ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி.
அந்த காரை வைத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று ப்ரித்வி பிடிவாதம் பிடித்திருக்க, அவனையும் விட விஜயன் முடியாதென்று பிடிவாதம் பிடித்திருக்க…
ப்ரித்வி மறுநாள் மாலை ஆபிஸ் முடிந்ததும் இவர்களின் வீட்டிற்கு வந்தவன், வீட்டிற்கு செல்ல எழவேயில்லை. நான் வீட்டுக்கு போக மாட்டேன் நீ காரை யூஸ் பண்ண ஒத்துக்குற வரை என்று விட்டான்,
எட்டு மணிக்கு பிறகு அவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று அவனின் அம்மாவிடமிருந்து விடாமல் அழைப்பு, இவன் எடுத்தால் தானே. சிறிது நேரம் விட்டு ஸ்னேஹா விஜயனிற்கு அழைத்தவள் அண்ணா மாமா அங்கேயா இருக்கார். அவர் இன்னும் வீட்டுக்குப் போகலையாம் என்று கேட்க
இங்க தான்மா இருக்கான் என்று கொடுக்க
என்ன நான் இங்கே இருக்கனா இல்லையான்னு யார் கேட்டா என்றான் அதட்டலாக
அக்கா என்று அவள் சொல்ல
என்னவோ என் மேல ரொம்ப அக்கறை மாதிரி சீன போட வேண்டாம்னு சொல்லிடு என்று சொல்லி வைத்தது விட
சைந்தவி கவலையாகப் பார்த்திருந்தாள். அண்ணா டேய் ஏன் இப்படி பேசற
சும்மா தான் என்றான் அலட்சியமாக
பின் வெகுவாக அவனை சமாதானம் செய்து ஒழுங்கா காரை வெச்சிக்கோ என்று சைந்தவி விஜயனை மிரட்டி ஒரு வழியாக ப்ரித்வியை வீட்டிற்கு கிளப்பினாள்.
இவர்கள் அந்த பைவ் ஸ்டார் ஹோடளிற்கு வருவதன் நோக்கம், ஜீவன் ஸ்னேஹாவிற்கு விருந்து அதனோடு ப்ரியா திருமணதிற்கு அழைக்க கேட்டிருக்க, விஷ்ணு அவர்களுக்கு உதவி இருக்க, அவர்களையும் அழைத்து இருந்தால், உடன் ப்ரித்வி ரித்திகா அவர்கள் இல்லாமல் ஏது.
இவர்கள் முன்னமே வந்து விட, அதன் பிறகு அவர்கள் ஜீவனும் ஸ்னேஹாவும் வந்துவிட, ப்ரியா மட்டும் வந்தாள், விஷ்ணு கொஞ்சம் நேரம் கழிச்சு வருவார் என்று சொல்லியபடி
சற்று நேரம் சென்றே ப்ரித்வியும் ரித்திகா வும் வந்தனர்.
அவன் பேசப் பேச, இந்த முறை ரித்தி அவளின் அத்தையிடம் தாவினாள். தாவியவள் அவள் நன்றாக பிடித்ததும் அவளின் மீது சாய்ந்து கொண்டாள் என்னடா அதிசயம் என்று ப்ரித்வி பார்க்க, விஜயன் வாய்விட்டே கேட்டான்.
தெரியலையே அத்தை ஊருக்கு போகப் போறான்னு என் பேபி க்கு தெரிஞ்சிடுச்சோ என்னமோ என்று ப்ரித்வி சொல்ல
விஜயன் சைந்தவியை பார்க்க அவள் வாயே திறக்கவில்லை.
என்ன என்ன ஊருக்கு என்று ஜீவன் கேட்க,
அப்போது தான் விஷயத்தை ஜீவனிடம் பகிர்ந்தனர். கேட்டிருந்த பிரியா ஹே சூப்பர் என்று கத்தி சைந்தவிக்கு வாழ்த்து சொல்ல, எல்லோரிடமும் அந்த உற்சாகம் தொற்றியது.
இன்னும் போவதா வேண்டாமா என்று சைந்தவி முடிவு சொல்லவில்லை. எப்படியும் இன்னும் இரண்டு அல்ல மூன்று நாட்களில் முடிவு செய்தே ஆகவேண்டும். அக்சப்டன்ஸ் குடுத்தே ஆகவேண்டும்
இல்லையே நீங்க சொல்லலை அதனால எனக்கு சொல்லவா வேண்டாமான்னு தெரியலை
அப்போ போன் செஞ்சு இங்க இருக்கோம்னு சொல்லிடு எனக்கு தெரியாம சொன்ன மாதிரி சொல்லிடு சைந்தவியின் அருகில் நின்று கொண்டவன்
அப்படியே எங்களுக்கு தெரியாம போட்டோ எடுத்து அனுப்பின மாதிரி அனுப்பிடு என்றான்
அந்த புகைப் படத்தில் ரித்திகா சைந்தவியின் மேல் ஒய்யாரமாய் சாய்ந்திருக்க, ப்ரித்வி மலர்ந்த முகத்துடன் அதனை பார்த்திருந்தான்
ஏன்டா அண்ணா என்று சைந்தவி சலுகையாய் குறைபட, லெட்ஸ் பார்டி சைந்து.
அப்படியே சைந்து க்கு சீட் கிடைச்சிருக்கறதையும் சொல்லிடு என்றான் உற்சாகமாக
இவர்களின் பேச்சு இப்படி சென்று கொண்டிருக்க
விஷ்ணு வந்திருந்தான்.
அவனிடம் ப்ரித்வியும் விஜயனும் மாற்றி மாற்றி நன்றி சொல்ல
இவ்வளவு தேங்க்ஸ் தேவையில்லை. உண்மையா இவ சொன்னான்னு தான் போனேன், இவளுக்கு சொல்லுங்க என்று ப்ரியாவை கை காட்டினான்.
இப்படியாக பேச்சுக்கள் செல்ல, அந்த இன்ஸ்பெகடர் அன்னைக்கு உங்களை லாக் அப் ல வெச்சானே அவனை கூட யாரோ அடிச்சிட்டாங்க. ஹாஸ்பிடல் ல இருக்கான் ரெண்டு நாளா இது தான் பேச்சு, செமயா அடி வாங்கியிருக்கான் ஆனா யாருன்னு கண்டு பிடிக்க முடியலை என்று விஷ்ணு சொல்ல
ஜீவனின் பார்வை விஜயனை தொட்டு மீள, அவனோ மெனு கார்டை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பேச்சை காதில் வாங்கியதாக தெரியவில்லை.