Advertisement

தேடல் 2

 

ஒரு வழியாக தீபக்கை வாழ்த்தி ,“ஹாப்பி பர்த்டே தீப்ஸ்….” என ரவீணா கைகுலுக்க

 

“எங்கடி கிஃப்ட்…..?” என அவன் முறைக்க

 

“சாயங்காலம் போய்…வாங்கி தரேன்…..நேத்து அக்காவை பொண்ணு பார்த்து நிச்சயம் செஞ்சாங்க..அதனால வாங்க முடியல…”

 

“ஹே..சூப்பர்டி..நம்ம ஹர்ஷா சார் தானே….”

 

“ம்….ஆமா…”

 

“சரி நான் பூமிக்கு விஷ் செஞ்சேன்னு சொல்லிடு…..” என்றபடியே அவன் அவனது க்யூபிக்களுக்குள் செல்ல,

 

அவளை “மிஸ் ரவீணா” என்றழைத்தது ஒரு குரல்.இவள் உடனே திரும்பி பார்க்க,அங்கே க்ரீம் கலர் ஷர்டில் ஜம்மென நின்றிருந்தான் ஹர்ஷா.அவனும் கேண்டினுக்குள் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.தீபக்கும் அவளும் செய்த லூட்டியை.ஏற்கனவே அவன் சில முறை ரவீணாவைப் பார்த்துள்ளான்.ஆனால் இப்போதோ அவனது மச்சினி ஆயிற்றே.

 

நேற்று அவளை புடவையில் பார்த்ததுக்கும் இன்று லெகின்ஸ் டாப்பில் பார்க்கவும் எவ்வளவு வித்தியாசம்.நேற்று அமைதியாக இருந்தவள் இன்றோ இப்படி வாயடிக்கிறாள் என்று நினைத்தான் ஹர்ஷா.

 

ஹர்ஷா அழைத்ததுமே உற்சாகத்தோடு அவனருகில் சென்றவள் ,”ஹாய் மாம்ஸ்….” என்று ஏதோ உற்சாகத்தில் கூப்பிட

 

“என்ன இது..மாம்ஸ்….?மாமான்னு சொல்லு ரவீணா…..இப்படி தான் ஒரு பையன் கிட்ட பழகுவியா….?” என அவன் தீபக்கையும் அவளையும் தவறாகப் பேச

 

மூக்கு நுனி கிளிப்போல் சிவக்க,முகம் இருண்டு போனது ரவீணாவுக்கு.அவள் ஜாலி டைப் பெண் தான்.சட்டென்று கோபப்படமாட்டாள் தான்.டேக் இட் ஈசி ஊர்வசி இனம் தான்.ஆனால் சில சொற்களை அவளால் ஏற்க முடியாது.யாராவது தவறாகப் பேசினாலோ தீடீரென கோபம் கொண்டு கத்தினாலோ அவளது முகம் இருண்டு விடும்.

 

“அவன் என் ப்ர்ண்ட்” என்றாள் சின்னக்குரலில்.

 

“ப்ர்ண்டா..?யாரா இருந்தாலும் லிமிட்டோட நிறுத்திக்கோ…இப்படி மாம்ஸ்னு சொல்லிட்டு  ஆபிஸ்ல திரியாத….ஐ டோண்ட் லைக் தட்….கால் மீ ஹர்ஷா..சரியா….?”வீட்ல தான் மாமாவெல்லாம்…….” என அட்வைஸ் செய்து விட்டு சென்றவனைக் கொலைவெறியோடு பார்த்தாள் ரவீணா.

 

தனது க்யூபிகளுக்குள் வந்து அமர்ந்தவளது முகம் சிவந்திருக்க அதைக் கண்ட ராஜி , “என்னடி…….ஒரு மாதிரி இருக்க…..?” என

 

நடந்தவற்றை சொன்னவள் , “என்ன திமிரு பாருடி..அந்த ஆளுக்கு..மாம்ஸ்னு சொல்லக்கூடாதாம்..அப்புறம்….எந்த டாஷுக்குடி….எனக்கு அட்வைஸ் செய்றான்….என்னையும் தீப்ஸையும் தப்பா பேசுறான்…இவனெல்லாம் ஐடில எப்படி குப்பைக் கொட்டுறான்……பொண்ணு பையனும் பேசினாலே தப்பா நினைக்கிற குறுகலான புத்தி…நான் எப்படின்னு எனக்குத் தெரியும்….இவன் என்னை நினைக்கிறது….” என்றவளுக்குக் காதிலிருந்து புகை மட்டும் தான் வராத குறை.அவ்வளவு சூடாக இருந்தாள்.

 

“விடுடி..ஏதோ கொழுந்தியான்னு அக்கறையில சொல்லியிருப்பாரு…..அதுக்காக மரியாதை இல்லாம பேசுவியா…” என ராஜி கடிந்து கொள்ள

 

“அக்கறை சக்கரைன்னு சொன்னா……உன்னை பஞ்சர் ஆக்கிடுவேன்…தீப்ஸ் என்னோட க்ளோஸ் ப்ர்ண்ட்…………அவனைப் போய்…….சை…….”

 

“என்னதான் ப்ர்ண்டா இருந்தாலும் லிமிட் இருக்கு ரவி…..நாளைக்கே உனக்குக் கல்யாணமாகி உன் வீட்டுக்காரு….தீபக்கோட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டா என்ன செய்வ நீ….?” என சொன்ன ராஜியின் முதுகிலேயே அடித்தாள் ரவீணா.

 

“சொல்லிடுவானா அவன்..அப்படி மட்டும் சொல்லட்டும்…..அவனை என்ன செய்றேன் பாரு……முதல்ல எங்கூட வாடி..” என்றபடி அவளை இழுக்க ,

 

“எங்கடி என்னை இழுக்குற..விடுடி….” என கத்த

 

“வா…” என்றபடி அவளை வாஷ்ரூம் அழைத்துச் சென்றவள் ,

 

“போய் பீனால் ஊத்தி வாயைக் கழுவுடி….ஒழுங்கா என்னைப் புரிஞ்சிக்கிற….என்னை நல்லா பார்த்துக்கிற……என் ப்ர்ண்ட்ஸை மதிக்கிற…ஒரு நல்லவர் தான் எனக்குப் புருஷனா வரனும்னு சொல்லுடி….” என படுத்தி எடுக்க

 

“அம்மா தாயே ஆளை விடு….நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்கு ஒரு நல்லவரே வருவார்….” என்று ராஜி சொன்ன நேரம் அங்கே அதே ஆபிசில் இருந்த ஆதித்யாவுக்குத் விக்கல் வந்தது.

 

மதிய உணவு வேளைக்குப் பின் மீட்டிங் இருப்பதாக ரவீணாவின் டீம் லீட் சொல்ல , ரவீணா,ராஜி,தீபக் மூவரும் தீபக்கின் டீரிட்டில் நன்றாக கட்டி விட்டு மீட்டிங் ஹால் சென்றனர்.

 

அங்கே புதிதாக ஒரு ப்ராஜக்ட் வந்திருப்பதாகவும் அதற்கு ரிசோர்ஸ் அலோகட் செய்வது பற்றியும் ஆலோசனை நடைப்பெற்றது.கடைசியில் இன்னும் ஒரு மாதம் கழித்து ப்ரோஜக்ட் தொடங்கலாம் என்று முடிவு செய்தனர்.அதற்குள் டீம்,டீம் லீட்,ப்ராஜக்ட் மானேஜர்,ப்ராஜ்க்ட் ஹெட் எல்லாம் முடிவு செய்யப்பட்டனர்.அதன் விளைவாய் ரவீணா ஹர்ஷாவின் டீமில் சேரும்படி ஆயிற்று.கூடவே ராஜியும்.ஆனால் தீபக் மட்டும் ஆதித்யாவின் டீமில் சேரும்படி ஆனது.

 

ஆதித்யராம் ரவீணாவின் கல்லூரியில் அவர்களது பேட்ச் மேட்.அவனும் அவர்களோடு கேம்பஸீல் தேர்வாகி பெங்களூரில் உள்ள கிளையில் வேலைப் பார்த்தான்.புதிதாய் ப்ராஜ்க்ட் தொடங்க விருப்பதால் அவன் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டான்.அது மட்டுமில்லாமல் அவனது ஆர்வத்தாலும் உழைப்பாலும்  குறுகிய காலத்தில் தன் திறமையை நிரூபித்து அவன் டீம் லீடாகாவும் பதவி உயர்வு பெற்றுள்ளான்.

 

ரவீணா ஹர்ஷா டீமில் சேர்ந்த விசயத்தை வீட்டில் சொல்ல அவர்களுக்கோ மருமகனுக்குக் கீழே மகள் வேலை பார்ப்பதால் மகிழ்ந்தனர்.அவர்களுக்காக ரவி ஹர்ஷாவை திட்ட முடியாமல் முயன்று பூமிக்காக தன் மனதை சரி செய்து கொண்டாள்.ஆனாலும் ஷர்ஷாவின் மீது தோன்றிய அந்த தப்பெண்ணம் போகவே இல்லை.

 

ஆனால் ரவீணா ஹர்ஷாவின் டீமில் இருப்பதால் பின்னாளில் ஹர்ஷாவின் குடும்ப வாழ்க்கைப் பாதிக்கப்படப்போவதை யாரறிவார்?

 

பேசாமல் ஆதித்யாவின் டீமில் சேர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுவதை ரவீணாவால் தடுக்கவியலவில்லை.

 

ஆதித்யாவுக்கு ரவீணாவின் மீது ஒரு க்ர்ஷ் உண்டு.அதை உணர்ந்த தீபக்கும் அவனை  தன் தோழி ரவீணாவோடு பழக அனுமதிக்க மாட்டான்.அதனால் தீபக் மீது ஆதித்யாவுக்கு கடுப்பு உண்டு.

 

ப்ராஜ்க்ட் ஆரம்பித்த சில நாட்களில் வேலை குறைவாகவே இருந்தது.ரவீணாவும் ஹர்ஷாவிடம் எந்த வம்பு தும்பும் வைத்துக் கொள்ளாமல் அவன் சொல்பேச்சு கேட்டு நடந்தாள்.தனது எந்தவொரு செய்கையும் அக்காவின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி விட கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள்.ஹர்ஷாவும் வேலையைத் தவிர வேறு எந்த பேச்சும் ரவீணாவிடம் வைத்துக் கொள்ளவில்லை.

 

ஹர்ஷாவைப் பொருத்தவரை அவன் பிற்போக்குவாதியெல்லாம் கிடையாது.ஆனால் அவனது தந்தையின் மறைவுக்குப் பின் அவனறியாமல் அவன் மீது குடும்ப சுமை ஏறிக்கொண்டது.ஏறிக்கொண்டது என்று சொல்வதை விட ஏற்றிக்கொண்டான் என்பது தான் உண்மை.அவனது தாய் வைதேகி  எந்த வகையிலும் அவர்களது படிப்பு கெடாத வகையில் பார்த்துக் கொண்டார்.

 

ஆனாலும் தாய்க்கு தன்னால் எந்த வகையிலும் கஷ்டத்தை தர கூடாது என்பதால் தீவிரமாக படித்தான்.நண்பர்களூடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என எவ்வித செயலிலும் ஈடுபடாமல் ,தன்னை தானே ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டான்.பொறுப்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

 

ஒரு கட்டத்தில் அதுவே அவனது குணமாக மாறிப்போனது.பெண்களிடம் மரியாதையாக பழகத் தெரிந்த அவனுக்கு தோழமையோடு பழக தெரியாமல் போனது.அப்படி ஆண் நண்பனோடு பழகும் ரவீணாவின் மீது ஹர்ஷாவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை.

 

ஆனால் இன்று நட்பு என்ற பெயரிலும் காதல் என்ற பெயரிலும் ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதில் ஜகக்ஜாலக் கில்லாடிகளாக இருக்கின்றனர்…அதனாலேயே உறவு என்ற ரீதியில் அவள் மீது கொண்ட அக்கறையில் சொன்னதை ரவீணா தவறாக எடுத்துக் கொண்டதை அவன் அறியவில்லை.அந்த தவறை சரி செய்யவும் இல்லை.திருமண விசயமாக வெளியே எல்லாரும் செல்லும்போது கூட ஹர்ஷாவிடம் ரவீணா பேச்சே கொடுக்கவில்லை.ஹர்ஷாவோ அதையெல்லாம் சிறு புன்னகையோடு கடந்து போனான்.

 

தீபக்கோ ஆதித்யாவின் டீமில் சேர்ந்து க்ராஷான கம்யூட்டர் போல் ஆனான்.ரவீணாவோடு எப்போதும் சேர்ந்து சுத்திக் கொண்டு அவளுக்கு அரணாய் இருந்து இவனது காதலுக்கு முரணாய் இருந்தவன் மீது இருந்த கோபத்தை மொத்தமாக காட்டினான் ஆதித்யராம்.அவனுக்கு மட்டும் கஷ்டமான வேலைகளையும் கொடுப்பது , நீண்ட நேரம் அவனை ஆபிஸில் தங்க வைப்பது என்று பெண்டு  நிமித்தினான்.

 

அதை ஒரு வாரத்திலேயே கண்டு கொண்ட தீபக் கொலவெறியாகி ரவீணாவிடம் எரிந்து விழுந்தான்.

ரவீணா அவளோடு அவன்  நேரம் செலவழிக்கவில்லை என அவனோடு சண்டையிட,

 

“வேண்டாம்டி குட்டச்சி..அந்த சைத்தான் என்னை வேலை வேலைன்னு உயிரை வாங்குறான்…… நீ சொல்லிதானே  நான் அவனை உன்ட்ட நெருங்க விடாம செஞ்சேன்..இன்னிக்கு பாவி பய என்னை பழிவாங்குறான்…” என புலம்ப

 

ரவீணா தான் அவன் என்ன வேற மாதிரி பார்க்கிறான்.நீ கொஞ்சம் அவனை என்கிட்டயிருந்து தள்ளிவைடா என முன்பே புலம்பி இருக்கிறாள்.

 

நண்பன் புலம்புவதைக் கேட்க முடியாமல் ,நேரே ஆதித்யராமின் கேபினுக்குள் சென்றவள் ,

 

“ராம்…ஐ வாண்ட் டூ டாக் டூ யூ…பெர்சனலி..” என்றதும் அவன் முகம் புன்னகை பூசியது.

 

“எஸ்..சொல்லு என்ன விசயம்..ரவீ…?”

 

“எதுக்காக தீபக்கை நீ இப்படி கஷ்டப்படுத்துற….அவன் மேல எந்த தப்புமில்ல… நான் தான் உன்னை அவாய்ட் செஞ்சேன்…பிகாஸ் நான் உன்னை அப்படி பார்க்கல…என்னை என் ப்ர்ண்ட் ப்ரோடக்ட் செஞ்சாங்கற ஒரே காரணத்துக்காக நீ இப்படி செய்றது தப்பு ராம்..நான் உன்ட்ட இதை எதிர்ப்பார்க்கல…” என முகம் வாட சொல்ல

 

“ஹே..!! சில் சில்யா….என்ன நீ  நான் வில்லன் ரேஞ்சுக்குப் பேசுற…அதையெல்லாம் நான் கடந்து வந்துட்டேன்…ரொம்ப ரெஸ்பான்சிபிளா மாறிட்டேன்….உன்னை நான் சைட் அடிச்சேன் தான் ஒத்துக்கிறேன்….ஆனா இப்போ நான் உன்ட்ட கேட்குறது ஜஸ்ட் யூர் ஃப்ர்ண்ட்ஷிப் தான்..இந்த ஆபிஸ்ல எனக்கு வேற யாரை தெரியும்..சரி நம்ம பசங்க தானேன்னு உங்க கிட்ட பழகலாம்னு பார்த்தா நீங்க….என்னடான்னா என்னை நெருங்க விடல…” என அவன் விளக்க

 

“அது..நீ மாறிட்டன்னு ஹௌ டூ வீ நோ…வந்து சொன்னாதானே தெரியும்…”

 

“எங்க சொல்ல வீட்டீங்க..?” என அவன் எதிர்கேள்வி கேட்க

 

“சரி..ப்ர்ண்டா நினைக்கிற நீ ஏன் தீபக்கை கஸ்டப்படுத்துற..?”

 

“ஏன் ரவி…உன்னையும் உஷார் பண்ண விட மாட்றான்..என் மொசக்குட்டி மோனியையும் உஷார் பண்ண விடமாட்றான்..பின்ன கடுப்பாவாதா..எனக்கு…?”  என கோபமாக கேட்க

 

“வாட்..மொசக்குட்டி..யூ மீன் மோனிஷா…”

 

“எஸ்..அதே அதே மோனிஷா மை மோனாலிசா..” என்றான் ரசனையாக.

 

அவள் அடப்பாவி என்பது போல் ஆதித்யராமை பார்க்க ,”

ஹே….நீ உடனே என் கேரக்டருக்கு கறுப்பு சாயம் பூசாத தாயே….நான் உன்னை ரசிச்சேன்…இப்பவும் சொல்றேன்..யூ லுக்  பியுட்டிஃபுல் பட்…ஐ அம் இன் லவ் வித் மோனி..ரொம்ப நல்ல பொன்னு…உன்னை ரசிச்சதுக்கும் இதுக்கும் நிறையா வித்யாசம்…டோட்டலி டிஃப்ரண்ட் தான்…ஓகேவா….?பட் மோனிசா ரொம்ப ரிசர்வ்டா இருக்கா….ஆனா அவ கூட உன் நண்பன் கூட தான் பேசுறா…ஒரு பொண்ணை விட மாட்டானா அவன்…..நீ,ராஜி மோனி…” என்று பேசிக்கொண்டே போனவனை நிறுத்தியவள்,

 

“ஜஸ்ட் ஸ்டாப் ராம்..தீபக் அப்படிப்பட்டவன் இல்லை…அவன் ரொம்ப ஜாலி டைப்.ப்ர்ண்ட்லி நேச்சர்….உன்னை மாதிரி ரிசர்வ்ட் இல்ல…அதான் பொண்ணுங்க அவன்ட்ட பேசுறாங்க….அவன் ராஜியை தான் விரும்புறான்..மத்த எல்லார்கிட்டையும் அவன் தோழமையோட தான் பழகுறான்….” என நண்பனை விட்டுக்கொடுக்காது பேச

 

“ நிஜமாவா சொல்ற..”

 

“எஸ்”

 

“அப்போ ஓகே விடு..எங்க இவன் வில்லனோன்னு ஒரு டவுட்….?”

 

“ஹாஹா…இங்க முதல்ல யாரு ஹீரோன்னே தெரில..அதுக்குள்ள சார் வில்லனை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாச்சு….” என கிண்டலடிக்க

 

“  நான் அவன்ட்ட சாரி கேட்டுக்கிறேன் ரவி…..” என்றான் மனதார ,பின்பு அவள் செல்லும் முன் ,

 

“ஹே…நீ ரொம்ப அழகா இருக்க ரவீ…” என்று கண்ணடிக்க

 

“மோனிஷாட்ட சொல்றேன்..” என்றபடி ஒற்றை விரலை நீட்டி அவனை மிரட்டி விட்டு சென்றாள் ரவீணா.

 

இப்படியே நாட்கள் ஓட அந்த சுபயோக சுபதினமும் வர , காலை பிரம்ம மூகூர்த்த்ததில் திருமண மண்டபத்தை விட்டு ஓடி போனாள் மணப்பெண் பூமிஜா.இந்த செய்தி கேட்டு அனைவரும் நிலைகுலைந்து போக , யாரும் எதிர்ப்பாராத வகையில் ரவீணாவுக்கும் ஆதித்யனுக்கும் இருவரின் விருப்பமின்றி சிறப்பாய் நடைப்பெற்றது திருமணம்..

Advertisement