Advertisement

முன்பு பார்த்த மாப்பிள்ளைக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசியிருக்க, இப்போது திடீரென்று நடந்த திருமணத்தால் அதை பற்றிய பேச்சில்லை.

இப்போது பெண்ணை எங்கே அனுப்புவது மாப்பிள்ளையிடம் என்ன பேசுவது, திருமணம் மட்டுமே முதன்மையாய் இருந்திருக்க வல்லபன் வீட்டோடு வந்திருக்க சம்மதிப்பான் போல தோன்ற வில்லை

திருமணம் முடிந்து விட்டாலும் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர். திருமணம் முடிந்ததும் சிவசு தன் ஆட்களுடன் கிளம்பியிருந்தார். 

அவர்களுக்கு திருமணம் முடிந்து பெண் வீடிற்கு போகும் வழமை தான்.    

மணப்பெண்ணின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர். வீடு என்ற கட்டுக்குள் வராது, பெரிய பங்களா. வெளியில் இருந்தே பணத்தின் செழுமை அதீதமாய் இருந்தது.

அதான் அந்த மோகனசுந்தரம் அந்த குதி குதிச்சான் போல என்று வல்லபனின் மனதிற்குள் ஓடியது.

===========================

அதனை கவனித்த அர்ச்சனாவிற்கு ஆத்திரம் பெருகியது. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த திருமணத்தை நடத்தியே இருக்கக் கூடாது

இவர்கள் சொல்கிறபடி நான் நன்றாக இருக்க வேண்டுமா என்ன

தேவையில்லை நான் இதற்க்கு மூளியாகவே இருந்து விட்டு போகிறேன் என்று அவளின் மனம் அப்பட்டமாய் நினைத்தது.

கூடவே இன்னொரு மனம் இதற்காக யாரோ ஒருவன் சாக வேண்டுமா என்ன என்று கேட்க

நான் வேண்டாம் என்று சொன்னேன் தானே கேட்டான சாவது தான் அவனின் விதிஎன்றால் சாகட்டும் எனக்கு சொல்ல என்ன இருக்கிறது என்ற தோற்றம் தான்

இப்படியாக ஆராத்தி எடுக்கும் நேரம் வல்லபனின் சாவை பற்றி நினைக்க, தீர்க்க சுமங்கலியா இருக்கணும் என்ற அந்த பாட்டியின் குரல் காதில் ஒலிக்க அவளின் நெற்றியில் ஆராத்தி குங்குமம் தீற்றப் பட்டது.

==============================

கர்ம சிரத்தையாய் அவனின் ஜேபியில் கைவிட்டு இரண்டு ஐந்து ரூபாய் காசுகளும் ஒரு ரூபாய் காசுமாய் பதினோரு ரூபாய் எடுத்தவன் அதனை தட்டினில் போடா

என்ன பத்னொரு ரூபாயா செல்லாது செல்லாது எங்க பக்கத்துல ஆராதை எடுத்தா குறைந்தது பத்தாயிரம் ரூபாய் போடணும்னு வெச்சிருக்கோம் என

என்னது பத்னொரு ரூபாய் இளக்காரமா உங்களுக்கு அதை கொண்டு போய் மஞ்சதுணி ல கட்டி சாமி முன்னாடி வைங்க உங்க வீட்ல கோடி ரூபாய் பெருகும் என்றான் அசால்டாக

இதென்ன கதை மாப்பிள்ளை யாரு கிட்ட எங்க கிடையா என்ற அங்கிருந்த பெண்கள் கிளம்ப

ஆமாங்க நிஜம் இதை தான் எங்க வீட்ல கட்டி வெச்சிருந்தேன் பாருங்க இப்போ உங்க வீட்டு பொண்ணை கட்டி கோடீஸ்வரன் ஆகிட்டேன் உங்களுக்கு வரும் என்று தெனாவெட்டாய் சொல்ல

========================

சூப்பர் மாமா என்றாள் ஆராதனா

யார் இது என்பது போல அப்போது தான் கவனித்தான்

நான் ஆராதனா அர்ச்சனா அக்கா தங்கை என்று அவளாக சொல்லிக் கொள்ள

சிறு பெண் தான் அழகான பொம்மை திருமண தோற்றம் எல்லாம் இல்லை, இந்த பெண்ணையா திருமணம் செய்ய கேட்டான் பைத்தியக்காரன் என்று தோன்றியது

கண்களில் கனிவுடன் அவளை பார்த்தான். பின்னே அவனின் பாதுக்காப்பு வளையத்திற்குள் சேர்ந்து விட்ட மற்றொரு பெண் அல்லவா   

தம்பி இந்த பேச்சு பேசறீங்க உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டுக் கொண்டே பெண்கள் வழி விட

ம்ம் வக்கீலுங்க என்றான் வல்லபன்

Advertisement