Advertisement

‘அட்டாமிக் ரியாக்ஷின் கூட நடந்திடும் போல..இந்த ஐரா ரியாக்ஷன் காட்ட மாட்றா..’ என்று நினைத்தபடி அதியனின் பார்வை ஐராவின் மேல் இருக்க,

 

வெகு நேரம் அமைதியாய் இருந்தவள் பேசினாள்.

 

“அதி….எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…ஐ மீன் நீ இவ்வளவு சிரீயசா பேசுவேன்னு எதிர்ப்பார்க்கல..உன் பார்வையில செயல்ல வேறுபாடு பார்த்தேன்..ஆனாலும் இதுதான்னு உறுதியா தெரியல…டூ பீ ப்ராங்க்…நான் இதுவரை உன்னை அப்படி பார்த்ததில்லை….யாரையுமே நான் அப்படி பார்க்கல….சிலரை ஹான்சம்மா இருக்காங்கன்னு ஆர்வமா பார்த்துருக்கேன்..ஆனா இவங்க நமக்கு கணவரா வந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கல..இவன் தட் பத்ரி..அவனைப் பார்க்க போனப்போ ஒரு விதமான ஆர்வம் இருந்துச்சு..ஆனா ஆசை இல்லை…”

 

“உன்னை அத்தை பையனா பிடிக்கும்…ஆனா வேற மாதிரி நான் நினைக்கலையே….எனக்கு அப்பா கிட்ட பேசினா நல்லா இருக்கும்னு தோணுதுடா.. ஒரு வேளை நான் உன்னை வேண்டாம் சொல்லி அப்பா பீல் செஞ்சா…எனக்கு நிஜமாவே புரியல..” என்றாள் குழப்பமாய்.

 

‘ நீ அப்பா புள்ள..ஆனால் அந்த மனுஷன் தான் டி எனக்குத் தொல்லை……..’ என நினைத்தவன்

 

“ப்ச்…ஐரா…யாரு என்ன சொல்வாங்கன்னு  யோசிக்காத….மாமா கிட்ட நான் பேசினேன்..அவர் உனக்குப் பிடிச்சிருந்தா ஓகேன்னு தான் சொன்னார்…உனக்கு பிடிக்கலனா லீவ் இட்….அப்படி ஒரு வேளை பிடிச்சா…நான் உனக்கு நல்ல மேட்ச்னு நினைச்சா….மாமா கிட்ட பேசு..ஆனா என்னைப் பிடிக்கிறதும் பிடிக்காம போறதும் உன்னோட விருப்பமா மட்டும் தான் இருக்கனும்…பிடிச்சாலும் பிடிக்காட்டியும் அது எனக்காக….மட்டும் தான் இருக்கனும்….என் ஃபிலிங்க்ஸுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுப்பேன்னு நம்புறேன்..” என்றான் மிகவும் அழுத்தமாகவும் அதனோடு கூடிய பொறுமையுடனும்….

 

அவள் முகத்தினில் வந்த போன குழப்பம் இவனை வெகுவாய் அசைத்துப் பார்க்க,ஐரா எப்போதுமே பட்டென்று பேசுபவள் இந்த மாதிரி சூழ் நிலை அவளுக்குப் புதிது என புரிந்தவன் அவள் மனம் ஒட்டியே பேசி அவளை சமாதானம் செய்தான்..…அவன் மீதான நேசம் அவனுக்காய் மட்டுமே வருவதுதானே அவனுக்கு மரியாதை….

 

இவனே இவன் அகத்தை அகழாய்வு செய்து தானே அரியவாம்

அன்பின் பொருளாம் காதல் இருப்பதைக் காலம் எடுத்துக் கண்டு கொண்டான்..இத்தனைக்கும் முடிவுகளை மின்னலாய் எடுப்பவன்..

 

ஐராவும் அவள் பெயர் போலவே மின்னலாய் முடிவெடுப்பவள் தான்..அவள் படிப்பு விசயத்தில் கூட அப்படி தான்…பிடிவாதம் செய்து பிடித்ததை செய்தாள்…ஆனால்  இது இவனுக்கு இனிதானாலும் அவளுக்குப் புதிதுதானே…?!

 

இவன் நிதானமாய்ப் பேசியதில் அவளகத்தினிலும் புதுத் தெளிவு ஒன்று பயிர் ஆக,முகத்தினில் இதுவரை இருந்த தெரியாத தெளியா நிலை தீர்ந்து போக,

 

இவன் மீண்டும் கேட்டான்,

“சொல்லு ஐரா…என்ன முடிவு..?” என்று கேட்க,

 

“அதி….இப்போதைக்கு நோ தான்..ஆனால் எனக்குக் கொஞ்சம் டைம் கொடு…ஒரு வேளை இது மாறலாம்” என்று அவள் மனதில் அக்கணம் தோன்றியதை அப்படியே சொல்ல

 

அதுவரையில் அதியனின் அகநதியின் அக்கரையோரம் பூத்திருந்த அழகிய மலர்கள் வாடிப்போக,நீரில் அணைந்த நெருப்பாய் அவன் மனம் புஸ்ஸென ஆனது.ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை….

 

எல்லாரும் மனிதர்கள்…

 

மனம் உள்ளவர்கள்……

 

தங்கள் மனம் கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவர்கள்…ஐராவின் புறம் மட்டும் அல்ல..அகமுமே சேர்த்து நேசிப்பவன் ஆயிற்றே….அவனால் அவளை புரிந்து கொள்ள முடிந்தது.

 

“சரி….” என இவன் சற்றாய் நேரம் கழித்து சொல்ல,

 

“என்னடா..ஈசியா எடுத்துட்ட…?” என இவளும் இயல்பாய்க் கேட்க

 

“ம்ம்..அது ஆல் ஏரியாவுல அடிச்சுத் தூக்க நீ என்ன அதியன் அரண்யனா…? ஐராப்பொண்ணு ஆச்சே…..அதான் லவ் ஏரியாவுல நீ வீக்கா இருக்க…அது ஒன்னுமில்ல…எல்லாரும் எல்லாத்துலேயுமா எக்ஸ்ப்ர்டா இருக்காங்க….” என இவன் முகத்தில் நிறைந்த மென் புன்னகையோடு சொல்ல,

 

“அடிங்க……ஐஞ்சு ரூபாவுக்கு ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் செய்ய முடியல..இவர் ஆல் ஏரியாவுல அடிச்சுத்  தூக்குவாராம்ல… நான் தான் அடி கொடுக்க போறேன்…” என முறைப்பாய் சொல்ல

 

“ நல்ல காலம் ரோஸ்லாம் கொடுக்கல…இல்லனா எனக்கு ஐஞ்சு ரூபா லாஸ் ஆகியிருக்கும்….நீ வேற என் ப்ரோபோசல பெண்டிங்கல வைச்சிருக்க…” என்று அதியன் சொல்ல,தளர் விரலால் தன் தலையில் அடித்துக் கொண்டவளைப் பார்த்தவன் மென் காற்றில் தலையசைக்கும் வண்ணப்பூவாய் அத்தனை மிருதுவான குரலில் சொன்னான்,

 

“என் ஐரா ரொம்ப ப்ரிசியஸ்….அவளுக்கு ப்ரிசியஸானா விஷயம் தான் கொடுக்கனும்…” என்று சொல்ல,பட்டாம்பூச்சியாய் பாவை விழி விரிக்க,அவள் அகல விழிக்குள் ஆழ விழுந்தவன்,

 

ரம்யமாய் ஒரு புன்னகை சிந்தி,

“அதியனை விட வேற என்ன கொடுக்க முடியும் ஐராப்பொண்ணுக்கு ஸ்பெஷலா…?” என்று கண்ணடித்து சொல்ல

 

“உன்னை..செல்ஃப் டப்பா..” என்று இப்போது சிரித்தாள் ஐரா…யாராவது இப்படி தீடீரென காதல் சொல்லி,அதை மறுத்தும் கூட இத்தனை இயல்பாய்ப் பேசுவார்களா என தெரியாது..ஆனால் அவன் பேசினான்…அதைக் குறித்து இவளும் கேட்க

 

“நான் தான் சொன்னேனேடி….உன்ட்ட நான் ரொம்ப இயல்பா இருக்கேன்……. நீ கூட அப்படி தான்….” என்று அவன் சொன்னதை அவளும் மறுக்கவில்லை..

 

இவனிடம் தான் ,இத்தனையாய் சண்டையிட்டாலும் அதன் பின் அது ஒரு ஓரமாய் இருந்தாலும் இயல்பு மாறாமல்  பேசிட முடிகிறது…என்பதை ஐரா உணர்ந்தாள்

 

அடுத்து வந்த கணங்கள் அமைதியில் கழிந்து போக,

 

“டைம் ஆச்சு போலாமா..?” என்றபடி அதியன் எழுந்திருக்க,ஐராவும் உடன் வந்தாள்..இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி மௌனத்தால் நிரம்பியிருக்க,நடந்து சிவசு மாமா வீட்டிற்கு வந்து அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்ப முடிவு செய்தார்கள்..அதியனுக்கு அலைப்பேசியில் அழைப்பு வர,

’பேசிட்டு வரேன்’ என அவன் வெளியே செல்ல,ஐராவோ சிவசு மாமா வீட்டினரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“சொல்லுடா ரியா..” என அவனை அழைத்த சஸ்ரியாவிடம் அவன் சொல்ல,

 

தமையனும் தங்கையும் இப்போது எப்போதும் போல் பேசிக் கொள்ள,ரியாவும் உற்சாகமாய்,

 

“அரண் அண்ணா……எங்க இருக்கீங்க.?” என ஆர்வமாய்க் கேட்க

 

“ம்ம்…ஐராவோட திருவையாறு வந்திருக்கேன்..”

 

“எப்படிண்ணா ஐராவோட தனியா…?” என இவள் தன் ஐயம் கேட்டாள்….எலி அண்ட் புலி ஒன்னா டிரிப்னா அவளுக்கு சந்தேகம் வருதே…போலிஸ்கார் பொண்டாட்டி வேற..?!

 

அவனோ இருந்த கடுப்பில் யோசிக்காமல்,

“லவ் சொல்ல தனியா அழைச்சிட்டு வராம….ஊரையே வா…”என்று பேசுகையில்,ரியா ,”அண்ணா..” என ஆச்சரியமாய் அழைக்க

 

“அ..அது..” என்றவன் என்ன சொல்லி சமாளிப்பான்..எப்படியும் என்றாவது தெரியத் தான் போகிறது…இவனுக்கு இன்னமும் நம்பிக்கை இருந்தது ஐரா தன்னை ஏற்பாள் என..

 

“அய்யோ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..? ஐரா கிட்ட பேசினீங்களா..? என்ன சொன்னா அவ..?” என வரிசையாய்க் கேள்வித் தொடுக்க,

 

இவன் அமைதியாய் இருக்க,அவளே மேலும் பேசினாள்.

 

“அண்ணா…ஆனா ஐராவுக்கு லவ்னா பெரிசா இன்ட்ரெஸ்ட்லாம் இல்லையே..மாமா கிட்ட வேற சொல்லிடுவாளே..” என இவள் கொஞ்சம் டென்ஷனாகப் பேச,

 

“ஆமா ஆமா… லவ்னா இன்ட்ரெஸ்ட் இல்லை…ஆனா.. அவங்க நண்பன் லவ்வுக்கு எல்லாம் ஹெல்ப் செய்வாங்க… …” என அவள் சத்ரியன் ரியாவின் காதலுக்கு உதவி செய்தாள் என நினைத்துப் பேச

 

“எந்த ப்ரண்டுக்குண்ணா அவ ஹெல்ப் செஞ்சா…?”

 

“ம்ம்..உங்களுக்குத் தான் மேடம்…”

 

“அவளுக்குத் தான் நான் லவ் பண்ணினதே தெரியாதே…” என எதார்த்தமாய் உண்மையை உரைத்துவிட,அதன் பிறகு தான் அவளுக்கு உரைக்கிறது இத்தனை நாளாய் அவள் பிறந்த வீட்டில் யாரும் அவள் காதலையும் கல்யாணத்தையும் பற்றி பேசவோ விமர்சிக்கவோ இல்லை….பிள்ளை சுமக்கும் பெண் என்பதால் கனிவும் கவனிப்பும் தான்.

 

“என்ன சொல்ற..” என்று தன் கவலையிலிருந்து மீண்டிருந்த அதியன் வேகமாய்க் கேட்க

 

என்ன சொல்வாளாம்..?சத்ரியனைக் கத்தி முனையில் மிரட்டி செத்துவிடுவேன்..என்றதையா..? காதல் சொல்ல தைரியமற்று ஓடிப்போனதையா…?அவள் பதட்டமும் பயமுமாய் மௌனம் காக்க,

 

இதுவரையில் ஐரா எப்படி இருந்தாலும் அவள் என்னவள் தான் என்ற எண்ணம் கொண்டு இருக்கும் அதியனுக்கோ , ஐரா உதவலயா…?அப்போ அவ சொன்னது உண்மையா..? என்ன சொல்றா ரியா…? என இப்போது அவளிடம் தெளிவாய்க் கேட்க முனைந்தான்.

 

“ரியா சொல்லு…என்ன நடந்துச்சு…ஐராவுக்கு நிஜமா நீங்க லவ் செஞ்சது தெரியாதா..?” என இவன் வாய் விட்டு கேட்டப்போதும் வஞ்சியவள் அமைதியாய் இருக்க,அவளது அமைதி கண்டிப்பாக ஏதோ இருக்கிறது என காட்டி விட,

 

“ரி………ய்ய்ய்ய்யா….கேட்குறேன்ல பதில் சொல்லு…சொல்லப்போறியா இல்லையா..?” என இவன் குரல் உயர்த்தி கத்த,ரியா திக்கித் திணறி பயந்து அத்தனையும் சொல்ல,அதியனுக்குள்….கோப அலைகள் கொப்பளிக்க,இருக்கும் அத்தனை கோபத்தையும் அவள் மீது காட்டினான்….

 

“அறிவில்ல….இத்தனை நாளா சொல்லனும்னு தோணல…” என ஆரம்பித்து அவள் அழும் வரை திட்டியவன் ஆத்திரத்துடன் போனை வைத்தான்.

 

அதன் பின் சிவசு மாமா வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு ,இவர்கள் ஊர் திரும்ப,வரும் வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தியவன் ,,

 

“வா…ஐரா சாப்பிட்டு போகலாம்…பசிக்கும்ல..” என சொல்ல,அவன் முகம் பார்த்தவளுக்கு ஏதோ சரியில்லை என புரிய என்ன என தெரியவில்லை..இவள் வேண்டாம் என சொன்னதால் கோபமாய் இருக்கிறானோ…?

 

முதல்ல நல்ல தானே பேசினான்…என இன்னும் அவன் முகத்தையே பார்க்க,

 

“என்னடி பார்க்குற..வா” என்றவன் முன் சென்று ஒரு மேஜையில் உட்கார,இவளும் போய் அவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள்.இருவரும் வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிடுகையில்,அதியனின் அலைப்பேசி சத்தம் செய்ய,அவன் அதைக் கட் செய்தான்…டேபிளின் மீதிருந்த அலைப்பேசி மின்னுவதைப் பார்த்த ஐரா,

 

“டேய்..அத்தைடா…” என்று சொல்ல

 

“தெரியும்….” என்றவன் அமைதியாய் சாப்பாடுதான் முக்கியம் என்பதாய் உணவில் கவனமாக..

 

“எடுத்துப் பேசுடா…என்னாச்சு?”

 

இவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல்,இவளையே சில நொடிகள் பார்த்தவன் முறைப்பாய் மீண்டும் சாப்பிட,இவளே போனை எடுத்து ஆன் செய்து பேச

 

அந்த பக்கம் கஸ்தூரி பதட்டமாய்,

“டேய்..அரண்..என்னடா சொன்ன ரியாவை…குழந்தை அழறா…பிள்ளைத்தாச்சி பொண்ணு வேற…என்னனு கேட்டாலும் சொல்ல மாட்ற…..”என அவர்  விடாது பேச

 

“அத்த…அத்த..மூச்சு விடு…நான் ஐரா…”

 

“ஏய்…நீயாடி..எங்கடி போனான் அவன்…ரியாவை வேற ஏதோ சொல்லிட்டான்..அவ அழறா…டி..” என்றவரின் குரலும் கலங்கிப் போயிருக்க,

 

“அத்தை…நீ டென்ஷன் ஆகாத… நீ முதல்ல போனை ரியாகிட்ட கொடு…நான் பேசுறேன்….”என்றவள் வாங்கி ரியாவிடம் என்னவென்று வாஞ்சையாய்க் கேட்க,அவளும் நடந்தவற்றை அழுதவாறே சொல்ல,

 

“இவன் தான் சொல்றான்னா….நீயும் அழுவியா…அப்படியே சொன்னாலும் அண்ணன் தானே…? அன்னைக்கு உன்னைக் காணும்னு அவன் எப்படி துடிச்சான் தெரியுமா…என்னை கூட அடிச்சான் டி…ஆமா…நான் லவ் பண்ணேன்…என் சத்தி…என் உரிமை.ன்னு சொல்லாம அழற…..அம்மாவாகப் போற நீ…இன்னும் அண்ணன் திட்டுறான்..ஆட்டுக்குட்டி திட்டுறான்னு சொல்லி அழுவுற….போலிஸ்காரன் மனைவி தைரியமா கெத்தா இருக்கனும் ரியா…” என என்ன என்னவோ பேசி அவளை சமாதானம் செய்தாள்.

 

கஸ்தூரியிடமும் , “அத்தை அவளை அழாம பார்த்துக்கோ….எதுவும் சொல்லாத..” என சொல்லி வைத்தவள் கண்டது அதியனின் ஆழப்பார்வையைத் தான்..

 

“என்ன..?” என்பதாய் இவள் விழி விரிக்க,

 

“சீக்கிரம் சாப்பிடு..” என்றான்..இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் காரில் பயணத்தைத் தொடங்க,

 

அதியன் தான் பேசினான்.

 

“இதனால் தான் என்னை வேண்டாம்னு சொன்னியா…?” என்றான்…குரலில் நிறைந்திருந்தது வலி…..அவனை வேண்டாம் என்பதால் வந்த வலியல்ல…செய்யாத குற்றத்துக்கு எத்தனை முறை அவளைக் குத்திக் காட்டியிருப்பான்..அத்தனை பேரின் முன்னும் அடித்தானே…எல்லாம் அந்த ரியாவால்…சத்ரியனையும் தவறாய்த் தானே நினைத்தான்…அத்தனை உண்மையும் தெரிய,…அடக்க முடியவில்லை அவன் கொண்ட கோபத்தை…

 

“அடிச்சுத் தூக்குற மூஞ்சியைப் பாரு….” என திட்டியவள்,

 

“என் மேல தப்பு இருக்குன்னு  நினைச்சாக் கூட என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்ன உன்னை எனக்குப் பிடிக்கத் தான் டா செய்யனும்…..அதுக்காக உன் மேல கோபமில்லைன்னு சொல்ல மாட்டேன்…என்னமா என்னை பேசின….வீரம்..விவேகம் விஸ்வாசம்னு பஞ்ச் வேற…..ஆனா அதுக்காக ரியாவைப் போய் திட்டுவியா..?”

 

“ஏன் டி ஏன்  இப்படி லூசா இருக்க நீ……?அன்னிக்கு இருந்த சிட்டிவேஷன் உன்னை நம்பல…ஆனா அதுக்கு அப்புறம்…நான் இப்ப திருச்சி வந்தப்ப உன்னை பேசினபோது என் சட்டையைப் பிடிச்சு சொல்ல வேண்டியது தானே….உன் தங்கச்சி செஞ்சதுக்கு நான் என்ன செய்வேன்னு…” இவன் குறையா கோபத்தோடு பேச

 

அவளோ , “சொல்லியிருக்கலாம்..பட் சொல்லத் தோணலடா… நம்பிக்கை எல்லாம் தானா வரனும்..விளக்கம் சொல்லி விம் போட்டு விளக்கியா வர வைக்க முடியும்…?என்ட்ட உண்மை இருக்கு…அதை எல்லார்கிட்டையும் சொல்ல என்ன அவசியம் இருக்கு” என்றாள் புருவம் உயர்த்தி.

 

உண்மையும் உதிரமும் ஒன்று….என்னிடம் உதிரம் இருக்கிறது என உரைத்துக் கொண்டா திரிகிறோம்..?அப்படியே உண்மையும்…!!

 

அவள் பேசியதில் அதியனுக்கு இன்னும் தான் கோபம் அதிகமானது “இது பிடிவாதம்….”

 

“எஸ்…பிடிவாதம் தான்.” என்று ஒத்துக் கொண்டவள்,

 

“இப்ப என்ன  அதி… நீ என்ன லவ் செய்றதால இவ்வளவு டென்ஷன் ஆகுறியா..?” என்று கேட்டு வைக்க,

 

காரை ஓரமாய் நிறுத்தியவன்,அவள் விழிகளை முறைத்த வண்ணம்,

“இதுல..லவ் எங்க வந்துச்சு ஐரா….எப்பவும் உன் மேல உள்ள அக்கறையால தான் நான் கோவப்படுறேன்…இந்த காதல் எல்லாம் மூணு நாலு மாசமாதான்…நீ தப்பே செஞ்சாலும் நீ என்னோட ஐரா….எப்படி உன்னை விட..?இதனால் என் காதல் குறையவோ கூடவோ போறதில்லை… நீ  சொன்னியே லவ் இஸ் நாட் defined….அப்படிதான்….அதுக்கு reasonable restrictionsலாம் கிடையாது…ஆனாலும் உன் மேல வீணா ஒரு பழி இருந்தா அதை நீக்க ட்ரை செய்ய மாட்ட..?ரியா செஞ்சது எவ்வளவு பெரிய தப்பு…?இத்தனை மாசம் நம்ம இரண்டு பேரும்  நல்ல தானே  பேசினோம்….அப்பவாச்சும் சொல்லி இருக்கலாம்ல..” என்றான் ஆற்றாமையும் ஆத்திரமும் ஒருங்கே சேர,

 

“அதி…ஏன் உனக்கு இவ்வளவு கோவம்..?” என்ற போதிலும் இவன் புறம் அவள் அகத்தில் பூக்கிறது அன்பின் பூங்காவனம்…

 

என்னை என் தவறோட ஏற்பானாமா…?.இதுதானே அவளும் அன்று அப்பாவிடம் சொன்னாள்…அவன் ஐராவாமே…? முத்திடுச்சுடா இவனுக்கு என்று தான் தோன்றியது…

 

“டேய்…ஓவர் லவ்ஸா இருக்குடா…முடியல….” என இவள் மீண்டும் பேச….

 

“லவ்வும் இல்ல ஒன்னும் இல்ல…ஐரா…முன்னாடியே சொல்லிட்டேன்.. நான் உன்னை லவ் செய்யலன்னாலும் இதே கோபம் தான் எனக்கு அப்பவும் இருந்திருக்கும்….காதலிக்கிறேன்…கோபப்படுறேன்…அப்படியெல்லாம் இல்லை…ரியா செஞ்சது தப்பு……”

 

“எஸ்…தப்பு தான்….யார் இல்லன்னு சொன்னா..?”

 

“அப்புறம் எப்படி அவளுக்குச் சப்போர்ட் செய்ற…..இதனால் தான மாமா உங்கிட்ட பேசாம இருந்தாரு…”

 

“ஆமா…ஆனா அவளுக்கு சப்போர்ட் செய்யலடா..அவ செஞ்சது தப்பு தான்..அந்த இடத்துல சத்தி இல்லாம வேற யாராச்சும் இருந்திருந்தா ரொம்ப தப்பா தான் போயிருக்கும்…பட்…அவ இடத்துல இருந்து யோசி….. நீ பையனா போயிட்ட…இப்படி ஈசியா தள்ளிட்டு வந்து ஒத்த ரோசா கூட தராம…லவ் சொல்லிட்ட…” என்று சொல்ல

 

“யாரு நான் உன்னை தள்ளிட்டு வந்தேன்…” என்று இவன் முறைக்க

 

“சரி சரி முறைக்காத….ஆனா ரியாவுக்கு பாதுகாப்பு தந்த நீங்க தைரியம் தந்தீங்களா…? இல்லை…..காதலிச்சவ அத்தை கிட்ட சொன்னா..அவங்க ஒழுங்கா ஹாண்டில் செய்யல…..ஒரு அண்ணனா அவளுக்கு ஃப்ரீ ஸ்பேஸ் கொடுத்தியா…கொடுத்திருந்தா உன்ட்ட ஷேர் செய்திருப்பா…இப்ப அனுவுக்கும் எனக்கும் ஏன் சத்திக்கும் கூட சீக்ரெட்ஸ் கிடையாது…அனுவும் வம்சியும் கூட அப்படி தான்….அவளை கல்யாணம் செஞ்ச அடித்த நிமிஷம் சத்தி அடிச்சிருக்கான்…

 

“ஒரு வேளை அவ லவ் சொல்லி இருந்தாலும் கூட சத்தி ஏத்திட்டு இருந்திருக்க மாட்டான்….ஏன்னா அவனுக்கு மாதவன் மாமா பத்தி தெரியும்,..அவரு தான் ப்ரஸ்டிஜ்,பீரித்தின்னு சீன் போடுவாரே…யாரும் சரி வரலன்னா அவளும் என்ன தான் செய்வா…சொல்லு….இதே ஒரு பையன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி லவ் சொல்லி,துரத்தின அது ட்ரூ லவ்…தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சா அது ஹீரோயிசம்..ஆனா ஒரு பொண்ணு மனசால ஒருத்தனை நினைச்சா கூட இந்த உலகம் அவளை ரொம்ப கீழா பார்க்கும்….”

 

“அதுக்காக…” என்றவனை தடுத்தவள்

 

“பேசிடுறேன்….நான்….அவளுக்கு ஆறுதலா இருந்தேன் அவ்வளவு தான்…நீங்க யாருமே பேசல….சத்தியும் அவட்ட சரியா நடக்கல…அவன் என் ப்ரண்டு தான் ஆனா வாழ்க்கை பத்தின விசயத்தோட முடிவு அவன் தானே எடுக்கனும்…ஆறு மாசம் அவன் சரியா அவ கிட்ட முகம் கொடுத்து கூட பேசல…இப்ப எல்லாம் மாறிடுச்சு..ஆனா ஏற்கனவே வீட்டை விட்டு வந்த குற்றவுணர்ச்சி……..சத்தி ஏத்துக்காத மன உளைச்சல இருந்தவ எதாவது தப்பா முடிவெடுத்திருந்தா என்ன செஞ்சிருப்ப…”

 

“ஐரா…”

 

“ம்ம்…உனக்கு வரதை விட அதிக கோபம் தான் எனக்கு…அப்படியே நாலு அறை போடனும்னு தான் தோணிச்சு..என்ன விட சின்ன பொண்ணு வேற..பொழைச்சு போறான்னு மன்னிச்சு விட்டேன்…  நீ ஒரு சேனல் ஹெட்…ஆனாலும் .அந்த சிட்டிவேஷன்ல பொறுமையா யோசிச்சியா….இல்லையே…டக்குன்னு என்னை தானே அடிச்ச…அப்படி தான் அவ சூழ் நிலையும்….”

 

“ நீ சொல்றது எல்லாம் சரி தான்…நான் நல்ல அண்ணாவா கூட இல்லாம இருக்கலாம்..ஆனாலும் அவ செஞ்ச வழி தப்பு தான் ஐரா…என்னைப் பொறுத்த வரைக்கும் போற இடம் மட்டும் நேர்மையா இருந்தா பத்தாது….போற வழியும் நேர்மையா இருக்கனும்…” என்று மிகவும் சீரியசாகப் பேசினான்..

 

அவனின் கோபம் புரிகிறது தான்…போகும் பாதையும் முக்கியம் தானே….

 

“எப்பா…ஹான்ஸ்ட் அதியா….. நீ வாங்கிக் கொடுத்த இட்லிக்கும் தோசைக்கும் இவ்வளவு தான் அட்வைஸ் செய்ய முடியும்…லேட்டாச்சு காரை எடு…” என்று சொல்லி சீட்டில் நன்றாய் சாய,

 

“உன்னை யாருடி அட்வைஸ் செய்ய சொன்னா…அவளை எல்லாம் இன்னும் திட்டனும்….” என்றவன்..

 

“சாரி டி..அடிச்சதுக்கு…” என்றான் மென்மையாய்..

 

“மிஸ்டர்..அதியன்…சாரி சாரின்னு நிறையவாட்டி சொல்லிட்டேள்…நேக்கு நீங்க சாரின்னு சொன்னாலே சாரீ பத்தி பேசினது தான் நியாபகம் வருது…” என்று சொல்லி முறைக்க

 

இப்போது தான் அவன் முகத்தில் மெல்லமாய் குடியெருகிறது மென் முறுவல்….இவள் இவ்வளவு நேரம் இத்தனை நடந்தும் அதை நினைவில் வைக்க இனித்துக் கொண்டு வருகிறது இவனுக்கு.

 

காரை எடுத்தவன் அமைதியாய் வர,பாடலை ஒலிக்க விட,அப்போதும் அதியனின் முகத்தில் அதிகமாய் சிந்தனை தான்…பேச்சற்ற மௌனம்…

 

அதனைக் கலைத்தாள் ஐரா…

 

“ஏன் டா இப்ப நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொன்ன என்ன செய்வ…?”

 

“ம்ம்..அப்படியே தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்” என்றான் நக்கலாய்….

 

“அய்யே,…நீ அப்படில்லாம் செய்ய மாட்ட…”

 

“தெரியுதுல…நானும் அப்படி செய்ய மாட்டேன்..நீயும் அப்படி செஞ்சா என்னோட வாழ மாட்ட…”

 

“ம்ச்…உண்மையை சொல்லு…”

 

வேண்டாம்னு சொல்றவளுக்கு அதில் என்ன ஆர்வம் என தெரிந்து கொள்ள விரும்பியவனாய்,

 

அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் “ம்ம்ம்…உன்னை விட ரிச்சு கேர்ளா…. ஜன்னல் வைச்ச  ஜாக்கெட்டும் லோ ஹிப் சாரீயும் கட்டுற நல்ல ஃபீகரா…பார்த்து கல்யாணம் செஞ்சுப்பேன்…” என்றான் மிகவும் கண்சிமிட்டி,…

 

“அடச்சீ…” என இவள் லுக் விட

 

“ஐரா ப்ளீஸ்….என் விருப்பம் நான் சொன்னேன்..உன் முடிவை நீ சொன்ன…அதுக்கு மேல உனக்கு  விருப்பம்னா மட்டும் இதைப் பத்தி பேசு….எனக்கும் ஃபீலிங்க்ஸ்லாம் உண்டுடி….சும்மா இதைப் பத்தி இனி பேசாத…” என்றவனின் குரல் மிகவும் சிரீயசாய் இருந்தது.

 

இவன் இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ள ஐராவுக்குத் தெரியவில்லை அவன் நிலை….காதல் சொல்லி…அதை நிராகரிப்பு செய்தால் அவனுக்கும் வலிக்கும் தானே…நெஞ்சினில் நெருஞ்சி முட்கள் மெல்லமாய் குத்தி அவனை வலிக்க செய்வது அவனுக்குத் தானே தெரியும்…

 

அதன் பின் அடியோடு அமைதிதான் இருவருக்கும்…..

 

வீட்டிற்கு வந்த பின் இவன் அவள் கைப்பிடித்து இழுத்து போக,இது நாள் வரை கள்ளமில்லாமல் கைப்பிடித்திருக்கிறான் தான் ஆனால் இப்போது காதலென சொல்லி இப்படி பிடிப்பது சரியாக படாததால்,

 

“விடு அதி..” என விலக பார்க்க,இன்னும் இறுக்கியவன் இறுகிய முகமாய் வீட்டினுள் நுழைய,அவனை பார்த்து முறைத்தார்  விஸ்வா…

 

அவர் பார்வையைப் பார்த்தவன் கையை விட்டாலும்,

“ஐரா இங்கேயே நில்லு…” என்றவன் அனுவைப் பார்த்து

 

“வீட்டுல இருக்க எல்லாரையும் கூப்பிடு” என சொல்ல

 

அனு ,”ஏன் அத்தான்..” என்று கேள்வி கேட்க

 

“சொன்னதை செய்” என்றான் அதட்டலாய்.

 

அதன்பின் எல்லாரும் வர,ஐராவை விரும்புவதாய் சொல்லப் போகிறானோ ஆனால் ஐராவின் முகத்தில் அப்படி எதுவும் தெரியவில்லையே என விஸ்வ நாதன் மகளின் முகம் பார்க்க,அதியனோ யாரும் எதிர்ப்பாராத வகையில்,விஸ்வ நாதன் பார்வதி இருவரிடமும் சென்றவன் ,அவர்கள் காலில் விழுந்து எழுந்தவன்,

 

“சாரி மாமி…சாரி மாமா…”என ஆரம்பித்து ரியா சொன்னது அத்தனையும் சொல்லி மன்னிப்புக் கேட்க ஐராவுக்கோ அதிர்ச்சி.

 

“நான் அப்பவே சொன்னேன் தானே…ஐரா கூட எப்படி சொன்னா..ஆனா நீ கேட்டியா அதி..?” என்று பார்வதி கோபமாய்ப் பேச வர,அவரின் கைப்பிடித்த விசு,

“பார்வதி விடு..” என சொன்னார்…அதியன் இப்படி செய்வான் என எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியும் தவறு செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு தைரியமாய் அத்தனை பேரின் முன்னிலையும் சொன்னதால் அவருக்கு அவன் மீது இன்னும் அபிமானமும் அன்பும் கூடியது….அதுவும் சொல்லும் விஷயம் ஐராவின் மீது தவறில்லையென்றாலும் ரியாவைக் கீழிறக்குமே……..இருந்தும் அதியன் அப்படி செய்தான்…

 

அதன் பின் பேச்சுகள்  நீண்டது…இதில் ஐரா அதியனின் காதல் பற்றி தந்தையிடம் சொல்ல மறந்தாள்…,ஒரு வழியாக அனைவரும் உறங்க செல்ல,அதியனின் அறையும் ஐராவின் அறையும் அருகருகில் தானே..?

 

கதவு தட்டப்படும் சத்தத்தில் ஐரா வர,

 

“இந்தா பேசு…அம்மா லைன்ல..” என்றபடி போனைத் தர,

 

“என்னடா..” என்பதற்குள் அவன் வெளியே செல்ல கஸ்தூரி இவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்….அவரை இவள் சமாதானம் செய்து இவனிடம் மீண்டும் வர

 

“ஏன் டா இப்படி இம்சை செய்ற….அத்தை தானே…..என்னை திட்ட அவங்களுக்கு உரிமை இல்லையா….உண்மையிலேயே எனக்குக் கோபம் உன் மேல அப்பா மேல தான்….அதுவும் அப்பாவும் உன்னை மாதிரியே தப்பே செஞ்சாலும் நீ என் பொண்ணுன்னு வந்து நின்னாரு….நானும் அவரும் ராசியாகிட்டோம்….அப்பா கிட்ட அடி வாங்க வைச்சதால உன் மேல கோவம்….ஆனா அதியா…இனிமே கோவப்படவே மாட்டேன் ராசா….உன் வெள்ளைக்கொடியை கொஞ்சம் வெளுத்துப் போடு…ஆத்தாடி எம்புட்டு சமாதானம்…சாரி..” என்றபடி அவள் அவன் போனை அவன் கையில் திணித்து விட்டு அறைக்குள் செல்ல

 

அதியன் சொன்னான்…,”உனக்காக நான் இதெல்லாம் செய்யல….உண்மைக்காக செஞ்சேன்…” என்று சொல்ல

 

உடனே இவன் அருகில் வந்தவள்,

 

“எப்படி டா….இப்படி…ஒத்த ரோஸா தான் கொடுக்கல…ஆனாலும் கொஞ்சம் ஐஸாச்சும் வைக்கலாம்ல…பொசுக்குனு உண்மையை சொல்லிட்ட….உனக்காக தான் ஐரா செஞ்சேன்….அப்படி இப்படின்னு அடிச்சுத் தூக்க வேண்டாமா..?” என்று கிண்டலாய் அவள் சொன்னாலும் அவனின் உண்மையில் உறுதியில் அவளுக்கு தெரிந்தது….அவளுக்காக இல்லை யாராகினும்….இவன் செய்திருப்பான் என இத்தனை நேரத்தில் புரிந்து கொண்டாள்…

 

இவள் இப்படி இவனை வம்பிழுக்க,,,,இவனோ வசமிழந்தான்…இது  வரையில் இறுகியிருந்த இவன் மனம் இவளால் இறகாய்…இலவம்பஞ்சாய்….இதழ் விரிக்கும் மலராய் லேசாக மறைந்து போன மனோகரமெல்லாம் மீண்டும் இவன் மனம் சேர் உணர்வு அதியனுக்கு…

 

“போடி….போடி…அப்படியே இப்படியெல்லாம் செஞ்சாலும் நீ மயங்கிடுவ பாரு…” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்…

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

அடுத்த நாள் அலுவலகத்தில் , ஐராவை அழைத்த அதியன்,

 

“ஐரா..வெல் டன்..நீ பண்ணின அந்த ஜிப்ஸி டாகுமென்ட்ரி செம மாஸ்…..மில்லியன் வியூஸ்….காங்கிராட்ஸ்…” என பாராட்ட

 

“தேங்க்ஸ் தேங்க்ஸ்டா…” என மகிழ

 

“ஏன் ஐரா….நீ ஏன் இன்னமும் இங்கயே இருக்க….டைம்ஸ்….இந்தியா டூடேன்னு போகாம..யூ ஹேவ் தட் பொடன்ஷியல்..”

 

“ப்ச்…அது போகலாம் தான்..ஆனாலும் இதை விட மனசில்ல….கவலைப்படாதே இதையும் சீக்கிரமே அந்த லெவல்…இல்லை அதுக்கும் மேல…கொண்டு போயிடலாம்..” என நம்பிக்கையாய் சொல்ல,இவன் அவளைப் பார்த்து புன்னகை சிந்த

“சரிடா….எனக்கு இன்னிக்கு டயர்டா இருக்கு..நான் வீட்டுக்குப் போறேன்….” என்று சீக்கிரமே கிளம்பிப் போனாள்….இருவருக்கும் இயல்பு வகைப் பேச்சு…

 

இரவு எட்டு மணி வாக்கில் அதியன் வீடு வந்திருக்க,சத்ரியனும் அப்போது இருந்தான்…ரியா சென்னையில் இருப்பதால் பார்வதி அவனை சாப்பிட அழைத்திருக்க,அதியன் ,

 

“வாங்க மாப்பிள்ளை சார்..” என முகம் நிறை  முறுவலாய் அவனை வரவேற்றவனிடம் பார்வதி,

 

“என்ன அதி..நீ கூட வந்திட்ட…ஐரா எங்க போனா…இன்னும் காணோம்…” என கவலையாய் சொல்ல

 

“அவ நாலு மணிக்கே கிளம்பிட்டாலே மாமி…இன்னமும் வரல…நீங்க அவ போனுக்கு ட்ரை பண்ணீங்களா..” என சாப்பாடு மேஜையில் இருந்து எழுந்து கேட்க,

 

“ஸ்வீட்ச் ஆஃப்னு வந்துச்சு..சரி உன் கூட வருவாளோன்னு நினைச்சேன்…இவளுக்குக் கொழுப்பாச்சு..” என திட்ட

 

‘ஸ்வீட்ச் ஆஃபா’ என்றதும் சத்ரியனும் பதறி எழ,’தரமான சம்பவங்கள் நடக்கலாம்..’ என்ற ஐராவின் குரல் அவனுக்கு அவளுக்கு ஏதேனும் ஆபத்தாய் இருக்கலாமோ என்று பயம் கொள்ள வைக்க,

 

அதியனோ , “ஏன் மாமி..அவளைக் காணோம்னு போன் செஞ்சு சொல்ல மாட்டீங்களா…” என ஐராவைக் காணும் என்ற பதைப்பில் கத்த,

 

சத்ரியன் பதட்டமாய் , “ நான் போய் பார்க்கிறேன்…” என்றபடி போக

 

அதியனும் “நானும் வரேன் சத்தி..” என்று அவனுடன் கிளம்பினான்…விஸ்வ நாதன் ஒரு பக்கம் பதற,வம்சி அவரைத் தேற்றிக் கொண்டிருந்தான்..

 

காணாமல் போனவள் என இவர்கள் தேட கடத்தப்பட்டவளை எப்படித் தேடுவார்களாம்….?

 

காதல் கவனமாகும்.!!!

Advertisement