Advertisement

                             நெஞ்சாத்தியே நீதானடி!!

பகுதி 1

“ஆனந்த மாதவா ஜெய் சாய் ராம்

ஜெய் ஜெய் ராம் ராஜா ராம்

என்று சாய் நாமம் செல்பேசியில் அலாரமாய் ஒலிக்க மெத்தையிலிருந்து எழுந்தான் அபினவ்.

 

அபினவ் ப்ர்சாத் ஐபிஎஸ்.கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி.

 

முன்பெல்லாம் வியாழக்கிழமையானால் வீடே காலையில் இந்த கானத்தால் துயிலெழும்பும்.அவன்,அப்பா,அம்மா,விஜி எல்லாம் ஒன்றாய் ஆனந்தமாக ஒரே கூட்டில் வாழ்ந்த காலம்.காலனால் அந்த காலம் காணாமல் போய் விட்டது.இருந்தும் கூட இந்த கானம் காதில் கேட்கும்போதெல்லாம் தாயும் தந்தையும் உடனிருப்பது போன்றே ஒரு மாயத்தோற்றம் அவனுள்.அவன் மனதுக்குப் பிடித்த மாயையும் கூட..!

 

நேரமாகி விட்டதை உணர்ந்தவன் விரைவாக ரெடியாகினான்.தனது காக்கி சட்டையைத் தவிர்த்தவன் ஒரு சாதாரண டீஷர்ட்டை அணிந்து கொண்டான்.நேற்று அவனுக்கு வந்த தகவல்படி ஒரு உயர்தர நட்சத்திர விடுதியில் இன்று சில்வர் கடத்த திட்டம்.அதை கையும் களவுமாகப் பிடிக்கவே இவன் போகிறான்.போகும் முன் தங்கை விஜியின் அறையைப் பார்க்க அதுவோ சாத்தியிருந்தது.வேலைப் பளு காரணமாய் அண்ணனும் தங்கையும் சந்திப்பதே அபூர்வம் தான்.அவனது தங்கை விஜி ப்ர்சாத் எம்பிபிஎஸ் மூன்றாம் வருடம் படிக்கிறாள்.படிப்பில் படு சுட்டி.அதனால் தான் மெரீட்டிலேயே பாஸ் செய்து அவனுக்கு எந்த தொந்தரவும்  கொடுக்காமல் இன்று மருத்துவப் படிப்பு படிக்கிறாள்.

 

தனது பைக்கில் ஏற போனவன் பின் ஏதோ நினைத்தவனாய், தனது நண்பன் ப்ரவீனுக்குப் போன் செய்து அவனது காரை வரவழைத்தான்.அதிலேறியவன் தனது டீம் மேட்டான கவினிடம் பேசத் தொடங்கினான்.

 

“கவின்…நான் இப்போ என் ப்ர்ண்டோட கார்ல ஈசிஆர்ல இருக்க அந்த ***** ஹோட்டலுக்குப் போறேன்.நான் எதாவது சஷ்பியஷியஸ் ஆக்டிவிட்டியை நோட் பண்ணா உனக்கு இன்ஃபார்ம் செய்றேன்..யூ கம் வித் டீம்.அந்த ஹோட்டல்ல நம்ம ஆளுங்க ஒரு ரெண்டு பேரை மஃப்டியில இருக்க சொல்லிட்டேன்.நூறு அடி தள்ளி ஹோட்டலோடு இரண்டு பக்கமும் ஆளுங்க இருக்கனும்.நீ இடதுப்பக்கம் இரு அண்ட் கீப் யூர் கன் டூ ரெடி….உன்னோட நான் ப்ளூடூத்ல பேசிறேன்.யாருக்கும் உன் மேல சந்தேகம் வரக்கூடாது.டூ எவிரிதிங் ஆஸ் பெர் அவர் ப்ளான்.ஓகே..” என உத்தரவிட அந்த பக்கம் கவினும் அதை ஆமோதித்தபடி அலைபேசியை வைத்தான்.

 

அபினவ்வின் மனம் முழுவதும் இன்று எப்படியாவது அந்த கடத்தல் ஆசாமிகளைப் பிடிக்க வேண்டும் என்பதே பிரதான எண்ணமாய் இருந்தது.இந்த முறை அவர்களது இன்ஃபார்மர் மூலம் வந்த தகவல்.கமிஷனரின் ஸ்டீரிக்ட் ஆர்டர்.தகவல் கிடைத்தும் பிடிக்க துப்பில்லையா இன்று கிழி கிழி என கிழித்து விடுவார்.அதனால் அவனது மூளை எப்படியெல்லாம் வியூகம் வகுத்து திட்டத்தை செயல்படுத்தலாம் என்பதிலேயே குறியாய் இருந்தது.ஒரு வழியாக அந்த நட்சத்திர விடுதியை அடைந்தவன் ரிஷப்ஷனுக்குச் சென்றான்.

 

ரிஷப்ஷனில் அப்சரஸாக நின்றிருந்தாள் அப்ஸரா.அப்ஸராவின் அருகில் இருந்த நேஹா ,அபினவ் அவர்களை நோக்கி வருவதைக் கண்டவள்,

“ஹே…சாரா…..பார்த்தியாப்பா….வர ஆளு செம ஹாண்ட்செம்ல…..அவர் ஹைட்டும் அந்த டீஷர்ட்டும் அப்படியே ஆளை அசத்துது……” என வந்தவனை சைட் அடிக்க, சாராவோ கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாதவளாக,வந்தவனிடம்

 

“எஸ் சார்.ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ” என கேட்க

அபினவ்வின் கண்கள் சாராவை அளவிட்டன.அவனது பார்வை அவளது சீருடையில் இருந்த அவளது பேட்ஜில் பதிந்தது.

 

‘சாரா எ’

 

அப்ஸராவோ அவனது பார்வையில் கோபமுற்றவள் அதை அவனிடம் மறைக்காமல்,அபினவ்வை முறைத்தாள்.அபியோ கடமையில் கண்ணாக , “எஸ் மேடம்….எனக்கு ஒரு ரூம் வேணும்” என சொல்ல

 

அப்ஸரா பதில் சொல்லாமல் இருக்க நேஹாதான் அபியின் மேல் ஆர்வமுள்ளவளாக,

 

“சார் சிங்கிளா டபுள்ளா..?” என்று அவனை விசாரிக்க

 

“நான் எப்போவுமே சிங்கிள் தான்..” என்றான் அப்ஸராவின் மேல் கண்ணாக.

 

ஒருவாறு தன்னை சுதாரித்தவன் ,”எனக்கு க்ரவுண்ட் ஃப்ளோர்ல சிங்கிள் காட் வேணும்..” என தன் தேவையை உணர்த்தினான்.

 

“ஹேவ் எ நைஸ் ஸ்டே சார்..” என்றபடியே கம்யூட்டரில் டேட்டாவை ஃபீட் செய்தவள் கீயை எடுத்து அபினவ்விடம் நீட்டினாள்.

 

அப்ஸராவின் கண்கள் அபினவ்வை தொடர ,  நேஹாவோ,

“ஏய்..என்ன அப்படி பார்க்கிற அவர..….சைட் அடிக்கிற நீ…..” என அவள் கேலி செய்ய,அதை ரசிக்காத அப்ஸரா,

 

“வில் யூ ஜஸ்ட் ஷட் அப்..” என்று வார்த்தைகளை சூடாய் வெளியிட்டாள்.

 

நேஹாவோ ,”ஓகே ஓகே..சில்…” என்றபடி அமைதியானாள்.

 

நேஹாவும் பார்க்கிறாள் இந்த ஒரு மாதமாகத்தான் அப்ஸரா இங்கு வேலை செய்கிறாள்.அழகில் காஷ்மீரின் குளுமையைக் கொண்டிருந்தாலும் வாயைத் தொறந்தால் தார் டெசர்ட்டில் வீசும் காற்றாக மிகவும் சூடாகத்தான் வார்த்தைகள் வரும். இயல்பாக கேலி கிண்டலாகப் பேசினால் கூட அதை சாரா விரும்ப மாட்டாள்.ரசிக்கவும் மாட்டாள்.அவளை எதிர்த்து நோஸ் கட் கொடுக்கவும் நேஹாவுக்கு வாய்ப்புக் கிடையாது.ஏனெனில் அந்த நட்சத்திர விடுதியின் பார்ட்னரின் ரெகமெண்டேஷனில் தான் அப்ஸரா அங்கு வேலைக்குச் சேர்ந்தாள்.அதனால் மேலிடத்து சிபாரிசு இருப்பதால் சாராவைப் பகைத்துக் கொள்ள நேஹாவும் விரும்பவில்லை.

                                 

எப்படியோ இந்த ஒரு மாசமாக வண்டியை ஓட்டிக்கொண்டு திரிகிறாள் நேஹா.அவளும் பாவம் எவ்வளவு நேரம் தான் வாய்க்கு zip போடுவாள்? வாயை அடக்க வழி தெரியாது எப்பவாது இது போல் வார்த்தையை விட்டு வாங்கிக் கட்டி கொள்வாள்.

 

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றவன் ,தீரைச்சீலை விளக்கி விட்டு ஏசியின் குளிரை அதிகப்படுத்தி சோபாவில் அமர்ந்தான்.அவனை அலைக்கழிக்க நினைத்து அலையென திரண்ட அப்ஸராவின் நினைவுகளை முயன்று ஒதுக்கியவன் , தனது வேலையில் கவனமானான்.ப்ளூடூத்தைக் காதில் மாட்டியவன் மெல்ல அறையின் கதவை திறந்து எட்டிப் பார்த்தான்.போனில் பாட்டுக்கேட்பதைப் போல் மண்டையை ஆட்டி ஆட்டி பாவலா காட்டினான்.

 

அவனை பார்ப்பவர்களுக்கு ஏதோ பாட்டு கேட்பவனைப் போல் தோன்றும்.போதாக்குறைக்கு கண்ணீல் கூலர்ஸ் வேறு.ஆக மொத்தம் அவனது டீஷர்ட்டும் ஜீனும் கூலர்ஸ் எல்லாம் சேர்ந்து அவனை ‘சீக்ரெட் ஆபரேஷன்’ செய்ய வந்த ஆபிசர் போல் காட்டவில்லை.மாறாக ஏதோ ஹாலிடேய்ஸை எஞ்சாய் செய்ய வந்த ‘இளம் யுவனா’கத் தான் தெரிந்தான்.

 

மிக மிக கவனமாக கழுகுப்பார்வையோடு அங்குலம் அங்குலமாக அனைத்து இடங்களையும் ஊடுருவிப் பார்த்தான்.

 

கிட்ட தட்ட காலை பத்து மணியிலிருந்து அங்கேயும் இங்கேயுமாக அந்த ஹோட்டலின் வரவேற்பறை , பார் ,ஸ்வீப்பிங் பூல் என அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தான்.ஏதேனும் கண்ணுக்கு வித்தியாசமாகப் புலப்படுகிறதா என்று ஆராய்ந்தான்.வெகு நேரம் அப்படியே இருப்பது பிடிக்காதவன் அவனது அறையின் உள் இருக்கும் ரெஸ்ட் ரூம் சென்றான்.ரெஸ்ட் ரூமிலிருந்து வெளி வந்த போது  பவர் கட் ஆனது.

 

அது அவனது மூளையில் பல்ப் எரிய செய்ய,விரைவாக அறையை விட்டு வெளி வந்தான்.வேகமாக அங்கிருந்த சூழ்நிலையைக் கணிக்க முயன்றான்.ஒரு ஐந்தாறு நிமிடத்தில் மீண்டும் பவர் ஆனாகி விட அவன் வேகமாக அங்கிருந்த பாரினுள் சென்று பார்த்தான்.எதுவும் வித்தியாமாக அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

 

உண்மையில் அவனுக்கு அதையெல்லாம் தெரியப்படுத்தவில்லை.

 

ஆனால் சந்தேகம் என்பது அவனது வேலையின் முக்கியம் அங்கமல்லவா?உடனே மானேஜரை சென்று சந்தித்தான்.

“ஏன் சார் பவர் கட் ஆனது…?.இவ்வளவு பெரிய ஹோட்டல் இது…..வாட் அபவுட் தி ஜெனரேட்டர்…?ஹௌ கேன் யூ பீ லைக் திஸ்..?” என எகிற

 

“என்ன சார்….இது..ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் தானே…அதுக்கென்ன……எல்லாரும் அமைதியா இருக்காங்க….நீங்க ஏன் இப்படி பெரிய இஷ்யூ ஆக்கிறீங்க…?” என்று அந்த மானேஜரும் பதில் சொல்ல எரிச்சல் ஆனான் அபினவ்.

 

‘என்ன பதில் என்பது போல்’ கடுப்பானவன் ,”ஐ அம் அபினவ் ஐபிஎஸ்’ என்று  அடையாள அட்டையைக் காட்டியவன் ,

 

“இங்க சில இல்லீகல் ஆக்டீவிட்டிஸ்  நடக்கிறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு….அதனால் தான் வீ கேம் ஹியர் ஃபார் அ ஆபரேஷன்…” என விளக்க அந்த மானேஜர்,

 

“என்ன சார் பேசுறீங்க…..?இது எவ்வளவு பாரம்பரியமான இடம் தெரியுமா…அப்படியெல்லாம் யார் தவறான தகவல் தந்தது..?” என்று கோபம் கொள்ள

 

“தகவல் தவறா சரியான்னு இப்போ தெரிஞ்சிடும்…” என்றவன் கமிஷனருக்குப் போன் செய்து அனைத்தையும் சொல்லி பவர் கட் ஆன நேரத்தில் ஏதோ நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அவனது எண்ணத்தை சொன்னவன் ஹோட்டலை சோதனையிட அனுமதி வேண்டினான்.ஆனால் கமிஷனரோ ,

”ஒஹ்..சாரி அபினவ்…மீட்டீங் ஒன்னு ஹோம் செகரிட்டரி கூட….அதனால உனக்கு இன்ஃபார்ம் செய்ய மறந்துட்டேன்…..அங்க சில்வர் எதுவும் கடத்தப்படல…..சோ நீங்க டீமோட அங்கிருந்து வந்திருங்க…….”

 

“நோ சார்…ஐ சஸ்பெக்ட் சம்திங் ஃபிஷி…எனக்கு நீங்க சர்ச் பண்ண பெர்மிஷன் கொடுங்க….ப்ளீஸ்” என அவன் மீண்டும் வலியுறுத்த

 

“டூ வாட் ஐ சே மேன்… …” என உத்தரவிட ,

 

அபினவ்வும் வேறு வழியின்றி தனது டீமுக்கு கவின் மூலம் உத்தரவிட்டு அவர்களை கலைந்து போக சொன்னான்.

எங்கே மர்மம் இருக்கிறதோ அங்கே பொதுவாக தீமை இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அபியின் உள்மனது மட்டும் சொன்னது ஏதோ ஒரு மர்மம்  இருக்கிறது என.

 

காலையிலிருந்து காத்திருந்ததெல்லாம் வீண் என மனம் சுணங்க அவனது அறையைப் பூட்டி விட்டு சாவியை ஒப்படைக்க ரிசப்ஷன் வந்தான்.அங்கோ அப்ஸராவைக் காணவில்லை.நேஹாவிடம் சாவியைக் கொடுத்தவனது விழிகள் அப்ஸராவை தேடின.சோர்ந்து போன அவனது மனதுக்கு உற்சாகம் தர சோமபானமாய் அவள் அவனுக்குத் தேவைப்பட்டாள்.அவனது காந்த விழிகள் அவளைத் தேட , அவனது தேடுதலின் பயனாக அவள் கண்ணில் பட்டாள்.

 

அப்ஸராவும் அப்போது அவனை தான் பார்த்தாள். அப்ஸராவின் கூர்மையான பார்வை ஏதோ அவனை தோற்றவன் போல் பார்ப்பதாய் ஒரு எண்ணத்தை அவனுள் தோற்றுவித்தது.

 

அவள் மீது கோபம் வந்தாலும் அவளை பார்க்காமல் செல்ல முடியவில்லை.அதனால் தன்னை நிலைப்படுத்தி மீண்டும் ஒரு முறை அவளை கண்களால் நிரப்பிப் பார்க்க நினைக்க அவளோ பாரினுள் சென்றாள்.அதுவும் அத்தனை வேகமாய்..!

 

அதைப் பார்த்தவன் ,’என்னடா இது க்ளப்புல மப்புல திரியிற பொம்பளையா இவ…..’ என்ற எண்ணம் ஓட அவளை பின் தொடர ,அங்கே அவனுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி!!

 

அபினவ்வையே பார்த்துக் கொண்டிருந்த அப்ஸராவின் மெர்குரி கண்களில் பாரினுள் செல்லும் அந்த இளம்பெண் பட,ஓட்டமாய் ஓடி அந்த இளம்பெண்ணிடம் சென்றாள். அப்பெண்ணை வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியோடு பார்த்தாள் அப்ஸரா.அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை என்பதை விட அப்படி ஒரு கோலத்தைக் காண சகிக்கவில்லை.

 

அந்த இளம்பெண் அமர்ந்திருந்த டேபிளுக்கு பியரை பார் tender வந்து செர்வ் செய்ய அதற்கு மேல் பொறுக்காதவளாக,அந்த பெண்ணின் அருகில் சென்ற அப்ஸரா அவளை முறைத்த வண்ணம் , அங்கிருந்த bar tender ஐ அழைத்து அவள் ஆர்டர் செய்திருந்த மது வகைகளை அப்புறப்படுத்த சொன்னாள்.

 

அதைக் கேட்டு வந்திருந்த இளம்பெண் கோபம் கொண்டாள்.ஏற்கனவே கொஞ்சம்   பெக்கை உள்ளே தள்ளியிருந்தாள்.அதனால் கொஞ்சம் போதையுடனும் மது வாடையுடனும் வெளி வந்தன வார்த்தைகள்,

 

“ஏய்……என்ன செய்ற நீ…ஹே…!! யூ மேன்….கீப் தட்……..எனக்கு வேணும்…..” என உளற,அவளை ஒரு கையால் தூக்கி நிறுத்தியவள் பளாரென அவளின் கன்னத்தில் அறைந்தாள்.இவையனைத்தும் பார்த்திருந்த அபினவ்வின் நிலை தாங்கவொண்ணாததாக  இருந்தது.

 

அப்ஸரா அப்பெண்ணை அடிக்கவும் சுய நினைவுக்கு வந்த அபினவ் ,”ஸ்டாப் இட் சாரா……” என சொல்ல அப்ஸரா அபியை முறைத்து விட்டு “இவன் உன்னை இப்படி பார்க்கவா டி கஷ்டப்படுறான்……நீயெல்லாம் ஒரு பொண்ணா….உங்கம்மா உன்னை இப்படியா வளர்த்தாங்க..” என  ஆத்திரமாகத் திட்டிக் கொண்டே மீண்டும் அறைய ,தங்கையின் செயலால் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றவன் அப்ஸராவை பளாரென அறைந்தான்.

 

விஜி இப்படி செய்வாள் என கனவிலும் அவன் எண்ணவில்லை.அதே நேரம் அந்த சூழலில் அப்ஸராவை தங்கையை அடிக்கவும் அனுமதிக்க முடியவில்லை.அப்ஸரா அவனை அதிர்ச்சியோடு பார்க்க,அதைக் கண்டுகொள்ளாமல் அவனது தங்கையை தாங்க,விஜியோ,

 

“ஓஹ்….என்னைப் பார்த்திட்டியா….?பரவாயில்ல இப்பவாச்சும் என் நியாயபகம் வந்துச்சே…” என அவன் மேல் சாய்ந்து கொண்டே உளற,

 

வில்லென அமைந்த புருவத்துக்குக் கீழ் அம்பென கூரிய பார்வைக் கொண்ட அப்ஸராவின் மெர்குரி கண்கள் அபினவ்வை அப்பட்டமாய்க் குற்றம் சாற்றின.

 

விஜியோ இதை எதுவும் உணராதவளாய் ,

“எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்….இவ அனுப்பிட்டா…..அப்போதான் என்னால தூங்க முடியும்…” என குழற,

 

தங்கையின் செயலில் மிகவும் கேவலமாகத் தோற்றவனாய்த்  தன்னை உணர்ந்தான் அபினவ் ப்ர்சாத்.

 

அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்கப் பிடிக்காதவனாய் தங்கையை அழைத்துக் கொண்டு  நெஞ்சமெல்லாம் ரணமாய் வலிக்க வீடு சென்றான் அபினவ்.

Advertisement