Advertisement

முடிந்து விட்டது எல்லாம் முடிந்து விட்டது அர்ச்சனா விற்கு எதுவும் ஓடவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை மனம் அறிவு என்று அத்தனையும் மழுங்கிக் கிடக்க கீழே குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள்,

அவளின் கழுத்தினில் இருந்த தாலி அவளை பார்த்து சிரித்தது. அது அவளை பார்த்து சிரிக்க சிரிக்க ஒரு கோபம் பெருக துவங்கியது. அதனை கழட்டி வீசும் கோபம்.

ஆனால் முடியாதே ஷக்தி ப்ரியா விடமாட்டாரே! நினைக்கவேயில்லை அம்மாவிடம் இத்தனை திடம் இருக்கும் என்று. நினைத்ததை நடத்தி முடிப்பார் என்று

தாத்தா சொல்வது தான் வீட்டினில் அவரின் ராஜ்ஜியம் தான் அம்மா எதற்கும் மறுத்து பேசியதில்லை தாத்தா என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். என்னவோ தாத்தா அம்மாவை அடக்கி அதட்டி உருட்டி வைத்திருப்பது போல தான் அரச்சனாவிர்க்கு தோன்றும்.

==================================

maa you cant do this to me என்று அர்ச்சனா அதிர்ந்து பேச

பதிலுக்கு ஷக்தி ப்ரியா அவளை பார்த்த பார்வையில் வாய் தானாக் பூட்டு போட்டுக்கொண்டது

ஷக்தி ப்ரியா செல்வனாதனிடம் பேசி நாயகியிடம் தொலைபேசியில் பேச ஆரம்பிக்க

பாலா அர்ச்சனாவை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான்.

ஒரு வகையில் பாலாவை நம்பியிருந்தால் மோகனசுந்தரம் இதில் வேறு மாதிரி புகுந்து விளையாடுவார் அவளின் திருமணம் பாலாவோடு நடப்பதில் இத்தனை ஸ்திரமாய் இருப்பார் என்று அவள் நினைத்ததில்லை

தெரிந்திருந்தால் பேசாமல் மாபிள்ளையோடே கூட்டணி வைத்து திருமணத்தை நிறுத்தி இருப்பாள்.

உன் கதை முடியும் நேரமிது என்று விதி அவளை பார்த்து சிரித்தது

===============================

அதற்குள் அவனின் அருகில் வந்த அர்ச்சனா என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது சொல்லிடு என

சொல்லிடு என்று அர்ச்சனா ஒருமையில் பேசியது வல்லபநிர்க்கு கடுப்பை கிளப்ப என்ன சொல்லிடா மரியாதையா பேசலை வாய் வெத்தலை பாக்கு போட்டுட்டும் என்று அடிக்குரலில் சீறினான்

அதற்க்கு அர்த்தம் புரியாமல் அர்ச்சனா முழிக்க

ஆமா உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவேன்னு வேற உனக்கு எண்ணமா என்று வல்லபன் பார்த்த பார்வையில் ஒரு அலட்சியம் ஒரு பாவனை, சொல்லப் போனால் எந்த பெண்ணையும் அந்த பார்வை கொண்டு பார்த்திருப்பானா தெரியவில்லை.  

அந்த பார்வையில் தெரிந்த உதாசீனம், இளக்காரம் அர்ச்சனாவால் மேலே பேச இயலவில்லை

=======================================

ஏன் எப்படி எதனால் என்று வரையறுக்கும் முன் எல்லாம் முடிந்து விட்டது

நாயகி அவனை எதுவும் பேச விடவில்லை நான் வாக்கு குடுதுட்டுடேன் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்

அவனுக்குமே அவனின் அம்மாவின் பரிமாணம் புதிது முடியாது என்று ஸ்திரமாய் அவனால் மறுத்திருக்க முடியும் ஆனால் அம்மாவும் அப்பாவும் சொல்லிய பின் நடு சபையில் அவர்களை அவனால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.    

யார் சொன்னர் ஆண்கள் தான் முடிவெடுப்பார் என்று இங்கே முடிவெடுத்தது ஷக்தி ப்ரியாவும் நாயகியும், வல்லபனின் அக்காள்களின் சம்மதத்தோடு. அவர்கள் சூர்யமதி சந்திரமதி.  

Advertisement