Advertisement

பகுதி 3

“ஹே..!! நில்லுடி….இதான் ஒரு பொம்பளை புள்ள வீட்டுக்கு வர நேரமா..?மஹாலஷ்மி வரதுக்குள்ள வீடு வராட்டியும் பரவாயில்ல……இப்படி பேய் வர நேரத்துக்கா வரது..?” என அம்பிகா அத்தை சத்தம் போட

 

அப்ஸராவோ அவரை கண்டுகொள்ளாமல் செல்ல,

தனது தம்பியிடம்,”பார்த்தியா அரவிந்தா…சொன்னதை மதிக்காம போறா இவ..எல்லாம் நீ கொடுக்கிற இடம்…..” என படபடவென பொரிய,

 

அரவிந்தனோ , “ப்ச்..அக்கா..வந்தவுடனே இப்படி அவளை திட்டுவியா….?இப்போதான கலைச்சுப் போய் வரா…” என மகளுக்காகப் பரிந்து பேச ,

 

“ஆமாடா ஆமா..இப்போ பேசினா கலைச்சு களைதாங்கி வரான்னு சொல்லு காலையில பேசினா…..காலையில டென்ஷன் செய்யாதக்கான்னு சொல்லு…அப்போ எப்ப தான் டா நான் கண்டிக்கிறது.. நீயும் திட்ட மாட்ட…..என்னையும் பேச விடாதடா…பேசாம போலிஸ்காரம்மாட்ட ஆப்பாயின்மெண்டு வாங்கித் தா..” என திட்ட

 

“அக்கா….ப்ளீஸ்கா..பாக்கவே பாவமா இருக்கா..டயர்டா இருப்பா போல…விடு..அவளுக்கு சாப்பாடு எடுத்து வை…” என்றவர் டீவியை ஆஃப் செய்து விட்டு மகளுக்காக காத்திருந்தார்.

 

மேலே தனது அறைக்குச் சென்ற அப்ஸராவோ மனமெல்லாம் வலிக்க,கன்னத்தைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.வெகு மாதங்களுக்குப் பிறகு அபினவ்வை கண்டவள் மனம் அவனது நிராகரிப்பைப் , புறக்கணிப்பை நினைத்து வலிக்கவே செய்தது.அவனது தங்கையை அப்படி ஒரு நிலையில் கண்டதும் கோபம் தலைக்கேற அவள் செய்த தவறானது விஜியை அடித்ததே.ஆனால் அபி அவளை திருப்பி அடிப்பான் என்பது அவள் எதிர்ப்பாராத ஒன்று.அது அவளது சுயமரியாதையை வெகுவாக சீண்டி விட்ட்து.

 

உள்ளே நீறுப்பூத்த நெருப்பாய் இருந்த கோபத்தை இன்றைய நிகழ்வு இன்னும் பற்றி எரியச் செய்தது.இருந்தும் அந்த சூழ்னிலை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வழக்கில் கவனம் செலுத்தினாள்.ஆனால் மறுபடியும் வீட்டிற்கு வந்தவுடன் அபியின் நினைவும் அது தந்த வலியும் மனதில் தோன்ற சிறிதும் நேரம் அப்படியே ஹேங்காகும் அண்டராய்ட் போன் போல் இருந்தாள்.பின்னர் ஸ்வீட்ச் ஆஃப் செய்து விட்டு ரீஸ்டார்ட் செய்த போன் கணக்காய் எழுந்தவள் குளித்து விட்டு

நைட் பேண்ட் ஷர்ட் அணிந்தவள் கீழே சென்று தாயின் படத்தின் முன் நின்று  கண் மூடி வணங்கினாள்.ஏனோ இன்று கைகளெல்லாம் நடுங்கிற்று.

 

அவனை திருப்பி அடிக்க முடியாத இயலாமை சுயபச்சாதாபம் எல்லாம் சேர்ந்து அவளை அவள் மீது கோபம் கொள்ளச் செய்தது.எங்கே அழுது விடுவோமோ என பயந்தவள் திரும்பி

மாடிக்குச் செல்ல எத்த்னிக்க அவளை அதட்டலோடு எட்டியது அவளது அத்தை அம்பிகாவின் குரல்.

 

“சாப்பிட வாடி..” என அத்தை அழைக்க

 

“எனக்குப் பசியில்ல…நான் தூங்கப் போறேன்..” என்றவளை இழுத்து உட்கார வைத்து சாப்பாடை ஊட்டி விட தொடங்கினார் அம்பிகா.

 

“வேண்டாம் அத்த..”

 

“பிச்சுடுவேன் கழுத….ஒழுங்கா சாப்பிடு டி….போலிசா இருந்தா ரௌடிங்களை எல்லாம் அடிக்க தெம்பு வேண்டாம்….சாப்பிடு..” என இட்லியை வாயில் வைத்துத் திணித்தார்.

 

அப்ஸராவின் கண்கள் கலங்கி விட, “என்னடி ஏன் அழற…?” என அத்தை கேட்க

 

“நான் ஒன்னும் அழல….”

 

“ஏன்க்கா..அவ ஏன் அழற….என் பொண்ணு அழவே மாட்டா……நீ இப்படி மிளகாவ அள்ளிப்போட்டு காரமா சட்னி வைச்சா அழ மாட்டாளா… அவ…என்னடா அப்பு…?” என அரவிந்தன் மகளுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க

 

“அதானேப்பா இந்த அத்தைக்கு சமையலே தெரில…..காரம் ஜாஸ்தி…” என்றவளின் மண்டையில் குட்டியவர்,

 

“உங்க அப்பன் பெரிய செஃப் தாமு..நீ பெரிய ரேவதி சங்கரன்…சமைச்சு கிழிச்சிடுவீங்க பாரு..உப்புக்கும் சக்கரைக்கும் வித்யாசம்  தெரியாது பேசுதுங்க……சாப்பிடு டி..இளைச்சுப் போயிட்ட…….இட்லிக்கு வலிக்காதுடி..கொஞ்சம் நல்லாவே கடி…..” என்று மருமகளை அதட்டி உருட்டியவர் அவளை எப்படியோ போராடி நாலு இட்லிகள் சாப்பிட வைத்தார்.

 

சாப்பிட்டு விட்டு  கைகழுவி வந்தவள் ,அவளது அத்தை சோஃபாவில் அமர ,இவள் அவருக்கு கீழே தரையில் அமர்ந்து அவரின் மடி சாய்ந்தவள் ,

 

“அத்தை ரொம்ப தலைவலியா இருக்கு….இன்னிக்கு..எனக்கு தலைப் பிடிச்சு விடேன்..” என சொல்ல

 

“இருடி..” என்றவர் எழுந்து சென்று ஆலிவ் எண்ணெய் எடுத்து வந்து அவளது தலையில் மிருதுவாய்த் தேய்த்துப் பிடித்து விட்டார்.

 

“அப்படி தலைவலிக்கிற அளவு என்னடி கேஸ்…..ராஜாத்தி…”

 

அவள் கேசைப் பற்றி சொல்ல,

 

“ஆத்தாடி ஆத்தே…தம்துண்டு வயசில இப்படியா புள்ளையோ இருக்குதுவோ……என் தம்பிக்கெல்லாம்  அந்த காலத்துல பஸ்ல போக கூட காஸு கிடையாது…நாலஞ்சு மைல்லு நடந்தே போய் படிச்சான்….இப்போ இருக்க பிள்ளைங்களுக்கு எல்லாமே ஈசியா கிடைக்குது.நல்லது கெட்டதுன்னு வரைமுறையெல்லாம் இல்லாம போச்சு….” என புலம்ப துவங்க

 

“அவளே கேஸ் பத்தி யோசிச்சு தலைவலிக்குதுன்னா..நீயும் அதே பேசுவியாக்கா….அவளை விடு….” என்று அரவிந்தன் சொல்ல ,அனைவரும் உறங்க சென்றனர்.

 

தனது தந்தையின் அறைக்கதவைத் தட்டியவள் , “அப்பா எனக்கு உன்ட்ட பேசனும்பா…” என்றாள் கண்கள் கலங்க,அதை எதிர்ப்பார்த்த அரவிந்தன் ,

 

“வாடா அப்புக்குட்டி.. அப்போமே அப்பா பார்த்தேன்..வா..” என்றவர் அவளை அழைத்துச் சென்று கட்டிலில் உட்கார,

தந்தையின் மடி சாய்ந்தாள் அப்ஸரா.

 

அப்ஸரா பிறந்த சில மாதங்களிலேயே அவளது தாய் இறந்து விட,அரவிந்தன் தான் அவளுக்கு அனைத்துமாகிப் போனார்.மகளுக்காக தான் பார்த்துக் கொண்டிருந்த போலிஸ் வேலையைக் கூட விட்டு விட்டு தனியாக பிஸீனஸ் தொடங்கினார்.

 

அப்ஸரா வெளியே என்ன தான் தைரியமாக இருந்தாலும் தந்தை என்று வரும்போது அவரிடம் குழந்தையாக மாறிவிடுவாள்.அவரிடம் இது நாள் வரை அவள் எதையும் மறைத்ததில்லை .அப்படியே மறைக்க முயன்றாலும் அவள் முகமே காட்டிக் கொடுத்து விடும்.

 

“என்னாச்சு அப்பு….ஏன் அழற..” என மகளின் தலைக்கோதியவாறே அவர் கேட்க,

 

“நான் அபியைப் பார்த்தேன்பா…” என்றவள் ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூற,மகளை அவன் அடித்தான் என்பதை விட மகள் எப்ப்டி அடிவாங்கி விட்டு வந்தால் என்பது தான் அவருக்கு ஆச்சரியம்,அதிர்ச்சி எல்லாம்.

 

“நீ அவனை சும்மாவா விட்ட அப்பும்மா.?”

 

“ஆமாம்பா…..நான் அவனோட வேலைக்கு மரியாதைக் கொடுத்து அமைதியா இருந்துட்டேன் மோரோவர் எனக்கு பயங்கர ஷாக்…எப்படிப்பா அவன் என்னை அடிக்கலாம்..அவன் தங்கையை அடிச்சது தப்புதான்..ஆனா அவங்க அம்மா எப்படி வளர்த்தாங்க தெரியுமா..அவ போய் அப்ப்டி ஒரு நிலைமையில….பார்த்தப்போ தாங்கல..அதான் அடிச்சேன்..அவ செஞ்சது தப்புதானே..ஆனா அவன் என்னை அடிக்கிறான்பா….ஹௌ டேர் ஹி இஸ்..” என்றாள் ஆத்திரமும் அழுகையுமாய்.

 

“விடுடா அப்பு…ஏதோ தெரியாம செஞ்சுட்டான்……உனக்கே அவளை பார்த்து அதிர்ச்சின்னா..அவனுக்கு இருக்காதா…அவனோட சொந்த சிஸ்டர் வேற..அவனுக்கு இப்படின்னு தெரிஞ்சா விட்ருப்பான்..?அவனுக்கும் ஷாக்கா இருந்திருக்கும்….அதை நீ பார்த்தங்கேறதால அவமானமா ஃபீல் பண்ணியிருப்பான்…அந்த பொண்ணை அடிச்சதும் எல்லா கோபத்தையும் உன் மேல காட்டிட்டான்…” என மகளுக்கு அவர் விளக்கம் சொல்லி சமாதானம் செய்ய

 

“போப்பா….என் மேல கோவத்தைக் காட்ட அவன் யாரு…?எனக்குத் திருப்பி அடிக்க எவ்வளவு நேரமாகும்..நானும் அவனை மாதிரி படிச்சு தானே போலிஸ் ஆனேன்..என்னோட வேலைக்கு அவன் மரியாதை கொடுக்க மாட்டானா..?என்னை அவன் அப்போ இப்போ எப்போமே ரெஸ்பக்ட் செஞ்சதில்லைப்பா..” என வருத்தமாய் சொல்ல

 

“அப்புக்குட்டி..விடுடா…இப்போ உனக்கு மட்டும் அந்த பொண்ணை அடிக்க என்ன உரிமை இருக்கு..ஏதோ கோபம்..அடிச்சல..அதே மாதிரி தான்..கோபம் வந்தா கொள்கைகள்லாம் மறைஞ்சிடும்டா..அப்போ மகாத்மாவே  இருந்தாலும் தடுமாற்றம் தான் வரும்..அப்பா சொல்றதைக் கேளு..அவன் செஞ்சது தப்புன்னா..நீ செஞ்சதும் தப்பு தான்…பொது இடத்துல நீ ஏன் அடிச்ச…அதான் அவனை தூண்டி விட்டுருக்கு…விடு…..ஜஸ்ட் லீவ் இட்..மண்டையில எல்லாத்தையும் ஏத்துன்னா கஷ்டம்…சில சிமயம் இக்னோர் செய்றதுதான் பெட்டர்…எனக்கு என் பொன்ணோட நிம்மதி தான் முக்கியம்…சோ லீவ் டா”

 

“அவனுக்கு நான்னா எளக்காரம் தான்ப்பா….ராஸ்கல்……அவளை கண்டிச்சு வளர்க்க முடியல..என்னை அடிக்க வரான்..” என அவள் பொறும

 

“இதான்..இப்படி உன் முன்னாடி தலை குனிஞ்ச தால தான் அவனுக்கு கோபம்…புரியுதா…?இப்போ எதையும் யோசிக்காம போய் தூங்கு……அப்பு…..” என சொல்லி மகளது நெற்றியில் முத்தமிட,அவளும் தந்தையிடம் எல்லாவற்றையும் கொட்டி விட்டோம் என்ற  நிம்மதியில் உறங்கப்போனாள்.

 

மகளை எதையும் யோசிக்காதே என்று சொன்ன அரவிந்தன்  மகளது எதிர்காலம் பற்றி யோசிக்கத் தொடங்கினார்.எல்லாத்தையும் விடு என சொன்னவர் விடாமல் மகளின்  நலனை சிந்தித்தவாறே உறங்கிப் போனார்.

 

********************************************

இரவு பன்னிரெண்டு மணியளவில் விஜிக்குப் பசியெடுக்க கிச்சனில் வந்து பாத்திரங்களை உருட்டினாள்.அந்த சத்தம் கேட்டு விழித்த அபி,

 

“என்னடா வேணும்…” என பதறி எழுந்து கேட்க

 

“ப…சி..க்குதுண்ணா” என விஜி சொல்லவும் இரவில் இருவரும் வெறும் வயிற்றோடு தூங்கியது நினைவு வர, வேகமாக கிச்சனுக்குள் சென்றவன் ப்ரேட்டை எடுத்து சாண்ட்விச் செய்து கொடுத்தான்.

 

அவள் ஹாலில் அமர்ந்திருக்க அவளருகில் கொண்டு போய் தட்டை வைத்து ,”சாப்பிடு விஜிமா…” என சொல்ல அவளோ  தேம்பி தேம்பி அழுதாள்.

 

“ஐயோ என்னடா விஜிமா…அம்மு..அழாதடா…….முதல்ல சாப்பிடு…” என்று அவனது சமாதானத்துக்கெல்லாம் செவி சாய்க்காமல் அழ

 

அவளை தோளோடு சேர்த்தணைத்தவன் ,” என்னடா ஆச்சு..ஒன்னுமில்ல…..அழாம சாப்பிடு..”

 

“சாரிண்ணா….இதை நான் எவ்வளவு மிஸ் செஞ்சேன் தெரியுமா……இப்படி சாப்பிடு விஜிமான்னு யாரும் சொன்னதே இல்ல…அம்மாப்பாக்குப் பின்னாடி….நீ கூட சொல்லல……இப்போ அம்மா அப்பா நியாயபகம் வந்திடுச்சு……” என அழ

 

“அம்மு….அழாதடா…ஏற்கனவே உன்னை அழ விட்டுட்டேன்னு எனக்கு வருத்தம்..இன்னும் அழாதம்மா….”

 

“ஐ மிஸ் யூ அபி……….இப்படி நீ எங்கிட்ட பேசியே எவ்வளவு நாளாச்சு தெரியுமா….”

 

“நான் பேசலன்னா ஏன் பேசலன்னு சண்டை போடனும் அம்மு..இப்படி தான் செய்வியா…?” என கொஞ்சம் கோபத்தோடு கேட்க

 

“சாரிண்ணா..வெரி வெரி சாரி…ரொம்ப கஷ்டமாயிருந்ததா…..யாருமே எனக்குன்னு இல்லன்னு ஃபீல்லாச்சா…….அதான்……..இப்போ ஒரு வாரமாதான்…என்னால தூங்க முடியலன்னா…..பயமா இருக்கு…இப்படி குடிச்சிட்டா எதையும் நினைக்காம நிம்மதியா தூங்க முடிஞ்சது…அதான்…”

 

“அதுக்காக குடிச்சிட்டு உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா…குடிபோதையில எதாவது தப்பா நடக்க வாய்ப்பிருக்குல…….நீயே உன்  ஹெல்த்தை ஸ்பாயில் செஞ்சிக்கலாமா…?”

 

“தப்புதான்….என்னோட மூளைக்குப் புரிஞ்சது…..ஆனா மனசுக்குப் புரியலயே..இன்னிக்குக் கூட கேஸ் விசயமா தான நீ அங்க வந்திருப்ப..இல்லனா இன்னிக்கும் என்னை பார்த்திருக்க மாட்ட…..என்னை  நீ மறந்துட்ட…பிரதீப்பை எனக்கு ரொம்ப பிடிக்கும்..அவனும் என்னை அவாய்ட் செஞ்சான்னா….ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….அதான்…..அம்மா அப்பா நியாயபகம் வேற இங்க வீட்டுக்கு வந்த்தும் அதிகமாயிச்சு…..இப்படி சாப்பிடு விஜின்னு சொல்லக்கூட ஆள் இல்ல…..”

 

அபியோ பேசாமல் தங்கை மனதில் இருப்பதைக் கொட்டட்டும் என அமைதியாய் இருந்தான்.

 

“நீயோ  நான் எந்திரிக்க முன்னாடி போயிடுவ..இல்ல.. நான் முழிச்சிருக்கப்போ நீ தூங்கிட்டுருப்ப….நைட்டும் உன்னைப் பார்க்க முடியாது..யார்ட்டவாது சாப்பாடு வாங்கி கொடுப்ப..இல்ல…அதையும் மறந்துடுவ……என் நினைப்பு உனக்கே இல்லவே இல்ல…” என சிறுபிள்ளையாய் அழ

 

“அப்படி கிடையாது அம்மு……முதல்ல அண்ணாக்கு கொஞ்சம் ஃபினான்சியல்லா ஸ்டேபிள் ஆகனும்னு உன்னை விட்டுட்டேன்…வேலைக் கிடைச்ச பின்னாடி கூட என்னோட ஓட்டத்தை நிறுத்த முடியல…என் வேலை அப்படி….உன்னை மறப்பேனாடா அண்ணா…ம்..நேரம் இல்ல…நானும் நீ பெரிய பொண்ணாகிட்ட உன்னை நீயே பார்த்துப்பேன்னு சொல்லி விட்டேன்..ஆனா என் அம்மு இன்னும் சின்ன பாப்பா தான் எனக்குப் புரிய இத்தனை நாளாச்சு..” என அவன் தனது நிலையை விளக்கி,

 

“இனிமே இப்படி   நடக்காது அம்மு…சரியா….அண்ணா உன்னை நல்லா பார்த்துப்பேன்…அம்மா அப்பா என்னை உன்னை நம்பி விட்டு போயிருக்காங்க..அந்த நம்பிக்கையை இனிமேவாது நான் சரியா காப்பாத்துவேன்..” என உணர்ச்சி வசப்பட்டு பேச

 

“சாரிண்ணா…நான் ஏதோ ஒரு கோவம்..என் மேலயே ஒரு கோபம்……எதையுமே பிடிக்கல…அதான் இப்படி செஞ்சிட்டேன்..இனிமே இப்படி செய்யமாட்டேன்..” என்றவளை தட்டிக் கொடுத்தவன் ,

 

“சாப்பிடுடா….இனி இதை மறந்திடு..இப்படி ஒரு சம்பவம் பழக்கமிருந்ததே உனக்கு  இருக்க கூடாது…ஓகேவா…இப்போ சாப்பிட்டு தூங்கு….” என சொல்ல

 

“நீயும் சாப்பிடுடா.அபி” என்றாள் பாசமாக.

 

தங்கையின் அன்பில் நெகிழ்ந்தவன் இனிமேல் இவளை தனியே விட கூடாது முக்கியமாய் தனிமையில் விடக்கூடாது எனது தீர்மானித்துக் கொண்டான்.

அடுத்த நாள் ஒரு அழகான விடியலுக்காக,ஒரு சாக்லெட் சர்ப்பரைஸோடு அபினவுக்காய் காத்திருந்தது.

Advertisement