Advertisement

பகுதி 4

அன்றைய விடியல் அழகாய்ப் பூக்க,காலையில்

தனது பணிக்குக் கிளம்பிய அபினவ் ,தங்கைக்காக காத்திருந்தான்.

 

“ஹே..!அண்ணா நீ இன்னும் கிளம்பலையாடா..?” என அதிசயத்துள் அதிசயமாய் அவனை காலை வேளையில் கண்ட உற்சாகத்துள்ளலோடு விஜி சொல்ல,

 

“அம்மு..நீ ரெடியா…?உன்னை இன்னிக்கு நானே ட்ராப் பண்றேன் காலேஜ்ல…..அதான் வெயிட் பண்றேன்..”

 

“அய்யோ வேண்டாம்டா அபி..நான் ஏதோ லூசு மாதிரி நடந்துக்கிட்டேன்.அது உன்னை ரொம்ப பாதிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்….ஐ அம் சாரி ஃபார் தட்….ஏதோ சில நியாயகங்கள்,அர்த்தமில்லாத கோபம்,ஏக்கம்…அதனால் செஞ்ச அபத்தமான செயல்…..!அவ்வளவுதான்..!!ஜஸ்ட் தட் திங்……நீ எனக்காக உன்னைக் கஷ்டப்படுத்திக்காத…என்னை நானே பார்த்துக்கனும்..உன்னோட வேலைப் பத்தி தெரியும் எனக்கு…..நீ கிளம்பு…..இன்னிக்கு உன்னால என்னை விட முடியும்…நாளைக்கும் என் மனசு இதை எதிர்ப்பார்கும்…அப்படி  நடக்கலன்னா தேவையில்லாத frustration தான்…எனக்கு….சோ..யூ கேரி ஆன் அபி…..நான் பஸ்ல போய்க்கிறேன்..” என விஜி கூற,

 

அவள் தலையில் லேசாய் குட்டியவன் , “விஜி பேபி….இப்போ தான் நான் சரியா நடந்துக்கிறேன்…என்னதான் ஊருக்கு ராஜாவா இருந்தாலும் தாய்க்குப் புள்ள தானே…அது மாதிரி வேலை அது இருக்கத்தான் செய்யும்..நம்ம தான் நேரம் ஒதுக்கிக்கனும்… நேரம் இல்லன்னு சொல்ல கூடாது..இல்லைகள் தான் நம்மை இல்லாமல் ஆக்குது…இப்போதான் அந்த ஞானோதயம் வந்திருக்கு எனக்கு…

முடிஞ்ச அன்னிக்கு நான் அழைச்சிட்டுப் போறேன்….முடியலன்னா என் மச்சான் பிரதீப் அழைச்சிட்டுப்  போவான்..” என சொல்லி கண்ணடிக்க,

 

“ஹே…!!  அவர் எதுக்கு…?”

 

“ஆஹா அவரா…நேத்து அவன் இவன்..னு நல்லா அவன வெளுத்து வாங்கிட்டு இப்போ பேச்சை பாரு…”

 

“அப்போ உளறிட்டேனா டா….எனக்கு அவர பிடிக்கும்..பட் அவருக்குப்  பிடிக்கல..சோ இதைப் பத்தி பேச வேண்டாம் விடு…” என சொல்ல,

 

அபியும் இது அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டிய விசயமென அப்படியே விட்டான்.விஜியை சமாதானம் செய்து காலேஜில் விட்டு கமிஷனரிடமிருந்து அழைப்பு வந்த காரணத்தால் அங்கே சென்றான்.கமிஷனரின் முன் சல்யூட் வைத்து நின்றவனை ஆழப்பார்வை ஒன்று பார்த்த கமிஷனர் ,

 

“என்ன அபி..நேத்து என் மேல செம கோவத்துல இருந்திருப்ப போல…” என கேட்க,

 

அபியோ முழித்தான்.முதலில் அவர் மீது கோபமிருந்ததென்னவோ உண்மை தான்.ஆனால் விஜி பிரச்சனையில் அதெல்லாம் பின்னுக்குப் போய் விட,அவனுக்கு கேஸின் நினைப்பே இல்லை.இப்போது இவர் இப்படி கேட்கவும் விழித்தவன் பதில் சொல்லாமல் அவர் விட மாட்டார் என அறிந்து ,

 

“கொஞ்சம் வருத்தம் தான் சார்…ஒரு வாரமா ப்ளான் செஞ்சு கடைசி நேரத்துல எல்லாமே சொதப்பிடுச்சுன்னு கோபம்.நீங்க மட்டும் பர்மிஷன் கொடுத்திருந்தா நான் செர்ச் செஞ்சிருப்பேன்.”

 

“ஐ அக்ரி வித் யூ அபி…ஆனா அந்த ஹோட்டல் முன்னாள் அமைச்சரோடது…சிட்டியோட அடையாளம்னு சொல்ற அளவுக்கு பழைமையானது.குடும்ப சொத்து அந்த அமைச்சருக்கு…அதுல ஈசியா எவிடன்ஸ் இல்லாம எப்படி செர்ச் வாரண்ட் தர முடியும் சொல்லுங்க…அண்ட் ஒரு விசயம் சொல்லவா..நமக்கு வந்த தகவலே தப்பு…அங்க சில்வர் கடத்தல்  நடக்கவே இல்ல” என அவர் கூறவும் அதிர்வோடு அவரைப் பார்த்தான் அபினவ் ப்ர்சாத்.அவன் அறிந்தவரையில் கமிசனர் மிகவும் நேர்மையானவர்.ஆகையால் அவரின் கூற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை.

 

அவனின் அதிர்ச்சியை சரியாக கணித்த கமிசனர்,”தகவல் சரிதான்..ஆனா வந்த இடம் தான் தப்பு அபி…அக்சுவலி அது நார்கோடிக்ஸுக்குப் போக வேண்டிய இன்ஃபர்மேஷன்..’சில்வர்’ அப்படிங்கறது ட்ரக்கை குறிக்கிற கோட் வொர்ட்…அபின் ஹெராயின் அதோட கலரைக் குறிக்க,அந்த வெண்மையைக் குறிக்க பயன்படுத்துற வார்த்தை.அதுக்கும் வெள்ளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..அதுல தான் நம்ம தடுமாறிட்டோம்…அண்ட் அங்க ரொம்ப நாளா போதை மருந்து சப்ளை செஞ்சவனை நார்கோட்டிக்ஸ் பீரோவை சேர்ந்த ஆபிஸர்ஸ் கண்டுபிடிச்சிட்டாங்க….” என விளக்கம் சொல்லவும் தான் , அங்கு அப்ஸரா ரிசப்சனிஷ்டாக வந்த நோக்கம் அபினவுக்குப் புரிந்தது.

 

அபியை நோக்கிய கமிஷனர் , “வெல் மிஸ்டர் அபினவ்….ஒரு ஹாப்பியான நியூஸ்…உங்களுக்கும் கவினுக்கும் இனி இங்க வேலை இல்லை..யூ ஆர் ட்ரான்ஸ்பர்ட் டூ நார்கோட்டிக்ஸ் இண்டலிஜின்ஸ் பீரோ…கவர்மெண்ட் ஆர்டர்..NIB லேந்து நல்ல

தகுதியான ஆபிசர்ஸ் வேணும்னு சொன்னாங்க..நாளுக்கு நாள்

போதை மருந்தோட புழக்கம் அதிகமாச்சுன்னு…இப்போ அதை கன்ட்ரோல் செய்ய தீவிர    நடவடிக்கை எடுக்கறாங்களாம்…அதுக்காக தான் உங்களை அங்க மாத்தியிருக்காங்க…அண்ட் ஐ  நோ மை பாய்ஸ் நீங்க எங்க போனாலும் உங்க வேலையைக் கரெக்டா செஞ்சிடுவீங்கன்னு..ஆல் தி பெஸ்ட் ஃபார் யூர் நியூ ஆக்சன்…” என வாழ்த்தி அனுப்பினார்.

 

கமிஷனரிடமிருந்து புதிய பணிக்கான நியமன உத்தரவை வாங்கியவன் நார்கோடிக்ஸ் அலுவலகத்துக்கு உற்சாகமாய் சென்றான்.காரணம் அவனது நெஞ்சம் கொண்ட நெஞ்சாத்தி அங்கே தான் வேலை செய்கிறாள்.இருவருமே ஒரே  நேரத்தில் ஐபிஎஸ் பாஸ் செய்திருந்தாலும் , ஹோம் கேடரில் அவனுக்கு பணி நியமனம் ஆகாமல் நார்த் இந்தியாவில் போஸ்ட் ஆகியிருந்தான்.அப்ஸராவோ இந்த இரண்டு ஆண்டுகளாக நார்கோடிக்ஸில் தான் பணியில் உள்ளாள்.ஆகையால் ட்ரான்ஸ்ஃபர் கிடைத்து சென்னை வந்த பின்னும் அப்ஸராவை காணும் வாய்ப்புகள் அபினவுக்குக் கிட்டாது போனது.இன்றோ அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெற்றதில் அவன் மகிழ்ச்ச்சியடைந்தான்.

 

அங்குள்ள எஸ்.பியை சந்தித்து தனது நியமன உத்தரவைக் காட்டியவன் , அவரிடம் தன் பணி விவரங்களை சொல்ல,டிஎஸ்பி அப்ஸராவை அழைத்தவர் அவனுக்கு அவனின் அகமுகமானவளை அறிமுகம் செய்துவித்தார்.அவளின் டீமில் இருவரையும் சேர்த்தார்.கவினும் வந்து விட இருவருக்கும் அவர்களுடையை பணியை விளக்கி சொல்லுமாறு அப்ஸராவுக்கு உத்தரவிட்டார்.

 

இருவரும் அப்ஸராவை பின்பற்றி அவளது அறைக்குள் செல்ல,அங்கிருந்த பெயர் பலகையைப் பார்த்த அபினவ்வின் கண்கள் மலர்ந்தன.

 

‘அப்ஸரா அரவிந்தன் ஐபிஎஸ்.டி.எஸ்.பி’

 

அரவிந்தன் என்ற பெயரை பார்த்த்துமே அவனுக்கு நினைவிலாடியது அவனது அழகான ராட்சஷியைக் கட்டி மெய்க்கும் அன்பான தந்தை என்பதுதான்.அவளுக்கு அவள் தந்தை எவ்வளவு முதன்மையானவர் என்று அபிக்கு தெரியும்.தந்தைக்கும் மகளுக்குமான நெருக்கத்தையும் அவன் அறிவான்.அந்த நல்ல மனிதரிடம் தனது செய்கைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென மனதில் குறித்துக் கொண்டான்.

 

இப்படியாக அவன் சிரித்தபடியே நிற்க , அப்ஸரா பாட்டிற்கு கேஸைப் பற்றி விரிவாக விளக்க,கவின் தான்,

 

“என்ன அபி இது…சுகர் பேஷண்ட் ஸ்வீட்டை பார்க்கற மாதிரி ஒரு ரியாக்ஷன்….மேடம் சொல்றத கவனிங்க…இவங்க ரொம்ப டெரராம்…என் ப்ர்ண்ட் இங்க இருக்கவன் சொன்னான்..” என அபியை உஷார்ப்படுத்த

 

“அங்க என்ன பேச்சு உங்களுக்கு…” என கணீர் குரலில், தன் மெர்குரி கண்கள் அபியை ஊடுருவும் வண்ணம் அப்ஸரா கேட்க,அபியோ சீரியசாக முகத்தை வைத்து கொண்டு ,

 

“மேடம் நீங்க ரொம்ப டெரராம்..அதான் சொன்னான் இவன்…மத்தபடி ஒன்னுமில்ல” என சொல்ல

 

‘அடப்பாவி கட்டப்பா’ என்பதாக ஒரு லுக்கை விட்டு கவின் முழிக்க,

 

“மிஸ்டர் கவின் சரியாதானே சொல்லியிருக்கார்….உங்களுக்கு தான் அபி என்னை பத்தி தெரில…..அண்ட் நான் டெரர்தான்…இப்போ நான் சொல்றதைக் கவனிங்க…” என அசராமல் சொன்ன அப்ஸராவை அபிக்கு மேலும் பிடித்தது.

 

இந்த குணம் தான் ஆளை அசரடிக்கும். எதையும் துணிவாய் எதிர்கொள்ளும் இந்த பண்பு தான் அபிக்கு அவனது அப்புவிடம் பிடித்ததே.அவனுக்கும் அவனது காதலியை காத்தாட கொஞ்ச நேரம் சைட் அடிக்க ஆசைதான்.ஆனால் கடமை கொண்ட பெண் சிங்கமாய் அவனது காதலி இருக்கையில் அவனால் என்ன செய்ய முடியும்?

 

அவள் கேஸைப் பற்றி பேச பேச அபிக்கு ஆச்சரியம்.அப்ஸரா இப்படிதான் எந்த விடயத்தை எடுத்தாலும் முழு பற்றுதலோடு தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து செய்வாள்.அவளது பற்றுதல் தான் அவளது தலை சிறந்த பண்பே..!!

 அந்த பண்பு தான் அவனுக்குப் பாதகமானதும் கூட…!!

அபியோ மனதில் ,’விட்டா இவளே போதைப்பொருள் தயாரிப்பா போல..அம்மணி அப்டேட்டா டீடெய்ல்ஸ் சொல்றா..’ என நினைத்தான்.

 

“இந்த சீசன்ல கஞ்சா விளைச்சல் அதிகமா இருக்கும்.அதனால் அதை அழிக்க நம்ம டீம் ஒன்னு தேனிக்குப் போயிருக்காங்க…சென்னையைப் பொருத்த வரைக்கும் இட் இஸ் எ கார்ப்பரேட் சிட்டி..போதைப்பொருள் கடத்தற ஹப்.ஆஃப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் உள்ளிட்ட தென்மேற்கு ஆசியாவின் பிறைவடிவம் கொண்ட நாடுகள் தான் தங்கபிறை..தென் கிழக்கில் உள்ள தாய்லாந்து.வியட்நாம்.கம்போடியா உள்ளிட்ட நாடுகள் தான் தங்க முக்கோணம்..இது ரெண்டையும் இணைக்கிற பாலமா இப்போ சென்னை மாறிடுச்சு….பாலியல் தொழிலும் போதைப்பொருளும் ஒரு தவிர்க்க முடியாத அங்கமா மாறிட்டு வருது….அதுவும் இதை ஊக்குவிக்கறது மேல் தட்டு வர்க்கம் தான்.”

 

“தங்க பிறை நாடுகள்ல தான் அபின் உற்பத்தி செய்யப்பட்டு தங்கமுக்கோண நாடுகளுக்கு கடத்தப்படுது.அங்கிருந்துதான் அமெரிக்கா,ஆஃப்ரிக்கா,யூரோப்கெல்லாம் சப்ளை ஆகுது.இது இல்லாம உள் நாட்டு விற்பனை வேற…கொல்கத்தா ,மும்பை,டெல்லின்னு….சென்னை தான் எல்லாத்தையும் இணைக்கிற இடம்….அண்ட் இப்போ போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் கிட்டையும் அதிகமாயிடுச்சு…அவங்கள மெல்ல மெல்ல தங்களோடு வலையில் விழ வைச்சு லாபம் பார்க்கிறாங்க….சோ இதையெல்லாம் நாம தடுக்கனும்”

 

“இதுல நிறைய பணக்காரங்களும் அரசியல்வாதிகளும்  சம்மந்தப்பட்டிருப்பதால நம்மால் எந்த அளவுக்கு இதை  வெற்றிகரமாய் செய்ய முடியும்னு தெரில…ஆனா முடிஞ்ச அளவு இளைய சமூகத்தை காப்பாத்தனும்..தானா கொழுப்பெடுத்து தேடி போற பணக்காரங்களை பத்தி எனக்குக் கவலை இல்லை..ஆனா சில அப்பாவி பெண்கள்,இளைஞர்கள் இதனால பாதிக்கப்பட கூடாது…..நேத்து என்னோட டீம்  நடத்தின ஆபரேஷன்ல கூட சில சின்ன பசங்கள நாங்க பிடிச்சோம்…..அதான் வருத்தமான விசயம்…”

 

“ஓஹ்…அவங்களை என்ன செஞ்ச அப்…ஸரா மேடம்…?” என அபினவ் கேட்க

 

“மைனர் வேற..சோ கவுன்சிலிங் கொடுத்து பேரண்ட்ஸ்ட்ட சொல்லி அனுப்பிட்டோம்..மிஸ்டர் அபினவ்”

 

“சப்ளை செஞ்சவங்களைப் பத்தி எதாவது தகவல் தெரிஞ்சதா மேடம்..” என்று கவின் ஆர்வமாய்க் கேட்க

 

ஹோட்டலில் பிடிபட்டவனைப் பற்றி சொன்னவள்,

“முக்கியமா முன்னாடியெல்லாம் கடத்தல்னா இவங்க தான் டான் அப்படின்னு சில பேரை நம்மால சொல்ல முடியும்…ஆனா இப்போ இருக்க சமூக அமைப்புல குற்றங்கள் பெருகிடுச்சு..அரசின் அலட்சியம் அதனால குறைஞ்சுப் போன வேலைவாய்ப்பு..இதெல்லாம் ஒரு காரணமா இருந்தாலும் கூட தனிமனித ஒழுக்கம் என்பது இப்போ கேள்விக்குறியாகிடுச்சு..மாடர்ன் கலாச்சாரம்னு சொல்லு ஆண் பெண் பேதமில்லாம குடிக்கிறது சகஜமாச்சு……பணத்துக்காக மட்டுமே செய்றவங்களும் உண்டு…சிலர் சப்ளை செஞ்சு அது மூலமா வர காசுல தனக்கான போதைப்பொருளை தேடுறதும் நடக்குது…”

 

“அவங்களை பிடிக்க எதாவது ப்ளான் இருக்கா மேடம்..” என இம்முறை அப்ஸராவை சரியாக விளித்து கேட்டான் அபினவ்.

 

“ப்ளான் போட்டு பிடிக்கற அளவுக்கு இவங்களோட வலை அவ்வளவு சின்னதில்ல…பெரிய கடத்தல் மன்னனுக்கும் அடித்தட்டில சப்ளை செய்றவனுக்கும் இடையில 50 பேர் இருப்பான்..அண்ட் அந்த டான் ஒரு அரசியல்வாதியா சமூகத்துல அந்தஸ்துள்ள பிசினஸ் மேன் அப்படியா கூட இருக்கலாம்…இப்போ பெண்களும் கடத்தல்ல ஈடுபடுறாங்க……சோ கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்..கிட்ட தட்ட ஸ்லீப்பர் செல்ஸ் மாறிதான்…”

 

“ஆனா க்ளோஸா வாட்ச் செஞ்சதுல ஆன் continous investigation எங்களுக்குக் கிடைச்ச தகவல் படி சில குறிப்பிட்ட  இடங்கள்ல எங்களோட கண்காணிப்பு அதிகமாயிருக்கு…சோ கைய்ஸ் கேஸ் பத்தி அவசியமான எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன்..நம்மளோட அடுத்த டார்கெட் நடக்கப்போற கடத்தலை தடுக்கிறது…மீதியை எல்லாம் இந்த ஃபைல் பார்த்து தெரிஞ்சிகோங்க…” என்று விட்டு போனாள் அப்ஸரா.

 

அவள் சென்றதும் கேஸைப் பற்றி சிறிது நேரம் பேசிய கவினும் அபியும் அதன்பின் அப்ஸராவின் டீமில் இணைந்து அவள் சொன்ன வேலையை செய்தனர்.மாலை ஆனதும் தங்கையை அழைக்க அபினவ் அவளது கல்லூரிக்குப் போனான்.

 

அவனோடு பைக்கில் வரும்போது ,விஜி,”ஆமாடா அபி..நேத்து என்னை பளார் பளார்னு ஒரு பொண்ணு அடிச்சதே..அது யாரு?எனக்கு இன்னிக்கு தெளிஞ்ச பின்னாடிதான் ஞாபகம் வருது….அவளுக்கு என்ன கோவம் என் மேல…..உனக்குத் தெரிஞ்சவதானே…?” என சரியாக கேட்க

 

“அம்மு..அவ பேரு அப்ஸரா….ம்ஹூம்….என்னோட எக்ஸ் லவ்வர்….ஒரு பிரச்சனையால பிரேக் அப் ஆகிடுச்சு…அம்மாக்கும் அப்பாக்கும் அவளை நல்லா தெரியும்..நீ சின்னப்பொண்ணுன்னு அப்போ உன்ட்ட எதையும் நான் சொல்லல……..உன்னையும் அவளுக்குத் தெரியும்….சோ அம்மாவோட வளர்ப்பா இப்படின்னு கோபத்துல அடிச்சிருப்பா….அதான் நான் அவளை அடிச்சிட்டேனே டா…இன்னுமா கோவம் உனக்கு..அக்சுவலி என் மேல தான் தப்பு…..அவளை அதுவும் ஷி இஸ் எ போலிஸ் ஆஃபிசர்..அடிச்சிட்டேன்..” என வருந்த

 

“அடப்பாவி அண்ணா…அண்ணியா அவங்க…..சை அண்ணி முன்னால இமேஜ் டேமேஜ் ஆச்சே….”

 

“ஹே..!! அண்ணியெல்லாம் இல்ல….இப்போ நாங்க பிரிஞ்சிட்டோம்…..” என அவன் பதற,

 

“ஹலோ அண்ணா….அவங்க மாதிரி ஒரு ஆள் தான் எனக்கு அண்ணியா வேணும்..என்னை அடிக்க கூட ஆளில்லைன்னு நான் ஃபீல் பண்ணிருக்கேன்..அடிச்சாலும் அவங்களுக்கு என் மேல அக்கறை இருக்கு..நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன்..அவங்க தான் அண்ணின்னு..அவங்க உன்னோட எக்ஸா ஒய்யான்னு நான் சொல்றேன்..ஏன் பிரிஞ்சிங்கன்னு நீ சொல்லு முதல்ல…” என ஸ்டீரிக்டாக சொல்ல,

 

“வீட்டுக்குப் போனதும் சொல்றேன்..” என்றவன் வீட்டை அடைந்ததும் அவனது நெஞ்சம் கொண்டவளின் நினைவுகளை தங்கையிடம் பகிர்ந்து கொண்டான்.

Advertisement