Advertisement

 

பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த சிவசு , பாலாவை கை கால் வாய் கட்டி தூக்கி வந்தார், பின்னேயே மோகனசுந்தரம்.

வல்லபனின் பார்வை முழுவதும் நடந்து வரும் அர்ச்சனா வின் மீது தான். நடையில் ஒரு தொய்வு தெரிய, அவளின் முகத்தில் இருந்து வல்லபனுக்கு ஒன்றும் தெரியவில்லை.

பாலாவை தூக்கி வருவதற்கான பதட்டம் எதுவும் முகத்தினில் இல்லை. அதுவே சொன்னது பாலாவை அவள் விரும்பவில்லை என்று.   

இந்த பெண்ணா இப்படி வரவேற்ப்பில் நின்று விட்டு கடைசி நிமிடத்தில் பிரச்சனையை செய்திருக்கும் என்று தோன்றக் கூடிய முகம்.

இருக்க வேண்டிய இடத்தினில் எல்லாம் கச்சிதமாக இருக்க எங்கேயும் கூடவோ குறையவோ இல்லாத உடலமைப்பு. மிக சிலருக்கே அமையும். உயரம் நிறம் என எல்லாம் சிறப்பு. இந்த முகம் புன்னகைத்தால் இன்னும் அழகாக இருக்குமே என்ற வல்லபனுக்கு தோன்றியது.

இது எதையும் ரசித்துப் பார்த்தான் இல்லை எல்லாம் ஆராயும் பார்வையே. எந்த பெண்ணையுமே வல்லபன் ரசித்து பார்த்திருப்பானா இதையே ஒரு ஆராய்ச்சி செய்யலாம்.


பெண்கள் என்றால் போற்றப் படவேண்டியவர்கள் பாதுக்காக பட வேண்டியவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று நாயகியால் சொல்லி சொல்லி வளர்க்கபட்டிருக்க அந்த உணர்வு அவனின் நரம்புகளில் மட்டுமல்ல ரத்த அணுக்களில் கூட கலந்திருந்தது என்றால் மிகையல்ல

அதே சமயம் அதன் தாக்கங்கள் சில எதிர்மறையான எண்ணங்களும் அவனுக்கு கொடுத்திருந்தன. பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் அமைதியாக இருக்க வேண்டும் பெரியவர்களை மதிக்க வேண்டும் உடைகளில் எப்போதும் கவனம் வேண்டும் ஒழுக்கம் என்பதனை உயிராய் மதிக்க வேண்டும் வேற்று ஆண்களை கண்ணெடுத்தும் பார்க்க கூடாது என்பது போல

அதனால் காதல் என்பது அவனுக்கு பிடிக்காத வார்த்தை ஆகி போனது

இப்படி எல்லாம் சேர்ந்த கலவை வல்லபன்   

அதற்காக ஆண்கள் அப்படி செய்யலாம் என்பது எல்லாம் அவனின் எண்ணம் கிடையாது. ஒழுக்க கேடுகளும் ஒழுங்கீனங்களும் என்றுமே அவனால் பொறுத்துக் கொள்ள முடியாத விஷயங்கள்.

=======================================

உன்னால நம்ம மொத்த ஆளுங்களையும் அவர் தப்பா பேசறார் என்று அப்போதும் செல்வநாதன் பொறுமையாக பேச

உனக்கு மரியாதை அவ்வளவு தான் நீ வாயை மூடு என்று மோகன சுந்தரம் எகிறினார்.

இன்னும் வல்லபன் தான் அர்ச்சனாவை வர செய்தான் என்று அவர் நினைக்கவில்லை ராஜமாணிக்கம் தான் தூக்கி வர செய்தார் என்று நினைத்திருந்தார்

அப்பா நீங்க இந்த பக்கம் வாங்க என்ற வல்லபனின் குரல் நிதானமாக ஆஅனால் ஓங்கி ஒலிக்க, மோகன சுந்தரம் அப்போது தான் அவனை பார்த்தார்


வல்லப்பா அப்பா தெரியாம பேசறார் இதுல நீங்க தலையிட வேண்டாம் அப்பா சார்பா நான் பெரியப்பா கால்லா விழுந்து மன்னிப்பு கேட்கறேன் என்று பாலசுப்ரமணியம் பேச

இதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த மாப்பிள்ளை தினேஷ் எகிறினான்

என்னங்கடா எங்களை என்ன மொத்தமா எல்லோரும் சேர்ந்து அவமாரியதை பண்றீங்களா எங்களை என்னன்னு நினைசீங்க இவ என்ன தைரியம் இருந்தா என்னை பிடிக்கலை சொல்வா முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க இந்த கல்யாணம் இப்போ நடக்கணும் என்று எகிறினான்

அப்படி ஆரம்பித்தது தான் ஆளாளுக்கு பேச

வல்லபனும் பாலாவும் மோகனசுந்தரமும் வாக்குவாதத்தில் ஈடுபட

தினேஷ் பேசியதில் அர்ச்சனாவின் முகத்தினில் ஒரு அசூயை தோன்ற என்ன பேச்சு இது என்பதனை முகத்தினில் அப்படியே காண்பிக்க


 

 

 

Advertisement