இன்று அவனையே பார்த்த படி சோபாவில் அமர்ந்திருக்க, இவ திருந்தமாட்டா என்று நினைத்தவனாக

அவளை பார்த்தவன் சாப்பாடு போடற வேலை ஒன்னு தான் நீயா செய்வ இப்போ அதல இருந்து நான் சண்டை போட்டவுடனே விட்டது தொல்லைன்னு எஸ்கேப் ஆகிட்டிய என்று முறைக்க

அவன் பேசியது எல்லாம் துளசியின் கருத்தில் இல்லவே இல்லை பரிமாறுவதா வேண்டாமா என்பது மட்டும் தான் அவளின் சிந்தனை

அப்படியே பார்த்திருக்க

=================================

 

வாடி இங்க என்றான் அதே கோபத்தோடு

இப்போது என்னவோ என்ற பாவனையோடு அருகில் வரவும்,

கொஞ்சமாவது சூடு சொரணை வேணும் திட்டுனா கோபம் வரணும் சண்டை போடணும் ஏதாவது பண்ணனும் இப்படி நீ எனவோ பேசிக்கோன்னு பார்த்துட்டே நிற்பியா என பேச

அவனுக்கு உடனே ப்ளேட் எடுத்து வந்து சாப்பிட எடுத்து வைக்க

=================================

 

சண்டை போட வரலையா அப்போ அந்த சாப்பாடை தூக்கி என் தலைமேல போடு என்று கோபமாக அவன் எழ

அவனின் கை பிடித்தவள் ஏன் இவ்வளவு கலாட்டா பண்றீங்க உட்காருங்க பசிக்குது என்றாள்.

நீ இன்னும் சாப்பிடலையா என

இல்லை என்பது போல அவள் தலையசைக்க

 

========================================

துளசி சமையல் அறையில் இருப்பாள் என்று நினைத்து குரல் கொடுக்க, அவளோ அப்போது தான் குளித்து உள் அறையில் தயாராகி கொண்டு இருந்தவள், இங்கே தான் இருக்கேன் என்று சன்னக் குரலில் சொல்ல, உள் அறைக்குள் அவன் சொல்ல, புடவையை கட்டி முடித்திருந்தவள், கொசுவத்தை உள்ளே சொருகிக் கொண்டிருக்க

வந்தா ரூம்குள்ள எட்டி பார்க்க மாட்டியாடா என்று அவனுக்கு அவனே திட்டுக் கொண்டு வாட போச்சே என்ற பார்வையை துளசியினிடம் செலுத்தினான்.

எதுக்கு கூப்பிட்டீங்க என

பேசணும் என்றான் ஒற்றை வார்த்தையில்

====================================

ஏய் என்னடி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு உம் சரின்னு சொல்லிட்டு போனா என்ன அர்த்தம் உட்காருடி ஆளும் அவளும் நான் என்ன பேச வந்தாலும் என்னை கோபப் படுதிடற என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

இல்லை உங்களுக்கு டைம் ஆகிடும் இன்னும் ஒன்னும் செய்யலை தனம் இன்னைக்கு வரமாட்டா அதான் போனேன் சமைக்கணும் என்று துளசி விளக்கம்  கொடுக்க

சமைக்க தான் நீ பொறந்தியா ஒன்னு சமை இல்லை சாப்பாடு போடு எரிச்சல் பண்றடி என்று கத்தினான்.