Advertisement

 

தேடல் 5:

 

திருமணம் முடிந்த நாலாவது நாள் ஹர்ஷா ஆபிசுக்கு செல்ல , அவன் சென்றதைப் பார்த்தவள் தானும் கிளம்பி  சென்றாள்.ஆபிஸ் சென்றதுமே ராஜி,தீபக் இருவரும் அவளை சூழ்ந்து கொள்ள ,

 

“எப்படி இருக்க..?” என ராஜி கேட்டது தான் போதும்,அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அணையை உடைத்துக் கொண்டு அழுகையாக வெளி வர,

 

தோழியைக் கூட்டிக் கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.அங்கே ரவீணா வெகு நேரம் ராஜியின் தோளில் சாய்ந்து அழுது சிறு பிள்ளையாய் ஆறுதல்  தேடினாள்.தாயிடம் , கணவனிடம் அவள் எதிர்ப்பாத்த ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பை பொழியும்  தோழியிடத்தில் தன் பாரத்தை இறக்கி வைத்தாள்.

 

“ஏண்டி…இப்படி அழற….ஹர்ஷா சார்…உன்னை ரொம்ப டார்ச்சர் செய்றாரா..?”

 

“சீ…சீ..அதெல்லாம் இல்லடி…தீடீர்னு உன்னைப் பார்த்ததும் அழுகை வந்துடுச்சு அதான்…” என்றவள் முகம் கழுவி விட்டு வெளியே வர,

 

அனைவரும் கேண்டினுக்குப் போக , அங்கே தீபக் ரவீணாவின் கையைப் பிடித்துக் கொண்டு ,

 

“குட்டச்சி..நல்லா இருக்கியா நீ….?ஏன் இப்படி அழுதிருக்க…உன் முகமே சரியில்ல…எதாவதுன்னா சொல்லுடி…நாங்க இருக்கோம்..” என தீபக் ஆறுதலாய் அவளை தோளோடு அணைத்து  சொன்னான்.

 

“ ரவீ….இப்படி ஆகும்னு யாரும் எதிர்ப்பார்க்கல தான்…பட்…ஹர்ஷாவுக்கும் உனக்கும் எதாவதுன்னு சொல்லு…..எதையும் மனசுக்குள்ள போட்டு வைச்சுக்காத..வீ ஆர் தெர் ஃபார் யூ…” என்றவனைப் பார்த்து புன்னகைத்து,

 

“அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல…ஐ கேன் மேனேஜ்டா…” என்றாள் ரவீணா.

 

அதன்பின் வேலைகள் ஓட , இரவு வீட்டிற்கு வந்ததும் அவள் மாமியாரோடும் நாத்தனாரோடும் பேசி கொண்டு இருந்தாள்.ஹர்ஷாவை முடிந்த வரை தவிர்த்தாள்.

 

இரவு அவன் உறங்கிய பின் அறைக்குச் செல்ல ,அவனோ தூங்காமல் அமர்ந்திருந்தான்.இவள் அவனைக் கண்டுகொள்ளாமல் மெத்தையில் படுக்க போக ,

 

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க நீ…? எனக்குப் பிடிக்காததை செஞ்சு என்னை டென்சன் செய்ய முடிவு பண்ணிட்ட போல….இந்த கருமத்துக்குத் தான் கல்யாணம்லாம் வேண்டாம்னு எல்லாரும் சொல்றான் போல..” என எரிந்து விழ

 

“நான் என்ன செஞ்சேன்னு இப்படி திட்டுறீங்க..நானா உங்களை கல்யாணம் செஞ்சிக்க சொன்னேன்..?” என இவளும் பதிலுக்குப் பேச ,

 

“அம்மா தாயே….தெரியாம செஞ்சுத் தொலஞ்சிட்டேன்…அதுக்காக என்னை அவமானப்படுத்துவியா.. நீ?” என கத்த

 

“நான் என்ன அவமானப்படுத்தினேன்…?” என்றாள் முகம் சிறுக்க,

 

“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத நீ..என்னமோ உன்னை சித்ரவதை செய்ற மாதிரி உன் ப்ர்ண்ட்ஸ்ட்ட சொல்லி அழற ?”

 

அவள் அமைதியாக நிற்கவும் ,

“என்னமோ நான் உன்னை கொடுமை செய்ற மாதிரி அந்த தீபக் உன்னை ஆறுதல் படுத்துறான்….? இங்க பார் ரவீணா உனக்கு உன்னோட ப்ரண்ட்ஷிப் தான் முக்கியம்னா போய்டு…..நான் எதுவும் சொல்லல…முன்னாடியே நான் உங்கிட்ட சொல்லியிருக்கேன்….இப்படி பசங்க கூட பழகாதன்னு.என் மனைவிக்குன்னு நான் சில எதிர்ப்பார்ப்பு வைச்சிருக்கேன்…அதை மீறி நீ நடக்க மாட்டேன்னு நம்புறேன்….” என அவன் அழுத்தமாக மொழிய

 

“அதே எதிர்ப்பார்ப்பு எனக்கும் இருக்கும்ல….எனக்கு கணவரா வரவர் என்னை மட்டுமே  நினைக்கனும்னு நான் எதிர்ப்பார்த்தேன்..ஆனா நம்ப எதிர்ப்பார்க்கறதா நடக்குது..?” என அவள்  மனதில் எழுந்த வினாவை டக்கென அவனை போல் கேட்க முடியவில்லை.

 

அவளோ பதில் பேசாது படுக்க , ‘திமிரு…உடம்பெல்லாம் திமிரு….’என்று அர்சித்தபடி அவனும் வந்து படுத்தான்.

 

ரவீணாவுக்கு அவனது நிலை அவளுக்குப் புரிந்து போனது.ஒரு ஏமாற்றத்தை சந்தித்தவன் மீண்டும் அப்படி நடந்து விடுமோ என எண்ணுகிறான்.அந்த எண்ணத்தை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் அவளைக் காயப்படுத்துகிறான்.தன்னால் முடிந்த வரை அவனுக்குத் தன்னை புரிய வைக்க வேண்டும் என தீர்மானித்தவள் உறங்கிப் போனாள்.

 

ஆனால் ஹர்ஷாதித்யனுக்குத் தன்னைப் புரிய வைக்க வேண்டும் என எண்ணியவள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னைத் தொலைக்கத் தொடங்கினாள்.அவன் மனம் நோக கூடாது என நினைத்தவள் தன் மனதைப் பற்றி நினைக்கத் தவறினாள்.

 

மறு நாள் ஆபிஸுக்கு அவனுடனே கிளம்பி சென்றாள்.இருவருக்கும் ஆபிஸ் பஸ் வரும் என்பதால் ஒன்றாகவே அவர்கள் ரூட்டில் பஸ் வரும் இடத்துக்குப் போனார்கள்.பஸ் வந்தவுடன் ஹர்ஷா முதலில் ஏறாமல் ,

 

“நீ  முதல்ல ஏறு…” என ரவீணாவுக்கு வழி விட்டான்.அவளும் பதில் பேசாமல் ஏறினாள்.அவளுக்கும் அவனுக்கும் திருமணம் ஆன விசயம் அவர்கள் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது.கார்பெரேட் நிறுவனம் என்பதால் பணிபுரியும் அனைவரிடமும் நட்பு பாராட்ட முடியாது என்பதால் ஹர்ஷா அவனுக்கு மிகவும் நெருங்கிய  நண்பனான முரளியிடம் மட்டுமே அவனது திருமணம் செய்தியை சொன்னான்.அவன் மட்டுமே திருமணத்திற்கு வர அவனுக்கு ரவீணாவுக்கும் ஹர்ஷாவுக்கும் திருமணமான விசயம் தெரியும்.

 

 ஹர்ஷா வழக்கம்போல் முரளிக்குப் பக்கத்தில் போய் அமர ,

“டேய்….ஆதி….கட்டின பொண்டாட்டி இருக்கும்போது என் பக்கத்துல வந்து உட்கார…அவனவன் ஃபிகர பார்த்தா ப்ர்ண்டை கழட்டி விடுவான்..ஆனா நீ ..?” என பரிகாசமாய்க் கேட்க

 

அவனை முறைத்த ஹர்ஷாதித்யன் , “நம்ம மட்டும் அப்படி  நினைச்சா போதுமா…மேடமும் நினைக்க வேண்டாமா..?” என்றான் பெருமூச்சேறிந்தபடி. நேற்றிரவு அவன் சொன்னதற்குப் பதில் பேசாமல் அவள் சென்றது அவனுக்குக் கோபத்தையும் வருத்தத்தையும் சரிபாதியாக உண்டு பண்ணியிருந்தது.

 

“ஏன் டா…கல்யாணமாகி நாலு நாள் தானே ஆச்சு….என்னமோ நாற்பது வருசம் ஆன மாதிரி சீனைப் போடுற நீ…இங்க பாரு மச்சான்…பாவம் டா ரவீணா..அக்கா செஞ்சதுக்கு அவ என்ன செய்வா..சொல்லு….உன்னை விட அவ பாவம்டா…கொஞ்சம் டைம் கொடுடா..நல்ல லைஃப் கிடைச்சிருக்கு உனக்கு மிஸ் பண்ணிடாதடா….கொஞ்சம் விட்டு கொடுத்து போ…” என நண்பனின் நலனுக்காக சொல்ல,

 

“ப்ச்…புரியுதுடா…எனக்கும் எல்லாமே புரியுது…ஆனா மனசோட ஓரத்தில ஒரு வலி..” என சொன்ன நண்பனை முரளி அதிர்ச்சியோடு பார்த்து,

 

“டேய்..என்னடா நீ இன்னும் பூமிஜாவை மறக்கலயா…?” என

 

“அடேய்..முட்டாள் முரளி….உளறாதடா…ரவீணா கேட்டா அவ்வளவுதான்.. நான் ஏன் டா அவளை நினைக்கிறேன்..” என முதுகில் அடித்து   ஹர்ஷா சொல்ல,

 

“போடாங்….நீதானடா..இப்போ…மனசோட ஓரத்துல வலின்னு டயலாக் விட்ட..” என அவன் கடுப்போடு சொல்ல

 

“ப்ச்….நான் சொன்னதே வேறடா..ஊரைக் கூட்டி சொந்த பந்தம்ல கூடி இருக்கற நேரத்துல என்னை வேண்டாம்னு ஒருத்தி ஓடிப் போனா வலிக்காதாடா.மனைவியா வரப்போறவன்னு ஒரு ஆசை இருக்கத்தாண்டா செஞ்சது…ஆனா எப்போ அவ என்னை வேண்டாம்னு நினைச்சாளோ அதுக்குப்புறம் அவளையே நினைச்சிட்டு இருக்க நான் என்ன தேவதாஸா..?இவன் வேற..எனக்கு வலிச்சதுன்னு சொன்னதுக்குக் காரணம்..அன்னிக்கு நடந்த அவமானம்.இப்போ குற்றவுணர்ச்சியும் சேர்ந்திடுச்சு…ரவீணாவை அப்போவே நான் கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன்.இவங்களாம் சேர்ந்து கட்டி வைச்சிட்டாங்க…அவளையும் தேவையில்லாம வந்து இந்த பந்தத்துல சிக்க வைச்சிட்டாங்க…லைஃப் ஸ்முத்தா போகனும்னு  நினைக்கிறவன் நான்.எனக்கு இப்படி ஒரு ப்ர்ச்சனை.ஊப்ஸ்..” என்றவன் இருக்கையில் பின்னால் சாய்ந்தான்.

 

 நண்பனின் கையை ஆதரவாகப் பிடித்தவன் “விடு மச்சான்…ப்ரச்சனை வரதே சமாளிக்கத்தான்..ரவீணாவெல்லாம் ப்ர்ச்சனையாடா..உனக்காக கடவுள் கொடுத்த கிஃப்ட்னு நினைச்சிக்கடா.அந்த பொண்ணை நல்லா பார்த்துக்கோ..” என்றான்.

 

“அவளைப் பார்த்துக்க தான் டா நினைக்கிறேன்..எங்க பார்க்க விடறா…என்னைக் கண்டாலே ஒளிஞ்சிக்கிறா…சில நேரம் நானும் என்னோட எரிச்சலை அவ மேல காட்டிடுறேன்..இனிமேலாவது அப்படி ஆகாம பார்த்துக்கிறேன் டா முரளி..உன்ட்ட பேசினதும்தான் மனசு ஃப்ரியா இருக்கு..” என்றான் ஆத்மார்த்தமாக.

 

ரவீணாவோ சீட்டில் ஏறியமர்ந்ததுமே களைப்பில் உறங்கி விட்டாள்.ஆபிஸ் வந்தவுடன்  ஹர்ஷா தான் அவளை எழுப்பினான்.

 

அதன்பின் அலுவலகத்தில் இருவருக்கும் வேலைகள் சரியாக இருந்தது.காலையில் டீ ப்ரேக்கில் தீபக்கைக் கண்டவள் ,மனதை திடமாக்கிக் கொண்டு பேச முனைய,

 

தீபக்கே அவளிடம் வந்து , “ஹேய்…..குட்டச்சி…வா வா சேண்ட்விச் வாங்கினேன்..எடுத்துக்கோ..” என அவன் கையில் இருந்த சாண்ட்விச்சை கொடுக்க

 

அவளோ , “வேண்டாம் தீபக்..நான் உன்ட்ட ஒரு விசயம் சொல்ல வந்தேன்.”

 

“சொல்லுடி”

 

“இனிமே என்ட்ட பேசாதடா….நாம டிஸ்டன்ஸ் கிப் அப் பண்றதுதான் நல்லது..” என சொல்ல,அவனோ “ஏன் ரவீ..என்னாச்சு உனக்கு…லூசாயிட்டியா நீ ” என பதட்டமாக கேட்க

 

“உனக்கு என் லைஃப் நல்லாயிருக்கனும்னா பெட்டர் ஸ்டே அவே” என கட் அண்ட் ரைட்டாகப் பேச , தீபக் அவள் கையைப் பிடித்துக் கொண்டு

 

“என்னாச்சுடா…சொல்லு..” என சொல்ல இரங்க முயன்ற மனது ஹர்ஷாவின் வார்த்தைகளை எண்ணி மருகியது.இனியும் இவள் நட்போடு தீபக்குடன் பழகினாலும் கூட ஹர்ஷா எங்கு தங்கள் நட்பைக் கொச்சைப்படுத்தி விடுவானோ என  பயந்தாள் ரவீணா.தான் காயப்பட்டாலும் பரவாயில்லை தனது நண்பனை ஹர்ஷா காயப்படுத்தி விடுவானோ என பயந்தவள் தனது நட்பதிகாரத்துக்கு முடிவுரை எழுத  நினைத்தாள்.

 

“தீபக்..ப்ளீஸ் கையை விடுடா…இனிமே என்ட்ட பேசாத…ஜஸ்ட் லீவ் மீ.உன் ப்ர்ண்ட்ஷிப் வேண்டாம்..போதுமா…?இப்படிதான் ஹார்ஷா பிஹேவ் செய்வியாடா இடியட்” என கத்த

 

அவளது கன்னத்தில் பளாரென்று அறைந்தான் தீபக்.அதைப் பார்த்து விட்டு ராஜி வந்து தீபக்கைப் பிடித்து ,

“என்னாச்சுடா..ஏன் இப்படி நடந்துக்குற..?” என கேட்க

 

அவளை உதறியவன் , “போடி….இவளுக்கு என் ப்ர்ண்ட்ஷிப்பே வேண்டாமாம்..இவ புருஷன் சொல்லிட்டான் போல….என்னைத் தூக்கிப் போட்டுட்டா….இனிமே என் முகத்துல முழிக்காத நீ..நல்லா இருந்தாலும் சரி நாசமா போனாலும் சரி..நான் உன் லைஃப்ல இல்லடி…” என்று சீறி விட்டு வேகமாகச் சென்றான் தீபக்.

 

ராஜி ரவீணாவைப் பிடித்து  என்னவென்று விசாரிக்க ,அவள் அழுகையில் கரைந்தாள்.

 

“என்னாச்சு ரவீ…?ஏன் அவன்ட்ட இப்படி பேசினே..பாரு அவன் எப்படி ஃபீல் பண்றான்னு…” என ராஜி தன் பங்குக்குப் பேச

 

அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து அவள் தலைசாய்த்து அழ,

“என்னாச்சுடி ஹர்ஷா சார் எதாவது சொன்னாரா..தீபக்கிட்ட முன்னாடியே பேச கூடாதுன்னு சொன்னவர் தானே…உன்னை சந்தேகப்படுறாரா..?” என காட்டமாகக் கேட்க

 

“சந்தேகப்படல டி..ஆனா என்னை நம்ப மாட்றார்..”

 

“இரண்டும் ஒன்னுதான்..” என அவள் நொடித்துக் கொள்ள

 

“இல்ல ராஜிமா..அவருக்கு என் மேல நம்பிக்கை இல்ல..எல்லாம் எனக்கு அக்கான்னு ஒருத்தி இருந்தாளே அவளைக் கொல்லனும்டி…சை…எப்படி இருந்த லைஃப்..நாலே நாள்ல என்னை மொத்தமா வாழ்க்கையை வெறுக்க வைச்சிட்டா…அவர்ட்ட நான் என்னை எப்படி புரிய வைக்கறது..இவனே புரிஞ்சிக்க மாட்றானே….” என்றாள் அழுகையோடு.

 

“சாரிடி ரவீ…எந்த  நேரத்துல வாயை விட்டேனோ..அப்படியே ஆகிடுச்சு.” என ராஜி வருந்த

 

“விடுடி…நீ என்ன செய்வ..இதே என்னோட கல்யாணம் நார்மலா நடந்திருந்தா நானே சண்டை போட்டிருப்பேன்.ஆனா இப்ப இருக்க நிலைமைல என்னால இனியும் எந்த ப்ராப்ளத்தையும் ஃபேஸ் பண்ண முடியல..இருக்கறதை சரி செய்ய தான் நான் முயற்சி செய்றேன்..” என்றவளை ஆறுதலாக அணைத்த ராஜி ,

 

“எல்லாம் சரியாகிடும்.. நான் தீபக்கை சரி செஞ்சிடுறேன்..நீ ஃபீல் பண்ணாத.” என்றாள்.

 

மதியம் எல்லாரும் சாப்பிட செல்ல , ரவீணா மட்டும் அவளது கம்ப்யூட்டரில் புதையல் எடுப்பவள் போல் உற்றுப் பார்த்தாள்.என்னதான் முயன்றும் அவளால் கோடில் உள்ள தவறைக் கண்டு பிடிக்க முடியவில்லை.ராஜி அழைத்தும் கூட சாப்பிட போகாமல் அதை சரி செய்ய முனைந்தாள்.ஹர்ஷா ரவீணாவை   ராஜியோடு காணாமல் தேடினான்.

 

‘என்ன மூணு குரங்கும் ஒன்னதானே சுத்தும்…இந்த தீபக் ராஜி மட்டும் இருக்காங்க..என் சம்சாரம் எங்க..’ என்றபடியே கண்களால் கேண்டினில் தேடியவன் அவளைக் காணாது மீண்டும் அவர்கள் வேலை  செய்யும் தளத்திற்குச் சென்றான்.

 

அங்கே ரவீணா வெகு  நேரமாக ஏதோ செய்வதைக் கண்ட ஆதித்யராம் அவளிடம் வந்து ,

 

“என்ன ரவீணா..? வாட் ப்ராப்ளம்….லன்சுக்குப் போகல…” என விசாரித்தான்.

 

“இல்ல ராம்…இந்த கோட் ரன் ஆகல…கொஞ்ச நேரத்துல நான் கொடுக்கனும்.” என சொல்ல  அவளை நகர சொன்னவன்  கண நேரத்தில் அதை சரி செய்தான்.அதைக் கண்டு ஆச்சரியமானவள் ,

“எப்படி இப்படி..?” என

 

அவள் தலையில் தட்டியவன் ,”அதான் நீ இப்படி இருக்க..நான் டீம் லீடா இருக்கேன்…கொஞ்சம் கவனிச்சிருந்தா சால்வ் செஞ்சிருப்ப….ஓகே டைம் ஆச்சு..போய் சாப்பிடு..” என்றபடி செல்ல , ரவீணாவும் புன்னகையோடு எழ , அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவள் கணவன் ஹர்ஷாதித்யன்.

 

வந்தவன் , “என்னடா அங்க காணுமேன்னு நினைச்சேன்…உனக்கு என்ட்ட டவுட் கேட்க தோணாதே…உன் ப்ர்ண்ட்ஸ் சொல்லிக் கொடுத்தா தான் புரியுது மேடம்க்கு..இல்ல..” என சீண்டலாகப் பேச

 

ஏற்கனவே தீபக்கின் நட்பு முறிவில் மன வருத்தத்தில் இருந்தவள் , ஹர்ஷாவின் பேச்சில் கடுப்பானாள்.வெறும் சந்தேகத்தை சொல்லிக் கொடுத்ததற்கும் குற்றம் கண்டுபிடிப்பவனைக் கண்டு அவளது உள்ளம் கொதித்தது.

 

ஹர்ஷாவோ அவள் தன்னை உரிமையாக நினைத்துக் கேட்கவில்லை என்ற ஆதங்கத்தில் கேட்க அவளோ அவன் சந்தேகப்படுகிறான் என எண்ணிக் கொண்டாள்.அங்கு அலைவரிசை தப்பாக தன் கைவரிசையைக் காட்டியது.

 

அடக்கப்பட்ட கோபத்தோடு “மிஸ்டர்.ஹர்ஷா…இங்க நான் யார்ட்ட டவுட் கேட்கனும்னு  நீங்க முடிவு செய்ய கூடாது…இட்ஸ் மை சாய்ஸ்…இது ஒன்னும் வீடு இல்லை..யூ ஆர் மை டீம் லீட்…தட்ஸ் இட்…நான் நீங்க கொடுத்த வேலையை செய்யலன்னா மட்டும் நீங்க என்னை கேள்வி கேட்கலாம்..மத்தபடி என்னோட பெர்சனல் ஸ்பேஸ்ல குறுக்க வராதீங்க..மைண்ட் இட்..” என சீறி விட்டு சென்றாள் ரவீணா.

 

ஹர்ஷாவோ மனைவியின் செயலில் அதிர்ந்து போய் நின்றான்.

Advertisement