அத்தியாயம் மூன்று:
இயல்பிலேயே நல்லவனான ஹரியால் ப்ரீத்தி எப்படியோ அனுபவிக்கட்டும் என்று விட முடியவில்லை.
அவன் ஒன்றும் செய்வதற்கு தேவையில்லாமல் ப்ரீத்தியே ஜானை காயப்படுத்தி இருந்தாள்.
ஆனால் ப்ரீத்தி எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதம் ஹெச் ஓ டி யை மிகவும் கோபப்படுத்தி இருக்க, அவர் அந்த விஷயத்தை ப்ரின்சிபால் வரை எடுத்து சென்று, “இப்படி ஒரு ஸ்டுடண்ட் எழுதிக் கொடுத்து இருக்கிறாள், இதை இப்படியே விட்டால் நாளை மற்ற மாணவர்களும் அதையே தொடர்வார்கள்”, என்பது போல சொல்லி அந்த ஸ்டுடண்டை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து இருந்தார்.
அடுத்த நாள் காலை ப்ரீத்தி வந்தவுடன் மீண்டும் ப்ரின்சிபால் அவளை என்குயரிக்கு கூப்பிட…….
ப்ரீத்தி சோர்ந்து தான் போனாள். அப்பாவும் அம்மாவும் ஊரில் இருப்பதால் அவர்களிடம் சொல்லவில்லை….. இங்கே தாத்தா பாட்டியிடம் சொன்னால் உனக்கு தேவையில்லாத விஷயம் என்று திட்டு விழும்.
மாளவிகாவின் அம்மா பல சமயம் நன்றாக பேசினாலும் சில சமயம் கோபப்பட்டு விடுவார். அவர் கொஞ்சம் கட்டுப் பெட்டி. ப்ரீத்தியின் உடைகளை பார்த்து எங்கே மாளவிக்காவும் அப்படி மாறி விடுவாளோ என்ற பயம் ஏற்கனவே அவருக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.
மாமா ஊரில் இல்லை. அதனால் ப்ரீத்தியும் யாரிடமும் சொல்லவில்லை….. மாளவிகாவையும் யாரிடமும் சொல்ல விடவில்லை.
இப்போது காலையில் வந்தவுடன் ப்ரின்சிபால் அழைத்து விட…… அங்கே போனால்……. அவர் ஒருபக்கம், “எப்படி இப்படி ஒரு ஹெச் ஓ டி யிடம் பதிலளிப்பாய் என்ன பதில் இது”, என்பது போல அவளின் லெட்டரை காட்டி கேட்க…..
“I didn’t do anything, sir, and that is what I mentioned in the letter too “
“This is an irresponsible answer”
“Sir, may I know what is the complaint about me? Why am I being questioned?
“Bring your parents “
They are not here, sir, they stay in Dubai…
Bring your local guardian, then
He is out of the station
Bring along any of your people, till then you cannot enter the campus. Whatever, we will have to go for a disciplinary action.
நீ பதிலளித்த விதம் சரியில்லை உன்னுடைய பெற்றோரை அல்லது உன்னை சார்ந்தவர்களை அழைத்து வா இல்லையென்றால் வகுப்பிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ப்ரின்சிபால் கடுமையாக பேசிவிட இன்னமும் சோர்ந்து போனாள்.
அழுகை வரும் போல இருந்தது…. வெளியே வந்துவிட்டாள்.
வெளியில் வந்து அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொள்ள, மாளவிகா வந்து, “என்ன, என்ன”, என்று கேட்கவும்….. விஷயத்தை சொன்னாள்……
மாளவிகாவின் பின் சுத்தும் நிதின் இருவரும் கிளாஸ் ஹவர்சில் மரத்தடியில் அமர்ந்திருப்பதை பார்த்து….. ஹரியிடம் சொல்ல……
லைப்ரரி ஹவர் என்பதால் ஹரி உடனே வந்தான். அவன் வந்த போது போனை நொண்டிக் கொண்டு ப்ரீத்தி அமர்ந்திருந்தாள்.
“என்ன? இன்னும் என்ன பிரச்சனை?”, என்று ஹரி கேட்கவும் அவனை ஒரு பார்வை பார்த்துத் திரும்பிக் கொண்டாள்.
“இது கிட்டலாம் நம்ம பேச வேண்டி இருக்கு”, என்று கண்மண் தெரியாத கோபம் ஹரிக்கு வந்தாலும், தன்னுடைய தங்கைக்காக வேண்டி தான் அவளுக்கு இந்த பிரச்சனை என்பதால், “சொல்லு ஏதாவது செய்ய முடியுதான்னு பார்க்கலாம்”, என்றான் மீண்டும்.
ப்ரீத்தி வாய் திறந்து எதுவும் சொன்னாள் இல்லை….. மாளவிகா தான் சொன்னாள்.
“ஒன்னுமில்லை, ஒரு சாரி கேட்டா ஹெச் சோ டி விட்டுடுவார்…..”,
“இல்லை, நான் யார்கிட்டயும் சாரி கேட்கமாட்டேன்”.
“முட்டாள்தனம் பண்ணாத! அவங்கல்லாம் நம்ம டீச்சர்ஸ், ஒரு சாரி கேக்கறதனால எந்த வகையிலையும் நம்ம குறைஞ்சிட மாட்டோம்”, என்று ஹரி சொல்லி புரிய வைக்க முயன்றான்.
“என்கூட வா, நான் கூட்டிட்டு போறேன், நான் உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றேன்”, என்றான்.
“செய்யாத ஒரு விஷயத்துக்கு என்னால சாரி கேட்க முடியாது”,
“சரி கேட்காத! என்கூட வா! நான் கூட்டிட்டு போறேன்! நான் உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றேன்”, என்றான்.
“தேவையில்லை”, என்றாள் அதற்கும்.
“அப்போ என்ன தான் பண்ண போற…..?”,
“இங்கயே உட்கார்ந்து இருக்க போறேன்”, என்றாள்.
“என்ன லூசு மாதிரி உளர்ற…….”,
“எங்கப்பா வருவார்…!”,
மாளவிகா இந்த முறை, “ப்ரீத்தி மாமா துபாய்ல இருக்காங்க, எப்படி வருவாங்க…..”,
“வருவாங்க, நான் இப்போ மெசேஜ் பண்ணிட்டேன்”, என்றாள் ப்ரீத்தி.
“ஒரு சாரி கேட்டா சால்வ் ஆகிடும், நான் சொல்றேன், நான் ஹெச் ஓ டி கிட்ட சொல்றேன்…… நான் ப்ரின்சிபால் கிட்ட சொல்றேன்”, என்று ஹரி சொல்லியும்.
“எங்கப்பா வருவார்”, என்று அங்கேயே உட்கார்ந்து இருந்தாள்.
“ஐயோ, என்னடா இந்த பெண், தலை வேதனை”, என்று ஹரியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ப்ரீத்தி அமர்ந்திருந்த விதம், அவள் முகத்தில் தெரிந்த பிடிவாதம், அவளுக்கு ஏதாவது சைகலோஜிகல் டிஸ்டர்பான்ஸ் இருக்குமோ என்று நினைக்க தோன்றியது.
ஹரி அவளையே சிறிது நேரம் பார்ப்பதை உணர்ந்த ப்ரீத்தி, “என்ன, நான் மெண்டலி டிஸ்டர்ப்டுன்னு நினைக்கறீங்களா”, என்றாள்.
ஹரி அவளை பார்த்த விதமே அப்படி தான் என்று சொல்லியது….
“நிஜமா உனக்கு அறிவு கிடையாது, இருந்தா இதுக்காக உங்கப்பாவை துபாய்ல இருந்து வர சொல்லுவியா”, என்றான்.
“you just move away i will handle this”, என்றாள்.
“என்னைக்கும் நாம பணிஞ்சு போறதுனால குறைஞ்சு போயிட மாட்டோம்”, என்று அப்போதும் பொறுமையாக ஹரி சொல்ல……
“ஒரு தடவை சொன்னா புரியாதா, நான் பார்த்துக்கறேன், நீ போ”, என்றாள்.
அவள் ஒருமையில் பேசவும்…. நிதின் கோபமாக பேச முற்பட…….. “எப்படியோ போய் தொலையரா……. நீ வாடா”, என்று நிதினை இழுத்துக் கொண்டு ஹரி போய்விட்டான்.
“ஏன் ப்ரீத்தி, இப்படி பண்ற!”, என்ற மாளவிகாவின் கேள்விக்கு ப்ரீத்தி பதிலே சொல்லவில்லை.
ப்ரீத்தி ஜாலியான பெண். ஆனால் ஈஸி கோயிங் கிடையாது. சில சமயம் இப்படி தான் மிகவும் பிடிவாதம் பிடிப்பாள்.
மாளவிகா அவளிடம் பேசிப் பேசி முடியாமல்…. கூட சேர்ந்து அமர்ந்து கொண்டாள் வேறு என்ன செய்ய முடியும்.
“நீ கிளாஸ் போ, நான் இங்க தான் இருப்பேன். ப்ளீஸ் போ!”, என்று ப்ரீத்தி வேண்டிக் கேட்கவும் மாளவிகா கிளாஸ் சென்றாள்.
அதற்குள் அவளின் மெசேஜ் பார்த்து தந்தை அழைக்க…… மிகவும் தைரியமாக இருப்பவள் தான் ஆனால் அவர் குரல் கேட்கவும்….. பேச முடியாமல் குரல் தழு தழுத்து விட….
அதற்குள் மேல் ப்ரீத்தியின் பெற்றோர் எப்படி அங்கிருப்பர் அவர்கள் உடனே கிளம்பினர்.
இரண்டு ஹவர் முடிந்ததும் ஹரியின் கால்கள் தனிச்சையாய் ப்ரீத்தி இருந்த இடம் நோக்கி சென்றது.
அங்கேயே தான் அமர்ந்து இருந்தாள்.
“என்ன ஒரு டிடெர்மினேஷன், இதை வேறு எதிலாவது காட்டினால் நன்றாக இருக்கும்….. இப்படி அசட்டு பிடிவாதம் பிடித்தால்……”,
ஹெச் சோ டி ரூமை எட்டிப் பார்த்தான். அவர் தனியாக அமர்ந்திருக்கவும் அவரிடம் சென்று நடந்ததனைத்தையும் கூறினான்.
“இதை சொல்லியிருக்கலாமே, ரொம்ப திமிரா அந்த பொண்ணு பேசறா ஹரி, கொஞ்சம் கூட பணிவே இல்லை..”, என்று ஹெச் சோ டி சொல்லவும்..
“எஸ் சார், நான் நல்லா திட்டேன், உங்களை பத்தி தெரியாது இல்லை, இப்போ பயந்து உங்களை பார்க்க வராம இருக்கா…….”, என்று ஹரி ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுக்கவும்,
அதில் குளிர்ந்து, “சாரி கேட்க சொல்லு, ப்ரின்சி சார் கிட்ட நான் சொல்றேன்”, என்றார். “இது கூட உனக்காக தான்…..”, என்றார் கூடுதலாக….
“நான் கேட்கறேன் சார் சாரி, இது என் சிஸ்டர்னால வந்த இஸ்ஸு…. ப்ளீஸ் சார். இது பெரிசாகி வெளில வரவேண்டாம் சார்”, என்று ஹரி கேட்கவும்…….
ஹரியின் மீதான நல்லெண்ணம், “அந்த பொண்ணை கூட்டிட்டு வா….. நான் ப்ரின்சிபால் ரூம்ல இருக்கேன்”,.என்று ஹெச் ஓ டி போக
இதுவரை அவர் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்று ஹரி வேகமாக ப்ரீத்தியை கூட்டிக்கொண்டு வர போனான்.
ஹரி அருகில் வரவும், ப்ரீத்தி என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.
“எழுந்து வா”, என்றான்.
“எங்க, எதுக்கு?”,
“நான் ஹெச் ஓ டி கிட்ட பேசிட்டேன், வா ப்ரின்சிபால் கிட்ட……. நீ எதுவும் பேசாத, ஜஸ்ட் அங்க நில்லு, நான் பார்த்துக்கறேன்”, என்றான்.
“நான் தான் நீங்க எதுவும் செய்ய வேண்டாம், எங்க அப்பா வருவார்ன்னு சொன்னேன் தானே”,
“உங்க அப்பா வந்து கிழிப்பார்”, என்று கோபத்தில் சொல்ல வந்தவன்…….
“வா”, என்றான் அதட்டலாக…..
ப்ரீத்தி அமர்ந்திருக்கவும்….
“ரொம்ப திமிர் பண்ணாத, பணிஞ்சு போறதால யாரும் குறைஞ்சு போயிட மாட்டோம்……. அவங்க நம்ம டீச்சர்ஸ் ஒரு ரெண்டு திட்டு அவங்க கிட்ட வாங்கினா ஒன்னுமில்லை……. செகண்ட் இயர்ல இருக்கிற ஸ்டுடண்ட் உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பாங்க”,
“பையன்னா கையை பிடிச்சு இழுத்துட்டு போயிருப்பேன், பொண்ணா போயிட்ட ஒழுங்கா வா”, என்று அவன் கோபப்படவும்…….
“நான் தான் பொண்ணு இல்லை, பையன் மாதிரி இருக்கேன்னு நீங்க தான சொன்னீங்க”, என்றாள் பட்டென்று.
ப்ரீத்தி அதை சொன்ன விதம் தன்னுடைய வார்த்தைகள் அவளை மிகவும் காயப்படுத்தி இருப்பதை உணர்ந்து கொண்டான். ஆனாலும் சாரி கேட்க மனமில்லை.
“உன்னை எப்போ நான் பொண்ணு இல்லைன்னு சொன்னேன்…. உன் டிரஸ் ஹேர் ஸ்டைல் தான் சொன்னேன், சும்மா அதையும் இதையும் பேசி கடுப்பை கிளப்பாத வா, அங்க ஹெச் சோ டி போயிட்டார்”, என்றான்.
ப்ரீத்தி எழுந்து அவனுடன் சென்றாள்…… ப்ரின்சியிடம் சென்று நடந்தது அனைத்தையும் ஹரி ஒன்று விடாமல் சொன்னான். தான் இதை முன்பே அவரிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என்று மன்னிப்பும் மிகவும் பணிவாக வேண்டினான்.
ஹரிக்கு கல்லூரியில் நல்ல பெயர்…. அதனால் அவன் சொல்வதை பொறுமையாக கேட்ட ப்ரின்சிபால், “உன் சிஸ்டர், இல்லை இந்த பொண்ணு யாராவது கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்தா ஜான் மேல ஆக்ஷன் எடுக்கலாம்”, என்றார்.
“இவங்க ரெண்டு பேருமே கம்ப்ளைன்ட் கொடுக்கலை. ப்ளீஸ் சார், இதை ஒரு விஷயமாக்க வேண்டாம்…… நீங்க அவனை பார்க்கறது வேற எதாவுது ரீசன் வெச்சிக்கொங்க….. இவங்களை இதுல இழுக்க வேண்டாம்….”, என்று மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
“இவன் எதுக்கு இவ்வளவு கெஞ்சறான்”, என்பது போல தான் ப்ரீத்திக்கு தோன்றியது.
ஒரு வார்த்தைக் கூட பேசாமல் ப்ரீத்தி நின்று கொண்டிருந்தாள். ஒரு வழியாக ஹரி பேசி முடித்து ப்ரின்சிபாலும் ஹெச் சோ டியும் சமாதனமாகினர்.
பிறகு என்ன தோன்றியதோ ப்ரீத்தி, “சாரி, சார்”, என்று ப்ரின்சிபாலிடமும் ஹெச் சோ டியிடமும் சொன்னாள்.
வெளியே வரவும்….. ஹரி அவளிடம், “தேங்க்ஸ்”, என்றான்.
“எதற்கு”, என்று அவள் புரியாமல் பார்க்க…….
“என் மானத்தை அங்க வாங்காம சாரி கேட்டல்ல அதுக்கு….. இனிமேலாவது நானும் ரௌடி தான்னு கிளம்பாம ஒழுங்கா இரு, தப்பு செய்யலைன்னாலும் சில சமயம் நம்மை விட பெரியவங்க கிட்ட சாரி கேட்கறதுல தப்பில்லை…… சாரி கேட்டுட்டு உன்னை புரிய வெச்சிருக்கலாம்….. இனிமே கவனமா இரு… யார் மண்டையையும் உடைக்க கிளம்பிடாத”, என்று அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விரைந்து விட்டான்.
ப்ரீத்தியின் கண்கள், “உனக்கு எப்படி தெரியும்”, என்பது போல அகல விரிய….
அதை கவனியாதவன் போல சென்று விட்டான்.
ப்ரீத்தி வகுப்பிற்க்கு சென்றுவிட்டாள், மதிய இடைவேளையில் மீண்டும் அவளை ப்ரின்சிபால் அழைக்க,
வேகமாக ஹரி எங்கிருக்கிறான் என்று தேடிப் பார்க்க, நண்பர்களுடன் கேண்டீனில் இருந்தான். இவளும் மாளவிகாவும் போய் நின்று பார்க்க….. நிதின் தான் முதலில் பார்த்து.
“என்ன”, என்று கேட்டு அருகில் வர……
“ஹரி சார பார்க்கணும்”, என்றாள் மாளவிகா…..
நிதின் ஹரியை பார்த்து, “வா”, என்று தலையசைக்க…. ஹரி எழுந்து வந்தான்.
மனமோ, “இவ இப்படி அடிக்கடி தேடி வந்து என் பேரை ரிப்பேர் பண்ணப் போறா”, என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே சென்றான்.
“ப்ரின்சிபல் சார் கூப்பிடறாங்க, நீங்க வர்றீங்களா”, என்று ப்ரீத்தி நிற்கவும்.
திரும்பவும், “என்ன செஞ்ச”, என்று ஹரி கோபமாக கேட்கவும்
“ஒன்னும் பண்ணலை! நான் போய் அவங்க ஏதாவது கேட்டு நான் பேசி அப்புறம் நீங்க சமாதானத்துக்கு வரணும் அதான் உங்களை முன்னயே கூப்பிடலாம்னு வந்தேன்”, என்று ப்ரீத்தி நீண்ட விளக்கம் கொடுக்க….
“ரொம்ப புத்திசாலி, விளங்கும்”, என்று கோபமாக ஹரி பார்க்க….
“ஓகே, வரலைன்னா எனக்கு ஒன்னுமில்லை, நான் போகமாட்டேன்”, என்று சொல்லி ப்ரீத்தி பாட்டிற்கு திரும்பி போக……
“என்னடா இவ பெரிய ம்யுசியம் டிக்கெட்டா இருக்கா….. எங்கடா இருந்து என் உயிரை எடுக்க வந்தா”, என்று நிஜமான எரிச்சலில் ஹரி பேச…..
“சாரி சார், ப்ளீஸ் வாங்களேன்”, என்று மாளவிகா கேட்கவும்…..
நிதினும், “போடா”, என்று சொல்லவும் ஹரி சென்றான்.
அவன் முன் செல்ல வேகமாக ப்ரீத்தி பின் தொடர்ந்தாள்.
ஹரி செல்லவும் அவன் பின்னேயே ப்ரீத்தி சென்று ப்ரின்சிபால் முன் நின்றாள்.
ஹரி கூட நிற்கவும்…
“எதற்கு நீ”, என்பது போல ப்ரின்சிபல் பார்க்க…..
“எனக்கு இது தேவை தான்”, மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், “இப்போ ஒன்னும் பண்ணலை சார்”, என்று ஹரி விளக்கம் கொடுக்க……
“நோ, நோ ஹரி…. இந்த பொண்ணு ஸ்குவாஷ் நேஷனல் லெவல் பிளேயராம் இப்போ தான் பிசிக்கல் டைரக்டர் சொன்னார்….. அது பத்தி கேட்க தான்”, என்று அவர் சொல்லவும்…..
“தேங்யூ சார்”, என்று சொல்லி ஹரி வெளியில் வந்துவிட்டான். அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்தே ப்ரீத்தி வெளியில் வந்தாள்.
வந்தவள் ஹரியை தேட அவன் இல்லை…… “உனக்காக நின்னுட்டு இருப்பாங்களா என்ன? ஓவரா பண்ணாத”, என்று மாளவிகா சொல்லவும்,
பிறகு வகுப்பு முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது என்னவென்று சொல்ல தேட…… அப்போதும் இல்லை.
“என்ன, ஏன் தேடற?”, என்று மாளவிகா கேட்கவும்
“அவர் தான சால்வ் பண்ணி விட்டார், அதான் தேங்க்ஸ் சொல்லத் தேடறேன்”,
“பார்க்கும் போது சொல்லிக்கலாம் வா”, என்று மாளவிகா இழுத்துப் போக…..
ஹரியை இப்போதைக்கு பார்க்கவே போவதில்லை என்று ப்ரீத்திக்கு தெரியவில்லை.