Advertisement

ராமிற்குள் குழப்பம், நடந்ததை இன்னமும் நம்ப முடியவில்லை அவனுக்கு. தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ண ஊர்வலம்.

 

தன்னுடைய எண் எப்படி அவனுக்கு கிடைத்திருக்கும். அதுவொன்றும் பெரிய விஷயமில்லை தான் ராவ் கிரானைட்ஸ் என்ற தங்களின் அடையாளமே போதுமே…

 

ராமினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ராகேஷ் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை அவனறிவான். அவனின் எண்ணுக்கு தன் வீட்டு எண்ணில் இருந்தே அழைத்திருந்தான் இப்போது.

 

‘இந்நேரம் அவனுக்கு விடிந்திருக்கும்’ என்று தன்னை சமாதானம் செய்துக் கொண்டான். எதிர்முனையில் அழைப்பை ஏற்றவன் “எஸ் ராகேஷ் ஹியர்”

 

“ராக்கி ராம் பேசறேன்…” என்றவன் நண்பனின் நலம் விசாரிக்க பதிலுக்கு அவனும் விசாரித்து முடித்திருந்தான்.

 

“என்ன சர்ப்ரைஸ் நீ எனக்கு போன் பண்ணியிருக்கே… இந்தியாடைம் டூ யர்லி ஆச்சே”

 

“இல்லைடா சும்மா தான் போன் பண்ணேன்… தூக்கம் வரலை சீக்கிரம் எழுந்திட்டேன், உன்கிட்ட பேசி நாளாச்சேன்னு போன் பண்ணேன்…”

 

“அப்புறம் உன் பிரண்ட் பவள் எப்படியிருக்கான்??” என்று பேச்சில் தூண்டில் போட்டான் அவன்.

 

“அடடா பாருடா இவரு அவரை விசாரிக்கறதை… அவனா நீ!!” என்று கிண்டலாய் கேட்டாலும் “நல்லாயிருக்கான்டா, அவனுக்கு மேரேஜ் ஆகிட்டு தெரியும்ல”

 

“ஹ்ம்ம் நீ தானே சொன்னே…”

 

இருவருமாய் போலீஸ் ஸ்டேஷன் வந்து கம்பிளைன்ட் கொடுத்தனர். ராம்க்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் என்பதால் அவளை அதிகம் கஷ்டப்படுத்தவில்லை அவர்கள்.

 

இருந்தாலும் தூண்டி துருவி கேள்விகளை கேட்டு அவள் சொன்னதை குறித்துக் கொண்டனர். ராம் அவனின் செல் எண்ணை கொடுத்து வந்தான் அவர்களிடம்.

 

அவர்கள் அங்கிருந்து வெளியில் வர “அவர் கிடைச்சிருவாருல” என்றாள் ஆற்றாமையுடன்.

 

“கண்டிப்பாகிடைச்சிருவான்நோ வொர்ரிஸ்” என்றவன் தன் கைபேசி எண்ணை அவளுக்கு கொடுத்தான்.

 

“எப்போ வேணாலும் போன் பண்ணுங்க… உங்களை வீட்டுல விட்டு நான் கிளம்பறேன்” என்று சொல்லி அவளை கூட்டிச் சென்று வீட்டில் விட்டான்.

 

செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி அவளுக்கு உணவு பார்சல் செய்திருந்தான்.

 

“வேண்டாமே…”

 

“எப்படியும் நீங்க சாப்பிடாம இருக்க தான் பார்ப்பீங்க… பிரியன் வரும் போது நீங்க தெம்பா இருக்க வேண்டாமா… தயக்கம் வேணாம்” என்று சொல்லி வீட்டில் அவளை இறக்கி விடும் போது அவள் கையில் அதை கொடுத்தான்.

 

வதனா கல்லூரிக்கு செல்லவில்லை, தினமும் ஒரு முறையாவது ராமிற்கு போன் செய்து பிரியனை பற்றி விசாரித்தாள்.

 

அவனை தொந்திரவு செய்கிறோமோ என்று அவ்வப்போது குற்றவுணர்வு வேறு எழும் அவளுக்கு.

 

 

“வதனா இதெல்லாம் உண்மையான்னு இப்பவும் எனக்கு சந்தேகமா தான் இருக்கு… நான் அவங்க சொன்ன கனடா பிரான்ச்ல எதுக்கும் விசாரிக்கறேன்…”

 

“அவன் அங்க இருந்தா அவனோட காண்டக்ட் நம்பர் வாங்கி உங்களை பேச வைக்கிறேன், எதுவும் பீல் பண்ணாதீங்க” என்று பேசி கிளம்பினான்.

 

ஏனோ இன்று அவளை தனியாய் இறக்கி விடும் போது மனதிற்கு கஷ்டமாக தோன்றியது அவனுக்கு. அவன் அறிவு அவளை தனியாய் விடாதே என்றும் சொல்லியது.

 

ஆனாலும் அவனால் அங்கே இருக்க முடியாதே என்பதால் அங்கிருந்து கிளம்பினான். அவளை விட்டு நேரே அலுவலகம் வந்து சேர்ந்தான்.

 

அவன் அறிந்தவர் தெரிந்தவர் என்று யாரையெல்லாமோ பிடித்து பிரியன் கனடா சென்ற செய்தி உண்மை என்பதை பிடித்தான். அங்கு அவனின் காண்டாக்ட் எண்ணை வாங்கி பேச முயற்சி செய்தான்.

 

அங்கிருந்தவர்களோ அவன் இன்று விடுமுறை என்றனர், அவன் மொபைல் எண் கேட்டால் இந்த ஊருக்கு இப்போது தானே வந்திருக்கிறான், இன்னும் புது எண் அவனுக்கு வழங்கப்படவில்லை என்றனர்.

 

எல்லாம் உறுதியாய் தெரிந்த போதும் பிரியனிடம் பேச மட்டும் அவனால் முடியவில்லை. அதுவே ராமிற்கு எங்கோ ஏதோ தவறு நடக்கிறது என்பதை பறைசாற்றுவதாய் தோன்றியது.

 

வேகமாய்மாதங்கள் கடந்திருக்க வதனாவிற்கு பிரசவ வலியும் கண்டது. சுகப்பிரசவம் செய்ய முயற்சிக்க ஏனோ அது முடியாமல் போக கடைசியாக ஸ்கேன் எடுத்த போது தான் தெரிந்தது.

 

குழந்தையின் ஒரு கால் சற்றே வளைந்திருப்பது… வதனாவாலும் குழந்தையை பிரசவிக்க முடியவில்லை, குழந்தையும் வெளியே வர சிரமப்பட இறுதியாக அறுவைசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

 

வதனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறக்க மருத்துவர் அவளை கொண்டு வந்து ராமின் கைகளில் கொடுக்க முதன் முறையாய் அவனுக்கு கண்கள் கலங்கி போனது.

 

பிஞ்சு கைகளை குழந்தை அசைக்க அந்த நொடி பிரியனுக்காய் ஒரு நொடி வருத்தப்பட்டான் அவன். “இந்த சந்தோசமான தருணத்தை அனுபவிக்க முடியாம எங்கேடா போனே??” என்றான் வாய்விட்டு.

 

குழந்தைக்கு இசைப்பிரியா என்று பெயரிட்டான் ராம். வதனா குழந்தையை பெற்றாலும் அவளை முழுவதுமாய் தன் வசம் வைத்திருந்தது ராமே!!

 

அக்குழந்தையின்கால்கள் தரையில் படாமலே பார்த்துக் கொண்டான். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் போல் தான் அவளை கவனித்தான். அதுவரையிலும் பேசாமல் இருந்த ராமின் அன்னை அவனை கோபமாய் எடுத்தெறிந்து பேசினார் ஒரு நாள்.

 

Advertisement