Advertisement

பகுதி 10

“ஆமாடா..நீ சொல்றது கரெக்ட் தான்…அப்பாவை திட்டிட்டேன்னு கோவம் எனக்கு….அப்பா தான் டா எல்லாமே…சின்ன வயசிலேர்ந்து அம்மா இல்லன்னு ஃபீல் பண்ணினதே இல்ல…..ஸ்கூல்ல சில பேரோட அம்மாவைப் பார்க்கும்போது முதல்ல கஷ்டமா இருந்துச்சு…ஆனா நாளாக நாளாக…அவரே எனக்கு அம்மாவாவும் அப்பாவாவும் இருந்தார்டா….அம்மா இருந்திருந்தா எப்படி பார்த்துட்டு இருந்திருப்பாங்கன்னு தெரியல…ஆனா என்னோட அப்பாவை விட யாரும் என்னை பெட்டரா பார்த்துக்க முடியாது…”

 

“நானுமா. என்ன.? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என அவன் இதழ்க்கடையில் உதித்த புன்னகையோட கேட்க

 

“தெரியலயே…நீதான் சொல்லனும் எப்படி பார்த்துப்பன்னு”

 

“சொல்லமாட்டேன் செய்வேன்…” என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.அவனது அணைப்பில் இருந்தவள் தனது மெர்குரி கண்களை அவன் கண்களோடு கலக்க விட்டபடி ,

 

”ஆமா….உன்ட்ட நான் நிறையா எதிர்ப்பார்த்தேன் டா..நான் சமாதானம் ஆனதும்….நீ ரொம்ப சந்தோசப்படுவே அப்படின்னு…உனக்கு என் மேல இன்னும் கோவமா….அன்னிக்கு விஜியை அடிச்சது தப்பு….ஐ வில் ஆஸ்க் சாரி டூ ஹெர்..அவளை அப்படி பார்க்க முடியல..அதான் டா…அது மட்டுமில்லாம அங்க வேலைப்பார்த்தவன் தான் போதை மருந்தை மத்த டிரிங்க்ஸோட கலந்து சப்ளை செஞ்சான்…அவ சின்னப்பொண்ணு வேற..அவளை யாராவது  மிஸ்யூஸ் பண்ணிருந்தாங்கன்னா….அந்த பயம் தான்…” என கண்களில் கலவரத்தோடு சொல்ல,அதை உணர்ந்தவன்

 

“ஏய்….லூசு…அதெல்லாம் ஒன்னுமில்ல…நீ சொல்றது சரிதான்….அன்னிக்கு அவளைப் பார்த்த அதிர்ச்சி..உன் முன்னாடி நான் தலைகுனிஞ்சிட்டேனே…அப்படின்னு கோவம்….ஐ அம் சாரி…இப்போ எல்லாம் சரியாயிடுச்சு…”என்று விஜிக்கும் பிரதீப்புக்குமான காதல் கல்யாணம் பற்றி எல்லாம் சொல்ல அப்ஸராவுக்கு மகிழ்ச்சி.

 

“நமக்காக அடுத்தவங்க யோசிக்கனும்னு நினைக்காம அடுத்தவங்களுக்காக நாம யோசிச்சா ப்ராப்ளம் சால்வ்ட்ல……சாரிடா உன்னோட கஷ்டத்தை நான் யோசிக்கவே இல்லை..என்னோட கஷ்டம் தான் எனக்குப் பெருசா தெரிஞ்சது” என உண்மையை ஒப்புக்கொள்ள,

 

“சீ…லூசு அதெல்லாம் இல்லடி..நானுமே எனக்காகத்தானே யோசிச்சதேன்……இப்போ அதுக்கு அதெல்லாம்..விடு”

 

“ மன்னிச்சேன் மறந்தேன்னு சொன்னாலும் உன்ட்ட பிரகாசம்..கண்ணில் ஒரு ஒளி எதுவும் தெரிலயேடா..” என அவள் குறைபட

 

“அய்யோ…..இன்வெஸ்டிகேஷனை நிறுத்துடி….. நானே சொல்லிடுறேன்….தீடீர்னு நீ சொன்னா எனக்கு சர்ப்ப்ரைஸா இருந்திருக்கும்…ஆனா எனக்குத் தான் மாமனார் நேத்து நைட்டே போன் செஞ்சு சொல்லிட்டாரே…அப்போ அந்த நிமிசம் மனசுக்குள்ள ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவெல்லாம் வந்துட்டுதான் போனாங்க…திரும்பியும் சொல்லும்போது நீ இன்னும் கொஞ்சம் பெட்டரா இறுக்கியணைச்சு ஒரு உம்மா கொடுத்து சொல்லியிருந்த பிரகாசம் பூவாசமெல்லாம் தெரிஞ்சிருக்கும்…”

 

“அடப்பாவி கூட்டுக் களவாணிகளா..அப்பா சொல்லவே இல்ல தெரியுமா..என்ட்ட…..யூ..” என அவனை அடிக்க அவனோ அவளை புன்னகையோடு இன்னும் இறுக்கினான்.

 

பின்னர் இருவரும் ஜோடியாக வீட்டிற்குச் செல்ல , அரவிந்தனுக்கும் அம்பிகாவும் மிகுந்த மகிழ்ச்சி.அனைவரும் அமர்ந்து சந்தோசமாகப் பேசிக்கொண்டிருக்க , அப்ஸராவுக்கு சுரேஷிடமிருந்து போன்.போன் பேசிய பின் அவள் முகம் கடுகடுவென இருக்க,என்னெவென்று அபி விசாரிக்க

 

“அந்த குடோன் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் எக்ஸ் மினிஸ்டர் பரந்தாமனோடதுதான் டா அபி…ஆனா இன்னிக்கு எஸ்பி வந்து ப்ரஸை கூப்பிட்டு சொல்றாராம் அது அவர் பேர்லையே இல்ல….எவனோ ஒரு கையாளை வைச்சு அவன் பேர்ல இருக்க மாதிரி பேப்பர்ஸை செட் பண்ணிருக்கானுங்க…ப்ராடுங்க….அப்புறம் எதுக்குடா நம்ம இப்படி கஷ்டப்பட்டோம்..” என வருந்த

 

“விடு அப்பு….எஸ் பிக்கு ப்ர்ஷர் இருந்திருக்கும்..மினிஸ்டர் லெவல் வேறலடா…சுரேந்தர் சிவா ப்ர்ண்ட் தான்..அவர் நேர்மையானவர் தான்…” என அரவிந்தன் சமாதானம் சொல்ல

 

“இல்ல அங்கிள்..எனக்காவது பரவாயில்ல இப்போதான் இந்த டிபார்ட்மெண்ட் வந்தேன்..ஆனா இவ இத்தனை நாளா இதுக்காக உழைச்சிருக்கா….எனக்கே கோவம் வருது அங்கிள்……அந்த எக்ஸ் மினிஸ்டர் எங்களை கொல்ல செய்ய பார்த்தான்….அப்போ எங்க உழைப்புக்கு என்ன மரியாதை..கவினோட உயிர் கொஞ்சம் மிஸ்ஸான போயிருக்கும்…..”

 

“அதானே அப்போ இவங்க பட்ட கஷ்டமெல்லாம் வீண் தானே…போலிஸ்காரங்க கஷ்டப்பட்டு ராவு பகல் பாராம கண் முழிச்சு…..வேலைப் பார்த்து குற்றவாளியைக் கண்டுபிடிச்சா இப்படி ஈசியா தப்பிச்சிப்போடுறானுங்க…அப்புறம்….மக்கள் எல்லாம் போலிஸ்காரங்க சரியில்லன்னு சொல்ற நிலைமையாகிப்போவுது..” என அம்பிகா தனது ஆதங்கத்தைக் கொட்ட

 

“புரியுது ஆனா எப்பவுமே சட்டம் தனது கடமையை செய்யனும்….இப்படி தப்பிச்சுப் போயிடுறாங்கன்னு குற்றத்தை தடுக்காம இருந்தா பெருகித்தான் போகும்….இப்போ வீட்ல என்னதான் பாதுகாப்பு இருந்தாலும் கொசு வராமயா இருக்கு..ஆனாலும்  நம்ம முடிஞ்ச வரைக்கும் அதுக்கான பாதுகாப்பா ஏற்பாடா நம்மளைக் காத்துக்க வலை,கொசுவர்த்தியெல்லாம் வைச்சிருக்கோம்ல…வா கொசு வந்து கடிச்சிக்கோன்னா நாம சொல்றோம்….காந்தியடிகள் சொன்ன மாதிரி be the change you wish..அதான்…எது மாறனும்னு நினைக்கிறீங்களோ அப்போ முதல்ல அந்த மாற்றத்தை உங்க கிட்ட கொண்டு வாங்க……முடிஞ்ச வரைக்கும் உங்க கடமையை செய்யனும்…தோல்வி வந்துடுச்சுன்னு நாம நம்ம கடமையிலேர்ந்து பின் வாங்க கூடாது…”

 

“இப்போ ஜெயிலுக்குப் போற பெரிய கிரிமினல்ஸ் தாதா…ஸ்மக்ளர்ஸ்லாம் வெளியே வந்ததும் திருந்திடுறாங்களா என்ன..?முக்கால்வாசி.பேர் திரும்பவும் அதே தப்பைத்தான் செய்றாங்க…..ஊழல்ல மாட்டின அரசியல்வாதி கூட திரும்பியும் ஊழல் தான் செய்வான்….சொல்லப்போனா இன்னும் திறமையா செய்வாங்க….தப்பு செய்றவங்களே அதை தெளிவா நேர்த்தியா செய்றாங்க..தப்பை சரியா செய்றவன் தான் தப்பிக்கிறான்..அப்போ நீங்க சரியானதை எவ்வளவு சரியா செய்யனும்….வெளியே வராதபடி எவிடன்ஸ் திரட்டனும்…..” என்று அரவிந்தன் கூற இருவரும் மண்டையை ஆட்டினர்.

 

“இது அந்த மினிஸ்டர் மட்டும் சம்மந்தப்பட்ட விசயமில்ல….அப்பு சொன்னதை வைச்சு பார்த்தா இந்த போதைப்பொருள் விசயத்துல பெரிய நெட்வோர்க்..இண்டர் நேஷனல் லெவல் நெட்வொர்க் இருக்கு……முன்னாடியெல்லாம் ஊர்ல ஒருத்தன் தான் குடிகாரன் இருப்பான்..அவனும் ஊருக்குத் தெரியாமதான் திருட்டுத்தனமா குடிப்பான்…கள்ளச்சாராயம் காய்ச்சினப்போ கூட உயிருக்குப் பயந்தவனெல்லாம் குடிக்கல..இப்பவோ அரசாங்கமே டாஸ்மாக்கை லீகலா ஓபன் பண்ணி குடிக்க வைக்குது….குடிக்கறது ஃபேஷன் ஆயிடுச்சு…..நம்ம கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமா அழிவை நோக்கி போகுது..அதை தெரிஞ்சட்ட போதை மருந்து மார்க்கெட்…இன்னும் தன்னாலான அளவு நம்மளைக் கெடுக்கப் பார்த்து லாபம் பார்க்குது….” என நீண்ட விளக்கம் கொடுத்தார் அரவிந்தன்.தானும் ஒரு போலிஸ் என  நிரூபித்தார்.

 

“நீங்க சொல்றது சரி தான் அங்கிள்…..”

 

“ஆமாம்பா நீ சொல்றது சரிதான்….ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்க கூட குடிக்கிறாங்கப்பா…ரொம்ப கஷ்டமா இருக்கு….ஏதோ கெத்தா ஒரு சீன் காட்ட குடிக்கிறாங்க..சீரியஸ்னேஸே இல்லைப்பா…”

 

“நானெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது ஜூஸ் குடிக்கனும்னா கூட எங்கம்மாவைத் தான் கேட்பேன்…ஹூம்…” என அவன் பெருமூச்சு விட

 

“இனிமேலும் ஜூஸ் குடிக்கனும்னா கூட என் பெர்மிஷன் தான் வேணும் அபி..” என அப்ஸரா கண்களை உருட்டி மிரட்ட அங்கே நகைப்போலி பரவியது.

 

“என்னடி குந்தாணி தம்பியை மிரட்டுற..?” என அம்பிகா அதட்ட

 

“அத்த……………” என அவள் பல்லைக் கடித்தாள்.

 

“ஹா ஹா குந்தாணியா……” என அபி சிரிக்க சிறிது நேர அளாவலுக்குப் பின் அலுவலகம் செல்ல,

 

அப்ஸரா உடனே எஸ்பியின் அறைக்குள் சென்று , “உங்க கிட்ட நன் இதை எதிர்ப்பார்க்கல சார்….” என தன்  கோபத்தை வெளிக்காட்ட அபியும் அவள் பின்னோடு சென்றான்.

 

“உனக்கு என் மேல கோவமா அப்ஸரா..டெல் மீ?” என அவர் கேட்க

 

அவளும் தயங்காது ,”எஸ் சார்” என்றாள்.

 

“உங்களை விட எனக்கு என் மேல கோவம் ஜாஸ்தியாதான்…..இருக்கு…..பட்……என்ன செய்ய நானும்…..பரந்தாமனுக்கு செல்வாக்கு ஜாஸ்தி….அவங்க கட்சி தான் சென்ட்ர்ல்ல இருக்கு…..ஒன்னும் செய்ய முடியாதுமா….எனக்கே இந்த வேலையில இருபத்தைந்து வருச செர்வீஸ் இருக்கு…உன்னை மாதிரியும் அபினவ் மாதிரியும் கோவமெல்லாம் உண்டு தான்…ஆனாலும் சில நேரங்களில் நாம அரசாங்கத்துக்கு அடங்க வேண்டியதாகிறது……நம்ம புராணங்கள்ல பார்த்தாலே ஒரு அசுரன் மட்டுமா இருந்தான்.ராவணன்,இரணியன்,சூரன்,கம்சன்னு எத்தனை பேர்…..ஒரே முறையில் அவங்க அழிஞ்சாங்களா என்ன..?”

 

“ஒவ்வொரு தடவையும் புதுசா ஒருத்தன் முளைச்சிட்டே இருக்க…கடவுள் அவதாரம் எடுத்துதான் காப்பாத்தினார்…ஏன் கடவுள் தன்னோட சுயத்தால அவங்களை அழிக்காம அவதாரம் எடுத்தார்….?அந்த அசுரர்கள்ட்ட இருந்த வரம் அப்படி..அப்படிதான் அரசியல்வாதிகளும்…அவங்க கையில ஆட்சி இருக்கு….எப்படியும் ஒரு நாள் சம்ஹாரம் நடக்கும்……… நான் தனியா துரோகம் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன்…என்னால முடிஞ்ச நல்லதை செய்யாட்டாலும் தப்பை செய்யாம இருக்கேன்…” என அவர் சொல்ல அதை ஆமோதித்தவர்கள் ,

 

“சாரி சார்…நாங்களும் எங்களால முடிஞ்ச நல்லதை செய்வோம் சார்..ஒரு நாள் இது எல்லாத்துக்கும் முடிவு கட்டுவோம்னு நம்புறோம் சார்….தாங்க் யூ..” என்றபடி விரைப்பாய் ஒரு சல்யூட் வைத்தனர்.

 

***********************************************************************************

ஒரு மாதம் கழித்து தம்பதி சமேதராய் அப்ஸராவும் அபினவும் விஜிக்கும் பிரதீப்புக்கும் திருமணம் செய்து வைத்தனர்.முதலில் அபிக்கும் அப்ஸராவுக்கும் திருமணம் நடக்க, தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து விஜிக்குத் திருமணம் செய்வித்தனர்.

 

அபியே ஒரு நாள் அப்ஸராவிடம் வந்து , “உன் ரூம்ல உள்ள கப்போர்ட்ல எனக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் ஒதுக்கித் தா…” என சொல்ல அவளோ புரியாத பார்வை பார்த்தாள்.

 

“என்னடா…அங்கயே வந்து டேரா போட போறவன் மாறி சொல்ற..”

 

“கல்யாணமான புகுந்த வீட்டுக்குப் பொண்ணுங்க தான் போகனுமா…நானெல்லாம் வரக்கூடாதா…..”

 

“வீட்டோட மாப்பிள்ளையாவாடா?” என்றவளின் தலையில் நறுக்கென குட்டியவன்,

 

“வாய் மேலயே போடுவேன்…அது என்ன வீட்டோட மாப்பிள்ளை…..வீட்டோட மருமகனு சொல்றாங்களா…என்ன…? நான் இனிமே அங்க வந்து தான் உங்கூட இருக்கப்போறேன்…” என்றவனை அவள் கண்கலங்க ஏறிட

 

“ஏன் டி ஆப்போசிட் ரியாக்ஷன் தர……இறுக்கி அணைச்சு…ஒரு உம்…” என்றவனை நிஜமாகவே இறுக்கியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் அப்ஸரா.

 

“தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் சோ மச்……டா…அப்பாவை விட்டு எப்படி வரதுன்னு அழுதேன் தெரியுமா….உன்ட்ட சொல்லவும் பயம்….எங்க உன்னோட செல்ஃப் ரெஸ்பெக்டை  நான் கொச்சைப்படுத்துறதா நீ நினைச்சிடுவியோன்னு…..நீ ரொம்ப ரொம்ப குட் பாய் தான்…ஐ லவ் யூ லவ் யூ சோஓஓஓஓஓஓஓஓஓஓ மச்……” என உணர்ச்சிப்பூர்வமாய் சொல்ல

 

“என்ட்ட சொல்ல என்ன பயம்டா அப்புக்குட்டி…..இனிமே நீதானடி எனக்கு எல்லாமே…..என்னோட  நெஞ்சுக்கு  நிம்மதி தரவ நீ….உன்னை தான் இந்த அஞ்சு வருசத்துல  ரொம்ப மிஸ் பண்ணினேன்……அங்க இதே என்னோட அம்மா அப்பா இருந்திருந்தா உனக்கு புது உறவைத் தர அழைச்சிட்டுப் போயிருப்பேன்..கல்யாணம் செய்றது உறவுகளை உருவாக்கதானே…..அப்போ உன்னை ஏன் நான் உன்னோட உறவுகள்ட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிப்போகனும்….எனக்கு ஒரு அன்பான மாமனார்,பாசமான பெரியம்மா கிடைச்சிருக்காங்க..அது உன்னாலதான்..சோ உனக்கு தான் தேங்க்ஸ்…..”

 

அவனை இன்னும் இன்னும் அதிகமாய்ப் பிடித்துப் போனது.அரவிந்தனிடம் இவ்விடயத்தைக் கூற அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மனிதர் கண்கலங்க அபினவுக்கு நன்றியுரைத்தார்.

 

அபிக்கு தெரியும் பிரிவின் வலி எத்தனை கொடியது என்று.அவனுக்காவது தாயும் தந்தையும் இருபத்தொறு வயது வரை உடனிருந்தனர்.ஆனால் அப்ஸராவுக்கோ அவளது தந்தை மட்டும் தானே.அவரோடு அவள் எவ்வளவு அட்டாச்ட் என்று தெரிந்தவனுக்கு அவர்களை பிரிக்க மனமில்லை.அதை விட அவனுமே உறவுக்காக ஏங்கிப்போயிருந்தான்.அதனாலயே அவன் இப்படி முடிவு செய்தது.

 

திருமண நாளன்று இரவு பிரதீப் அபிக்குப் போன் செய்ய ,

“என்னடா இந்த நேரத்துல போன்…”

 

“போர் அடிச்சது டா அபி..அதான்..”

 

“டேய்….திட்டிடுவேன் டா…..இன்னிக்கு போய் உனக்கு போர் அடிக்குமா..?

 

“பின்ன…என் பொண்டாட்டியும் அம்மாவும் ஒன்னா படுக்க போயிட்டாங்க..நான் தனியா இருக்கேன் டா….”

 

“என்னடா சொல்ற….?” என அபி அதிர்ச்சியாக கேட்க

 

“ஹே..!! ஹே..! சீரியஸ் ஆகாதடா….அவ படிப்பு முடியட்டும்….அதுக்காக வெயிடீங்க்…அம்மாவோட ஆர்டர்..எனக்கும் அதான் விருப்பம்…விஜியும்  அதே தான் சொன்னா…ஆனா பேச மட்டும் செய்றோம்னு சொன்னதுக்கு வேண்டாம் வேண்டாம்னு அலறுறாடா உன் தொங்கச்சி…….”

 

“சரி சரி விடுடா…உனக்கு வாய்ச்சது….அவ்வளவுதான்…” என கேலி செய்தவன்

 

“ரொம்ப தேங்க்ஸ்டா தீப்ஸ்….என்னோட கடமை எங்கப்பா அம்மாவோட ஆசை…எல்லாத்தையும் நிறைவேத்திட்ட..உன்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க நான் கொடுத்த வைச்சிருக்கனும்…”

 

“டேய்..மச்சான்.. நான் அப்ஸரா இல்லடா…..டயலாக் டெலிவரி தப்பா செய்ற..”

 

“ நீ என்னதான் கிண்டல் செஞ்சாலும் ஐ லவ் யூ டா தீபு…” என சொல்ல , அவனை முறைத்தபடி நின்றாள் அப்ஸரா.

 

“ஹே..!!அப்புக்குட்டி நான் இவன்….தீப்…பிரதீப்பை சொன்னேன்டி…..” என இவன் சொல்ல அந்தப்பக்கம் பிரதீப்போ விழுந்து விழுந்து சிரித்தபடி போனை வைத்தான்.

 

“ஏன் டா……..நீ என்ட்டயே ஐ லவ் யூ அதிகமாக சொல்லமாட்ட…அப்படியே வேற ஒருத்தங்கள்ட்ட சொல்லிட்டாலும்… நீ ரொம்ப சமத்துடா புருஷா……” என்றவளை அணைக்க,அவள் அவனை தள்ளிவிட்டு ,

 

“இந்த நேரத்துல போய் அவங்களை போன் செஞ்சு டிஸ்டர்ப் செய்றியா டா…?”

 

“அடியே…..அப்பு அவன் தாண்டி போன் செஞ்சான்.நீ வேற…..” என்று கதையை சொல்ல ,

 

“ரொம்ப நல்லவர்டா…..இல்ல..விஜிம்மா ஹாப்பியா இருப்பா இல்ல….நிம்மதியா இருக்குடா இப்போ….”என்றவளை அணைத்தவன்

 

அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு ,”தேங்க்ஸ் டா அப்புக்குட்டி……..இப்போ எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா….அவ்வளோ நிம்மதி…நீ என் நெஞ்சில…….மத்த எந்த வருத்தமோ வேதனையோ இல்ல…..ஐ அம் ஹாப்பிம்மா…..அம்மா அப்பாவோட ஆசைப்படி விஜியை   நல்ல இடத்துல கொடுத்துட்டேன்….அவளோட படிப்பும் கெடாது….எல்லாத்தையும் இனி ப்ரதீப் பார்த்துப்பான்….அவளுக்கு நான் தான் ஃபீஸ் கட்டுவேன்னு சொன்னதுக்கு..என் பொண்டாட்டி நான் தான் கட்டுவேன் சொல்லிட்டான்..அவனோட விருப்பத்தை மதிச்சு நானும் விட்டேன்…ஐ லவ் யூ…” என்று அவள் நெற்றியில் அவன் முத்தமிட,அவர்கள் அழகான வாழ்வுக்கு அது வித்தாக அமைந்தது.

 

அங்கே ப்ரதீப் தன் செல்பேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்க , அன்ன நடைப் போட்டு அவனருகே வந்து நின்றாள்  விஜி.

 

“ஏய்..செல்லக்குட்டி…என்ன இங்க…?” என உற்சாகமாய் அவன் கேட்க

 

“அத்தை தான் இன்னிக்கு உங்க கூட பேசிட்டு இருக்க சொன்னாங்க…..” என அவள் தயங்கிய படியே தரையைப் பார்த்துக் கொண்டே உரைக்க,

 

அவளை இழுத்து மடியில் அமர்த்தியவன் , “செல்லக்குட்டி பேசிட்டு மட்டும் தான் இருக்கனுமா…?” என ஏக்கமாய்க் கேட்க

 

“அது தெரில…” என்றாள் அவன் கைகளில் நெளிந்து கொண்டே

 

அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ,”பிடிச்சிருக்கா…?”

 

அவன் கழுத்தில் கரங்களை மாலையாக்கியவள் ,”பிடிக்காம தான்…இப்படி இருக்கேனாங்க…” என கேட்க

 

“செல்லக்குட்டி……இப்படி உன்னை வைச்சிக்கிட்டு குட் பாயா இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குடி… நான் வேற பேட் பாயா…” என்றவனின் மீசை அவளுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்த

 

“நான் உங்களை குட் பாயா இருக்க சொல்லலையே……” என இவள் மந்தகாசமாய்ப் புன்னகைக்க

 

அவனோ தலையை ஆட்டி “இல்ல செல்லக்குட்டி…..இப்போ இதெல்லாம் நடந்தா உன்னோட படிப்புக்கு அது இடைஞ்சலா ஆகிடும்..ரொம்ப ரிஸ்க்….நீ முதல்ல நல்லா படி…….நான் உனக்காக காத்திட்டு இருக்கேன் நினைச்சே நீ செமையா படிக்கனும்…..உனக்கு எந்த பிரச்சனைனாலும் என்ட்ட சொல்லு..அம்மா திட்டினா கூட தயங்காம சொல்லு..அவங்க அப்படி செய்ய மாட்டாங்க….ஆனாலும் உன்னை எந்த விசயம் ஹர்ட் செஞ்சாலும் சொல்லிடு…என்ட்ட எதையும் மறைக்க கூடாது..உனக்காக நான் எப்போவுமே இருப்பேன்..” என சொல்ல

 

அவளும் “மறைக்க மாட்டேன்….” என்றாள்.

 

“இனி நீ எங்கூடவே தூங்கு….நான் அம்மாகிட்ட சொல்லிடுறேன்…….நான் குட் பாயா இருப்பேன்…” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

 

புரிதலும் காதலுமான அவர்கள் இல்லறம் மொட்டிலிருந்து ஒரு நாள் பூவாய் மலரும்..

 

 

 

 

ஒரு மாதம் கழித்து

 

“ஹே…..எந்திருடா…..எக்சைர்ஸ் செய்ய போகனும்டா..என்னை விடுடா…ப்ளீஸ்டா………” என அப்ஸராவின் கெஞ்சல்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அவளைத் தன் மேல் போட்டுக் கொண்டு விடாமல் பிடித்தபடி உறங்கினான் அபினவ்.

 

பலம் கொண்ட மட்டும் போராடி அவனிடமிருந்து எழுந்தவளை , இழுத்தவன்

 

“நான் தானே உன்னை ட்ராப் பண்ணப்போறேன்..என்ன அவசரம்……..ஓவரா செய்யாத…..போன வாரம் நான் நைட் டியூட்டிக்குப் போயிட்டேன்ல….” என அவளை சமாதானம் செய்ய

 

“அபி…..செல்லம்….அப்பா உனக்காக வெயிட்டீங்க்……வாக்கிங் போக….. நான் போய் வொர்க் அவுட் செய்யனும்…”

 

“வொர்க் செய்யனும்தானே..வொர்க் செஞ்சா…..கேலரீஸ் குறையும் அவ்வளவுதானே…….நான் குறைய வைக்கிறேன்….” என சொல்ல அவளோ அவனை ஆச்சரியமாகப் பார்க்க

 

“அபி.வேண்டாம்…….மீ பாவம்டா…வேலை இருக்கு……என்னை விட்ருடா…” என கெஞ்சினாள்.அவளும் அவனுக்கு சளைத்தவளில்லை.அவன் விரல்கள் அவளில் வீணை மீட்டினாள் அந்த இசையைத் தடுக்க இருவராலுமே இயலாது.

 

“அப்பும்மா இது ரொம்ப தப்பு….ஒன் டீப் கிஸ் எ மினிட் வில் பர்ன் அப்டூ 1.5 கேலரீஸ்…………..” என்றபடி அவளது கேலரிகளைக் குறைத்தான்.

 

மிகவும் பிரயர்த்தனப்பட்டு  அவனிடமிருந்து விலகியவளிடம் ,

 

“என்னடா செல்லம்….ஒரு டூ மினிட்ஸ் தான் ஆகியிருக்கும்…ஒன் ஹவர்ல 120 கேலரி குறைக்கலாம்..கமான் கமான் லெட்ஸ் ட்ரை ..” என அவளை சீண்ட ,

 

“போடா..” என வெட்கி குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.அவள் இதற்கு மேலும் எக்சர்ஸைஸ் செய்ய போனால் நான் கேலரிஸைக் குறைக்கிறேன் என்ற பெயரில் அபி அவளை விட மாட்டான்.

 

கீழே இறங்கி வந்த அபி , “குட் மார்னிங் மாமா…” என வாழ்த்த

 

“குட் மார்னிங் அபி…”

 

அம்பிகா அவனுக்கு காபியைக் கொண்டு வந்து கொடுக்க ,அவருக்கும் காலை வாழ்த்தை சொல்ல

 

“என்ன இன்னும் மகாராணி எழுந்துக்கலயா…?” என அம்பிகா கேட்க

 

“எழுஞ்சிட்டா பெரியம்மா…எக்சர்ஸைஸ் செய்றா …”

 

“ஹ்ம்ம்..இப்படி செய்ற வேலைக்கு சரியா சாப்பிடனும்.எங்க…..அவ..சொன்னா கேட்டாதானே…முன்னாடியாவது இவன் ஒருத்தன் தான் செல்லம் கொடுப்பான்..இப்போ நீயும் சேர்ந்துட்ட……” என வசைபாட

 

“என்னை திட்டாம உனக்குத் தூக்கம் வராதே அத்த……உனக்குப் பொறாமை……” என இழுக்க

 

“ஆமான் டி உன் நல்லதுக்கு சொன்னா….கொழுப்பு..”

 

“பேசாம சாப்பாடை நான் கட்டித்தரவா…நீ இவளுக்கு கொடுத்திடு அபி…” என அம்பிகா ஆலோசனை சொல்ல

 

“அய்யோ…பெரியம்மா..ஆபிஸ்ல இவ என்னைப் பக்கத்துலேயே சேர்க்க மாட்டா……நீங்க வேற….ஆளை விடுங்க…” என அலற

 

அவனை போலியாக முறைத்தாலும் அவன் சொல்வது தான் உண்மை.இவள் மட்டும் அப்படியில்லை..அவனுமே அப்படிதான்…அவளிடம்  நெருங்கவே மாட்டான்.

 

இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது , சுரேஷ் போன் செய்ய

அபி அப்ஸராவிடம் , “அப்ஸரா சுரேஷ் தான் போன்ல…..ஏர்ப்போர்ட்ல ரெய்ட்கு போகனும்..நம்மளை ஸ்டிரேய்டா வர சொன்னார்..” என சொல்ல அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.முடிந்த வரையில் தங்கள் கடமையை சிறப்பாக செய்ய இருவருமே முனைந்தனர்.

 

அபி காரை எடுக்க ,வழக்கம்போல் அவன் நெஞ்சில் அப்ஸரா சாய , அவளது நெற்றியில் அவன் முத்தமிட,கன்னத்தில் இவள் முத்தமிட

கடமையை நோக்கி தன் நெஞ்சம் கொண்ட நெஞ்சாத்தியோடு  பயணப்பட்டான்  அபினவ்.

 

முற்றும்.

 

 

 

Advertisement