Advertisement

புது ஊர், புது இடம், வளர்ந்த ஆண்மகன் தான் என்றாலும் தமிழ் நாட்டை விட்டு என்றால் பக்கம் கேரளா சென்றிருக்கிறான் கோவில்களுக்கு அதை விடுத்து ஆந்திரா சென்றிருக்கிறான் திருப்பதிக்கு. இன்னம் கர்நாடகா கூட சென்றதில்லை.

சுற்றுலா செல்லும் பழக்கம் எல்லாம் அவர்களின் வீட்டினில் இல்லை ஆதலால் எங்கும் சென்றதில்லை.

மும்பை வந்து இறங்கும் போதே மனம் தடுமாறியது சஞ்சலம் கொண்டது. வேறு விஷயம் என்றால் யாரையாவது துணைக்கு அழைத்திருக்கலாம். மனைவி விஷயம் யாருக்கும் தெரிவதில் அவனுக்கு விருப்பமில்லை. மும்பையில் யாரையும் தெரியாது.

என்னடா நீ அவனவன் அமெரிக்கா ஆப்ரிகா ன்னு பறக்கறான் சின்ன பசங்க எல்லாம் இருபத்து ஏழு வயசாச்சு நீ என்ன இந்த பய பயப்படற

பயமா எனக்கா என்று சொல்லிக் கொண்ட போதும் பயம் என்பதை விட என்னவோ ஒரு கலக்கம்

==========================

கொஞ்சம் பணமிருந்தா நாம பிளைட் ல வந்திருக்கலாம் தானே என்று மனம் நினைப்பதை தடுக்க முடியவில்லை

இதுவரை அப்பா சொத்துக்களை முடித்து விட்டார் என்ற ஆதங்கம் இருந்த போதும் பணத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனை சமாபதிக்க வேண்டும் என்று நினைத்த தில்லை அதன் பின்னும் ஓடியதில்லை.

இதோ இந்த மூன்று மாதமாக ராஜ மாணிக்கத்தின் தொழில்களை பார்க்கின்றான் தான் ஆனால் அவனுக்கு என்ன ஒரு லாபமுமில்லை. அர்ச்சனா வரட்டும் பேசிக் கொள்ளலாம் வல்லபனுக்கு என்ன செய்ய என்று சம்பளம் போல கொடுத்தால் நன்றாக இருக்காது வேறு எப்படி இந்த சொத்துக்களை நிர்வகிக்க பணம் கொடுக்கலாம் என்று ராஜ மாணிக்கம் நினைக்க அர்ச்சனா வரவில்லை பின்பு டைவர்ஸ் நோட்டிஸ் மிகுந்த மனஉளைச்சல் இதில் அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது மறந்து விட்டது.   

வல்லபன் உரிமையாக அக்காள்களிடம் பணம் கேட்பான் அவ்வளவே பின்பு யாரிடமும் கேட்டது இல்லை

அதனால் அவனாலும் ராஜமாநிக்கதிடம் பண விஷயம் பேச முடியவில்லை

அவனுமே அர்ச்சனா வரட்டும் நிர்வகிப்பதற்க்கு சம்பளம் போல ஏதாவது பேசிக் கொள்வோம் இந்த வேலைகள் இருந்தாலும் கோர்டிற்கும் செல்ல வேண்டும் என நினைத்தான்.  

இப்படியாக இப்போது ஊருக்கு வருவதற்கு அவன் ஜூனியராக இருக்கும் மாமாவை திருமணம் செய்த அக்கா சூரிய மதியிடம் தான் பணம் வாங்கி வந்திருந்தான், இருபதாயிரம் ரூபாய்.

======================================

முகம் சலிப்பை காண்பித்தபடி நேரத்தை பார்த்தான்

தே வில் லீவ் பை செவென் தர்ட்டி இட்செல்ப் என்றான் அந்த ஆண்

இவனை விட்டால் ஆங்கிலம் பேசும் ஆள் கிடைக்காதோ என்னவோ என நினைத்து

எப்படி அர்ச்சனா வின் அலுவலகம் செல்லவ வேண்டும் என்று கேட்க

நீ யார் என்றான் அவன்

அவனிடம் கணவன் என்று சொல்ல வரவில்லை சட்டேன்று

பிரான்ட் என

அப்போ உனக்கு ஆபிஸ் தெரியாதா என

நான் மும்பைக்கு புதிது ஆபிஸ் தெரியும் ஆனால் எப்படி செல்ல வேண்டும் என்று தானே கேட்டேன் என

அவனோ அப்போ போன் ல பேசுங்க என்றான்

ஷப்பா இவனிடம் கேட்பதற்கு டேக்சி காரரிடமே பேசிவிடலாம் என நினைத்து டேக்சி இருக்கிறதா போய்விட்டதா என்று பார்க்க வேகமாக ஓடினான்

எங்க இருந்து தான் கிளம்பி வர்றாங்களோ யார் இவன் என்ற சந்தேகத்தோடு பேசியவன் கதவை அடைத்தான்

===================================

 

அவள் போல தான் இருந்தது அவள் தானா தெரியவில்லை. அவளின் உடை, ஒரு டைட் டி ஷர்ட் அதன் மேலே கோர்ட் போல ஒன்று , ஒரு ஸ்கர்ட் முட்டியின் மேலே தான் தொட்டது. தலை விரித்து இருக்க நெற்றில் பொட்டு இல்லை இந்த தோற்றத்தில் இருப்பதினால் அவள்தானா தெரியவில்லை

ஒரு வாராம் விடாது பார்த்த முகம் அவள் தான் என்று சொல்ல அவளாய் இருக்க கூடாது என்று மனது நினைத்து

கண்டிப்பாய் புடவையில் அவள் இருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் ஒரு சுரிதார் போல நினைத்தான் பேன்ட் ஷர்டே அவனின் நினைப்புக்குள் வரவில்லை இதில் முட்டியை தொடாத உடை

கையில் இருந்த மொபைல் எடுத்து தங்களின் திருமண புகை படம் பார்த்தான்

அப்போது இருந்த தோற்றம் இப்போது இருக்கும் தோற்றம் எங்கேயும் பக்கம் கூட இல்லை ஆனால் முகம் அதே தான்

இப்போது இன்னுமே தலை சுற்றியது.  

எதிரே தண்ணீர் மக்கில் இருந்த சில் தண்ணீரை எடுத்து முகத்தினில் அப்படியே சரித்தான். அது ஊசியாய் முகத்தினில் குத்த

மனதின் வலியை விட குறைவாக தான் வலித்தது.     

Advertisement