Advertisement

பகுதி 5

“கங்கிராட்ஸ் அப்ஸரா……இந்த தடவை நீ தான் ப்ர்ஸ்ட் ரேங்க்….” என பேராசியர் வாழ்த்த அதை பணிவோடு ஏற்றுக்கொண்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தாள் அப்ஸரா.

 

“வெரி குட் அபினவ்….நெக்ஸ்ட் டைம் ப்ர்ஸ்ட் வர ட்ரை செய்..” என இரண்டாம் இடம்பெற்ற அபினவ்வை வாழ்த்தினார்.அவரிடம்  நன்றியை உதிர்த்து விட்டு தனது இருக்கையில் வந்தமர்ந்தவனை அவனது நண்பன் அஷோக்,

 

“டேய் மச்சான்….போயும் போயும் ஒரு பெண்ணை ப்ர்ஸ்ட் வர வைச்சிட்டேயேடா….அவளை எப்படியாவது தோற்கடிச்சு  நம்ம கேங் மானத்தைக் காப்பாத்துடா….” என சொல்ல

 

“ஆமாடா…ஓவரா செய்றா அந்த பென்சில்…சீக்கிரமே அவ கூரை உடைக்கனும்…” என கொந்தளித்தான் ஹரிஷ் எனப்பட்டவன்.

 

“என்னாச்சுடா மச்சான்..இப்படி அவ மேல காண்டுல இருக்க…….உன்னை என்ன செஞ்சா அவ..” என அபி விசாரிக்க

 

“என்ன செஞ்சாளா செஞ்சிட்டா மச்சான்…..மொத்தமா……செஞ்சிட்டா அவன..” என இன்னொரு நண்பன் கிஷோர் ராகமிழுக்க

 

“ப்ச்..என்னடா ஆச்சு ஹரி…?அவ உன்னை என்ன செஞ்சா…?” என நண்பன் மேல் அக்கறையாக் கேட்க

 

“டேய் மாப்ள….. நம்ம சொரி…சாரி ஹரி இருக்கான்ல..அவன் அந்த பென்சில் கூட சுத்துற அந்த ரப்பரை லவ் பண்றான்….இவனும் டெய்லி அவ பின்னாடியே போறான்…..ஆனாலும் அந்த பென்சிலோட இசட் பிரிவு பாதுகாப்பை மீறி இவனால செய்ய முடியல… ஒரு இரண்டு நாள் அந்த பென்சில் லீவ் …அந்த கேப்பில இவன் கிடா வெட்ட ட்ரை பண்ணி..கொஞ்சம் அந்த ரப்பரை இம்ப்ரெஸும் பண்ணிட்டான்னு வையேன்….ஆனாலும்……தீடீர்னு இந்த பென்சில் வந்து குதிக்க,நம்ம சொரியும்….சீ முறைக்காத..ஃப்லோ போகுது….இந்த ஹரியும் அந்த ரப்பரை ஃபாலோ செய்ய பென்சில் கூப்பிட்டு கேட்க இவனும் நாங்க லவ் பண்றோம்னு சொல்லிட்டான்…ஆனா……அந்த ரப்பர் அவ ப்ர்ண்ட் கேட்டவுடனே பீதியில  நான் லவ் பண்ணல…என் பின்னாடி வந்தான்னு சொல்லிட்டா….அதுக்கு பென்சில் என்ன சொல்லிச்சு தெரியுமாடா….?” என அவன் கேள்வியோடு  நிறுத்த

 

“என்ன சொன்னா?” என அபினவ் விளிக்க

 

“இது பேரு லவ் இல்லயாம்…அட்ராக்ஷனம்….சோ அவ ப்ர்ண்ட் லாவண்யாவை டிஸ்டர்ப் செய்ய கூடாதாம்….அதுக்கு நம்ம ஹரி நான் சின்சியரா இருக்கேன்னு சொல்ல,அவ சின்சியரா இருந்தா முதல்ல….படி படிச்சு வேலைக்குப் போய் அவ வீட்ல பேசி கல்யாணம் செஞ்சுக்கோனு சொன்னாளாம்….இவன் அதுக்குள்ள யாருக்காச்சும் அவளை கட்டிக் கொடுத்துட்டா என்ன செய்றதுன்னு கேட்க , அவ உன் லவ் உண்மைன்னா இவ தான் உனக்குன்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன்னா இப்போ பேசி அவங்கப்பாட்ட சம்மதம் வாங்கு.செட்டில் ஆகிட்டு கல்யாணம் செஞ்சிக்கோ..அதை விட்டு இப்படி பின்னாடி சுத்துற வேலையெல்லாம் செய்யாதன்னு எரிஞ்சு விழுந்திட்டாளாம்.இதெல்லாம் நடக்கிற காரியமா மச்சி…” என கிஷோர் கேட்க

 

“அவ சொல்றதும் சரிதானே டா…காதலிக்கறது கல்யாணம் செய்ய தானே..” என அபி சொல்ல

 

“டேய்..நீ வேறடா……அதுக்காக இப்போவே போய் அந்த பொண்ணோட அப்பாட்ட பேச முடியுமா….?”

 

“இப்போவே போய் பேச முடியலனா செட்டிலாகிட்டு பேசுடா…..உனக்கு அவ தான்னு முடிவாயிருந்தா என்ன செய்ய முடியும் சொல்லு…”

 

இப்படி இவர்கள் பேச பேராசிரியர் விடைத்தாள்களைத் கொடுத்து முடித்து  வகுப்புத் தொடங்கி விட அமைதியாகினர்.ஆனால் அபினவ்வின் மனதை யோசனைக் குடையத் தொடங்கியது.

 

அந்த யோசனையின் விளைவாய் மாலை நேரத்தில் வகுப்புகள் முடிந்த பின் , அப்ஸரா அவளது ஸ்கூட்டியை எடுக்கும்போது அவளருகில் வந்தவன் ,

 

“அப்ஸரா… ஹரி உன் ப்ர்ண்ட் லாவண்யாவை லவ் பண்றான்னு சொன்னதுக்கு அவ அப்பாட்ட பேச சொன்னியாமே….” என கேள்வியாய் புருவம் உயர்த்தவும்

 

“ஆமா..சொன்னேன்…” என்றவள் சாவியை புகுத்தி ஸ்டார்ட் செய்ய போக

 

“அப்ஸரா..ஒரு நிமிசம்…நீ சொன்னது உன் ப்ரண்டுக்கு மட்டும் பொருந்துமா இல்ல உனக்குமா..?” என கேட்க ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின்னர் இயல்பாய் அவனை பார்த்து ,

 

“எனக்கும் தான்..” என்றவள் எந்த வித ஆச்சர்ய பாவமும் காட்டவில்லை.அவன் மறைமுகமாய் உணர்த்திய செய்தியை சாதுர்யமாய் அவள் மறைமுகமாகவே மறுத்து விட்டு சென்றாள்.

 

அபினவும் அப்ஸராவை பின் தொடர்ந்து அவளது வீட்டிற்கு வர , அவள் எந்த வித ரியாக்சனும் காட்டாமல் வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.அபி காலிங் பெல்லை அழுத்தி விட்டு நிற்க ,அரவிந்தன் வந்து கதவை திறந்தார்.அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தினான்.மகள் உடன் பயில்பவன் என்றதுமே மகளை அவர் அழைக்க போக , அவனோ ,”இல்ல அங்கிள்.உங்க கிட்ட பேச வந்தேன்..எப்படி இருக்கீங்க அங்கிள்..? ஆன்ட்டி எப்படியிருக்காங்க….” என குசலம் விசாரிக்க

 

“ஆன்ட்டி அங்க இருக்காங்க..” என நிழற்படமாய் தொங்கிய அவரின் நிஜமானவளை காட்ட,

 

“சாரி அங்கிள்..எனக்குத் தெரியாது…” என்றான் வருத்தமாய்.

 

“இட்ஸ் ஒகே மேன்”

 

அவனை அமர சொல்லி காபி தந்து அவர் பேச சொல்ல,

“அங்கிள் ஐ லவ் அப்ஸரா” என சொல்ல ,அவருக்கு புரையேறியது.

 

“இது அவளுக்கு தெரியுமா அபினவ்?”

 

“இல்ல அங்கிள்…அவட்ட நேரடியா சொல்லல.உங்கட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டு சொல்ல நினைச்சேன்.அவளும் அப்படி தான் சொன்னா” என தங்களுக்குள் நடந்த சம்பாஷணையை சொன்னான்.அதைக் கேட்ட அரவிந்தனுக்கு மகளை நினைத்து மனதில் பெருமிதமும் முகத்தில் புன்னகையும் தோன்றியது.

 

“சரிப்பா…உங்க வீட்ல என்ன செய்றாங்க..?”

 

“அப்பா பிரைவேட் கம்பெனில வொர்க் பண்றாங்க.அம்மா டீச்சர்.தங்கை ப்ளஸ் ஒன் படிக்கிறா.. எனக்கு ஐபிஎஸ் ஆகனும்னு ஆசை..வெறி..” என கனவு கண்ணில் மின்ன சொல்ல

 

“ஐ..பி.எஸ்….”என அவர் இழுக்க

 

“எஸ்.அங்கிள்.என் ப்ர்ண்ட் ப்ரதீப்போட அப்பா மிலிட்டரி மேன்..சோ அவர்ட்ட பேசி பேசி எனக்கும் பிரதீப்புக்கும் அதுல இன்ட்ரெஸ்ட்.இப்போ அங்கிள் இல்லை…அவர் இறந்ததால அவங்கம்மாக்காக அவன் மெடிசன் படிக்கிறான்.எங்க வீட்ல மிலிட்டரில்லாம் வேண்டாம்னு சொன்னதால ஐபிஎஸ்..”

 

“அப்போ இது மட்டும் தான் காரணமா…?” என அவர் சந்தேகமாய் இழுக்க ,அதை கவனித்தவன்,

 

“வேற என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க..அங்கிள்?” என சரியாக ஊகித்து கேட்க

 

“அப்ஸராக்கும் ஐபிஎஸ் ஆகனும்னு தான் ஆசை…..ஏன்னா நானும் டி.எஸ்.பி யா இருந்து வி.ஆர்.எஸ் வாங்கினவன் தான்.அப்புவோட அம்மா அவளுக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே இறந்துட்டாங்க…சோ அவளை பார்க்கறதுக்காக நான் வேலையை விட்டு ஓன் பிசினஸ் ஆரம்பிச்சேன்…அம்மாவோட பாசம் கிடைக்காதவளுக்கு அப்பாவோட பாசமும் கிடைக்காம போயிறக்கூடாதுன்னு  நினைச்சேன்..அதான்….சோ அவளுக்காக ஐபிஎஸ் எழுத போறியோன்னு நினைச்சேன் அபினவ்..” என அவர் விளக்க

 

“ஓ….அக்சுவலி எனக்கு அவ ஃபேமிலி அவளைப் பத்தி எதுவும் தெரியாது அங்கிள்.என்னை பொருத்தவரைக்கும் லவ்ல தெரிஞ்சக்கறதை விட புரிஞ்சிக்கறதுதான் முக்கியம்.அவளோட கொள்கைகள் எனக்குப் பிடிச்சது…அந்த கொள்கை உள்ள அவளை பிடிக்குது..தட்ஸ் இட்..அவ மேல காதல்னு சொன்னா அது ரொம்ப அதிகப்படியான வார்த்தை தான்.ஒரு அபிமானம்..அவ மேல..அவ எங்கூட இருந்தா லைஃப் நல்லாயிருக்கும்னு தோணிச்சு…சோ உங்கட்ட பேச வந்தேன்..” என நேர்மையாக பட்டென்று அவன் உள்ளத்தை உடைக்க

 

அந்த நேர்மை அரவிந்தனுக்குப் பிடித்து போனது , “ஓகே அபி….இவ்வளவு டீசண்டா வந்து பேசினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் முதல்ல…எனக்கும் சரி அப்புக்கும் சரி……லவ்னு சொல்லி பின்னாடி சுத்தினா பிடிக்காது..மத்த வீட்ல எப்படியோ ஆனா இங்க அப்பு சொன்ன மாதிரி தான்…உன்னோட விருப்பத்தை சொல்லிட்ட..நானும் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்….அண்ட் மை டியர் யங் மேன்….முதல்ல படிப்பு..சோ நல்லா படி…ஆல் தி பெஸ்ட்..ஐபிஎஸ் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் செய்…” என வாழ்த்தி அனுப்பினார்.

 

அவன் சென்ற பின் மகளிடம் அவனை பற்றி விசாரித்தவர் , “நீ என்னடா சொல்ற அப்பு…? உனக்கு அபியை பிடிச்சிருக்கா?”

 

“பிடிக்கும்னா சாதாரணமா பிடிக்கும்பா…அவ்வளவுதான்…ரொம்ப டீசண்ட்……பொண்ணுங்க விசயத்துல ரொம்ப நல்லவன்…நாங்க போன வருசம் சிம்போசியம் போனப்போ எங்க காலேஜ் பொண்ணை ஒருத்தன் கிண்டல் செய்ய,அவனை அடிச்சு ரெண்டு நாள் சஸ்பெண்ட் வரைக்கும் போச்சு..அப்புறம் அந்த பொண்ணு போய் உண்மையை சொன்னா..அதுவரைக்கும் அந்த பொண்ணை பத்தி அவன் வாயே திறக்கல…..”

 

“ஹ்ம்ம்…குட் “

 

“மத்தபடி எனக்கு பெருசா அவனை தெரியாதுப்பா…இன்னிக்கு தீடீர்னு வந்தான்…உன் ப்ர்ண்டுக்கு சொன்னதுதான் உனக்கும்மான்னா ஆமாம்னு சொன்னேன்…ஆனா அவன் வருவான்னு நான் எதிர்ப்பார்க்கல….பிகாஸ் அவன் ப்ர்ண்ட் கிட்டையும் சொன்னேன் அவன் லாவண்யா வீட்டுக்குப் போகல..ஆனா இவன் தீடீர்னு லவ்லாம்…நான் நினைக்கவே இல்லப்பா….ஆமாம் அவன்ட்ட ரொம்ப நேரம் பேசினே…என்ன சொன்னான்….?” என அப்ஸரா விழி விரித்து கேட்க எல்லாவற்றையும் சொன்னவர்,

 

“அவன் ஃபேமிலி பத்தி அவனை பத்தி கம்பிளீட்டா நான் இப்போ தான் டிடெக்டிவ் சிவசுட்ட விசாரிக்க சொன்னேன்…எவிரிதிங் க்ளீயர்னா அவனுக்கு ஓகே சொல்லலாம்…” என சொல்ல

அடுத்த நாள் காலையிலேயே மகளிடம்,

 

“எனக்குப் பிடிச்சிருக்குடா.அவனோட காதலை விட அந்த நேர்மை…சிவசு  நல்லா விசாரிச்சுட்டான்..சோ நோ ப்ராப்ளம்….உனக்குப் பிடிச்சா ஓகே சொல்லுடா…அப்பு…அப்பாக்கு ஓகே..அப்பா என்ன சொல்வாரோன்னு கவலைப்படாத அப்புக்குட்டி..”

 

“உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிக்கும்பா…” என மறைமுகமாக தன் சம்மதத்தை சொன்னவள் கண்ணடித்து ,

“இவனை விட பெஸ்ட் சாய்ஸ் கிடைக்காதுப்பா….ரொம்ப ரொம்ப சமத்து பையன்ப்பா…” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

 

மகளுக்கு நல்லவன் ஒருவனே மணாளனாக வரப்போவது குறித்து அந்த அன்புள்ள அப்பாவுக்கு அலாதி மகிழ்ச்சி.

 

கல்லூரியில் மதிய இடைவெளி போது அப்ஸராவிடம் வந்த அபினவ் ,

 

“அங்கிள் என்ன சொன்னாரு அப்ஸரா…உனக்குப் பிடிக்குமா என்னை…?” என ஆர்வமாய் கேட்க

 

“அப்பாக்கு ஓகே..” என்றபடி அவள் வகுப்பறை நோக்கி நடக்க,

 

“ஹே..!! உனக்கு ஒகேவானு சொல்லு..” என இவன் அவளை தடுக்க

 

அவனைப் பார்த்து திரும்பியவள் தலையை சரித்து மெர்குரி நிறக்கண்கள் பளபளக்க,”எனக்கு ஓகேங்கறதால தான் அப்பா சொன்ன ஓகேவா உன்ட்ட சொன்னேன் அபி..இல்லனா அப்பா சொன்ன ஓகே கூட ஓபியடிச்சிட்டு போயிருக்கும்…..” என அவள் சிரித்து ,”சரியான டூயப்லைட் டா..நீ..அப்ஸராவுக்கு வரவன் ஷார்ப்பா இருக்க வேண்டா……..நீ எப்படி ஐபிஎஸ் ஆவ..” என கலாய்க்க

 

“பாருடி..உன்னை விட அதிக ரேங்க் எடுத்து காட்டுறேன்….” என்று சவால் விட்டான் சந்தோசமாய்.

 

இரண்டு மூன்று நாட்கள் கழிந்து , அப்ஸ்ராவிடம் வந்த அபினவ் ,“அப்பு…வரியா..அப்படியே  எங்காவது போயிட்டு வரலாம்…” என அழைக்க

 

“நோ அபி..நான் வீட்டுக்குப் போகனும்…இதெல்லாம் சரியில்ல…நான் வரல…” என மறுக்க

 

“என்ன அப்பு நீ..?அங்கிள்ட்ட நான் வந்து பேசவா…….அவர்க்குதான் நம்ம விசயம் தெரியும்ல…ப்ளீஸ்டி..வாம்மா…..ஒரே ஒரு ரவுண்டாவது வா…லவ்வர்ஸா சுத்தனும்னு ஒரு ஆசைடா” என கொஞ்ச

 

“நோ மீன்ஸ் நோ தான் அபி…இது அப்பாவுக்கு தெரியாதுங்கறது காரணமில்ல….அவர்ட்ட நானே சொன்னா கூட அவர் அலோவ் பண்ணுவார்…ஆனா இதை நானே விரும்பல அபி.லவர்ஸா சுத்தனும்னா அப்போ கல்யாணம் ஆனா லவ் போயிடுமா..?கணவன் மனைவியானாலும் காதல் இருந்தா நம்ம காதலர்கள்தான் அபி…..ப்ளீஸ் புரிஞ்சிக்கோ…”

 

“என்ன புரிஞ்சிக்கோ..?உன்னை நான் என்ன டார்ச்சர் செஞ்சேன்….யார்கிட்டையும் நான் உன்னை விரும்புறதை சொல்லவே இல்ல…உன்னை காலேஜ்ல எதாவது டிஸ்டர்ப் செய்யறேன்னா?நீ சொன்ன மாதிரி உன் அப்பாட்ட தானே வந்து பேசினேன்…” என அவன் கோபம் கொள்ள

 

அவனது கோபம் உணர்ந்தவள் , அவன் கையைப் பற்றி , “அபி……இதே நம்ம கல்யாணமாகி ஜோடியா போனா அது வேற..இப்போ இந்த விசயம் உன் அம்மாவுக்கும் என் அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும்..ஊர் உலகத்தை பத்தி நம்ம கவலைப்பட வேண்டாம் தான்…ஆனா என்னை வளர்த்த எங்கப்பாக்கு என்னால ஒரு கெட்ட பெயர் வாங்கித் தரக்கூடாதுன்னு ரொம்ப உறுதியா இருக்கேன் டா….அம்மா இல்லாம அப்பா வளர்த்த பொண்ணு..அதான் இப்படி சுத்துறான்னு யாரும் சொல்லிட கூடாது..அது என் அப்பாவோட இத்தனை வருச வளர்ப்பை கொச்சைப்படுத்திடும்….உனக்கு நான் தான்…எனக்கு நீதான்…சரியா……வேணும்னா டெய்லி ஒரு பத்து நிமிசம் போன்ல பேசலாம்..சரியா…” என சொல்ல அவன் முகம் தெளியவில்லை.

 

“என்ன டா அபி…கோவமா…எனக்கும் ஆசையெல்லாம் இருக்குடா..ஆனா அதையெல்லாம் தாண்டி அப்பாவோட மரியாதை ரொம்ப முக்கியம்..இதுல உன்னோட,என்னோட மரியாதையும் அடங்கி இருக்கு…..நாளைக்கே விஜிக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அவ அண்ணன் ஒரு பொண்ணோட ஊர்சுத்தினான்னு சொன்னா நல்லாவா இருக்கும்…?கணவன் மனைவியா ஊர் சுத்தினா அது கண்ணியம் டா..ஆனால் நானும் லவ் பண்றேன்னு ப்ரோஜக்ட் செய்ற மாதிரி கை கோர்த்து  பார்க் பீச்னு சுத்துறது.இதெல்லாம் எனக்கு பிடிக்காதுடா….” என அவள் முடிந்த வரை தன் நிலையை விளக்க,அதை அபியும் உணர்ந்து புரிந்து கொண்டான்.

 

“இதான்..இதனால்தான் டி உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது..நாளுக்கு நாள் உன் மேல லவ் அதிகாமாகுது..வழக்கமா பசங்க தான் இம்பெர்ஸ் செய்ய எதாவது செய்வாங்க..ஆனா இங்க நான் தான் உங்கிட்ட இம்ப்ரெஸ் ஆகிறேன்…அண்ட் ஐ லைக் தட் டூ…..இம்ப்ரெஸ் செய்றதை விட ,இம்ப்ரெஸ் ஆகறது நல்லாயிருக்கு..” என்றான் உளமாற.

 

இப்படியாக நாட்கள் நல்லவிதமாக இதமான காதல் பார்வையோடு கனிவான பேச்சுகளோடும் செல்ல, தீடீரென ரான்சம்வேர் வைரஸால் ஸ்தம்பித்த கணினி உலகம்போல், திருமணத்துக்காக ஊருக்குச் சென்றிருந்த அபியின் பெற்றோர் இருவரும் காலமானார்கள்.அந்த எதிர்ப்பாராத,எதிர்கொள்ளவியலாத அதிர்ச்சியை அபினவால் ஜீரணிக்க முடியவில்லை.முற்றிலுமாக நிலைகுலைந்து போனான்.

Advertisement