கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம்நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம்கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று மாறினள் மாது


ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் காமம் காமம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
முள்ளை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

அடுத்த வந்த நான்கு நாட்களும் மெஹந்தி,லாஸ்ட் மினிட் பர்ச்சேஸ் என றெக்கை கட்டிப் பறக்க நாளை திருமணம்..அனைவரின் மனதுமே மகிழ்ச்சியில் நிறைந்திருக்க சஹானா பட்டாம்பூச்சியாய் தன் வீட்டை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..ஒருபுறம் தன்னவனின் கரம் பற்ற போகும் மகிழ்ச்சி எனில் மறுபுறம் தான் தாய் தந்தையை பிரியபோகும் துயரமென தனக்குள்ளேயே மருகினாள்..இந்த ஒரு வாரமாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறாள்..அவள் அன்னை கூட ஓரளவு மனதை தேற்றிக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும் ஆனால் தந்தையோ மொத்தமாய் உடைந்திருப்பதாய் தோன்றியது..கடைக்குச் செல்வதை குறைத்துவிட்டார்..ஏதேதோ காரணம் சொல்லி அவளிடம் பேச்சை வளர்த்தார்..சாப்பாடு தூக்கமின்றி கண்கள் இடுங்கி பார்ப்பவர்கள் அத்தனைபேரும் கேட்கும் அளவுக்கு மனதளவில் ஓய்ந்து போய் இருந்தார்..திருமணத்தில் இது எப்போதுமே நடக்க கூடிய ஒன்று அத்தனை வருடங்கள் தன் அரவணைப்பிலும் அன்பிலும் எதற்கெடுத்தாலும் தன்னிடம் வந்து செல்லம் கொஞ்சும் மகளை இப்போது ஒரு புதியவனை நம்பி அவன் கைகளில் ஒப்படைக்கும்போது மனத்திற்குள் தானாகவே பயம் துக்கம் என அனைத்தும் ஆட்கொண்டு விடுகிறது..அம்மாக்கள் இதில் விதிவிலக்கு ஏனெனில் அவர்கள் தங்கள் திருமணத்திலேயே இந்த வலியை உணர்ந்துவிட்டதாலோ என்னவோ இப்போது ஓரளவு ஆறுதல் கூறும் நிலையில் இருக்க முடியும்..

இதற்கு இன்னுமொரு காரணம் எல்லா ஆண்களுக்குமே திருமணம் செய்து ஒரு பெண்ணை அவள் தந்தையிடமிருந்து தன்னோடு அழைத்து வரும்போது அவளின் வலி அவ்வளவாய் தெரிவதில்லை..அதே நேரம் தன் மகள் என்று வரும்போது அப்போது நினைக்கும்போது தன் மனைவியின் மனநிலைமையும் மாமனாரின் மனநிலைமையும் புரிவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது என் கருத்து..சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு காணொளி கண்டேன்..திருமணம் முடிந்து தன் வீட்டாரிடம் விடைபெற்று செல்லும்போது தன் தந்தையை கட்டிபிடித்து கதறி தீர்த்துவிட்டார் அந்த தந்தையுமே கண்கலங்க தன் மகளை ஆரத்தழுவி தேம்பிக் கொண்டிருந்தார்..அதன்பின் அங்கிருந்த பெண்கள் ஒருவாறு சமாதானப்படுத்தி அவளை மாப்பிள்ளையோடு அனுப்பி வைத்தனர்..இதை இங்கு பதிவிட காரணம் டெக்னாலஜியும் வாழ்க்கை முறையும் எத்தனை நாகரீகமாய் மாறியிருந்தாலும் தாய்மகன் தந்தை -மகள் உறவுகளின் நெருக்கங்கள் எப்போதும் மாற்றமடைவதில்லை..இப்படி எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள் போனின் அழைப்பு சத்தத்தில் நினைவுலகிற்கு வந்தாள்..

ஹாய் மாமா என்ன பண்ற??

சஹி என்னாச்சுடா டல்லா பேசுற உடம்பு எதுவும் சரியில்லையா??

அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..ஒரு மாறி டென்ஷனா இருக்கு..அதுமட்டுமில்லாம அப்பா ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்டா இருக்காரு..

ஏன் சஹி எதனால??

என்ன மாமா நீ கேஷ்வலா கேக்குற நாளைக்கு கல்யாணத்துக்கப்பறம் நா தான் நம்ம வீட்டுக்கு வந்துருவேன்ல அதனாலை தான்..

ஹே ஆனாலும் அநியாயம் டீ இதெல்லாம் நா ஏதோ கல்யாணம் பண்ணி உன்ன தண்ணியில்லா காட்டுக்கு கூட்டிட்டு போற ரேஞ்சுக்கு பேசுற இதோ இருக்கு வீடு நினைச்சா பத்து நிமிஷத்துல போகபோற இதுக்கு இவ்ளோ பில்டப்பா???

மாமா உனக்கு இதெல்லாம் புரியாது நாளைக்கு உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தெரியும்..

அடடா கூல் சஹிம்மா..நா சொல்ல வர்றது உனக்கு புரில..சரி நா சொல்றத உங்க அப்பாகிட்ட போய் அப்படியே சொல்லு..அவரு கவலையெல்லாம் ஓடி போய்டும்..என்ன பண்றியா???

என்ன..

ம்ம் அப்படி கேளு..டேடி டேடி கார்த்திக் சொல்றான் இந்த கல்யாணத்துக்கப்பறம் உங்க பொண்ணு உங்கள விட்டு போக போறதில்லயாம் கார்த்திக்நு ஹேண்ட்சமான ஒரு பையனும் உங்களுக்கு கிடைக்க போறானாம்.. இனிதான் நீங்க ஹெல்த நல்லா பாத்துக்கனுமாம் ஏன்னா இனி பொண்ணு பையன் ரெண்டு பேரையும் பாக்கநும்ல அதுமட்டுமில்லாம சீக்கிரமே ஒரு குட்டி சஹானாவோ கார்த்திக்கோ வேற வந்துருவாங்க அவங்கள வேற கவனிச்சுக்கனும் சோ டோன்ட் வொரி அபௌட் எனிதிங் அண்ட் டோண்ட் ஸ்பாய்ல் யூவர் ஹெல்த்நு சொல்லு என்ன கரெக்ட் தான..

உம்மா உம்மா உம்மா..

ஹே சஹி பேபி பக்கத்துல யாரும் வந்துர போறாங்க..

பரவால்ல லவ் யூ மாமா..நீ ஏன் இப்படியிருக்க..அதான் நா உன்ன விடாம தொல்ல பண்ணிட்டேயிருக்கேன்..எனும்போதே அவள் குரல் கம்ம.

சஹிம்மா இதெல்லாம் இயல்பா நடக்குறதுடா..இதுதான் நியாயமும்கூட அதுலயும் நீ ஒரே பொண்ணு அவங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும்.. நீதான இப்படி சொல்லி அவங்கள சமாதான படுத்திருக்கனும் அதவிட்டுட்டு நீயும் வந்து அழுதுட்டு இருக்க..சரி முதல்ல போய் மாமாவ சமாதானப்படுத்து அழுது வடியாம ஈவ்னிங் ரிசெப்ஷன்ல செமயா இருக்கனும் புரியுதா???

டீல் மாமா..நா இப்போவே போறேன் பை..சிறு புன்னகையோடே போனை வைத்தவனுக்கு அடுத்த வந்த நிமிடங்கள் வேகமாய் கழிய மாலை தயாராகி மண்டபத்திற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த கோவிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

கார்த்திக் கோவிலையடைந்த பத்து நிமிடத்தில் சஹானாவும் அழைக்கப்பட்டு வந்திருக்க சிவா ஷரவ் ஷரவன் கௌரி அனைவருக்குமே அந்த ஜோடியிடமிருந்து கண்ணை அகற்ற முடியவில்லை..

அழகிய கருநீலநிற லெஹன்காவில் தங்கநிற துப்பட்டாவும் அதற்கேற்றாற் போல தலையின் முன் பகுதியை குவித்து ஃப்ரீ கேர் விட்டிருந்தாள்..ஆடைக்கேத்தவாறு வெள்ளைகற்கள் பதித்த நகைகளின் நடுநடுவே நீலநிற கற்கள் பதித்த ஆபரணங்கள் தலை முதல் இடைவரை அலங்கரித்திருந்தன..

அவள் உடைக்கேற்றவாறு கருநீல நிற ஷெர்வானியில் கம்பீரமாய் கார்த்திக் இருக்க கண்களை அகற்றவும் முடியுமோ..சஹியோ வந்ததிலிருந்து கார்த்திக்கை ஓரப் பார்வை பார்த்தவாறே நின்றிருந்தாள்..மாமா நீ சொன்னமாறி ரெடி ஆய்டேனா எப்படியிருக்கேன்???

ம்ம் சான்ஸேயில்ல சஹி ஸ்டன்னிங் லுக்..நாளைக்கு நைட் இதுக்கு பதில் சொல்லலாம்நு நினைச்சேன் நீ இப்போவே கேட்டு சப்புநு ஆக்கிட்டியே..

அய்யோ கோவில்ல வச்சு என்ன பேசுற மாமா நா வாயே தொறக்கலப்பா..என்றவாறு கண்மூடி கடவுளை மனமாறற வேண்டினாள் பூஜை முடிந்து அனைவரும் வெளியே வர எத்தனிக்க சிவா அனைவரையும் தடுத்தான்..இருங்க எல்லாரும் எங்க கிளம்புறீங்க..

டேய் விளையாடுற நேரமா இது மண்டபத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சுருப்பாங்க..சேகர்

அதையே தான் நானும் சொல்றேன் மாப்பிள்ளையும் பொண்ணையும் அழைச்சுட்டு போக வேணாமா ரெண்டு நிமிஷம் எல்லாரும் வெயிட் பண்ணுங்க..எங்க மாப்ள பொண்ணுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு இருக்கு என்றவாறு வாசலுக்குச் சென்றவன் 5 நிமிடத்தில் உள்ளே வந்தான்வாங்க வாங்க போலாம் என்றவனின் பின்னே சென்ற அனைவருமே வாய்பிளக்காத குறைதான்..என்ன சிவா இதெல்லாம் இதுல எப்படி எம்பர்ஸ்டா இருக்கும் என கார்த்திக் ஒருபுறம் டேய் குரங்கு எப்போ இதெல்லாம் ரெடி பண்ண சொல்லவேயில்ல என சஹானா ஒருபுறமும் கேட்க சிரிப்பை பதிலளித்தவன் சற்று தள்ளிச் சென்று கைநீட்டி வாங்க ராஜகுமாரி என்றழைக்க புன்னகையோடு அவன் கைப் பற்றியவள் அந்த அழகிய பல்லக்கில் சென்று அமர்ந்தாள்..சிவா முன்புறமும் மணி பின்புறமும் பிடித்து பல்லக்கை தூக்க,அதன் முன்னிருந்த. குதிரையில் கார்த்திக் அமர்ந்திருந்தான்..மாப்பிள்ளை பெண்ணழைப்பு ஆரம்பமாக சஹானாவிற்கோ ஏனோ அனைவரும் தன்னையே பார்ப்பதாய் தோன் ற குனிந்த தலை நிமிராமலேயே அமர்ந்திருந்தாள்..

மண்டபத்தின் வாசலில் கார்த்திக் இறங்க பல்லக்கை மண்டப வாயிலின் உள் சென்று சிவா இறக்கினான்சிவாவின் பின் வந்த கார்த்திக் சஹானாவிற்காக கைநீட்ட அவன் விழிபார்த்து தன் கையை கொடுத்தாள்..ஏனோ அந்த நொடி தான் ஒரு ராஜகுமாரி என்றே தோன்றியது அவளுக்கு..அதன்பின் சில மணிநேர போட்டோ ஷீட் முடிந்து மணமக்கள் மேடைக்கு வர கார்த்திக் சஹானா,சிவா ஷரவந்தி ஜோடிகளுக்கான நிச்சயதார்த்தம் அரங்கேற இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்..அதன் பின்  விருந்தினர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசிப் பொருட்களை கொடுக்க கொடுக்க உதட்டில் புன்னகை மாறாமல் அதை வாங்கி வைப்பதிலேயே மணி நேரம் கடந்திருந்தது..

ஓரளவு கூட்டம் மேடையில் குறைந்திருக்க சிவா மைக்கோடு மேடையேறினான்..

.கே மொதல்ல எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்த ஒவ்வொருத்தருக்கும் எங்களோட நன்றியை தெரிவிச்சுக்குறோம்..நீங்க எல்லாரும் உங்களோட கிப்ட் மூலமா உங்க விஷஸ்ஸ சொல்லிட்டீங்க அப்போ நாங்களும் அப்படி சொல்றதுதான கரெக்ட்டா இருக்கும் அதான் நாங்க கார்த்திக்கும் சஹானாக்கும் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் குடுக்கலாம்நு இருக்கோம்..சோ பர்ஸ்ட் என் சார்பா சஹானாக்கு ஒரு ஸ்பெஷல் ஏவி ரெடி பண்ணிருக்கேன்..கியர் யூ கோ

சிவா மானத்த வாங்கிடாதடா..என்றவள் ஸ்க்ரீனை பார்க்க..அதில் ஒரு வயது சஹானா அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்..அதையடுத்து அவளின் சிறுவயதின் ஒவ்வொரு பருவத்திலும் எடுத்த புகைப்படங்கள்..இதில் கூடுதல் ஆச்சரியம் அவளுக்கு என்னவென்றால் அவையனைத்தையுமே அவளே இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறாள்..அனைத்துமே விடுமுறையில் அவள் வந்த நேரம் சிவாவின் அப்பா எடுத்திருந்தது..பேச வார்த்தைகளின்றி அவள் அமர்ந்திருக்க இறுதியாய் இருந்த போட்டோவை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தாள்கார்த்திக்கும் அவளும் ஆற்றின் நடுவில் பாறையில் அமர்ந்தவாறு எதற்கோ சிரித்த மாதிரியான புகைப்படம் இயல்பாய் அழகாய்..முதன்முதலாய் சிவாவை கிண்டல் செய்வது சண்டை போடுவதை தாண்டி அண்ணணாய் தந்தைக்கு அடுத்த நிலையில் இருக்கும் தோழனாய் பார்க்க தோன்றியது..அவள் முகம்பார்த்தே மனம் அறிந்தவன் ஆதரவாய் தோள்பற்ற தன்னை கட்டுப்படுத்தியவளாய் சிவாவிற்கு செய்கையால் நன்றி கூற கண்சிமிட்டி அவன் நகர ஷரவன் கைக்கு மைக் மாறியது..

டேய் நீயுமா??-கார்த்திக்..

அண்ணா பொண்ணுக்கே சர்ப்ரைஸ் இருக்கும் போது மாப்பிள்ளைக்கு இல்லனா எப்படி சரி உன் சர்ப்ரைஸ்க்கு ரெடியா இரு அண்ணா..ஷரவ் லைட்ஸ் ஆஃப்..என குரல் கொடுக்க அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட சில நிமிடங்களில் யார் யாரோ மேடையேறும் சத்தம் கேட்க வந்தவர்கள் ஒவ்வொருவரும் கார்த்திக்கிற்கு வாழ்த்து கூற பாதிக்கு மேல் குரல்க்கு சொந்தக்காரரர்களை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை..சில நிமிடங்களில் விளக்குகள் ஒளிபெற தன்னை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்தவனுக்கு உண்மையாகவேஆச்சரியமாகத்தான் இருந்தது..அனைவரும் அவனின் பள்ளி கல்லூரி கால நண்பர்கள்..அவன் யாரையுமே நேரடியாய் சென்று அழைக்கவில்லை..பேஸ்புக் வாட்ஸ்அப்பில் பத்திரிக்கை அனுப்பியதோடு சரி..அதிலும் விக்ரம் கிஷோரே தங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றும் வர முடியாததற்கு வருந்துவதாகவும் அடுத்த மாதத்தில் ஒரு நாள் வருவதாகவும் கூறிவிட்டனர் அதுகூட மெயில் கம்யூனிகேஷன்தான்..இன்று அவர்கள் உட்பட வந்திருப்பது நிறைவாய் இருந்தது..