்கன்னு சொன்னேனா இல்லயா..?அப்படியே எல்லாரையும் போக விட்டா வருவீங்க…?” என கவினை திட்ட

 

“சாரி மேடம்..அவங்க கிட்ட டாகுமெண்ட்ஸ்லாம் பக்காவா இருந்துச்சு…..அண்ட் ட்ரக்கும் இல்ல…..அதுக்கு மேல அவங்களை நிறுத்தி வைக்க கஸ்டம்ஸ் அலோவ் பண்ணல….ரெண்டு ஆபிசர்ஸ் வந்து அதான் எல்லாம் சரியா இருக்கே….எதுக்கு சும்மா இவங்களை எங்கொயரி செய்றீங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க மேடம்….” என  கவின் செயலுக்கு விளக்கம் சொல்ல

 

“டாகுமெண்ட்ஸ்..ஷிட்….அதெல்லாம் நல்லா பக்காவா ப்ராடு வேலை செஞ்சிருப்பானுங்க….எல்லாமே பழைய ஸ்டாம்ப் உள்ளது….அதையே யூஸ் செஞ்சு ஏமாத்துறானுங்க….அதை முதல்ல digitize செய்யனும்….” என்றாள் தலையில் கைவைத்தபடி.

 

“என்ன ஆச்சு ..?” என அபினவ் அமைதியாக கேட்க

 

“கேட்கிறார்ல சொல்லுங்க சார்..” என கவினைக் காட்ட அவனும் ,” சார் மேடம் இன்னிக்கு மார்னிங் ஹார்பர்ல smuggling நடக்கறதா தகவல் வந்ததால நம்ம டீமை போக சொன்னாங்க. நாங்க அங்க போனா அபின்,ஹெராயின் மாதிரி எந்த ட்ரக்கும் இல்ல…அவங்க வைச்சிருந்தது மெடிசன் தான்..அதுக்கும் டாகுமெண்ட்ஸ் வைச்சிருக்காங்க…எல்லாமே drug controller அப்ரூவல் வாங்கினது வேற…அதனால நாங்க எதுவும் செய்யாம வந்துட்டோம்..”

 

“அவங்க இம்போர்ட் செஞ்சது ட்ர்க் இல்லதான்..ரா மெடிரியல்ஸ் ஹைட்ராக்சிமிலின் ஹைட்ரோக்ளோரைட் தான் இன்னிக்கு கடத்தின  ரா மெட்டிரியல்..அதை யூஸ் செஞ்சு தான் போதைப்பொருள் செய்றது…. நேரடியாக கடத்தினா மாட்டிப்போம்னு இப்படி மெடிசன் நேம்ல கடத்துறாங்க..இன்னும் சில தடைசெய்யப்பட்ட போதை தரக்கூடிய வலி நிவாரணிகள் கூட இப்படி மருந்து பேர்ல இறக்குமதி செய்றாங்க…விடுங்க கவின்.விடுங்க ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாட்டாமலயா போய்டுவாங்க..” என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் அப்ஸரா.

 

“அது எப்படி அப்ஸரா கஸ்டம்ஸ் டாகுமெண்ட்ஸையெல்லாம் வெரிஃபை செய்ய மாட்டாங்களா..?” என அபினவ் தனது ஐயத்தைக் கேட்க

 

“அக்சுவலா இங்க உள்ள டாகுமெண்ட்ஸ்லாம் எல்லாம் ஒருங்கிணைக்கல…ட்ர்க்,கஸ்டம்ஸ் எல்லாமே ஒன்னோட ஒன்னு சம்மந்தப்பட்டாலும் , அவங்க பழைய டாகுமெண்ட்சை காமிச்சு அந்த ஹார்ட் காப்பியை ஈசியாகவும் வெரிஃபை செய்ய முடியாத காரணத்தால தான் இப்படி நடக்குது…ட்ர்க் கன்ட்ரோல்ல இஷ்யு செய்ற consignment ஐ கஸ்டம்ஸ்லா வெரிஃபை செய்ய முடியாதது ஒரு காரணம்.. …கஸ்டம்ஸ்லேயே சில பேர் நேர்மையா இல்ல…சோ அப்படியும் தப்பு நடக்குது…” என விளக்கியவள்

 

அபினவை ஓரக்கண்ணால் பார்த்தவள் ,கவினிடம் ,”ஏன் கவின் இவர் எல்லாத்தையுமே புதுசா கேட்கிறாரு….இவரும் உங்க டீம் தானே..இவர் ஏன் இன்னிக்கு ரெய்டுக்குப் போகல….” என அவள் விசாரிக்க

 

“நான் போன் செஞ்சேன் மேடம் சாருக்கு…” என உளறி விட

 

தனது செல்பேசியை எடுத்தவன் ,”சாரி…சைலெண்ட்ல இருந்துருக்கு பார்க்கல நான்….” என அப்ஸராவைப் பார்த்து சொல்ல

“ஒரு கமிட்மெண்ட் கொடுத்தா ஒழுங்கா அதை செய்யனும்..முழு ஈடுப்பாட்டோட….அதை விட்டு பாதியில கழண்டுக்க கூடாது மிஸ்டர்.அபினவ்…இனி மேலாவது செய்ற வேலையை சரியா கவனமா அரைகுறையா விடாம முழுசா செய்யக் கத்துங்க…போங்க…” என இருபொருள் பட சொல்ல ,அதை விளங்கிக்கொண்டவன் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அவள் முகம் பார்க்க, ஏமாற்றம் மிகுந்த கண்களோடு அவளும் அவனைத் தான் பார்த்தாள் குற்றம் சாட்டும் பாவனையில்.

 

நீயே தான்…
என்னிடம் உன்
காதலாய் சொன்னாய்…

நீயே தான் …
உன்மீதான என் காதலை
உன்னிடம் சொல்லவும்
வைத்தாய் …

நீயே தான்…
இன்று நம் காதலை
மறுக்கின்றாய்
வெறுக்கின்றாய்
இதில் நான்
செய்த பிழை
தான் என்னவோ ?

உனக்கு …

காதலே பிழையா
இல்லை
உன்மீது நான் காதல்
கொண்டது தான்
என் பிழையா… !

Advertisement