Advertisement

பணத்திமிரு என்று தினேஷ் பேச

எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க வாங்கிட்டு கிளம்பிடுங்க வேற பேச்சு வேண்டாம் என்று ராஜமாணிக்கம் கறாரக பேசியவர் இங்க நடந்ததுக்கு நானும் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்றார்

பேசி முடித்த அம்மாவும் தாத்தாவும் அர்ச்சனாவை பார்க்க நடந்ததற்கு சிறு வருத்தமும் இன்றி பார்த்திருந்தாள் இருவரையும்

இருவருக்கும் அவளை அடித்து துவைக்கும் ஆவேசம் வந்தது. ஏன் இப்படி செய்தால் என்று தெரியவேயில்லை


உங்க அண்ணனை பேசாமா போக சொல்லி என்று ராஜமாணிக்கம் அவரின் மருமகளை பார்த்து பேச

அண்ணா நீங்க வீணா பிரச்சனை பண்ணாதீங்க இந்த கல்யாணம் நடக்காது என்று ஷக்தி பேசினார்

புரியாம பேசாத ஷக்தி என் மகனை கட்டினா நீ காலம் பூராவும் உன் பொண்ணோட இருக்கலாம் தனியா இருக்க வேண்டி இருக்காது வேற யாரை கட்டினாலும் நீ தனியா நின்னுடுவ பின்ன உன் இன்னொரு பொண்ணு கல்யாணம் எப்படி நடக்கும் உன் மாமனார் பேச்சை கேட்டு அண்ணனை வேண்டாம்னு சொல்லாத உன்னை நினைச்சு பாரு என

என்னை எனக்கு பார்த்துக்க தெரியும் என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம் என்

அதான் அவளுக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலையே பேசாம பாலாவை கல்யாணம் பண்ணி வைங்க என


இது நடக்கலை உன் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது எழுதி வெச்சிக்கோ உன் பொண்ணு நல்லாவே இருக்க மாட்டா இப்படி கடைசி நிமிஷத்துல ஓடற பொண்ணை யார் கல்யாணம் பண்ணுவா நல்ல பொண்ணுங்களுக்கே வரன் அமையறது இல்லை உன் பொண்ணுக்கு எப்படி அமையும் அப்புறம் உன் சின்னவ அவளை என்ன பண்ணுவ மொத்தமா ரெண்டு பேர் வாழ்க்கையும் நாசமா போகும் நீயாவது கல்யாணம் கட்டி ரெண்டு குழந்தை பெத்து மூளியா நிக்கற ஆனா உன் பொண்ணுங்க கல்யாணம் ன்ற பேச்சே இல்லாமயே மூளியா நிக்க போறாங்க என பேச பேச

உறவுகளே ஸ்தம்பித்து நிற்க

ராஜா மாணிக்கம் முதல வெளில்ல போடா இங்க இருந்து என்று கர்ஜிக்க ,

என்ன மாமா பணம் இருந்தா என்னை எதிர்துடலாம்னு நினைக்காதீங்க உங்களால் என்னை ஒன்னும் பண்ண முடியாது இப்ப உன்கூட இருக்குறவன் உன் பொண்ணை கூட்டிட்டு வந்தவன் எவ்வளவு நாள் உன்னோட இருப்பான் ஒரு நாள் ரெண்டு நாள் அட ஒரு வருஷம் எப்போ சின்ன சந்து கிடைச்சாலும் உன் பொண்ணை தூக்குவோம் என்று மோகனசுந்தரம் அவரை பார்த்து பேச


யாரையும் அவர் பார்க்கவில்லை அர்ச்சனாவை தான் பார்த்தார் பார் உன்னால் எனக்கு என்ன பெயர் நமக்கு எவ்வளவு அவப் பெயர் என

அதுவரை எந்த கலக்கமும் இல்லாமல் வெகுவாய் அலட்சியமாய் இருந்தவளின் முகத்தினில் அம்மாவை கொண்டு முதல் முறையாய் கலக்கம்

வல்லபனிர்க்கு என்னடா இவர் இப்படி பேசுகிறார் இவரெல்லாம் ஒரு மனிதரா என்று பார்த்திருந்தான். அவன் வீட்டு பெண்ணை பேசியிருந்தால் நடப்பதே வேறு இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை பெண்பிள்ளை விவகாரம் ஓரளவிற்கு அவன் பேசவும் முடியாது நீ யாரு உனக்கு தொடர்பா என்று கேட்டுவிட்டால் அது இன்னும் அவமானம் பேச்சுக்கள் நொடியில் அப்படி தான் வரும் என்று புரிந்தவன்

தேவையிருந்தால் உள்ளே நுழையலாம் பங்காளியாய் இருந்தால் என்ன ஒரு அடியாவது வாங்காமல் இவன் இந்த மண்டபத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது போல மோகனசுந்தரத்தை தீபார்வை பார்த்திருந்தான்

பெண்ணும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பாத்திருக்க

ராஜமாணிக்கம் போடா என்று மோகனசுந்தரத்தை வெளியே தள்ள கை கொண்டு போக

================================

நில்லுடா அங்கேயே என்று கர்ஜித்த வல்லபன், உங்கப்பன் கை காலோட வேணும்னா அவரை கூட்டிட்டு போய்டு என்னடா மூணு பொண்ணுங்க ஒரு வயசானவர் ன்னு இந்த பேச்சு பேசறீங்க , பார்ப்போம்டா உங்க அப்பா என்ன பன்றார்ர்னு என்று அசல்டாய் பேச

வேகமாய் எழுந்த மோகனசுந்தரம் என்ன அடிசிடீங்கள்ள உங்களை சும்மா விடமாட்டேன் நான் யார்னு உங்களுக்கு தெரியலை அப்பனும் பையனும் அடையாளம் தெரியாம போகப் போறீங்க

சிவசு வல்லபனிடம் எந்த கை எந்த கால் என்று கேட்க

ஷ் என்பது போல ஒற்றை விரல் வைத்து அவரிடம் காண்பித்தவன்

கையை கட்டி தோரனையை நின்று ம்ம் அப்புறம் என்று அவரிடம் பேச

எத்தனை நாள் டா நீ இவன்களை பார்த்துக்குவ என்று அவனிடம் சண்டையிட

காலம் முழுசும் கூட என்னால பார்க்க முடியும் முதல்ல நீ முழுசா மண்டபத்தை விட்டு வெளில போ ஒரு வார்த்தை சொன்னே நீ இந்த இடத்தை விட்டு நகர முடியாது என பேசிகொண்டிருந்தான்

Advertisement