காலையில் எழுந்த பின்னும் விஜயன் தோள்களில் தொங்கிக் கொண்டே திரிந்தாள்.
என்ன தான் ஆச்சு உனக்கு என்று விஜயன் கேட்க
ரியல்லி எனக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு, ஐ வாஸ் ரியல்லி வொரீட் அபவுட் ப்ரித்வி, என்னால அவனோட வாழ்க்கையை அப்பா நாசமாக்கிட்டார்ன்னு ஒரு கில்ட் கான்ஷியஸ். நேத்து தான் கொஞ்சம் தெம்பா பீல் பண்ணினேன். காஞ்சனா ப்ரித்விக்காக தான் வந்தா, என்னால ஃபீல் பண்ண முடியுது.
இப்படின்னு தெரிஞ்சிருந்தா அவங்களுக்குள்ள முன்னமே எல்லாம் சரியாக்கி இருப்பேன் என்று அவளை கொஞ்சிக் கொண்டே சொல்ல
பாருடா அவ்ளோ பெரிய ஆளா நீங்க
பின்ன இல்லையா என்று சரசங்கள் மீண்டும் தொடர
சைந்தவி நிறுத்தாமல் பேசிக் கொண்டே சென்றாள், எதை பேசினாலும், விஜயன் நிறுத்தினால் அதற்கும் விடவில்லை
ம்ம் அப்புறம் என்றவன் உதடுகள் அவளின் உதடுகளை மீண்டும் உரச…
நான் என்ன கதையா சொல்றேன் என்று முறைக்க
நீ என்ன வேணா சொல்லு, கேட்க தான் நான் இருக்கேனே
ஐ அம் ஹேப்பி பார் ப்ரித்வி. அவனோட வாழ்க்கை சரியாகணும். இப்படி பேசிக் கொண்டேயிருக்க,
அவனை விடு, அவன் பார்த்துக்குவான் நீ என்ன முடிவு பண்ணியிருக்க என்றான் ஆழ்ந்த குரலில்
பின்னே இரண்டு நாட்களாக கேட்கிறான் பார்த்துக்கலாம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள்
இப்போது அவன் கேட்கவும், அவன் மேலே தொங்கிக் கொண்டே, எனக்கு தெரியலை தெரிஞ்சா சொல்ல மாட்டேனா என்று அவன் மேல் முகத்தை புதைத்துக் கொண்டவள்
எனக்கு உங்களை விட்டுட்டு இருக்க வேண்டாம் என்று சொல்ல
அவளை அணைத்து பிடித்துக் கொண்டான்
அணைப்பிலேயே எவ்வளவு நேரம் நின்றனர் என்று தெரியவில்லை
ரொம்ப கஷ்டமா இருக்கும் தனியா இருக்க, எனக்கு இருக்க முடியும்னு தோணலை
அப்புறம் எதுக்கு அப்ளை பண்ணின
அது அப்போ நாம சேர்ந்து இல்லை
எல்லாம் அவன் மேல் முகம் புதைத்தே. சில நிமிடங்களில் ஈரம் உணர
பதறி அவள் முகம் பார்க்க விழைய, அவள் விட்டால் தானே இன்னும் இருக்கமாய் கட்டிக் கொண்டாள்
என்ன சவீ சொன்னா தானே தெரியும்
எனக்கு சொல்லத் தெரியலையே என்றவள் அழ
ப்ச் என்னை பாரு என
பார்க்கவே விடவில்லை இன்னும் இன்னும் இறுக்க
உனக்கு தான் வலிக்கும் என்னை பார்க்க வேண்டாம் ரிலாக்ஸ் என
கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை,
என்னடி உனக்கு என்று அதட்டலிட, அது சற்று வேலை செய்தது.
எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை, நான் யோசிக்கறது எல்லாம் தப்பாகுது, உன்னை கல்யாணம் பண்ண நினைச்சேன், பண்ணிட்டேன் ஆனா உன்னை விட்டு வந்துட்டேன், இது எல்லாம் என்னோட முடிவு தானே
இப்போ தான் நாம சேர்ந்து இருக்கோம், எனக்கு படிக்கப் போகவா வேண்டாமா தெரியலை. எனக்கு பெருசா இன்டெரெஸ்ட் இல்லை
வேற எதுல இன்டெரெஸ்ட்
குழந்தை பெத்துக்கணும் என்று அப்போது தான் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து சொல்ல
அவளின் பதிலில் சிறு சிலிர்ப்பு அவனுள். அவளின் அழுத முகத்தை பார்த்து புன்னகையோடு அதுக்கும் நீ படிக்கறதுக்கும் என்ன சம்மந்தம்
அவனை முறைத்துப் பார்த்தாள்.
யாரு பேபி ய பார்த்துக்குவா
நான் இருக்கேன் தானே
கண்கள் இடுங்க அவனை பார்த்தவள், நான் படிக்க போயிட்டா பேபி எப்படி வரும், இங்க இங்க நடந்ததுக்கு வந்துட்டாலும் அங்கே வந்து நீ எப்படி பார்த்துக்குவ
அமெரிக்கா காரன் எங்கப்பா மாதிரி உன்னை எப்படி விடுவான் என்று கேட்க
அவள் கேட்ட விதமே அத்தனை அழகாய் இருக்க
கேட்டதை விட்டு அவளின் இதழ்களை வருடியவன், யோசிப்போம், நீ அக்சப்டன்ஸ் குடுத்துடு,
அப்போதும் அவனையே பார்த்திருக்க, குடு சவீ பார்த்துக்கலாம், இப்போ நம்மை பார்க்கலாம் அநியாயத்துக்கு என்னை நீ கெட்ட பையன் ஆக்குற காலையில
என்னை கட்டிப் பிடிச்சா கெட்ட பையனா
காலையில இதெல்லாம் பண்ணினா கெட்ட பையனாம்
யார் சொன்னா என்றவள்
முகத்தை அவனுக்கு அருகில் கொண்டு சென்று சரி கெட்ட பையனாகிட்ட இன்னும் கெட்ட பையனாகிடு என
நோ நோ நான் நல்ல பையன் என்றான் சிறு சிரிப்போடு
சரி நான் கெட்ட பொண்ணாகிடறேன் என்று அவனின் இதழ்களை தீண்ட, மெல்லிய இதழ் பரிமாற்றம்.