அன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவுமில்லாததால், மஹதி மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். இவளது வரவை அண்ணி கவனித்து, “என்ன மஹி சீக்கிரம் வந்துட்ட?”, கேட்க..
“இல்ல மஹி, இன்னிக்கு சாட்டர்டே,லீவு, ரெண்டு பேரும் தோட்டத்துல விளையாடிட்டு இருக்காங்க. குளிக்க வாங்கன்னு இப்பதான் சொல்லிட்டு வந்தேன்”, சொன்ன பார்கவி அண்ணி மலர்ச்சியாக இருந்தாள். ‘ஒருவேளை அண்ணா அவனது ‘பார்கவி’ ப்ரொடக்ஷன் குறித்து சொல்லியிருப்பாரோ?’, ‘
“ஓகே அண்ணி, ரூமுக்கு போறேன்.”
“ஹே. இரு இரு நானும் வந்ததுலேர்ந்து பாத்துட்டு இருக்கேன். ஒரே ஓட்டமா ஓடிட்டு இருக்க? லன்ச் இன்னும் சாப்பிடலதான? உங்கண்ணனையும் லன்ச்க்கு வர சொல்லி இருக்கேன். சரின்னுருக்கார். எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம். எனக்கும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”, முகம் வெட்க முலாம் பூசிக்கொண்டது.
‘சரிதான், இந்த சுந்தரண்ணா அந்நியன்லேர்ந்து ரெமோ-வா மாறி இருப்பார் போல, அண்ணி ஜொலிக்கிறாங்க’, எண்ணிய மஹதி, ‘ம்.இவங்களுக்கு எங்கிட்ட சொல்றத்துக்கு என்ன இருக்கும்?’ குறுகுறுவென பார்கவியைப் பார்த்து, ‘அப்படியா?’ என்பது போல, “ம்ஹும்?”, என்று தலையசைத்து, “ஓக்கேண்ணி வர்றேன். பசங்க ஃபிரீயா இருந்தா ரூமுக்கு அனுப்புங்கண்ணி”, என்றபடி படியேறினாள்.
குடும்பத்தினரைப் பற்றிய யோசனையோடு தனதறைக்குச் சென்ற மஹதியை புலனச்செய்தி வந்திருப்பதாக ஒலி எழுப்பிய அலைபேசி கலைத்தது. தனது கால்சராயில் இருந்து பேசியை வெளியே எடுத்துப் பார்த்தாள். இவளோடு ஆராய்ச்சி செய்யும் சக மாணவன், “எப்போது வருகிறாய்?”,என்று கேட்டு தகவல் அனுப்பியிருந்தான்.
லண்டன் சென்று படிப்பை முடித்துவிட்டு வரலாம் என்ற யோசனையை முதலில் அண்ணன்களிடம் தெரிவித்த பிறகு, அவனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மஹதி எண்ணியிருந்தாள். இந்தியாவிற்கும் லண்டனுக்கும் நிலவும் நேர வேறுபாடு காரணமாக அவன் இவளைத் தொடர்பு கொள்வது பொதுவாக மதியத்திற்கு மேல் அதுவும் மின்னஞ்சலில் மட்டுமே. ஆனால்..நேற்று மூன்று முறை மெயில் செய்ததோடு இரண்டு புலனச்செய்தியையும் தட்டி விட்டிருந்தான்.
நெற்றியை விரல்களால் தேய்த்தவாறு, “நாளான்னிக்கு மிட்நைட் கிளம்பனும், அண்ணா லன்ச் க்கு வர்றாராமே? இப்பவே இது பத்தி பேசிடலாமா?”, தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். பின்னர் சிறிது நேரம் முகப்புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அறை வாசலில், “மயி”, ஸ்ரீநிதி கூப்பிடும் சத்தம் கேட்டு நிகழ்வுக்கு வந்த மஹதிக்கு, காதில் விழுந்த மெல்லிய கொலுசொலி அண்ணன் மகளது வரவை தெரிவித்தது. கூடவே கொஞ்சம் அழுத்தமாக இன்னொரு காலடி சப்தமும்.. ம்ம். யுவாவும் வருகிறான் போல?.
இவளது யூகத்தை பொய்யாக்காமல் பிள்ளைகள் இருவருமே, “மஹீ..”, “மயி”, என அழைத்துக்கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தனர்.
“அம்மா மம்மு சாப்பிட கூப்பிடறா, போலா வா”, என்ற குட்டிப்பெண் இவளருகே வந்து சுவாதீனமாக தன் அத்தையின் கைபேசியை எடுத்துக்கொண்டது.
பேசியை திறக்கும் கடவு எண் தெரியாமல் மாற்றி மாற்றி போட்டு பார்த்தாள் சின்னக்குட்டி.
‘ம்ம். ஸ்ரீக்கு இன்னும் ஹ வரல, மஹிக்கு பதிலா மயிதான் வருது, ஆனாலும் இவ கூப்பிடறதும் அழகாத்தான் இருக்கு’, மஹதி.
“லாக் எத்துவிடு மயி”
“சாப்பிட வா சொல்லிட்டு இங்க உக்காந்து கேம் ஆடினா அம்மா திட்ட மாட்டாங்களா ஸ்ரீ?”.
தங்கையிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக யுவராஜ், “அதான் அம்மா இவளோட என்னையும் போக சொன்னாங்க. வாங்கத்த, போலாம். இவ இப்டியே விளையாடிட்டு இருக்கட்டும், அம்மா செஞ்சு வெச்சிருக்கற காஜூ கோப்தாவை நாம்பளே காலி பண்ணிடலாம்”, என்று தங்கையை வம்பிழுத்தான்.
ஸ்ரீக்குப் பிடித்த உணவு வகையின் பெயரைக் கேட்டவுடன் பேசியில் இருந்த கவனம் சிதறியது.
யுவா பேசியதில் எதோ வித்தியாசமாக உணர்ந்தாலும், அண்ணனோடு பேச வேண்டும் என்ற யோசனை இருந்ததால் சாப்பிட சென்றாள்.
அங்க உணவு கூடத்தில் உதவியாளர்கள் இருவர் மேஜையில் வகை வகையான சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். மஹதியை பார்த்ததும் சின்னதாய் தலையசைத்து வரவேற்றான் சுந்தர். அவன் முகத்தில் அமைதி இருந்தது. தந்தை வரதராஜன் இறந்த அன்று மஹதியைப் பார்த்த போது இருந்த வெறுப்போ கோபமோ இப்போது இல்லை. சுந்தர் கோபப்பட முக்கிய காரணமே, பணப்பிரச்சனைதானே அதுதான் ஆஷுதோஷ்ன் தலையீட்டால் தீர்ந்து விட்டதே?
அங்கே கணவனின் அருகே இருந்த பார்கவி விரிந்த ஒரு புன்னகையோடு, “உக்கார் மஹி’, உரைத்தாள்.
வெகு நாட்களுக்கு பிறகு அண்ணா அண்ணி மற்றும் பிள்ளைகளுடன் விளையாட்டாக பேசியபடி மதிய உணவு எடுத்துக்கொண்டாள் மஹதி.
அதோடுகூட தான் லண்டன் செல்ல விருப்பதைப் பற்றி பேச தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
எதேச்சையாக, “சொல்லு மஹி. உன்னுடைய ஸ்டடீஸ் பற்றி என்ன முடிவு எடுத்திருக்க?”, என்று சுந்தரே ஆரம்பித்தான்.
“அதைப் பத்திதான் உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். நீங்களே கேட்டுடீங்க. ஜஸ்ட் ஒரு த்ரீ மன்த்ஸ் தாண்ணா. டக்குனு என் ஸ்டடிஸ் முடிச்சுட்டு வந்துருவேன்.”
“ம்ம். ரங்கா சொன்னான். நேத்து அனந்தபூர் கிளம்பறேன்னு சொல்றதுக்காக கால் பண்ணியிருந்தான். உன்னை பத்தி பேசிட்டு இருக்கும்போது அநேகமா நீ லண்டன் போவ-ன்னு சொல்லிட்டுஇருந்தான்.”
“ம்.ஆமாண்ணா, ரங்கண்ணா போன்ல பேசியே அட்வான்ஸ் வரைக்கும் பேசி முடிவு பண்ணிட்டான். இப்பத்தான் அவனோட வால்யூ என்னன்னு தெரிஞ்சது”
“எனக்கு முன்னாலேயே தெரியும்,தண்ணி மட்டும் இல்லன்னா அவனை மாதிரி திறமைக்காரன் யாரும் கிடையாது. நிஜமாவே இப்படி ஒரு சேஞ்ஜ் இவன்கிட்ட அதுவும் இவ்ளோ சீக்கிரத்துல நா எதிர்பார்க்கவே இல்ல”
“ஹ்ம்ம். நானும்தான்ண்ணா, அதான்.. நா இல்லாத கொஞ்ச நாளைக்கு ரங்காவும் ஆஷுவும் சேர்ந்து கம்பெனிய ரன் பண்ணட்டும். ஏதாவது முக்கியமான முடிவு எடுக்க வேண்டி இருந்தா, உங்கள கன்சல்ட் பண்ணிட்டு செய்யட்டும்னு சொல்லலாம்னு இருக்கேன்ணா”
“ஓகே மா. மஹி, இன்னொரு சந்தோஷமான விஷயம்.. வர்ற வெள்ளிக்கிழமை நம்ம படம் ரிலீஸாகுது.”
“இல்ல மஹி, இன்னும் நிறைய நிறைய பண்ண வேண்டி இருக்கு. வெளிநாட்ல இருக்கிறா மாதிரி, குழந்தைகளுக்கான படங்கள், அடலோசென்ட்-ல இருக்கிற பசங்களுக்கான ஃபான்டஸி வைகையறா, ஃபேமிலி மெலோட்ராமா, ஹாரர், அட்வென்ச்சர், கார்ட்டூன் படங்கள், அவ்வளவு ஏன் வெறும் பென்சில் ஸ்கெட்ச்-ல திரைபடங்கள் ன்னு ஒவ்வொண்ணும் தனித்தனியா குடுக்கணும்.இது எவ்ளோ பெரிய மாஸ் மீடியா? இதோட வேல்யூ தெரியாம.. இன்னும் நாலு பாட்டு ரெண்டு ஃபைட்டு, அம்மா தங்கச்சி சென்டிமென்ட்னு அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருக்காங்க, இல்லையா ஆவி பேய்ன்னு பயம் காட்றதா நினைச்சு சிரிப்பு மூட்றாங்க ”, என்றான்.
“இல்லன்னா, எனக்கு இதப்பத்தி அவ்வளவா தெரியாது, ஆனா, நீங்க சொல்ற இந்த வித்தியாசமான ஜானர்ஸ்.. புதுசா நல்லா இருக்கு.”
“இது புதுசு இல்ல மஹி, ஏற்கனவே நம்ம கிட்ட இருந்ததுதான். பஞ்ச தந்திர கதைகள், விக்ரமாதித்யன் கைதைகள்-ன்னு கேள்விப்பட்டதில்ல? அதுல இல்லாததா ஹாரி பாட்டர் சீரிஸ்ல குடுத்துருக்கான்? நீ விட்டலாச்சார்யா ன்னு ஒரு பழைய பிராண்ட் கேள்விப்பட்டிருக்கியா? என்னைக் கேட்டா இரும்புக்கை மாயாவியோட அட்வான்ஸ்ட் வெர்ஷன்தான் ஐயன் மேன்-ன்னு சொல்லுவேன். என்ன..? நம்மகிட்ட இருக்கிறத நாம உலகத்துக்கு சரியா எக்ஸ்போஸ் பண்ணி காமிக்கல”, என சொன்ன சுந்தர், மஹியின் முகம் பார்த்து, “ஹஹா, சரி சரி இதுக்கு மேல பேசி உன்ன போரடிக்காம, சாதிச்சிட்டு சொல்றேன்”, என்றான்.
காரணம் சுந்தர் சொன்ன எதுவும் அவளது ரசனை பட்டியலில் இல்லை. கடந்த ஐந்தாறு வருடங்களில் மஹதி பார்த்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவளிடம் போய் திரைப்படங்கள் குறித்து வகுப்பெடுத்தால் என்னதான் செய்வாள்?
சுந்தர் பேசியது போரடிக்க ஆரம்பிக்க,அதை அப்படியே மஹதியின் முகம் பிரதிபலித்தது போலும். உடன்பிறந்தவர்களாய் இருந்தாலும் அவரவர் ரசனைகள் வேறு வேறு தானே?
மஹதிக்கு, சுந்தரின் ‘சாதிச்சிட்டு சொல்றேன்’, என்ற நம்பிக்கையான வார்த்தைகள் ஆழ்மனதிலிருந்து வந்தவை என தெரிந்தது. கூடவே அவனது ‘உன்ன போரடிக்காம’-வும் மஹதிக்கு புரிய, கொஞ்சம் அசடு வழிய அண்ணனை பார்த்துச் சிரித்தாள்.
‘ஏட்டி சொன்னது கரெக்ட்தானோ? இந்த ஃபீல்டுதான் சுந்தரண்ணாவோட இலக்கோ? ஓகே எப்படி இருந்தாலும் நல்லா வந்தா சரிதான்’
“ஓகே மஹி, ஆங். ஒரு விஷயம்,நம்ம முரளி இருக்கான் இல்ல? கவி தம்பி, அவன் ஆஷுகூட இருந்து வேலை கத்துக்கட்டும்னு நா நினைக்கறேன். நீ என்ன சொல்ற?”,
“அப்ப நாளைக்கு நீங்க ஆபீஸ்க்கு வரும்போது ஆஷுகிட்ட சொல்லிடுங்க அண்ணா. ஜஸ்ட் ஃபார்மலா ஒரு இன்ட்ரோ”, என்றாள் இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை அறியாது.
“நாளைக்கு நா வர முடியாதே மஹி, பி சென்டர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வர்றதா சொல்லி இருக்காங்க. எப்போதும் வர்றமாதிரி மத்தியானத்துக்கு மேல வந்து என்னோட வேலைகளை பாத்துக்கறேன். ஆனா முரளியை காலைலயே வர சொல்லிடறேன். நீ ஆஷுகிட்ட சொல்லிடு. ஓகே?”
‘பி சென்டர் டிஸ்ட்ரிபியூட்டர்-ன்னா என்னண்ணா’ என்று கேட்க நினைத்த மனதை, ‘அது தெரிஞ்சு என்ன பண்ணப்போற?, ஏதோ அவரோட படத்தோட சம்பந்தப்பட்ட விஷயம்’, என்று அடக்கி, “ஓகே அண்ணா”, சொன்னாள்.