Advertisement

தப்பு செஞ்சிட்டு இப்போ அழுது என்ன பிரயோஜனம் என்றான்

தப்பா என்ன தப்பு செஞ்சேன் என்று அழுத விழிகளோடு நிமிர்ந்தாள்.

இப்போது பார்வையில் ஒரு முறைப்பு வந்திருந்தது

இவ்வளவு நேரம் நீ இருந்தது என்ன? இப்போது இருப்பது என்ன? என்பது போல… அதை பார்வையிலும் காண்பித்தான்

அதனை புரிந்தவள் நான் உங்களை என்னை கல்யாணம் பண்ண வேண்டாம் சொன்னேன் தானே உங்களை யாரு பண்ண சொன்னா நான் இப்போ தப்பு பண்றதுக்கு காரணம் நீங்க தான்

ஆனாலும் நான் உங்களை குறை சொல்லலை என்ன செய்யறேன்னு தெரியாமையும் செய்யலை என்றாள் நிமிர்வாகவே

=================================

அது அம்மா ஞாபகம் அழுதேன்

இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை

பார்க்கவேண்டியது தானே உங்கம்மாவை உன்னை யாரு இங்க வந்து ஒளிஞ்சிக்க சொன்னா

அம்மா என்னை பார்க்க மாட்டாங்க நான் எப்படி பார்க்க

ஏன் பார்க்க மாட்டாங்க

நான் தான் உங்களுக்கு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பினேனே

ஆனா அது உங்கம்மாக்கு தெரியாதே என

என்ன என்று அப்படியே எழுந்து நின்று விட்டாள்

எதுக்கு இவ்வளவு ஷாக்

================================

மீண்டும் கரகரவென்று அவளின் கண்களில் கண்ணீர்

பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ எதுக்கு சும்மா சும்மா அழற என்றான் எரிச்சலாக

எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு என்று அழுதுகொண்டே ரோஷத்தோடு சொன்னாள்.

அந்த நிமிடம் அவளின் பாவனை சிறுகுழந்தையின் பாவனையோடு ஒத்திருக்க… பேசு என்னைக்கு இருந்தாலும் எதிர்கொண்டு தானே ஆகணும் பேசு என்றான்

ம்ம் முடியாது என்னால முடியாது என்று சொன்னவள் கைகளில் முகத்தை புகுத்தி மீண்டும் தேம்பி தேம்பி அழ

என்னடா இது பண்றது எல்லாம் இவ எல்லோரையும் அழ வெச்சிட்டு இவ எதுக்கு அழறா என்று எரிச்சல் தான் ஆனது

======================================

சும்மா அழுது சீன போடாத அவ்வளவு நல்லவளா நீ நான் உன் புருஷன்னு வேண்டாம் மனுஷனா கூட என்னை மதிக்கலை பார்த்த உடனே போற என்று அப்போதைய கோபத்தை காண்பித்தான்

நீங்க பாட்டுக்கு கத்தி கலாட்டா பண்ணி வெச்சேன்னா ஏற்கனவே கண்ணாடி ஜாடியை கீழ போட்டு உடைச்சிட்டு இருக்கீங்க ஒத் வாவ் ன்னு கை தட்டி உங்க கிட்ட வந்து பேசுவேனா யார் சீன போடறா எனக்கு ஒரு அவசியமும் கிடையாது என்றாள் அழுத விழிகளோடு ரோஷமாக

இவ்வளவு பேசறவ கல்யாணம் பண்ணியிருக்க கூடாது என்றான் அவனும் காட்டமாகவே

நான் நிறுத்த தானே பார்த்தேன் உங்களை யாரு வர சொன்னா இல்லை பாலாவை வெச்சு எஸ்கேப் ஆகியிருப்பேன்

ஏன் உங்கம்மா கிட்ட முன்னமே பேசினா என்ன

சொல்ல முடிஞ்சா சொல்லியிருக்க மாட்டேனா அப்போவும் சொல்லிட்டேன் உங்களை கல்யாணம் பண்ண சொன்னப்போ கல்யாணம் பண்ண சொன்னா நான் செத்துப் போவேன் மா சொன்னேன் செத்துப் போ சொல்லிடாங்க என்று சொல்லும் போது மறுபடியும் அடக்க முடியாமல் அழுகை பெருகியது

======================================

நீங்க என்னை ரொம்ப இன்சல்ட் பண்றீங்க உன்னை மாதிரி பொண்ணு உன்னை மாதிரி பொண்ணுன்னு என்ன என்னை மாதிரி பொண்ணு நான் என்ன அவ்வளவு கெட்ட பொண்ணு என்னோட வாழ்க்கைக்கு நான் பார்க்கறேன் என்று அவள் கண்ணீரோடு கேட்கும் போது

வல்லபனின் நெஞ்சை பிசைந்தது.. ஆனாலும் பேசினான்  

உன்னோட தப்பே உனக்கு தெரியலையா.. காதலிக்கும் போது இருக்குற தைரியம் அதை சொல்லும் போதும் இருக்கணும்… ஒருத்தனை காதலிச்சு… வேற ஒருத்தனோட மணமேடையில் நின்னு… வேற ஒருத்தன் தூக்கிட்டு போய்… இன்னொருத்தன் தாலி கட்டி… இப்ப அவன் கிட்ட டைவர்ஸ் கேட்கற..

இதுல காதலன் கிட்ட பேசிட்டு இருக்க…

கல்யாணம் ஆனா பிறகு உன்கிட்ட இருக்கிற இந்த காதலுக்கு பேர் என்ன தெரியுமா கள்ளக் காதல் என்றான் நிர்தாட்சன்யமின்றி..

அந்த வார்த்தையின் கணம் முகத்தை மூடிக் கொண்டு இன்னுமே தேம்பி தேம்பி அழுதுவிட்டாள்.  

இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா என.. இதுவரை தோன்றாத ஒன்று தோன்றியது.. செத்து விடலாம் போல..    

வல்லபனும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

 

Advertisement