Advertisement

ஹலோ மக்களே,

 

மறுபடியும் நானே தான் அடுத்த புதுக்கதையோட வந்துட்டேன்… இப்போ எழுதறதுஎல்லாம் கொஞ்சம் சின்ன கதை தான்… சிறு பூக்களின் தீ(யே)வேதவிர்த்து…

 

இதுவும் சின்ன கதைன்னு நினைச்சு தான் தொடங்குறேன்… எழுதும் போது தான் எனக்கே தெரியும் சின்னதா போகுதா பெரிசா நீண்டு போகுதான்னு…

நாயகன்: தேவ் தனுஷ் என்ற டிடி

நாயகி: புவன சக்தி என்ற பீஎஸ்

கதையோட பேரை சொல்ல மறந்துட்டேன் பாருங்க… ஆசையை காத்துல தூதுவிட்டு

 

நாயகி பண்பலைவரிசையில் ஆர்ஜே… இவர்களின் காதல் காற்றில் பயணித்து இருவரையும் எப்படி இணைக்க போகுதுன்னு நாம கதையில பார்ப்போம்…

 

கதையோட சின்ன ப்ரீகேப் கொடுக்கறேன் இப்போ, முதல் அத்தியாயத்திற்கு மட்டும் தான் அப்புறம் நேரடியான பதிவுகள் மட்டுமே.

 

கதையின் துளியில் இருந்து

“ஹலோ வணக்கம் வெல்கம் டு தி ஷோ இது உங்கள் பண்பலைவரிசை 105.7… கேளுங்க கேளுங்க காற்றின் வழி கேட்கும் ஒலி…”

 

“இது நம்ம நிகழ்ச்சி ஆசையை காத்துல தூதுவிட்டு, நான் உங்க பீ.எஸ் பேசறேன்… நேயர் ஒருத்தர் காத்திட்டு இருக்கார் நம்ம இணைப்புலவாங்க நாம அவரோட லைன்ல இணையலாம்…”

 

“ஹலோ சொல்லுங்க நான் உங்கபீ.எஸ் பேசறேன்… நீங்க யார் பேசறீங்க எங்க இருந்து பேசறீங்க??” என்று விடாமல் பேசிக்கொண்டிருந்தவள் நம் நாயகி ஆர்.ஜே பீ.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் புவனசக்தி.

 

அந்த பண்பலைவரிசையில் இரண்டாண்டு காலமாக பணிபுரிபவள் தன் பேச்சில் தனக்கென்று தனி அடையாளம் ஏற்படுத்திஇந்த வருடத்தில் மக்கள் விரும்பும் ஆர்ஜேவாகதேர்வாகியிருந்தாள்.

 

“ஹலோ பீ.எஸ் நிஜமாவே எனக்கு லைன் கிடைச்சிருச்சுப்பா… ஹாப்பி பார் தாட், என் பேரு மீரா

 

“தாங்க்ஸ் நிவி… காபி குடிக்கணும் போல இருந்துச்சு அதுக்காக தான் வெளிய வந்தேன்… நீயே கொண்டு வந்திட்ட, தேங்க்ஸ் பேபி…”

 

“எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேணாம் மச்சி… வீட்டுக்கு போகும் போது ஒரு ஹாட் டாக் வாங்கி தர்றியா…” என்று டீல் பேசினாள் அவள்.

 

“ஹாட் டாக் எல்லாம் இல்ல, வேணா ராஜாபாளையம் டாக் வாங்கி தரவா…” என்றுநம் நாயகி கண்ணடித்து சொல்ல “ஏன்டி இந்த கொலைவெறி உனக்கு??” என்று வலிக்காமல் அவள் முதுகில் ஒன்று வைத்தாள் மற்றவள்.

 

“பாட்டு முடியப் போகுது நான் உள்ள போறேன்…” என்றுவந்திருந்தாள்அவள்.

 

மீண்டுமொரு அழைப்பு வர “ஹலோ சொல்லுங்க…” என்று ஆரம்பித்து அவள் வழக்கமாக பேசுவதை பேசி முடித்தாள்.

 

“ஹலோ புவி மேடம் நான் அனு பேசறேன்சிவகாசில இருந்து…”

 

“அனு என்னோட பேரு எல்லாம் சொல்லி கூப்பிடுறீங்க நன்றி… சொல்லுங்கஅனு யாருக்காக இந்த பாட்டு என்ன பாட்டு வேணும் உங்களுக்கு??”

 

“எங்க மீம்மாக்காக இந்த பாட்டு வான் வருவான்     காற்று வெளியிடை படத்துல இருந்து…”

 

 

அவளுக்கென்று இரண்டு ஷோக்கள் ஒன்று ஆசைய காத்துல தூதுவிட்டு மற்றொன்று தூங்காத விழிகள் ரெண்டு என்ற இரவு நேர ஷோ…

 

நிவேதா கிளம்பிச்சென்ற பின்னே இன்னும் சிலர் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர். அவள் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்து இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

 

சட்டென்று ஒரு முகம் அவள் மனத்திரையில் வந்து போனது. இரண்டு வருடத்திற்கு பின் ஏனோ இன்று தான் அந்த முகம் அவள் எண்ணத்தில் வந்து போகிறது.

 

விழிகள் சோம்பலாய் திறந்து அவ்வுருவத்தை மறைக்கப் பார்க்க அதுவோ உன் எண்ணத்தில் இருக்கும் நான் அவ்வளவு சீக்கிரம் உன்னைவிட்டு அகலுவேனா என்று அழிச்சாட்டியம் செய்தது.

 

“நீங்க பீ.எஸ்குள்ள மறைஞ்சு இருக்கும் போது நானும் டிடியாவே இருக்கேங்க…”

 

‘என்ன இவன் இப்படி பேசறான்…’ என்று எண்ணியவள் ‘எதுவா இருந்தா என்ன இது அவனோட பர்சனல் நான் இதுக்கு மேல இதை குடையறது நல்லதில்லை…’ என்று எண்ணியபோதும் ஏனோ அவளுக்கு அவன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும் போல் ஒரு உணர்வு.

 

“ஓகே டிடி இந்த நேரத்துல உங்க தூக்கத்தை கெடுத்தது யாரு… நீங்க தூங்காம இருக்க என்ன காரணம் பகிருங்க…”

 

“ஒரு ராட்சஸியால இன்னைக்கு எனக்கு தூக்கம் போச்சு…”

 

“என்ன சார் பேய் கனவு எதுவும் கண்டீங்களா… ராட்சஸின்னு சொல்றீங்க??”

 

“பேய் கனவெல்லாம் இல்லை… இவ எப்பவும் என்னை இம்சை பண்ணுற ராட்சஸி இன்னைக்கு வீட்டுக்குள்ளயும் வந்திட்டா…”

 

“இன்னைக்கு தான் வந்தாங்களா??”

 

“எப்பவும் வர்றது தான்… இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டே எங்க ரெண்டு பேருக்கும்…”

 

“சார் நீங்க சொல்றது பார்த்தா உங்க மனைவியை சொல்ற மாதிரி இருக்கு…”

“ஆமாங்க மனைவி தான்…”

 

Advertisement