Advertisement

தேடல் 1 :

 

‘ராம நமோ ராம நமோ சாய் ராம நமோ

தசரத நந்தன ராம நமோ’

என்று பூஜையறையில் விளக்கேத்தி பாடி வித்யாவதி

 

 “வித்யா வித்யா…….” என கணவரின் அழைப்புக் கேட்டு விளக்கேற்றி விட்டு ஹாலுக்கு ஓடி வந்தார் .

 

“என்னங்க……எதுக்குக் கூப்பிட்டீங்க….?”

 

“நான் பையன் ஃபோட்டோ கொடுத்தேனே…பூமிஜா என்ன சொன்னா?” என வினவினார் வித்யாவதியின் கணவர் செந்தில்.

 

செந்தில்குமார் தாசில்தாராக பணிபுரிகிறார்.அவருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் பூமிஜா.செல்லமாய் பூமி.இளையவள் ரவீணா.மிகவும் சுட்டியானவள்.பூமிஜாவும் ரவீணாவும் இரு வேறு பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.ரவீணா இப்போதுதான் கல்லூரிப் படிப்பு முடித்திருந்தாள்.சில மாதங்களாக வேலைக்குப் போகிறாள்.பூமிஜாவுக்கு இருபத்து நான்கு வயது ஆனதால்  மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கினார் செந்தில்.

 

“பூமி நம்ம விருப்பம்னு சொல்லிட்டாங்க….” என பூரிப்புடன் சொன்னார் வித்யா.

 

காதல் ,கீதல் என்றெல்லாம் போகாமல் தம் மகள் தங்களுக்கு விருப்பமானவனையே திருமணம் செய்ய மறுப்பெதும் கூறாமல் ஒத்துக்கொண்டதால் வந்த பூரிப்பு அது.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு வித்யா….நம்ம பொன்னு நம்ம பேச்சைக் கேட்டு  நடந்து இத்தனை வருசமா நம்ம பெயரைக் காப்பாத்திட்டா….ரவியும் இதே மாதிரி கேட்டான்னு நல்லா இருக்கும்…..ம்ம்…” என அவர் பெருமூச்சு விட ,

 

“ஏங்க…ரவிம்மாவும் நம்ம சொல்பேச்சு தான் கேட்பா…என்ன கொஞ்சம் வால்தனம் ஜாஸ்தி…..” என சின்ன மகளுக்கு சர்டிஃபிகட் தர ,

 

“அது எனக்கும் தெரியும் வித்யா……சரி வா….எதுக்கும்  நம்ம பூமிக்கிட்ட ஒரு வார்த்தை நேர்ல கேட்டாதான் திருப்தி……..” என்றவர் பெரிய மகளின் அறைக்குச் சென்றார்.பின்னோடே அவரது மனைவியும் சென்றார்.

 

“பூமிம்மா…..உனக்குப் பையனைப் பிடிச்சிருக்காம்மா…..?” என மகளது விருப்பம் கேட்டார்.

 

“எனக்குப் பிடிச்சிருக்குப்பா..” என பூமிஜா சம்மதம் சொல்ல ,

 

அவளது தங்கையான ரவீணா குரங்கு போல் எங்கிருந்துதான் வந்தாளோ ,

 

“ஏன் பூமி….அந்த பம்ளிமாஸையா பிடிச்சிருக்குன்னு சொல்ற…?” என பாவம் போல் கேட்க

 

“ரவிம்மா……வாயைக் குறை…..” என அதட்டினார் செந்தில்.

 

“எவ்வளவு இன்ச் பா குறைக்கனும்னு சொல்லுங்க…நான் கரெக்டா குறைச்சிறேன்….” என பவ்யமாய் சொல்ல ,

 

“வாயை மூடு…ரவிம்மா….வர வர வாய் ரொம்ப பேசற நீ…….அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்…?” என அவர் அவளை அதட்ட ,

 

“குறையா நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கா….அவரு மொத்தமா நிறைஞ்சி தான இருக்காரு…எங்க குறைஞ்சிருக்காரு…” என முனுமுனுக்க ,

 

ஹர்ஷா கொஞ்சம் புஷ்டியாக இருப்பான்.அதனால் தான் ரவீணா கிண்டல் செய்தாள்.அமுல் பேபி ரகம் அவன்.பூமிஜா மஞ்சள் வண்ணத்தில் மங்களகரமாய் இருப்பாள்.

 

“ரவிம்மா சொல்றதெல்லாம் நீ காதில வாங்காத பூமி……..அவர் இவ கம்பெனில தான் பெரிய போஸ்டிங்க்ல இருக்காரு……ஒரே ஒரு தங்கச்சி…..அம்மா மட்டும் தான்…..நல்ல பையன்…எந்த கெட்ட பழக்கமும் இல்லை…….கை நிறைய சம்பாதிக்கிறார்.சொந்த வீடு இருக்கு……நல்ல குடும்பமும் கூட…அவங்க அப்பா மிலிட்டரி மேன் வேற…..” என பெரிய மகளிடம் மாப்பிள்ளையின் தகுதிகளைத் தம்பட்டம் அடிக்காத குறையாக கூற…

 

“என்னது…என் கம்பெனியா…வாவ்வ்வ்வ்வ்வ்…சம ஜாலி…அப்போ மாம்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுவாரு….பூமி…எப்பாடு பட்டவாது இவரை உன் ஹஸ்பண்ட் ஆக்கிக்கோ……என் வேலையெல்லாம் அவர் தலையில கட்டிடலாம்….” என அறிவு ஜீவியாய் ஆலோசனை வழங்கினாள்.

 

“அப்பாடா…….ஒரு வழியா  நீயும் ஒத்துக்கிட்டியா……சரி எப்போ அவங்கள பொன்னுப் பார்க்க வர சொல்ல….?” என செந்தில் கேட்க

 

“என்னங்க…நாளைக்கே நல்ல நாள் தான்….அவங்களுக்கு வசதி பட்டா வர சொல்லுங்களேன்….” என்று கூற செந்திலும் மாப்பிள்ளை ஹர்ஷாவின் தாயார் வைதேகியிடம் அலைபேசியில் பேச போனார்.

 

அச்சமயத்தில் ரவீணாவும் மாப்பிள்ளையின் பெயரை சொல்லி தனது நண்பனிடம் விசாரிக்க சொன்னாள்.

 

ஏனென்றால் அவள் அக்காவின் வாழ்க்கையாயிற்றே..!!

 

அவளது நண்பன் தீபக் விசாரித்து நற்சான்றிதழ் வழங்கிய பின் தான் அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

 

அந்த மகிழ்வு தந்த உற்சாகத்தோடு , அக்காவிடம் வம்பு செய்யப் போனாள்.

 

“பரவாயில்ல உன் பெயருக்கேத்த மாதிரி பூமிக்கணக்காதான் இருக்காரு மாம்ஸ்…” என அக்காவை ரவீணா வம்பிழுக்க ,

 

“உனக்கு அடி விழ போதுடி…அவர் ஒன்னும் அவ்வளவு குண்டெல்லாம் இல்லை….”

 

“ஆமா..அவ்வளவு குண்டு இல்ல….ஆனா குண்டு தானே…” என கை நீட்டி கேலி செய்ய

 

“ரவிம்மா……..ஒருத்தவங்க அபியரன்ஸ் வைச்சு கிண்டல் பண்ணக்கூடாதுமா…..இது நான் இவருக்குன்னு சொல்லல…பொதுவாவே சொல்றேன்…நல்ல ஃபிட்டா இருக்கவன்லாம் ரொம்ப நல்லவனாவ இருக்கான்……கொஞ்சம் வொர்க் அவுட் செஞ்சா அவரும் ஃபிட் ஆயிடுவாரு……புரியுதாடி….” என நிதர்சனம் சொல்ல

 

“அச்சோ அக்கா…….நான் சும்மா கிண்டல் பண்ணினேன்….இதுக்கு நீ இவ்வளவு விளக்கம் சொல்லத் தேவையே இல்லை…எனக்கு பம்ளிமாஸ்…..சாரி சாரி மாம்ஸை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு….அமுல் பேபி மாறி க்யூட்டா இருக்காரு……..உன் கலருக்கு ஈகுவளா இருப்பார்……சோ ஸ்வீட்…. ஃப்.பில ஃபோட்டோஸ் கூட பார்த்தேன்……மனுசனுக்கு சிரிச்சா குழி விழுது பூமி……அப்பா கொடுத்த ஃபோட்டோல தான் அப்படி இருக்காரு…..ஆனா இப்போ அப்லோட் பண்ண ஃபோட்டோஸ்ல…சமையா இருக்காரு…சோ ஹாண்ட்சம் தெரியுமா…….”

 

“ம்ம்….” என அவள் ஆமோதிக்க

 

“ஏன் பூமி…மாம்ஸுக்கு இலவச இணைப்பு எதும் இல்லையா….?” 

 

“என்னடி…?” என பெரியவள் புரியாமல் கேட்க

 

“இல்ல…..தம்பில்லாம் இல்லயா…இருந்தா நான் கரெக்ட் பண்ணி……” என பேசிக்கொண்டு போனவளைத் தடுத்தவள்

 

“ரவிம்மா…..அப்பா சொன்னதை நீ கேட்கல……..அவருக்கு தங்கச்சிதான்..”

 

“ப்ச்…டூ பேட்…….நான் சித்தப்பா பெரியப்பா பசங்க முறையில கேட்டேன் டி…”

 

“அடிங்க….நான் வேணும்னா நாளைக்குக் கேட்டு சொல்றேன்…..”

 

“சீ…சீ…போடி நான் ஏதோ பேச்சுக்கு சொன்னேன்…அப்பாக்குத் தெரிஞ்சா பிச்சிடுவாரு,,,மனுஷன் ஏற்கனவே காண்டுல இருக்காரு….” என பயம் கொள்ள..

 

“ம்ம்….சரி…அப்போ….போ…நான்…….தூங்கனும்………” என சொல்ல ரவீணாவுக்கும் டயர்டாக இருந்ததால் அவளும் மேலும் வாயடிக்காமல் உறங்கப் போனாள்.

 

தங்கை சென்றதும் தன்னவனின் பிம்பத்தை ரசிக்கத் தொடங்கினாள் பூமிஜா.

 

 

“ஏன்மா இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னா ஏன் கேட்க மாட்றீங்க….?.முதல்ல சிந்துக்கு முடியட்டும்…அப்புறமா….எனக்குப் பார்க்கலாம்…” என சொல்லிக்கொண்டிருந்தான் ஹர்ஷா.

 

அவன் தாய் வைதேகியோ , “ஹர்ஷா…..அம்மா சொன்னா கேளுடா……சிந்து இன்னும் ஒரு வருஷம் படிக்கனும்……உனக்கு இன்னும் மூணு மாசத்துல குருபலன் முடிஞ்சிடும் கண்ணா….அதான் அம்மா அவசரப்படுறேன்…”

 

“ப்ச்…போங்கம்மா…இப்போதான இருபத்தேழு ஆகுது….”

 

“நீ சும்மா….இருடா……எனக்குத் தெரியும்….பூமி ஃபோட்டோ பார்த்தல…..நல்லா இருக்காளா…உனக்குப் பிடிச்சிருக்கா….?”

 

“ம்ம்…நல்லா தான் மா இருக்கா….ஆனா பாத்த உடனே எப்படிம்மா பிடிக்கும்…..எனக்கு ஒன்னும் தோணல….”

 

“அண்ணா….உனக்கு பார்த்தாலே பிடிக்கறது பிரியாணி தான்..எனக்கு ஐஸ்கீரிம்…..” என அவன் தங்கை சிந்து கிண்டலடிக்க

 

“..அவ சொல்றது சரிதான்……பாத்த உடனே பட்டாம்பூச்சிலாம் பறக்க இது படமாடா…வாழ்க்கைடா…நிதர்சனம்…சிலருக்கு பார்த்த உடனே பிடிக்கும்….சிலருக்குப் பழகின உடனே பிடிக்கும்……..”

 

 “ம்ம்…….”

 

“எனக்கு அண்ணியைப் பார்த்த உடனே பிடிச்சிடுச்சுன்னா……உனக்குப் பொருத்தமா அழகா இருக்காங்க….”

 

“ம்ம்…சரிடா குட்டி…”

 

“அப்புறம் அம்மா…..எனக்கு லீவ் டைம்ல தான் கல்யாணம் வைக்கனும்…சொல்லிட்டேன்……”

 

“என் தங்கச்சி என்னைக்கு சொல்றாளோ அன்னிக்குத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்குவேன்…”

 

“நல்லா கேட்டுக்கோங்கம்மா….அண்ணா சொன்னதை….. நான் கேட்கிற மாறி டிரஸ்லாம் எனக்கு வாங்கித் தரனும்,…..”

 

“கண்டிப்பா குட்டி,….உனக்கு இல்லாததா….அண்ணா உனக்குன்னு தனியா பணம் தரேன்.உனக்குப் பிடிச்ச மாறி வாங்கிக்கோ…”

 

“நல்ல அண்ணா…..”

 

“ஆமாடி…நல்ல அண்ணா..நல்ல தங்கச்சி….சரி….பொன்னு வீட்ல நம்ம எப்போ ஃப்ரீன்னு கேட்டு ஃபோன் பண்ணாங்க…..நாளைக்குப் போகலாமாடா….”

 

“நாளைக்கு உன்னால வர முடியுமாடா…குட்டி…”

 

“ஹம்ம்..ஈவினிங் க்ளாஸை கட் அடிச்சிட்டு வரேன் அண்ணா..நோ ப்ராப்ளம்….”

 

“வாலு…க்ளாஸ்லாம் கட் அடிக்க கூடாது…..நம்ம நீ வந்தவுடனேயே போவோம்….”

 

“சரி…..அப்போ நான் அவங்க கிட்ட சொல்லிடுறேன்…நீங்க ரெண்டு பேரும்….கரெக்டா நாளைக்கு நாலு மணிக்குள்ள வீட்ல இருக்க பாருங்க…..என்னை டென்ஷன் படுத்தாதீங்க…” என்றார் ஹர்ஷாவின் தாய் வைதேகி.

 

மறு நாள் மாலையில் பெண்பார்க்கும் படலம் செவ்வனே சிறப்பாய் நடந்து முடிந்தது.இரு குடும்பங்களுக்கும் அதில் வெகு திருப்தி.அடுத்த மாதம் கடைசியில் வரும் மூகூர்த்தத்தில் திருமணம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

 

அடுத்த நாள் காலையில் பூமிஜா கேபில் ஏறிச் சென்றதும் , ரவீணா அம்மாவிடம் வந்து ,

 

“அம்மா…..அம்மா….அம்ம்ம்மா……” என கத்த

 

“என்ன வேணும்…ரவீமா….?”

 

“ஒரு தவுசண்ட் ரூபீஸ் வேணும் மா…..”

 

“எதுக்கு…”

 

“தீபக் பர்த்டேமா…….கிஃப்ட் வாங்கனும்…..”

 

பூமிஜாவும் சரி ரவீணாவும் சரி தங்களது சம்பளப் பணத்தை அப்படியே தாய் தந்தையிடம் கொடுத்து விடுவர்.அக்கௌண்ட்ஸ் ட்ரான்ஸ்ஃபர் என்பதால் பாங்கில் இருந்து பணத்தை செந்தில் தான் எடுப்பார்.அதுவும் தேவையென்றால் தான்.இதுவரை பூமிஜாவின் பணம் அப்படியே அக்கௌண்டில் தான் உறங்குகிறது.ரவீணாவும் அப்படியே தான்.தேவையென்றால் காரணம் சொல்லி பணம் வாங்கிக் கொள்வாள்.

 

தீபக் ரவீணாவின் உற்ற தோழன்.காலேஜிலிருந்து இப்போது வரை அவளது க்ளோஸ் ப்ர்ண்ட்.ஆகையால் வித்யாவும் மறுக்காமல் பணம் தந்தார்.

 

ஆபிஸுக்கு வழக்கம்போல் போனவள் , தனது வேலைகளில் கவனமாய் இருக்க , அவளது இன்னொரு நெருங்கிய சிநேகிதி ராஜி என்ற ராஜேஸ்வரி வந்தாள்.

 

“என்ன ரவீ……நேத்து அக்கா நிச்சயதார்த்தம் எப்படி நடந்தது…?மாம்ஸ்ட்ட பேசினியா..?”

 

“சூப்பரா போச்சு..அவருக்கு ஒரு சிஸ்டர் சிந்து…ரொம்ப நல்லா பேசினா……ஃபைனல் இயர் படிக்கிறா…..மாம்ஸ்…..ரொம்ப ஷை டைப்….போல…அமைதினா அமைதி…அப்படி ஒரு அமைதி……அப்பா கிட்ட மட்டும் தான் பேசினார்…ஆனா அத்தை சோ ஸ்வீட் எங்கிட்டையும் ரொம்ப அன்பா பேசினாங்க….அக்கா ரொம்ப லக்கி …நல்ல மாமியார்….”

 

“சரி..சரி..எங்க தீப்ஸ்….?”

 

“ராஸ்கல்……எங்காவது குடிச்சிட்டு விழுந்து கிடப்பான்…” என ராஜி திட்ட

 

“ஷட் அப்…ராஜி..பர்த்டே அதுவுமா அவனை திட்டாதே………அவன் எப்போ குடிச்சான்..நீ பார்த்த…?” என ரவீணா நண்பனுக்காகப் பரிந்து வர

 

“நேத்து உன் பெஸ்டி…..ரோட்ல..பீர் பாட்டில வைச்சிட்டு கத்திட்டு இருந்துச்சு..கூட நம்ம ஆபிஸ்ல உள்ள மத்த வானரங்களும்…”

 

“அவன் வரட்டும்……கேக்கிறேன்……” என்றவள் தீபக் வந்தவுடனே

 

“டேய்……தடியா…..என்னடா இவ சொல்றதெல்லாம் உண்மையா.நைட் சரக்கடிச்சியா டா…?”

 

“அப்போ நீ நான் சொல்றதை நம்ப மாட்டா… நான் தான் பார்த்தேன்னு சொல்றேன்ல…” என ராஜி சண்டைக்கு வர

 

“அப்போ அவ சொல்றதை நம்பி என்னை சந்தேகப்படுறியா டி…?” என தீபக் சொல்ல

 

“அடேய்…பக்கீஸ்….ஏன் படுத்துறீங்க………உன்னை நம்பி தான் அவன்ட்ட கேக்கிறேன் ராஜி….உன்னை நம்பி தான் டா..அவ சொன்னதை நம்பாம உங்கிட்ட விசாரிக்கிறேன்…..” என ரவீணா கத்த

 

“அவன் உன்னை  ஏமாத்தி ப்ளேட்டை மாத்துறான் டி….” என ராஜி போட்டுக்கொடுக்க

 

“ஏய்….சுருட்டை முடி..ஷட் அப் டி……ரவீமா…யூ கம்…” என்றவன் ரவீணாவின் தோளில் கைப்போட்டு அவளை கேண்டின் அழைத்துச் சென்றவன்

 

“நேத்து பசங்க பார்ட்டி கேட்டானுங்க..கொடுத்தேன்..கொஞ்சமா குடிச்சேன்……தப்புதான்…”

 

அவன் கையை விலக்கியவள் ,”ஏன் டா அப்படி செஞ்ச……குடிக்கிறது பேட் ஹாபிட்னு உனக்குத் தெரியாது….போடா..” என போக

 

“ஹேய்..ஹேய்……என்னடி….” என அவன் கையைப் பிடிக்க

 

“என்ன நொன்னடி….?”

 

“இனிமே குடிக்க மாட்டேன் புஜ்ஜு….நம்புடி குட்டச்சி..” என அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.

 

Advertisement