Advertisement

பகுதி 6

பெற்றோருடன் ஊருக்கு சென்று உயிர் பிழைத்த விஜியை படிப்புக் காரணமாய் ஹாஸ்டலில் சேர்த்தான்.பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டவனுக்கே அத்தனை வலி என்றால் அவர்கள் உயிர் போவதை நேரில் கண்ட பதினைந்து வயது சிறுமியான விஜிக்கு எத்தனை தூரம் வலித்திருக்கும்.முதலில் கடைக்குட்டியாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவளுக்கு அந்த அதிர்வை தாங்கும் மனோபலம் இல்லாமல் போனது.அதுவே பின்னர் அவள் தவறிப்போக காரணமாய் அமைந்தது.

 

அபினவுக்கு அந்த நாட்களில் மனதளவில் தைரியம் அளித்தது அப்ஸரா தான்.இப்படியாக ஒரு  நான்கு மாதங்கள் ஓட, அபிக்கும் அப்ஸராவுக்கும் தேர்வு முடிந்தது.அபியை காண வந்த அப்ஸரா அவனிடம்  எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ,

 

“என்ன ஏன் ஒரு மாதிரி இருக்க…..?” என அபி விசாரிக்க

“அது வந்து….ஒரு விசயம் சொல்வேன்..யோசிச்சு நல்ல முடிவா சொல்லனும்….சரியா அபி…?”

 

“சொல்லு அப்பு..”

 

“அது..பாட்டிக்கு ரொம்ப முடியலடா…” என சொல்லும்போதே கண்கள் கலங்கி விட்டன.அவளைத் தந்தைக்கு பின் தாங்கியது அவளது பாட்டி தான்.பேத்தியைக் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாத்தவர் அவர்.

 

“ஏய்..என்னடா…அழாத….என்னாச்சு..” என அவனும் பதறி போய் கேட்க

 

கண்களைத் துடைத்துக் கொண்டவள் , “ஒன்னுமில்ல…பட் டாக்டர் ரொம்ப நாள் தாங்காதுன்னு சொல்லிட்டார்….சாகும் முன்னாடி என்னோட கல்யாணத்தைப் பார்க்க ரொம்ப பிரியப்படுறாங்கடா….அப்பாவுக்கும் பாட்டி ஆசையை நிறைவேத்தனும்னுதான் தோணுது…”

 

“அதனால்…?” அவன் கூர்மையோடு அவளை கேள்வி கேட்க

 

“ஹே..!! நீதான் மாப்பிள்ளை..ஏன் டா இப்படி முறைக்கிற..?சோ நம்ம கல்யாணம் செஞ்சிக்கலாமா?”

 

“வாட்?? அறிவுன்னு ஒன்னு இருக்கா…இல்ல அடகு வைச்சிட்டியாடி…லூசா நீ…இருபத்தொரு வயசுல எவனாவது கல்யாணம் செஞ்சிப்பானா……? உனக்கே இது லூசுத்தனமா தோணல…..” என கத்த

 

“டேய்….அறிவாளியா யோசிச்சா இது முட்டாள்தனம் தான்..ஆனா என் பாட்டி மேல அன்புள்ள ஒருத்தியா யோசிச்சா எனக்கு அவங்க கடைசி ஆசையை நிறைவேத்தனும்னு தான் தோணுது.என்னை சின்ன வயசிலேர்ந்து வளர்த்தவங்கடா..அம்மா போல அவங்க…இப்போ எனக்கு கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா அவங்க நிம்மதியா போய் சேருவாங்க அபி…..புரியுதா உனக்கு…?”

 

“எனக்கு புரியுது..உனக்கு தான் ஒன்னும் புரியல அப்ஸரா…..மேரேஜ் இஸ் எ கமிட்மெண்ட்..இன்னும் நான் ஐபிஎஸ் எழுதனும்.ஜாப்ல சேரனும்.விஜியைப் படிக்க வைக்கனும்.அவளுக்கு கல்யாணம் செய்யனும்…இதையெல்லாம் யோசிக்காம நீ சும்மா உன் நிலைமையை மட்டும் யோசிக்கற..” என கடுகடுக்க

 

“அபி…காதலிச்சா கல்யாணம் செய்யனும்னு தெரிஞ்சுதானே காதலிச்ச…கல்யாணம்கறது கமிட்மென்ட் தான் எனக்குத் தெரியும்….பாட்டியோட ஆசைக்காக சிம்பிளா நீ என் கழுத்துல தாலி கட்டு..அப்புறம் நீ செட்டிலான பின்னாடி நாம சேர்ந்து வாழலாம்…நான் உன்னை தொந்தரவே செய்ய மாட்டேன் டா…ஐ ப்ராமிஸ்…”

 

“வாயை மூடு அப்பு…உளறதுக்கு அளவில்லாம போச்சு உனக்கு….இதெல்லாம் சரியா வராது…”

 

“அபி….இப்போ உடனே யோசிச்சா உனக்கு அப்படிதான் தோணும்….கொஞ்சம் பொறுமையா யோசிடா…ஆனா ரொம்ப டைம் இல்ல என் பாட்டிக்காக….எனக்காக டா “ என சொல்லி விட்டு சென்றாள்.

 

மறு நாள் அபியை பார்க்க வந்த அரவிந்தன் முகமெல்லாம் வாடி காணப்பட்டார்.தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவர் மனம் விழைந்தது.இது நாள் வரை அவர் தான் தன் மகளை பூப்போல் தாங்கினார்.அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சொன்னபோது கூட அப்ஸராவுக்காக மறுத்து விட்டார்.அதுவே சில காலம் தாயின் மனதை அரித்தது.இப்போது அவர் சீராட்டி வளர்த்த செல்ல பேத்திக்கு ஒரு நல்வாழ்வு அமைந்தால் அந்த முதியவரின் ஆத்மா  நிம்மதியாக இறைவனடி சேரும்.

 

அதனால் அரவிந்தனும் அபினவிடம் பேச, அவனும் அப்ஸராவிடம் சொன்ன அதே காரணங்களை அவரிடமும் சொல்ல,அவரோ அவரின் தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ,

 

“அபி..நீ கவலையே படாத…..உன்னோட படிப்பு..விஜி படிப்பு,கல்யாணம் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்……என் அம்மாவுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் அபி….ப்ளீஸ்ப்பா…அவங்க கடைசி  ஆசை அதான்….கொஞ்சம் புரிஞ்சிக்கோ…” என கன்வின்ஸ் செய்ய

 

“என்ன புரிஞ்சிக்கோ…உங்களுக்கு உங்க அம்மா முக்கியம்னா எனக்கும் என் ஃபேமிலி முக்கியம் தான்…..எனக்கும் என் தங்கைக்கும் செய்ய நீங்க யாரு..? நான் உங்க கிட்ட கேட்டேனா….உங்க பொண்ணை முடிஞ்சா வெயிட் பண்ண சொல்லுங்க..இல்ல… உங்க இஷ்டப்படி என்ன வேணும்னா செய்ங்க…..எனக்கு நிறையா பொறுப்பு இருக்கு……என்னை இப்படி அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து தொந்தரவு செய்யாதீங்க….போங்க…” என கையெடுத்துக் கும்பிட,

 

“அபி…” என அவர் பேச வர,

 

“ப்ளீஸ் அவுட்..” என்றான்.

 

அபினவுக்கு மனது தாங்கவில்லை.இவர் யார் என்னையும் என் தங்கையையும் படிக்க வைக்க..?அப்படி என்ன  நான் குறைந்து போனேன்.அபினவுக்கு பெற்றோரின் தீடீர் மறைவு பல பொறுப்புகளை அவன் தலையில் சுமத்தியது.அதற்கு முன்னும் அவன் பொறுப்பற்றவன் இல்லை.குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் ஆனது அவன் நிலை.அவனுக்கு பெற்றோர் இருந்தவரை படிப்பது மட்டும் தான் வேலை.ஆனால் இப்போதோ பரீட்சை முடிந்த பின் ,யுபிஎஸ்சி தேர்வுக்கு எங்கே போய் டிரெயினிங் பெறுவது ,பார்ட் டைமாக எதாவது வேலை பார்க்கலாமா? என யோசனைகள் ஓடின.தாயின்  நகைகளை எடுக்க மனம் வரவில்லை.தங்கையின் திருமணம் மட்டுமின்றி தாயின்  நினைவை சுமக்கும் நகைகளை அடகு வைக்கவும் மனம் விரும்பவில்லை.

 

அவன் தந்தை இருந்தவரையில் யாரிடமும் அவர் கடன் வாங்கியது இல்லை.அதனால் அவனுக்கும் அந்த எண்ணமில்லை.பாங்கில் இருக்கும் சேமிப்பை எடுப்பது ஒன்றுதான் ஒரே வழி என்று முடிவு செய்தான்.ஆனால் ஒரே அட்டெம்ப்டில் டெஸ்டை க்ளீயர் செய்ய வேண்டும்.அதற்கு தீவிரமாய் உழைக்க வேண்டும்.விஜியை அப்பா அம்மா இருந்தால் எப்படி வளர்த்திருப்பார்களோ அப்படி வளர்க்க வேண்டும் என பல வித மனக்குழப்பத்தில் இருந்தான்.

 

இதில் அப்ஸரா வேறு திருமணம் அது இது என்று சொல்ல அவன் அந்த கோபத்தை அரவிந்தனிடமும் காட்டிவிட்டான்.அவர் அவனை படிக்க வைக்கிறேன் என்று சொன்னது அவனது சுய மரியாதையை சீண்டி பார்த்தது.அவனது யாருமற்ற நிலையை எண்ணி விரக்தியானவனுக்கு அதை வெளிகாட்ட வேறு வழியின்றி அவரிடம் தன் ஆத்திரத்தைக் கொட்டினான்.

 

நடந்தவற்றை மகளிடம் அப்படியே சொல்லாது “அவன் ஒத்துகலடா” என்று மட்டும் சொன்னார்.அவரின் சோர்ந்த தோற்றம் கண்டு அப்ஸரா வாடி போனாள்.

 

அவளுக்காக தான் அவர் அபினவிடம் பேச சென்றதே,உறவுகள் ,அவளது அத்தை எல்லாரும் சேர்ந்து  சொந்தத்தில் நல்ல மாப்பிள்ளைகளை வரிசையாய் நிறுத்த, மகளுக்குப் பிடித்த அபினவையே முடிக்க எண்ணினார்.ஆனால் அவன் பிடி கொடுக்காது பேசியது அவருக்கு வருத்தமாய் இருந்தது.

 

மீண்டும் அடுத்த நாள் அப்ஸரா  அபியை தேடி போய் அவனை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க முயல,

 

“ப்ளீஸ் அபி…பாட்டியைப் பார்த்தா அழுகையா வருதுடா….எப்போ கல்யாணம்னே கேட்கிறாங்கடா…அப்பா அத்தை முகத்தையெல்லாம் பார்க்க முடியல…..என் இடத்துல இருந்து யோசிச்சு பாருடா….எனக்காக டா…அதான் அப்பா எல்லாம் செய்வார்டா…. நீ ஆசைப்பட்ட படி ஐபிஎஸ் எழுது…..எல்லாம் அப்பா பார்த்துப்பார்…” என அவனை தேற்ற நினைத்து சொன்னதெல்லாம் அவனை தோற்றவனாக காட்டியதை அவள் உணரவில்லை.அந்த சீற்றம் அபியின் பேச்சில் நன்றாய் வெளிப்பட்டது.

 

“உன்னைப் பத்தியே யோசிக்கற…..என்னோட இடத்தில இருந்து யோசியேன் நீ…..அந்தாள் யாருடி எனக்கு செய்ய..நான் கேட்டேனா அவர்ட்ட….என்னை எங்கப்பா ஒன்னும் அம்போன்னு விட்டுப்போகல…சரியா…..அப்படி உன் பாட்டியோட கடைசி ஆசையை நிறைவேத்தனும்னா நீ யாராயவது கல்யாணம் செஞ்சிக்கோ….ஐ டோண்ட் கேர்…..” என்றான்.

 

“ஷட் அப்….அபி…நீயும் சராசரியானவன் புரூவ் பண்ணிட்ட……நீயா வந்து காதல சொல்லுவ…இப்போ நீயா என்னை வேண்டாம்னு சொல்லிட்ட…வேண்டாம்டா….உன் வாயில எப்படி இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சிக்கோன்னு வார்த்தை வந்துச்சோ..ஐ டோண்ட் வாண்ட் யூ……நான் என்ன கல்யாணத்துக்கு அலையுறேன்னு நினைச்சியா…..உன்னை நேசிச்சதுக்கு என்னை நீ பெருமைப்பட வைச்சிட்ட….என் அப்பா…உனக்கு அந்தாளா போயிட்டார்ல……ஒரு உயிரோடு கடைசி ஆசையை  நிறைவேத்த கேட்ட ஒரு உதவியை நீ கொச்சைப்படுத்திட்ட….இனிமே நீ என் லைஃப்ல இல்லடா…குட் பை..” என்றவள் விறுவிறுவென்று அவனை விட்டு விலகிப்போனாள்.

 

அண்ணனின் கடந்த காலம் அறிந்த விஜி ,”ஏன் டா அபி இப்படி செஞ்ச……பாவம்ல…”

 

“பாவம் தான் அம்மு…பட்..அன்னிக்கு இருந்த சிட்டிவேஷன்ல….என்னால வேற யோசிக்க முடியல…ஒரு மாதிரி டிப்ரெஸ்டா இருந்தேன்…ஒரு காம்ப்ளக்ஸ்டா….அப்புக்கு அவ அப்பா இருக்காரே..நம்ம அப்பா இல்லயே…அப்படின்னு….கல்யாணம் செஞ்சா அவ என் மனைவிதானே…..அவளை பார்க்க கூட வக்கில்லாம இருந்தா நான் எதுக்கு கல்யாணம் செய்யனும் சொல்லு….இப்படி நிறையா யோசனை…கோவம்….”

 

“அப்புறமா அவங்களை பார்க்கவே இல்லயா..?”

 

“அவ பாட்டி அந்த வாரத்துலேயே இறந்துட்டாங்க..அதுக்கு போனேன்..இவ பேசல…அதுக்கு அப்புறம்….. நான் டிரெயினிங்க்ல பார்த்தேன்..அவ கண்டுக்கல..அவ போஸ்டிங்க் கிடைச்சு நார்கோடிக்ஸ்ல  சென்னை வந்துட்டா..நான் ஹைதரபாத்ல தானே இருந்தேன்..இப்போ தான் இங்க வந்த பின்னாடி பார்த்தேன்…”

 

“அவங்களை உனக்கு இப்போவும் பிடிக்கும்தானே…அம்மா மேல ப்ராமிஸா சொல்லு” என விஜி கேட்க

 

“பிடிக்கும்டா…இப்போ ரொம்ப மனசு ஏங்குது அவளுக்காக…..” என்றான் ஏக்கமாய்.

 

“அப்போ போய் பேசுனா…பாவம்ல….”

 

“அய்யயோ..நீ வேறடா..முன்னாடியாவது முறைப்பா..இப்போ லைசன்சோட கன் வைச்சிருக்கா சுட்டுத்தள்ளிடுவா….” என விளையாட்டாய் சொன்னவன்,

 

“கொஞ்ச நாள் போகட்டும்டா…..அவ சொன்ன மாதிரி அவ எனக்கு ஈசியா கிடைச்சிட்டா..அதனால தான்…எனக்கு அவ அருமை தெரியல……இதே நம்ம அம்மா அப்பா சாகறதுக்கு முன்னாடி எதையாவது ஆசைப்பட்டா நம்ம எப்பாடு பட்டாவது அதை நிறைவேத்திருப்போம்ல…அப்போ அது புரியல..ஆனா அங்கிளை நான் ரொம்ப கோவமா பேசினது தப்பு..முதல்ல அவர்ட்ட மன்னிப்புக் கேட்கனும்…” என்றான் மனதை உணர்ந்து.

 

அடுத்த நாள் சொன்னபடி அரவிந்தனிடம் மன்னிப்பும் கேட்டான்.

 

   அன்று காலை முதலே அபினவ் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டான்.மனம் மகிழ்ச்சியில் தளும்பியது.நேற்று அண்ணனும் தங்கையும் மனம் விட்டு பேசிய பின் , ஒரு ஆறு மணியளவில் ப்ரதீப் தனது தாயாருடன் வீட்டுக்கு வர,அவர்கள் விஜியை பெண் கேட்டு வந்திருந்தனர்.

 

அபினவ் வாயடைத்துப் போனான்.அவன் முற்றிலும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.ப்ரதீப்பின் தாய் சரஸ்வதி , “என்னடா அபி..அப்படி பார்க்கிற…….என் மருமகளை எங்க வீட்டுக்கு எப்போ அனுப்ப போறேன்னு கேட்க வந்தேன.அவளை நீ கவனிக்கறதே இல்லயாமே….அழ வைக்கிறியாமே…உன் நண்பன் ஒரே புகார் தான் உன் மேல….என்ன ஆக்ஷன் எடுக்கறது சொல்லுங்க போலிஸ்கார்..?” என கேட்க

 

விஜியோ “அண்ணா எதுவும் செய்யல ஆன்டி….” என இவள் சொல்ல வர அதற்குள் ப்ரதீப் கண்ணைக் காட்டி தடுத்து விட்டான்.இவளும் அமைதியாய் இருந்தாள்.

 

“அதுக்கென்ன ஆன்டி…..தாராளமா கூட்டிட்டு போங்க…..ஆனா இப்போதைக்கு அவ படிச்சிட்டு முடிக்கட்டும்…” என அபி சொல்ல

 

“இல்லடா அபி..நீயும் டியுட்டிக்குப் போயிடுற….இவளும் பாவம் நாலு வருசமா ஹாஸ்டல்ல இருந்தா….உன் வேலை விசயமா நீயும் ராத்திரி பகல்னு பார்க்காம வேலைக்குப் போகனும்..பொம்பள புள்ள தனியா இருக்க வேண்டாம்…உன் ப்ர்ண்டும் ஹாஸ்பிட்டலைக் கட்டிட்டு அலையுறான்… நானும் தனியா இருக்கேன்….அதான் துணைக்கு விஜிம்மாவையும் கூப்பிட்டு போகலாம்னு…..அவ அங்க வந்து படிக்கட்டும் அபி…அப்படி ஒன்னும் அவ படிப்பு கெடாதுடா…..அங்க வந்தா அவளை நானே பார்த்துப்பேன்…என்ன சொல்ற நீ….?பாவம் குழந்தை தனியா இருக்க வேண்டாம் பாரு….”

 

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் அவர் சொல்வதில் இருந்த நியாயத்தை உணர்ந்தவன் அவரிடம் சம்மதம் சொல்ல,ப்ரதீப் எழுந்து வந்து அபியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு , “டேய் மச்சான் தேங்க்ஸ்டா…” என சொல்ல

 

“பார்த்தியா அபி..இவனுக்கு எவ்வளவு அவசரம்னு….அதுக்காகவது இன்னும் ரெண்டு மூணு மாசத்துலேயே கல்யாணம் செஞ்சிடனும்….” என்றார் சரஸ்வதி.

 

“டேய்..என்னடா இப்படி என்னைக் கட்டிப் பிடிக்கிற…உன் ஆளு ரூம்ல இருக்கா….” என அபி கன்னத்தை துடைக்க

 

“அம்மா….போய் பேசவா…” என பெர்மிஷன் கேட்க

 

“நடிக்காதடா….வழியுது……….” என அபியும் சரஸ்வதியும் கிண்டலடிக்க சிரித்துக் கொண்டே விஜியின் அறைக்குள் சென்றான்.

 

அறையின் உள்ளே சென்றதும் அவனிடம் விஜி ,”என்ன தீடீர்னு இதெல்லாம்?” என வினவ

 

“பின்ன…இன்னும் லேட்டான நான் ஒரு மொடாக்குடிகாரியைத் தானே கல்யாணம் செய்யனும்….அதான்….” என அவளை கேலி செய்ய.அதை தாங்க முடியாமல் அவள் கன்னங்கள் கண்ணீரால் நனைந்தன.

 

உடனே அவளை அணைத்து அவளது கன்னம் துடைத்தவன் , “ஹே..! பேபி..என்னடா நீ…நான் சும்மா லூலூய்க்கு சொன்னேன் டா….அது என்னன்னா……….அந்த போலிஸ்காரன் டியுட்டி டியுட்டின்னு என்னோட பியூட்டியை ஒழுங்கா கவனிக்க மாட்டான்..என் செல்லக்குட்டி தனியா இருப்பாளே….அதான்..சீக்கிரமே அவளை என்னோட என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும்னு ஆசைப்பட்டு வந்தேன் டா….ஓகே வா…” என அவன் சமாதானம் செய்ய

 

“வேண்டாம்…நீங்க பொய் சொல்றீங்க……நான் பேட் கேர்ள்…உங்களுக்குத் தான் என்னைப் பிடிக்காதே.” என அவள் அழ

 

“அய்யோ செல்லக்குட்டி நானும் பேட் பாய் தான்…” என்றவனை நம்பாத பார்வை அவள் பார்க்க,

 

“ஐ லவ் யூ டா செல்லம்…” என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க,அதில் அதிர்ந்து போனவள் அவனை விழிகள் கலக்க நோக்க,

 

“நான் ரொம்ப பேட் பாய்….அதனால் எனக்கு இந்த பேட் கேர்ள் தான் வேணும்…..சரியா…இனிமே அதை பத்தி பேச கூடாது…படிக்கனும் டாக்டர் ஆகனும்..அப்படியே இந்த டாக்டருக்கு ஒரு டாட்டரைப் பெத்துக் கொடுக்கனும்…..சரியா……செல்லக்குட்டி…..உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா…..ஆனா சரி பாவம் சின்னபுள்ள மனசைக் கெடுக்க கூடாதுன்னு விலகிப்போனேன்..அது உன்னை ஹர்ட் பண்ணிடுச்சு…” என மன்னிப்புக் கோர

 

“ஒரே வாரத்தில எனக்கு வயசு ஜாஸ்தியாடுச்சோ….?” என விஜி அவனை கேட்க

 

“ஹா ஹா…மை செல்லக்குட்டி பேக் டூ ஃபார்ம்..உனக்கு வயசாகல..எனக்கு வயசாயிடுச்சே…இன்னிக்கு எனக்கு பர்த்டே…..” என சிரிக்க

 

“அய்யோ…சாரி….ஹாப்பி ரீடர்ன்ஸ் ஆஃப் தி டே…” என அவள் அவனிடமிருந்து விலக பார்க்க,அவளை அருகில் இழுத்தவன் நெற்றியில் முட்டி ,

 

“பர்த்டேக்கு என்ன தரப்போற நீ….?”

 

“என்ன தர?எதுவும் நான் வாங்கலயே..”

 

“இப்போ நான் கொடுத்ததை ரீடர்னா தந்துடு…” என்றவன் அவளை மேலும் சோதிக்காது “சரி சரி…சீக்கிரமே நம்ம வீட்டுக்குப் போயிடலாம்..என் செல்லம் இனி அழவே கூடாது..” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.அதன்பின் சிறிது நேரம் அபியைப் பற்றியும் அப்ஸரா பற்றியும் பேச்சு வர, சரஸ்வதி அபியிடம் போகும் முன் ,அவன் தலையை வருடி

 

“நீ வேற…அவன் வேற இல்ல…எப்போ அப்ஸரா வீட்ல போய் பேசனும்னு சொல்லு..நான் வரேன்…..ஆனா இப்படியே நீ இருக்க கூடாது..சீக்கிரம் உன் வாழ்க்கைக்கு ஒரு  நல்ல வழியைப் பாரு” என்றபடி சென்றார்.சரஸ்வதி அபினவின் பெற்றோர் தவறிய பின் இன்னும் நெருக்கமாய்ப் பழகினார்.அதனால் அவருக்கு அபி அப்ஸரா பிரிவு பற்றி தெரியும்.அவனும் அவரின் கூற்றுக்கு செவிசாய்த்தான்.அவரிடம் சொன்னது போல் காலையில் விஜியை காலேஜில் விட்ட பின் அப்ஸராவின் வீட்டிற்குப் போனான்.

Advertisement