Advertisement

நெருங்கி வா முத்தமிடாதே(3)

மகளின் சத்தம் கேட்டு அவளது அறைக்குச் சென்றனர் ராமகிருஷ்ணனும் வசந்தியும்.மகள் தாலியைப் பார்த்து விட்டதைக் கண்டு அதிர்ச்சியில் அவர்கள் உறைந்து நிற்க .

 

சதுர்மதியோ கண்கள் கலங்கி ,கைகள் நடுங்க தாலியைக் காட்டி ,

, “…..ன்னப்..பா………….……து………?”   என பதட்டத்தோடு கேட்க

 

ராமகிருஷ்ணன் ,”மதிம்மா…..ஒன்னும் பதட்டப்படாதடா…….திரும்பவும் உனக்கு எதாவது ஆகிடபோகுது..” என்று பயத்தோடு சொல்ல

 

அய்யோ……….அப்பா……….இதுக்கு என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க………………..அம்மாநீயாவது சொல்லும்மா…..என….எனக்குக்….ல்…..யா…..….ம்…..ஆச்சா….” என்று குரல் நடுங்க கேட்க

 

வசந்தி மகளின் அருகில் சென்று அவள் கையைப் பிடித்துக் கொள்ள , ராமகிருஷ்ணன்  நிதானமாக ,”ஆமாம்டா மதி..உனக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தையே இருக்கு..” என்றதுதான் போதும் , அதிர்ச்சி தாங்காதவளாக அப்படியே கட்டிலில் தொப்பென விழுந்தாள்.

 

மதி………” என்று வசந்தி மகளை அணைத்துக் கொள்ள ,அவள் தந்தை மகளின் அருகில் அமர்ந்து , “மதிம்மாஅப்பா சொல்றதை பொறுமையா நிதானமா பதட்டமில்லாம கேட்கனும்டா…..” என

 

நான் அமைதியா கேட்கிறேன்ப்பா……….எனக்கு எதுவுமே தெரிலயேப்பா….ப்ளீஸ்ப்பாசொல்லுங்க……என்னாச்சு இத்தன வருசமான்னு சொல்லுங்க….”

 

ராமகிருஷ்ணனும் மகளிடம் எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

 

சரண்யாவை அந்த நிலைமையில பார்த்த பின்னாடி அதிர்ச்சி தாங்காம..நீ……” பைத்தியமாகி விட்டாய் என்று சொல்ல விரும்பாதவராய் ,

 

நீ இப்படி ஆகிட்டம்மா….அவளுக்கு ஒரு மாசம் வரைக்கும் டிரிட்மெண்ட் நடந்து ஒரளவுக்குக் குணமானாள்…..ரெண்டு மாசம் ஹாஸ்பிட்டலையே வைச்சுப் பார்த்தாங்க..அதுக்கு அப்புறமா உன்னை வந்து பார்த்தாஆனா நீ அவளைப் பார்த்தும் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிச்சட்ட…………….டாக்டர்ஸ்லாம் பார்த்தும் உனக்கு க்யூர் ஆகல..திலீப் வீட்ல உனக்கும் அவனுக்கும் பேசின அலையன்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க…….” என்று அந்த நாள் வேதனையில் அமைதியாக இருக்க , வசந்தி  தொடர்ந்தார்.

 

திலீப் வீட்ல உன்னை பைத்தியம்னு சொல்லி வேண்டாம்னுட்டாங்க….சொந்தக்காரங்களோட பேச்சு வேறஎல்லாம் சேர்ந்து அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு…… …..அப்போ ஹாஸ்பிட்டல்ல…..வைச்சு தான் மாப்பிள்ள உன்னை முதன்முதலா பார்த்தாரு……அப்பாவைப் பார்க்கிறதுல உன்னை நான் உட்கார வைச்சிட்டு கவனிக்காம விட்டுட்டேன்ஹாஸ்பிட்டல எங்கேயோ போயிட்ட உன்னை .மாப்ள தான்  பார்த்து எங்கிட்ட கூட்டிட்டு வந்தார்..”

 

எங்க கிட்ட வந்து உன்னைப் பிடிச்சிருக்கு கல்யாணம் செஞ்சிக்கிறேன்னாரு…….நீ மனநிலை சரியில்லாம இருக்கேன்னு சொல்லியும் கூட , அது தெரியும்..நான் பார்த்துக்கிறேன்னுட்டார்…..அதுக்கு முன்னாடி பயத்துல இருந்தஅப்பா இதைக் கேட்டதுமே சந்தோசத்துல ஆபரேசன் செய்ய ஒத்துக்கிட்டாரு ஆனா அவங்க வீட்ல ஒத்துக்கல…..யார் தான் ஒத்துப்பா….?அவங்க வீட்டை எதிர்த்து தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்……”

 

இந்த நாலு வருசத்துல ஒரு நாள் கூட உன்னை விட்டு இருந்ததில்லை…………..உன்னை எங்கள விட நல்லா பாத்துப்பாருடா….நாங்களா தேடியிருந்தா கூட இப்படி ஒரு தங்கமான மாப்ள கிடைச்சிருக்க மாட்டார்…” என்று மாப்பிள்ளையின் பெருமைகளை மாமியார் அள்ளி வீச

 

அதுவரையில் அமைதியாய் இருந்த சதுர்மதி ,”உங்களால என்னைப் பார்க்க  முடியல்லன்னு வந்தவர்கிட்ட என்னைத் தள்ளிவிட்டீங்க…..அப்படித்தானம்மா…..உங்களால இந்த பைத்தியக்காரியை வைச்சிக்க முடியல இல்ல…..பாரம் தாங்கமா யாரோ ஒருத்தருக்குக் கட்டி வைச்சீட்டீங்க….” என்று வலியும் வேதனையுமாக சொல்லியவளின் கன்னங்களை நீர் நிறைக்க ,                                 

என்ன பேசுற மதி நீ….நீ எங்களுக்குப் பாரமாடா….?எங்க காலத்துக்குப் பின்னாடி யாரு உன்னைப் பார்த்துப்பான்னு தான் எங்களுக்குக் கவலைடாஜெய் ஒன்னும் யாரோ இல்ல….என் ப்ர்ண்ட் டாக்டர் ராகவனோட சன் தான்மாஅதனால் தான் மாப்ள நல்ல மாதிரியா இருந்ததும் நாங்க உன்னைக் கல்யாணம் செஞ்சி வைச்சோம்….” என ராமன் சொல்ல

 

கல்யாணமா……….?” என்றாள் விரக்தியாய்.

 

எனக்கே தெரியாம ஒரு கல்யாணம்….அதனால ஒரு குழந்தை……….…..எனக்கு நடந்தது கல்யாணமாப்பா……தாங்க முடியலப்பா………..சுய நினைவே இல்லாதப்போ…..போய்கல்யாணம்……குழந்தை………………” என்று கதறியழுதாள் சதுர்மதி.

 

வசந்தி மகளிடம் , “மதிம்மா…………அழாதடாநாங்க நீ நல்லாயிருக்கனும் தானே செஞ்சோம்……ஜெய் மாறி ஒருத்தர் கோடியில ஒருத்தருக்குத் தான் டா கிடைப்பாங்க……இப்போ உனக்கு என்னடா குறை……தங்க சிலையாட்டம் ஒரு குழந்தை..தாங்கோ தாங்குன்னு தாங்குற புருஷன்….ஒரு பொண்ணுக்கு இதை விட வேற என்னடா வேணும்…?” என கேட்க

 

வேண்டாம்…………….இது எதுவுமே எனக்கு வேண்டாம்………..என் விருப்பமில்லாம….எனக்குத் தெரியாம  நடந்த இந்த கல்யாணம் வேண்டாம்….” என கத்த

 

மதிஎன்ன பேசுறநீ……..இப்போ நீ நிதானமா இல்ல…….கோவப்படாம யோசிடா……நாங்க உன் நல்லதுக்குத்தான் செஞ்சிருக்கோம்னு புரியும்…..” ,மகளிடம் பரிவாய் சொன்னார் ராமகிருஷ்ணன்.மகள் இருக்கும் நிலையில் அவளிடம் கோபப்பட அவருக்கு மனமில்லை

 

என்னைத் தனியா விடுங்கப்பாப்ளீஸ்…..இப்போ எனக்குத் திரும்பவும் பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு..” என்று அழுத விழிகளோடு சொல்ல , அவளை தனியாக விட்டுவிட்டு வெளியேறினார்கள் வசந்தியும் ராமகிருஷ்ணனும்.

 

வசந்தி மருமகனுக்குப் போன் செய்து எல்லாவற்றையும் சொல்ல, சாஹித்யாவை அழைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு விரைந்தான் ஜெய்சங்கர்.

 

சதுர்மதிக்கு மனம் தாங்கவில்லை.என்னதான் அவளது பெற்றோர் ஆயிரம் காரணம் சொன்னாலும், அவளது மனம் அவற்றை ஏற்கவில்லை.

 

மனம் பிறழ்ந்த நிலையில் மணக்கோலம்..!

மனம் சங்கமிக்காமல் உடலால் இணைந்த உறவால் ஒரு உயிர்..!!

தாயானது கூட தெரியாத அவல நிலை அவளுக்கு.

 

இதையெல்லாம் இயல்பான விசயங்களாக அவளது பெற்றோர் ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் அவளால் முடியாது.அந்த ஜெய் ஆகப்பட்டவன் அவளது தாய் தந்தைக்கு வேண்டுமானால் கோடியில் ஒருவனாக தெரியலாம்..ஆனால் இவளக்கோ அவனும் சராசரியான ஆணாகத்தான் தெரிந்தான்.

 

உண்மையை சொல்லப்போனால் சராசரிக்கும் கீழ்தான்.மன நிலை பிறழ்ந்த பெண்ணோடு உறவோடி அவளைத் தாயாக்கிவனெல்லாம் மனிதனாஎன்ன?தாலி என்ற ஒன்றைக் கட்டிய காரணத்தால் மட்டும் அவன் அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ளலாமா..?

 

அவன் கட்டியதும் தெரியவில்லை தொட்டதும் தெரியவில்லை…!!

 

என்ன ஒரு அசிங்கமான நிலை அவளுக்கு.கிட்ட தட்ட என்ன கிட்ட தட்ட ? நிஜமாகவே இதுவும் கற்பழிப்புதானே…?

பெண்ணின் விருப்பமில்லாமல் அவளை

ஆட்கொள்வது அது கணவனாக இருந்தாலும் குற்றம் தானே..!!

 

மன நிலை சரி இல்லாதவளோடு குடும்பம் நடத்தி குழந்தைப் பெற்றிருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்திருப்பான் என்றுதான் நினைக்கத் தோன்றியது சதுர்மதிக்கு.இப்படியே தன் கணவன் மீது தாறுமாறாகத் தப்பெண்ணம் வளர்த்துக்கொண்டாள் சதுர்மதி.

 

அந்த  நேரம் பார்த்து ஜெய்சங்கர் வீட்டுக்கு வர ,

மாப்ளஅவக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டோம்கேட்டுட்டு கத்தினா……தனியா விடுங்கன்னு சொல்லி அழுதாஅதனால் நாங்களும் வந்துட்டோம்..திரும்பவும் அவளுக்கு எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு மாப்ள…” என கலங்கிய மாமனாரிடம் ,

 

நீங்க கவலைப்படாதீங்க மாமா….நான் பார்த்துக்கிறேன்..சாய் குட்டியைப் பார்த்துக்கோங்கஎன்று மகளை மாமியாரிடம் கொடுத்தவன் மனைவியின் அறைக்குள் சென்றான்.

 

அவன் மேல் கொலவெறியில் இருந்தவளின் அறைக்குள் அவளின் அனுமதியில்லாமல் எப்போதும் போல் சென்று ,

 

மெத்தையில் படுத்துக் கண்ணீர் உகுத்தவளின் அருகில் போய்

 

சது….நான் ஜெய் வந்திருக்கேன் டா….” என்று சொல்லி

,அவளின் தோளைத் தொட, படக்கென்று அவனின் கையைத் தட்டி விட்டு எழுந்தவள் ,

 

அவனை ஒரு நிமிடம் உற்று நோக்கினாள்.கணவனின் பெயர் மட்டும் தானே அவளது பெற்றோர் சொன்னார்கள்.

 

இவன் தானா அந்த கோடியில ஒருத்தன்…?என்னிடம் ஹாஸ்பிட்டலில் பேசியவன் இவன் தானேஎன்ற எண்ணம் மனதுக்குள் ஓட,இவ்வளவு நேரம் மனதில் எரிந்த நெருப்பை அவன் மீது அனலாய்க் கொட்டினாள்.

 

உனக்கு ……கதவை தட்டி பெர்மிஷன் கேட்கனும்னு தெரியாதுஅதானே..உனக்கு எங்க தெரியும்….என் வாழ்க்கையிலேயே பெர்மிஷன் கேட்காம வந்தவன் தானே நீ…?” என்றவளுக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியாமல் போக , தாங்கமாட்டாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.

 

மனைவியின்  அழுகையைப் பார்க்க் சகிக்காதவனாய் ,

சது..ப்ளீஸ்…..அழாம நான் சொல்றதைக் கேளுடா….” என ஜெய் சமாதானம் செய்ய

 

போஎங்கிட்ட வராதா..எனக்கு எதுவுமே பிடிக்கல…..உன்னை யாருடா என்னைக் கல்யாணம் செஞ்சிக்க சொன்னது……?நான் கேட்டேனாடாபெரிய தியாகியா நீ…?அய்யோ நான் பைத்தியமாவே இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே……..இப்போ எனக்கு நடந்த கல்யாணமும் தெரில…..எனக்கு ஒரு குழந்தை இருக்கறதும் தெரில….யாருக்கும் என் நிலைமை வரக்கூடாது..” என அவள் தன் நெஞ்சத்தின் வலியை வலியோடு சொல்ல

 

அவளது உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.அவளது வலியை இல்லாமல் ஆக்க அவனுக்குத் தெரியும்.அதற்கு அவளோடு பேசினால் தானே தன் நிலையை,காதலை அவளுக்கு உணர்த்த முடியும்.ஆனால் அதற்குத்தான் அவள் இடம்கொடுக்கவில்லையே..!!

 

அவளிடம் இருந்து விலகி எழுந்தவன் ,

சது…..எனக்கு உன்னைப் பிடிச்சதும்மாஅதான் மாமா கிட்ட பேசி உன்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்…..உன்னோட வேதனை , உணர்வுகள் எல்லாம் எனக்கும் புரியுதுகொஞ்சம் பொறுமையா இருந்தா……நான் என்னோட நிலைமையை உனக்கு சொல்வேன்மா…..ப்ளீஸ்..” என கெஞ்ச

 

என்ன என்ன சொல்லப்போறநீ……?எதுவும் சொல்ல வேண்டாம்..எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்….இப்போ தெரிஞ்சதுக்கே என் தலை வெடிக்குது…..இனி எதாவது தெரிஞ்சாநான் செத்தாலும் செத்துடுவேன்..” என்று உணர்ச்சிப் பெருக்கில் கத்த

 

ஷட் அப்..சதுர்மதி…..என்ன பேச்சு பேசுற..நீ……..வாழ்க்கையை அழகாக்கிறதும் அழிச்சிக்கறதும்நம்ம கையில தான் இருக்கு……..இப்போ…..நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்க…… நம்ம ……எதுவும் பேச வேண்டாம்…….ரெண்டு மூணு நாள் போகட்டும்…..அதுக்கு அப்புறம்..நம்ம வீட்டுக்குப் போகலாம்..” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் அமைதியாய் முடித்தான்.

 

ஆனால் சதுர்மதியோ ,”நான் எங்கேயும் வர மாட்டேன்……இது கல்யாணமே இல்லஜஸ்ட் பொம்மைக் கல்யாணம்…….என் விருப்பமே இல்லாம..என் சுய நினைவே இல்லாம…..என்னோட குடும்ப நடத்துன பொறுக்கி நீ…” என்று அவள் வார்த்தையை விட ,ஜெய்சங்கருக்கு சுறுசுறுவென்று கோபம் ஏற , மனைவியின் கன்னத்தில் அறைந்தான்.

 

அவள் தோள்ப்பற்றி , ”நானடி…..பொறுக்கி…….நான் உன் புருசன்….என் மனைவியை தான் நான் தொட்டேன்என் காதலையும் என் சுயமரியாதையையும் டச் பண்ணாநான் மனுசனா இருக்க மாட்டேன்…” என அவன் சீற ,

 

சதுர்மதியோ ,“என்னை கை நீட்டி அடிக்கிற நீதான்நல்லவனா..?எங்கப்பா கூட என்னை அடிச்சதில்லைஆனா நீ.என்னை அடிச்சிட்டல்லஉன்னைப் போய் உத்தமன்னு சொல்றாங்க என்னைப் பெத்தவங்க….இப்போ சொல்றேன் கேட்டுக்கோ…….என்னால உங்கூட வாழ முடியாதுஎன்னோட உணர்வுகளை மதிக்காம இருக்க ஒருத்தர் என் புருசனா இருக்க முடியாது…I don’t need you anymore in my life..get lost….” என கதவை நோக்கிக் கைக்காட்ட

 

மனைவியின் சொல்லும் செயலும் அவனை நிலையிழக்க செய்திருந்தன.அதனால் ஜெய்சங்கரும் எதுவும் பேசத் தோன்றாதவனாக விறுவிறுவென கீழிறிங்கினான்.

 

கீழே வந்தவன் ,”அத்தை..பாப்பாவ தாங்க…..நான் அப்புறமா வரேன்..” என்று சொல்ல ,மகளுக்கும் மருமகனுக்கும் என்ன  நடந்திருக்கும் என அறியாமல் ஜெய்யின் மாமனாரும் மாமியாரும் கவலையோடு பார்க்க ,

 

அப்போது மாடியிலிருந்து கீழே பார்த்தாள் சதுர்மதி.அவளைக் கண்டதும் சாஹித்யா ,

 

அம்மாஆ………” என கத்த

 

அவளுள் இனம்புரியாத உணர்வு.கணவனை வேண்டாமென்றவளால் குழந்தையை அப்படி ஒதுக்க முடியவில்லை.அவள்  நினைவின்றி தொட்ட கணவனை வெறுக்க முடிந்தவளால்நினைவில்லா நிலையில் உருவான அவள் குழந்தையை வெறுக்க முடியவில்லை.

 

தாய்மையின் மாயமோ…!!

 

வேகமாக படிகளில் இறங்கிய சதுர்மதி ,

 

குழந்தையைத் தூக்கிக் கண்கலங்க கொஞ்சி முத்தமிட்டு ,கணவனைப் பார்த்து ,”என் குழந்தை என்னோட தான் இருப்பா….” என்றவள் குழந்தையோடு மாடியேறி தன் அறைக்கதவை படாரென்று சாத்தினாள்.

 

செல்லும் மனைவியை வெறித்த ஜெய் கனத்த மனதோடு மாமனார் வீட்டை விட்டு வெளியேறினான்.

Advertisement